அன்பின் இனியா 6

Advertisement

achuma

Well-Known Member
hai friends,adutha update
padichittu comment
sollunga
please all
be safe
take care:)(y)

அன்பின் இனியா 6

அன்பு அக்கா வரவில்லை என்றாலும் பரவாயில்லை, என்றைக்கு சொன்னானோ, அன்று இரவே , விஷாகாவால் சுமதியிடம் பஞ்சாயத்து சென்றது ..

அவரும் மகன் வீட்டுக்கு வந்ததும், அவனை வாசலிலே வழி மறித்து, அவனிடம் சண்டைக்கு நின்றார் ..

"எவ்வளவு வேலை இருந்தாலும், அக்கா வீட்டுல ஒரு விசேஷம்னா, நான் அது எல்லாம் விட்டுட்டு ஓடி வந்து இருக்கேன், ஆனா எனக்கு அக்காவா , முன்ன நின்னு , கல்யாணம் செய்யணும், அவங்களுக்கு ஒரு எண்ணமே இல்லை."
"வேலை இருக்காம், எல்லாருக்கும் தான் இருக்கு ,"

"தம்பி கல்யாணம் விட அவங்க வறட்டு பிடிவாதம் தான் முக்கியம்,"
"என்னை எதுக்காவது இனி கூப்பிட்டு பாருங்க , நானும் வேலை இருக்குனு, அப்படியே இருந்துட்டு போறேன்".
சுமதிக்கு உடனே பயம் .
"உறவு முக்கியம்னு தான் மா , நான் எல்லாரையும் இழுத்து நிறுத்துறேன் , என்னை விடுங்க, புது வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் முடிய போகுது ."

"நீங்க எங்க இருக்கீங்க, எப்படினு ஒரு வார்த்தையாவது கேட்டாங்களா?"
இதற்கு சுமதியால் என்ன பதில் கூற முடியும், அன்பு தன்னை மதிக்கவில்லை, தான் வேண்டாதவளா கிட்டேன், என்று அன்னையிடம், தொலைபேசியில் குதித்து விட்டு தொடர்பை துண்டித்து விட்டாள், விஷாகா
வேறு எந்த நல விசாரிப்புகளும் இல்லை .

மகளை விட்டு கொடுக்க முடியுமா, "அக்காக்கு மனசு இல்லாம இருக்கும் மா பா, உன் மேல தானே தப்பு, சண்டை போட்டு கூட்டிட்டு வந்துட்டே , சரி சரி இப்படியெல்லாம் அக்கா கிட்ட பட்டுனு பேசாதா , பொறந்த வீட்டுல, நமக்கு பாசம் இல்லைன்னு மனசு வெம்ப போறா, நான் அவளை வர வைக்கிறேன்," என்று பெரிய மனது செய்து, மகனை அதற்கு பிறகே உள்ளே நுழைய அனுமதித்தார் .

தான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லை, எப்படி சமாளிக்கிறாங்க, என்று மனதில் நினைத்து, அவன் அறைக்குள் புகுந்து கொண்டான் .
மகளுக்கு உடனே, அழைத்து, "இந்த இனியா பேச்சு எடுத்ததுல இருந்து, பட்டு பட்டுனு பேசுறான் .

இங்க பாரு இப்போ நீ வரலானா , நமக்கு தான் அசிங்கம்".
"கண்டிப்பா அவன் அத்தைக்கு(சந்திரா ) சொல்லி இருப்பான் .
"உனக்கு இருக்க வேண்டிய மரியாதை எல்லாம் , ஏன் யாருக்கோ தூக்கி கொடுக்கணும் .

எனக்கு நீ இப்போ வரலைனா, உங்களுக்கு ஏதாவது தேவைன்னா கூட, என்னை கூப்பிடாதீங்கன்னு, பேசுறான், என்ன மா மிரட்டுறானா," விஷாவுக்கு கோவம் ..

