அவளே என் தோழனின் வசந்தம்-6-ஈ

surthi

Well-Known Member
#1
கொஞ்சம் நேரம் அமைதிய எதையோ யோசிச்ச க்ரிஷ் ரிஷி இடம் எதோ சொல்ல ஆரம்பித்தான்

(அங்கு இப்போது சினிமால வருமே யாரையாவது கவுக்க வில்லன் திட்டம் போடும் போது ஒலிய கட் பண்ணிவிட்டு காட்சிய மட்டும் போடுவாங்களே அத மாதிரி நினச்சுக்கோங்க ப்ரண்ட்ஸ்)

சரி சரி காட்சி ஆவது போடுன்னு நீங்க சொல்லறது புரியுது

காட்சி:

க்ரிஷ் வந்து ஏதோ யோசிச்சுட்டு தயங்கி தயங்கி எதையோ சொல்லறான்

அது கேட்ட மத்த மூனு பேரும் திகைச்சு போய் கொஞ்ச நேரம் நிக்கறாங்க

முதல ரிஷி திகைப்பு லேந்து வெளி வந்து க்ரிஷோட சட்டைய புடிச்சு

உலுக்கி அவன அடிக்கிறான் ராம் கண்ணிலேந்து தண்ணி வருது அவன்

அழுதுகிட்டே க்ரிஷ்கிட்ட வந்து அவனும் க்ரிஷ்ஷோட சட்டையை பிடிச்சு

ஏதோ கேக்கறான் சித் தன் தலைல கை வைச்சு திகைப்புல அப்படியே கீழ

உட்காந்துடரான் க்ரிஷ் அதை பார்த்துட்டு சித் கிட்ட வந்து ஏதோ சொல்லி

அவனும் கதறி அழறான் அவன் அழறத பார்த்து சித்தும் ராமும் அவன்

சமாதான படுத்தறாங்க ரிஷி இறுக்கி நிக்கிறான்,……………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………..........................................................................................................

சிறிது நேரம் கழித்து எல்லோரும் முகத்திலும் துக்கம் பொங்கி வழிந்தாலும் அதை அடக்கி கொண்டனர் பின் சிறிது நேர அமைதிக்கு பிறகு

அவர் சொன்னது என்ன இடம் க்ரிஷ்-சித்

கன்னியாகுமரி- ராம்

என்ன சொல்லற ராம் – சித்

ரிஷியும் ராமை கேள்வியாக பார்த்தான்

அது அண்ணா முக்கடல் சங்கமிக்கும் இடம்அப்படின்னு அந்த சிவன் அடியார் சொல்லியிருக்கிறார் அப்படி என்றால் குடல் முக்கடல் சங்கமிக்கும் இடம் அதுவும் நம் பாரத தேசத்தில் எது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்

அதோடு அவர் கூறிய இரண்டு பாட்டையும் பாருங்கள் அதில் ரிஷி அண்ணா உங்களிடம் கூறியதில் என் அப்பன் ஈசன் என்று கூறியுள்ளார் அப்பொழுது க்ரிஷிடம் கூறிய எம் தாய் என்பதற்கு அர்த்தம் அம்மன் .

தென் முனையான முக்கடல் சங்கமிக்கும் அவ்விடத்திற்கு அப்பெயர் வந்ததே அந்த அம்மன் ஆல்தான் இதை வைத்து தான் நான் கன்னியாகுமரி என்று கூறினேன்

ராம் கூறுவது சரி தான் ரிஷி அண்ணா அனு அங்கு தான் இருக்கிறாள்- க்ரிஷ்

நிஜமாகவா க்ரிஷ் - ரிஷி

ஆமாம் அண்ணா- க்ரிஷ்

அதோடு உங்கள் எல்லோருக்கும் இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கிறது-க்ரிஷ்

என்ன ஆச்சரியம் க்ரிஷ் அனு எங்கிருக்கிறாள் ஏன் அவள் நம்மளை தேடி வரவில்லை இப்போது எப்படி இருக்கிறாள்- சித்

சித் அவசரப்படாதே இப்போது நாம் இருக்கும் நிலையை முதலில் தெரிந்து கொள் முதலில் மேஜைக்கடியில் பார் - ரிஷி

