அன்பின் இனியா 25

Advertisement

achuma

Well-Known Member
Thanks for all you likes and comments
more only one
சென்ற பதிவிற்கு உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி நட்புக்களே.
இப்பதிவையும் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்

என்ன தான் குடும்பத்திற்காக, தனது உயிரான மகளுக்காக, சொந்த ஊருக்கு வருவதாக வாக்கு கொடுத்தாலும், ராஜா சேகரின் மனதில் பயம் இருந்து கொண்டே இருந்தது.
அதிலும் அன்புவை கண்டால் அவருக்கு எப்பொழுதும் ஒரு பயம், கோவம் என்று தான் இருப்பார் .
சிறு வயதிலேயே, சுமதியை ஏதேனும் திட்டினாலும் ஏதோ தன்னை அடித்து கொள்ளும் ஆவேசம் அவன் முகத்தில் இருக்கும்.
வெறும் பணத்திற்காக என்று சுமதியை திருமணம் செய்து கொண்டாலும் அவளின் அழுகு, ராஜசேகரை வெகுவாக பாதித்தது.
விஷாகா பிறந்த பிறகு, யாருக்கும் தெரியாமல், தீபிகாவுடன் வந்து விடலாம், என்றாலும் மகள் மீது ஏதோ தனிப்பட்ட பாசம் அவரை கட்டி போட்டது.
இது வரை ஏன் என்று புரியாத ஒரு கேள்வி அவர் மனதில்.
முதலில் பிறந்த அமர், ராகுலை விட, விஷாகா மீது, எதற்கு இந்த அளவிற்கு பாசம் என்று அவருக்குள்ளே பல முறை கேட்ட கேள்வி.
தந்தையிடம், தீபிகாவை பற்றி கூறவும் பயம்.
இப்படி, தனக்கு இருக்கும் தயக்கம் பயம் எல்லாம் சேர்ந்து, இப்பொழுது, சுமதியுடனான திருமணம், அவளுக்கு பிறந்த மூன்று பிள்ளைகள், என்று காலம் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டதே, என்று முதல் முறையாக அவர் செய்த செயல், தவறு என்று உணர்ந்தார், ராஜா சேகர்.
"என்ன யோசனை, உங்களுக்கு, " என்ற கேள்வியுடன் அறைக்குள் வந்தார் தீபிகா.
"ம்ப்ச்" என்ற சலிப்புடன், மீண்டும் விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தார் மனிதர்.
"சொன்னா தானே தெரியும்." தீபிகா மீண்டும் அவரிடம் கேள்வி கேட்டார் .
"இப்போ நான் சென்னை போக வேண்டாம்ன்னு சொன்னா உடனே, சம்மதம் சொல்ல போறியா என்றதும்,"
"இப்போ, நம்ம, அங்க முதல்ல போறதை பற்றி ஆரம்பிச்சோமா ."
"உங்க அருமை பெண்ணுக்கே புத்தி வந்து இருக்கு, இவ்வளவு நாள் அடுத்தவங்க, உரிமைல, குளிர் காஞ்சி இருக்கோம்ன்னு, நமக்கு சேர வேண்டிய எல்லாம் நமக்கே கொடுக்குறா ."
"தீப்பி உனக்கு இங்க என்ன இல்லை, வேண்டாம் விடேன்," என்று அவர் மீண்டும் மனைவியிடம் கெஞ்சினார் .
"என்ன இருக்கு, உங்க சொந்தத்துல எல்லாரும், ராஜா சேகர் மனைவின்னா அந்த சுமதி தானே, தெரியும்."
"வேண்டாம் நான் ஏதாவது சொல்லிட போறேன், குழந்தை பிறந்தா, சொத்து எல்லாம் உங்க பேருல, எழுதி வைக்கிறதா, உங்க அப்பா சொன்னாருன்னு சொன்னீங்க."
"சரின்னு, நம்ம, புருஷன், நம்மள தான் விரும்புறாரு, பணம் கிடைத்ததும், அவங்களை மறந்துடுவாருன்னு, பார்த்தா , அந்த விஷாகா பொறந்ததும், அவ மேல பைத்தியமா இருந்தீங்க,"
"அப்பறம் பார்த்தா, அன்பு, அதிதின்னு, இன்னும் இரண்டு பசங்க, உங்க சபல புத்திய என்ன சொல்ல ," என்று பல்லை கடித்து கொண்டு, அவரை திட்டி தீர்த்தத்தில், அதன் பிறகு ராஜா சேகர் வாய் திறப்பாரா .
"எனக்கும், இந்த ஊர் தாண்டுனா, என்னோட அடையாளம், என்னன்னே தெரியாது."
"இப்போ தான் காலம் எனக்கு ஒரு நியாயம் செய்து இருக்கு, நமக்கு பணம் தேவை, அதுக்கு கிடைத்த வழியை பயன் படுத்திகிட்டோம்."
இப்பொழுதும் சுமதிக்கு செய்தது தவறு என்றே அவர் நினைக்கவில்லை .
"அதுல தப்பு இல்லையே, ஆனா, இன்னும் எத்தனை காலத்துக்கு, என்னோட உரிமை, எனக்கான பெயர், இன்னொருத்தருக்கு கொடுத்துட்டு இருக்க முடியும் சொல்லுங்க."
"நம்ம பசங்களும் எவ்வளவு தான் பொறுத்து போவாங்க."
"அவங்களுக்கு நியாயமா சேர வேண்டிய பணம், தொழில் கிடைக்கும் போது, இப்பவும் தயங்குனா எப்படி "
"உனக்கு அன்புவை பற்றி தெரியாது," என்று மீண்டும் கூறினார் .
"இது எல்லாத்திற்க்கும் காரணம், நீங்க தான்."
"உங்க அப்பா மேல கொண்ட பயம்."
"நம்ம விஷயத்தை சொல்ல தைரியம் இல்லை."
"ஏன் கல்யாணம் செய்து இரண்டு குழந்தை இருக்குன்னு சொல்லி இருந்தா, நம்ம தலையை சீவிட போறாரா ."
"அதுக்கு பயந்து, இப்போ எப்படி எப்படியோ ஆச்சு"
"இப்போ அன்பு மேல பயம்ன்னு ஒரு கதை ."
" பேசாம படுத்து தூங்குங்க ."
"நம்ம ஊருக்கு கிளம்பனும்."
"நாளைக்கு விடியல் எனக்கு, என்னோட இத்தனை நாள் கனவை தீர்க்க போகுது," என்று கண்ணயர்ந்தார் .
அடுத்த நாள், விஷாகா, தனியாக, இராஜ் இல்லத்தில் இருந்தாள் .
வேலைக்கு ஆட்கள் வைத்து, வீட்டினை சுத்தம் செய்து வைத்து, அவர்களை அனுப்பி விட்டு, அமர்ந்து இருந்தாள் .
தனிமை, அவள் செய்த செயல்கள், இந்த வீட்டில், இளவரிசியாக, வலம் வந்த காலங்கள் என்று அசைபோட்டது.
அன்பு அதன் பிறகு, அவன் வண்டியில் இருந்து, வீட்டின் முன் இறங்கினான் .
அவன் திருமணத்திற்கு முன்பு, விஷாகா பேசிய வார்த்தையால், வெளியே சென்ற அன்பு, அதன் பிறகு இன்று தான், அங்கு வருகிறான் .
வீட்டு வாசல் வரை வந்தாலும், உள்ளே நுழைய ஒரு தயக்கம் .
அவன் அங்கு வாசலில் நின்று இருப்பதை கண்டு அவனையே வீட்டினுள் இருந்து கவனித்த விஷாகா, அவன் தயக்கம் உணர்ந்து "வா அன்பு, எதுக்கு தயங்குற, விதி பார்த்தியா, உன்னை இந்த வீட்டுல இருந்து
துரத்தினேன் ."
"இப்போ எனக்கே இந்த வீடு சொந்தம் இல்லை," என்று விரக்தி புன்னகையுடன், கண்ணீரும் வந்தது."
"ப்ச், அக்கா இன்னும் எவ்வளவு அழுவ"
"பெண்களோட கண்ணீர், புனிதமானது."
"அந்த கண்ணீர் எல்லாம், தேவையில்லாம, தகுதி இல்லாத காரணத்துக்காக, வேஸ்ட் பண்ணாத ."
"பத்து மணிக்கு மேல அந்த குடும்பம் வந்து சேரும், நினைக்குறேன் ."
"நீ பத்திரம் எல்லாம் எடுத்து வெச்சி இருக்கியா ."
"இதோ அன்பு, எல்லாம் அவங்களுக்கு கொடுக்க தயாரா இருக்கு."
அதற்குள், ராஜ சேகரின் வரவேற்புக்கு, அன்பு ஏற்பாடு செய்த ஆட்கள் வந்து சேர்ந்தனர்.
பேண்ட் வாத்தியம், மேளம், என்று இறுதி ஊர்வலத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடும் செய்தாகிற்று.
அக்கம் பக்கத்தில் உள்ளோர், பல நாள் பூட்டி கிடந்த வீட்டில் இப்பொழுது யாருக்கு என்னவோ.
இராஜ குடும்பத்தில் யாருக்கு என்ற பதற்றதுடன், அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்தனர்.
அதற்குள், அன்பு கூறிய செய்தி உண்மையா பொய்யா, என்ற குழப்பம், கோவம் என்று வந்து சேர்ந்தனர், சுமதி மற்றும் இராஜசேகர் பக்க உறவினர்கள்.
வீட்டின் முன் கார் வந்து நின்றதும், அமரும் ராகுலும், முகம் முழுதும் மகிழ்ச்சியுடன், வீட்டையே பார்த்து கொண்டு இறங்கினார்.
அதன் பிறகு, தீபிகா, அவரின் மருமகள்கள், பேரப்பிள்ளைகள் , என்று இறங்கினார்.
தீபிகா முகத்தில் நேற்று வரை இல்லாத ஒரு தயக்கம் தானாக வந்து ஒட்டி கொண்டது.
இராஜ சேகர், வண்டியினுள் தயக்கத்துடனே அமர்ந்து இருந்தார்.
அன்பு வாசல் வந்து அங்கு அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களை கண்ணசைத்து, பேண்ட் வாத்தியம் முழங்க செய்தான்.
பிறகு, அவனே கார் கதவை திறந்து வைத்து, "இறங்குங்க, இராஜ சேகர், உங்களுக்கான இறுதி ஊர்வலம் அன்னைக்கு ஏற்பாடு பண்ண முடியல, இப்போ சிறப்பா செய்துடுறேன்," என்று கூறி அவருக்கு மேலும் பயத்தை கிளப்பி, ஒரு கை பிடித்து, வெளிய, நிற்க வைத்தான் .
அவர் வெளியே வந்து நின்றதும், சங்கு ஊத பட்டது.
அதில் அவர் பல்லை கடித்து நின்று இருந்தார் என்றால், அக்கம் பக்கத்தினர், "என்ன" என்ற அதிர்ச்சியுடன், அவர் அருகில் வந்து சேர்ந்தனர்.
"இராஜ சேகர் வயதை சேர்ந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்," என்ன இராஜ சேகர் இது, நீங்க, எப்படி," என்று தயக்கத்துடன் பல கேள்விகள்.
அதற்குள் சரண், அவர் உயரத்திற்கு நீண்டு இருந்த பன்னீர் ரோஜா மாலை, ஒன்று இராஜ சேகரின் கழுத்தில் அணிவித்து, "என்ன அங்கிள், நீங்க இப்படி கேட்டுடீங்க, உங்க பிரென்ட், தி கிரேட் இராஜ சேகர், இவ்வளவு வருஷம் தலை மறைவா இருந்தாரு."
"அதுவும் அவர் ஒரிஜினல் குடும்பத்தோட," என்று, அருகில் பயத்துடன் நின்று கொண்டிருந்த அவரின் புது குடும்பத்தை கை காட்டினான்.
அதில் மற்றவர்களை, பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்று இருந்தார் மனிதர்.
சரணை வேறு முறைத்து பார்த்தார்.
