இட்லிப்பொடி

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இந்த பொடியை இங்கே (நெட்டில்) பார்த்தேன். நல்ல இருக்கு.

1.வெள்ளை குண்டு ஊளுந்து - 1௦௦ கிராம்
2.க.மிளகாய் - 1௦௦ கிராம் (நீட்டு)
3.கருப்பு எள்ளு - 75 கிராம்
4.பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு.
5.சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
6.உப்பு - தேவையான அளவு

எள்ளு மட்டும் காய்ந்த வணலி வறுக்கவும். மிளகாய், உளுந்து, பெருங்காயம் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு நன்கு வறுத்துக்கொள்ளவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, பொடி பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இட்லி, தோசைக்கு சூப்பர் பொடி.
 

murugesanlaxmi

Well-Known Member
என்ன இது சகோதரரே?
லக்ஷ்மி செல்லத்துக்கு ஹெல்ப் பண்ணுறீங்களோ?
But, இதுவும் நல்லாத்தானிருக்கு, சகோ
மகளின் ஆசைக்கா அப்ப அப்ப ஏதாவது செய்து தருவது சகோதரி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு சின்ன திருத்தம், சகோ
175 கிராம் உளுந்து + எள்ளுக்கு
100 கிராம் மிளகாய் அதிகம்
பொடி காரமாகயிருக்கும்
அதுவும் நீட்டு மிளகாய் வேற
அதனால இன்னும் 50 கிராம்
வெள்ளை உளுந்து + 75 கிராம்
கடலைப் பருப்பு சேர்த்து
வறுத்து அரைத்தால்
சரியாகயிருக்கும், சகோதரரே
சர்க்கரைக்கு பதிலாக
உருண்டை வெல்லம்
சேருங்கள்
இன்னும் சுவை கூடும், சகோ
 

banumathi jayaraman

Well-Known Member
மகளின் ஆசைக்கா அப்ப அப்ப ஏதாவது செய்து தருவது சகோதரி.
என்னாது? மகளின் ஆசைக்கா?
ஏன் என்னோட லக்ஷ்மிக்குட்டிக்கு
செஞ்சு தந்தால் ஆகாதா?
என்ன ஒரு ஓரவஞ்சனையப்பா?
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு சின்ன திருத்தம், சகோ
175 கிராம் உளுந்து + எள்ளுக்கு
100 கிராம் மிளகாய் அதிகம்
பொடி காரமாகயிருக்கும்
அதுவும் நீட்டு மிளகாய் வேற
அதனால இன்னும் 50 கிராம் வெள்ளை உளுந்து 75 கிராம்
கடலைப் பருப்பு சேர்த்து
வறுத்து அரைத்தால் சரியாகயிருக்கும், சகோதரரே
சர்க்கரைக்கு பதிலாக உருண்டை வெல்லம் சேருங்கள் இன்னும் சுவை கூடும், சகோ
இதன் சுவை மாறும் சகோ. இந்த கலவையே சிறப்பாக இருக்கும். மகளுடன் படிக்கும் பிள்ளைகள் இதற்கு ரசிகர்கள். இதை மாற்றவேண்டாம் சகோதரி. நான் பலதடவை செய்தது. நல்ல காரம்சாரமாக இருக்கும்
 

banumathi jayaraman

Well-Known Member
இதன் சுவை மாறும் சகோ. இந்த கலவையே சிறப்பாக இருக்கும். மகளுடன் படிக்கும் பிள்ளைகள் இதற்கு ரசிகர்கள். இதை மாற்றவேண்டாம் சகோதரி. நான் பலதடவை செய்தது. நல்ல காரம்சாரமாக இருக்கும்
சரிதான், சகோ
 

murugesanlaxmi

Well-Known Member
என்னாது? மகளின் ஆசைக்கா?
ஏன் என்னோட லக்ஷ்மிக்குட்டிக்கு
செஞ்சு தந்தால் ஆகாதா?
என்ன ஒரு ஓரவஞ்சனையப்பா?
எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
முதல்லயே நல்லாயிருக்குன்னு ஒத்துக்கிட்டா... மனைவிகளோட கெத்து என்னாகிறது...லட்சு அக்கா கரெக்டாதான் பாலோ பண்ணுறாங்க சகோ... சூப்பர் சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top