அன்பின் இனியா 23 1

Advertisement

achuma

Well-Known Member
பதிவு தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
இந்த ஊரடங்கு முடிந்து, அம்மா வீட்டிற்கு இரண்டு வருடம் கழித்து சென்று வந்தேன் பிரெண்ட்ஸ் .
ஊருக்கு கிளம்புவதற்கு முன்பே கதையை கொடுக்க முயற்சி செய்தேன்.
ஆனா pcr டெஸ்ட் எடுக்குறது, எல்லாம் எடுத்து வைப்பது என்று நேரம் பறந்து விட்டது.
இப்போ, இன்னும் இரண்டு பதிவுகள் தான் .உங்களின் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள் .

All take care
be safe


சுமதிக்கு இரண்டாம் மகளுக்கு, அவள் மனதுக்கு பிடித்த மன வாழ்க்கை கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம் என்றாலும், இதற்க்கு விஷாகா என்ன சொல்வாளோ, என்று ஒரு பக்கம் பயமாக இருந்தது.
அதற்கு ஏற்றது போல், விஷாகவும் விஷயம் அறிந்து, வீட்டினில் புயல் வேகத்தில் வந்து, அவள் அன்னையை சத்தமாக அழைத்தாள் .

தெரிந்த கதை என்று இனியா எதுவும் கண்டு கொள்ளாமல், அவள் குழந்தைக்கு தோட்டத்தில் வேடிக்கை காட்ட சென்று விட்டாள்.
"என்ன வீட்டுல ஆளாளுக்கு நாட்டாமை செய்ய ஆரம்பிச்சிடீங்க, ஒரு வீடு கட்டி, டிராவெல்ஸ் நடத்துறன்னா, நீயே எல்லா முடுவும் எடுப்பியா, அவள படிக்க வெச்சா, அவளுக்கு மாப்பிளை பார்க்கும் உரிமையை உனக்கு யாரு கொடுத்தா?"


"விஷா மா கொஞ்சம் பொறுமையா, இரு மா," எப்பொழுதும் போல் சுமதி மகளின் தவறை சுட்டி காட்டாமல், அமைதியாக இருக்குமாறு அவளிடம் மன்றாடினார்.
"எதுக்கு நான் சும்மா இருக்கணும், எப்பவும் நான் தானே, இந்த வீட்டுல எந்த முடிவா இருந்தாலும் எடுப்பேன், நான் பேசி தானே எல்லாரும் கேட்டது, இப்போ, இவன் கல்யாணத்துல இருந்து எல்லாம் தலை கீழா மாறிடுச்சு, வந்த மேடம் இந்த குடும்பத்தை நல்லா மாத்தி வெச்சி இருக்கா," என்று இனியாவை அவ்வளவு நக்கலாக கூறினாள் விஷாகா .


"அம்மா, நீ ரொம்ப அவனுக்கு பயந்து இருக்கியோன்னு தோணுது, உனக்கு எப்படி மா, மனசு வந்தது, வீட்டுக்கு மூத்த பொண்ணு நான்."
"என்னை கேட்காம நீங்களே, கல்யாண விஷயம் பேசுவீங்களா, நீ இப்படி மாறுவேன்னு நான் நினைக்கவே இல்லை ."
இந்த வார்த்தையில் அன்பு முகம் இறுகினான்
"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேன் " என்று அப்படி ஒரு ஆவேசத்தில் கத்தினாள் .
அதுவரை, பொறுமையாக அவள் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அன்பு, அவள் இறுதியாக கூறியதில், அவன் பேச வேண்டிய தருணம் உணர்ந்து, வாய் திறந்தான் .
இனியாவும், திருமணம் கை கூடி வந்த நேரத்தில் இது என்ன அபசகுனம் போல் என்று அவளும் வீட்டினுள் நுழைந்தாள் .
அதிதி, அனைத்தும் அவள் அறையில் இருந்து கேட்டு கொண்டிருந்தாள் .


