அவளே என் தோழனின் வசந்தம்-7

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-7

2016

ரிஷி இல்லம்

அம்மு நான் தொழில் சம்பந்தமா குணால் குடும்பம் கொடுக்க கூடிய விருந்துக்கு போக வேண்டும் நீங்க அனுவை கொஞ்சம் பார்த்துக்கொங்க– ரிஷி

உர்ர்……-அம்மு

ரிஷி சொல்லிக் கொண்டே அம்முவை நிமிர்ந்து பார்த்தவன் தன் பேச்சை நிறுத்தி விட்டு அம்மு என்னாச்சு அம்மு ஏன் முகம் சிவந்திருக்கு–ரிஷி

டேய் கிட்ட வராத கிளம்பு-அம்மு

முகத்தை திருப்பி கொண்டார் -அம்மு

என்ன கோபம் அம்மு நீ சொன்ன தான தெரியும்-ரிஷி

உனக்கு தெரியாதா -அம்மு

என்ன அம்மு-ரிஷி

என்ன..என்ன நோன்ன அம்மு-அம்மு

………………………

பின்ன என்னடா அனுவ நான் பார்த்துக்க மாட்டேனா என்னமோ அவள் நான் அப்படியே நட்டாட்டுல விட்டுடர மாதிரி எப்போ எங்க போனாலும் போறத்துக்கு முன்ன அனுபத்திரம் அனுபத்திரம் சொல்லற-அம்மு

ஒஹ்…. சாரி அம்மு நீ என்னவிட பத்தரமா பாத்துப்ப ஆன எனக்கு தான் பய உணர்வு ஜாஸ்தியா இருக்கு என்ன செய்ய சொல்லு அம்மு அத இனி மாத்திக்கரேன் சரிய இப்போ சிரி ப்ளீஸ்…. ப்ளீஸ் என் செல்ல அம்மு இல்ல சிரியேன் என்று அம்முவின் கன்னத்தை பிடித்து கிள்ளினான் – ரிஷி

போட போக்கிரி என்று சிரித்தார்-அம்மு

சரி சரி சீக்கிரம் போய்ட்டு வா எப்படி இருந்தாலும் உன்னால் மட்டும்தான் அவள சமாளிக்க முடியும் அவ எங்க எங்க பேச்ச எல்லாம் காது கொடுத்து கேக்கறா அவளும் ரொம்ப சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கறா ரிஷி அவ சீக்கிரம் குணமான நல்லா இருக்கும் என்று அவன் முகம் பார்த்தார் -அம்மு

அது வேதனையில் சுருங்கி இருந்தது அதை கண்டு அவர் துடித்து போனார் தான் செய்த தவறை உணர்ந்து நான் ஒரு முட்டாள் நீ வெளியே போகும் போது நிறுத்தி வெச்சு நானே நேரத்த கடத்தரேன் இரு இரு ஒரு நிமிஷம்-அம்மு

அ..ம்..மு– ரிஷி



இங்க பார் கண்ணா உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை தெரியும் ஆனால் எனக்கு இருக்கே அதை உன் மேல தினிக்கறது தப்பு தான் ஆன என்னமோ இன்னிக்கு எனக்கு மனசே சரியில்லை நீ வேண்டாம் சொல்லாத கண்ணா என்னோட மன திருப்பதிக்காக என்று கூறி பூஜை அறையில் இருந்து எடுத்து வந்ததிருநீற்றை தலையில் தூவி கையில் இருந்த தாயத்தை அவன் புஜத்தில் வெளியே தெரியாதவாறு கட்டிவிட்டார் –அம்மு (இத நீங்க எதுக்கு கட்டரீங்க அம்மு தப்பு பண்ணரீங்களே இது பேய் கிட்டேந்து வேணும் நா ரிஷிய காப்பாத்தும் மனிஷ ரூபத்திலே இருக்கும் ரத்தகாட்டேரிங்க கிட்டேந்து இல்ல)

அவர் கட்டி முடித்ததும் இறுகிய முகத்துடன் வெளியேறினான் - ரிஷி

அந்த பெரிய ஹோட்டல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ( அது தேவ் ஹோட்டல் ஒட ஒரு கிளைதான் பா )

ரிஷியின் கார் ஹோட்டல் வாசலில் வந்து நிற்கவும் ஹோட்டல் வாலே ரிஷியிடம் ஓடி வந்து அவனின் கார் சாவியை வாங்கி பார்க்கிங்கில் விட எடுத்து சென்றான் அதற்கு முன் ரிஷி வந்து இறங்கிய உடன் அங்கிருந்த அனைவரும் அவனை தான் பார்த்தனர்

அதிலும் இளம் பெண்கள் அவனை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்தனர் என்றால் வயது வந்த மகளை வைத்திருந்த பெற்றோர்கள் ரிஷியை தங்கள் மருமகனாக ஆக்கிகொள்ள முடியவில்லையே என்று பெருமூச்சு விட்டனர்

(அவர்கள் விட்ட பெருமூச்சில் நானே எழுத முடியாமல் பறந்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இது ஒரு பக்கம் இருக்க இளம் வயது ஆண்கள் சிலர் இவனை கண்டு வியந்தனர் என்றால் சிலர் பொறாமை பட்டனர் சில ஆண்கள் கூட இவனை சைட் அடித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆனால் அவன் அதை எதையும் கண்டு கொள்ளாமல் நேராக பார்ட்டி ஹாலை நோக்கி நடந்தான் அப்போது எங்கிருந்து தான் வந்ததோ அந்த உண்மையான பேய் நோ நோ நோ (அது சாரி டங்க் ஸிலிப்) அவள் தாரா

தாரா ராவ் அம்மா மாலினி ராவ் அப்பா ராஜேஷ்வர் ராவ்

(இப்போது புரிந்திருக்குமே)

பெவி குவிக் (ரத்த அட்டை என்று சொல்ல வேண்டுமோ )( கொலைகேசில் உள்ள போய்டாத அந்த ரத்த அட்டைங்க உன்ன என்ன செய்துச்சு) போட்டது போல் ரிஷியோடு ஒட்டிக் கொண்டது இல்லை இல்லை ஒட்டிக் கொண்டாள்

முதலில் ரிஷி அவளை கவனிக்கவில்லை பின் தன் பக்கம் சென்ட் வாடை தூக்கலாக தொடர்ந்து வரவும் தான் திரும்பி பார்த்தான் அவன் திருப்புவதற்காவே காத்திருந்தவள்

ரிஷிஷிஷி….. (கெஞ்சலா கூப்பிடறபா )

எ..ன்….ன…. (பல்லை கடித்து கொண்டே கேக்கறாரம்)

தாரா அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை ( அவன் கோபத்தை பார்த்தால் காரியம் ஆகாதே )

அப்போது தொழில் முறை நண்பர் ஒருவர் ரிஷியை கண்டு அங்குவர ரிஷியும் அவரிடம் பேசிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான் ரிஷி நழுவுவதை பார்த்த தாரா தானும் நகர்ந்து அவனை உரசிக்கொண்டே வந்தாள் அவள் உரசுவது ரிஷிக்கு கம்பளி பூச்சி ஊருவது போல அவனுக்கு அருவெருப்பாக இருந்ததோடு பீ.பியை எகிற செய்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு இருந்தான்

அப்போது பேரர் ஒருவர் லமன் ஜூஸை தனியாக எடுத்து வந்து ரிஷியிடம் நீட்டீனான் அதை நீட்டும் போது அந்த பேரரின் பார்வையும் தாராவின் பார்வையும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டது இதை ரிஷி பார்த்துவிட்டான் ஆனாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

ஒரு மணி நேரம் சென்றிருக்கும் ரிஷிக்கு கண்கள் மங்க ஆரம்பித்தது தலையை உலுக்கி கொண்டான்

ரிஷி தலையை உலுக்குவதை கண்ட தாராவின் முகத்தில் தன் திட்டம் வெற்றி பெற்ற கர்வம் மின்னியது ( தாராம்மா இன்னும் முழுசா உன் திட்டம் முடியல அதனால ரொம்ப துள்ளாத)

ரிஷி கண்கள் மங்கி தலை சுற்றுவது போல் உணர்ந்தவன் தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் விடை பெற்று ஹோட்டல் வாயிலை நோக்கி தள்ளாடி கொண்டே மெதுவாக சென்றான் அவன் ஹோட்டல் வாயிலிற்கு வரவும் அங்கு அப்போது தான் வந்திருந்த காரில் இருந்து இரண்டு கைரிஷியை பிடித்து இழுக்க அவன் உள்ளே விழவும் கார் அங்கிருந்து பறந்தது

சிறிது நேரம் முன்பு தான் வென்றதை தன் தாய் மாலினி ராவ் இடம் கூற மறைவான இடத்திற்கு சென்று விட்டு வரவும் ரிஷியை இங்கு காணவில்லை அவன் எங்கு சென்றான் எவ்வாறு சென்றான் என்பதும் புரியவில்லை ரிஷியை அந்த ஹோட்டல் முழுவதும் தேடி விட்டு அவன் கிடைக்க வில்லை என்றவுடன் தான் போட்ட திட்டம் கடைசி நிமிடத்தில் எப்படி சொதப்பியது யார் ரிஷிக்கு உதவி செய்தது என்பது புரியாததும் ரிஷிக்கு உதவி செய்பவர்களை கண்டு பிடிக்க முடியாததும் ரிஷியை அடைந்தே தீரவேண்டும் என்ற. அவளின் வெறியை குறைக்கவில்லை அது இன்னும் இன்னும் அவளும் இருந்த மிருக வெறியை மென்மேலும் கூட்டியது



