அமுதன் குமுதா! அறிமுகம் மற்றும் டீசர்!

Advertisement


Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்க்ள் அனைவருக்கும் வணக்கம்!

பாலா குழலி கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு மறுபடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேடி தேடி ரிப்ளை போட்டுட்டேன். யாருக்கும் தனியா சொல்லாம இருந்தால் இங்கே பொதுவில் நன்றி கூறிக் கொள்கிறேன். அதே ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுப்பீங்கன்னு நம்புறேன்.

அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!

474152570_822369926683084_2049048831820172727_n.jpg

இது ஒரு கிராமத்துக் கதை. பெயரில் அமுதைக் கொண்ட நாயகன் வாழ்வில் சில கசப்பான நிகழ்வுகள்...அவற்றை மறக்க அவன் முயற்சித்துக் கொண்டிருக்கையில் குறுக்கிடுகிறாள் குமுதா...பள்ளி செல்லும் பாவை...குமுதத்தால் அமுதனின் வாழ்வில் அமுதம் மீண்டதா...அமுதனால் குமுதத்தின் வாழ்வு மலர்ந்ததா...

கதையைத் தொடர்ந்து படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாலா குழலி கதையில் ட்விஸ்ட் எதுவும் இல்லைன்னு சொல்லி ஆரம்பிச்சேன். ஆனா இந்தக் கதையில் பெரும்பாலும் எல்லா அத்தியாயங்களும் ஒரு கேள்வியோடுதான் முடியும். ( என்னுடைய பெரும்பாலான கதைகள் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பாலா கதை மட்டும்தான் விதிவிலக்கு) எதுக்காக இதை இங்க சொல்றேன்னா எந்த ராஜா எந்தப் பட்டிணம் போனாலும் வாரம் ரெண்டு யூடி கண்டிப்பா வந்துடும். ஆனா அதுக்கு மேல கேட்டா நேரம் பொறுத்துக் குடுப்பேன்... கொஞ்சம் பொறுமை குறைவுன்னு நினைக்கிறவங்க கதை முடிய இல்லைன்னா முடியப் போற நேரம் படிக்க ஆரம்பிங்க. அப்புறம் என்னக் குத்தம் சொல்லக் கூடாது மக்களே!

நெல்லை வட்டார வழக்குக் கதை.

அதுனால வட்டார வழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான பொருளை ஒரு பட்டியலாகக் கீழே கொடுத்து இருக்கிறேன். இதில் விடுபட்டவைகளை கதையிலேயே அடைப்புக் குறிக்குள் கொடுத்து விடுகிறேன். வேறு ஏதேனும் புரியவில்லை என்றாலும் கமென்ட்ல கேளுங்க.

ஆன்லைனில் வந்த போது நாயகனாக சூர்யாவையும் நாயகியாக ஸ்ரீதிவ்யாவையும் வைத்து படங்கள் ரெடி பண்ணி இருந்தேன். ஆனா இப்ப யூட்யூப்காக AI படங்கள் உருவாக்கிட்டேன். சோ அதையே போடுறேன். யூட்யூபில் எபிசோட் எபிசோடா போட்டு இருக்கேன். மொத்தமா கம்பைல் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன். முடிஞ்சதும் இங்க லிங்க் தரேன். கதை கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் கேட்கலாம்.

வட்டார வழக்குச் சொற்களும் அதன் பொருளும்

வெடியுறப்ப- விடியும் பொழுது

ஆருக்கும் – யாருக்கும்

ஒபத்திரவம் – தொந்தரவு

மேலுக்கு – உடம்புக்கு

வெடியமின்ன – விடியும் முன்னர்

வம்பாடு – ப்ரச்சனை

கெளவி – கிழவி

கொமரி – குமரி

கா மணி – கால் மணி

ஆட்டும் – ஆகட்டும்

கருத்தா – கவனமாக

செத்தத் தொலவு – கொஞ்ச தூரம்

சோலி – வேலை

உங்கலாம்ல - சாப்பிடலாமில்லையா

உங்கலைல்லா – சாப்பிடவில்லை இல்லையா

உங்கணும் – சாப்பிடணும்

உங்குதியா - சாப்பிடுகிறாயா

இதாம் – இதுதான்

கணக்கால்ல – மாதிரியில்ல

பால்வாடி பிள்ளைகள் – குழந்தைகள்

கன்னாலம் – கல்யாணம்

விட்டுட்டு – விட்டுருச்சு

இரி – இரு

உடுப்பு – உடை

எடுத்தா – எடுத்துக் கொண்டு வா

கோட்டி – பைத்தியம்

மதினி – அண்ணி

சுளுவா – எளிதானது

காணுமா – போதுமா

மாரி – மாதிரி

சவட்டி – மிதித்து , உதைத்து

மறுக்கா – மறுபடி

ஏட்டி, என்னட்டி – பெண்களை செல்லமாக அழைக்கும் முறை

தாக்கல் – தகவல்

நோகுதா - வலிக்குதா

ஒரு குட்டி டீசர் படிச்சுட்டு இன்னிக்கு எபி படிக்க போவீங்களாம்.

அப்போ ஆரம்பிக்கலாங்களா!


டீசர் 1

முன்னால் சென்று கொண்டிருந்தவன் சட்டெனத் திரும்பி “அங்கன வா! கொஞ்சம் பேசணும்.” என்று கொஞ்சம் மறைவாக இருந்த ஒரு மரத்தடியைக் கைகாட்டி விட்டு முன்னே செல்ல அவளும் தொடர்ந்தாள்.