அவளுக்கும் அவ்வளவு கோவம் தான், ஆனால் அன்பு இருக்கும் போது, தான் ஏதும் பேச வேண்டாம், அவளின் அண்ணனே இதற்கு ஒரு முடிவு எடுப்பான், என்று அமைதியாக நடப்பதை கேட்டு கொண்டிருந்தாள் .

"நீ பேசி முடிச்சிட்டியா அக்கா, இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன், ஆனா, அதி கல்யாணத்துக்கு நீ சம்மதம் இல்லைன்னு சொன்னதும் எனக்கும் சிலது சொல்லணும்ன்னு தோணுது .

"இவ்வளவு நாள், நீ ஏதாவது, எங்களுக்கு தர கூடாதுன்னு நினைச்சு, அது எல்லாம் எங்களுக்கு கிடைக்காமா செய்து இருக்கே."
"சின்ன சின்ன பொட்களுக்கும், வாழ்க்கைக்கும் வித்யாசம் இருக்கு. அத முதல்ல தெரிஞ்சிக்கோ."
"என் கல்யாணத்துல கூட நீ பிரெச்சனை செய்த, இப்போ அதி, கல்யாணத்துலையும் பிரெச்சனை செய்யணும்ன்னு நினைக்குற."


"ஏன் அக்கா, உனக்கு வினோத் மாமாவோட கல்யாணம்ன்னு, நீயே உன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்த. அதே உரிமை, உன் தம்பி, தங்கை எடுக்க கூடாதா ."
"நம்ம அதி கா அவ, அவ அதிக பட்சம் வாழ்க்கையில எதுக்காவது, விரும்பி இருக்காளா, ஏன் கா, உனக்கு இருக்குற அதே உரிமை அவளுக்கும் இந்த வீட்டுல,இருக்கு ."


"அவளோட, வாழ்க்கை பற்றிய விருப்பங்கள, அவ சொல்றதுக்கான முழு சுதந்திரமும் அவளுக்கு உண்டு."
"இதுல நீயோ, இல்லை நானோ கூட தலையிட முடியாது".
"உனக்கு நான் சொன்ன புரியுமான்னு தெரியலை. எல்லார் கண்ணுக்கும் நீ இப்போ எப்படி தெரியுற தெரியுமா, எந்த ஒரு விஷயத்துக்கும், நீ தடையா இருக்குறா மாதிரி, உன்னை பார்த்து, விஷா என்ன சொல்லுவாளோ, அப்படின்னு ஒரு பயம்."


"அவங்க அவங்க வாழ்க்கையை வாழா விடாம, அவங்க நினைவு முழுதும், நீயே இருப்பது போல், ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டு இருக்க, எல்லார் தலையிலும் உன் செயல் ஓடிட்டே இருக்கும், இதை நான் சொல்லும் போது உன்னை விட எனக்கு தான் அதிக வேதனையா இருக்கு" என்று அவன் உணர்ச்சி வய பட்ட நிலைமையில், அவள் அக்காவின் செயலை, அவளின் நலனுக்காக, என்று அவன் குரல் எதிர் ஒலித்ததில், விஷாகா கண்ணீருடன் தம்பியை பார்த்து கொண்டே இருந்தாள் .

"உனக்கு சில விஷயம் தெரியாது கா, தெரிஞ்சா நீ தாங்க மாட்ட."
"அக்கா காலம் யாருக்கு என்ன வெச்சி இருக்குன்னு நமக்கு தெரியாது, எதுனாலும் ஏத்துக்க பழகிக்கோ," இதனை எதற்கு சொன்னான், என்று யாரும் அங்கு உணரும் நிலையில் இல்லை.


எப்பொழுதும் விஷாகா மாற போவது இல்லை, என்று தெரிந்தும், அவன் அவளிடம் பேசி கொண்டிருப்பது, எதற்கு என்று தான், இனியா மற்றும் அதிதியின் எண்ணமாக இருந்தது.

"ஆனா எந்த ஒரு சூழ்நிலையிலும், அதிக்கு மட்டும் இல்லை, உனக்கும் நான் என் காலம் முழுதும் ஒரு துணையா இருப்பேன், அதை நீ நம்பனும் ."
"உன்னை நீ மாத்திக்கோ," என்று அவளிடம் மிகவும் மன்றாடிய நிலையில் கேட்டு கொண்டான்.


பிறகு, அவனை மீறி வெளி பட்ட கண்ணீரை துடைத்து கொண்டு, "இதுக்கு மேலயும் நீ அதி கல்யாணத்துல, உன்னால ஏதாவது பிரெச்சனை செய்யணும்ன்னு நினைச்சா, என்னை மீறி நீ என்ன செய்ய முடியும்ன்னு நான் பார்க்குறேன் " என்றான் .

அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு உறைந்த நிலையில் அனைவரும் இருந்தனர்.
விஷாகா, அனைவரையும் ஒரு முறை பார்த்து, இறுதியில் , அவள் அன்னையிடம் வந்து "ரொம்ப சந்தோஷம் மா , நீ எல்லாம் கேட்டுகிட்டு பொறுமையா இருந்த பார்த்தியா, இதுலையே, நீயும் என்ன நினைக்குறேன்னு எனக்கு தெரியுது, உங்க இஷ்டத்துக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க," என்று சுமதி ஏதோ கூற வருவதற்குள், அவரை தடுத்து, வந்த வேகத்திலே சென்றும் விட்டாள் . .


இது வரை, விஷாகாவிடம், நேரடியாக அன்பு என்றும் இவ்வளவு கோபத்துடன் பேசியதில்லை, அதனை பயம் என்று விஷாகா நினைத்து கொண்ட முட்டாள் தனம் இப்பொழுது அவளுக்கு தெரிந்தது.

விஷாகா நேராக தேவகி இல்லத்திற்கு வந்து அவளின் அறையில் முடங்கி கொண்டாள் .
அவள் கைகளை முட்டு கொடுத்து, ஏதேதோ எண்ணங்கள் மனதில் வளம் வர அமர்ந்து இருந்தாள் .


அவளை பற்றிய சுய சிந்தனை, அவள் மனதில், பல கேள்விகள், அவளுக்கு அவளே கேட்டு கொண்டிருந்தாள் .
"நான் எல்லார் சிந்தனையிலும் குடைச்சல் கொடுக்குறேனா, நான் எல்லோருக்கும் தொந்தரவா?" இப்படி அவளுக்கு அவளே கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.


தன்னை தேவதையாக போற்றும், தந்தையின் பாசத்திற்கு ஏங்கியது, அவள் மனம்.
"அப்பா, என்னை இளவரசியா கொண்டாடுவீங்களே, இப்போ, எல்லோரும் என்னை கேள்வி கேட்குற நிலைமையில் விட்டுட்டு போய்ட்டிங்களே."


"நான் உங்களுக்கு பிடிக்காத இடத்தில பொண்ணு கொடுக்குறாங்க, அது வேண்டாம்ன்னு சொன்னேன் இதுல என்ன தப்பு இருக்கு?" என்று, அவள் தொலைபேசியில் இருக்கும் தந்தையின் புகைப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பினாள்.

"அம்மாவும் இன்னைக்கு சும்மா தான் இருந்தாங்க, நான் தான், சரியா பேசுவேன்னு, எப்பவும் சொல்வீங்க, இன்னைக்கு என் பேச்சுக்கு மதிப்பில்லாம போச்சு."

"இப்போ, அந்த சரண், நம்ம வசதிக்கு சமமா இருக்கான், எனக்கு சமமா அதிதியும், அவ புகுந்த வீட்டுல வாழ போறா, எனக்கு அது பிடிக்கவே இல்லை, நான் தான் முதல்ல, எனக்கு கீழ தான் எல்லாரும்ன்னு சொல்வீங்க."

"இப்போ, அவளுக்கு பாருங்க எப்படி ஒரு வாழ்க்கைன்னு, அதிலும் அவன் என்னைக்கும் நம்மள மதிக்க மாட்டான், இனி கேட்கவே வேண்டாம்."
அவளின் பொறாமை எண்ணம் எல்லாம் அழுகையாக மாறி, கிட்ட தட்ட, பைத்தியம் போல் புலம்பி கொண்டிருந்தாள் .
இதனை எல்லாம் அறைக்குள் நுழையும் நேரம் கேட்க நேர்ந்த வினோத்திற்கு மிகவும் கோபமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது.
அங்கு நடந்த விஷயம் அனைத்தும் அதிதி, ரேஷ்மியிடம் தொலைபேசியில் கூறி முடித்தாள் .
ரேஷ்மிக்கும், விஷாகா வீட்டினுள் நுழையும் போதே, அவளின் முகம் சரியில்லாதது கண்டு அவளும், இது தான் காரணமா என்று, அன்று குழந்தைகளை அவளே பார்த்து கொண்டாள் .


வினோத், அறைக்குள் செல்லாமல், வந்த வழியே, கீழே இறங்கி, குழந்தைகள் மற்றும் ரேஷ்மியுடன் அமர்ந்து விட்டான்.
அண்ணனின் முக வாட்டத்திற்கான, காரணம் கேட்ட ரேஷ்மியிடம், வினோத்தும் ஒன்று விடாமல், அனைத்தும் கூறி வருந்தினான் .


"அண்ணா, நான் சொல்றேன், ஆனா, பொறுமையா, கேளு ."
"நீ அண்ணிய, கவுன்சிலிங் கூட்டிட்டு போ, அவங்க தான் எல்லாத்திலும் முதன்மையா இருக்கனும்ன்னு நினைக்குறாங்க."


"அது தப்பு இல்லை, ஆனா, அடுத்தவங்க முன்னேற கூடாது, தனக்கு அடிமையா இருக்கனும்ன்னு நினைக்குறது, தப்பு, அந்த எண்ணம் அவங்களையே அழிச்சிடும்."

"நீ சொல்றது புரியுது ரேஷ்மி, ஆனா, அவ மன வருத்தத்துல இருந்தா அழைச்சிட்டு போகலாம், அவ அப்பன் சரியா வளர்க்காமா,விட்டுட்டான் ."
"இவ திமிர் எடுத்து திரியுற இவளுக்கு எல்லாம் இது சரி பட்டு வராது," என்று பல்லை கடித்து கொண்டு, அவன் கோவத்தை கட்டு படுத்தினான்.
ஆனால், ரேஷ்மிக்கு தான், விஷாகாவின் போக்கை, இப்படியே விடுவது சரியில்லை, என்று சிந்தித்து கொண்டே இருந்தாள் .
இதோ சரண், அதிதி திருமண வேலைகள் தொடங்கியது.
சொந்தங்கள் யார் யாருக்கு, அழைப்பு விடுப்பது, எப்படி அழைப்பது, அவர்களுடன் எவ்வாறு உரையாடுவது, என்று சரண் மிகவும் திண்டாடினான்.
அவன், எளிமையாக பதிவு திருமணம் செய்து விடலாம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் , அன்பு அவன் தங்கைக்கு மிகவும் சிறப்பாக, திருமண செய்ய வேண்டும் என்று அவனின் விருப்பத்தை, பல முறை, சரணிடம் கூறி அவன் கேட்டதில் அவன் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அமைதி காத்தான்.
அதே நேரத்தில் சந்திராவும், அவரின் ஒரே மகனுக்கு, சுற்றம் சூழ திருமணம் நடத்த ஆசை கொண்டார்.
அவன் அன்பிற்கு உரியவர்கள், விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்களின் எண்ணம் போல் திருமணத்திற்கு தயார் ஆனான்.
ஆனால், வேண்டிய நேரத்தில் உதவாத, உறவினர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பத்திரிகை அளிக்க, அவனுக்கு துளியும் விருப்பமில்லை.
பிறகு, அவன் தந்தையின் மறைவிற்கு பிறகு, சொந்தங்களின் உண்மை முகம் கண்டறிந்து,அனைவரையும் ஒரு எல்லையில் நிறுத்தி, அவன் வாழ்க்கைக்குள், யாரையும், அனுமதிக்காமல், இருந்தவனாகிற்றே.
இப்பொழுது, அன்னையின் விருப்பத்திற்காக சொந்தங்கள் முன்னிலையில் மண்டபத்தில், திருமணம், என்றதும், அவனிற்கு ஒன்றும் புரியவில்லை.
அன்பு அவன் பக்க உறவினர்களையும் பார்த்து பத்திரிக்கை கொடுத்து, சந்திராவுடன் சென்று, சரணுக்காக என்றும் அழைப்பிதழ் வழங்கி, என்று அவனுக்கு வேலைகள் சரியாக இருந்தது.
பத்திரிகை எல்லாம் கொடுத்து, அடுத்து, திருமண வேலைகள், சொந்தங்கள் வந்தால், அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு, செய்வது, உணவு, என்று இதனை பற்றி, பேச்சுக்கள் ஓடி கொண்டிருந்தது.
அப்பொழுது, சுமதி வீட்டினில், தேவகி மற்றும் சந்திரா குடும்பம் அங்கு தான் இருந்தது.
விஷாகாவிற்கு விருப்பமில்லை என்றாலும், வினோத், அங்கு வற்புறுத்தி மனைவியை அழைத்து வந்திருந்தான்.
இதில் அதிதி வேறு, அவளின் அண்ணன் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து, பாத பூஜைக்கு நிற்க வேண்டும் என்றதில் அனைவரும், அப்பொழுதும் விஷாகா என்ன நினைப்பாள் என்று தயங்கினர்.
அதிதியின் விருப்பம் நியாயமானது தான், ஆனால் ஒவ்வொன்றிற்கும், சண்டைகள் தேவையா, என்று தான் அனைவரின் சிந்தனையும்.
எல்லோரும், ஒரு நொடி, விஷாகாவை பார்த்ததும், அவளுக்கு சுருக்கென்றது.
அப்பொழுது, அன்பு கூறுவது போல் எல்லோரும், தான் பிரெச்சனை செய்வதாக தான், பார்க்கிறார்கள், என்று அவளுக்கு ஒரு வலி .
எதுவும் கூறாமல், அவள் அமைதியாக இருந்தாள் .
ஆனால் இந்த முறை விஷாகாவின் அமைதி ஏதோ ஒரு வகையில், சுமதியை பயமடைய
செய்தது.
அவளின் ஒவ்வொவொரு அசைவும் உணரும் சுமதிக்கு, மகளின் இந்த அமைதி, ஒரு எச்சரிக்கையை கொடுத்தது.
அதிதியின் ஆசை, சரி, என்று பெரியவர்கள், நாதன் மற்றும் தேவகி சம்மதம் கொடுத்து, மறவர்களை சம்மதிக்க வைத்தனர்.
அதற்கு சரண், "அதி, உனக்கு அப்பாவா, அன்பு எல்லாம் செய்தான், அவனுக்கு அந்த தகுதி இருக்கு, ஆனா, எனக்கு என் சொந்ததில எவனும் அப்டி இல்லை."


"அன்புவும் இல்லைனா, நான் எப்படி முன்னேறி இருப்பேன்னு தெரியாது. அதுனால், எனக்கு பாத பூஜையா, யாரையும் என் பக்கம் நிக்க வைக்க முடியாது," என்றதும், மன மக்களில் ஒருத்தருக்கு மட்டும் அப்படி செய்வது சரி வராது, என்று, அன்பு இந்த பேச்சே வேண்டாம், என்று கூறினான்.
அதற்குள் சந்திரா, அவரின் அக்கா, மற்றும் நாதனை சரணுக்கு பாத பூஜை சடங்கிற்கு நிற்க சொன்னதும், சரண் அவன் அன்னையை முறைத்தான் என்றால் , நாதனுக்கோ, மிகவும் குற்ற உணர்வாகியது.
உண்மை தானே, வினோத்தை போல், தான் ஏன் சரணை பார்க்கவில்லை.


பணம் இருந்து என்ன, உண்மையான பாசம் உள்ள சொந்தங்கள் கிடைப்பது அபூர்வம் இக்காலத்தில்.
இதோ, தனக்கு நிகர் வளர்ந்து நிற்கிறான், இப்பொழுது, இவனின் பாசமோ, அல்லது பெரியப்பா என்ற அழைப்போ தனக்கு கிடைக்குமா என்று தவித்தார்.
தேவகியும் நாதனும், இதற்கு சரணின் முறைப்படி கண்டு வேண்டாம் என்றதற்கு, "அக்கா, எனக்காக ப்ளீஸ்,"
என்று சந்திரா அவர்களை சம்மதிக்க வைத்தார்.
சரண் தான் வேண்டாம் வெறுப்பாக, சம்மதித்தான்.
அன்று அவன் அன்புவிடம் புலம்பியதற்கு, முன்பு போல் நாதன் இல்லை, என்று அன்பு சரணுக்கு எடுத்துரைத்து, அனைவரையும் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கினான்.
இதில் எதிலும் கலந்து கொள்ளாமல், அவள் உண்டு, அவள் கடை உண்டு, என்று விஷாகா வளம் வந்தாள் .
துரித வேகத்தில் திருமண நாளும் விடிந்தது.
இனியாவின் குடும்பத்தினர், வந்து, இனியாவிற்கு உடன் இருந்து, திருமணத்தில் உதவி செய்தனர்.
முன்பு ஏளனமாக பேசிய உறவுகள் எல்லாம், இப்பொழுது, சரணின் வளர்ச்சி கண்டு புகழந்து பேசுவது வேறு அவனுக்கு ஒரு பக்கம் எரிச்சலை தந்தது.
இப்படி தான் சொந்தங்கள் என்று அவனுக்கு யார் எடுத்து சொல்வது.


இதோ, மன மகன் பாத பூஜை செய்வதற்க்கு தேவகி மற்றும் நாதன் வந்து நின்றதும்,அவர்களின் பாதங்களுக்கு தண்ணீர் விட்டு மஞ்சள் குங்குமம் இடும் நேரம், நாதன் சரணின் சிகை கோதி "என்னை மன்னிச்சிடுன்னு உன்கிட்ட, எனக்கு கேட்க தயக்கமா இல்லை, ஆனா, உங்களுக்கு ஒரு கஷ்டமம்னு வரும் போது, கண்டுக்காம விட்டுட்டேன்னு, எனக்கு மனசு குத்துது, அதுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கனும்ன்னு நினைச்சா கொடு ."

"ஆனா, வயசான காலத்துல எல்லாரும் வேணும்ன்னு நினைக்குறோம், எங்களை ஒதுக்காத," என்று கண்ணீர் சிந்தினார்.
கேட்ட சரணுக்கே ஒரு மாதி ஆகிற்று, "அப்படி எல்லாம் இல்லை பெரியப்பா," என்று பல வருடம் கழித்து அவரிடம் பேசினான்.
அதற்க்கே குளிர்ந்து போன மனிதர், அவனை ஆசிர்வதித்து சென்றார்.
அதிதி அவள் அண்ணனுக்கும், அண்ணிக்கும் பாத பூஜை செய்யும் நேரம், இனியா உணர்ச்சி வச பட்ட நிலையில் இருந்தாள் .
கணவனுக்கு சரி, தனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று அவளுக்கு அதிதி மீது, அப்படி ஒரு மதிப்பு கூடியது.
தன்னை அன்னை ஸ்தானத்தில் வைத்திருக்கும் இந்த பெண்ணின் பாசம் அவளை, வார்த்தைகளற்று, நெகிழ்ச்சியில் தள்ளியது.


அன்புவின் கைகளை அழுந்த பற்றி கொண்டு, இனியா கண்ணீர் சிந்தினாள் .
அன்புவும் மனைவியின் எண்ணம் புரிந்து, அவளை கண்களால், ஆறுதல் அளித்தான் .
அவனும் ஒரு மோன நிலையில் இருந்தான்.
அதிதி பாத பூஜை செய்து முடிந்ததும், அவள் அண்ணன் மற்றும் அண்ணியை பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினாள் .


இனியா அவள் நெற்றயில் முத்தம் வைத்து, பிறகு, அவளுக்கு பின்னே சென்று நின்று கொண்டாள் தங்கையாக ரேஷ்மி விளக்கு பிடிக்க,சரண் அதிதிக்கு மாங்கல்யம் அணிவித்து, அவனின் சரி பாதியாக்கினான்.
திருமணம் முடிந்த சந்தோஷத்தில் சந்திரா, மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்து கூறி, அவரின் ஜெகனை நினைத்து கொண்டார்.
இனியாவின் பெற்றோருக்கும், அதிதியை நினைத்து, அவள் இனியா மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து, பெருமை கொண்டனர்.
இவற்றை எல்லாம் பார்த்து கொண்டிருந்த விஷாகாவிற்கு தான், மனதில் கனல் மூண்டது.


அன்புவின் பல நாள் கனவு, அவன் தங்கைக்கு, சீரும் சிறப்புமாக, நல்ல இடத்தில திருமணம் செய்ய வேண்டும் என்பது.
அவனின் கடமை சிறப்பாக முடிந்த சந்தோஷத்தில் ஆண்டவனுக்கு மனதினில் நன்றி தெரிவித்தான்.
இதோ, மண்டபத்தில் இருந்தே, கணவன் வீட்டிற்கு அழைத்து செல்லும் சடங்கு இருப்பதால், அங்கு ஒரு பாச போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
எப்பொழுதும் கிண்டலடிக்கும் இனியாவும், இன்று புகுந்த வீட்டில் அவளுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்த நாத்தனார் கிளம்புவதில் அழுது கரைந்தாள் .


அன்புவும் அதிதியும் கேட்கவே வேண்டாம்.
சுமதி இந்த சில மாதங்களாக, அதிதியுடன் ஒட்டி கொண்டிருந்ததில், அவரும் அங்கு கண்ணீர் சிந்தினார்.
இதனை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சரணுக்கு கடுப்பாக இருந்தது.
"டேய், உனக்கே இது ஓவரா தெரியல, இரண்டு தெரு தள்ளி இருக்க, வீட்டுக்கு உன் தங்கச்சிய அனுப்புற, சத்தியமா முடியல டா ," என்று கிண்டலடித்தான்.
பிறகு, மனைவியின் முறைப்புக்கு பயந்து வாயை மூடி கொண்டான்.


அதனை கண்ட இளைய பட்டாளங்கள், சரணை கிண்டலடித்தனர்.
இவ்வாறு, கிளம்பும் நேரம், அனைவரையும் சிரிக்க வைத்தே, அவன் மனைவியை அழைத்து கொண்டு, அன்னையுடன் அவன் இல்லத்திற்கு சென்றான்.





 

Elavenil ela

Well-Known Member
Super epi(y)(y)romba nal aachu epi vanthu... Ana nala enjoy panitenga pola holidays lan... Vishaka ku oru periya shock kuduthu nala character ah mathunga... Reshmi ku pair ila:((y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top