அங்கு தாரா கோபத்தில் கொப்பளித்து கொண்டு இருக்க இங்கு ரிஷியின் நிலையோ வேறாக இருந்தது ரிஷியை கடத்துவது போல காரில் ஏற்றியவன் ரிஷியை நேராக கொண்டு சென்றது ரிஷியின் இல்லத்திற்கு ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த காரில் இருந்த நான்கு நபர்களில் ஒருவன் அதாவது ரிஷி மயக்கத்தில் இருக்க மற்ற இருவர் தங்கள் நிலையில் இல்லாமல் ஏதோ ஒன்றிற்கு கட்டுபட்டது போல இருந்தனர் நான்காவதாக இருந்தது அந்த ஆன்மா (புரிந்தது புரிந்தது அவ்விருவரும் எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்று)

ரிஷியின் இல்லத்தை அடைந்தது அந்த கார் அந்த காரை கண்ட அவ்வீட்டின் காவலாளிகள் ஒரு நிமிடம் திடுக்கிட்டனர் பின்னர் சாமாளித்துக் கொண்டு வந்து வாயில் கதவை திறந்து விட அந்த கார் போர்டி கோவில் சென்று நின்றது

அப்போது இரவில் பாதுகாப்பிற்காக திறந்துவிட பட்டிருந்த அந்த நான்கு வேட்டை நாய்களும் காரை பார்த்து குறைக்க ஆரம்பித்தது அந்த நான்கு வேட்டை நாய்களும் தன்னை கண்டு தான் குறைக்கிறது என்பதை உணர்ந்த ஆன்மா அவற்றை நோக்கி சென்றது ஆன்மாவை கண்டு குலைத்து கொண்டிருந்த அந்த நான்கு ஜீவன்களும் ஆன்மாகிட்டே வரவர குரைப்பதை நிறுத்தியதோடு அல்லாமல் அதிசயத்திலும் அதிசயமாக இருவர் அங்கேயே படுத்துக்கொள்ள அதன் கண்களில் நீர் வழிந்தது. மற்ற இருவரும் அந்த ஆன்மாவை தங்கள் வாலை ஆட்டிக் கொண்டே சுற்றி சுற்றி வந்தன

முதலில் நாய்கள் நான்கும் சேர்ந்து குலைப்பதை கண்டு யாரேனும் எதிரிகளோ இல்லை திருடனோ உள்ளே நுழுந்து விட்டனரோ என்று பயந்த காவலாளிகள் திடிரென்று அதே நாய்களில் இரண்டு வருத்தத்துடன் அமைதியாக ஆளூக்கு எதிர் எதிர் புறமாக படுத்துக்கொள்ளவும் மற்ற இரண்டும் யாரோ தங்களுக்கு பிடித்தவர்களை சுற்றி வருவது போலவாலை குழப்பி சுற்றி வரவும் குழம்பி விட்டனர்

முதலில் அந்த நான்கு ஐந்தறிவு ஜீவன்களின் பாசத்தில் நெகிழ்ந்து இருந்த ஆன்மா காவலாளிகள் குழப்பத்தில் இருப்பதை புரிந்து கொண்ட உடன் ரிஷியை இப்போது வெளியில் எடுத்து வீட்டினுள் கொண்டு செல்வது நல்ல தல்ல அது காரில் தன் கட்டுப் பாட்டில் இருக்கும் மற்ற இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் காவலாளிகள் வேண்டும் என்று எதையும் செய்ய மாட்டார்கள் ஆனால் நாளை ரிஷியே தான் எப்படி வீட்டிற்கு வந்தோம் என்பதை தெரிந்து கொள்ள இவர்களை விசாரித்தால் நிச்சயமாக இங்கு நடந்ததை கூறி விடுவர் அதுகாரில் உள்ள இருவருக்கும் ரிஷியால் ஆபத்தை விளைவிக்காது என்றாலும் ரிஷியின் எதிரிகளால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம் சரிதானே மற்ற அனைவரையும் மயங்க வைத்து விட்டு ரிஷியை உள்ளே அழைத்து செல்லலாம் என்றால் அது இவர்கள் எல்லோரும் வேலை நேரத்தில் உறங்கியதற்காக அவர்கள் வேலை போனாலும். ஆச்சரியம் படுவதற்கு இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top