அன்பின் இனியா- final

Advertisement

achuma

Well-Known Member
முதலில், மல்லி மேடமுக்கு எனது நன்றி .
என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு.
எனது கதைக்கு, விருப்பங்களும், கருத்துக்களும் கொடுக்கும் எனது நட்புகளுக்கு, எனது மிக பெரிய நன்றி.
தொடர்ந்து அடுத்த கதைக்கும் உங்களின் ஆதரவு தேவை

நட்புக்களே.இந்த பதிவையும் படித்து விட்டு, உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் .

அன்பு கூறியதற்கு ஏற்றது போல் தான், அங்கு ராஜசேகர், ஒவ்வொவொரு விஷயத்திற்கும் திண்டாடினார் .
இறந்தவர், மீண்டும் திரும்பியதாக, ஒரு அடையாள அட்டை, உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு மெனக்கெடல் வேண்டும்.
அவருக்கு தெரிந்த மேலிடத்தில் கேட்டாலும், அவர் செய்த செயலை அவரிடம் விமர்சித்தே, அவருக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர்.
இதற்கு மேல் எந்த உதவியும் கேட்க கூடாது, என்று கூறிவிட்டனர் .
அதிலேயே, அவர் பெரிதும் அடிவாங்கினர்.
இரு தினங்களுக்கு ஒரு முறையேனும், தந்தையை வந்து பார்த்து விட்டு செல்வாள், விஷாகா .
அவள் வரும் நேரத்தில் தீபிகாவையும் , அவள் குடும்பத்தினரை ஒரு பொருட்டாக கூட இதுவரை மதித்ததில்லை விஷாகா.
அதில் ஒரு முறை கடுப்பில் இருந்த, தீபிகா, "அதான், இந்த குடும்பதோட, எந்த ஓட்டும் இல்லைனு, போய்ட்டிங்கள, அப்பறம், நீ மட்டும் எதுக்கு இங்க வந்து உறவு கொண்டட்டி இருக்க ?" என்று விஷாகாவிடம் சண்டைக்கு நின்றார்.
அதற்கு பதில் ஏதும் சொல்லாமல், கேட்டுக்கொண்டிருக்கும் தந்தையை நினைத்து ஒரு பக்கம் கவலை என்றாலும், தன் சுயமரியாதை இழந்து, இங்கு வந்து தன்னை பெற்ற தகப்பனை காண துடிக்கும் வெட்கம் கெட்ட மனதை நினைத்து வேதனை மறு பக்கம் .
இருந்தும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல், அவரிடம் வீராப்பாகவே மிரட்டினாள் .
"இங்க பாருங்க, எங்களுக்கு செய்த துரோகத்துக்கு, உங்க மேல போலீஸ் புகார் கொடுக்காம இருக்கனே, அது வரைக்கும் உங்க மரியாதையை காப்பதிக்கோங்க," என்று விரல் நீட்டி எச்சரித்தும் தீபிகாவே ஒரு நொடி அதிர்ந்தார் தான் .
கணவரை ஒரு முறை முறைத்துவிட்டு, அங்கிருந்து சென்றார் தீபிகா .
ஆனால் அதன் பிறகு, வந்த நாட்கள், விஷாகாவின் வருகை சிறிது சிறிதாக குறைந்து போனது.
எப்பொழுதாவது நேரம் கிடைக்கும் போது வந்து தந்தையை பார்த்து விட்டு செல்வாள் .
கடந்த பத்து வருடங்களில் நடந்து அனைத்தும் அவருடன் சொன்னாள் .
அவள் தொழில் நடத்திய முறை, அன்பு திருமணம், பிறகு அதிதி திருமணம்.
இனியா பற்றி, சரண் பற்றி, அக்ஷிதா மற்றும் அக்ஷித் பற்றி, என்று குடும்பத்தாரை, பற்றி புகழ்ந்து கூறினாள் .
அதே போல், அமர் மற்றும் ராகுல், தொழிலில் இறங்கிய நாட்களில் இருந்து, அவர்களுக்கு முன்னேற்றம் என்பதே இல்லை.
மிகவும் திண்டாடினர் என்றே கூறலாம் .
ராஜசேகர் வெளியே வர பயந்தே, மகன்களை கவனிக்க கூறிவிட்டார்.
முதல் சில நாட்கள், வெளியே சென்று வந்தார்.
