இதயம் இடம் மாறியதே - 11

Advertisement


Indira75

Active Member
வடிவாம்பாள் பூஜயை முடித்து, கணவருக்கு தேவையான உதவிகளை செய்து முடித்து வந்து ஹால் இல் அமர்ந்தார். தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தவர் தேன்மொழி கு பார்க்க வேண்டிய மாப்பிள்ளை களை பற்றி விவாதித்து கொண்டிருந்தார்.
வீட்டினர் அனைவரும வந்து அமர சிறிது நேரத்தில் ஜோசியர் வந்து சேர்ந்தார்.

வந்தவரை அமர வைத்து, கோமதி ஐ பார்த்து
சாமி முன்னாடி தேனு ஜாதக நோட் வச்சிருக்கேன். எடுத்துட்டு வந்து அவர் கிட்ட குடு என்றார்.

கோமதி எடுத்து வந்து கொடுக்க அதை பெற்றுக்கொண்டு, ஜாதகத்தை கணிக்க ஆரம்பித்தார்.
ஜோசியர் ஜாதகம் கணித்து முடித்து பலன் சொல்ல ஆரம்பித்தார். அம்மா, நம்ம பாப்பா ஜாதகத்தை பார்த்ததுல அவுங்களுக்கு யின்னும் மூன்று மாதத்துக்குள் கல்யாணம் முடிக்கனும். அப்படி இல்லன்ன மறுபடி குரு பலன் ஆறு வருஷம் கழிச்சு தான் வருது. அதனால் மூன்று மாதத்துக்குள்ள முடிச்சிடுங்க. அது மட்டும் இல்லையிங்க, என்று தயங்க
சொல்லுங்க, எதுவா இருந்தாலும் சொல்லுங்க. என்றார் உலகநாதன்.

இந்த ஜாதகத்தை பொறுத்தவரை, அவுங்க கல்யாணம் கொஞ்சம் பிரச்சினைகளை பண்ணி தான் முடியும். அவுங்க மனசுக்கு பிடிச்சவகளை தான் கல்யாணம் முடிப்பாங்க. அதனால் எந்த மாப்பிள்ளை ய முடிவு பண்றதுக்கு முன்னாடி அவுங்க சம்மதம் கேட்டுட்டு முடிவு பண்ணுந்க. அவுங்க கல்யாண வாழ்க்கை முதலில் பிரச்சினையோட ஆரம்பித்தாலும் பின்னாடி அவுங்க ரொம்ப சந்தோசமாக இருப்பாங்க. இவுஙகளை கல்யாணம் பன்றவர், எல்லாரையும் அடக்கி ஆளுறவர் ஆக இருப்பார். ஆனால் அவர் சீக்கிரம் நம்ம பாப்பா கிட்ட அடஙகி போயிடுவாரு. இதையெல்லாம் மட்டும் மனசுல வச்சுக்கங்க என்றவர் கிளம்ப ஆயத்தமானார். அவருக்கு தட்சிணை குடுத்து, கூடவே தோட்டத்து காய்கறி களையும் ஒரு பையில் போட்டு கொடுத்து அவரை அனுப்பி வைத்தார் தமிழரசி.

அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர். வடிவாம்பாளின் மனம் மிகவும் கலங்கி இருந்தது. தன் பேத்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையுமோ? என்று பதறியது.

விஸ்வநாதன் அமைதி யை கலைத்தார். எல்லாரும் கவலைபடாதீங்க. அவர் தான் சொல்லி இருக்காரு இல்ல, அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளை ஐ கல்யாணம் பண்ணினால சந்தோசமாக இருப்பான்னு. அப்புறம் என்ன . நம்ம மாப்பிள்ளை பார்க்கலாம். அதுல
அவளுக்கு யாரை பிடிச்சு இருக்கோ அந்த மாப்பிள்ளை ஐ முடிக்கலாம் என்றார். காலம் போட்டு வைத்து இருக்கும் கணக்கை மறந்து.
விஸ்வநாதனின் பேச்சை கேட்ட உலகனாதனும் மனதை திடப்படுத் திக்கொண்டு
சரி நம்ம தரகரை வர சொல்லலாம் என்று கூறி எழுந்தவர், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பினார்.
பெண்களும் அவரவர் வேலைகளை கவனிக்கத் தொடங்கினர்.

கல்லூரியில் தாமரை நேற்று மொழி சொன்னது கேட்டு, அவளை நினைத்து மிகவும் வருந்தினாள். அவளின் எதிர்காலமே இல்லாத காதலை எப்படி அடையப் போகிறாள். இப்பொழுது நான் என்ன செய்வது? வீட்டிற்க்கு தெரிவிப்பது சரியா. வேண்டாமா? என பலவாறு யோசித்து குழம்பினாள். பிறகு தன்னால் ஆன உதவியை மொழிக்கு செய்ய வேண்டும், என்ன ஆனாலும் சரி என்று முடிவு எடுத்தாள்.

தாமரை தன் ஃபேக்கல்டி ஐ பார்க்க staff room சென்றாள். அவர் தாமரை டென் மினிட்ஸ், வந்துடுறேன் எனவும், அங்கிருந்த இரூக்கையில் அமர்ந்தாள். அடுத்த பகுதியில் இருவர் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்டது. அதில் அரவிந்தன் பெயர் அடிபட சற்று கவனமாக கேட்கதொ டங்கினாள்.
ஏன் பிரேமா இந்த அரவிந்தன் பற்றி ஒரு விசயம் கேள்விப்பட்டேன்.