"இல்லை விஷா , நீயே யோசிச்சு பாரு, அவன் உனக்கு காலத்துக்கு செய்ய கடமை இருக்கு , கூட பிறந்தவன் அவன் ஒருத்தன் தான்"
"உங்க அப்பா கஷ்ட பட்டு படிக்க வெச்சி இந்த அளவுக்கு ஆள் ஆக்கி இருக்காரு, நடுவுல நீ எதுவும் கலந்துக்காம அப்படியே ஒதுங்கிட்ட , வரவளுக்கு தான் அது வசதியா போய்டும் ".

"எங்க இருந்தோ வர மகராசி எல்லாம் அனுபவிப்பா ,இனோருத்தி வந்து இந்த வீட்டுல கூத்தடிக்க, நான் என் பொண்ணு உறவு அத்துட்டு நிக்கணுமா" விஷகாவும் அன்னை கூறிய கோணத்தில் சிந்திதாள் .

"இப்போவே இப்படி இருக்கான் , நம்ம ஒதுங்கிட்டா , சுத்தமா பயம் போய்டும்" .
உனக்கான மரியாதை, எப்பவும் இங்க இருக்கணுமா, அதுனால, நீ முன்ன நின்னு நடத்துறது தான் நல்லது.
அம்மகாக வா மா".
விஷாகா சம்மதம், என்று கூறியதும் தான் சுமதிக்கு அப்பாடா என்று இருந்தது .

எப்படியோ, ஒரு வழியாக மகளை சமாளித்து அழைத்தாகிற்று .
இனியா வீட்டிற்கு கிளம்பும் நேரம், அன்பு இல்லத்தில் விஷாகா, செழியன் மற்றும் தேவகி, வந்திருந்தனர்.
விஷாகா, சாதாரணமாக, இராஜகோபால் , "அவள் பெயரில் வீடு மாற்றி விட்டார், தனக்கே இப்பொழுது தான் தெரியும், அன்புவும், தனக்கு என்று கொடுத்து விட்டு, வேறு வீட்டில் இருப்பதாக," பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைத்தாள்.

வினோத்துக்கு என்ன இது, என்று தான் , தேவகி, "இப்படி வாழுற வீட்டை கூட,மகளுக்கு எழுதணும் அப்படி என்ன அண்ணனுக்கு ," என்று சிந்தனை ,
அவர் சும்மா இல்லாமல், அன்பு வீட்டுக்கு வந்ததும், அதை கேட்கவும் செய்தார் .
அக்கா பேருல எழுதி இருந்தாலும், நீ வரணும்னு அவசியம் இல்லையே அன்பு, இப்போ கூட ஒன்னும் கேட்டு போய்டலா..
அதான் அவளுக்கு எல்லாம் தேவைக்கு மேலயே செஞ்சிட்டிங்க , எங்களுக்கும் ஏக பட்டது இருக்கு ,அண்ணா எழுதி கொடுத்தார்னு, நீ வேர வீட்டுக்கு வந்து தங்குற ..

"நாளைக்கே உன் பேருல எழுதிக்கோயேன் , இதுல என்ன இருக்கு," என்று மகன் மருமகள் முகம் பார்த்தார் ..
வினோத்தும், "அம்மா சொல்றது சரி, மாமா , இப்படி எல்லாமே விஷகாக்கு, எழுதுவார்னு நான் நினைக்கில , நீ எடுத்துக்கோ மச்சான் , அந்த வீட்டை" .
அன்பு அக்காவை ஒரு முறை பார்த்து, பிறகு, தேவகியின் பக்கம் திரும்பி, அத்தை , ஒன்ஸ் கொடுத்தாச்சு, அதோட அந்த விஷயம் முடிஞ்சி போச்சு ..
எனக்கு அதுல விருப்பம் இல்லை.

அடுத்த வேலைய பார்க்கலாம், என்று வினோத்தயும் தேவகியின் வருத்தம் கண்டு அவர்களை தேற்றினான்.
கிளம்பலாமா, என்றதுக்கு , சந்திரா அத்தை வீட்டுக்கு போயிட்டு அப்படியே அவங்களையும் அழைச்சிட்டு போகலாம்.

"டேய், சந்திரா வரேன்னு சொன்னாளா, சிறு பிள்ளை போல், தேவகிக்கு தங்கையின் வரவை நினைத்து ஆவல்."
அன்புக்கு அத்தாயின் மகிழ்ச்சி கண்டு, இந்த வயதிலும் அவர்களின் பாசத்தை நினைத்து வியக்காமல் இல்லை .
இந்த அந்தஸ்து , பணம், இதெல்லாம் ஒரு உறவுகளை எப்படி எல்லாம் பிரிக்குது, சம அந்தஸ்த்து இல்லைனு, சொல்லி சொல்லியே நாதன் மாமா சகோதரிகளை பிரிச்சி வெச்சி இருக்காரே .
இழந்த காலம் மீண்டும் திரும்புமா .

இப்படியும் சில மக்கள், என்று நினைத்த அன்பு," சரண் கிட்ட கெஞ்சி ஒரு வழியா, ஓகே சொன்னான்"
"பார்த்தியா மா, என்னை நோகடிச்சது, அவனுக்கு தப்பா தெரியல, சரண் கிட்ட அந்த மூதேவிக்காக கெஞ்சிட்டு நின்னிருக்கான்," அன்னையிடம் கிசுகிசுத்தாள் விஷாகா .

இதை கேட்டவாறே , அங்கு வந்த அதிதியை கண்டதும் நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்த, விஷாகா, "எது போட்டாலும் குச்சிக்கு துணி சுத்துன கணக்கு தான் நீ" .
"ஒரு புடவை கட்டிட்டு வந்தாலும், பொண்ணு மாதிரியாவது தெரியும், சல்வார் போட்டுட்டு வந்து இருக்க," என்று தங்கையின் ஒல்லியான தேகத்தை கிண்டல் செய்தாள் ..

அதிதி, பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும் , சரியான உணவு கவனிப்பு இல்லாததால், மிகவும் ஒல்லியாக இருப்பாள்..
அன்பு தான் தங்கைக்கு சிறு வயது முதல் அதற்கான வைட்டமின் மருந்து, என்று டாக்டர் கூறியவைகள் எல்லாம் வாங்கி அவளை பார்த்துக்கொள்கிறான் ..

பெற்ற அன்னை அதற்க்கு எதுவும் கூறாமல் இருப்பது தான் கொடுமை ..
"என் அக்கா எவ்வளவ்வு அழகு, இந்த முப்பத்தி மூன்று வயதில் , ஸ்லிம் பிட் என்று சொல்வது போல், உயரம், அழகு, அழகிய நிறத்துக்கு ஏற்ற பட்டு புடவை , கழுத்தில் வைர ஹாரம் , ஒரு கையில் வைர வளையல், , மற்றொரு கையில் போன், என்று பார்க்க கம்பீரமாக காட்சி அளிக்கும் அக்காவை, அவளுக்கு பாராட்ட தோணும் .

அவளின் அக்கா என்று அவள் தோழிகளிடம் அறிமுகம் செய்து பெருமை பட வேண்டும் என்று நினைப்பாள் .
ஆனால் தங்கையின் மீதான அக்காவின் உதாசீனம், இருவருக்கும் சுமுகுமான ஒரு உறவு இல்லாமல் போயிற்று .
அதிதி வருந்தினாலும், அண்ணன் தன் வருத்தத்தை கண்டால் , தாங்க மாட்டார் , என்று நினைத்து, ஒரு புன்னகையுடன் கடந்து விட்டாள்
அது கூட, விசாகாக்கு, தன்னை அவமதிப்பதாகவே இருந்தது .

ஒரு வழியாக சந்திரா இருக்கு தெரு பக்கம் சென்று, அவரையும் அழைத்து கொண்டு, அன்புவை தவிர அனைவரும் காரில் சென்றனர்
அன்பு அவன் பைக்கில் சென்றான்.
வினோத், அவன் கார் கொண்டு வருமாறு கூறியதற்கு கூட மறுத்து, அவன் டிராவெல்ஸின், வண்டியிலேயே அனைவரையும் புறப்பட செய்தான் .


அவர்களை பின் தொடர்ந்து பாதி தூரம் செல்லும் நேரம், டிராவெல்ஸில், இருந்து முக்கிய அழைப்பு .

அன்பு வினோத்துக்கு அழைத்து, பஸ் ஓனர் வந்து இருப்பதாக கூறினான் .
"டேய், சரி சீக்கிரம் வர, முயற்சி பண்ணு ," வினோத்
" மாமா நீங்க அங்க இருங்க, நான் நடுவுல வந்து ஜாயின் பன்னிக்கிறேன் .
சரி டா, வா வா , என்று அன்புவை தவிர்த்து, அனைவரும் சென்றனர் .

"ஏ எஸ்" டிராவில்ஸ், என்ற பெயர் பலகை தாங்கிய , அவனின் ராஜ்யத்தினுள் நுழைந்தான் .
அவனின் இந்த ஏழு வருட உழைப்புக்கான அடையாளம் .
உள்ளே வந்ததும், அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு, தனது வெற்றி என்று எப்பொழுதும் பெருமையாக நினைப்பான் .

நாற்பது கார்கள், லோக்கல் ட்ரிப்புகளும், பத்து மினி பஸ், மற்றும் இரண்டு பஸ், டூர் மற்றும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு என்று அவன் கம்பெனியில் உள்ளது .
வட மாநிலம் வரைக்கும் டூர் ட்ரிப் என்பதால், நிறையவே லாபம் , அதில் .
தினமும் கார் ட்ரிப்புகளிலும், அவனின் வருவாய் அதிகம் .
வண்டி ஓட்டுபவர்கள் போக, மேனேஜர், கிளீனர்ஸ், மற்றும் அட்மின் என்று அவன் கம்பெனியில் உழைப்பவர்கள் சுமார், எழுபது பேருக்கு வேலை செய்கிறார்கள்.

இன்னும் பிசினஸ் கூடியதால், அதிலும் திருமணத்துக்கு என்று நிறைய மக்கள், பஸ் போன்று கேட்பதால், பல நாட்களாக, மேலும் இரண்டு பஸ் வாங்கி விடலாம் என்று ஒரு சிந்தனை .
அதன் முயற்சியில் ஒரு நாள் பஸ் விற்கும் பார்ட்டியும் கிடைத்து , கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் தான், அவனுக்கு வீடும் சொந்தம் இல்லை என்று தெரிய வந்து, அப்படியே அமர்ந்து விட்டான் .

இப்பொழுது, அவன் பார்ட்டியிடம் , இப்பொழுது, எதுவும் வாங்கும் எண்ணம் இல்லை, என்று தொலைபேசியில் கூறியதற்கு, அவர், அவனை நேரடியாகவே சந்திக்க வந்து விட்டார் .
அன்பு உள்ளே வந்து அவன் சீட்டில், அமர்ந்ததும் , "அண்ணா எப்போவும் ராஜா தான்," என்று பெருமை பட்டு கொண்டே, அவனை பார்த்து சிரித்தான், அங்கு கிளீனிங் வேலையில் இருக்கும், பையன், அருண் .

"இன்னைக்கு கூடவா இந்த வெள்ளை சட்டையை விடமாட்ட ணா நீ," என்று அருண் .
வெள்ளை சட்டை தான் , ஒரு கம்பீரம் என்றொரு நினைப்பு, அன்புவுக்கு .
அவன் தாத்தா தந்தை, மாமா என்று அவர்களை பார்த்து வளர்ந்தது, அவனும் எப்பொழுதும் வெள்ளை சட்டையே அணிவான் .
அவனுக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்து, முரளிதரனிடம், (பஸ் விற்க வந்தவர்),

"வணக்கம் சார், காக்க வெச்சிட்டேன் ".
"இல்லை தம்பி , நான் தான் தகவல் கொடுக்காம வந்துட்டேன், இந்த பக்கம் ஒரு வேலை, அதான் நேர்லயே பார்த்துட்டு போகலாம்னு ",என்று அவர் .
அவனுக்கு தெரியாதா , அவர் இவனை காண தான் வந்து இருக்கிறார், தான் இல்லை என்பதால், இது போல் கூறுகிறர், என்று தெரிந்து கொண்டு, அதற்கும் புன்னகை .

அவரே முதலில் கூறட்டும் என்று .
"கிட்ட தட்ட இரண்டு மாசமா, நம்ம ஒரு முடிவுக்கு வந்து, எல்லாம் முடிக்கிற நேரத்துல வேண்டாம்னு சொல்லிடீங்களே தம்பி",

"முன்னயும், இரண்டு பஸ் என்கிட்டே தான் வாங்குனீங்க, இப்போ வேண்டாம் சொல்றீங்களே," அவருக்கு வேர் யாரிடமேனும் , வாங்கிவிடுவானோ என்ற பயம் .
"சார், நான் இப்போதைக்கு வாங்குற யோசனையே இல்லை, எனக்கு தேவைன்னா அப்போ நான் முதல உங்களிடம் தான் வருவேன்," என்ற நம்பிக்கையும் கொடுத்தான் தான் .

"நான் , உங்களை நம்பி வந்த பார்ட்டிய, வேற விட்டுட்டேன்" .
அன்புவுக்கு, இதற்கு என்ன பதில் கூறுவது, தொழிலில் தன் மீது இருக்கும் நம்பிக்கையில் தான், வந்த மற்ற ஆட்களை இவர் ஒதுக்கியது .
அதுவே அவனுக்கு ஒரு இன்னுமொரு வேதனை .

"நான் எங்கயாவது பார்க்கிறேன், சார் , இப்போ என்னால இதுல இறங்க முடியாது, ப்ளீஸ் , என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு தகவல் கிடைத்ததும் உங்களுக்கு சொல்லுறேன்," என்று அவரை பேசி அனுப்பி வைத்தான் ..
மேனேஜர், அருணிடம், சைகை செய்து, அவனை கேட்க செய்தார் .

அருண் ஆரம்ப நாட்களில் இருந்து வேலை செய்கிறான் , மேனேஜர் ஒரு இரண்டு வருடமாக தான் இங்கு வேலையில் இருக்கிறார் .
எல்லோரிடமும், இன்முகமாகவே பழகினாலும், அருண் அளவுக்கு ஒரு ஓட்டுதல் இல்லை மற்றவர்களிடம் .

வேலையில் அன்பு மிகவும் கண்டிப்பானவன், கஸ்டமர்களிடம், எந்த கெட்ட பெயரும் வந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனம் ,அதுவே அன்புவின் மீது ஒரு நற்பெயர், கஸ்டமர்களுக்கும் , வேலை செய்பவர்களுக்கும் .
"அருண், என்ன ணா , வாங்கலாம்னு சொல்லிட்டு, இப்போ இப்படி சொல்றீங்க ,"என்று கேட்டான் .
"நிமிர்ந்து நிக்க முடியாம எங்கேயோ சறுக்குது டா" . ஓய்ந்த தோற்றத்தில் அன்பு .
"சார், இன்னும் இரண்டு வாங்கினா வர கஸ்டமர்க்கு , பதில் சொல்ல முடியும் "என்று மேனேஜர்.

"புரியுது, அதுல இப்போ காச போட முடியல" .
"உங்களை மாதிரி பணக்காரங்களுக்கு தான், பங்களா வேணும், பெரிய வண்டி வேணும், இப்படி எல்லாம் கவுரவம் பார்க்க வேண்டியது , இப்போ இந்த வீடும் பெருசா தானே இருக்கு".

"பஸ்ஸுக்கு சொல்லிட்டு, இப்போ அதுல கை வெச்சா , வீடு வாங்க முடியாதுனு சொல்றீங்க," என்று அருண் கேட்டான் .
இவன் கூறுவதும் உண்மை தானே, இன்னும் வேண்டும், வேண்டும் என்று தான் மனது அலைகிறது.

"உனக்கு புரியாது, டா, அருண்"
"நான் தான் எங்க அம்மாவை, அதல பாதாளத்துல வந்து தள்ளிட்ட மாதிரி, வாடகை வீட்டுக்கு வநத இந்த இரண்டு நாளும் பேசிட்டாங்க" .

"நீ சொன்னது ஒரு வகையில சரி தான் டா" .
"இருக்குறவங்களுக்கு தான் மேலும் மேலும் தேவை படுது" .
"ஒருத்தன் முன்னேறது பெரிய விஷயமில்லை, அவன் அதுல இருந்து இறங்காம இருக்கணும் , அந்த வளர்ச்சிய தக்க வெச்சிக்க, அப்படினு, மேலும் மேலும் சம்பாரிப்பான்" .
"இதுவும் ஒரு போதை தான் ".
"எல்லா பணக்காரர்களும் அப்படி தான் போல , எங்களை பாரு இருக்க இடம், மூணு வேலை சோறு , நாங்க நல்ல தான் இருக்கோம்".

அன்பு, அருணையே பார்த்தான் , "என்ன ணா , சொல்லுங்க," என்றதும்
"பொறந்ததுல இருந்து, வசதியாவே இருந்துட்டு, இப்போ இப்படி வாடகை வீட்டுல இருக்க, அம்மா கௌரவ கொறச்சலா நினைக்கிறாங்க டா" .
"இது முடிஞ்சதும், அடுத்த இரண்டு வருஷத்துல தங்கச்சி கல்யாணம் செய்யணும் , என்னால தொழிலுக்குனு பணம் புரட்ட முடியாது , அதான் இருக்கிறதா கவனிக்கலாம் ."

அருணுக்கு ஓரளவுக்கு தெரியும் அன்பு குடும்பத்தை பற்றி, முதலில் இருந்தே வேலையில் இருக்கிறான் .
அன்புவை நினைத்தும் வியக்காமல், இருக்க முடியவில்லை, அடுத்தடுத்த, என்று எங்கும் நிற்காமல், முன்னேறிவிட்டான்

"என்ன டா, என்னையே பார்க்கிற , விடு பார்த்துக்கலாம்" என்றான் .
"இது ஒன்னு தான் ணா , உன்கிட்ட".
"எவ்வளவு பிரச்னை இருந்தாலும் விடு பார்த்துக்கலாம்னு, நீ சொல்ற பார்த்தியா.
நீ எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குவ , ரொம்ப நல்லவன், உன்ன எவ்வளவு வேணும்னாலும் அடிக்கலாம்," என்றதில், அங்கு மேனேஜர், அன்புவும் , சிரித்துவிட்டனர் .

இங்கு இனியாவின் இல்லத்தில்,

"டேய் இளங்கோ, என்ன டா இது சேர்க்கு, அலங்காரம் பண்ணி வெச்சி இருக்க, ஆனா நல்ல இருக்கு டா, சாடின் துணி வெச்சி தலைகாணி கவர் பன்னியா ,"என்று கேள்வி கேட்ட படியே இலக்கியா வீட்டினுள் வந்து சேர்ந்தாள் ..

"அக்கா இந்த சேர் உனக்கு தெரியல, நம்ம தாத்தா சேர் தான் ."
" மாமா பார்க்க வரும் போது இதுல தானே உட்கார்ந்தாரு , சரி ராசியான சேருன்னு ,சின்ன மாமாக்கும் இதையே ரெடி பன்னிட்டேன் ." அக்காவல் கண்டு பிடிக்க முடியவில்லையே என்று பெருமை வேறு .

"ஆனா பழைசா இருந்துச்சு, அதான் அது மேல தலைகாணி போட்டு கவர் பன்னிட்டேன் ".
இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டே , வந்து சேர்ந்த இந்திரா, மற்றும் அத்தை, சகுந்தலா , அவர்களை வரவேற்று, செழியனை , உபசரித்து , பிறகு இனியா இருந்த அறைக்குள் இலக்கியாவை அழைத்து சென்றனர்.
இனியா, அக்காவை கண்டதும் கண்ணில் ஒரு மின்னல் .

"ரெடி ஆகிட்டியா, இந்த டிரஸ் உனக்கு நல்ல இருக்குது, நீ இரு நான் அம்மாக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணிட்டு வரேன்," என்று கூறியதும், அவளை தடுத்து, "இங்க நீ இரு, உனக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தா , இப்போ தான் முகம் தெளிவா இருக்கு உன் தங்கச்சிக்கு," என்று சாதாரணமாக பேசி விட்டு, செல்லும் அத்தையை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள், இனியா .

"இவங்க எப்படி கா ஒவ்வொரு நேரம் ஒரு ஒரு மாதிரி இருக்காங்க , போன வாரம் இது பண்ண குழப்பத்துல, எனக்கு கல்யாணம் வரைக்கும் வந்து நிக்கிது, ஆனா காலையில இருந்து, அம்மா கூட சேர்ந்து எல்லாம் வேலையும் ஒண்ணுமே சொல்லாத மாதிரி செஞ்சிட்டு இருக்கு ."
சொந்தங்கள் எல்லாம் அப்படி தான் மா , அந்த நேர கோவத்தை வெளி படுத்திடுவாங்க, பக்கத்துலயே அம்மா வீடுன்னு, இங்க அவங்க அம்மாவே கூட இருக்கிற ஒரு உணர்வு அவங்களுக்கு . அதுனால தான், நம்ம காயத்திரி அங்க சமையல் செய்தாலும், அம்மா வீட்டுல வந்து அவங்களுக்கு தேவையானது வாங்கிட்டு போறாங்க ".
"ஏதோ அவங்க அம்மாவே இருந்து செய்து கொடுத்ததா, ஒரு பீல்" .

"அந்த காலத்து ஆளு , எதுவும் மறைக்க தெரியாது , ஆனா அதே நேரத்துல தம்பி குடும்பத்துல பாசம் இல்லாம இல்லை ."
"பாசத்துல, நம்ம அத்தைங்களையும், நம்ம அப்பாவையும் மிஞ்ச முடியாது" .

"என்ன விடு, நம்ம அம்மா கிட்ட இவங்களை பற்றி கேட்டு பாரேன் , ஏதாவது சண்டை போட்டுக்கிட்டாலும், அவங்க இல்லாம நம்ம அம்மாக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்குனு சொல்லுவாங்க" .

இவ்வாறு இருவரும் பேசி கொண்டிருக்கும் போது ,அத்தை, ஒரு தட்டில் உணவு பிசைந்து கொண்டு வந்து, இலக்கியாவுக்கு ஊட்டி விட்டார் .

"அத்த , என்ற ஆச்சர்யத்தில் இலக்கியா, இங்க ஒரு இடம் காலியா இருக்குனு என் தம்பி சொன்னதால, இந்த பக்கம் வீடு வாங்கிட்டு வந்தோம் , அதுக்கு முன்னாடி, மாமியார் கூட ஒண்ணா தானே இருந்தோம்."
"இதுக்கு எங்க அப்பன் தான் காரணமா என்று, அந்த ஆளுக்கு அறிவே இல்லை" வேர் யார் நினைப்பது , இளங்கோவே.

"ஒரு, விசேஷம் , நாலு கிழமைனு, அம்மா வீட்டுக்கு வரணும்னா, காலையில இருந்து, ஒரு வேலை மிஞ்சாமா, ஏன் நாளைக்கும் சேர்த்து செய்ற மாதிரி வேலை இருக்கும் .அது எல்லாம் முடிச்சிட்டு, பெத்தவங்க வீட்டுக்கு போயிட்டு வரட்டுமானு அவங்க கிட்ட கேட்போம் பாரு, அது ஒரு பெரிய கொடுமை" .

நீ சரியா சாப்பிட்டு இருக்க மாட்டே , வெளிய கிளம்புற வரைக்கும் உனக்கு வேலை சரியா இருந்து இருக்கும்,இந்திரா, உன்னை பார்த்ததும் சோர்ந்து இருக்கானு வருத்த பட்டா , நான் சாப்பாடு கொடுக்குறேனு வந்தேன்," என்று ஊட்டி கொண்டிருந்தார் , அந்த அத்தை .
அவர் வழில ஜூஸ் வாங்கி கொடுத்தார் அத்தை.

அவரையே பார்த்து கொண்டிருந்த இனியாவின் வாயில் ஒரு கவளம் கொடுக்கும் போது , உதட்டை அழுந்த மூடி கொண்டாள் ..
அதில் அழுத்தமாக, ஒரு வாய் உணவு ஊட்டியே விட்டார் ..
இவர்களின் அட்டகாசத்தால், இலக்கியா சிரிக்கவே, "ஒரு வராமா , என் மேல உன் தங்கச்சி, முறிக்கிட்டு இருக்கா , கல்யாணம் ஆகி போனதும், என் கூட இவ பார்க்கணும்னு நினச்சா தான் பார்த்து பேச முடியுமா," என்று கண்ணீர் சிந்தியதும், ஒரு பக்கம் இளங்கோ , மற்றும் இனியாவும் ,

"ஆழாக்கு விடு, விடு நமக்குள்ள என்ன ," என்று கட்டி கொண்டானர் ..
வினோத்துடன், அன்பு வீட்டினர் வந்ததும் இனியாவை விட்டு அனைவரும் வாசல் வரை சென்று வரவேற்றனர் .
அன்பு சிறிது நேரத்தில் வந்து விடுவான், என்று வினோத்தும் கூறி வீட்டினுள் நுழைந்தான் .

"வத்தி பெட்டி மாதிரி சின்ன சின்னதா ரூம் வெச்சு ஒரு வீடு, இங்க எல்லாம் வர வெச்சிட்டான் பாரு உன் புள்ளை," என்று விஷாகா அன்னையிடம் சிடு சிடுத்தாள்.
மோகன் அனைவரையும் வரவேற்று அமர சொன்னார் .

வினோத்தை பார்த்தால், ஏதோ பல நாள் பழகியது போன்று, அனைவரிடமும் சிரித்து பேசிக்கொண்டிருந்தான் மாமியாரும், சின்ன மாமியாரும், ஏதோ சிறு பிள்ளைகள் போல் கையை பிரித்தால், தொலைந்து விடுவது போல் , கை கோர்த்து ஜோடியாகவே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் ..

சுமதியும் திடீர் என்று, அவர் அன்னை வீட்டு சொந்தமாகிய செழியனை கண்டதும், குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார் .
அதிதியும் வீட்டையே சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் .

அந்த கடுப்பில் யாரின் அருகிலும் அமராமல் , அங்கு இருந்த சேரில் சென்று அமர்ந்தாள், விஷாகா .

அமர சென்றது மட்டுமே தெரியும், "அம்மா " என்ற அலறலுடன் சேரில் இருந்து வழுக்கி தரையில் கிடந்தாள் விஷாகா .
 

Saroja

Well-Known Member
சத்தியமா சிரிக்காத இருக்க
முடியல
விஷாகா
அவ இதுக்கே இந்த இடமெ
வேண்டாம்னு சொல்லப் போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top