இதயம் இடம் மாறியதே - 2

Advertisement

Indira75

Active Member
ம்மா ம்மா என அழைத்த குட்டி சரண் அவன் தாயின் மீது ஏறி அமர்ந்து அடிக்க தொடங்கினான்
போர்வையை விலக்கிய ஸ்ருதி சரண் கண்ணா அம்மா க்கு ரொம்ப டயர்ட் ஆக இருக்கு அப்பா கிட்ட போ என்று சொல்லி மீண்டும் போர்வைக்குள் புகுந்தாள். குளித்து விட்டு பாத்ரூம் ல் இருந்து வெளிப்பட்ட பிரேம், ஸ்ருதி எழுந்திரு சரண் விழித்துட்டான் என்றான்.
அவனுக்கு பசிக்கும் எழுந்து வா என்றான்.
நீங்க தேவி யை கூப்பிட்டு அவ கிட்ட சரண் ஐ குடுங்க. அவ பார்த்துப்பா என்றாள்.
இண்டர்காம் ஐ எடுத்து கீழே அழைத்து தேவி யை வரசொன்னவன் , சரண் ஐ தூக்கி கண்ணா அப்பா ஆஃபீஸ் க்கு போக ரெடி ஆகனும், நீங்க சமத்து பையனா தேவி அக்கா கூட போயி பால் குடிச்சுட்டு விளையாடனும் சரியா என, அவன் புத்திரனோ அவன் தலை யை கலைத்து விளையாடிக்
கொண்டு ஆ ப்பா என மிழற்றிக் கொண்டு இருந்தான்.
கதவு டொக் டொக் என சத்தமிட சரணை தூக்கி கொண்டு வெளியே வந்தான். குழந்தையை தேவியிடம் ஒப்படைத்து விட்டு உள்ளே வந்ததான். அலுவலகம் செல்ல தயார் ஆகி கீழே வந்தவன் டைனிங் டேபிள் ல் அமர்ந்தான். அப்போது வாசுதேவனும் அலுவலகம் செல்லத் தயாராக மனைவி பின் தொடர வந்து அமர்ந்தவர், தன் அன்னை யை பார்த்து அம்மா வாங்க சாப்பிடலாம் என குரல் கொடுக்க, மீனாட்சி அம்மாளும்
வந்து அமர்ந்தார்.
யோகாம்பாள், பொன்னி என குரல் கொடுக்க, பொன்னி வந்து பரிமாற ஆரம்பித்தாள்.

வாசுதேவன் ப்ரேம் ஐ பார்த்து, பிரேம் இன்னைக்கு நீ அண்ணா நகர் சைட் க்கு போயிட்டு ஆஃபீஸ் வந்தால் போதும். இன்னும் மூன்று மாதத்தில் ப்ரொஜெக்ட் முடிச்சு குடுக்கிறோம் னு சொல்லியிருக்கோம், ஸோ அங்க போயி பெண்டிங் ஒர்க் எல்லாம் பார்த்து முடிக்க சொல்லி ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிடு என அலுவலகம் சம்மந்தமாக பேசிக் கொண்டே உணவு உண்ண ஆரம்பித்தார்.
அருண் ப்ரீத்தி எப்ப வராங்க? என யோகாம்பாளை பார்த்து
கேட்டார்.
அவுங்க நேத்தே வந்துட்டாங்க. ஏர்போர்ட் ல் இருந்து அப்படியே பிரீத்தி வீட்டுக்கு போயிட்டாங்க, நாளைக்கு இங்க வருவாங்க என்றார்.
அழுத்தமான காலடியோசை சமீபிக்க கௌதம் வந்து கொண்டு இருந்தான். நல்ல உயரம், நெற்றியை மறைக்கும் கேசம், சிவந்த நிறம், முகத்தில் இரண்டு நாள் மழிக்கப்படாத தாடை,லெவிஸ் ஜீன்ஸ் மடித்துவிடப் பட்ட முழுக்கை சட்டை, இடது கரத்தில் ரேடோ வாட்ச், அவன் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் யாருக்கும் நான் அடங்காதவன் என்ற திமிர், கர்வம் இரண்டும் தெரிந்தது. ஹார்ட்வ்ர்ட் ல் Mba முடித்து கடந்த சில மாதங்களாக தந்தை யுடன் சேர்ந்து தொழிலை கவனித்துக் கொண்டு இருக்கிறான்.

