அன்பின் இனியா 23 3

Advertisement

achuma

Well-Known Member

முதலில் என்ன நடந்தது, குழந்தையின் அழுகைக்கு காரணம் ஒன்றும் புரியாமல், இனியா, அங்கு பதட்டத்துடன் இருந்தாள் .
குழந்தையை தூக்கி, அவனை ஆராய்ந்து, பிறகு, அவன் கைகளை கண்டதும், ஆள்காட்டி விரலின் பாதி, நசுங்கி, தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, பதறி விட்டாள்.


"ஐயோ, டேய் ஆதவ் கண்ணா, என்ன டா, கதவுல கை மாட்டிக்கிச்சா, கடவுளே," என்று சேலை முந்தானையால், கீழே விழாதவாறு, விரலோடு சேர்த்து அணைத்து, மகனை இறுக்கி அணைத்து கொண்டாள் .
"அழு டீ, அழு, அன்னைக்கு, உன் புருஷன் என்னை பேசும் போது வேடிக்கை பார்த்துகிட்டு நின்ன தானே, இந்த வலி எனக்கு அன்னைக்கு இருந்தது".


"இப்போ நீயும் படு. எப்பா, அதிதி கல்யாணத்துப்போ, உன் முகத்தில என்ன ஒரு சந்தோஷம், மூத்தவ நான் இருந்தும், எனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் எல்லாம் நீ வந்த பிறகு தான், அன்புவுக்கு கிடைக்குதுடி நல்லா துடி, உன் பையனுக்கு இப்போ, பாதி விரல் இல்லை".

"எனக்கு சந்தோஷமா இருக்கு".
"ச்சே ஒரு விரல் தான் நசுங்கி இருக்கு, எல்லா விரலும் நசுங்காம போச்சு, இன்னும் நல்லா கதவு சாத்தி இருக்குமோ," என்றதும், இனியாவுக்கு மகனின் வலியில் அரைகுறையாக அவள் கேட்டு கொண்டதில், முழுதும் தெளிந்து, அவளை அக்னி பார்வை பார்த்து, உடனே, வெளியே ஓடினாள் .


கிட்ட தட்ட பித்து பிடித்த நிலையில், குழந்தையை, தூக்கி கொண்டு, அவள் குழந்தைக்கு எப்பொழுதும் தடுப்பூசி போடும் மருத்துவ மனைக்கு சென்றாள் .
அவள் வரும் வழியிலேயே, குழந்தை எப்பொழுதோ, மயக்க நிலைக்கு சென்று இருந்தது.
அது வேறு அவளுக்கு ஒரு பக்கம் பயம்.


"ஆதவ் கண்ணா, டேய் குட்டி பையா," அவளின் பிதற்றல், எல்லாம் குழந்தையை பற்றியே இருந்தது.
வேறு வார்த்தை வாயில் இருந்து வர மறுத்தது.
சிந்தனை அனைத்தும், உறைந்து போய், என்ன செய்வது என்று தெரியாத நிலை.


நேராக மருத்துவர் இருக்கும் அறைக்குள் குழந்தயை தூக்கி கொண்டு வந்த வேகத்தில் அவர்களும், சூழ்நிலை புரிந்து, குழந்தையை வாங்கி அங்கு மெத்தையில் படுக்க வைத்து, முதலுதவி செய்தனர்.

என்ன நடந்தது என்று பல முறை கேட்டும் அவள் வாயில் இருந்து வார்த்தை இல்லை.
குழந்தையை பார்த்து கொண்டே இருந்தாள் .
யாரை அணுகுவது என்று யோசித்த, மருத்துவர், செவிலியரை அழைத்து, முதலில் இனியாவிற்கு தண்ணீர் கொடுக்க செய்தார்.


செவிலியர் இனியாவிற்கு தண்ணீர் கொடுத்து, முதலில் அவளை சிறிது ஆசுவாசப்படுத்தி, "மேடம் பாப்பா பேர் சொல்லுங்க, உங்க வீட்டுக்கு சொல்லுங்க, நசுங்குன, பாதி விரல் இனி, பிக்ஸ் ஆகாது."
"பிளாஸ்டிக் சர்ஜெரி செய்யணும் ."
உடனே இனியா, "பாப்பா விரல் கதவுல மாட்டிக்கிச்சு, அவருக்கு அவருக்கு சொல்லணும்," என்று மூச்சு வாங்கி கொண்டே, திக்கி திணறி கூறி முடித்தாள்.