"யோவ், என்ன முறைப்பு, மாப்பிளைக்கு நீ தான் மரியாதை தரல, இதுல உன்னையும் ஒரு ஜென்மமா மதிச்சு, வீட்டு மாப்பிள்ளையா, உனக்கு இறுதி மரியாதை செய்தா முறைக்குறே."
"மவனே, இங்க நீ ஆடவே கூடாது," என்று மிரட்டினான், சரண் .
"வீட்டு மாப்பிளையா, ஐயோ, அதிதிக்கு இவனை கல்யாணம் செய்து வெச்சிட்டாங்களா," என்று நொந்து கொண்டார்.
சரணையும் அன்புவையும் பல்லை கடித்து பார்க்க மட்டுமே முடிந்தது அவரால்.
தீபிகாவுக்கு, இவர்கள் இத்துடன் விடுவார்கள் என்று தெரியவில்லை .
இப்பொழது, அன்புவை பற்றி கணவன் கூறியதை நினைத்து, சிலையாக நின்று இருந்தார்.
அங்கு அமர் மற்றும் ராகுலிற்கும் அதே நிலை தான்.
இங்கு புது இடத்தில அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
கசாப்பு கடையில் ஆடு தலை கொடுத்த நிலையில் இவர்கள் .
"இங்கேயே, பேசிட்டா எப்படி அங்கிள், வீட்டுக்குள், வாங்க, அன்னைக்கு கிடைக்காத பொணம், இன்னைக்கு தான் கிடைத்து இருக்கு, உள்ள, சொந்தகாரங்க வெயிட்டிங்."
"நீங்களும், அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை உள்ள வந்து செய்துட்டு போங்க," என்று அனைவரையும் உள்ளே அழைத்தான்."
அவன் குறிப்பிட்டு, அழைத்த வார்த்தையில் அவர் அன்புவை நோக்கி "டேய்" என்று கத்தியதும் ,
"டேய், என்ன எகிறிட்டு வர, அடங்கு அடங்கு, என் முன்னாடியே, என் மச்சான் கிட்ட சவுண்ட்," என்று வினோத்தும் அவரை மிரட்டியதில், நொந்து விட்டார் மனிதர்.
ஆசை மகளின் கணவன் கொடுத்த மரியாதையை நினைத்து .
வீட்டினுள், கிட்ட தட்ட, அவர்களை இழுத்து சென்றனர் என்றே கூறலாம்.
அங்கு இராஜ சேகர் விஷாகாவை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார்.
ன்மகளா தனக்கு இப்படி ஒரு அவமானத்தை கொடுத்து இருப்பது என்று, அவள் கை கட்டி நடப்பதை அனைத்தையும் வேடிக்கை பார்த்து நின்று கொண்டாள் .
அவளின் பார்வையும் இராஜ சேகரை தவிர எங்கும் செல்ல வில்லை.
இராஜ சேகரின் அத்தை முறையில், உள்ள ஒரு மூதாட்டி, அவரின் சட்டையை பிடித்து, "பாவி, எங்க அண்ணா என்ன கொடுமைக்காரரா."
"நீ ஒரே பையன்னு, உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து தானே செய்தார், ஏன் உனக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு சொல்லி இருந்தா, என்ன செய்துட போறாரு ."
"கேவலம் சொத்து உன் பேருல எழுதி தரணும்ன்னு, இந்த சுமதி வாழ்க்கையை அழிச்சிட்டியே" என்று அந்த வயதிலும், இராஜ சேகரை, சட்டை பிடித்து உலுக்கினார்.
அப்பொழுது தான், அங்கு அதிதியுடன் நின்று இருந்த, சுமதியை கண்டார்.
முன்பு போல், கணவரை கண்டால், தலை குனிந்து , கையை பிசைந்து கொண்டிருக்கும், சுமதி அல்ல, இது வரை காணாத புது கம்பீரம் சுமதி முகத்தில்.
இராஜ சேகர், அதில் மேலும் பயந்தார்.
சுமதி வீடு உறவுகள், சுமதியின் பெரியப்பா, மகன், மற்றும் மகள், அவரின் தங்கைக்கு நடந்த அநீதிக்கு, இராஜ சேகரை வெட்டி போடும் ஆத்திரம் .
சுமத்தியின் அக்கா, "பாவி, எங்க தங்கச்சி வாழ்க்கையை ஏன் டா ஏமாத்தினே"
"தீபிக்காவின் அருகில் சென்று, அடி கிறுக்கி மகளே, என்ன தகிரியம் இருந்தா, உன் பண ஆசைக்கு, என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்து இருப்ப."
"உங்க குடும்பத்துக்கு என்ற ஊட்டு பொண்ணா கிடைச்சா" என்று அவ்வளவு ஆவேசம் அவரிடம்.
உடனே அன்பு அவன் பெரியண்ணையை, தடுத்து, அவரை அன்னை அருகில் நிற்க செய்தான் .
"நான் உங்க எல்லாரையும் இங்க வர வெச்சதுக்கு காரணம், இந்த ஆள், இன்னும் உயிரியோட தான் இருக்கான்."
"இவன் ஆடுன ஆட்டத்துக்கு, ஒரு முடிவு வரணும் தான்."
"இதோ இந்த வீட்டோட, பத்திரம், அப்பறம் இராஜ் டெக்ஸ்டைல்ஸ் கடை, இது எல்லாம், இத்தனை, நாள், நாங்க அனுபவவிச்சதுக்கு அர்த்தமே இல்லை."
"இந்த குடும்பத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை."
"நாங்க பொறக்க இந்த ஆள், காரணம் அவ்வளவு தான்."
"அவனோட முதல் குடும்பம் இருக்கும் போது, இன்னும் இது எல்லாம், எங்களுக்குன்னு இருந்தா, அது எங்க அம்மாவுக்கு அசிங்கம்."
"அதுனால," ஒரு முறை அவன் அக்காவை பார்த்தான், அவள் சரி என்று தலையசைத்ததும், இராஜ சேகரின் மனைவி, தீபிகா, கையில் அனைத்து பத்திரங்களையும் வைத்து விட்டான்.
"இராஜ சேகரின் அத்தை முறையில் உள்ள, அந்த பழுத்த பழம் "வேண்டாம் ராசா, எங்க மனசுல என் அண்ணன் குடும்பத்து மருமக, இந்த சுமதி தான், அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு.
"நியாயமா உனக்கு சேர வேண்டியது தான் இது எல்லாம்," என்றதும்,
விஷாகா வாய் திறந்தாள்," பாட்டி, இது எல்லாம் அப்பா என் பேருல தான் எழுதி வெச்சாரு, அன்புவும் சரி, அதிதியும் சரி, இது வரைக்கும் எதுவும் அனுபவிக்கல, இப்போ நான் தான், இது எல்லாம் அன்பு கையில கொடுத்து கொடுக்க வைக்கிறேன்."
"இந்த குடும்பத்து மூத்தவங்க இவங்க தான்," அமர் மற்றும் ராகுலை கை காட்டி,
"அவங்களுக்கே சேரட்டும்."
"யாரோட பணத்துலயோ வாழுறது போல எங்க உடம்பு எல்லாம் எரியுது, என்று மீண்டும் விஷாகா அழுதாள் .
அவளின் அமைதியான, பேச்சும் கண்ணீரும் அனைவருக்கு புதுசு.
இதுவரை, அவளை திமிர் பிடித்தவள் என்று பார்த்த சொந்தங்கள் எல்லாம் இப்பொழுது அவளை ஐயோ பாவம் என்று பார்த்து வைத்தனர்.
அன்பு அவன் அன்னையை பார்த்தான், சுமதி நேராக இராஜ சேகரின் முன் சென்று, அவர் கண்ணத்தில் பளார் என்ற ஒரு அறை வைத்தார்.
அதில் சர்வமும் அடங்கிய நிலையில், இராஜ சேகர் நின்று இருந்தார் என்றால்,
தீபிகா ஒரு அடி பின் சென்றார், எங்கு அடுத்த அடி தனக்கு விழுமோ என்று.
"என் வாழ்க்கையை உன் கையிலெடுக்குற முடிவை உனக்கு யார் கொடுத்தா, உன் கண்ணுக்கு நான் உன் மனைவியா தெரியல, உன்ன இச்சைக்கு, என் கூட குடும்பம் நடத்தி இருக்க ."