அதோடு தனியாக ஃபாரின் கொலப்ரஷனோடு ஒரு குளிர்பான கம்பெனி அமைக்க முதல் கட்ட வேலை களை ஆரம்பித்திருந்தான். அதனால் எப்போதும் பிஸியாகவே இருப்பான்.
நிமிர்ந்து பார்த்த யோகாம்பாள் வா கௌதம் வந்து உட்காரு என
வந்து மீனாட்சி அம்மாளின் அருகில்
அமர்ந்தான். ஹாய் பாட்டி , நல்லா தூங்கினீங்களா? என கேட்க
ஆமாம் கௌதம், நீ உக்காரு செல்லம் என்றவர்
பொன்னி கௌதம் க்கு முறுகலா ஒரு ஆனியன் தோசை யும், ஆம்லெட் ம் கொண்டு வா என, அதை பார்த்த யோகம்பாளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அது தான் கௌதம். அந்த வீட்டில் உள்ள அனைவரையும் விழி
அசைவில் ஆட்டி வைக்கும் யோகாம்பாள் தோற்றுப் போவது கௌதம்மிடம் மட்டுமே.
தன் பார்வையாலேயே அவரை தள்ளி நிறுத்துவான்.
அவனின் பள்ளிப்பருவங்கள் ஹாஸ்டல் மற்றும் கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் கழித்ததாலும், அவன் அன்னைக்கு அப்போது அவனை விட
சமூக சேவையும், லேடீஸ் கிளப் ம் முக்கியமாக இருந்ததால் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தான்.
பின் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டான். அவனுக்கும் அவன் தாய்க்கும் இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத கோடு விழுந்தது.
வாசுதேவன் கௌதம் ஐ பார்த்து உன் புது பேக்டரி ஆரம்பிக்கிற வேலை எப்படி போகுது? என்றார்.
போயிட்டுருக்கு டாட், அந்த ரியல் எஸ்டேட் காரங்க கிட்ட எந்த மாதிரி இடம் தேவை, எந்த இடத்தில் தேவை ன்னு சொல்லியிருக்கேன். இன்னும் இரண்டு நாட்களில் இடம் பைனல் ஆயிடும் பா என்றான்.
ஓகே கௌதம், உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேள், என்றவர் எழுந்து கை கழுவ சென்றார்

ஹாய் கௌதம் அத்தான், என்றவாறு உள்ளே வந்த அந்த அதிநாகரீக யுவதி
யோகம்பாளின் அண்ணன் மகள் மானசா. தோள் வரை வெட்டி விடப் பட்ட கூந்தல் கலரிங் செய்யப்பட்டிருந்தது. ஒன்னரை இன்ச் க்கு மேக்கப் உடன் உதட்டில் அடர் சிவப்பு நிற உதட்டு சாயத்துடன், கையை தூக்கினால் இடை தெரியும் ஷார்ட் ஸ்லீவ்லெஸ் டாப், தொடையை கவ்விய ஜீன்ஸ் ம் , கழுத்துப் பகுதி அபாயகரமான இறக்கத்துடனும் மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.

ஹாய் மானு எப்படிடா இருக்க? என்ற யோகம்பாளிடம், நான் நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க? என கேட்டபடி வந்து
அமர்ந்தாள்.

ஹேய் ஹனி, நீ எப்போ வந்த மும்பை ல இருந்து?
நான் ஏர்லி மார்னிங் வந்தேன் அத்தான், வந்ததும் உங்களை பார்க்க வந்துட்டேன் என கிள்ளை போல வேண்டுமென்றே பேசியதை கேட்ட மீனாட்சி அம்மாள் க்கு எரிச்சலாக இருந்தது. வந்துட்டா மேனாமினுக்கி என மனதுக்குள் திட்டியவாறு திரும்பி தன் பேரனை பார்த்தவர், சிறு மயக்கத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து கடவுளே என் பேரனை இவகிட்ட இருந்து காப்பாத்து என அனைத்து கடவுள்களிடமும் மனு போட ஆரம்பித்துவிட்டார். மீனாட்சி அம்மாளுக்கு தன் முதல் இரண்டு பேரன்களின் திருமணத்திலும் பெரிய சந்தோசம் இல்லை. அதில் பணப் பொருத்தம்மட்டுமே பார்க்கப்பட்டது. கௌதம் திருமணமாவது தான் நினைத்தவாறு பணத்தைப் பார்க்காமல், குடும்ப பாரம்பரியம், அன்புடனும்,நல்ல குணங்களுடன் கூடிய அழகான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும், அவனாவது வாழ்க்கையை வாழ்க்கை யாய் வாழவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவனின் பார்வையில் அவர் மனது சற்று கலங்கித்தான் போனது.
யோகாம்பாளை பற்றி கேட்கவே வேண்டாம் , அவர் அண்ணன் மகள் தான் கௌதமின் மனைவி யாக வரவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தார். பார்க்கலாம் இறைவன் போடும் கணக்கை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top