கீழே பார்த்த சித் ரிஷி இது வாய்ஸ் டிரான்ஸ் மிட்டர் தானே இது இங்கு உள்ளது என்றாள் நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் இதைத் தவிர்த்து வேறு ஏதாவது இருக்கிறதா அப்போது இவ்வளவு நேரம் நான் பேசியதை கேட்டிருப்பார்களே இதனால் அனுவிற்கு. ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ-சித்

இல்லை சித் நான் முதலிலேயே இங்கு வந்தவுடன் ஜாமரை ஆன் செய்துவிட்டேன் இதனால் யாராலும் நாம் இவ்வளவு நேரம் பேசியதை கண்டுபிடிக்க இயலாது ஆனால் இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது யாரோ நம் கூட இருந்தே நம் முதுகில் குத்த முயல்கிறார்கள் யாரது அவர்களை கண்டுபிடித்தே ஆகவேண்டும் இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும் இவையெல்லாம் விஷயங்களும் நம். நாலு பேரை தவிர யாருக்கும் தெரியக் கூடாது அது யாரா இருந்தாலும் சரி நான் போய் முதலில் அனுவை அழைத்து வருகிறேன் அவளை அழைத்து வந்தால் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ஆனால் நான் அனுவை அழைத்துவருவது நான் இங்கு அவளை அழைத்து வரும் வரை யாருக்கும் தெரியக் கூடாது அதனால் நான் தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று இருப்பதாக எல்லாரையும் முதலில் நம்ப வைக்க வேண்டும் பிறகுதான் யாருக்கும் தெரியாமல் அனு இருக்கும் இடம் சென்று அவளை எப்படியாவது பாதுகாப்பாக இங்கு அழைத்து வர வேண்டும்.

ரிஷி இன்னொரு முக்கியமான விஷயம் நீ கவனித்தாயா இந்தப் பாட்டில்உன் தந்தையை அழித்த

சதி என்னும் எமன்

உன்னையும் அழிக்க

தொடர்கிறது அதை

தடுக்க தன்னை கவசமாக

மாற்றிக் கொண்டாள் அவள்

இந்த வரிகளை வைத்து பார்க்கும் போது உன் அப்பாவோட மரணமும் எதிர்பாராமல் நடந்த ஆக்சிடென்ட் இல்லை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று தோன்றுகிறது நீ என்ன நினைக்கிறாய்-சித்

ஆமாம் சித் அதோடு சில வரிகள் என்னை மிகவும் குழப்புவதாக இருக்கிறது ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு மனம் இடம் தான் உள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது பார்க்கலாம் ஆங் நீங்கள் நால்வரும் இந்த நான்கு சிம்மை ஆளுக்கு ஒன்றான எடுத்துக் கொள்ளுங்கள் இனி நாம் எந்த முக்கியமான விஷயம் என்றாலும் இதில் தொடர்பு கொண்டால் போதும் அல்லது ஏதாவது ஆபத்து என்றாலோ அல்லது ஏதாவது ஒரு க்ளூ கிடைத்தாலோ இதில் ஒரு பிளாங்க் மெசேஜ் அனுப்பினால் போதும் சரியா

ஆனால் அதற்காக எப்பொழுதும் உள்ள போனில் நாம பேசாம இருக்க கூடாது அதனால் எப்போதும் போல அதிலும் சில தடவைகள் பேசிக்கொள்வோம் ஆனால் முக்கியமான விஷயம் என்றால் எக்காரணம் கொண்டும் பழைய போனிலோ அல்லது மெயிலிலோ நாம் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் அப்படியே மெயிலில் தொடர்பு கொண்டாலும் நீங்கள் தனியாக புது ஒரு மெயில் ஐடியை ஆரம்பித்து அதில் நீங்கள் கூற வேண்டியவற்றை. டீராப்ஃடாக டைப் செய்து வைத்து விடுங்கள் அந்த மெயில் ஐடி ப்ளஸ் அதன் பாஸ்வெர் டை புது எண்ணின் மூலம். நாம் நால்வரும் பகிர்ந்து கொள்ளலாம்- ரிஷி

ரிஷி என்ன செய்தாலும் நாம் சிம்மை இந்த போனில் போட்டு பேசினால் ஐ.எம்.ஈ.ஐ நம்பரை வைத்து இந்த நம்பரை டிரேஸ் செய்து விட மாட்டார்களா - சித்