அப்பொழுது எல்லாம் அக்கம்பக்கத்தினர், தன்னையே பார்ப்பது போன்று ஒரு எண்ணம் அவருக்கு.
தீபிகாவிற்கும் அதே நிலை தான், எந்த ஊரில் நிம்மதியாக உலா வர வேண்டும் என்று நினைத்தாரோ, இப்பொழுது, வீட்டு வாசல் தாண்டி வெளியே வர பயந்தார்.
சில நேரம், இருட்டிய பிறகு, இராஜசேகரும் தீபிகாவும் சில நேரங்களில் கோவிலுக்கு மட்டும் சென்றுவருவர்.
இதனால், கடை பொறுப்பு, மகன்களிடம் .
தீபிகா கழுத்தில் பரம்பரை நகை அணிவகுத்தாலும், அதை கண்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்ட, உறவுகளோ, நட்புகளோ இல்லை.
இது போல பிரெச்சனைகளால், கடை பொறுப்பு முழுதும் மகன்களையே பார்க்க செய்தார் ராஜசேகர்.
அவரின் அறிவுரையின் பேரில், அவர்கள் வேலை செய்தாலும், பலன் என்னவோ பூஜ்யம் தான்.
கட்ட பஞ்சாயத்து செய்த அளவிற்கு, ஆடை தொழிலில், அவர்களுக்கு திறமை இல்லை.
அந்த கடுப்பில், சில நேரங்களில் கோவம் எல்லாம் ராஜசேகரின் மீது செல்லும்.
அவரிடம் பேச பயந்த பிள்ளைகள், இப்பொழுது, கோவத்தில் அவரிடம் பாய்வது அவருக்கு, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியது.
ஒரு முறை, இருவரும் வெட்கத்தை விட்டு, விஷாகா வீட்டிற்கு வந்திருக்கும் நேரம் அவளிடமே உதவி கேட்டனர்.
"என்ன அண்ணா, மூத்தவங்க நீங்க, நீங்க தான் எங்களுக்கு எல்லாம் சொல்லி தரணும் ."
"என்கிட்டயே, ஹெல்ப் கேட்குறீங்க ."
"பெத்த அப்பாவும் அம்மாவும், இன்னொரு குடும்பத்துக்கு துரோகம் செய்து இருக்காங்கன்னு தெரிஞ்சும், அதை தட்டி கேட்க தெரியல, ஆக்சிடென்ட் ஆனது போல, ட்ராமா போட எல்லாம் ஸ்கெட்ச்சும், குடும்பமே சேர்ந்து போட்டு இருக்கீங்க."
"இவ்வளவு டேலண்ட் இருக்கு, உங்களுக்கா, இந்த நாலு கடைய ரன் பண்ண முடியல." என்று அமர் ராகுலுக்கு ஒரு கொட்டு வைத்தாள் .
"எப்படி முடியும், நீங்க, போற எல்லா பக்கமும், இவர் செய்த வேலை, தெரிய வந்து இருக்கும் ."
"தொழிலுக்கு முக்கியம், நாணயம், அது இவர் கிட்ட இல்லை, அப்போ, அவரோட உண்மையான வாரிசான உங்களுக்கும், அந்த நாணயம் இல்லைன்னு, நினைச்சு இருப்பாங்க போல ," என்று தந்தைக்கும் அவ்வப்போது பதிலடிகொடுப்பாள் .
அவமானத்தை சுமந்தாலும், "விஷா மா, என்னால வெளிய வர கூட பயமா இருக்கும் மா, உனக்கு என் மேல கோவம் இருக்கட்டும்."
"ஆனா, நீ எப்படி கஷ்ட பட்டு முன்னுக்கு கொண்டு வந்த கடை, அது மனசுல வெச்சி, உங்க அண்ணனுக்கு உதவு மா" என்று கெஞ்சினார்.
"அப்பா, எனக்கு என் வீட்டு வேலையே சரியா போகுது, இப்போ தான் நான் என் குடும்பம்ன்னு அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்றேன்."
"இந்த நல்ல நேரத்தை இழக்கவிரும்புல," என்று அவளும் கை விரித்தாள் .
ஆம், இப்பொழுது, குடும்ப தலைவியாக இருக்க விரும்பினாள் விஷாகா .
முன்பு வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்த வீட்டு வேலைகளை, இப்பொழுது, தன் குடும்பம் என்று, அக்கறையுடனும் நேசத்துடனும் செய்ய ஆரம்பித்தாள் .
காலையில், சமையல் செய்வோருடன் சேர்ந்து அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வேலைகள் கொடுத்து, உடன் காய்கறிகள் நறுக்கி கொடுத்து, குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வரை, அவர்களுடன் நேரம் சரியாக சென்று விடும் .
இப்பொழுது அவளுக்கு இது எல்லாம் பிரமிப்பாகவே இருக்கிறது.
தேவகியிடம் இதனை பகிரவும் செய்தாள் .
"வீட்டு வேலை என்ன பெரிய விஷயமா, அப்படின்னு நினைச்சு இருக்கேன் அத்தை ."
"இப்போ, இரண்டு வாலு பசங்களையும் ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குள்ள, போதும் போதும்ன்னு ஆகுது."
"நீங்க ரொம்பவே கிரேட் அத்தை " என்று மாமியாரை மனதார பாராட்டினாள் .
இப்பொழுது குடும்பத்தார் அனைவரும் ரேஷ்மிக்கு தீவிரமாக மாப்பிளை தேடும் தேடல் வேட்டையில் இறங்கினர்.
ரேஷ்மி, தேவகியின் ஏக்கம், வினோத்தின் விருப்பம், தந்தை வேறு ஒரு பக்கம், வற்புருத்தவே குடும்பத்தினருக்காக எதார்த்தமாக இருக்க பழகி கொண்டாள் .
அதன் பொருட்டே, அவர்களின் எதிர்பார்பான திருமணத்திற்கு சம்மதம் கூறியது.
இப்பொழுது ரேஷ்மியுடன், விஷாகாவும் நன்றாக பழக ஆரம்பித்தாள் .
இப்பொழுது தான் வினோத்திற்கு, மனைவி மீது அலாதி காதல் உருவானது, வாழ்க்கை முழுமை அடைந்த ஒரு மகிழ்ச்சி .
ஆனால், நாதனுக்கும், வினோத்துக்கும், அவளை இப்படியே வீட்டில் இருத்திகொள்ளவும் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
அவளின் தொழில் அறிவு, ஆளுமை திறன் அனைவருக்கும் கிடைக்காது.
அவள் வெளியே கூறவில்லை என்றாலும், சில நேரங்களில் தனிமையில், தோட்டத்தில் உலாவரும் நேரம், அவள் எண்ணத்திலும், அவள் கடை பற்றிய ஏக்கம் இருக்கும்.
ஆனால் இதுதான் தனக்கு என்ற எண்ணத்துடன் இருக்க பழக்கி கொண்டாள் .
அன்று விஷாகாவின் பிறந்தநாள், நாதன், அவள் முன் ஒரு பத்திரத்தை கொடுத்து, மருமகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
படித்து பார்த்ததில் அவளுக்கு ஆனந்த கண்ணீர் .
"உன் டேலண்ட் எனக்கு தெரியும் மா, அது வீட்டுக்குள்ளையே அடைஞ்சு போறதுல எங்களுக்கு விருப்பம் இல்லை."
"அது தான், நாங்க எல்லாரும் சேர்ந்து, உனக்கு பிறந்தநாள் பரிசா, இந்த கார்மெண்ட்ஸ் நீ நடத்தணும்ன்னு உன் பேர்ல, எழுதி கொடுத்தேன்."
"இது சின்ன யூனிட் தான், ஆனா இதை நீ பெரிய அளவுல கொண்டு வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மா."
"நாளைக்கு, உன் கம்பெனிக்கு, நீ எங்களோடயே வா, எல்லாருக்கும், உன்னை அறிமுகம் செய்து வைக்குறேன் ."
விஷாகாவிற்கு பேச்சே இல்லை, இந்த குடும்பத்திற்கா தான் துரோகம் செய்தோம், அன்று ரேஷ்மிக்கு பங்கு கொடுப்பதை பற்றி எத்தனை சண்டையிட்டோம், என்று வெட்கினாள் .
"நிறைய தப்பு செய்திருக்கேன், என்ன என்னை மன்னிச்சிடுங்க, எல்லாரும்," என்று கண்ணீர் விட்டாள் .
அனைவரும் கொடுத்த மன்னிப்பே, அவளுக்கு தண்டனை போலும் .
அடுத்து வந்த தினங்களில்,விஷாகாவிற்கு குடும்பம், அவளின் கார்மெண்ட்ஸ், அன்னை வீட்டிற்கு சென்று வருவது, எப்பொழுதாவது, தந்தையை பார்த்து வருவது என்று காலங்கள் சென்றது.
நடுவில் ஒரு முறை, அனைத்து உறவுகளும் செழியன் புதிதாக திறந்த ஷோரூமிற்கு சென்று வந்தனர்.