"எனக்குன்னு ஒரு படிப்பு வாழ்க்கைன்னு, நான் என் மனசுல ஒரு வாழ்க்கை உருவாக்கி இருந்தேன், அது எல்லாம் கெடுத்த பாவி நீ."
"இந்தா," என்று கையில் எடுத்து வந்த தாலி கொடியை காட்டினார்.
"நீ போய்ட்டேன்னு, இது எடுக்க வந்தாங்க."
"என் மகன் அவங்கள நெருங்க விடல, நானே இந்த சமுதாயத்துல எப்படி வாழணும்ன்னு, தெரிஞ்சி, இது எல்லாம், எடுத்துட்டேன்."
இப்போ, உனக்கு உண்மையா எதுவும் ஆச்சுன்னா, உன் சொந்தக்காரர்கள் வந்து, இதோ இங்க நிக்கிறாளே, இந்த தீபிகா, இவ கிட்ட வந்து நிற்க சொல்லு," என்று கூறி, தாலி கொடியை இராஜ சேகரின் முகத்தில் விட்டெறிந்தார் சுமதி.
"மீண்டும் ஒரு பத்திரத்தை காட்டி எங்க அம்மாவுக்கு, உன் கிட்ட இருந்து விடுதலை பத்திரம், என்று அன்பு காட்டியதும், இராஜ சேகரின் மற்ற சொந்தங்கள்,
"சுமதி எங்களுக்கு நீ தான் மா இந்த வீட்டு மருமக, உனக்கு செய்த அநியாயத்துக்கு கண்டிப்பா, எங்களுக்கும் தண்டனை உண்டு."
"ஆனா, இந்த சொத்து எல்லாம் எதுக்கு மா, இவங்க பேருல எழுதி வைக்கிற," என்று வருந்தினார்கள்.
அன்பு, என்ன செய்ய சொல்றீங்க, பெரியப்பா."
"இதோ பாட்டி சொல்றது போல, தான், இவர் இவங்க அப்பா கிட்ட வந்து எதுன்னாலும் பேசி இருக்கனும், அதை விட்டுட்டு, எங்க அம்மாவை பணத்துக்காக கல்யாணம் செய்து, அவங்க வாழ்க்கையை ஏமாத்தி இருக்காங்க ."
"எங்க அம்மா வாழ்க்கையே போச்சே, இதுக்கு யார் கிட்டயாவது பதில் இருக்கா," என்றதும் அனைவரும் தலை குனிந்தனர்.
"இதோட விடுங்க, இந்த இராஜ் குடும்பத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை."
"எங்க அடையாளம் இது இல்லை என்றான் ".
இராஜ சேகரின் அருகில் வந்து, "நான் எதிர்பார்த்த நாள் இது தான்".
"அம்மா உன்னை அடிச்சதுக்கு பிறகு தான் எனக்கு குளு குளுன்னு இருக்கு, இனி இந்த சமுத்தியத்துல நீ எந்த மதிப்போடு வாழுறேன்னு நானும் பார்க்குறேன்."
"எங்க அம்மாவுக்கு செய்த அந்நியாயத்துக்கு நீ ஒவ்வொவொரு நாளும் அனுபவிப்ப."
இராஜ சேகர், விஷாகாவிடம் சென்று நின்றார்.
இனியாவும் திதியும் ஒன்றும் புரியாமல், முழித்து கொண்டு நின்று இருந்தனர் இப்பொழுது வரை.
கேவலம் பணம் அதற்கா இந்த ஆட்டம் என்று நினைக்க தோன்றியது.
"என்ன விஷா மா, இது, உன்னை நம்பி வந்தேன், நீ ஏன் எல்லாருக்கும் சொன்ன, எனக்கு இந்த அசிங்கம் ஏற்படுத்தி தர தான், இங்க வர வெச்சியா," என்றதும் மீண்டும் அழுகை அவளுக்கு
"என் பாசத்தை எப்பவும் சந்தேக படாதீங்க பா."
"நான் பிறந்ததில் இருந்து, உங்க மேல அன்புன்னு சொல்றதை விட பாசம், பக்தின்னு சொல்லலாம்."
