அன்பின் இனியா 2o 4

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்களும் கருத்துக்களும் பகிர்ந்து கொண்ட என் பிரெண்ட்ஸ் அனைவர்க்கும் எனது நன்றி.
இந்த பதிவினையும் படித்து விட்டு, உங்களின் நிறை குறைகளை, என்னிடம் பகிருங்கள்.


All take ccare friends
:)


மனதில் வெறுமை சூழ, இனியா வீட்டிற்கு சென்று விட்டாள் .
கால்களுக்கு பயிற்சி கொடுத்தது போன்று, அவள் கால்கள் நேராக நின்ற இடம், அவளின் புகுந்த வீடு.
ஹ்ம்ம், இந்த இடம் தான் தனக்கு உரியது என்று, தனது உடலும் மனமும், இங்கு வந்து நிற்கிறதா, என்ற கேள்வி.
அவளுக்கு அந்த வீட்டிற்குள் வரவும் பிடிக்க வில்லை.


தேவகி எவ்வளவு அழைத்தும், இனியா செவிகளில் ஏதும் ஏற்க மறுத்து, அங்கிருந்து புறப்பட்டு விட்டாள் .
அன்புவிற்கு, தன்னை பார்த்த மனைவியின் வெறுமையான பார்வையே, அவனை கொன்று கூறு போட்டது.


திருமணம் நடந்த இத்தனை நாட்களில், அவளின் கண்களில், தன் மீதான, காதல், ஆர்வம், ஏக்கம், என்று எத்தனையோ, மொழிகள் பேசிய அவன் மனைவியின் கண்களில், இன்று ஒரு வெறுமை , அதிலும் தன்னை பார்த்த ஒரு வெறுமையான பார்வை, அவனால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

ஆகையால், இப்பொழுது தான் எது பேசினாலும், தன்னிலை எடுத்து விளக்கினாலும் அதனை மனதில் ஏற்கும் நிலையில் மனைவி இல்லை, என்று அவன் அங்கு அவளை தடுக்கவும் இல்லை.
அவன் அன்னையை , மற்றும் அதிதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான் .



தேவகியும் வினோத்தும், எவ்வளவோ எடுத்து கூறியும் உணவு ஏற்க மறுத்து, அவன் அன்னை மற்றும் தங்கையுடன், வீட்டிற்கு சென்றான் .
அதிதிக்கு நடந்தது, தெரியவில்லை, என்றாலும், ஏதோ பிரச்சனை என்ற அளவு புரிந்து, அதிலும் தேவகியின் கலங்கிய முகம், கண்டு, அத்தையிடம் ஒரு தலையசைப்புடன், வந்து சேர்ந்தாள் வீட்டிற்கு.



அவளின் அறையில், இனியா படுத்து கிடந்தாள் .
"அண்ணி, ஏன் உங்க முகம், ஒரு மாதிரி இருக்கு, இங்க படுத்து இருக்கீங்க," என்று அதிதி கேட்டதற்கு," அதி மா, இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ, நான் நாளைக்கு எங்க வீட்டிற்கு போய்டுவேன், வேற எதுவும் கேட்காத, இந்த நேரம் என் வீட்டுக்கு போய் சேர்ந்தா, எங்க வீட்டுல பயபடுவாங்க," என்று மட்டும் உரைத்து விட்டு திரும்பி படுத்து விட்டாள் .



அவளின் கூற்றில், அதிதிக்கு, அதிர்ச்சி என்றாலும், இப்பொழுது, எதுவும் கேட்டு மேலும் அவளை துன்புறுத்த வேண்டாம், என்று, அதிதி, அவளின் அருகில் படுத்து விட்டாள் .
ஆனாலும், மனதில், "இறைவா, என் அண்ணியின் பிரெச்சனையை சரி செய்து கொடு கடவுளே" என்ற வேண்டுதல் மனதினில் , எல்லாம் வல்ல இறைவனினிடம் வேண்டி கொண்டு, உறங்கினாள்.



