அவல் பொங்கல்

Bhuvana

Well-Known Member
#1
அவல் பொங்கல்:

அவல் - 1கப்
வெல்லம் - 1கப்
துருவிய தேங்காய் - 1/4கப்
ஏலக்காய் - 2 பொடித்தது
முந்திரி பருப்பு - சிறிதளவு
நெய் - 1ஸ்பூன்

அவலை நல்லா தண்ணீல கழுவிட்டு, அவல் நிரம்பும் அளவு தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் வெல்லம் பாகு காய்ச்சி, ஊறிய அவலை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய், வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நெய் விட்டு இறக்கி விடவும்...

விருப்பப்பட்டால் சுவைக்காக 1/2 கப் காய்ச்சிய பாலை இதனுடன் சேர்க்கலாம்...

(இனிப்பு அதிகம் வேண்டுபவர்கள் வெல்லம் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) 20181219_063052.jpg
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement