அவள் 3

Advertisement

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் மித்ரா பள்ளிக்கு தயாரானாள் . இன்றாவது ராஜேஷ் வருவான் என்ற நம்பிக்கையில். அவன் மீது அவளுக்கொரு சிறு ஈர்ப்பிருந்தது உண்மைதான்.

எப்பவும் போல கண்ணாடி முன் நின்றாள். தோன்றிய பிம்பத்தில் சட்டென அலறி பின் வாங்கினாள். கண்ணை கசக்கி பின் கண்ணாடியில் பார்த்தாள். வித்தியாசமாக ஏதுமில்லை.

பள்ளி வந்தவுடன் ராஜேஷை தேடியபடியே வகுப்பில் நுழைந்தாள்.வந்திருந்தான். ஆனால் அமைதியாக அமர்ந்திருந்தான்.யாரிடமும் எதுவும் பேசாமல்.சற்றே உடல் இளைத்திருந்தான்.

இவள் ராஜேஷ் என திரும்பி கூட பார்க்காமல் வாய்க்குள்ளே என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் பாத்துகலாம். என்றபடி சென்று அமர்ந்தாள்.

சுபா வந்தவுடன் ஹே ராஜேஷ் வந்துட்டியா என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா என்றாள்.

அப்புறம் சொல்றேன். ஆனா நீ மித்ரா பக்கத்தில உட்காராத.

ஏன்டா

சொல்றத கேளு ப்ளீஸ்.மித்ரா இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க அவள் முறைப்பதாக எண்ணிக் கொண்ட ராஜேஷ் சட்டென பயந்து முகம் திருப்பிக் கொண்டான்

சரியென்று தலையசைத்து சுபாவும் மித்ராவுக்கு முன் இருந்த பென்ச்சில் அமர்ந்தாள். மித்ரா குழம்பினாள்.

அதற்குள் ஆசிரியை வரவே எல்லாரும் எழுந்து நின்று குட் மார்னிங் மேம் என கூறினார்.

குட் மார்னிங் என்று பதிலுக்கு கூறிவிட்டு ரூம் க்ளீன் பன்னலயா ஏன் இவ்ளோ ஸ்மெல் வருது எனக் கேட்டுவிட்டு வகுப்பை ஆரம்பித்தாள்.

கணித வகுப்பு முடிந்து P. E. T வகுப்பிற்காக எல்லோரும் வெளியேறுகையில் சுபாவை போகாதே என்று ஜாடைக் காட்டினான் ராஜேஷ்.

எல்லோரும் சென்ற பின் சுபா அவனிடம் என்னடா ஆச்சு என வினவினாள்.

உனக்கு தெரியுமா மித்ரா ஒரு மனிசி இல்ல பேய்டி.

சுபாவுக்கு லேசாக சிரித்தாள்.ம்ம் அப்புறம் ஏப்ரல் 1 கூட இல்லையே ஏண்டா விளையாடுற..

லூசு ஒரு வாரத்திற்கு முன்னாடி என்ன நடந்தது தெரியுமா.

நீ சொன்னாத்தானே தெரியும்?

நான் க்ளாஸ் முடிஞ்சதும் லைப்ரரி போனன். அப்போ

அவன் சொல்லும் போதே அந்த காட்சிகள் சுபாவின் மனதில் படமாக விரிந்தது.

லைப்ரரியன் அங்கு இல்லை. உள்ளே நுழைந்து சில புத்தகங்களை தேடினால் அங்கு தன்னை தவிர வேறு யாரோ இருப்பது போல் தோன்றியது.நாசியில் வீசிய இரத்த வாடை முகம் சுளிக்க வைத்தது

அங்க திரும்பி நிக்கறது மித்ரா போல இருக்கே.

மித்ரா வீட்டுக்கு கிளம்பலையா என்ன லைப்ரரி பக்கமெல்லாம்? அருகில் சென்றான்.

என்ன ராஜேஷ்? மித்ராவின் குரல் தான்.

அந்த பக்கமே பாத்திட்டிருக்க என்ன இருக்கு அங்க. திரும்பு மித்ரா என்றபடி தோளைத் தொட்டான்.

திரும்பிய மித்ராவின் உருவத்தில் அதிர்ச்சியில் சட்டென பின்னால் விழுந்தாள்.

சுண்ணாம்பு போல் வெளுத்த முகத்தில் முகத்தில் உடலெங்கும் இரத்தம் சொட்ட
இரத்தகறை படிந்த பற்களை ஈஈஈ என இழித்தபடி ராஜேஷ் -ஐ நெருங்கினாள்.

அவள் நெருங்க நெருங்க அந்த இரத்தவாடை அவன் நாசியில் நுழைந்து குமட்டியது.

பயத்தில் மூச்சி முட்டி உடல் நடுங்கியது.