தங்களின் அறையில் இன்றி தங்கையின் அறையில் இனியா படுக்க சென்றதில், அவள் எந்த அளவிற்கு தன் மீது, வெறுப்பில் இருக்கிறாள் என்று உண்மை உரைக்க, மனம் துடிக்க தான் செய்தது அவனுக்கு .
இதுவரை, கணவனை பற்றி எல்லாம் தெரியும் என்று இருந்த மாய வலை, இன்று அறுந்து விழுந்ததாக ஒரு எண்ணம்.


ரேஷ்மியை பற்றி, இதுவரை, யாரும் அவளிடம் கூறி இருக்கவில்லை.
ஊருக்கு சென்று வரும் வரை, நன்றாக இருந்த கணவன் இப்பொழுது, கேட்டதற்கும், அவள் கண்களை பார்த்து பேச தவிர்த்து, வேறு எதுதேதோ, பேசுவதில் அவன் எதையோ மறைகிறான் என்ற அளவில் புரிந்து கொண்டாள் .


தானாக, அவனே கூறட்டும் என்று அவளும் அப்பேச்சை அத்துடன் முடித்து கொண்டாள் தான்.
ஆனால் , காலையில் இருந்து, விஷாகா, இனியாவை சீண்டி கொள்வதும், சுமதி அறிவில்லாமல், மகளின் இழுப்பிற்கு ஆடி கொண்டிருப்பதும், அவளை பொறுமை இழக்க செய்தது.


இறுதியில், அவனுக்காக விஷாகாவிடமும் அவள் அன்னையிடமும் சண்டையிட்டால், அவளையே கை நீட்டி அடித்ததும், அவளின் கோவம் சென்று, மனம் வெறுப்பில் தான் சூழ்ந்து கொண்டது.
தான் தான் எல்லாமும் என்று கூறிய கணவன் சிறிது நேரத்தில் மாறியது என்ன என்று அவளின் கணிப்புக்கு, அப்பாற்பட்டவனாக கணவன் இருக்கிறான் என்று குழப்பத்தில் சிக்கி தவித்தது, மனைவியின் மனம் .
தனக்குள்ளேயே பேசி கொண்டிருந்தாள் .

அவள் எங்கு தவறு செய்தால், தான் மீது எங்கு, எந்த இடத்தில தவறு நேர்ந்தது, என்று அந்த சிந்தனையே, அவள் மனம் முழுதும்.
"விஷாகாவிடம் என்ன சண்டையிட்டேன், அவள் தானே, இவளை வம்பிற்கு அழைத்தது, அதில் அக்காவின் மீது தவறில்லையா ".
"என்ன பேசிவிட்டேன், சுமதியிடம் கை நீட்டி பேசியது தவறு, ஆம் தவறு தான், வயதில் பெரியவர் என்ற அளவில் மட்டுமே தவறே தவிர, அவரிடம் சண்டையிட்டதில் எந்த வகையிலும் தவறில்லை".


"ரேஷ்மி ஒரு வித தவிப்புடன், அன்புவின் மீது செலுத்தும் பார்வை, இதில் தான் ஏதேனும் தவிர இழைத்தோமா, அவளின் இடத்திற்கு தான் வந்து விட்டேனா," இது போன்றும் பல கேள்விகள், காலையில் இருந்து இனியா அவள் என்ன எல்லாம் செய்தாள், எதற்கு அவளுக்கு இந்த நிலை, இந்த அவமானம், என்று அவளின் மனதுடன் அவளே கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் .


