அழகன் அழகி ஒரு அறிமுகம் மற்றும் முன்னுரை!

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

வாராதிருப்பானோ கதைக்கு உங்கள் பேராதரவைக் கண்டு மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். மனமார்ந்த நன்றிகள். இந்த நிமிடம் வரை கருத்துகள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் பதில் அளித்து விட்டேன். யாருக்கேனும் பதில் சொல்லாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அடுத்ததாக அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் கதையை ரீரன் செய்யலாம் என்று இருக்கிறேன்.


அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்!

இது ஒரு கிராமத்துப் பின்புலம் கொண்ட கதை...

நாயகன் குமரவேலழகன்

என்னை பொருத்தவரை இவன் ஆன்டி ஹீரோ... ஆனால் சமீபத்தில் ஆன்டி ஹீரோ என்றால் கடைசி வரை கெட்டவனாகவே இருக்க வேண்டும் என்பதாக ஒரு விமர்சகரின் பதிவை பார்க்க நேர்ந்தது... அதனால் இவன் ஆன்டி ஹீரோவா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

நாயகி சுந்தரவடிவழகி

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தியா என யோசிக்க வைக்கக் கூடிய பெண்.

இந்த காலம் என நான் குறிப்பிடுவது இன்றைய நகர நாகரீகம்!

Live in relations, ons, partner swapping என்றெல்லாம் நாகரீகம் வெகு வேகமாக முன்னேறி(?????) கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் ஒழுக்கத்தை உயிராய் நினைக்கும் இப்படி ஒரு நாயகி கொஞ்சம் அரிதுதான்.

கதையைப் பற்றி சில வரிகள்:

குமரவேலழகன் ‘எனக்கென்று ஒரு உலகம் எந்நாடு என் மக்கள்’ என்று பேசிய, அந்தக் குன்றின் மேல் குடிகொண்ட குமரனை போல் தனக்கென ஒரு கொள்கை, ஒரு பாதை எனத் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வருபவன்.

அவன் வழியில் குறுக்கிடுகிறாள் அழகி... சுந்தரவடிவழகி

அழகன் அழகியை கண்ணுற்றது மட்டுமல்லாமல் காமுறவும் செய்கிறான். எல்லா பெண்களையும் போல் சுந்தரியையும் நினைத்து நெருங்குகிறான் குமரன்.
அவன் தன் முயற்சியில் வெற்றி பெற்றானா? தோல்வியடைந்தானா...

அதற்கு அழகியின் எதிர்வினை என்ன?

அவனுக்கு இசைந்து மானத்தை இழந்தாளா? அல்லது மறுத்து அவன் மனதை மாற்றினாளா?

தெரிந்து கொள்ளலாம் கதையில்!

கதை உங்களை கவரும் என்று நம்புகிறேன்.


பொறுப்புத் துறப்பு

இது ஒரு ஆன்டிஹீரோ கதை என்பதை முன்னெச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

அது மட்டுமல்லாமல் கதையின் தேவை கருதி மிகச் சில இடங்களில் கொஞ்சம் வன்முறையான காட்சிகளையும் கட்டமைத்திருக்கிறேன். எனவே மிக மிக மெல்லிதயம் கொண்டவர்கள் கதையைப் படிக்காமல் தவிர்த்து விடுவது நலம்...

நான் ஏதோ விளம்பரத்துக்காகக் கூறுகிறேன் என நினைக்காதீர்கள்... நிஜமாகவே சில காட்சிகள் அப்படித்தான் இருக்கும்...முதல் அத்தியாயம் படித்ததுமே நான் ஏன் சொன்னேன் என்று உங்களுக்கே புரிந்து விடும்.

நாளை படித்து விட்டு நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறி விடக் கூடாதே என்றுதான் இத்தனை எச்சரிக்கை செய்கிறேன்...அல்லது கதை முடிந்த பின் ஒரே மூச்சாகப் படித்தால் அந்தக் காட்சிகளைக் கொஞ்சம் எளிதாகக் கடந்து விடலாம். பின் உங்கள் விருப்பம்...சேதாரங்களுக்குக் கம்பேனி பொறுப்பேற்காது என்று கூறி கொள்கிறேன்...


கதைக்களம் திருநெல்வேலி சுற்றுவட்டார கிராமம் என்பதால் நெல்லைத் தமிழைக் கையாண்டிருக்கிறேன். தெரிந்த நெல்லை நண்பர்களிடம் கேட்டும் இன்னும் சில நெல்லை எழுத்தாளர்களின் நூல்களையும் குறிப்புதவிக்காகக் கொண்டும் எழுதியிருந்தாலும் தவறுகள் இருக்கலாம்...பொறுத்தருள வேண்டுகிறேன்.
கதையில் இருந்து சிறிய முன்னோட்டம் இப்போது பதிவு செய்கிறேன். வியாழன் முதல் நம் வழக்கமாகிய திங்கள் வியாழக் கிழமைகள் கதைப்பதிவுகள் தொடர்ந்து வரும். சென்ற கதையின் முடிவுரையில் சொன்னது போல் இடை இடையே போனஸ் யூடிக்கள் கொடுக்க முயல்கிறேன்.
340961105_542233424773112_6312702932588251747_n.jpg

ஒரு சிறிய முன்னோட்டம்...


