இதயம் இடம் மாறியதே -1

Advertisement

Indira75

Active Member
ஐந்து கரத்தனை யானைமுகத்தனை
இந்தின் இளம் பிறை
போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை
ஞானக் கொளுந்தினை
புந்தியில் வைத்தடி
போற்றுகின்றேனே!!

யோகம்பாள் நிலையம். சென்னை போட் கிளப் சாலையில் உள்ள அந்த வீட்டின் உள்ளிருந்து கந்த சஷ்டி கவசத்தின் ஒலி யோடு மெலிதான மணி சத்தமும் கேட்ட து.
மிகவும் பிரம்மாண்டமான அந்த இரும்பு கதவுகளை தாண்டி சற்று உள் வரை பாதை சென்றது. பாதையின் இரு புறமும் அழகிய தோட்டம் புல்வெளிகளுடனும், செயற்கை குளங்களுடனும் பூ செடிகளுடனும்
சிறு காய்ந்த இலைகள் கூட இல்லாமல் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தது.

பாதைகளின் முடிவில் மிகப் பெரிய போர்டிகோ ஆறு அல்லது ஏழு கார்கள் நிறுத்தும் அளவில் மிகப் பெரியதாய் இருந்தது. வாயிலில் இருந்த தேக்கு மரக்கதவுகளை தாண்டி உள்ளே சென்றால் மிகப் பெரிய ஹால் இம்ப்போர்ட் செய்யப்பட்ட சோபாக்களுடன் அழகுற அமைந்திருந்தது. அதன் பின்னான உணவு அறை மற்றும் சமையல் அறை
மற்றும் பூஜை அறையும் இருந்தது.
மின் தூக்கி வசதியுடன் மேலும் இரண்டு தளங்களுடன் மிக பிரம்மாண்டமாக அந்த வீடு அமைந்திருந்தது.

பூஜை அறையில் அமர்ந்து இரு
கைகளை கூப்பியவாறு அந்த வீட்டின் முதல் தலைமுறையை சேர்ந்த மீனாட்சி அம்மாள் இறைவனை வேண்டிக் கொண்டு திரு நீறு அணிந்து வெளியே வந்தார்.
சந்தன நிற மெல்லிய கரை வைத்த பட்டு புடவையில் மரியாதையான தோற்றத்தில் தளர்ந்த நடையுடன் அந்த ஹாலில் போட்டிருந்த சோபா வில் வந்து அமர்ந்தவர் அந்த வீட்டை சுற்றிலும் நோட்டமிட்டார். இன்னும் யாரும் எழுந்து வரவில்லை. தன் கணவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த அவர் தன் மகன் வாசுதேவனுடன் வாழ்ந்து வந்தார்.

அந்த வீட்டின் தலைவர் வாசுதேவன். அவர் மனைவி யோகாம்பாள். தொழில் அதிபரான வாசுதேவன் யோகாம்பாளை திருமணம் முடித்ததும் அந்த யோக லக்ஷ்மி அவருடனே வந்து விட்டாளோ என்னும் அளவுக்கு தொழிலில் அளவுகடந்த முன்னேற்றம் அடைந்தார். கன்ஸ்டருக்ஷன், jewellery, textiles மற்றும் சிமெண்ட் பேக்டரி என அவர் பாதம் பதித்த அனைத்து தொழில்களிழும் வெற்றி தான். எனவே அந்த வீட்டில் யோகம்பாளின் ஆட்சி தான்.
வாசுதேவன் யோகாம்பாள் தம்பதியினர்க்கு மூன்று மகன்கள்.
முதல் மகன் பிரேம் விஜய் அவனது மனைவி ஸ்ருதி. பெரிய அரசியல் வாதியின் மகள். இவர்களுக்கு இரண்டு வயது மகன் சரண்.

இரண்டாவது மகன் அருண் குமார். அவன் மனைவி ப்ரீத்தி பெரிய தொழில் அதிபரின் மகள். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்திருந்தது. இன்னும் விருந்து விசேஷசங்கள் மற்றும் வெளிநாட்டு பயணம் முடிவடையாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.
மூன்றாவது மகன் நம் கதையின் நாயகன் கௌதம்.

மாடிப்படியில் யாரோ எழுந்து வரும் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தார் மீனாட்சி அம்மாள். அவரது மகன் வாசுதேவன் ஜாக்கிங் உடையுடன் வந்து கொண்டிருந்தார்.

அம்மா எழுந்துட்டீங்களா? எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்ல எனக்கேட்டபடி அருகில் அமர்ந் தார். எதுவும் பேசாமல் புன்னகைத்து உள்ளே திரும்பி பொன்னி என குரல் கொடுத்தார். அவர் குரல் கேட்டதும் சமையல்காரி பொன்னி tray இல் காபி கப்பு களை வைத்து கொண்டு வந்து டீப்பாயின் மேல் வைத்தாள். அதில் இருந்து ஒரு கப்பை எடுத்து தன் மகனிடம் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டார். தினமும் காலை அந்த பத்து நிமிடங்கள் மட்டுமே தன் மகனுடன் கழிக்கும் நேரம். மீண்டும் அடுத்த நாள் காலை தான்.

வாசு என்னை நம்ம கிராமத்து வீட்லயே கொண்டு போய் விட்டுடு. நான் அங்கேயே இருந்துக்கறேன் என்றார். அம்மா நான் இருக்கும்போது நீங்க ஏன் தனியாக போய் இருக்கனும் னு நெனைக்கறீங்க?
மீனாட்சி அம்மாள் அமைதியாக மகனை பார்த்தார். அந்த பார்வையில் இப்ப மட்டும் நான் இத்தனை பேருக்கு மத்தியில் தனியாகத்தானே இருக்கிறேன் என்ற செய்தி இருந்தது.

அம்மா எனக்கு உங்க மனசு புரியுது. சீக்கிரம் நம் வீட்டு சூழ்நிலையம் மாறும் என்றார். அந்த வீட்டில் பணம் இருந்தது. ஆனால் மனம் விட்டு பேச அந்த வீட்டின் மனிதர்களுக்கு மனமும் இல்லை நேரமும் இல்லை.

தானும் பணம் தொழில் என்று அதன் பின்னால் ஓடி குடும்பத்தை கவனிக்க தவறி விட்டோமோ என சில மாதங்களாக நினைப்பதை போல அன்றும் நினைத்தார் வாசுதேவன்.

என்னங்க எழுந்துட்டீங்களா? இன்னும் ஜாக்கிங் போகாம உக்கார்ந்துருக்கீங்க? என்று கணீர் குரலில் கேட்டவாறே அவர் மனைவி யோகம்பாள் வந்தார்.
ஏன் அத்தை உங்களுக்கு எத்தனை முறை சொல்றது அவர்க்கு சர்க்கரை போட்டு பில்டர் காபி கொடுக்காதீங்க ன்னு? அவர் காலையில க்ரீன் டீ தான குடிக்கணும் என்ற யோகாம்பாளை பார்த்தாலே தெரியும் அவரின் ஆளுமையும் கர்வமும்.
மெதுவாக அந்த வீடு விழிக்க தொடங்கியது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "இதயம் இடம்
மாறியதே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இந்திரா75 டியர்
 
Last edited:

Indira75

Active Member
:D :p :D
உங்களுடைய "இதயம் இடம்
மாறியதே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இந்திரா75 டியர்
Thank you mam☺️☺️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top