கண்களின் கண்ணீர் நிற்காமல், வாய் ஓயாமல், பேசி கொண்டிருந்தாள் .
"நீ எந்த தப்பு செய்தே இனியா, நீ இது வரைக்கும், யார் மனதையும் கஷ்ட படுத்தியது இல்லையே, உன் மேல என்ன தப்பு, எதுக்கு, அடுத்தவங்க எல்லாம், உன்னை சீண்டி பார்க்கிறாங்க, யாரால இந்த அவமானம்," "உனக்கு தாலி கட்டின உறவால், கிடைத்த, புது சொந்தங்கள், இவங்க எல்லாம், வீட்டுக்கு மருமகளா வந்துட்டா, என்ன வேணும்னா, பேசுவார்களா, அப்போ, இந்த புருஷனால தான் இந்த அவமானம் இல்லையா"
"அப்போ, இவர் கையை பிடிச்சி, இவரே வாழ்க்கைனு, நம்பி வந்த புருஷனே, என்னை புரிஞ்சிகளையே, அப்போ, நான் இங்க இருக்குறதுல என்ன அர்த்தம்" .


"எதுக்கு, இங்க இருக்கனும், எதுக்கு, தேவையில்லாம, அவமான படனும்," இப்படி இனியா, வாய் விட்டே, புலம்பி கொண்டிருந்தாள் .
அதிதி, இவை எல்லாம் கேட்டாலும், எழுந்து கொள்ளாமல், அண்ணிக்காக , மனதில் தவித்தாள் .
இன்னும் தான் எழுந்து அவளை தேற்றினாலும், அவள் மனதில் இருக்கும் வேதனை, வெளியே வராமல், இன்னும் மனதிற்குள்ளேயே, உழன்று கொள்ளவாள், என்று அமைதியாக படுத்திருந்தாள் .

ஆனால் இனியாவின் கேள்விக்கு அவள் மனதிடம் இருந்து தான் எந்த பதிலும் இல்லை.
ஒரு கட்டத்தில், காலையில் இருந்து வேலை செய்தது, பசி என்று உறங்கி விட்டாள்.
அண்ணி உறங்கிய பிறகே, அதிதி, இனியாவிற்கு போர்வை போர்த்தி விட்டு, உறங்கினாள் .
அவளுக்கு "இனியும் விஷாகாவிற்கு அடங்கி இருப்பது, நல்லதிற்கில்லை, இனி நேரடியாக பதில் கொடுக்க வேண்டியது தான், ஏதேனும் பிரச்சனை, செய்யட்டும் இருக்கு அவளுக்கு," இப்படி நல்லா இருந்த தம்பதிக்கு நடுவில் பிரச்சனை கிளப்பி விட்ட அக்காவின் மீது கொலைவெறியே உண்டானது .

அதே நேரத்தில் அன்புவும், கண்களின் ஓரம் கண்ணீர், வழிய, படுத்து கிடந்தான் .
அவனுக்கு நடந்த, அநீதி, ஒருபக்கம் என்றால், இங்கு மனைவியின் மனதில் இருந்து, தான் இறங்கிய, தோற்ற போன உணர்வு என்று அவனை ஆட்டி படைத்ததில், அந்த இரவு உறங்கா இரவு அவனுக்கு .
இங்கு தேவகி வீட்டினில், வினோத், தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் .
தங்கைக்கு, அன்பு மீது காதலா, என்ன பிதற்றல், இது, என்று தான் தோன்றியது அவனுக்கு .

ஆனால், சுமதி மற்றும் விஷாகாவை, தங்கை பார்த்த பார்வை, அவன் உடம்பில், குளிர் பரப்பியது.
இது வரை அவளின் முகத்தில் அப்படி ஒரு கோவம் அவன் கண்டதில்லை.
அவர்கள் மீது ஒரு வித வன்மம் போன்று, ரேஷ்மியின் முகம் எல்லாம், சிவந்து, அப்படி காட்சியளித்த தன் தங்கைக்கும், இப்பொழுதும் வந்து வதந்தியை கிளப்பிய உறவினர்களின் வார்த்தைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா, என்று குழப்பத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் .


திருமணம் ஆக வேண்டிய பெண்ணின் மீது இப்படி ஒரு பேச்சு, இருந்தால், அவளின் எதிர்காலம் என்னவாகும்.
தந்தையின் காதுக்கு சென்றாலும், "எந்த பைத்தியாகாரன் இப்படி சொன்னான்," என்று அவ்விஷயத்தை கடந்து விடுவார்.

அவர், எப்பொழுதும் பிள்ளைகள் மீது நம்பிக்கையும், சுதந்திரமும் கொடுத்து வளர்த்திருக்கிறார்.
ஆகையால், அப்படியே ஏதேனும் இது போன்ற பேச்சுக்கள், வந்தாலும், அதனை கடந்து சமாளித்து, ரேஷ்மிக்கு திருமண வாழ்க்கையில் எந்த குழப்பமும் இன்றி அவர் நடத்தி வைக்கும் திறமையும், பணமும், திடமும் இருக்கிறது, ஆனாலும், தங்கையின் இந்த புது முகம் அண்ணனாக அவனுக்கு பயம்.


ஆகையால், நேராக அவன் சென்றது தங்கையின் அறைக்கு தான் .
ரேஷ்மி அவன் அண்ணனை, அந்த நேரத்தில் எதிர்பார்க்கத்தால், என்ன என்று யோசித்தாலும், "வா அண்ணா, என்ன இந்த நேரம் தூங்கலையா," என்று சாதாரணாமாக கேட்டு வைத்தாள் .

அவனும் சிறிது நேரம் தங்கையின் முகத்தையே கவனித்து, தான் கணித்தது சரியா என்று ஒரு நொடி யோசித்து, மீண்டும், சரியே என்ற முடிவுக்கு வந்து "உனக்கு, அத்தை மீதும், விஷாகா மீதும் என்ன கோவம்?"
நேரடியாக கேள்வியில் இறங்கினான் .


"என்ன, நான், எதுக்கு, என்று அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய, வார்த்தைகள் தடையுடன் வருவதிலேயே, அவள் ஏதோ மறைகிறாள், என்று தெரிந்து கொண்டு, அதே கேள்வியை, இப்பொழுது, இன்னும் அழுத்தமாக, கேள்வியில் கோவம் நிறைந்ததோ, என்பது போன்று கேட்டு வைத்தான் .


அண்ணனின் கோவமான முகம் கண்டு தங்கை பயந்து, எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அதில் தலையை கோதி, தன்னை நிலை படுத்தி, "சொல்லு ரேஷ்மி, நீ அப்படி ஒரு கோவத்துல,ரொம்ப ஏளனமா ஒரு மாதிரி அவங்களை பார்த்து சிரிச்சே, என்ன நடந்தது, இது வரைக்கும் உன்னை இப்படி பார்த்ததும் இல்லை, நாங்க வளர்த்ததும் இல்லை, வந்தவங்க எல்லாம் என்னவோ உளறிட்டு போறாங்க," என்று அவன் கேள்விப்பட்டது, பார்த்தது என்று அனைத்தும் கூறி தங்கையின் பதிலுக்கு அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

ரேஷ்மி, இவை எல்லாம் கேட்டு, தன்னையே நொந்து கொண்டாள் "அந்த அளவுக்கா நம்ம முகம் காட்டி கொடுக்குது, அது சரி, இந்த எண்ணம் எல்லாம் இப்போ, அந்த விஷாகாவால, வந்தது தானே, புதுசா வந்த, குணம் நம்ம மனசை காட்டி கொடுக்குது, அப்படியே, அண்ணா என்னை பார்த்துக்கு பதில், அவன் பொண்டாட்டிய பார்த்து இருந்தாலும் ஒன்னும் தெரிந்து இருக்காது அவ டிசைன் அப்படி "


"அந்த விஷாகா, எப்படி சலனமே இல்லாம, எல்லா காரியமும் செய்யறா, முகத்தில எந்த வெறுப்பும் காட்டாம, பழி வாங்குற கலை, எல்லாம் பிறவில் இருந்த வந்த விஷாகாவுக்கு தான் வரும்."