பேசு ராஜேஷ் என்கிட்ட பேசு..ஏன் நிறுத்திட்ட என்றபடி அவன் முகத்திற்கு அருகில் குனிந்து

ஏன் எப்பவும் ஒரே மாதிரி சோகமா இருக்க ராஜேஷ். நாமலாம் ப்ரண்ட்ஸ் தானே. எதுவா இருந்தாலும் என்கிட்ட சேர் பண்ணிக்க

முன்பொரு நாளில் அவன் அவளிடம் சொல்லியதை அதே போல் பேசினாள்.

ராஜேஷ் கண்ணை மூடிக் கொண்டான். திக்கி திக்கி கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க முயன்றான். வார்த்தைகள் தந்தியடித்தது.

காக் காக்க ககககனக வேல் காக்க

பின் விழி திறந்து பார்த்தால் அங்கே எதுவுமில்லை.எழுந்து ஓடியவன்தான். இன்றுதான் மீண்டும் பள்ளிக்கு வருகிறான்.

அவன் கண்களில் இருந்த பயத்தில் அனைத்தும் உண்மை என்று புரிந்தது. அவளும் பார்த்தாளே அன்று கல் வந்த திசையில் யாருமில்லை. மற்றும் இரத்த வாடை அவளும் உணர்ந்திருக்கிறாள். குழம்பினாள் சுபா.

ராஜேஷ் என்ற திடீரென கேட்ட மித்ராவின் குரலில் இருவரும் ஒரு நொடி அதிர்ந்தனர்.
அது எதையும் கவனிக்காதவள் போல மித்ரா ராஜேஷ் அருகில் வந்து ராஜேஷ் நீ சொல்வதெல்லாம் உண்மையா சொல்லு சொல்லு ராஜேஷ் உண்மையா விளையாட்டு திடலுக்கு சென்று மித்ரா அங்கே இருக்கப் பிடிக்காமல் மீண்டும் வகுப்பிற்கு திரும்ப அங்கேதான் ராஜேஷ் தன்னைப்பற்றி பேசுகிறான் என்று மறைந்திருந்து கேட்டாள்.

கேட்ட செய்தி அதிர்ச்சிதர அதை உறுதி செய்ய ராஜேஷிடம் கேட்டாள். ராஜேஷ் இவளைப் பார்த்தவுடன் பயந்து ஒரு அடி பின்னோக்கிச் சென்றான். அதிலிருந்தே தெரிந்தது அத்தனையும் உண்மை என்று.

காலையில் கண்ணாடியில் தெரிந்த மாற்றம்.

வகுப்பில் இரத்தவாடை

அந்த பையன் மேல் கல்லடி

ராஜேஷ்க்கு நடந்தது

புரிந்துவிட்டது. எல்லாம் புரிந்துவிட்டது மேகா என்று கத்தியபடியே மயங்கிசரிந்தாள்.

ராஜேஷும் சுபாவும் ஒன்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தண்ணீர் பாட்டில் தானாக அந்தரத்தில் பறந்து வந்து திறக்கப்பட்டு சரியாக மித்ராவின் முகத்தில் நீர் தெளிக்கப்பட்டது.

மேகா மேகா என்று முனகியபடியே எழுந்தாள் மித்ரா என்ற சங்கமித்ரா.

மேகமித்ரா சங்கமித்ரா இரட்டை சகோதரிகள்.பிறந்ததிலிருந்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அச்சு அசல் ஒரே உருவ அமைப்பு கொண்டவர்கள்.

தாய் நித்யா. தந்தை பிரகாஷ். பிரகாஷ் அதிகபட்ச நாட்கள் வேலை காரணமாக பிரிந்து இருந்ததினால் தாயிடம் தான் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம்.

இரட்டையர்களில் சங்கமித்ரா சற்றே அமைதியானவள். மேகமித்ரா துறுதுறுப்பானவள்.

மேகாவிடம் இருக்கும் ஒரு சிறிய கெட்ட பழக்கம் என்ன என்றால் சங்கமித்ரா அவளை தவிர வேறு யாருக்கும் அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.அது பெற்ற அன்னையாகவே இருந்தாலும் சரி. அவளுக்குத் தான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும்.இதன் பொருட்டே ராஜேஷ்க்கு நடந்த நிகழ்வு.

என்னதான் சின்ன சின்ன சண்டை போட்டாலும் அடுத்தவரிடம் ஒருவரையொருவர் விட்டு கொடுக்கமாட்டார்கள்.இதுவரை பிறந்ததிலிருந்து பிரிவு என்றால் என்ன எனத் தெரியாமல் வண்ணத்துப்பூச்சி போல் சிறகடித்து கொண்டிருந்தவர்களை பிரித்து வைத்தது விதி.

