அவளே என் தோழனின் வசந்தம்-6-ஆ

Advertisement

surthi

Well-Known Member
ரிஷி சார் நான் எனக்கு தெரிந்தவற்றை கூறிவிடுகிறேன் ஆம் அனுவை கடத்தியவன் நான்தான் மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு பிரைவேட் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதை எடுத்து பேசிய போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்புவதாகவும் அவளின் பெயர்.அனு என்றும் அவளை கடத்த வேண்டும் என்றும் அவளை கடத்தினால் உங்களுக்கு அது நல்லதல்ல என்றும். நீங்கள் அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் ஒருவன் கூறினான் நானும் உங்களை பழிவாங்க அப்பெண்ணை கடத்தினேன் கடத்தும் போது அவள் தலையில் அடித்ததில் அவள் மயங்கி விட்டாள் ஆனால் அவள் இரண்டு நாள் கழித்தும் மயக்கம் தெளியவில்லை அவளின் அருகில் சென்று பார்த்தபோது அவள் இறந்து விட்டதாக தெரிந்தது அதனால் அவளை கொண்டு சென்று எங்காவது போட்டு விடும்படி நான் ரவுடி ரமணாவிடம் கூறினேன் அவனும் அவளை எடுத்துச் சென்றான் சில நாள் கழித்து ரமணா என்னிடம் அப்பெண்ணை எங்கொ கொண்டு போட்டுவிட்டதாக கூறினான் அதே போலத்தான் இந்த. தீ விபத்தும் ஆனால் தீ விபத்தை. நான் ஏற்படுத்தவில்லை நான் அந்த பத்திரிக்கையாளர்களை. மட்டும்தான் ஏவிவிட்டேன் அதுவும் அன்று போல இந்த முறையும் தொலைபேசி மூலமாக யாரோ கட்டளை இட்டார் நானும் அவர் கூறியது போலவே செய்தேன் எனக்கு வேறு ஓன்றும் தெரியாது

இதைக் கேட்டவுடன்ராமும் சித்தார்த்தும் தூக்கிப்போட்டு பந்தாடி விட்டனர்

திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் அங்கு பார்த்தனர் இங்கு நான்கைந்து தடியர்கள் ஒருவனே ரத்தம் சொட்டச்சொட்ட அழைத்து வருவதை கண்டனர் ரிஷி எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தான்

இரத்தம் வடிய வந்தவன் ரவுடி ரமணா

அவன் அத்தனை வலியிலும் வேதனையிலும் மெதுவாக ஊர்ந்து வந்து ரிஷியின் கால்களை பற்றிக் கொண்டு சாப் சாப் நீங்கள் சொன்னா. நம்புவீர்களா என்று எனக்கு. தெரியாது இதோ இருக்கானே இந்த ரவிதாஸ். சொன்னான் அப்படின்னு அந்த பொண்ண. நானும் என் ஆளுங்களும் எடுத்துட்டு போகும் போது எங்கள் வண்டி பாதி வழியிலேயே நின்று விட்டது என்ன. பிரச்சினை அப்படின்னு இறங்கி பார்க்க. போனவன். திடிரென அலறும் சத்தம். கேட்டது. சாப் நாங்களும். இறங்கி. பார்த்தோம். அங்க. அங்க அந்த ஆள் செத்து. கிடந்தான் பிறகு நானும் என்னோட ஆளுங்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக யாராவது இருக்காங்களானு தேடினோம். தேடிம். போதே. ஒவ்வொருத்தரும் திடிர் திடிரென அலறுரும் சத்தம் கேட்டு நாங்கள் அங்கு. சென்று. பார்ப்பதற்குள் எல்லோரும் இறந்திருந்தனர் இத்தனைக்கும். நாங்கள் மொத்தம் பதினைந்து. இருபது. பேர்அதில் மிஞ்சியது நானும் இன்னும். இரண்டு. பேரும். தான் அவர்களும் அன்று. நேரில் பார்த்த. ஒரு காட்சியை. கண்டு பயந்து ஓடி விட்டனர் அதன் அவர்கள். என்னோடு. எந்த. தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை சாப்- ரமணா

நீ சொல்வது உண்மை என்று. நாங்கள். எப்படி. நம்புவது உன் கூட்டாளிகள் பயந்து ஓடும் அளவிற்கு அங்கு அப்படி என்ன நடந்தது- சித்

சாப் அது வந்து அது வந்து- ரமணா

இப்படி இழுத்துகிட்டு. இருந்தேனா உன்னை நான் நாலு. இழுஇழுத்து விடுவேன்–ராம்(பின் அனு என்றால் அவனுக்கு அவ்வளவு பிரியமாயிற்றே)

அது அங்க எங்க ஆளுங்க எல்லாம் செத்து செத்து விழுந்தாங்கனு. சொன்னேன்ல சாப் அவங்க தானா சாகலை சாப் அவங்க எல்லோரையும். கொன்றது ஒரு பொண்ணு சாப் .-ரமணா

என்ன-ராம்

ஆமாம் சாப் அதுவும் நாங்கள் தூக்கிட்டு போன பொண்ணுதான் சாப் என்னோட ஆளுங்க எல்லோரையும் கொன்னு போட்டுது- ரமணா

என்னடா விளையாடரையா அவ மேல கொலை பழியபோட்டுட்டு நீ தப்பிக்கலாம்னு பார்க்கரையா– சித்

இல்லை சாப் இல்லை சாப் நான் பார்த்தேன் சாப் அந்த பொண்ணு தான் சந்தேகம் வந்து நாங்கள் தூக்கி சென்ற பெண்ணை பார்த்து போது அந்த பொண்ணு கார்ல நாங்க படுக்க வைத்திருத்தது போல அப்படியே படுத்திருந்தா அதோட எங்கள அடிச்ச அந்த பொண்ணுக்கு கண் இருக்க வேண்டிய இடம் கருப்பா இருந்துச்சு சாப்

இதைல கேட்ட ரிஷி அவனை என்ன எங்க காதுல. பூ சுத்துரையா என்று திரும்பவும் அவனை துவைத்து எடுத்து விட்டான்

ரிஷியை ராமும். சித்தார்த்தும் தான் தடுத்தனர்

எதுக்காக என்னை தடுத்தீர்கள் என்று ரிஷி ராம் இடமும் சித்தார்த் இடமும் சீறினான்

ரிஷி எனக்கு அவன் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது – சித்

ஆமாம் அண்ணா எனக்கும் தான்–ராம்

ரிஷிக்கு சிலது ஞாயபகத்திற்கு வந்தது அவனும் ரமணா கூறியது உண்மை என நம்ப ஆரம்பித்தான்

சிறிது நேர அமைதிக்கு பிறகு அனு எங்க இருக்கா அப்படின்னு நாம இப்போ எப்படி தெரிந்து கொள்வோம் டிடெக்டிவ் ஏஜென்சியை அனுகலாம-ராம்

அதற்குத் தேவை இல்லை அனு எங்கிருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது- க்ரிஷ்வந்த்

(இவன் எப்போ உள்ள வந்தான் அப்படின்னு பாக்கிறேங்களா அந்த ரமணாவ இழுத்துட்டு வரகைய்டு பண்ணிணதே இவன்தான்பா)

அனு இருக்கும் இடம் தெரியுமா எப்போது தெரியும் எப்படி தெரியும் இப்போது எங்கிருக்கிறாள் என்று மாறி மாறி ராமும் சித்தார்த்தும் க்ரிஷ்வந்தை துளைத்து எடுத்துவிட்டனர் பின் சித் சாராவிற்கு சொல்வதற்காக தன் போனை எடுத்தான்

ரிஷி அதை தடுத்து இப்போது இந்த அறையில் இருப்பவரை தவிர இவ்விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நீங்கள் இருவரும் ரவிதாஸ் கூறியதை கேட்டீர்கள் தானே யாரோ ஒருவர் ரவிதாஸை தொடர்பு கொண்டு அனுவை கடத்த சொல்லி. இருக்கிறார்கள் இந்த தீ விபத்து அதையும் யாரோ மறைவில் இருந்து தான் செய்திருக்கிறார்கள் என்னை அழிக்க யாரோ எதற்கோ நினைக்கிறார்கள் என்னை மட்டுமில்லை சித். உன்னையும் தான் உனக்கு ஞாயபகம் உள்ளதா நாம் ஒருதரம் லிஃடில் செல்லும் போது கரண்ட் கட்டாகி நாம் அதில் மாட்டிக் கொண்டோமே அதில் விஷ வாயுவும் போடப்பட்டதே நம்மை அதிலிருந்து காப்பாற்றியது அனு தான் அதன்பின் ஒருமுறை கார் பிரேக் பிடிக்காமல் அனு தன் தோழியின் ஸ்கூட்டியை நம் காருக்கு குறுக்காக மோத விட்டு நிறுத்தி நம்மை காப்பாற்றிளே அனு அந்த இடத்திற்கு அதுவும் சரியான நேரத்திற்கு எப்படி வந்தாள் அதுவும் அவள் இடம் அப்படி ஒரு பதட்டம் தெரிந்தே

அதன் பின் இதே போல் உன்னை நோக்கி மாலில் ஷூட் ஆவ்ட். நடந்த போது ஹரிஷ் உன்னை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினானே - ரிஷி

ஆங் ரிஷி எனக்கும் எல்லாம் ஞாயபகம் வருகிறது அந்த ஷூட் ஆவ்ட் நடந்த அன்று நீயும் முதலில் லிஃப்டில் மாட்டிக் கொண்டது போல திரும்பவும் மாட்டிக் கொண்டது அப்போது உன்னை காப்பாற்றியது. அனுவின் தோழி தானே-சித்

இதில் ஒரு தடவைதான் அம்முவிடம் நான் போகும் இடம் பற்றி கூறினேன் நீ சாராவிடம் எப்பவுமே எதுவும். கூறியது இல்லை எதுவாக இருந்தாலும் முடிந்த பின் தான் அதை பற்றி அவளிடம் கூறுவாய் அவளும் உன் மேல் முழு நம்பிக்கையும் அன்பும் இருந்ததால் நீயாக கூறினால் தவிர எதுவும் கேட்ததில்ல சரி தானே-ரிஷி

சரி தான் ரிஷி

பிறகு எப்படி நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை தாக்க முயன்றார்கள்-ரிஷி

இதை நான் இத்தனை நாளாக கவனிக்கவும் இல்லை யோசிக்கவும் இல்லை சாரி ரிஷி ஒரு போலீஸாக இருந்து கொண்டு நான் எப்படி இப்படிஇருந்தேன்-சித்

அண்ணா நீங்கள் மட்டுமா அப்படி இருந்தீர்கள் எல்லோரும் தான் எல்லாம் இந்த பாழாய் போன காதலால் வந்தது- ராம்

டேய்……..- சித்

சித் அவன் கூறுவது சரிதான் நீ மட்டுமல்ல நானும் தான் இதை எல்லாம் அலட்சியப் படுத்தினேன் ஆனால்..- ரிஷி

ஆனால் என்ன ரிஷி எப்போது உனக்கு இதேல்லாம் புரிந்தது எப்படி புரிந்தது – சித்

சிறிது நேர அமைதிக்கு. பிறகு நான் மூன்று மாதம் முன்பு பிரிட்டனில் இருந்து வந்த தொழில் ஒப்பந்த காரர்கள் இந்தியாவை. சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் எனக்கும் அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்ஸேசன் வேண்டும் போல் இருந்ததால் நானும் சென்றேன் என்னோடு இந்த குரங்கும் ஓட்டிக் கொண்டான் உனக்கு நினைவு இருக்கிறதா– ரிஷி

அ..ண்.ணா……….?- ராம்

விடுடா விடுடா இதல்லாம் நமக்கு சாதாரணம் – க்ரிஷ்வந்து

ராம் அவனை முறைத்தான்

அவனை விடு டா நீ சொல்லு ரிஷி என்ன நடந்தது அங்கு- சித்

அதை நான் காண்பிக்கிறேன் சித்தார்த் அண்ணா-ராம்

எதை காண்பிப்பாய்– க்ரிஷ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top