"நமக்கு வருமா," என்று அவள் மனதில் பல எண்ணங்கள்.
"சொல்லு டா, இந்த அண்ணாவை நீ நம்புனா, சொல்லு, தேவையில்லாம, எந்த பேச்சுக்கும், உன் பேரு வர கூடாது, அம்மாக்கும், அப்பாவுக்கு தெரிந்தா, அவங்களும் கஷ்ட படுவாங்க, உன் எதிர்காலம், நல்லா இருக்கனும் டா, அவங்க ஏதாவது உன்னை தொந்தரவு செய்தார்களா" என்று அதே கேள்வியை பல மாடுலேஷனில் கேட்டு ரேஷ்மியும் இதை வீட்டினர் யாருக்கேனும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று அண்ணனிடம் விஷாகா நடத்திய நாடகம், அதில் ரேஷ்மி மீது பொறாமையில் வீட்டினில் இன்றி விடுதியில் படித்தது, அன்பு மீதான காதல், அதன் பின்பு அவனின் மறுப்பு, இறுதியில் அதிதி கூறியது வரை கூறி முடித்தாள் .
முடிக்கும் தருவாயில் மனதில் இருந்த வேதனையின் பாரம் தாங்காமல், அண்ணனின் நெஞ்சினில் அடைக்கலமானாள்.


அவனும் தங்கையை ஆதரவாக அனைத்து, அவளின் கண்ணீரை துடைத்து விட்டான் .
அவனுக்கும் மனைவி மீது கோவமும், தன்னால் தான் தங்கைக்கு இந்த நிலைமை, என்று தன் மீதே ஒரு வெறுப்பு ."என்னால, தானே மா, இந்த நிலைமை, உனக்கு,"

"அந்த வெறி பிடிச்ச ஜென்மத்தை நான் மட்டும் கல்யாணம் செய்து இல்லைனா, இந்த நிலைமை உனக்கு வந்து இருக்காது இல்லை."
"வீட்டுல இருந்து பிரிச்சி வெச்சி இருக்கா, உன்னை. உனக்கு இல்லாத உரிமையா அந்த கழுதைக்கு இங்க," என்று அவனும் தங்கையிடம் அவனின் கோவத்தை வெளி படுத்தினான் .

"என்ன அம்மா, அவங்க, பொண்ணுக்கு நல்லது சொல்லாம, கூட சேர்ந்து ஆடி இருக்காங்க".
"எனக்கும் அதே தான் அண்ணா, அந்த கோவம் தான் இப்படி வெளி படுத்திட்டேன் போல, என்னால அவங்களோட, சாதாரணமா பேச முடியலை, அண்ணா, என்ன செய்றது."

"நீ ஒன்னும் செய்ய வேண்டாம் மா, இனி நான் பார்த்துக்கறேன், அவங்களை," என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்.
"அண்ணா, இதுக்கு தான் நான் உனக்கு இவ்வளவு நாள் சொல்லல, பசங்களுக்காக, அவங்க உங்களை பார்த்து தான் அண்ணா வளருவாங்க, பொறுமையா இரு அண்ணா ," என்று அவளின் சோகத்தை மறைத்து, அண்ணனை தேற்றினாள் .


அதில் விரக்தியான புன்னகை, அவன் முகத்தில் "என் பசங்க எதிர்காலம், என் கண்ணு முன்னாடி வந்து பயமுறுத்துது மா ".
"இவ கிட்ட பசங்க வளர்ந்தா, அவங்க லைப் எப்படின்னு யோசித்து பார்த்தா, ரொம்ப பயமா இருக்கு" சோகம் முழுதும் அவன் அகத்தில் நிரம்பி, அவன் கூறிய வார்த்தையில், ரேஷ்மியும் வேதனை அடைந்தாள் .
"அண்ணா, நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன், வீட்டுல சொல்லலாம்னு பார்த்த, அதுக்குள்ள, நம்ம வீட்டுல பங்க்ஷன், அப்படியே, டைம் போய்டுச்சு, என்னை தானே, இப்படி ஆக்கிட்டாங்க, அவங்களை, நானே பதில் அடி கொடுத்தா, தான் எனக்கு திர்ப்தி, ப்ளீஸ் நீ இதுல இன்வால்வ் ஆகாதே, நான் வீட்டுலையும் எந்த பிரெச்சனையும் இல்லாம இதை டீல் பண்றேன், எனக்கு நான் கேட்குற உதவி மட்டும் செய் , நான் இந்த வருஷம் ஹாஸ்டல் போகலை, வீட்டுல அப்பா கிட்ட நீயே பக்குவமா பேசி வீட்டுல இருந்து படிக்கறது போல செய் ."