இன்னும் கொழுக்கட்டை வேண்டுதல் செழியனின் இல்லத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது .

மாப்பிளை தேடும் தீவிர முயற்ச்சியில், நாதனின் தொழில் முறை நண்பர், அவரின் இளைய மகன், அஜய் என்னும் வரன் ரேஷ்மிக்கு அமைந்தது.
முதலில், ரேஷ்மி புகைப்படம் அஜய்க்கு காட்டப்பட்டது.
பார்த்ததும் பிடித்து விடவே, பெண் பார்க்கும் படலம் ஏற்பாடானது.

நேரில், ரேஷ்மி மீது அஜய்க்கு, இன்னும் பிடித்தம் உருவாகவே, பெரியவர்கள், ரேஷ்மி அஜய்க்கு அடுத்த முகுர்த்தத்திலேயே திருமணம் ஏற்பாடு செய்தனர்.
தன்னால், ரேஷ்மிக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு, விஷாகா, ரேஷ்மி திருமணத்தில் முழு ஈடுபாட்டுடன், பங்கேற்றாள் .
ரேஷ்மிக்கு, அவளுக்கு தேவையானது அனைத்தும் பார்த்து பார்த்து செய்தாள்.

திருமண நாள் வரை, மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் தொலைபேசியில் கடலை வறுப்பதில் ரொம்ப பிஸி.
அஜயின் பேச்சும், அவனின் நேசம், ரேஷ்மியை தன் எல்லாமுமாக கொண்டாடுவது எல்லாம் பெண்ணின் மனதை, பெற்றோருக்காக அன்றி அஜய் பக்கம் முழுதாக சாய்த்தது.
அன்பு, சரண், வினோத்துடன் சேர்ந்து கல்யாண வேலைகளில் சுற்றி கொண்டிருந்தனர் .

ரேஷ்மி திருமணத்திற்கும், இராஜசேகரை, யாரும் அழைக்கவில்லை.
ரேஷ்மி , அஜய் திருமணம் நடந்தேறியது.
இராஜசேகருக்கு தோன்றியது இது தான், தன்னை தவிர, மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டார் .

அன்று இருட்ட தொடங்கிய மாலை நேரம்.
கோவிலில், மனைவியுடன், அமர்ந்து கொண்டு, ஏதேதோ, எண்ணங்கள் மனதில் போட்டி போட, அங்கு சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார், ராஜசேகர்.

அப்பொழுது தரிசனம் முடித்து, எதிர் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர் , சுமதி குடும்பம்.
யாரெல்லாம் என்று அவர் கண்கள் நோட்டமிட்டது.
விஷாகா, அவள் பிள்ளைகள், தேவகி, நாதன், சந்திரா, சுமதி அன்பு குழந்தையின் கையை பற்றி கொண்டு, அவனுடன் மண்டபத்தில் நடந்தார் .
ஏதோ கர்ப்பிணி பெண், கைகளை நிறைய வளையல்கள் அணிந்து, கன்னத்தில் சந்தனம் பூசி, இனியாவுடன் நின்று இருப்பதாக நினைத்து கொண்டார்.
இந்த கூட்டத்தையே உன்னிப்பாக கணவனித்துக்கொண்டிருந்தார் சில நேரம்.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.
ஏதோ சிரித்து பேசி, அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
அதிலும், பேரனை பிடித்து கொண்டு, சுமதி அப்படி ஒரு சந்தோஷத்துடன் நடந்து வருவதில் தன்னிடம் இல்லாத நிம்மதி தன்னால் ஏமாற்றப்பட்ட சுமதிக்கு எப்படி கிட்டியது என்று ஒரு எண்ணம்.
அந்த இருட்டிலும் தந்தையை அடையாளம் கண்டு கொண்ட, விஷாகா ஓடி சென்று அவர் அருகில் வந்தாள் .

"அப்பா, எப்போ, வந்தீங்க, இங்க நீங்க இருந்ததை இப்போ தான் கவனிச்சேன்," என்று கூறி கொண்டே, தந்தைக்கு திருநீர் வைத்தாள் .
தீபிகாவை கண்டுகொள்ளவே இல்லை .
"என்ன மா, எல்லாரும் கூடி இருக்கீங்க, என்று கேட்டார்.
"நான் போன வாரமே சொன்னேனே, மறந்துடீங்களா, அப்பா, நம்ம அதிதிக்கு இன்னைக்கு சீமந்தம் முடிஞ்சுது, சரி அந்த அலங்காரத்தோடயே, கோவிலுக்கு வந்துட்டு போகலாம், எல்லாரும் வந்தோம்.

அவரும், அன்பு, அப்பறம் சரணும், எல்லா வேலையும் முடிச்சிட்டு, வராதா சொல்லிட்டாங்க."
"ஹ்ம்ம், உங்களை, கூப்பிட, சொல்லி சரணுக்கு சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க, யாருக்கும், உங்களை இன்வைட் பண்றது பிடிக்கலை," என்று தயங்கி தயங்கி கூறினார் .

மகளின் மற்ற வார்த்தையை தவிர்த்து,"அதிதியா அது, என்று மீண்டும் உன்னிப்பாக அந்த இரவு வெளிச்சத்தில் கண்ணை தேய்த்துக்கொண்டு பார்த்தார் .
பட்டு புடவையில், கைகளை நிறைய, வளையல்கள் அணிந்து, தாய்மையின் பூரிப்பில், இன்னும் அழகா காட்சியளித்தாள் .
"அடையாளமே தெரியல விஷா மா, எப்படி ஒல்லியா இருப்பா, இப்போ பாரேன், நல்லா உடம்பு வெய்ட் போட்டு இருக்கா," என்று அகம் மகிழ்ச்சியுற கூறினார், மனிதர்.
மகளை அப்படி பார்த்ததில் சந்தோஷம் போலும் .
அதில் விஷாகவே ஒரு நிமிடம் அவரை புரியாது பார்த்தாள்.
தீபிகாவை கேட்கவே வேண்டாம்.

காலம், அவருக்கு நிறைய பாடம் சொல்லி கொடுத்தது.
அதில் அன்பு, அதிதி மீதும் பாசம் வந்ததோ.
அமர் ராகுலுக்காக எத்தனை செய்திருப்பார், ஆனால் அவர்கள் தினம் ஒரு சண்டை என்று வீட்டினில் அமைதியே இல்லை.
ஆனால், அன்பு மற்றும் அதிதிக்கு, அவர் கடமை என்று எதுவும் செய்ததில்லை, அப்படியிருந்தும், சுமதியை எப்படி தாங்குகிறர்கள்.

"என்ன விஷா மா, என்னையே பார்க்குற," என்று சிரித்து கொண்டே கேட்டார்.
"ஹ்ம்ம் ஒன்னும் இல்லை, பா, நிறைய மிஸ் பண்ணிடீங்க பா, ரொம்ப தூர போய்ட்டிங்க பா, உங்க மேல கோவமும் வருது, பாவமாவும் இருக்கு," என்று வருந்தினாள்.
இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே வந்து சேர்ந்த வினோத், அன்பு மற்றும் சரண், "விஷா உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியல, டி, அப்படி என்ன, இவர் மேல உனக்கு பாசமோ போ ."
"உன் ஒருத்திக்காக தான் இவரை விட்டு வெச்சிருக்கோம்," என்று கூறி, மனைவியை அழைத்து சென்றான் .

"யோவ், மாசமா இருக்க என் பொண்டாட்டி மேல கண்ணு வைக்குற, கண்ணை நோண்டிடுவேன் பார்த்துக்க," என்று மிரட்டி விட்டே சரண் சென்றான் .
அதில் அவருக்கு சிறிதும் கோவம் இல்லை.

அன்பு மட்டும் அங்கேயே அவருக்கு நேர் நின்று அவரை பார்த்ததில், வார்த்தைகள் தந்தியடிக்க, "அன்பு, ஏதோ, என்ன சொல்றதுன்னு தெரியலை, எனக்கு நிம்மதியில்லை, ஊருக்கே போய்டலாம்ன்னு தோணுது."
"இங்க இருந்தும், எந்த உறவுகளும் என்னை சேர்க்க மாட்டுறாங்க, வீட்டுலயும் நிம்மதி இல்லை," என்று அவனிடம் பேசி கொண்டிருந்தார்.
"அப்போ, பெருசா தெரியாத விஷயம் இப்போ, என்னை ரொம்பவே மிரட்டுது, முடிஞ்சா என்னை மன்னிச்சுடு ,"
என்று கை கூப்பினார் .

"மன்னிப்பா, இழந்த காலமும், அதோட காயமும் என்னைக்கும் போகாது, நீ செய்த, பாவமும் எந்த கோவிலுக்கு போனாலும் விலகாது."
"திரும்ப எல்லாரோடையும் நீ ஓட்டணும் பார்த்தாலும் அதுவும் முடியாது."
"இங்க இருந்து நீ போகணும் நினைச்சாலும், இதோ உன் பசங்க, எப்படியாவது, விஷா அக்காவுக்கு மேல கடைய கொண்டு வரணும், திக்கி திணறிட்டு இருக்கானுங்களே, அவனுங்க விட மாட்டாங்க ."

"இது தான், இப்போ நீ கடக்க வேண்டிய பாதை, அனுபவி ," என்று கூறி விட்டு, அவன் குடும்பத்தாரை அழைத்து கொண்டு, சென்று விட்டான் .

ஆறு வருடங்கள் கழித்து
"ப்ளேக் அண்ட் வைட் பேமிலி வெல்கமஸ் யூ," என்றும்
ஏதோ பெயருக்கு "மோகன் இந்திரா குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கிறது," பேனரின் ஓரத்தில் சிறு எழுத்துக்களால் இருந்த, பெயரை பார்த்து கொண்டு மணமேடையில் மாப்பிள்ளையாக நின்றிருக்கும் இளங்கோவை முறைத்து கொண்டு இருந்தார் மோகன் .

அன்று இளங்கோவிற்கும்,திருமணம்.
அவன் வேலை செய்யும் துறையில் உடன் பணிபுரியும் ரம்யா, மீது காதல் வயப்பட்டு, முதலில் அவன் கூறியது, செழியன் மற்றும், அன்புவிடம் தான்.
அவர்கள் ஒரு வழியாக அவரவர் மனைவிமார்களிடம் கூறி, ஒருவழியாக, அவர்களும் தம்பியின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர் .
பிறகு, இலக்கியா மற்றும் இனியா, மோகனிடம் விஷயம் கூறியதும், மகள்களின் கூற்றுக்கு மறுப்பேது .
அவரும் சரி என்றார்.

இனி பெண் வீட்டிற்கு பேசுவது, பெண்ணின் புகைப்படம் கேட்டதும், இளங்கோ ரம்யாவின் புகைப்படத்தை, அவன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட, புகைப்படத்தில் இருப்பதில் ஒன்றை எடுத்து காட்டினான்.
அதை கண்டதும் இலக்கியா மற்றும் இனியா இருவரும் சிரித்துவிட்டனர் .

காரணம், இக்குடும்பத்தில் ஒரே நிறத்தில் தான் மட்டுமாவது ஜோடி பிடித்தே காட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்த இளங்கோ, அவனின் வெள்ளை நிறத்திற்கு, சமமாக இல்லாமல், கருத்த கண்ணழகியாக இருந்தாள் .

"டேய் இளா உன் சபதம் எல்லாம் எங்க போச்சு, இந்த கண்ணழகி உன்னை பிளாட் ஆகிட்டா போல," என்று அக்காக்கள் இருவரும் கிண்டலடித்தனர்.
ஒருவழியாக மோகன் ரம்யா வீட்டினர்க்கு பேசி, அவர்களுக்கும் பிடித்து போகவே, இதோ இன்று திருமணம் முடிந்து, இருவரும் இருந்தனர்.
இளங்கோ, அடம் பிடித்து பேனரில் வைத்திருக்கும் பெயரை பார்த்து தான் மோகன் முறைத்து கொண்டிருந்தார்.

அங்கு திருமணத்திற்கு வந்திருந்தோர், அனைவரும், வாழ்த்தி விட்டு சென்று, கூட்டம் சிறிது அடங்கியது.
அப்பொழுது, இளங்கோ, அங்கு ஜோடியாக, நின்று இருந்த, அவன் உறவினர்களை பார்த்து .
கொண்டிருந்தார்ன் .
"வெகு நேரம், இளங்கோவின் கண்கள்.
அங்கு பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த ரம்யா," என்ன இளங்கோ, நம்ம சொந்தங்களையே பார்த்து கொண்டிருக்கீங்க," என்று கேட்டாள்.