என்ன விசயம் ஜெய்? என்றார் பிரேமா.

நேத்து நைட்டு என் மாமியாரை செக் அப் கி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருந்தேன். அங்க நம்ம சிவா வை பார்த்தேன். அவரும் டாக்டர் ஐ பார்க்க வந்திருந்தார். உடம்பு நல்லா தேறி இருந்தார். எப்ப dutyla ஜாயின் பன்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் அரவிந்த் தான் இன்னும் நல்லா ஓய்வு எடுத்துட்டு வா. நான் அதுக்குள்ள portion எல்லாம் கம்ப்ளீட் பண்ணிடுவேன் நு சொல்றான். அதனால் செமஸ்டர் முடிஞ்சு ஜாயின் பண்ணலாம் nu இருக்கேன்னு சொன்னார். அப்புறம் அந்த அரவிந்த் அவரோட best friend nu சொன்னாரு.
அதுவும் இல்லாம அரவிந்தன் பெரிய மல்டி மில்லயன ரோட பையனாம். இவர் studies கூட பாரின் ல தான் முடிச்சாராம். அவருக்கு சொந்தமா நெறய கம்பனீஸ் இருக்காம். Teaching அவருக்கு ஹாபி யாம். இதெல்லாம் அவனுக்கு தேவையே இல்ல. ஆனால் ஆத்ம திருப்தி க்காக செய்யறே னு சொல்றான். அதான் நானும் விட்டு ட்டேன் அப்படின்னு சிவா சொன்னாரு என

ஒஹ் அதனால்தான் அந்த திமிர் என்று உரைத்தவர் மற்ற விஷயங்களை பேச ஆரம்பித்தனர்.இதை கேட்ட தாமரையின் கவலை இன்னும் அதிகமானது.

மதிய உணவு இடைவேளையின் போது தான் கேட்டவற்றை மொழி யிடம் கூறினாள். அந்த சமயம் மற்ற தோழிகள் உடன் இருந்ததால் இதை பற்றி அப்புறம் பேசிக்கலாம். என்றாள் மொழி.

நம்ம ஹீரோ வை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ரொம்ப நாளாக பூம்பொழில் கிராமத்திலேயே இருந்துட்டோம். வாங்க இப்ப யோகாம்பாள் இல்லத்துக்கு போவோம்.
யோகாம்பாள் தன் ladies club தோழியிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
என் கிட்ட முதல்லயே நெறய diamond set இருக்கு ஜெஸி. இப்ப எனக்கு எதுவும் வாங்கிற ஐடியா இல்ல என்றார்.
யோகா, இவர் மும்பையில் மிகப் பெரிய designer. அவருடைய கலெக்சன் எல்லாம் ரொம்ப சூப்பர் ஆ இருக்கு. இன்னும் டூ டேஸ் மட்டும் தான் sale. Taj la தான் sale போட்டு இருக்காஙக. உனக்கு வர்ற மூன்றாவது மருமகளுக்கு குடுக்க புது design வேண்டும் என்று சொன்னது நீ தான. அதனால் போயி பார்க்கலாம். நல்லா இருந்தால் வாங்கலாம். இல்லன்னா window shopping பண்ணிட்டு வந்துடலாம் என்றார் ஜெஸ்ஸி.

மூன்றாவது மருமகள் என்றதும் சந்தோசமான யோகா, ஓகே ஜெஸ்ஸி இன்னைக்கு evening போகலாம். நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறன் என்றார் யோகா.

இதையெல்லாம் மனதில் வெறுப்புடன் கேட்டவாறு அமைதியாக சீரியல் இல் ஆழ்ந்திருந்தார் மீனாட்சி அம்மாள்.

அந்நேரம் உள்ளே நுழைந்த கௌதம், பாட்டி என்றவாறு அருகில் வந்து மீனாட்சி அம்மாவின் மடியில் தலை வைத்து சோபா வில் கால் நீட்டி படுத்தான்.
கௌதம் கண்ணா, கொஞ்ச நாளாக நீ சரியாகவே என் கூட பேசல என்றார் மீனாட்சி அம்மாள்.
Sorry பாட்டி, புது கம்பெனி ஆரம்பிக்கிற விசயமா ஒரே டென்ஷன், நெறய வேலை. அதான் பாட்டி. சாயங்காலம் நான் உங்களை அஷ்டலட்சுமி கோவில் கூட்டிட்டு போறேன். போயிட்டு பீச் ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம் என்றான்.
மீனாட்சி அம்மாள் சந்தோசமாக சரி என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யோகாம்பாளுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவருக்கு அவர் செய்த தவறுகள் எல்லாம் மறைந்து, தன் மாமியார் தான் தன்னையும், தன் மகனையும் பிரித்து வைக்கிறார் என்று ஒரு எண்ணம்.

சரி பாட்டி, நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க
ஸ்டோரி மறந்துடும் போலவே
அதுவும் குட்டி அப்டேட்தான்
கொஞ்சம் பெரிய அப்டேட்டா உடனுக்குடன் கொடுக்க டிரை பண்ணுங்க, இந்திரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top