வீட்டினில் தங்கி படிக்க, அண்ணனிடம் உதவி வாங்கும் தங்கையின் நிலை, கண்டு அவன் உள்ளம் கொதித்தது .
"இந்த நிலைமைக்கு, அவ தானே மா காரணம்," என்று கோவ பட்டான் .

"வீட்டுல மட்டும் இல்லை அண்ணா, பிசினஸ் நான் பார்க்கணும்" என்றதும் "புரியுது ரேஷ்மி, சரி" என்று தலையசைத்து, தங்கையிடம், இந்த கேள்வியை மட்டும் எப்படி கேட்பது என்று தயங்கினான் .
"என்ன அண்ணா, ஏதாவது கேட்கணுமா," என்றதும்,
"அது ரேஷ் மா, இப்பவும், நீ, அன்பு," என்று தயங்கியதில், "அண்ணா, அன்பு மாமா மேல நான் சின்ன வயசுலயே,ஆசை வெச்சிட்டேன் அண்ணா, இப்போ, என் மனசும், எண்ணமும் இனியா தான் அவர் லைப்ன்னு உணருது அண்ணா, என்னை நான் மாத்திப்பேன், இதுல இருந்து கடந்து வருவேன்," என்று அண்ணனுக்கு வாக்களித்தாள் .

"உனக்கு நாங்க இருக்கோம், டா, எனக்கும் தெரியும் எவ்வளவு வேதனைன்னு, பட் சீக்கிரம் இதுல இருந்து வெளிய வா, உனக்கு நாங்க நல்ல லைப் அமைச்சு கொடுப்போம், " என்று வாக்கு கொடுத்தான்
தங்கையின் மனதில் காதல் என்னும் எண்ணம் விதைத்து,

அவளின் மனதில் ஏமாற்றத்தை அளித்த மனைவி மீது ஆத்திரம் வந்தது வினோத்திற்கு .
அதே கோவத்தில் அவனின் அறைக்கு வந்து சேர்ந்தான் .
அந்த இரவு வெளிச்சத்தில், அறை முழுதும் ஏசியில் குளுமையில் சுகமாக உறங்கி கொண்டிருக்கும் மனைவி மீது, கொள்ளும் வேகம் அவனுக்கு .
வீட்டுல அவ்வளவு பிரச்சனை செய்துட்டு, தம்பி தம்பி பொண்டாட்டி வாழ்க்கையிலும் சண்டையை மூட்டி விட்டு, தன தங்கையின் மனதில் சலனத்தை ஏற்படுத்திய, மனைவியை இதற்கு மேலும் பொறுத்த கொள்ள முடியாமல், தூங்கி கொண்டிருக்கும் மனைவியை, அவளின் கையை இழுத்து எழுப்பி, நிற்க வைத்து, பளார் என்று இரு கன்னத்திலும் மாறி மாறி அரை வைத்தான் .
அதில் அவளின் உறக்கமும் கலைந்து, நடந்ததை ஏற்க முடியாமல் கன்னங்களில் கைகளை தாங்கி அதிர்ச்சியாக நின்றாள் விஷாகா .























































 

Lakshmimurugan

Well-Known Member
விஷாகாவை வினோத் அடித்ததில் எனக்கு அப்படி ஒரு திருப்தி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top