“என்ன டீச்சரம்மா வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேயளா?”

அதிர்ந்து நின்றிருந்தவள் சட்டென சுதாரித்தாள்.

“வ...வா...வாங்க” எனத் தடுமாற புன்னகை புரிந்தவன்,

“அம்புட்டு பயமா எங்கிட்ட? பட்டணத்துப் பிள்ளையள்லாம் தைரியமா இருக்கும்னு கேட்டிருக்கேனே!

“பயமெல்லாம் இல்ல” நிமிர்வுடன் அவள் கூற அவள் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

சில நிமிடங்கள் அவள் வந்து அமர்வாள் என அவன் பார்த்திருக்க அவளோ அலமாரியின் அருகிலேயே அசையாது நின்றிருந்தாள்.

“வாங்க! வந்து இங்கன உட்காருங்க” எனத் தன் முன்னிருந்த சிறுவர்களின் இருக்கையைக் காட்ட மனமில்லாவிட்டாலும் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடவா போகிறான் என யோசித்தவள் சென்று இருக்கையில் பட்டும் படாமல் அமர்ந்தாள்.

சாந்தி தனக்காகக் காத்திருப்பாளோ அல்லது தன்னைத் தேடி இங்கே வருவாளோ எனத் தோன்ற வாயிற்புறம் அடிக்கடி சென்று மீண்டன அவள் விழிகள்.

“என்ன உங்க சேக்காளியத் தேடுதியளோ?”

அவளுக்கு அவன் பாஷை புரியவில்லை.

குழப்பம் நிறைந்த முகத்துடன் அவள் பார்க்க “ஸாந்தி டீச்சரைத் தேடுதியளான்னு கேட்டேன்”

அவள் ஆம் எனத் தலையாட்ட “அவகிட்ட ராசு இந்நேரம் போய் நீங்க வர தாமதமாகும்னு சொல்லிருப்பாம்”

திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் மனம் யோசனைக்குப் போக “அப்பிடின்னா அன்னிக்கு ப்ரின்ஸி கூப்பிட்டதா ராசு கூப்பிட்டது...”

அவன் கள்ளப் புன்னகை புரிந்தான்.

இப்படி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறானே எனத் தோன்றவும் “இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்?”

எதுவும் பதில் பேசாமல் அவள் தலைவகிடு முதல் கால்விரல் வரை நிதானமாக அவன் விழிகளால் வருட அவள் கூசிப் போனாள்.

“வேணாம் குமரன்...நீங்க செய்றது சரியில்ல...எனக்கு விருப்பமில்லைன்னு நான் சொல்லிட்டேன்.அதுக்கு மேல நீங்க என்னைத் தொல்லை பண்றீங்க. இதெல்லாம் ரொம்பத் தப்பு...நான் வந்தது முதல் எனக்கு இத்தனை உதவி பண்ணி இருக்கீங்களேன்னுதான் நானும் பொறுமையாப் போறேன்... இல்லைன்னா...”

“இல்லைன்னா? இல்லைன்னா என்ன பண்ணுவிய டீச்சரம்மா...முட்டிக்கால் போடச் சொல்லிருவியளோ இல்ல பெஞ்சு மேலே நிப்பாட்டிருவியளா?” என்றவன் பொங்கிப் பொங்கிச் சிரித்தான்.

தொடர்ச்சி கதையில்...


வியாழனன்று சந்திக்கலாம் நண்பர்களே!
 
Last edited:
வாங்க வாங்க தூரிமேடம்.:love::love::love::love::love::love:
வாழ்த்துக்கள் .
டீ சூப்பர். சூடு பறக்குது. ஓ தொரை வேண்டாம் ன்னு மறுப்பு தெரிவிச்சாலும் வுடாம தொந்தரவு பண்ணுவானா:mad::mad::mad::mad::mad::mad::mad:.
சரி சரி எபி வரும் போது வாசிச்சிட்டு தட்டி புழிஞ்சிடறேன் டா டுபுக்கு.:cool::cool::cool::cool::LOL::LOL::LOL::LOL::LOL:
 

Thoorika Saravanan

Well-Known Member
வாங்க வாங்க தூரிமேடம்.:love::love::love::love::love::love:
வாழ்த்துக்கள் .
டீ சூப்பர். சூடு பறக்குது. ஓ தொரை வேண்டாம் ன்னு மறுப்பு தெரிவிச்சாலும் வுடாம தொந்தரவு பண்ணுவானா:mad::mad::mad::mad::mad::mad::mad:.
சரி சரி எபி வரும் போது வாசிச்சிட்டு தட்டி புழிஞ்சிடறேன் டா டுபுக்கு.:cool::cool::cool::cool::LOL::LOL::LOL::LOL::LOL:
நீங்க பொங்க வைக்கிறதுக்குன்னே அளவெடுத்து செஞ்சவன் டா இவன்...எஞ்சாய் எஞ்சாமி:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top