"நீங்க தான் எனக்கு தொழில்ல ஆசான்."
"இப்படி எல்லாமே நீங்க தான்னு நான் உங்களை டிபென்ட் பண்ணது தான் என்னோட மிக பெரிய தவறு."
"உனக்கு ஒரு எதிரி உருவாகுறான்னு தெரியும் போதே அவனை வளர் விட கூடாதுன்னு நீங்க எனக்கு சொல்லி கொடுத்த பாடம் தான் அப்பா, இப்போ நான் உங்களுக்கு திரும்ப செய்தேன்."
"ஆனா, என்ன ரொம்ப லேட்டா செய்றேன்."
"ஏன் எங்க அம்மாவை கல்யாணம் செய்தீங்க, நாங்க மூணு பேர் பொறந்தே இருந்து இருக்க மாட்டோமே."
அவள் அமைதியாக கேள்வி கேட்டாலும், அவளின் தோரணை, இராஜ சேகருக்கு மனதில் பயத்தை உருவாக்கியது.
"நீங்க இறந்து போய்ட்டதா தகவல் வந்ததும் நா அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன் தெரியுமா."
"என் குடும்பம், என் வினோத், எனக்கு எதுவுமே தெரியலை".
"அன்பு என்னையும் பார்த்துகிட்டு, அம்மாவையும் கவனிச்சு, அதிதி சின்ன பொண்ணு, அவளையும் கவனிக்கணும், அதே நேரத்தில கடையும் பார்க்கணும்."
"இதுல உங்க பாடி கிடைக்காதான்னு, தகவல் வந்த அந்த மலை பகுதியில போய் அடிக்கடி விசாரிச்சிட்டு இப்படி, அவன் எல்லா விஷயத்தையும் சரி கட்டி இழுத்து வரவே சரியா போச்சு."
"அவனோட அலைச்சலுக்கும், அம்மாவுக்கு நீங்க செய்த துரோகத்துக்கும், இந்த அளவுக்கு கூட நீங்க அவமான படலான எப்படி பா."
"என் மனசு , என் சிந்தனை எல்லாம் நீங்க தான்."
"உங்களை என் எண்ணத்திலே இருந்து விளக்கி வெச்சி பார்த்தா, நானும் கொஞ்சம் நல்லவ தான் போல பா."
"விஷா மா," மகளின் விரக்தியான பதிலை அவருக்கு பேச்சில்லை .
"இது உங்க வீடு, நீங்க தான் இந்த வீட்டிற்கான, வாரிசு., அதே நேரத்தில் உங்களோட, முதல் மனனவிக்கு தான் இது எல்லாம் சேரனும்."
"அதுனால், தான் உங்களுக்கு கொடுக்க வேண்டியது கொடுக்கலாம்ன்னு நானும் அன்புவும் நினைச்சோம்."
"மற்ற படி, என் பாசத்தில் எந்த மாற்றமும் இல்லை". "என்னோட அப்பா, என் கண் முன்ன இருக்கனும்ன்னு ஆசை பட்டேன்."
"நான் உங்களை தினம் இங்க வந்து பார்த்துட்டு போவேன், அதுக்கு மட்டும் உங்க வீட்டுல அனுமதி வாங்கி கொடுங்க," என்று அழுது, அவள் தந்தையின் தடையை தடவி, "நான் கிளம்புறேன் பா."
என்று கூறி முடித்து, அன்பு கை பிடித்து "எனக்கு இவன் இருக்கான் பா, என்னை பற்றி நீங்க கவலை படாதீங்க ."
என்று வினோத், மற்றும் அன்புவுடன் கிளம்பி வெளியே சென்று விட்டாள் .
தான் வேண்டாம், அன்பு தன்னை பார்த்து கொள்வான் என்று கூறி ,சென்ற மகளை நினைத்து, பேரதிர்ச்சியில் இருந்தார் மனிதர்.
அன்பு குடும்பம் மட்டுமே சென்றது.
"யோவ் என்ன மனுஷன் யா நீ, ஹ்ம்ம் கர்மம் கர்மம்," என்று தலையில் தட்டி கொண்டு சென்றனர், பக்கத்தினர்.
"இதோட சொத்து பத்திரத்தை கொடுத்து விட்ட சென்றனர்," என்ற அசுவாசத்துடன், அமர் மற்றும் ராகுல்.
அன்னை கையிலிருக்கும் பத்திரத்தை வாங்கி அதில் அனைத்தும் சரியாக உள்ளதா என்று கவனித்தனர்.
இராஜ சேகரின் சொந்தங்கள், அவரை வெறுப்புடன், பார்த்து விட்டு, "இந்த ஊருல, எங்க உறவு இல்லாம நீ எப்படி இருக்கேன்னு பார்க்குறேன்."
"இப்பவும் எங்களுக்கு சுமதி, அவ பிள்ளைங்க தான், இந்த குடும்பத்தக்கு உரியவங்கள தோணுது."
"பணத்திற்காக, அடுத்த வீட்டு பொண்ணு வாழ்க்கையில விளையாடிய இந்த பாம்பை, எப்பவும் நாங்க, இராஜகோபால், மருமகளா ஏத்துக்க மாட்டோம்," என்று தீபிகாவை கை காட்டி கூறியதில் அதில் தீபிகா, அனைவரையும் முறைத்து பார்த்தார்.
அனைத்து உறவுகளும், ஒன்று கட்டி ஒரு இடத்தில வைத்து அழகு பார்க்கும், அன்புவிற்க்கும், அங்கு பத்திரத்தை சரி பார்த்து கொண்டிருக்கும் அமர் மற்றும் ராகுலையும் ஒப்பிட்டு பார்த்தனர், இராஜ சேகரின் குடும்பத்தினர்.
"இராஜ சேகர், நீ செய்த பாவத்திற்கான தண்டனை எது தெரியுமா," என்று கூறி, அவரின் இரு பிள்ளைகளையும் கை காட்டி விட்டு, சென்றார், அவரின் அத்தை.
" எங்க வீட்டு பக்கம் எல்லாம், இந்த சாக்கடையை கூட்டிட்டு வராத," என்று கூறி விட்டு அவர்களும் சென்றனர்.
அனைவரும் வெளியே வந்ததும், அவரவர் அவர்கள் இல்லம் நோக்கி சென்றனர்.
அங்கு கம்பீரமாக காட்டி கொண்ட சுமதி வண்டியில் அப்படி ஒரு அழுகை.
இனியா அவரை தோள் மீது சாய்த்து கொண்டு, "அத்தை என்ன நீங்களே இப்படி, இருந்தா எப்படி."
"எங்களுக்கு எல்லாம் உங்களை நினைச்சா பெருமையா இருக்கு, நீங்க என்னனா, அழுதுட்டு வரீங்க."
"அம்மா, போதும் நீ அழுதது, விடு இதோட," என்று அன்புவும் அன்னையை தேற்றினான்."
"இனி தான இருக்கு, அவனுக்கு, இறந்து போனவன், இப்போ உயிரோட இருக்கான்னு, இந்த ஊருல, அவனுக்கான, அடையாள அட்டைல இருந்து, எல்லா இடத்துக்கும் அவனும் அவன் குடும்பமும் போய் நிற்கும் போது, தெரியும் அவன் கஷ்டம் ."
"அவன் பசங்க பண பிசாசுங்க, இந்த ஆள் ஊரு விட்டு போகணும்ன்னு நினைச்சாலும் அவங்க விட மாட்டாங்க ."
" வெளிய அவன் கேள்வி கேட்குற ஜனங்களுக்கு, இத்தனை வருஷம் அவன் புதைச்சு வெச்ச, விஷம் எல்லாம், தோண்ட தோண்ட கிடைக்க போகுது."
"இந்த அரசாங்கத்துக்கு, பதில் சொல்ல முடியாம தவிக்க போறான்."
"இன்னும் எவ்வளவோ அந்த ஆள், தவிக்க போறத நீ பார்ப்ப," என்று அவனும் அன்னையை தேற்றினான்.
அன்புவின் எண்ணம் முழுதும் அன்னைக்கு ஏற்பட்ட அநீதிக்கு, இராஜ சேகரை பழி தீர்ப்பதே.


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top