அழகிய அசுரா 2:

sundarnithu

Writers Team
Tamil Novel Writer
Hi frnds..thanks for ur support....next epi innum better ah thara...correction iruntha sollunga frnds...

அழகிய அசுரா 2:


'ஹேய் ஜிங்கிலி எனக்கு இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கி குடு டி ...' என்று கேட்டாள் மித்ரா .
'போடீ இதோட 5 ஐஸ்கிரீம் முழுங்கிட்ட போதும் ..அப்பா வர டைம் ஆயுர்ச்சு டி போலாம் வா ...'என்றாள் ரம்யா.
'ஏன் டி எம்டன் ஆஹ் பாத்து இவ்ளோ பயப்படற ...இந்த மித்து இருக்க பயமேன்... '
'பயமே உன்னால தா டி..அவரு உன்ன எதும் சொல்லமாட்டாரு டி..எனக்கு தா டின்னு கட்டுவாரு ...அவ சின்ன பொண்ணு நீ தா பொறுப்பு பருப்பா இருக்கணும்னு கிளாஸ் எடுப்பாரு டி...ஆனால் ஒன்னு பொம்மு அக்காவா மட்டும் இருக்கவே கூடாது டி..'
'ஏன் ஜிங்கிலி இப்படி பொலம்பிட்டு இருக்க '
'உனக்கென்ன டி ஜாலி ஆஹ் இருக்க ...சின்ன வயசுல இருந்து நீ பண்ணற ஒவ்வொரு தப்புக்கும் என்னை கோத்து விடற ..என்னமோ நீ என்னால இப்படி பண்றதுமாறியே அட்வைஸ் பண்ணுவாங்க டி..நான் தான் உனக்கு rolemodel ஆஹ் இருக்கணுமாம் ..அப்பாக்கு மேல அம்மா ..உன் தங்கச்சிக்கு நீ தான் நல்லது சொல்லித்தரணும் ..அவ தப்பு பண்ண கரெக்ட் பண்ணனும்னு ....நீ அப்படியே நான் சொல்றத கேட்ருவப்பாரு ..போடி ...சரி வா வீட்டுக்குப் போலாம் ..'என்று கிளம்பினார்கள் ..
வீட்டில் ரத்தினவேல் காபி குடித்துக் கொண்டே 'வேணி ..ரம்யாக்கு கோவை ல இருந்து ஒரு வரன் வந்துருக்கு..என் மனசுக்கு நல்ல இடமா படுது ..பையன் சுயமா தொழில் பண்ணிட்டு இருக்காரு ..பையன் வீட்டுல நல்ல வசதி தான் ..எதுலயும் நமக்கு கொறச்சல் இல்ல .'.
'சரிங்க ..நீங்க சொன்னா சரியாய்த் தான் இருக்குங்க ..'என்றார் வேணி ..
'எங்க பொண்ணுங்கள காணோம் ?...'
'ஷாப்பிங் போனாங்க ரெண்டு பேரும் இப்போ வந்துருவாங்க ' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இருவரும் வந்தனர் ..
'என்னம்மா ..இவ்ளோ நேரம் ஷாப்பிங் ?'என்று கேட்டார் வேணி ..
'கடையில் ரொம்ப கூட்டம் மா '..என்றாள் ரம்யா.
'ரம்யா இங்க வா ...'என்றார் ரத்னவேல் ..
'அச்சோ ..அட்வைஸ் மழை பொழிய போகுது...'என்று நினைத்துக் கொண்டே சென்றாள் ..
'உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் ..உனக்கு சம்மதமா ?' என்றார் ..
வேணாம் னு சொன்னா விடவா போறீங்க எம்டன் என்று மித்து நினைக்கிறாள் ..
'உங்க இஷ்டம் பா 'என்று ரம்யா கூறி விட்டாள் ..
'என்ன ஜிங்கிலி ..இந்த எம்டன் இப்படி சொல்லறாரு ...அவரு சொல்றத பாத்தா ஆல்ரெடி மாப்பிள்ளை பாத்துட்டு தான் உன்ன கேக்கறாரு போல '
'எனக்கும் தா அப்படி தோணுது பொம்மு ..பாக்கலாம் '
'உனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லையா ஜிங்கிலி ..எம்டன் கேட்டதும் சரி னு சொல்லிட்ட..நான் எல்லாம் இந்த மாறி போரிங் கல்யாணம் பண்ணமாட்டாப்பா ..'
அடுத்த நாள் காலை ரம்யாவை அழைத்து வேணி 'இது தான் மாப்பிள போட்டோ ...பாரு மா ' என்றார் .
மித்து ஓடி வந்து 'அம்மா மாப்பிளை பேரு என்ன மா ?' என்று கேட்டாள் .
'சிவா..கோவையில் தொழில் பண்றாங்க..'என்றார் .
'ஜிங்கிலி குடு நான் பாக்கற ' என்று பார்த்தாள் ..
'என்ன பொம்மு ஓகே ஆஹ் ?' என்றாள் ..
'சும்மா சிவகார்த்திக்கேயன் மாறி இருக்காரு டி..பாரு உன் வருங்காலத்தை 'என்று கொடுத்தாள் .
'என்னம்மா உனக்குப் பிடிச்சிருக்கா 'என்றார் வேணி ..
ரம்யா வெட்க்கப்பட்டுக் கொண்டு ஓடிவிட்டாள் ...
'அக்காவுக்கு வெட்கம் ....அம்மா இனி சீக்கரம் டும் டும் டும் தான்..'என்றாள் மித்து ..
'ம்ம் அப்படியே உனக்கும் சீக்கரம் பண்ணிட்டா சந்தோசம் டி.' என்றார் வேணி.
'எனக்கு வரப் போறவன் எங்க இருக்கானோ..இப்ப என்ன பண்ணிட்டு இருக்கானோ?'...
'உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டயே உன் வேலைய காட்டுவ ...இன்னொரு தடவை உன்ன இங்க பாத்த கொன்னு பொதச்சுடுவ ராஸ்கல் ' என்று ஒருவனை அடி வெளுத்த்து கொண்டு இருந்தான் நம்ம சக்தி..
'ஏன் டா சக்தி உனக்கு இவ்வளவு கோவம் 'என்று கேட்டான் சிவா ..
(இந்த சிவா வேற யாரும் இல்லங்க நம்ம சக்தியோட உயிர்த் தோழன் ..பெரியப்பா பையன்...ரம்யாக்கு பாத்துருக்க மாப்பிள்ளை ..)
'இவன் எவ்வளவு பொய்யா இருந்துருக்கான் டா ..ஆபீஸ்ல எவ்ளோ நம்பின ட இவன் ஆஹ் ...நல்லவன் மாறியே நடிச்சுருக்கான் டா'
'சரி விடு டா ..அதான் வெளிய அனுப்பிட்டோமே '
அவனை நார்மல் ஆக்க 'சக்தி அடுத்த வாரம் பொண்ணு பாக்கபோறோம்னு அம்மா கால் பண்ணாங்க டா ..நீயும் என் கூட வரணும் டா ' என்றான் ...
'நான் எதுக்கு டா?' என்று சக்தி மறுத்தான் ..
'மச்சி உன் உயிர்த் தோழனுக்காக வா டா '...என்றான் ..
'சரி வர டா ..எனக்கும் பொள்ளாச்சி ல கொஞ்சம் ஒர்க் இருக்கு ' என்று சம்மதித்தான் ..
'அப்புறம் மச்சி நீயும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட போல ..'என்று சிவா கேட்டான் .
'ஆமா டா ...அம்மா,அப்பாவுக்காக சொன்ன ...எனக்கு ஒன்னும் பெருசா ஈடுபாடு இல்ல டா 'என்றான் சக்தி .