என்னவோ பேசி விளையாடிக் கொண்டே சாலையொன்றினை கடக்கமுற்படும் நேரத்தில் சங்கமித்ரா தனக்கு இடப்புறம் வந்த லாரியை கவனிக்க தவறினாள்.லாரி
சரியாக அவள் மீது மோதப் போகும் தருணத்தில் மேகமித்ரா அவளை தள்ளிவிட்டாள்.

ஆனால் அதே வேகத்தில் அவளால் சாலையை கடக்க முடியாமல் அந்த லாரியால் இடிபட்டு தூக்கி வீசப்பட்டு சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

எல்லாம் கண்மூடி திறக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது. அந்த இடத்திலேயே மேகமித்ரா உயிர் பிரிந்தது.

பின்பு அவள் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டது. பிரகாஷ் நிலை குலைந்து போனான். நித்யா கதறி அழுதாள். அவளின் அன்பு மகள், உயிரின் ஒரு பகுதி இன்று சவப் பெட்டியில்.

சங்கமித்ரா கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை அவள் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அவள் உடலே சவப்பெட்டியில் கிடத்தப்பட்டது போல மெளனமாக கிடந்தாள். இதையெல்லாம் ஒரு இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது அந்த உயிர்.

இறுதி சடங்குகள் முடிந்ததும் உறவினர்கள் கிளம்பிவிட்டார்கள். ராஜேஷ் அம்மா தவிர.
நித்யா சங்கமித்ரா நிலையில் மாற்றம் இல்லை. நித்யா அழுதே கரைந்தாள். சங்கமித்ராவிடம் அதே மெளனம். இருவரும் உணவு தூக்கம் மறந்து மேகாவின் நினைவிலே கிடந்தனர். பிரகாஷ் க்கும் தாங்கா முடியா வலிதான் இவ்விழப்பு. ஆனால் இப்போது இறந்தவர்களை எண்ணி இருப்பவர்களை இழக்க அவன் தயாரில்லை.

இவர்கள் இப்படியே இருந்தால் சரிவராதுஎன்று சென்னையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு இருவரையும் அனுப்ப முடிவு செய்தான். நித்யா மறுத்தாள். அவளது மகள் வாழ்ந்த வீட்டை விட்டு வர முடியாது என கூறிவிட்டாள். எனவே சங்கமித்ராவை மட்டும் தாயுடன் அனுப்பி வைத்தான். புதுப்பள்ளி புது நண்பர்கள் புது இடம் அவளது மனதிற்கு சற்று மாற்றம் என நம்பினான்.இ

அங்குதான் தவறு செய்தான். ஒரு வேளை தாயும் மகளும் ஒரே வீட்டில் இருந்தாலாவது சங்கமித்ரா வை தேற்றும் பொருட்டு நித்யா சற்று மனம் தெளிந்திருப்பாள் போலும். அவளும் இல்லாமல் தனிமையில் மிகுந்த மன அழுத்தத்தில் தான் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தாள்.

மேகா.... மேகா... என்முன்னாடி வா மேகா நீ என் கூட தான் இருக்க என்னால உணர முடியுது.

கத்தினாள் சங்கமித்ரா . காலையில் கண்ணாடி பார்க்கையில் இவள் சிகை ஒதுக்கி பொட்டினை சரி செய்கையில் பிம்பம் இவளை அதை பிரதிபலிக்காமல் அவளை ஏக்கமாய் பார்த்திருந்தது.

அதையெல்லாம் நினைத்து பார்த்து அழுதாள்.

என்னால நீ இல்லாம இருக்க முடியலடி. உங்கூடவே என்ன கூட்டிட்டு போய்டு மேகா. அழுதாள். ஆம் அவளின் இறப்புக்கு அழாமல் சேர்த்து வைத்திருந்த மொத்த அழுகையும் சேர்த்து அழுதாள்.

நித்யா மருத்துவமனையில் உயிர் பிழைக்கப்பட்டு இன்றுதான் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறாள். பிரகாஷ் அவளை சென்னைக்கு காரில் அழைத்துச் செல்கிறான். இனிமேலும் மனைவியை தனியே விட துணிவில்லை. நித்யா அமைதியாக வந்தாள் அவள் செய்த காரியம் தவறென தெரிந்ததால்.

டிரைவர் காரை ஓட்ட பின்னிருக்கையில் அமர்ந்திருந்தினர். சோர்ந்து அமர்ந்திருந்த நித்யாவின் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்துக் கொண்டு பேசினான். நான் சென்னை பிரான்ச்சுக்கு மாறிட்டேன். நானும் உங்க கூட தான் இருக்கப்போறன். இனிமே இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்யாதே நித்யா. இனிமே இன்னொரு இழப்பை தாங்கற அளவுக்கு என் மனசுல சக்தி இல்ல.

கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்தான். நித்யாவுக்குள் குற்ற உணர்வு தலைதூக்க அவன் கைகளை இறுக்கிபிடித்துக் கொண்டாள். பிரகாஷ் அத்தனை எளிதாக அழுதுவிட மாட்டான். அன்று மகள் இறந்தபோதுதான் முதல் முறையாக அழுது பார்த்திருந்தாள். எத்தனை துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடி வெல்பவன் இப்போது எனக்காக அழுகிறான் நித்யா மெல்ல பிரகாஷ் தோள் மேல் சாய்ந்துகொண்டாள்.

அங்கே ஒட்டு மொத்த துன்பமும் ஒரே நாளில் சேர்த்து வைத்து கதறிக் கொண்டிருந்தாள். பயத்தில் உறைந்து சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த சுபா இவளின் அழுகையில் தானும் அழுது ஓடி வந்து சங்கமித்ராவினை அணைத்துக் கொண்டாள். ராஜேஷும் இவர்கள் அருகில் வந்து நின்றாள்

மித்ராவின் கண்ணத்தில் யாரோ முத்தமிடுவது போல் தோன்றியது. யாரோ என்ன. மேகாதான். அவளின் ஸ்பரிசத்தினை மித்ராவால் உணரமுடிந்தது.

மேகா என்றபடி அறையைச் சுற்றித் தேடினாள். அங்கிருந்த கரும்பலகையொன்றில் bye Mithra என்று எழுதியிருந்தது.

அந்த உயிர்௧்கு வேண்டியதெல்லாம் மித்ராவின் நலம் தான். இடையில் தன் பொறாமைக் குணத்தால் ராஜேஷை மிரட்டியது தான். ஆனால் மித்ரா என்னையும் உன்கூட கூட்டிட்டு போய்டுடி என்று கதறிய போதுதான் நிதர்சணம் புரிந்தது. பிரிய சகோதரியின் அன்பு தான் இறந்தாலும் அப்படியே தான் இருக்கிறது, எப்படியும் இந்த பிரிவை இருவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று புரிந்தது.

மித்ராவினை அணைத்து பிடித்திருந்த சுபாவையும் அருகில் அழாதே மித்ரா என்று ஆறுதலுரைத்த ராஜேஷையும் ஒரு முறை கவனித்துவிட்டு இனி எல்லாம் நல்லதே நடக்கும் என நிம்மதியடைந்து வேறொரு உலகம் நோக்கி புறப்பட்டது...

...............சுபம்.
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றிங்க. எந்த சைட் ல எழுதுனாலும் 1st? கமெண்ட் எனக்கு உங்ககிட்ட இருந்துதான் வருது.
ஹா... ஹா... ஹா..........
நான் கூட முதலில் இந்த
''அவள்'' கதையை பேய்க்
கதையோன்னு அந்த
நிஜமான பாட்டியை
பிரகாஷின் தாயை
பேய்-ன்னு நினைச்சுட்டேன்,
பாரதி kb சார்

அப்புறம் பார்த்தால் மித்ராப்
பொண்ணு இரட்டையர்களாக
இருக்காங்க
மேகமித்ரா, சங்கமித்ராவின்
அருகில் வரும்பொழுது இரத்த
வாடை அடித்ததா?
 

banumathi jayaraman

Well-Known Member
பழி ஓரிடம் பாவம் ஓரிடம்-ங்கிற
மாதிரி மேகா வந்ததற்கு எல்லாப்
பிள்ளைகளும் சேர்ந்து ப்ரீத்தியை
பலிகடா ஆக்கி கிண்டல்
செஞ்சுட்டாங்காளே, பாரதி kb சார்?
ஹா... ஹா... ஹா...........

உங்களின் முதல் கதையே
ரொம்பவும் பிரமாதமாக
இருக்கு, பாரதி kb சார்
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களின் முதல் கதையே
ரொம்பவும் பிரமாதமாக
இருக்கு, பாரதி kb சார்

என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் இன்னும் நிறைய
நிறைய எழுதி நீங்கள் மேலும்
மேலும் புகழ் பெற என்னுடைய
மனமார்ந்த ஆசீர்வாதங்களும்,
வாழ்த்துக்களும், பாரதி kb சார்

நீங்கள் ஆண் எழுத்தாளர்தானே,
பாரதி kb சார்?
 
உங்களின் முதல் கதையே
ரொம்பவும் பிரமாதமாக
இருக்கு, பாரதி kb சார்

என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் இன்னும் நிறைய
நிறைய எழுதி நீங்கள் மேலும்
மேலும் புகழ் பெற என்னுடைய
மனமார்ந்த ஆசீர்வாதங்களும்,
வாழ்த்துக்களும், பாரதி kb சார்

நீங்கள் ஆண் எழுத்தாளர்தானே,
பாரதி kb சார்?
இல்லைங்க நான் பெண். பாரதி கார்த்திகேயன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top