அது ஒன்று இருக்கிறதோ சரி அப்போது ஒன்று செய்யுங்கள் பழைய மாடல் போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் அதாவது பழைய மாடல் என்றால் பேசிக் போன் ஒன்றை வாங்கிக் கொள்வோம் அதை யாராலும் டிரேஸ் செய்ய முடியாது தானே – ரிஷி

ஆமாம் ரிஷி இது நல்ல யோசனை தான் சரி நம் வேலையை ஆரம்பிக்கலாமா- சித்

ரிஷி ராம் இருவரும் அன்று மாலை பத்திரக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் காதாதிருந்து இருவரும் தொழில் முறைப் பயணம் செல்வதாக எல்லோரையும் நம்ப வைத்து விட்டு அனுவை. தேடி புறப்பட்டனர்

ரிஷியும் ராமும் அனுவை நோக்கி பயணப்பட ரிஷியின் நினைவுகள் பின் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
2016

அனு கடத்த படுவதற்கு ஒரு வாரம் முன்பு

ரிஷி அம்முவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு அனுவை நோக்கி சென்றான்

அவளிடம் சென்று அவளுக்கு எல்லாம் செய்து அவளுக்கு உணவு ஊட்டி விட்டு மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கீழே வந்தான்

அம்மு அவனுக்காக உணவை வைத்துக் கொண்டு காத்திருந்தார்

அதை கண்ட ரிஷி அம்மு உன் கிட்ட எத்தனை தடவ சொல்றது நேரா நேரத்துக்கு சாப்பிடுனு எனக்காக காத்திருக்காத என்று- ரிஷி

டேய் டேய் நான் ஒன்னும் ரொம்ப நேரம் காத்திருக்கல தினம் தினமா காத்திருக்கேன் இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டையே நானும் உன்கூட சாப்படலாம்னு பார்த்தா ரொம்ப தான் விரட்டரையே– அம்மு

இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க வேறு ஒரு இடத்தில் இருவர் ரிஷியை வளைத்து வீழ்த்த சதி திட்டம் போட்டு கொண்டிருந்தனர்

அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது அந்த குரல் ரிஷியை இன்று இராத்திரி எப்படியாவது என் பக்கம் இழுத்துடுவேன் அவன் எப்படியும் அந்த குணால் குடும்பம் கொடுக்க கூடிய விருந்துக்கு வருவான் அங்க அவன் குடிக்கப் போற கூல்டிரிங்க்ஸ்ல இந்த போதை மருந்த கலந்துட்டா போதும்

இந்த போதை மருந்த எடுத்து கிட்டா பன்னிரெண்டு– பதினைந்து மணி நேரத்திற்கு என்ன செய்றோம் ஏது செய்யறோம்னு தெரியாது

அதே அறையில் இன்னொரு குரல் சரி இதுனால நமக்கு என்ன பயன்

முதல் குரல்.. அவன் மட்டும் போதை மருந்து கலந்த ஜூஸை குடிச்சுட்டான்ன அவனுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரத்தில அது வேலை செய்ய ஆரம்பித்து விடும் நான் அங்கேயே ஒரு ரூம் புக் பண்ணியிருக்கேன் அவன நான் அங்க அழச்சுட்டு போய் நான் அவனோட ஒன்னா கலந்துட்டா அவனால என்ன மறுக்க முடியாது அதுக்கு அவன் மனசாட்சி ஒத்துக்காது புரியுதா

அதற்கு இரண்டாவது குரல் .. புரியுது புரியுது

சரி சரி யாருக்கும் சந்தேகம் வராம நாம இந்த காரியத்தை கட்சிதமா முடிக்கனும் இது முதல் குரல்

இவர்களை தவிர மூன்றாவதாக இவ்விருவரின் கண்களுக்கும் புலப்படாமல் இருந்த அந்த ஆன்மா இவர்களின் திட்டத்தை கேட்டு அதிர்ந்தது இது நடந்துவிட்டால் ரிஷியை அனுவை ஏன் அந்த குடும்பத்தையே இவர்கள் சர்வநாசம் செய்து விடுவர்

நடக்க கூடாது இவர்கள் நினைப்பது நடக்க கூடாது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆன்மா அலைபாய்ந்ததுஆன்மாவால் ரிஷியை காப்பாற்ற முடிந்ததா இல்லை ரிஷியை வீழ்த்த நினைப்பவர்கள் ஜெய்த்தார்களா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்

வசந்தம் பூக்கும்……………………………………………………….
 

Advertisement

New Episodes