அங்கு சென்று மரநிழலில் நின்றவன் அவளையே கூர்ந்து பார்க்க அவளோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகவிழ்ந்தாள்.

“ம்ம்ம். இப்பச் சொல்லு. என்னத்துக்கு அழுகை?”

விழிகள் வியப்பில் வெண்ணிலவாக விரிய நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“அதான் உன் ஆசைப்படிப் பள்ளிக்கூடத்துல சேரப் போறேன்னு தெரியும். இருக்கக் கவுரதியா எடமும் கெடச்சாச்சு. பொறவு கண்ணு ஏன் கலங்குது?”

“அது வந்து...”

“காசு பணம் இல்லையேன்னு யோசிக்குதியா?”

ஒரு பதில் கிடைத்து விட்டாற் போல் அவள் வேகமாகத் தலையசைக்க அவள் தலையசைப்பிற்குத் தாளம் தட்டுவது போல் இரு செவி ஜிமிக்கிகளும் இசைந்தாட அவன் பார்வை அதில் பதிந்தது.

அவன் அன்னையின் ஜிமிக்கிகள் அவை.தங்கத்தில் முத்தும் பவளமும் மரகதமும் பதித்துப் பலவண்ணத்தில் இருந்த அந்த ஜிமிக்கிகளை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அவன் ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருக்கையில் திருவிழாவுக்குச் செல்கையில் மரகதம் அவற்றை அணிவதுண்டு.அவர் இடுப்பிலோ மடியிலோ இருக்கையில் அந்த ஜிமிக்கிகளைச் சுண்டி விட்டு அவை ஆடும் அழகைக் கண்டு கைதட்டிச் சிரிப்பானவன்.

இப்போதும் அப்படிச் சுண்டி விடக் கை துறுதுறுக்க அதைக் கட்டுப்படுத்தியபடி விழிகளால் அவள் முகத்தை வலம் வந்தான்.

கற்றைக் கார்குழலை இரண்டாகப் பிரித்து ஜடையிட்டிருந்தாள். கருமேகத் திரைக்கு இடையே ஒளிவீசும் பிறை நிலவென நெற்றி, மாரன் கைவில்லென வளைந்த புருவங்கள், அவற்றின் கீழே கருவண்டெனச் சுற்றிச் சுழலும் கண்கள், கூரான நாசி, கொழு கொழுக் கன்னங்கள், கொவ்வை இதழ்கள், அழகாகத்தான் இருக்கிறாள்.

விஷமத்துடன் இதழ்கள் வளைய,

“காசு பணத்துக்கென்ன? கொட்டிக் கெடக்குது எங்கிட்ட.நான் தாரேன்.நீ வேலை செய்ஞ்சு கடனக் கழிச்சுரு”

அவளும் மகிழ்ச்சியுடன் தலையசைசைக்க

“என்ன வேலைன்னு கேக்காம மண்டையை மண்டையை ஆட்டுத”

அவள் புரியாமல் பார்க்கவும் “பகல் முச்சூடும் அங்கன அம்ம வீட்ல பாக்குதத பாரு. ராவுக்கு என் வீட்டுக்கு வந்துரு.சீக்கிரமே கடனக் கழிச்சுறலாம்”

முதலில் அவன் சொன்னது விளங்காமல் மலங்க மலங்க விழித்தவள் பின் அவன் சொன்ன வார்த்தைகள் துளித் துளியாய் அவளுள் இறங்கி அதன் பொருளும் படிப்படியாய் விளங்க அவள் முகம் மாறியது.
 

Mahilrajini

Well-Known Member
Me, me, first, :love: :love: :love:. Thanks Thoorika ma for the detailed explanation of the dialect you are going to use in this story. Makes it easier for us to understand (those who are not used to different regional dialects). But a bit cheeky end to the preview, his suggestion to a young girl, no way, ;););). Little girl (is this Kumutha?), don’t nod your head before you understand the question. Ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ball by ball commentary to a preview, Thoorika ma.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Me, me, first, :love: :love: :love:. Thanks Thoorika ma for the detailed explanation of the dialect you are going to use in this story. Makes it easier for us to understand (those who are not used to different regional dialects). But a bit cheeky end to the preview, his suggestion to a young girl, no way, ;););). Little girl (is this Kumutha?), don’t nod your head before you understand the question. Ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ball by ball commentary to a preview, Thoorika ma.
Hero nallavan taan ma
Cumma ippadi solli heroine ahh tension pannuvar
 

Thoorika Saravanan

Well-Known Member
Me, me, first, :love: :love: :love:. Thanks Thoorika ma for the detailed explanation of the dialect you are going to use in this story. Makes it easier for us to understand (those who are not used to different regional dialects). But a bit cheeky end to the preview, his suggestion to a young girl, no way, ;););). Little girl (is this Kumutha?), don’t nod your head before you understand the question. Ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ball by ball commentary to a preview, Thoorika ma.
வந்துட்டீங்களா...வாங்க வாங்க வெல்கம் டியர். சும்மா அவனைப் பத்தி ஒரு டெரரைக் கிளப்ப வேணாமா அதுக்குத்தான் டா...மத்தபடி அவனைப் பத்திப் போகப் போகப் புரிஞ்சுக்குவீங்க... டீசருக்கே பால் பை பால் கமென்ட்ரின்னா என்ன நல்லா வச்சு செய்யப் போறீங்கன்னு நினைக்கிறேன்... ஆண்டவா என்னை காப்பாத்து. மிக்க நன்றி டியர் கமென்ட்ஸ்க்கு :love: :love: :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top