'என்ன டா இப்படி சொல்ற ...எனக்குத் தெரியாம லவ் ஏதாச்சு இருந்துச்சா டா ..அந்த பொண்ணு ஏமாத்திட்டு போய்ட்டாளா ..அதான் உனக்கு ஈடுபாடு இல்லையா டா ..'என்றான் சிவா ..
'கடுப்பேத்தாம ஓடிரு டா ...லவ் எல்லாம் நமக்கு அல்ர்ஜி ..அது எப்படி தானோ லவ் பண்ரான்களோ ...அது சுத்தப் பைத்தியக்காரத்தனம் டா..லவ் பண்ணா நிம்மதியே போயிரும் டா ..'என்றான் சக்தி.
'ஆமா டா ...நீ எல்லாம் ரோபோட் டா ..நீ ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டாலும் இந்த உலகம் அழிஞ்சுரும் டா '...என்றான் சிவா..
'சரி வா டா சாப்பிட போலாம் ' என்று சென்றனர் ..
'டைம் ஆச்சு எல்லாம் ரெடி ஆஹ் வேணி ..மாப்பிளை வீட்டில் இருந்து வந்துருவாங்க 'என்றார் ரத்தினவேல் ..
'எல்லாம் ரெடி ங்க ...சாப்பாடு மட்டும் கொஞ்ச நேரத்துல ரெடி ஆயரும்ங்க..'என்றார் வேணி ..
'மித்ரா ..அக்காக்கு ரெடி ஆஹ் னு பாரு '...
அப்போது கார் ஒன்று வீட்டின் முன்பு வந்து நின்றது ...அதில் இருந்து சிவா,சக்தி,சிவாவின் பெற்றோர் இறங்கினர் ..
'வாங்க ..வாங்க ...உட்காருங்க ' என்றார் ரத்தினவேல் ..
அனைவரும் அமர்ந்த பின்னர் தொழில் ரீதியாக சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்..வேணி அனைவருக்கும் காபி கொடுத்தார் ...
'மித்ரா ...அக்காவ கூட்டிட்டு வா மா ' என்றார் வேணி ..
தேவதை போல் அலங்காரங்களுடன் வந்து அனைவருக்கும் வணக்கம் கூறினாள் ரம்யா ..
'இது என் சின்னப்பொண்ணு மித்ரா..காலேஜ் படிச்சுட்டு இருக்கா ' என்றார் வேணி..
செம அழகு னு கண் எடுக்காம சிவா நம்ம ரம்யாவை பாத்துட்டு இருக்கான் ..
'டேய் ..கொஞ்சம் அடங்கு டா ...உன் மாமனார் பாக்கறாரு 'என்று சக்தி கூறினான் ..
'இந்த தம்பி யாருங்க?'என்று கேட்டார் ரத்தினவேல் ..
'என் தம்பி பையன் சக்தி..சிவாவும் சக்தியும் நண்பர்கள்..ரெண்டு பேரும் தான் பிசினஸ் பார்ட்னர்ஸ் ...'என்றார் சிவாவின் தந்தை ராஜன்.
'சரிங்க ...'என்றார் ..
'பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்குங்க ..'என்றார் ராஜன் ..
'எங்களுக்கும் சம்மதம் ங்க ..சீக்கிரமா நிச்சயம் வச்சுக்கலாம் '...என்றார் ..
'அப்பா நான் கொஞ்சம் பொண்ணு கிட்ட தனியா பேசணும் 'என்றான் சிவா..
'சரி பேசுங்க வெளிய தோட்டத்தில ..மித்ரா அக்கா கூட போ மா .. '
அங்கு ரம்யாவும் சிவாவும் தனியே பேசி கொண்டு இருக்க ...சக்தியும் மித்ராவும் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தனர் ..
நம்ம ஹீரோவும் மித்துவும் பேசிப்பாங்களா ....?????????விரைவில் பாக்கலாம் ....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement