அன்பின் இனியா 23 4

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நட்புக்களே .
இதோ அடுத்த பதிவு, படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் .


இதோ விஷாகா மருத்துவமனையில் சேர்த்து மூன்று நாட்கள் ஆகியது .
இன்னும் அவள் கண் திறக்கவில்லை .
மனதை தாக்கிய அதிர்ச்சியில் மயங்கிய விஷாகா இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறாள் .
முதலில் அதிர்ச்சி, என்று நினைத்து சிகிச்சை அளித்த மருத்துவர்களும், இப்பொழுது, இன்னும் இரு நாட்களில் விஷாகா கண் திறக்கவில்லை என்றால் கோமா செல்ல வாய்ப்பிருக்கிறது, என்று கூறி விட்டனர்.
இப்பொழுது என்று இல்லை, பல நாட்களாகவே விஷாகா அதித மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இப்பொழுது இன்னும் அதிகமாகியதின் காரணத்தால், இவ்வாறு என்றும் மருத்துவர்கள் கூறினர் .
இதில் ரேஷ்மியும், வினோத்தும் மிகவும் வருந்தினர்.
தன்னால் தான் சில நாட்களாகவே விஷாகா இப்படி மன அழுத்தத்தில் இருக்கிறாளோ, என்று இருவருக்கும் குற்ற உணர்ச்சி .
வினோத், வீட்டிற்கு செல்லாமல் மனைவியை காண தவம் இருக்கிறான் மருத்துவமனையில்.
வீடு, வாசல், குழந்தை என்று மறந்து, அவனின் உயிரான விஷாகாவின் வரவிற்கு காத்திருக்கிறான்.
அன்று விஷயம் கேள்வி பட்டு மயங்கிய உடன், அனைவரும் பதற்றத்தில் விஷாகாவை கவனிக்க ஆரம்பித்தனர்.
அன்பு எது நடக்க கூடாது என்று நினைத்தானோ, அதுவே நடந்த வேதனையில் ஒன்றும் புரியாமல் இருந்தான் .
விஷாகா மீதுள்ள கோவமும் பின்னுக்கு தள்ளி, முதலில் அவளை கவனிக்க ஆரம்பித்தனர் குடும்பத்தினர்.
சுமதி கேட்கவே வேண்டாம்.
மகள் எப்படி இவ்விஷயத்தை தாங்குவாள், என்ற தவிப்பில், அவரும் மகளுக்கு ஏதும் நடக்க கூடாது, இந்த அதிர்ச்சியில் இருந்து, அவள் மீண்டு வர வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டுதலை வைத்தார் .
குழந்தை ஆதவை இரண்டு நாள் மருத்துவ கண் காணிப்பில் வைத்திருந்து, வீட்டிற்கு சென்று விட்டனர்.
குழந்தை, அன்பு, இனியா மற்றும் சுமதியை தவிர யாரிடமும் செல்லாமல், ஒரே அழுகை.
உறக்கத்தில் கூட, இனியாவின் மடியிலேயே தஞ்சம்.
சிறிதேனும் அசைந்தாலும், உறக்கம் களைந்து, முழிப்பு வந்து விட்டால், வலியில் மீண்டும் அழுகை.
ஆகையால், மகன் உறக்கத்தில் இருக்கும் நேரம், இனியாவிற்கும் ஓய்வு வேண்டும் என்று, அன்பு ஒரு பூவை போல் மகனை, அவன் கையில் ஏந்தி இருப்பான்.
மீதி நேரம் எல்லாம், அன்பு, விஷாகாவை காண மருத்துவமனைக்கு சென்று விடுவான்.
வினோத்துடன் இருந்து கொள்வான் .
இந்த நேரத்தில் அன்பு உடன் இருப்பது, வினோத்திற்கு ஒரு பலம் .
இரவில் யாரேனும் ஒருத்தர் இருந்தால் போதும் என்றாலும், வினோத், குடும்பத்தினரை மறுத்து, அப்பொழுதும், தீவிர சிகிச்சை அறையில் உறங்கி கொண்டிருக்கும், மனைவிக்காக, அறையின் வெளியே இருந்து விட்டான்.
நாதனும் குழந்தைகளுக்காக வீட்டிற்கு வர சொன்னார்.
அவன் மறுத்து விட்டான்.
பெண்களுக்கு இறைவனை தஞ்சம் அடைவதை தவிர வேறு தெரியவில்லை.
அவளுக்காக வேண்டுதல், அர்ச்சனை, பூஜை என்று கோவிலுக்கும், மருத்துவமனைக்கும் நடையாக நடந்தனர்.
ஒவ்வொவொருவரும், இப்படி அவரவர் பிரெச்சனையில் இருந்தனர் .
சந்திரா குடும்பம், அன்பு மற்றும் நாதன் குடும்பத்திற்கு துணையாக இருந்தனர்.
அதிதிக்கு, விஷாகா அளவிற்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.
அவளும் அக்காவை நினைத்து, அவளுக்காக வருந்தினாள் .
இந்த நேரம் தான் குழந்தையுடன் அன்னை வீட்டிற்கு செல்வது உகந்ததில்லை, என்று இந்திரா அழைத்தும் அன்னை வீட்டிற்கு வர மறுத்து விட்டாள் இனியா.
"அம்மா, நீ கிளம்பு மா, நான் இப்போ இங்க இருக்கணும், பரவாயில்லை, எனக்கும் நீ அங்க இல்லாம, வீட்டுல கஷ்டம்ன்னு புரியுது, நான் இப்போ இங்க இருந்து எல்லாரையும் பார்த்துக்கணும்."
"அதியும் இங்க இருக்கா, இப்போ, குழந்தைக்கு பீவர் இல்லையே, நான் பார்த்துக்குறேன்," என்று அன்னையை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தாள் .
இந்திராவும் , முதல் இரண்டு நாள், மகள் இருந்த குழப்பத்திற்கும், இப்பொழுது, மகள் தெளிவுடன் இருப்பதில், இனி வீட்டை பார்த்து கொள்ளவாள் என்ற நம்பிகையில், அவர் இல்லத்திற்கு கிளம்பினார்.
அதுவரை, சுமதிக்கு நேரத்திற்கு உணவு கொடுப்பது, அவரை தனியாக விடாமல், அவருடன் இருந்து கொண்டது, வீட்டினரை, அந்தந்த நேரத்திற்கு உன்ன வைத்தது எல்லாம் அவர் தான் .
இந்திரா மனதிலும், அதே தான், எதிரியாக இருந்தாலும் எந்த பெண்ணிற்கும் இது போன்ற நிலை வர கூடாது, என்று சுமதிக்காக வருந்தினார்.
உற்ற நேரத்தில் உதவும் சொந்தம் கிடைப்பது ஒரு வரம் .
அந்த உறவுகள், இங்கு அன்பு குடும்பத்தில் இருப்பதை கண்டு சரணும், சொந்தங்களை பற்றி நினைத்து கொண்டான் .
இனியா குழந்தை உறங்கும் நேரம், அனைத்து வேலைகளும் வேகமாக முடித்து, பிறகு சுமதியை, எந்த சிந்தனையும் இழுத்து கொள்ளாமல், தோட்டம், விஷாகாவை காண மருத்துவமனைக்கு அனுப்புவது, என்று அவரை திசை திருப்பினாள் .
அவளுக்கு, மனதில் கோவம், வேதனை, பயம் என்று எல்லாம் கலந்த ஒரு உணர்வில், அவள் வீட்டில் வலம் வந்தாள் .
இந்த ஒரு வாரமாக, யாரிடமும் பேசவில்லை.
ஏன் அன்புவிடம் கூட, கேள்விக்கு, பதில் தந்தாள், அதிக பேச்சுக்கள் இல்லை.
அன்றும், இந்திரா வீட்டிற்கு சென்றதும், வேலை முடித்து, குழந்தையை, வலி நினைத்து, அவன் சிணுங்காமல், இருக்க, என்று சுமதி தோட்டத்திற்கு குழந்தயை தூக்கி சென்றார்.
அந்நேரம் மருத்துவமனைக்கு, கிளம்பி கொண்டிருந்த அன்பு, இனியாவை அழைத்தான் .
அவனும் இந்த நாட்களில் பார்க்கிறான் தானே, மனைவி ஏதோ மனதில் போட்டு குழப்பத்தில் இருக்கிறாள், என்று.
இனியா ஏதோ நினைவில், அறைக்குள் வந்ததும், அவளை இழுத்து அவன் மடியில் அமர்த்தி கொண்டதும், அவ்வளவு தான், இத்தனை நாள் இருந்த வேதனை, மன வலி, கோவம் எல்லாம், அவன் தோளில் கண்ணீராக இளைப்பாறியது.
எதற்கு என்றே தெரியாத ஒரு அழுகை.
மனைவியின் முதுகில் தட்டி கொடுத்து, அவளை ஆசுவாசப்படுத்தி, அவள் அழுகை குறைந்து, விசும்பலில் முடியும் வரை, ஒன்றும் பேசாமல், இருந்தான்.
பிறகு மனைவி முகம் நிமிர்த்தி, "ஏன் டா, மனசுல இவ்வளவு கஷ்டம், அழுத்தி வெச்சி இருக்க," என்று கணவன் மென்மையாக கேட்டதும் ,
"தெரியல, பாப்பாக்கு, இப்படி ஆனதும், எல்லார் மேலும் ஒரு கோவம்."
"உங்க அக்கா இப்படி இருக்க காரணம், நீங்க எல்லாரும் தான்னு ஒரு கோவம் ."
"இப்போ, அவங்க நிலைமை பார்த்தா ரொம்ப கவலையா இருக்கு ."
"அத்தை, ஏதாவது அழுதாலும் பரவாயில்லை. அவங்க இப்போ தான் ரொம்ப தைரியமா இருக்கா மாதிரி ரியாக்ட் பன்றாங்க ."
"ஆதவ், ஹாஸ்பிடல் போறதுன்னு, ஏதோ ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்காங்க."
"அவங்கள நினைச்சா, பயமாவும் இருக்கு, பாவமாவும் இருக்கு."
அவள் மனதில் இருப்பதை எல்லாம், விசும்பலுடன், அவனிடம் கூறி முடித்தாள் .
இனியாவை ஆதரவாக அணைத்து, "எனக்கு, அம்மாவ விட, அக்கா ஒடஞ்சிடுவான்னு தான் பயம் இனியா, அதான் இந்த விஷயம் தெரிய கூடாதுன்னு, யாருக்கும் இவ்வளவு நாள் சொல்லல."
"அந்த ஆளோட அம்மா வாழ்ந்த வாழக்கை எனக்கு தெரியும், அதுனால, அம்மாக்கு இதுல பெருசா வருத்தம் இருக்காது, ஆனா ஏமாற்றம் இருக்கும்."
"நீ சொல்றது சரி தான், அம்மா அவங்க எந்த உணர்ச்சியையும் காட்டாம இருக்குறது, எனக்கும் பயமா தான் இருக்கு."
"நானும் அம்மா கிட்ட கேட்டேன், அதுக்கு, அவங்க, அந்த ஆள் எனக்கு இருக்குறதும் ஒன்னு தான், இல்லாததும் ஒன்னு தான்னு சொல்லிட்டாங்க ."
ஏன் சுமதி இப்படி கூறினார், என்று இனியாவும் தெரிந்து கொண்டாள் .
ஏற்கனவே, சுமதி, அவர் கணவரை பற்றி கூறி இருக்கிறார் தானே.
"இனியா, இப்போ, எனக்கு இருக்குற பெரிய கவலை எல்லாம், அக்கா, முதல்ல, நல்லபடியா, கண் முழிச்சி வரணும்."
"அவ மனச திடமா வெச்சுக்கணும், அந்த பயம் தான் எனக்கு."
அன்புவும் அவன் பயத்தை, மனைவியன்றி யாரிடம் கூற, அவன் கவலையை வெளிப்படுத்தினான்.
"எல்லாம் சரி ஆகும்ன்னு எனக்கு சொல்ல தெரியல, ஆனா, இதுல இருந்து மீண்டு வருவோம், கவலை படாதீங்க," என்று கணவனுக்கு ஆறுதல் அளித்தாள் .
இவ்வாறு அனைவரையும் கவலையில் தள்ளிய, விஷாகா, நான்கு நாட்கள் கழித்து, கண் முழித்தாள் .
இதோ மனதில் பல எண்ணங்கள், இறுதியில் அன்பு கூறியது மனதை தீண்டியது, கடின பட்டு கண் திறந்தாள், உடல் ஏதோ அசைக்க மறுத்தது .
ஒரு கையில் ஊசி ஏற்றியதின் வலி, செவிலியர், விஷாகாவை கண்டதும், மருத்துவரை அழைக்க சென்றார்.
வெளியே வந்து, வினோத்திடம் கூறினார்.
அவனின் மகிழ்ச்சி கண்ணீராக வெளியேறியது, அன்று குழந்தைகளும், அன்னையை காண, வேண்டும் என்றதில், அன்பு அக்ஷ்த், மற்றும் அக்ஷியை அழைத்து வந்திருந்தான் .
செவிலியர் கூறிய செய்தியில், வினோத்தை கண்டு, "மாமா, ரிலாக்ஸ், போய் அக்காவை பாருங்க," என்று முதலில், வினோத்தை அனுப்பி வைத்தான்.
அறைக்குள் நுழைந்ததும், அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டு, விஷாகாவை அமர செய்தான்.
"என்ன, அனாதையாக்கணும்ன்னு நினைச்சியா டி, கண்ணே திறக்காம படுத்துட்ட," என்று அவளை கட்டி கொண்டு, கதறினான் .
இந்த சில காலமாகவே கணவன் மனைவிக்குள்ள, சண்டை தான்.
எதற்கெடுத்தாலும் வினோத்தின் கட்டளையில், வேண்டா வெறுப்பாக, வீட்டினர்க்கு என்று வேலைகள் செய்தாள் .
தன் மீதான காதல், அழிந்ததோ, என்ற சிந்தனை, அவளுக்கு.
அவளும் அதே தான், தன்னை, அடிமையாக்க நினைப்பதாக, கணவன் மீதான காதல் மறைந்து, கோவமே தலை தூக்கியது.
இப்பொழுது, தன் மீதான, கணவனின் காதலும் தேடலும், உணர்ந்து கொண்டாள் பெண்ணவள்.
தான் இல்லாமல், அவனுக்கு வாழ்க்கை இல்லை, என்று உணர்ந்த தருணம்.
அதில் கர்வமே விஷாகாவிற்கு.
இத்தனை நாள், தன் மீது இருந்த கர்வம், ஆணவம் எல்லாம், கணவனின் காதல் அறிந்த பின் ஒன்றுமே இல்லை, என்று உணர்ந்த அழகிய தருணம் அது.
அவனை கட்டி பிடித்து கதறினாள் .
"நீ எதுக்குடி, தகுதி இல்லாத, ஆளு மேல பாசம் வெச்ச. உன் பாசத்துக்கு எல்லாம்,அந்த ஆளு தகுதியே இல்லை." என்று ராஜசேகரை பற்றி பேசினான் .
"அதுனால, இப்போ உனக்கு எவ்வளவு கஷ்டம் பார்த்தியா, இப்படி, நீ படுத்த படுக்கையா, உன்ன பார்க்க நான், ஒவ்வொவொரு, நொடியும் செத்துட்டேன்," என்று கதறினான், ஆறடி மனிதன், குடும்பத்தின் பொறுப்பான மகன், அண்ணன், சிறந்த தொழிலதிபன் .
பாசம், காதல், இது எப்படி பட்ட மனிதர்களையும் புரட்டி போடும்.
விஷாகா இப்பொழுது தான் அவளின் உலகம் எது என்று தெரிந்து கொண்டாள்.
"ஸாரி வினோத், ஸாரி, எனக்கு எது செய்யறதுன்னு, தெரியல, நிறைய எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்தேன் ."
"பாப்பாவா ஹர்ட் பண்ணிட்டேன், அதுக்கு மன்னிப்பே இல்லை, இது மட்டும் இல்லை, இன்னும் நிறைய," என்று ரேஷ்மியை மனதில் வைத்து கொண்டு,கதறி அழுதாள் .
"நான், என்ன பண்றது இப்போ," என்று ஒன்றும் தெரியாமல், சிறு குழந்தை போல், கேவலுடன் அவளின் அழுகை.
அதற்குள், மருத்துவரும், அன்பு குழந்தைகளுடன், வந்து சேர்ந்தனர்.
அவர் விஷாகாவை பறி சோதித்து, இனி, பதட்ட படமால், இருக்க வேண்டும் என்று கூறி, சில மருந்துகள் எழுதி கொடுத்து, வீட்டிற்கு கிளம்பலாம், என்று கூறி சென்றார்.
அக்த்ஷிதா, அன்னையை கண்டு அழுதாள், விஷாகாவின் கன்னத்தில் முத்தம் வைத்து, "உங்களுக்கு சரி ஆச்சு மா, டோன்ட் வொரி ," என்று அன்னையை, தேற்றினாள் .
அக்ஷித்துக்கு ஐந்து வயது என்றாலும், அன்னை மருத்துவமனையில் இந்த நான்கு நாட்களாக இருப்பதில், ஏதோ ஒரு பயம் குழந்தைக்கு.
"அம்மா, உனக்கு பீவர் போச்சு, டாக்டர், சொன்னாரு தானே, ஏன் அழுற, இனி ஊசி போட மாட்டாங்க, வா வீட்டுக்கு போலாம்," என்று விஷாகாவின் கண்ணீரை துடைத்தான் மகன்."
இதில் இன்னும் அழுகை கூடி, பிள்ளைகள் இருவரையும் கட்டி கொண்டு அழுதாள்.
இதுவரை, தான் பெற்ற பிள்ளைகளுக்கு என்ன செய்தேன் நான், என்று பலமாக மனதில் அடி வாங்கிய உணர்வு.
"என் வாழ்க்கையை நானே, துன்பத்துக்கு தள்ளிட்டேன் ."
"நான் உங்களுக்கு ஒண்ணுமே செய்யலை, நீங்க இரண்டு பேரும் என் பொக்கிஷம், இது எனக்கு தெரியவே இல்லை, ஸாரி ," என்று ஒரே பிதற்றல் தான் அவளிடம்.
விஷாகா மிகவும் உணர்ச்சி வச பட்டிருக்கிறாள், என்று அறிந்த அன்பு, வினோத்திற்கு கண்ணசைத்து, அவனை முதலில் நடப்புக்கு கொண்டு வந்தான் .
"விஷா நாம வீட்டுக்கு கிளம்பலாம் வா," என்று வினோத் கூறியதும், அன்புவை ஏறெடுத்து பார்க்க முடியாமல்,தலை குனிந்து கொண்டே,
"அன்பு என்னை, மன்னிச்சுடு டா, நான் " என்று ஏதோ பேச வருவதற்குள், விஷாகாவின் பேச்சை, தடை செய்து, அக்காவின் நெற்றயில் அன்னை கொடுத்து விட்ட, விபூதியை பூசி "அக்கா, முதல்ல, ஒன்னும் இல்ல, சரியா, எல்லாம் பார்த்துக்கலாம், வா மனசுல எதையும் போட்டு குழப்பாத."
"அம்மா, உனக்கு அர்ச்சனை செய்து கொடுத்து விட்டாங்க, வீட்டுல எல்லாரும் உனக்காக வெயிட்டிங் , போலாமா " என்று அவள் நெற்றயில் திருநீர் இட்டு, அக்காவின் கை பிடித்து, அழைத்து சென்றான்.
"உனக்கு நான் இருக்கேன்," என்று அன்பு அன்று கூறியது அனைத்தும் அவள் நினைவிற்கு வந்தது .
பல கேள்விகள் மனதில் அணிவகுத்து நிற்கிறது, தம்பியிடம் கேட்க .
அவனும் உணர்ந்து தான் இருந்தான்.
தன்னையே அடிக்கடி பார்த்து கொண்டு ஏதோ கேட்க தயங்கும் அக்காவின் நிலை புரிய தான் செய்கிறது அன்புவிற்கு.
விஷாகாவின் இந்த தயக்கம் புதிது .
ஆனால், அவள் எதிர்பார்க்கும் நபரை பற்றிய பேச்சே வேண்டாம், என்று தான் அவன் தவிர்த்து வந்தான்.
அனைவரும் நேராக சுமதி வீட்டிற்க்கே வந்தனர்.
தேவகி வீட்டில் நாதன், ரேஷ்மி மற்றும் தேவகியும் அங்கு சுமதி வீட்டிற்க்கே வந்து சேர்ந்தனர்.
அன்பு நேராக அவன் வீட்டிற்கு அக்காவை அழைத்து வந்தான்.
அன்னையை கண்டதும் ஓடி சென்று கட்டி கொண்டு, சிறிது நேர அழுகை, மன்னிப்பு என்று ஆரம்பித்து, அனைவரிடமும் மன்னிப்பு கேட்கும் படலம் என்று விஷாகாவிற்கு சிறிது நேரம் ஆகிற்று .
சிறியவர், பெரியவர் என்று அனைவரிடமும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவளிடம் என்ன என்று மறுப்பது.
அவள் நிலை அறிந்து, மன்னித்தனர்.
நேராக இனியாவிடம் சென்று, அவள் செய்த கொடுமைக்கு மன்னிப்பு வேண்டினாள் .
"நீங்க ஒன்னும் புத்தி இல்லாம இந்த மாதிரி செய்யலை. தெரிஞ்சே தப்பு செய்யறவங்கள, மன்னிக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசு எல்லாம் இல்லை."
"என் குழந்தையோட வலி, தவிப்புக்கு நான் என்னைக்கும் உங்கள மன்னிக்க தயாரா இல்லை." என்று தெளிவாக கூறினாள் இனியா .
மற்றவர் போல் இனியாவும் விஷாகாவை மன்னித்து இருந்தால் தான் விஷாகாவிற்கு மேலும் குற்ற உணர்வாகி இருக்கும்.
விஷாகா செய்ததும் சாதாரண செயல் அல்லவே .
அமைதியாக ஒரு புன்னகை சிந்தி, தம்பியிடம் சென்று அவன் அருகில் அமர்ந்தாள் .
"ப்ளீஸ் எனக்கு சொல்லு அன்பு ."
"எதுவும் தெரியலை, எப்படி பார்த்த, அப்பா தானா," மனம் எல்லாம் தந்தையை பற்றிய தவிப்பு.
"அடி யேய், ஏதாவது அறிவு இருக்கா உனக்கு?"
"உன்னை ஏமாத்தி இருக்கான் அந்த ஆளு, அத்தை நிலைமை யோசிச்சியா, எங்களை விட இன்னும் அப்பா அப்பான்னு, அந்த ஆளு தான் முக்கியமா ."
"பைத்தியக்காரி மாதிரி கேள்வி கேட்குற," என்று மனைவியை கடிந்து கொண்டான் வினோத்.
அவனுக்கு ஆயாசமாக இருந்தது .
செத்து பிழைத்த நிலை மனைவிக்கு.
யாருக்காக, ஒரு குடும்பத்தையே ஏமாற்றிய ஒருவனுக்காக, என்று கோவம் மனைவி மீது.
அவள் எதற்கும் மறுத்து பேசாமல், கணவனின் திட்டுகளை வாங்கி கொண்டு, தம்பியையே பார்த்து கொண்டிருந்தாள் .
"அக்கா, உனக்கு இப்போ, இந்த விஷயம் ஏன் தெரியணும், அந்த ஆளு, அம்மாவுக்கு என்ன நியாயம் செய்தான்னு எனக்கு தெரியலை."
"அவன் தான்னு நேருல பார்த்ததும், கொல்லணும்ன்னு எனக்கு வெறி ."
"அவன் நல்லா தான் இருக்கான், அவனை பற்றி நினைச்ச்சு நீ உன்னை வருத்திக்காத ."
"அன்பு எப்படி கண்டு பிடிச்ச, அவர் இறந்ததா, தகவல் வந்தது."
"நம்ம போலீஸ் விட்டு பாடி தேடணும், கிடைக்கல, அப்பறம்," கைகளில் நடுக்கம், தம்பியின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு, கேள்வி வந்தது .
"அவன் வேணும்னே தலை மறைவா இருந்தா எப்படி கண்டு பிடிக்குறது," பல்லை கடித்து கொண்டு கூறினான்.
"அந்த ஆளு இறந்ததா தகவல் வந்தது ஒரு ஊரு, அவன் வாழுறது இப்போ வேற இடம் ."
"எல்லாம் பிளான், ஆளு ஏற்பாடு செய்து,பொய் தகவல் கொடுக்க வெச்சான், பிராட் ."
அவ்வளவு கோவம் அன்புவிற்கு .
"ஏன் " ஒற்றை கேள்வி, தவிப்புடன், தம்பியை பார்த்தாள்.
"நான் தொழில் விஷயமா, மேனேஜரை அனுப்புனேன் . அங்க லீஸுக்கு இடம் பார்த்து, கவர்ன்மென்ட் அப்ரூவ் வாங்கி, எல்லாம் முடிஞ்ச நேரம், எங்க இருந்தோ, தொழில் நடக்கணும்ன்னா, அந்த ஊர் முக்கிய ஆளுக்கு, ஒரு அமௌன்ட் தரணும்ன்னு நம்ம மேனேஜரை மிரட்டிட்டு போனாங்க ."
"இவரு முடியாது சொன்னதுக்கு, நம்மள பெத்த மகராசன், தான் அந்த ஊருல முக்கிய ஆளாம் ."
"மிரட்டுறதுக்கு, ஒரு படையோடு வந்து சேர்ந்து இருக்காரு."
"மேனேஜருக்கு, இந்த ஆள போட்டோல பார்த்து இருக்காரே, அந்த சந்தேகத்துல எனக்கு இன்போர்ம் பண்ணார் ."
"நானும் இன்னும் இரண்டு நாளுல பணம் கொடுக்குறா மாதிரி பேச்சு கொடு, நான் அங்க வரேன்னு சொல்லி, வேற எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன் ."
"போய் பார்த்தா தான் தெரியுது, இந்த பரதேசிய ."
"நானும் முதல்ல நம்பள, பணம் வாங்க வந்தான், என்னை பார்த்ததும், அவனுக்கு ஒரு தடுமாற்றம், ஒரு பயம், எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைச்சிகிட்டு, சாதாரணமா பேச ஆரம்பிச்சான்."
"என்னை புதுசா பார்குறா மாதிரி நடிக்கிரானான்,"
" அப்போ, என்னை பார்த்ததும் ஏன் தயங்கணும் சொல்லு."
"எனக்கு ஒன்னும் புரியலை, ரொம்ப சந்தேகம் ."
"அவன் கிட்ட பணம் குடுக்க முடியாதுன்னு, சொன்னேன். நானும் சண்டைக்கு நின்னேன்.என்னை எதிர்காம முகத்துல அவ்வளவு பயத்தோட, வண்டி எடுத்துக்கிட்டு கிளம்புனான்."
"அவனுக்கு தெரியாம, நானும் அவன் வண்டி பின்னாடியே கிளம்புனேன் ."
"அவன் வீட்டுக்குள்ள, போறதை பார்த்து, ஏதோ ஒரு கேள்வி எனக்குள்ள, நானும் போய் சேர்ந்தேன்."
"அங்க, அவன் மனைவியை கூப்பிட்டு, அந்த சுமதி பையன் என்னை பார்த்துட்டான்னு, அப்படி ஒரு பயத்துல கத்திக்கிட்டு இருந்தான்."
" உடனே, வீட்டுக்குள்ள போய், அவன் சட்டையை பிடிச்சேன், உடனே யாரோ இரண்டு பேரு, அப்பா மேல கை வைப்பியான்னு எகுறுனாங்க,"
"அப்போ நான் யாரு டான்னு கேட்டதும், அவங்களுக்கும் எல்லாம் தெரியும் போல, உடனே, எல்லாருக்கும் அதிர்ச்சி."
"எப்படி ஒரு மனுஷன், இறந்தது போல, தலைமறைவா இத்தனை வருஷம் இருக்க முடியுதுன்னு, எனக்கு அதிர்ச்சி."
"ஏன் டா இப்படின்னு கேட்டதுக்கு எள்ளலா பதில் சொல்றான்."
"அக்கா, தீபிகா பைனான்ஸ், அந்த ஊருல ரொம்ப பேர் போன, பைனான்ஸ் கம்பெனி ."
"இந்த ஆளு, வட நாட்டுல படிக்க போன அப்போ, அந்த அம்மாவுக்கும், இவருக்கும் காதல் ."
"நம்ம தாத்தா சம்மதிக்கல, அதுனால, அவர் அங்கேயே கல்யாணம் செய்துட்டு வாழ்ந்து இருக்காரு."
"இந்த அம்மாவும், பண பைத்தியம் போல, நச்சரிக்க ஆரம்பித்ததும், இங்க வந்து, கல்யாண விஷயத்தை மறைச்சு, தொழிலுக்குன்னு பணம் கேட்டு இருக்காரு."
"நம்ம அம்மாவை கல்யாணம் செய்துகிட்டா, பணம் கொடுக்குறதா தாத்தா சொன்னதும், பணத்துக்காக, நம்ம அம்மா வாழ்க்கையை நாசம் செய்து இருக்கான் ."
"அங்க ஏற்கனவே அவனுக்கு இரண்டு பசங்க."
"அவர் முதல் பொண்டாட்டியும், எல்லா பணமும் கிடைச்சதும், அங்க இருந்து வர சொல்லி இருக்காங்க."
"எல்லா பண பேயும் ஒண்ணா சேர்ந்தா, எப்படி இருக்கும்."
"இங்கேயும் அங்கேயும்ன்னு, அவனுக்கு வாழ்க்கை ஓடி இருக்கு."
"இந்த ஆளுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்குன்னு, தாத்தாக்கும் தெரியாது."
"நீ பொறந்ததும், உன் மேல மட்டும் அந்த ஆளுக்கு பாசம், அதுனால, தான், இங்க அடிக்கடி வந்து உன்னை பார்த்துட்டு போயிட்டு இருந்தான்."
"யாருக்கும் சந்தேகம் வராதா மாதிரி, இங்கேயும் தொழில் கவனிக்குற மாதிரி இருந்துகிட்டு, நீ வளர்ந்ததும், உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சு, இந்த கடையையும் கொடுத்துட்டு, அவன் கடமை முடிஞ்ச மாதிரி கிளம்பிட்டான் ."
"அந்த ஆளுக்கு உன் மேல மட்டும் பாசம் அக்கா, இத என்னன்னு சொல்றது."
"வீட்டுல கல்யாணம் செய்ததை சொல்ல தைரியம் இல்லை, என் அம்மா வாழ்க்கையை ஏமாத்தி இருக்கான் ."
கைகளை காற்றில் குத்தி கொண்டு அவன் கோவத்தை வெளி படுத்தினான்.