அங்குள்ளவருக்கு, அவளின் பயம் புரிந்தது.
மருத்துவர் "ரிலாக்ஸ், வேற விரல் பிக்ஸ் பண்ணலாம், உங்க பேர் சொல்லுங்க, அன்பு மற்றும் இனியா, பெயர் மற்றும் குழந்தையின் பெயர் கூறியதும், அவளிடம் வேறு கேள்வி கேட்டாலும் பதில் வராது, என்று தெரிந்து இருந்த மருத்துவர், "பேரன்ட்ஸ் ரெஜிஸ்டர் பார்ம்ல இவங்க காண்டாக்ட் நம்பர், எடுத்து, இவங்க ஹஸ்பண்டுக்கு இன்போர்ம் பண்ணுங்க," என்று கட்டளை பிறப்பித்து, குழந்தைக்கு, மயக்கத்தில் உள்ளதால், அதற்கான மருந்தினை கையில் ஊசி ஏற்றி செலுத்தினர்.


இதோ அடுத்த அரை மணி நேரத்தில் அன்பு மற்றும், தேவகி, சந்திரா குடும்பம் அங்கு மருத்துவமனையில்.
அருகில் உள்ளதால் அனைவரும் கூடி விட்டனர்.
மோகன் வீட்டிற்கும் செய்தி அனுப்பி, அனைவரும் வந்தனர்.


அங்கு அவளின் பெற்றோருக்கும் அதிர்ச்சி .
பேரனின் முகம் கண் முன் வந்து, உடனே அவனை காண அனைவரும் புறப்பட்டனர்.
இளங்கோ, பெற்றோரின் பதைப்பு பார்த்து, அவன் இருவரையும் அழைத்து வந்து சேர்ந்தான் .


வினோத்தின் கட்டாயத்தில் விஷாகா வந்து நின்றாள் .
எந்த ஒரு பயமோ, தவிப்போ அவள் முகத்தில் சிறிதும் இல்லை.
இனியா குழந்தையுடன் வெளியே சென்றதும், அங்கு நிற்காமல், மன நிறைவுடன், அவள் வீட்டிற்கு சென்று விட்டாள் விஷாகா.


வினோத், தேவகிக்கு தகவல் கூறிய பிறகு, தன்னையும் அழைத்து செல்லுமாறு, அவனிடம் கூறவே, வீட்டிற்கு வந்து மனைவி அன்னையுடன், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் வினோத்.

அவள் செயல் யாருக்கும் தெரியவில்லை.
தம்பியின் வேதனை காணவே மனம் துள்ள வந்து சேர்ந்தாள் விஷாகா .


அங்கு வந்து அன்புவின் வேதனை முகமும், இனியாவின் அழுகையும் காண காண விஷாகாவிற்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.
சிலை போல், வெளியே நின்று கொண்டிருந்தான், அன்பு.
அதிதி, மற்றும் தேவகி சுமதி இனியாவிற்கு ஆறுதல் கூறி கொண்டிருந்தனர்.


"இனியா, இடுப்பிலயே வெச்சிக்கோன்னு தானே சொல்லிட்டு போனேன். பாரு கதுவுல மாட்டிகிட்டு, பாதி விரலே போச்சு."
"என் சாமி இப்போ வலில துடிக்குதே," என்று கதறினார், சுமதி.


கண்களில் மட்டும் கண்ணீர் சிந்த, அப்படியே, உறைந்து அமர்ந்திருந்தாள் இனியா, அவள் பார்வை முழுதும், அங்கு குழந்தையை படுக்க வைத்து, மருத்துவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே பார்த்து கொண்டிருந்தாள்.

பார்வைக்கு பதிந்த அளவிற்கு, அவள் மனதில் எதுவும் பதியவில்லை.
வந்ததில் இருந்து அன்புவும் அவளிடம் என்ன என்று பேசி பார்த்தான்.
அவன் பக்கம் கூட பார்வை செல்லவில்லை.
ஏன் அவள் யாரையும் அங்கு சுற்றி பார்க்கும் நிலையிலும் இல்லை.


அன்பு வந்ததும், அவனிடம் பேசி விட்டு, பிளாஸ்டிக் சர்ஜெரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பிறகு, மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
வாசலில் நின்று இருந்த அன்புவிடம், மருத்துவர் "நாங்க விரல் பிக்ஸ் பண்ணிட்டோம், பிளாஸ்டிக் சர்ஜெர் பண்ணியாச்சு, குழந்தை வளர வளர, இப்போ, பொறுத்துன விரலுக்கும் உணர்வு இருக்கும், டோன்ட் வொரி."


"குழந்தைக்கு ஜுரம் வரும் ஒரு இரண்டு நாளுக்கு இங்கேயே இருக்கட்டும்," என்று மருத்துவ கண் காணிப்பிலே இரண்டு நாள், என்று குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர் .
மருத்துவர் கூறியது மட்டும் கேட்டு கொண்டு, மீண்டும், அங்கு குழந்தையின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள், இனியா.


அன்பு மட்டும் அறைக்குள் சென்று, குழந்தையை தலை முதல் கால் வரை பார்த்து விட்டு, இனியாவின் அருகில் சென்று மனைவியின் சிகை கோதி ஆறுதல் அளித்தான்.
ஒரு வேலை, மனைவி குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டதால் இப்படி ஆகியதோ, என்று இனியா வருந்துவதாக நினைத்து கொண்டான் .


"இனியா, அம்மா சொன்னது போல, உன்னால அப்படின்னு நினைச்சு பீல் பண்றியா, இப்போ ஒன்னும் இல்லடா, ஆதவ் நல்லா இருக்கான்."
"பாரு, நசுங்குன விரலுக்கும், இனி வளர்ச்சி இருக்குன்னு டாக்டர் சொன்னாரு தானே."
"நீ உன்னை வருத்திக்காத,நம்ம இப்போ தைரியமா இருக்கனும், அவன் எழுந்ததும், கண்டிப்பா பெயின் இருக்கும், நம்ம தைரியமா இருந்தா தான் இவன பார்த்துக்க முடியும் ," என்றதும், அவளுக்கு வந்த ஆவேசத்தில், கனவின் கையை தட்டி விட்டு, "ஹ்ம்ம் என் கவன குறையால தான் இப்படி ஆச்சு ."


"உங்க வீட்டுல ஒரு பேயை பெத்து வளர்த்து விட்டு இருக்கீங்களே, அது என் பையன் கையை நசுக்கும்ன்னு தெரியாம, இதுக்கு காபி வைக்க போனேன் இல்ல, அதான் தப்பு."
அப்படி ஒரு ஆவேசம் அவளிடம்.
விட்டால், விஷாகாவை அடிக்கும் வெறி.


ஆனால் குழந்தையை விட்டு, எங்கும் செல்ல மனதில்லாமல், அவனிடமே இருந்தாள்.
உறக்கத்தில் இருக்கும் மகனை காண காண , அவளுக்கு மேலும் அழுகை பொங்கியது.


"இவன பார்த்தா, எப்படிங்க, உங்க அக்காவுக்கு, பழி வாங்கணும்ன்னு தோணுது."
"குழ்ந்தைக்கு என்ன தெரியும், எந்த கள்ளம் கபடமில்லாம, நம்ம நல்லவங்களா கெட்டவங்களான்னு எதுவும் தெரியாத பச்ச மண்ணு ."
"நம்ம அடிச்சா கூட, திரும்ப நம்ம கிட்ட தான் வருவாங்க, அவங்க சிரிப்புல, நமக்கு இருக்குற சோகத்தை எல்லாம் மறக்கலாம்."
"தெய்வத்தோட மறு உருவம்ன்னு குழந்தையை சொல்வாங்க,"


"நம்ம மேல இருக்குற கோவத்தை போய், இந்த விஷா நம்ம பையன் மேல காட்டி இருக்கா, ப்ளீஸ் என்னை விடுங்க, எனக்கு இந்த பொம்பள மூஞ்சிய பார்க்கவே பிடிக்கலை ."
"இப்போ எதுக்கு, இங்க வந்தா, போ சொல்லுங்க, இனி இவ நிழல் கூட, என் பையன் மேல பட கூடாது."
மற்றவருக்கு எல்லாம் அதிர்ச்சி என்றால், விஷாகா எந்த பயமும் இல்லாமல், எல்லோரையும் திமிராக ஒரு பார்வை பார்த்து நின்றாள் .


"என்ன குட்டி மா சொல்ற," இந்திரா கேட்டதும், அன்னையை கட்டி கொண்டு, நடந்த அனைத்தும் கூறி அழுதாள் .
குடும்பத்தினர் அனைவருக்கும், அப்படி ஒரு ஆவேசம் அவள் மீது.
சரண், மற்றும் இளங்கோ கை முஷ்டி இறுக, தங்களை கட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்தனர்.
"என்ன பொம்பள டீ, நீ , பாவி பாவி," என்று தேவகி அவளை மேலும் திட்டி தீர்த்தார்."
வினோத் நடந்த நிகழ்வுக்கு, அன்புவின் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்றான் என்றால், அதுவரை அழுது கொண்டிருந்த சுமதி விஷாகாவை, கன்னம் பழுக்கும் அளவிற்கு, அத்தனை அடி அவளை அடித்தார்.


அதிர்ச்சியில் நின்று விட்டாள் விஷாகா .
இதுவரை, விளையாட்டிற்கு கூட சுமதி மகளை கை ஓங்கியது இல்லை .
சந்திரா வந்து தான், சுமதியை பிரித்து தள்ளி, "அண்ணி விடுங்க, இப்போ, அடிச்சி என்ன பண்ண, இது எல்லாம் திருந்தாது."
"பாவி, ஏன் இப்படி பண்ண, அந்த பச்ச குழந்தை என்ன செஞ்சது உனக்கு " என்று சுமதி .


"அத்தை, இப்போ, இவளை அடிச்சி என்ன அத்தை பிரயோஜனம், நான் வாங்கி வந்த சாபம் அப்படி, பொண்ணா, இவ, ச்சி ," என்று வினோத்தும் ஒரு அரை விட்டான் .
"என்ன ஆள் ஆளுக்கு அடிக்குறீங்க, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல."


"ஹே பைத்தியக்காரி, நீ செய்த வேலைக்கு, உன்னை கொஞ்சுவாங்களா, போய்டு இங்க இருந்து, என்ன பேச வைக்காத."
"என் பையன் உனக்கு என்ன பண்ணான், நீ மனுஷ ஜென்மமே இல்லை, உன்கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட், நான் ஏதாவது உன்ன செய்றதுக்குள்ள இங்க இருந்து போய் தொலை," என்று அன்பு, இதுவரை, இத்தனை கோவம் கண்டு பாத்திராத அவன் குடும்பத்தினர், இன்று அவனை அதிர்ச்சியில் பார்த்து கொண்டிருந்தனர்.


விஷாகாவின் அருகில் அத்தனை ஆவேசத்துடன், வந்து, அன்பு பேசியதில், மிரட்சியுடன் அவனை பார்த்து நின்றாள் விஷாகா .
"என்ன டா, அடிக்க வரா மாதிரி வர, என்னை பார்த்தா எப்படி தெரியுது."
"நான் பண்ணதுல எந்த தப்பும் எனக்கு தெரியலை ."
"இதோ இப்போ அடிக்குறாங்க, என் அம்மா,"
" அவங்க எனக்கு மட்டும் தான் அம்மா."
"ஆனா, உன் பையனுக்காக, என் மேல இருந்த பாசம் எல்லாம், அப்படியே சிதறி போச்சு."


"நீயும், அதிதியும், என் கட்டுக்குள்ள இருக்கனும்ன்னு நினைச்சேன், அது தப்பா."
"நீங்க இரண்டு பேரும், உங்க விருப்பத்திற்கு கல்யாணம் செய்துகிட்டா, நான் சும்மாவே இருக்கணுமா."
"எனக்கான, முதலுரிமை, இப்போ இல்லை, நான் தான் எல்லாத்திலும், முதன்மையா இருந்தேன்."


"இப்போ, எங்க பார்த்தாலும் அன்பு, இனியான்னு உங்கள தான் சொல்றாங்க ."
அவளும் அவனிடம் கோவதுடன் பேசினாள் .
அனைவரும் விஷாகாவிற்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டதோ, என்று தான் பார்த்து இருந்தனர்.


இனியா மற்றும் அவள் பெற்றோர் மட்டும் குழந்தையுடன், அறையில் இருந்து விட்டனர்.
இளங்கோ, சரணிடம், விஷாகாவை, பற்றி திட்டி தீர்த்து கொண்டிருந்தான் .


"டேய், நீ இவ்வளவு நடந்தும், இந்த பொம்பளை கிட்ட பொறுமையா, பேசிகிட்டு இருக்க, அப்படி இருந்து, செய்தது தப்புன்னு தோணுதா பாரு இந்த ஜென்மத்துக்கு"

அனைவரிடமும் அவளின் மரியாதை போனதில் அவளுக்கு இன்னும் ஆவேசம் .
"தயவு செய்து, இங்க கண்ணு முன்னால, இருக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க மாமா," என்று கர்ஜித்தான் இளங்கோ .


"இல்லைனா, என்ன டா செய்வே, நான் வந்ததே, இங்க இவன் கஷ்டத்தை பார்க்க தான் ."
"என் மேல கை வெச்சிட்டல மா நீ ."
"அப்பா இல்லாம உனக்கு பயம் விட்டு போச்சு."
"அவர் இருந்தா ஆளாளுக்கு இப்படி நடக்க முடியுமா, இவன் இவ்வளவு பேசுறான் ."


"மூத்தவன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ," என்று விஷாகாவின் பாதி வாக்கியத்தை முடிக்க விடாமல், ஏற்கனவே கோவத்தில் இருந்த அன்பு அப்பா என்றதும், இன்னும் ஆவேசம் அடைந்தான் .

"போ போ, மூத்தவன்னு சொல்றியே, உனக்கும் மூத்தவங்க இரண்டு பசங்க பெத்து வெச்சிட்டு, அவன் பொண்டாட்டி பிள்ளைங்களோட, ஜாலியா இருக்கான் உன் அப்பன் ."
"போய் அவன்கிட்ட சொல்லு , என்ன கிழிக்குறான்னு நானும் பார்க்குறேன் ."


இதுவரை, அன்பு, சரண், அன்புவின் மேனேஜருக்கு மட்டும் தெரிந்த வட நாட்டு ரகசியம் இன்று கேட்ட அனைவரும், புரியா மொழி கேட்ட நிலையில் அதிர்ச்சியில் இருந்தனர்.


"அன்பு என்ன டா சொல்ற," சுமதி திக்கி திணறி, கேட்டார்.

தொண்டையில் சிக்கிய வேதனையை, அடக்கி, "ஆமா, அம்மா, அந்த ஆளுக்கு ஒரு குடும்பம் மஹாராஷ்ட்ரால, இருக்கு."

"உயிரோட தான் இருக்கான், பிராட், அவனுக்கு இரண்டு பசங்க ."
"முக்கியமா, அவங்க தான் உரிமை பட்டவங்க, அவங்க தான், அந்த அம்மா, பேரு தீபிகா முதல் மனைவி."


"நம்ம தான் அந்த ஆளுக்கு வேண்டாதவங்க," என்று அன்னை வேதனை கான முடியாமல், தலை குனிந்தான்.

"உனக்கு எப்படி தெரியும், அண்ணா இப்ப .. இப்படின்னு, வேற யாரோவா இருக்கலாம் இல்ல " தேவகிக்கும் வார்த்தை இல்லை.

"அந்த ஆளு தான், நான் பேசுனேன், விடுங்க அத்தை,"
" நான் டிராவெல்ஸ், ஆரம்பிக்க போன போது, தெரியும், விடு அத்த இந்த விஷயத்தை," என்று சலிப்பாக கூறி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் .


முகத்தில் பல உணர்ச்சிகள், உடல் ஒரு நொடி நடுங்கி, அப்படியே, மயங்கி சரிந்தாள் விஷாகா .


All Take care
Be safe
Thanks for all your comments n likes firends
please read and tell your suggestions


















 

Saroja

Well-Known Member
அடப்பாவி அவங்க அப்பன்
உயிரோடு இருக்கானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top