"இவ்வளவு அழகான பொண்டாட்டி பக்கத்தில் இருக்கும் போது அவளை பார்க்காம என்ன வேடிக்கைன்னு, கேட்குறியா," என்று அவள் காதுகருகில் குனிந்து, ஹஸ்கி குரலில் கேட்டதும், ரம்யாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
"டேய் இளா, ரொமான்ஸ், வருது டா, உன் பேச்சுக்கு, பொண்டாட்டி, முகம் வெட்கத்துல சிவக்குதே," என்று அவனுக்கு அவனே பெருமை பட்டு கொண்டு,
"ரம்யா, நீயும் பார், என்று கை காட்டினான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .
அவன் கை காட்டியது,
மோகன், இந்திரா அவர்களுடன், இலக்கியா பிள்ளைகளும், இனியாவின் மகனும் இருந்தனர்.
அவர்களின் முகத்தில் பிள்ளைகளுக்கு முடிக்க வேண்டிய கடமை முடிந்த மகிழ்ச்சி.

தேவகி நாதன் தம்பதி , அவர்களுடன் ரேஷ்மியின் நான்கு வயது மகன், ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்தனர் .
இலக்கியா செழியன் தம்பதி, மண்டப வாயிலில், அனைவர்க்கும், தாம்பூலம் அடங்கிய பையை கொடுத்து கொண்டிருந்தனர், அகம் நிறைந்த புன்னகை அவர்கள் முகத்தில் .
ரேஷ்மி அஜய், சரண் அதிதி, மற்றும் வினோத்,விஷாகா தம்பதிகள் ஏதோ கிண்டலடித்து பேசி கொண்டிருந்தனர்.
சரணின் தோளில் அவனின் நான்கு வயது மகள் உறக்கத்தில் .
இறுதியில், மாப்பிள்ளைக்கும், மன பெண்ணிற்கும், ஜூஸ் எடுத்து வந்து கொடுத்து சென்ற, அன்பு இனியா தம்பதியையும் காட்டினான் .
இருந்தும் ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"நீ அவங்க முகத்தில இருக்கும் சந்தோஷத்தை பார்த்தியா, ரம்யா ."
"என் அப்பா அம்மா அவங்க காலத்தில இருந்து, இப்போ, இதோ நம்ம கல்யாணம் வரைக்கும் எடுத்துக்கோ."
"எல்லாரோட முகத்தில இருக்கும் சந்தோஷம், இது எல்லாத்துக்கும் ஒரே காரணம், தூய்மையான நேசம் ."
"இவங்களுக்கு எல்லாம் எத்தனையோ பிரச்னை வாழ்க்கையில் வந்து இருக்கு, ஆனா அதை எல்லாம் கடந்து, இப்போ, இந்த நிறைவு, மகிழ்ச்சி இவங்க முகத்தில நிறைஞ்சு இருக்குன்னா, கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர், உண்மையான, பாசத்தில் தான் இருக்கு."
"ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாவும் ஆறுதலாவும் இருந்தாலே போதும் ."

"இப்போ, நம்மளும் அடுத்த கட்டத்துல அடி எடுத்து வைத்திருக்கோம், அதுக்கு தான் சொல்றேன், இவங்களை மாறி, நாமும் ஒருத்தருக்குனு ஒருத்தர், புரிதலோடு, இந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டணும்." என்று கூறியதும் ரம்யமாவிற்கு புரிந்தது.

அவளும் மீண்டும் அனைத்து தம்பதியையும் ஒரு முறை பார்த்து விட்டு, என்றும் புரிதலும், அன்பும் இருக்கும் இல்லற, வாழ்க்கை, சிறந்த விளங்கும் என்று, உணர்ந்தாள் .
அன்பு, இனியா ஜோடியுடன் சேர்ந்து இந்த புது ஜோடியையும் வாழ்த்துவோம் .

நானும் அடுத்த கதை கொலுசொலி அதில் உங்களை சந்திக்கிறேன் நட்புக்களே

https://drive.google.com/u/1/settin...aign=storage_meter&utm_content=storage_normal

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
ராஜசேகர யாரும் ஒட்டாம
இப்படி தள்ளி வச்சு சூப்பரா
தண்டனை குடுத்தாச்சு

விஷாகா இன்னும் அப்பன
பாசமா பாக்குறது
எரிச்சலாக இருக்கு

அன்பு ஜெயிச்சு இன்பமான
அழகான நிறைவான வாழ்க்கை
அருமை
 
Thanks to all
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top