"நான் எப்படி எல்லாருக்கும் சொல்வேன் சொல்லு, நீ தாங்குவியா, அந்த ஆளும் இதே தான் என் கிட்ட சொல்லி மிரட்டினான்."
"இந்த விஷயத்தை நான் சொல்வேன்னு மிரட்டுனதுக்கு, உன் பேரு சொல்லி, என்னை மிரட்டுறான் ."
"நீயும் இப்போ, விஷயம் கேள்வி பட்டதும், உடைஞ்சிட்ட தானே, அதான், அப்போவே மறைச்சிடலாம்ன்னு இருந்தேன் ."
"ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ச்சு ."
"உன்னை வளர்த்து ஒரு நல்ல இடத்துல சேர்க்கும் கடமை அவனுக்கு இருந்தது தான், அது தான், இத்தனை வருஷம் நடிப்பு."
"நம்ம அம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையை அவ்வளவு கொச்சையா பேசினான்."
"கேட்ட எனக்கு எப்படி இருக்கும் சொல்லு."
"அங்கேயே அவனை சாகடிக்கணும்ன்னு வெறி எனக்கு ."
"உனக்கு கல்யாணம் முடிஞ்சதும், இப்படி ஒரு டிராமா செய்து, ஆள் அவன் குடும்பதோட ஹாப்பி ."
"ஏன் அவர் சூழ்நிலை சொல்லியே, இங்க இருந்து போய் இருக்கலாமே, எதுக்கு, இப்படி ஒரு நடிப்பு, என்று தேவகி கேட்டார்.
அவ்வளவு வேதனை அனைவரிடமும் .
"அது எப்படி, சொல்வாரு, இந்த ஊருல அவர் சேர்த்து வெச்ச நல்ல பெயர் எல்லாம் போய்டும்ல, அதான், இறந்து போனதா ஒரு படம் காட்டி இருக்கான் " என்று சரண் .
வீட்டினர் அனைவரும், ஏதோ கதை கேட்பது போல் கேட்டு கொண்டனர்.
ஏதேதோ எண்ணங்கள், அனைவர் மனத்திலும் .
விஷாகா மட்டும்,"அன்பு என்னை அப்பா கிட்ட கூட்டிட்டு போ ப்ளீஸ் " என்று கெஞ்சினாள் .
மீண்டும் வினோத்திற்கு கோவம், அவன் ஏதோ திட்டுவதற்குள், தேவகி மகனை அடக்கினார்.
இப்பொழுது, மருமகளின், உடல் நிலை கருத்தில் கொண்டு,"வினோத், கொஞ்சம் யோசிச்சு பாரு, அவளுக்கு அவங்க அப்பா தான் எல்லாமே."
"இத்தனை வருஷம் ஒருத்தர் இல்லைன்னு, நினைச்சு மனசு ஏங்கி, இப்போ அவர் உயிரோடு இருக்காருன்னு கேள்விப்பட்டதும், அவளுக்கும் மனசு துடிக்கும் தானே ."
"நமக்கு, அவர் செய்தது, துரோகம், ஆனா, விஷாகா அவர் மேல எவ்வளவு பாசம் வெச்சி இருந்தான்னு எல்லாருக்கும் தெரியும், விடு அவ போக்கிலேயே விடு, அவ உடம்பும், மனசும் இப்போ சரி இல்லை," என்று கண் கலங்கினார்.
நாதன், என்ன பேசுவது என்று தெரியவில்லை.
விஷாகாவின், அப்பா மீதான, பைத்தியம் அனைவரும் அறிந்ததே.
மருமகளின் தலையை வருடி, "நாங்க இருக்கோம் மா," என்று ஆறுதல் கூறினார்.
அன்பு, அக்காவை ஊன்றி பார்த்தான், "என்ன அன்பு," விஷாகா தயக்கத்துடன் கேட்டதும், "சரி அக்கா, பார்க்கலாம் ," என்று கூறி, அன்னையிடம் சென்றான்.
மகன் அருகில் வந்ததும், அதுவரை, சிலை போல் அமர்ந்திருந்த சுமதிக்கு உயிர் வந்ததோ, மகனின் இடுப்பை கட்டி கொண்டு கதறி தீர்த்தார்.
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
இனியா பதில் சரிதான்
விஷாகா மனசுல என்ன இருக்கு
அப்பன பாத்து என்ன செய்ய
போறா
 

achuma

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
இனியா பதில் சரிதான்
விஷாகா மனசுல என்ன இருக்கு
அப்பன பாத்து என்ன செய்ய
போறா
Thanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top