Rudraprarthana
Well-Known Member
தோழமைகளுக்கு வணக்கம் ...
நான் ருத்ரபிரார்த்தனா.. கடந்த ஆறு மாத காலமாக தளத்தில் எழுதி கொண்டிருக்கிறேன் எத்தனை பேருக்கு என்னை தெரியும் என்று தெரியவில்லை அதனாலேயே இந்த அறிமுகம் 'நெஞ்சமெல்லாம் அலரே' இரண்டாம் பாகத்தோடு தான் இங்கு கதை பதிவிட ஆரம்பித்தேன் அப்போதே பலர் முதல் பாகம் கேட்டு இருந்தீர்கள் ஆனால் அப்போது அது புத்தகமாக வெளிவந்திருந்த காரணத்தால் பதிவிட முடியவில்லை. வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்போது புத்தாண்டு முதல் என் முதல் கதையின் அனைத்து பாகங்களையும் பதிவிட இருக்கிறேன்.
'உயிரில் உறைந்த உறவே' மூன்றாம் பாகம் இப்போது ஆன்கோயிங்யில் இருக்கிறது அதை பலர் படித்து கொண்டிருந்தாலும் சிலர் மட்டுமே உங்கள் கருத்துக்களை பதிவிடுகிறீர்கள்... இந்த கதை எதிர்மறை நாயகியை முதன்மையாக கொண்டிருப்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லையா..? (kind of revenge story) அல்லது என்னை உங்களுக்கு தெரியவில்லையா..?? என்ற சந்தேகம் வலுப்பதாலேயே இந்த அறிமுகம்.
கதையை படிக்கும் தோழமைகள் என் எழுத்து நடை, கதை நகரும் விதம், பாத்திர படைப்பு பிடித்திருந்தால் கருத்து பதிவிட நேரமில்லை என்றாலும் படித்து விட்டு அமைதியாக செல்லாமல் உங்கள் பிடித்தத்தை லைக்ஸ் மூலமாக கூட தெரிவியுங்கள். "நெஞ்சமெல்லாம் அலரே!!" மென்மையான காதல் கதை (feel good family based love story) திங்கள் முதல் தினமும் அப்டேட் உண்டு. இந்த ஜானர் பிடித்தவர்கள் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் என்ற அன்பு வேண்டுகோளுடன்... வாய்ப்பு அளித்து ஊக்கம் அளிக்கும் மல்லிகா மேம்க்கு @mallika நன்றிகள் & இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ருத்ரபிரார்த்தனா.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Last edited: