அன்பின் இனியா 9

Advertisement

achuma

Well-Known Member
Hi friends my word is not working
so epi 9 has updated two times by mistake, sorry


all be safe :love:
keep supporting


அன்பின் இனியா 9

காலையில் அன்பு வீட்டிற்கு செல்லும் முன்பே இந்திரா , இலக்கியாவுக்கு அழைத்து , செழியன் மட்டுமே வந்தால் போதும், என்று கூறி விட்டார் .

இனியாவின் திருமண வேலையால், இலக்கியாவின் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று, ஏங்கியது அன்னையின் மனம் .



"நீ உன் குடும்பத்து முதலில் கவனி மா , ஒவ்வொன்னுத்துக்கும், நானும் உன்னை கூப்பிட்டு, உனக்கு தொந்தரவு கொடுத்தா , உன் மாமியார் கிட்ட நீ தான் பேச்சு வாங்கணும் .

நாங்க இங்க பார்த்துகிறோம்."

"நானும் எல்லா நிகழ்ச்சிக்கும் அவங்க கிட்ட முறையா , கேட்டு தான் உன்னை அனுப்ப சொல்றேன், ஆனாலும் அவங்களுக்கு ஏதோ சிடுசிடுப்பு உன் மேல ."



"எனக்கு தான், மனசு கிடந்து தவிக்குது, இப்போ என்ன அவங்க வீட்டுக்கு தானே போறோம், கல்யாண புடவை வாங்கும்போது, நீ வா , இப்போ எங்களால, உனக்கு பிரச்சனை வேண்டாம் ."

அன்னையின் , மகள் வாழ்க்கை மீதான பயம், இலக்கியாவுக்கும், மனம் நெகிழ செய்தது .



ஆனாலும், ஒரு சகோதரியாக, தங்கையின் திருமண வேலைகளில் தன்னால் இருக்க முடியமால் போனதே என்று தவித்தாள்.

அதற்குள், இலாக்கியா , என்ற மாமியாரின் குரலில், "சரி மா, நீ பாரு நான் போயிட்டு வந்து பேசுறேன்," என்று அழைப்பை துண்டித்தார் , இந்திரா .

மோகனிடமும், தான் கூறியதை கூறி செழியனை மட்டும் அழைத்தனர்.அன்பு வீடும் பரபரப்பாக இருந்தது, இனியாவின் வீட்டினர் வருகைக்கு .

வீட்டிற்கு தேவையான பொருட்கள் , என்று அன்பு இந்த இரண்டு நாட்களில் வாங்கி விட்டான் .



அனைத்தும் அவன் தங்கையின் விருப்பத்தில், அவளுக்கு பிடித்த நிறத்தில் என்று .

அவன் தந்தையின் வீட்டில், உள்ள பொருட்கள் யாவும் விஷாகாவின் ரசனைக்கேற்ற இருந்தது .

அதுவே விஷாகாவுக்கு இங்கு வந்ததில் இருந்து, எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்தது .



இனியா வீட்டினர் வருவதற்குள், இத்தனை பொருட்கள், வாங்கி விட்டானே, என்று அங்கு இருந்த, சோபா , டிவி, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கே , அதுவும் அதிதியின் தேர்வில் என்றதும், அவள் வாய் சும்மா இல்லாமல், "ஏன் வர மகாராணி, வரும் போது, இது எல்லாம், கொண்டுட்டு வர வக்கு இல்லையா, எங்க அப்பா எனக்கு எவ்வளவு கொடுத்து இருக்காரு ."

நீ எல்லாம் வாங்கி போட்டு வெச்சி இருக்கே, அவ அப்படியே சும்மா ஓசி ல வரட்டும், எனக்கு சொல்லணும்னு தெரியலையா , எல்லாம் வேண்டாதவளா போயிட்டேன் ."



"எதுவுமே நல்ல இல்லை , ஹ்ம்ம் , இப்போவே என்ன அவசரம் இது எல்லாம் வாங்கணும் ," என்று இனியா மீது கோவமா, இல்லை அதிதியின் ரசனைகேற்ப , வீடு இருக்கிறதே என்ற பொறாமையா , என்று ஏதும் வகுத்தறியா முடியா கோவத்தில் வார்த்தை வந்து விழுந்தன .

அன்புவுக்கு கோவம் வந்தாலும், அவள் புகுந்த வீட்டினர் முன், ஏதும் கூற முடியாமல், அமைதி காத்தான் .



"ஏன், இது எல்லாம் கூட இல்லைனா , வீடு மாதிரியா இருக்கும், என்னவோ அவங்க வீட்டுக்கு வாங்குனா மாதிரி பேசுற, இங்க அத்தை தானே யூஸ் , பன்றாங்க , உன் அப்பா உனக்கு எல்லா கொடுத்தாருன்னு பேசுறியே, நாங்க ஏதாவது கேட்டோமா , இல்லை எங்களுக்கு எதுவும் தான் இல்லையா , அந்த பொண்ண சொன்னியே, உங்க அப்பா எல்லாம் கொடுத்ததால், எதுவும் வாங்க எங்களுக்கு வக்கு இல்லையா ?" என்று எதிர் கேள்வி கேட்டு அவளை திகைக்க செய்தான் .

நிச்சயமாக, விஷாகா இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை .



எத சொன்னா , இவரு இப்படி கம்பர் பன்றாரு , "நீங்க இப்படி எல்லாம், நீங்க சொல்லுவீங்கன்னு நான் நனைக்கல, நான் அந்த அர்த்தத்துல சொல்லலே, என்றாள் சிறிய குரலில் ."



"உங்க அப்பா, எல்லாம் செய்தாருனு சொன்னியே, அது நம்ம வீட்டுல இருக்கிறதால, எங்களுக்கு , வக்கு இல்லயோன்னு நினைச்சிட்டேன் ."

எங்கு மகளுக்கும் மருமகனுக்கும் சண்டை வந்து விடுமோ, என்று , சுமதி பயந்து, மாப்பிளை, "அவ ஏதோ பேசிட்டா, இப்போ ஆக வேண்டியது பார்ப்போம்," என்று பேச்சை மாற்றினார் .



அன்புவும், "அக்கா , வீட்டுக்கு வந்து பத்து நாள், ஆச்சு, அதான், தேவையானது வாங்குனே, இது ஒரு விஷயமா, என்று , "அத்தை , என்ன என்ன தேவைன்னு சொல்லுங்க, இப்போ போய் நானும், மாமாவும் வாங்கிட்டு வந்துடுறோம்," என்று வினோத்தை திசை திருப்பினான் .



சுமதி அவ்வாறு கூறினானரே தவிர, இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு என்று, அதிதியை அழைத்து சென்று , வாங்கியது, அதிலும், விஷகாவுக்கு தெரியப்படுத்தாமலே, மகன் வாங்கி குவித்தது என்று, அனைத்து கோவமும்,தற்போது, இதனால், மகள் மருமகன் நடுவில் சண்டை, இனியா வீட்டினர் மேலே சென்றது .

தேவகி, நடந்த நிகழ்வில், அமைதியாகவே இருந்தார், கேட்கட்டும் என்று .



"அடுத்தவங்க வீட்டுல என்ன பொருள், வாங்கினா என்ன," என்று தான் அவருக்கு .

"கல்யாணத்துக்கு பிறகும், இவ பேச்சே, கூட பொறந்தவங்க கேட்கணும்னா எப்படி," என்று அவர் நினைத்தார் .



விஷாகாவுக்கு, அதிதி முன்பும், அதிலும் மாமியார் முன்பு, கணவன் இது போன்று பேசுவது அவமானமாக , அதில் இருந்து யாரிடமும் பேசாமல் அமைதியானாள் .



"அன்பு, இன்னும், கொஞ்சம் ஸ்வீட்ஸ் , மட்டும் வாங்கணும் பா," என்று கூறி, அவனை வினோத்துடன் கடைக்கு அனுப்பினார் .

"அதிதி குட்டி ,வீட சூப்பரா , ரெடி பண்ணி வெச்சி இருக்க," என்று அண்ணன் மகளை கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.



"நீ வந்தவங்களுக்கு, தண்ணி கொடு, அதுக்குள்ள நான் எல்லாம் தட்டுல அடுக்கி வெச்சிட்டு, வரேன்" .

"கொஞ்ச நேரம் போனதும், எடுத்து வெச்ச பலகராம், கொடுக்கலாம், அவங்க நம்மள எவ்வளவு நல்லா கவனிச்சு அனுப்பினாங்க".

"அதே போல நாமும், மதிக்கனும் சரியா," என்று, அண்ணிக்கும் மருமகளுக்கும், கூறியது போல் , சமையல் அரை சென்றார் .



"இந்த ஊமை குசும்பு, எப்படி சொல்லிட்டு போது பார்த்தியா ," என்று மகளிடன் திரும்பி சுமதி கூறியதற்கு, விஷாகாவிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை .

கூடத்தில், தனித்து விட பட்டது, சுமதியும், விஷாகாவும் .



கணவனின் இது போன்ற தாக்குதல், சமீபத்தில், அதிலும், தம்பியின் திருமண விஷயத்தில், அவர்கள் வாழ்க்கையில், தேவையில்லாத பிரச்சனைகள் , முளைக்கிறதே, என்று ஒரு வித கோவம், ஆற்றாமை .



"எது சொன்னாலும், அதுக்கு எதிரா, ஒரு பதில் கொடுக்குறாரே, முன்பு இவ்வாறு இல்லையே," என்று ஒரு எரிச்சல்.



அதே நேரத்தில் பிறந்த வீட்டில், தான் சிறிது சிறிதாக , அந்நியமாக்கப்பட்டோமோ , என்று ஒரு பயம்.



தந்தை இருந்து இருந்தால், இவர்கள் எல்லாம் முன் நிற்பார்களா , தான் இல்லாமல் தான், இந்த வீட்டில் ஏதேனும் நடக்குமா .

அவள் தந்தையின் நினைப்பு, அன்று மிகவும் அதிகமாக அவளை வருந்தியது .

அமைதியாக அங்கு இருந்த அன்னையின் அறையில் சென்று அமர்ந்து விட்டாள் .

தந்தையின் நினைவு வரும் போது எல்லாம், அவளால் எதிலும் ஈடுபாடுடன், செயல் பட முடியாது .



அன்னையை விட தந்தை மீது பாசம், அதிகம் .

பாசம் என்பதை விட, ஒரு வித பக்தி, பித்து, தொழில் கற்று கொடுத்த குரு,தோழன் என்று கூறலாம் .



தொழில் காரணமாக, அவர் அதிகம், வட நாட்டில் இருந்தாலும், இங்கு வரும் போதெல்லாம் , அவரின் நேரம் விஷகாவுடனே சென்று விடும் .

அன்பு, தேவகி கேட்டது அனைத்தும் வாங்கி வந்ததும், வினோத்தும், மனைவியின் வாடிய முகம் கண்டு, அவன் கோவத்தினை கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தான் .



சிறிது நேரத்தில், செழியன் வழியில், மோகன் குடும்பத்துடன் சேர்ந்து, அன்பு வீட்டிற்குள் சென்றனர் .

வினோத்தும், அன்புவும் அனைவரையும் முறையாக வரவேற்றனர் .

சுமதி "வாங்க" என்றதுடன், பேச்சை முடித்து கொண்டார் .

அதிதி, மோகன் மற்றும் இந்திராவுடன், "எப்படி இருக்கீங்க அத்தை , மாமா," என்று , உறவு முறையுடன், கூறியது, அவர்களுக்கும் மகிழிச்சி .

இந்த பொண்ணு இனியாவுடன் நன்றாக பழகுவாள் , என்று, மாப்பிள்ளை வீட்டினர், சம்பாஷணைகளை வைத்து , மகள் புகுந்த வீட்டில் யாருடன், எப்படி பழகுவாள் , என்று ஒப்பிட்டனர் .



இளங்கோவை கண்டதும் , அதிதி, "இளங்கோ தாத்தா சேர், இப்போ எப்படி இருக்கு ," என்று கேட்டு சிரித்தாள்

அன்புவும் உடனே சிரித்து, அவன் தோளில் தட்டி, "அந்த வீட்டுல நீ, செம்ம அறந்த வாலு, போல," என்று கை கொடுத்து, அவனை அன்புவுக்கு அருகில் அமர வைத்தான் .




“இளங்கோவும், மாமா, நல்லா பிரெண்ட்லியா பழகுறாரு, சூப்பர் ,” என்று மனதில் மெச்சி, அதிதியிடம் , நான் அன்னைக்கே பட்டி திங்கரிங் , எல்லாம் செஞ்சி சரிபடுத்திட்டேன் , அக்கா .

எக்ஸாமுக்கு அதுல தான் படிப்பேன் ."



"நீங்க இப்போ வந்தா , அதுல எந்த பயமும் இல்லமா, தைரியமா உட்காரலாம் ," என்று விஷாகாவை பார்த்து வேறு கூறினான் .

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷாகா , அவனை முறைத்தாள் .

வினோத்தும் உடனே சிரித்து , "டேய் சும்மா இரு டா, நீ வேற ," என்று அவன் இளங்கோவின் மற்றொரு புறம் அமர்ந்து கொண்டான்.



செழியனை வினோத்தும், அன்பும், வர வேற்று, அவர்கள் அருகிலேயே அமர செய்தனர் .

"மச்சான், எந்த சேதாரமும் இல்லாம வீடு போய் சேர பாரு, மாமா உன்ன தான் முறைக்கிறாரு," என்று செழியனும் அவர்களுடன் கலந்து கொண்டு ,அவர்ளின் நால்வர் கூட்டணி களை கட்டியது.



அன்பு அதிகம் எப்பொழுதும் பேச மாட்டான், ஆகையால், இளங்கோவின் பேச்சு, மற்றவர்களின் கிண்டல், இது எல்லாம், கவனித்து கொண்டு, இதழோரத்தில் உதடு வளைந்ததோ, என்னும் அளவுக்கு சிரித்தான் .

மோகனுக்கும் இந்திராவுக்கு, அன்புவை கண்டு பரம திருப்தி.



அப்பொழுது தான் இந்திரா , நேரில் பார்ப்பதால் , மாப்பிள்ளையின் வசீகர தோற்றம், மகளுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார், என்று மனதிற்குள்ளே, அவர்களின் ஜோடி பொருத்தத்தை கணக்கிட்டார்.



"ஏங்க, மாப்பிளை, நல்லா இருக்காரு, ரொம்ப அமைதி போல, அளவா தான் பேசுறாரு, நம்ம குட்டிமா, வாய் ஓயாம பேசிட்டே இருப்பா, எல்லாம் செட் ஆகுமா , இவங்க இரண்டு பேர் எதுலயும் விருப்பம் இல்லாத போல வேற இருக்காங்க," என்று சுமதி விஷாகாவை வேறு பார்த்து கூறினார் மெதுவாக .



"அவருக்கு பிடிச்சி தான் மா கேட்டு இருக்காங்க, இரு பார்க்கலாம் , வீட்டுல போய் பேசிக்கலாம்," என்று மீண்டும், ஆண்களுடன் உரையாடலில் , கலந்தார்.



"எங்கயாவது வந்தா என்னை, டீல்ல விட்டுருவாரு," என்று கணவனை மனதினில் நொடித்தார் ,இந்திரா தான் , சுமதி, விஷாகா ஏதும் பேசாமல், தானும் எவ்வளவு நேரம் அவர்களை பார்த்து சிரித்து வைப்பது என்று, அமைதியாக வீட்டை வேடிக்கை பார்த்தார் .



அது வரை அமைதியாக இருந்த சுமதி , "என்ன மா, நீங்க இது போல வீடு எல்லாம் நீங்க சினிமால தானே பார்த்து இருப்பீங்க, இப்போ இவ்வளவு பெரிய வீடு நேர்லயே பார்த்ததும் அப்படியே , ஆச்சரியமா பார்க்கறீங்க போல ."



"உங்க பொண்ணு அதிர்ஷ்டம் தான் , இவ்வளவு பெரிய வீட்டுக்கு மறு மகளா வர போறா ".




சுமதியின் குத்தல் பேச்சு இந்திராவுக்கு புரியாமல், இல்லை, அதிலும் வந்த இடத்தில, அவரிடம் வாய் கொடுப்பது, நன்றாக இருக்காது என்று அமைதியாக இருந்தார் .



"இது போல், வீட்டுக்கு சிலதுங்க இருக்க தான் செய்றாங்க, என்ன செய்றது, இவங்கள போல் ஆளுங்கள எல்லாம் பார்த்தா, யாருக்குமே கல்யாணம் நடக்காம, எல்லாம் சாமியாரா, போக வேண்டியது தான் ."



செழியனின் அன்னை கூட, அவரின் தகுதியை பற்றி பெருமை பேசுவாரே தவிர்த்து, இது போல் பேச மாட்டார்.



இந்திரவால் , அமைதியாகவும் இருக்க முடியாமல், இதுக்கு பதில் வேறு கூற வேண்டுமே, என்று, "நான் சொல்ல என்ன இருக்கு அண்ணி , குந்த குடிசை வேணும்னு சொல்லுவாங்க , எங்களுக்கு ஆண்டவன் புண்ணியத்துல, சொந்தமா ஒரு வீடு இருக்கே, அது போதும் , நான் ஏன் இது எல்லாம் பார்த்து அதிசயிக்க போறேன் .



வாடகை வீட்டுக்கு எதுக்கு இவ்வளவு பெருசா ஒரு வீடு பார்த்து இருக்கீங்கன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன், இதுவும் மாப்பிளை தானே பார்க்கணும் , அதான் இவ்வளவு பெரிய வீடு தேவையா," என்று ஒன்னும் தெரியாத அப்பிவியாக முகத்தை வைத்து கொண்டு பாவமாக கேட்டார் .

வீடு சிறியதாக இருந்தாலும், நான் சொந்த வீட்டுல இருக்கேன், உங்களது வாடகை வீடு தான் என்பது போன்று அவர் கொடுத்த பதிலடிக்கு, சுமதி மிகவும் கோவமும் , என்னையே பேசுறாளே, என்று ஆங்காரமும் ஒருங்கே வந்தது .



இந்திரா அத்துடன் பேச்சு முடிந்தது , என்று அமைதியாக மீண்டும் வேடிக்கையில் இறங்கினார் .



விஷாகா, "தேவையா மா உனக்கு இது, நம்ம நேருக்கு நேரா நின்னு பேச அளவுக்கு, இடம் கொடுக்காத , இப்போவே இவங்க பேச்சை அடக்கு

"அப்போ தான் அடங்கி இருப்பாங்க" .



"இந்த இடம் தான்னு ஆயிடுச்சு , இவங்க வாய் பேச்சு எல்லாம் சீர் கேட்குறதுல அடக்கு," என்று அன்னைக்கு, தொடுத்து கொடுத்தாள் , விஷாகா .

அதற்குள், தேவகியும் அதிதியும் இனிப்பு, காரம், மற்றும் தேனீர், என்று கொண்டு வந்து கொடுத்தாலும், இந்திரா, ஏதும் கையில் எடுக்காமல், அமைதியாக இருந்தார் .

"எடுத்துக்கோங்க , எதுவும் உங்களை போல் வீட்டுலயே, செய்ய முடியல, எல்லாம் கடையில வாங்கினது தான் என்ற தேவகியிடம், இருக்கட்டும், எனக்கு, டீ எல்லாம் வேண்டாம் ".



சுகர் இருக்கு , என்று மறுத்து , எதுவும் எடுத்துக்காமல், வேறு பேச்சில் திசை மாற்றினார் .எல்லோரும், ஒரே இடத்தில கூடியதும், வினோத் , ஆரம்பித்தான் .



"அப்பா ," என்ற முறையில் அழைத்து , அவன் மோகன் குடும்பத்தில் ஒன்றி விட்டான் , அவன் அழைப்பு, இனியா வீட்டினருக்கு மகிழ்ச்சி என்றால் , இரண்டு அதிசிய பிறவிக்கும் , வயிற்றெரிச்சல்.



"இங்க எங்க வீட்டுல, எல்லாருக்கும் சம்மதம், நீங்க இனி உங்க முடிவு சொல்லுங்க" .

"எங்களுக்கு சம்மதம் பா, என் பொண்ணு சம்மதம் சொல்லி தான் நாங்க, அடுத்த கட்டத்துக்கு வந்து இருக்கோம் ", என்றதும், அன்புவின் அகத்தில், புன்னகை , மென் சாரல் .



அது முகத்திலும் தெரிய அவரை ஏறிட்டான் .

தேவகி "வேற என்ன, நம்ம பக்கம், நிச்சயமும், அடுத்த நாள் கல்யாணம் வைப்போம், அதற்க்கு முன்பே நல்ல நாள் பார்த்து, புடவை எடுக்கலாம் ."



இடை புகுந்த சுமதி , "பொண்ணுக்கு என்ன போடுவீங்க?"

"உன் தலையில கல்லை போடுவோம்," என்றது இளங்கோவின் மைன்ட் வாய்ஸ் .



என் பெரிய பொண்ணுக்கு , ஐம்பது பவுன்,மாப்பிளைக்கு ஏழு பவுன் நகையும் , சமையல் பாத்திரம், கட்டில்,மர பீரோ,பூஜை பொருட்கள் , அப்பறம், உங்களுக்கே தெரியும் கல்யாணம், பொண்ணு வீட்டு செலவு தான், நாங்களே கல்யாணமும் செய்து வைத்தோம் .



"அதே போல் எந்த குறையும் இல்லாம, என் சின்ன மகளுக்கும், அதே போல செய்துடுவோம் ," என்றார் மோகன்

"அது சரி, ஐம்பது பவுன் எல்லாம் சரி வராது, நாங்களும் சம்மந்தி வீட்டுல என்ன போட்டாங்கனு கேட்டா மதிப்பா, வெளிய சொல்ல வேண்டாம் ." .



"அதுவும் அவன் சொந்தமா தொழில் செய்றான்" .

"எங்க விஷாக்கு நாங்க இதை விட அதிகமா செஞ்சோம், என்ன பண்றது," என்ற ஒரு அங்கலாய்ப்பு வேறு சுமத்தியிடம் .

"சொந்த வீடு இல்லைன்னா சொன்னே ", என்று மனதில் கருவிய சுமதி, பொண்ணுக்கு , ஒரு சொந்தமா இடமும், இருநூறு பவுன் நகையும், பையனுக்குனு, ஒரு காரும் வாங்கி கொடுங்க."



"அப்பறம் கல்யாண செலவு உங்களது , அது நல்ல மண்டபமா பாருங்க, எங்க ஆளுங்களுக்கு நாங்களும் பெருமையா சொல்லணும் இல்லை ."சபாஷ்" என்று விஷாகா, அன்னையை பார்த்தாள் , அதிருப்தியுடன் அன்பு அன்னையை ஏறிட்டான் .



உடனே வினோத்தின் தொடையில் அன்பு ஒரு அழுத்தம் கொடுக்கவே, "இவன் வேற ஒருத்தன் , கோவத்துல என் தொடையில் இருக்க சதையை பிச்சிடுவான்" என்று அன்புவை திட்டி கொண்டே ,



"அத்தை இடம் எல்லாம் எதுக்கு," என்று இடை புகுந்தான் வினோத்.

"வேற எதுக்கு, அவங்க அந்த இடத்துல தான் சமாதி ஆக போறாங்க ," என்று நினைத்தான் இளங்கோ .



அவனுக்கும் ஒரு வித சலிப்பு, கல்யாணம் செய்து கொடுக்குறதுக்குள்ள, பொண்ணை பெத்தவங்க இப்படி ஓய்ந்து போறாங்களே,என்று பெற்றவர்களின் மீது ஒரு தவிப்பு .



அன்பு அவன் கோவத்தை கட்டு படுத்தி நிற்பது, செழியன் கண்டு கொண்டான் .

அவன் தோளில் அழுத்தம் கொடுத்து, அவன் அருகில் அமைதியாக, பேச்சு கொடுத்தான் .

"அமைதியா இரு டா, வினோத் என்ன பேசுறாருனு பார்ப்போம்" .

"இப்படி கேட்டு அம்மா, என்ன அசிங்க படுத்துறாங்கனு கூட தெரியாதா அண்ணா," என்று அன்பு .



அதற்குள் "அவ்வளவு வசதி எல்லாம் நாங்க இல்லை மா , எனக்கு இரண்டு பொண்ணுங்க, பெரியவளுக்கு என்ன செய்தோமோ, அதே தான் சின்னவளுக்கும் நாங்க செய்ய முடியும், இரண்டு பேரையும், இந்த வயித்தில தான் பெத்தேன்,இரண்டையும் என்னால பிரிச்சி பார்க்க முடியாது , என் இரண்டு பொண்ணுங்களை என்னால ஒரே மாதிரி தான் பார்க்க முடியும்,"என்று இந்திரா கூறியதற்கு, அதிதி, அன்பு பார்த்த பார்வையில் சுமதி, தலை குனிந்தார் .



"நீங்க, வேற இடம் பார்த்துக்கங்க மா, சரி பட்டு வராது நினைக்கிறன், நீங்க உங்க வசதிக்கு பாருங்க," என்று கை கூப்பி, மோகன் உடன் இந்திராவும் எழுந்து கொண்டார் .

இதற்க்கு மேல் அமைதி வேலைக்காகாது என்று அன்பு , முடிவெடுத்தான் .


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top