அவளே என் பிரபாவம் 20

Joher

Well-Known Member
#2
:love::love::love:

நம்மோட கோபத்தை இறக்கி வைக்க பேசுறப்போ தப்பு செஞ்ச அவங்களும் இந்த வார்த்தைகளை பெருசா தான் எடுத்துப்பாங்க......
அவனுக்கு ரெண்டு பக்கமும் உண்மையை யாரும் சொல்லவே இல்லை....... மது & அவள் அப்பா இடையில் சிக்குனவன் அவன் தான்.......
அவனோட கோபம் மதுவால் மட்டுமே...... அவ கூட சொல்லலையேன்னு தான்......
இன்னமும் நிறுத்துறாரா வடிவேலு......

போங்க உங்க ரெண்டு பேருக்கும் தான் அக்கறை பாசம் எல்லாம் இருக்குமா......
அவளுக்குனு மனசு ஒன்னும் இல்லையா........
ரெண்டு பேரும் உங்க ஈகோனாலே அதை சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்க........

மது முடிவு எடுத்துட்டா........
இப்போ மதுவோட நிராகரிப்பும் சேர்ந்து பிரேம் என்ன முடிவு எடுக்க போறானோ.......

துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று
தான் தொடர் கதையா
என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே கதை எது.......
 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

மது சொன்னது சரிதான்
ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அம்மாக்காரி பேசினதுக்கு வடிவேலு சபையில் மாப்பிள்ளையின் சட்டையைப் பிடித்தது தவறுதான்

அதே போல மதுமித்ரா உன் மனைவிதான்
உன் காதலிதான் உனக்கு எல்லாமுமானவள்தான்
ஆனாலும் சபையில் எல்லோருக்கும் முன் மதுவை நீ அடித்தது தவறுதான், ப்ரேம் தம்பி

அடப்பாவிங்களா
அவள் அத்தனை பேசியும் இன்னுமா அப்பனும் புருஷனும் திருந்தாமல் ஆளுக்கொரு காரைத் தூக்கிட்டு வந்துட்டீங்க

சபாஷ் மதுமித்ரா
இரண்டு பேருமே வேண்டாம் விலகுங்கன்னு சொல்லிட்டாள் ஸோ இனிமேலாவது அடக்கி வாசிங்க, வெடிவேலு

அடப்பாவமே
ப்ரேம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறானா?
இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பதை விட இந்த வைஜெயந்தி என்ன பண்ணிக்கிட்டிருந்தாள்?
தின்னுப்புட்டு தின்னுப்புட்டு எல்லோரையும் பொறணி பேசிக்கிட்டு தூங்கினாளா?

ஒரே ஒரு மகனை கூடவே வெச்சு பார்க்காம ஹாஸ்டலுக்கு துரத்தி விட்டுட்டாளா?
அப்பவே இந்த துப்புகெட்ட சண்முகம் அவளை நாலு போட்டிருந்தால் இப்போ இந்த அளவுக்கு வைஜெயந்தி ஆடியிருக்க மாட்டாள்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
Nice update

வடிவேலு & பிரேம் ரெண்டு பேரும் மதுவுக்காக அடிச்சிக்கிட்டீங்க... இப்ப அவ, நீங்க ரெண்டு பேரும் வேணாம்னு முடிவு எடுத்துட்டா.... இனிமேலாவது அவளுக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம, அவளோட மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க...


 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement