அன்பின் இனியா 21 2

Advertisement

achuma

Well-Known Member
"இனியா இவ்வளவ்வு சீக்கிரம் வருவேன்னு நான் நினைக்கவே இல்லை" முகம் நிறைந்த சந்தோஷத்தில் அவன் கூற, இனியா முகத்தில் எதையும் காட்டாத பாவம் அவனை தாக்கியது.
அவள் வீட்டினுள் நுழையும் நேரம், சுமதி ஏதோ புலம்பி கொண்டே, சமயலறையில் இருந்து, உணவு மேசையில், ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார் .
அவர் இவர்கள் இருவரையும் பார்க்கவில்லை.
வேலைக்கு வரும் நபர், காலையில் மட்டும் தாமதமாகும், என்று கூறி விட்ட காரணத்தால், அன்று காலை உணவு சுமதி செய்ய வேண்டிய நிலைமை.
அன்புவும், அவன் முதல் நாள், டிராவெஸில், தங்கி விட்ட காரணத்தால், மகனிடமும், அழைத்து, ஏதும் கேட்ட்க தயக்கம்.
வீட்டினில் மனைவி இல்லாது, அவன் சரியாக பதிலகாததது போன்று அவரின் நினைப்பு.
இப்படி பல வருடம் கழித்து, உணவு தயாரிக்க வேண்டிய அவர் நிலைமையை நினைத்து, மருமகள் மீதும், புதிதாக, வேலைக்கு சேர்ந்திருக்கும் பெண்மணி மீதும், இருக்கும் கோவத்தில், அவர்களை வசை பாடி கொண்டே, உணவு தயாரித்தார்.
இத்தனைக்கும், அவர் ஒன்றும் கூட்டத்திற்கு சமைக்க போறதில்லை.
அவருக்கும், மகன் மற்றும் மகளுக்கு மட்டும் தான் .
இதற்கு தான் இந்த புலம்பல் .
"ஹ்ம்ம், வந்தது தான் சரியாய் இருக்கா, மரியாதை தர தெரியலை, சொல்லிட்டு கூட போகலை.
சம்பளம் வாங்கி வேலைக்கு வரவளும், காலையில எதுவும் செய்ய முடியாதுன்னு கணக்கா, சொல்லுறா, எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி".
"இந்த அதி கழுதைக்கு, ஒரு சூடு தண்ணி வைக்க தெரியலை, என்னன்னு சொல்றது".
இனியா வீட்டினுள் நுழைந்ததும் அவள் செவியில் விழுந்த வார்த்தை இது தான் .
"ஏன் இவங்க பெரிய பொண்ணுக்கு, மட்டும் சூடு தண்ணி வைக்க தெரியுமா, அப்டியே, சின்னவள குறை சொல்ல வந்துட்டாங்க" என்று அவளின் மனதிடம் அவள் கேள்வி கேட்டு கொண்டு வந்தாள் .
மகனுடன் மருமகளை கண்டதும், அவரின் அக்மார்க், முறைப்பை மருமகளுக்கு பரிசளித்து, "வா அன்பு, சாப்பிடு பா," என்று மகனுக்கு மட்டும் வரவேற்பை கொடுத்து, இனியாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அவள் அதை பெரிதாக கண்டுகொள்ளவும் இல்லை .
அங்கு அதற்குள் வினோத்தின் வருகை ஏற்படவே, முறைப்பு பார்வை மாறி, சுமதி, ஏதோ விஷாகவே வந்து விட்டது போல், மாப்பிளையை, வாசல் வரை சென்று, வரவேற்று, வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
அவரை, முறைந்த மட்டும் முறைத்து, வேறு ஒன்றும் செய்ய முடியா நிலை, வினோத்திற்கு .
மகள் ஆடிய ஆட்டத்திற்கு, இவரும் தாளம் போட்டவர் அல்லவா, அந்த கோவம் அவனுக்கு.
ஆனால், அவன் வந்தது, அன்புவை, காணவும், தேவகி, அங்கு சென்று நேரில் பார்த்து வருமாறு கூறிய காரணத்திற்கு மட்டும் .
அங்கு தேவகி இல்லத்தில் இருந்து, இனியா, கண்ணீரோடு புறப்பட்டது, அவருக்கு ஒரு பக்கம் உறுத்தலாக இருந்தது, வேறு.
நேற்று முழுதும், மருமகள் கவலை, வேறு.
ஒரு நாள் முழுதும், விஷாகா அறையிலேயே முடங்கி இருந்தால், அவரால் தான் என்ன செய்ய முடியும். அக்ஷ்யை வேறு கவனிக்கும் வேலை, இருக்கவே, மகன் கூறியும் மனம் கேளாமல், மருமகளின் அறை வாசலில் சென்று, கதவை தட்டினார்.
பிறகு, அவளே, தனக்கு பசி எடுக்கும் போது உணவு எடுத்து கொள்வதாக, மாமியாரை, கத்தி விடவே, அவர் அமைதியானார் .
இவ்விஷயம் வினோத்திற்கு தெரிந்தால், விஷாகா நிலை அவ்வளவு தான் .
ஆனால் பிறவி குணம் மாறாது.
அன்புவும் வினோத்தை வரவேற்று, இனியா "வாங்க அண்ணா" என்று புன்னகையுடன் கூறி, அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தாள் .
வினோத்திற்கு தான், அன்பு மற்றும் இனியாவின் முகத்தை பார்க்க, குற்றவுணர்ச்சியாக இருந்தது.
"பட்டாம்பூச்சி போல, அவ்வளவு சுறுசுறுப்பா, எல்லா வேலையும் எடுத்து போட்டு, எல்லாரோடும் நல்லா பேசி எப்படி இருந்த பொண்ணு, ஊருல இருந்து வந்தும், அவன் அக்கா வீட்டு கடமைன்னு, எப்படி பார்த்து பார்த்து செய்தான், அவனுக்கும், அவன் உழைப்புக்கும் ஒரு மரியாதை தரலயே அவ . திமிர் பிடிச்சவ .
இவங்க இரண்டு பேரையும் அசிங்க படுத்துறதுல அவளுக்கு என்ன வர போது," என்று மனைவியை மனதினில் கருவி கொண்டு, அன்புவை பார்த்து, "அம்மா பார்த்துட்டு வர சொன்னாங்க, டா, எப்படி இருக்கே, நேத்து உனக்கு போன், பண்ணேன், போனும் எடுக்கல, அதான், நேர்லயே வரலாம்ன்னு வந்தேன்," அவனின் வருத்தம் வார்த்தைகளில் உணர முடிந்தது.திக்கியே பேசி முடித்தான் .
அன்புவே, அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்தான் .
"இல்லை மாமா, நேத்து நிறைய வேலை இருந்தது, வெளிய கொஞ்சம் சிலரை பார்க்க வேண்டி இருக்கவே, என்னால போன் எடுக்க முடியலை, அக்ஷி பாப்பா, எப்படி இருக்கா, " என்று கேட்டான்.
மாப்பிளை தன்னிடம் பேசாமல், அவனுடனே பேசி கொண்டிருந்ததில் விஷாகாவை பற்றி எப்படி கேட்பது என்று தயங்கி, அங்கேயே இருந்தார் .
அதற்குள், இனியா, மாப்பிள்ளைக்கு, காபி எடுத்து வந்து கொடுத்து, அதிதி, அறைக்குள் சென்று அவளை எழுப்பி விட்டாள் கல்லூரிக்கு, கிளம்பும் நேரம் வந்து விடவே.
அண்ணியை பார்த்த சந்தோஷத்தில் அவளை கட்டி அணைத்த பிறகு, அதிதி, கல்லூரி புறப்பட தயாரானாள் .
"மாப்பிளை, வாங்க சாப்பிடுங்க," என்றதும் அன்புவும் உபசரித்து, டைனிங், அழைத்து சென்றான் .
"நீ சாப்பிடு அன்பு, நான் சாப்பிட்டேன், என்று கூறி விட்டு, அவனின் அருகினில் சென்று அமர்ந்து கொண்டான் அன்னை, இனியாவை அழைக்காத காரணத்தால் , அவள் உணவு எடுக்க மாட்டாளோ, என்று நினைத்த, அன்பு, "இனியா, வா என்னோடயே, சாப்பிடு, என்று கூறவும், "இல்லை நான் வீட்டுல சாப்பிட்டு தான் வந்தேன், இருக்கட்டும், என்று கூறி விட்டாள் .
ஆனாலும் சுமதி அப்டி என்ன தான் செய்து இருக்கிறாள் என்று பார்க்கும் ஆசையில் பாத்திரத்தை திறந்து பார்த்தாள் .
அப்பொழுது அவள் மனதில் தோன்றியது, "நல்ல வேலை, வீட்டிலேயே சாப்பிட்டு வந்துடேன்" .
அவளுக்கு தந்தை கூறியது நினைவு வரவே, தன் சமயலை எத்தனை முறை மாமியார் குறை கூறி இருக்கிறார். அவரை வெறுப்பேற்றி பார்க்கும் என்ன அவளுக்குள் .
இனி, தந்தை கூறிய உபதேசம், பின்பற்ற, எண்ணி, தனக்கு தொந்தரவு தருபவர்களுக்கு, தானும் தொந்தரவு தருவதே, சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தாள் .
அன்பு அவளை சந்தேகமாக பார்க்கவே, "இல்லை, எனக்கு, வேண்டாம், நான் வரும் போதே, அம்மா எனக்கு சாப்பிட கொடுத்து தான் அனுப்பினாங்க, அதுவும் இல்லாம, என்ன இது," என்று கணவனிடம் கேட்டு கொண்டே, அவன் தட்டில் பரிமாறினாள் .
உணவு அவனுக்கு கொடுத்து விட்டு, அவனுக்கு அருகினில் நின்று கொண்டாள்.
"உப்புமான்னு, சொல்றதுக்கு, அங்க வெங்காயமோ, எந்த காயும் கண்ணுல தெரியலை,வெண் பொங்கல் சொல்றதுக்கு, ஒரு கடுகு கூட கண்ணுல பார்க்க முடியலை, ஏதோ வெள்ளையா ஏதோ கலவை போலவே இருக்கே, எனக்கு இந்த கான்க்ரீட் வேண்டவே வேண்டாம்," என்று கண்கள் நிறைந்த குறும்புடன், மாமியாரை ஒரே கண்ணால் பார்த்து கொண்டே கனவனிடம் கூறினாள் .
மருமகன் முன்பு அவளை எதுவும் கூற முடியாமல் சுமதி, பல்லை கடித்து கொண்டே "அது உப்புமா," என்றதும் வினோத், சத்தமாக, சிரித்து விட்டு, "ஹா ஹா சூப்பர் மா, உப்புமாக்கு , கான்க்ரீட்ன்னு பேரு வெச்சியா, அங்க நிக்கிற நீ, ஹா ஹா ," என்று அவளுடன் வினோத்தும் சேர்ந்து சிரித்தான் .
அன்பு இருவரையும் ஒரு பார்வை பார்த்து, அமைதியாக உன்ன ஆரம்பித்தான் .
அவனுக்கு அன்னை கஷ்டப்பட்டு செய்ததை, வீணாக்க மனமில்லை. இனியா இது போல், மற்றவரை பேசி இப்பொழுது தான் பார்க்கிறான், அவள் ஒரு முடிவுடன் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்று தெரிந்து கொண்டான் .
ஆகையால் அவன் ஏதும் கூறாமல், அமைதியாக உணவில் கவனம் செலுத்தினான் .
அங்கு இனியாவை மட்டும் முறைத்து கொண்டிருக்கும் சுமதியை கண்டு, தானும் தானே கிண்டல் செய்தேன், மகளின் கணவன் என்று தன்னை, பொறுத்து கொள்வாரா, என்று நினைத்து, அவர் மீது கோவம் தான் வந்தது.
"டேய் நல்லவனே, நீ மன உறுதியானவன்னு, தெரியும், ஆனா எனக்கு உன்னை போல இந்த அளவுக்கு எல்லாம் எனக்கு மன திடம் இல்லை, டா, எப்படி தான் முகத்தில எந்த ரியாக்ஷன் காட்டமா இதை சாப்பிடற," என்று சுமதியை வெறுப்பேற்றவே," பேசினான் வினோத்.
"உங்க இரண்டு பேருக்கும், பெரியவங்கன்னு இல்லாம, கிண்டலா போச்சு," என்று அன்னைக்காக பேசி, எழுந்து கை கழுவ சென்றான் .
"ஆரம்பிச்சிடாதே டா," என்று வினோத் கை எடுத்து கும்பிட்டு, "நீ பொறுமையின் சிகராம இரு, எங்களால முடியாது, அதுனால் எந்த பலனும் இல்லை ."
அதிதியும் வந்து சேர்ந்தாள், இனியா அவளை உணவுக்கு அழைக்க, அங்கிருக்கும் உப்புமாவை பார்த்து அன்னையை, பார்த்து, "அண்ணி, இவங்க செய்தாங்களா," என்றதும் இனியாவின் தலை, ஆம் என்று ஆடியது.
"இந்த சாப்பாடு, வேஸ்ட், ஆகும்ன்னு, யாருக்காவது கொடுக்காதீங்க, பாவம் அவங்க, மண்ணுல புதைச்சிடுங்க, " என்று கூறி விட்டு, வினோத்துக்கு ஒரு தலையசைப்பு கொடுத்து, அண்ணனிடம் கூறாமல், கல்லூரி செல்ல புறப்பட்டாள் .
அதற்குள், அன்பு, அதிதியின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் ."என்னோட இன்னும் பேச மாட்டியா அதி மா,"அண்ணனின் வருத்தம் தோய்ந்த குரல், அவளை பாதித்தது .
ஒரு நாள், தங்கையின் பாராமுகம் அவனை வருந்த செய்தது.
அதிதிக்கும், அழுகை வந்து விட்டது. அவன் அருகினில் சென்று, அவன் தோளில் அடித்து, "எதுக்கு நம்ம அண்ணியை நீ அடிச்சே, விஷா அக்கா பேசியது எல்லாம் கேட்டா, எல்லாருக்கும் கோவம் வர தான் செய்யும்,
எல்லாருமே, அவளுக்கு பொறுத்து போகணும்ன்னா எப்படி," என்று அழுது கொண்டே, அங்கு வினோத் இருப்பதை மறந்து கேள்வி எழுப்பினாள் .
அங்கு வினோத்தின் கசங்கிய முகம் கண்டு, "ச்சு அதி," என்று அன்பு கண்டித்ததும், அதிதி, ஏதும் பேசாமல், அண்ணனின், தோளில் முகம் புதைத்து, விசும்பல் மட்டும் குறையவில்லை .
"நீ ஏன்டா, அதியை, அதட்டுறே, ஏன் தலையெழுத்து அப்படி, அவ சொல்றது எல்லாம் கரெக்ட் தான், இவ்வளவு நாள், அவ பேச்சுக்கு எல்லாம் விட்டு வெச்சது தப்பு, டா, இவங்க சரியா வளர்கலை, நான் அனுபவிக்கணும்ன்னு இருக்கு," என்று சுமதியை பார்த்து, கூறி முடித்தான் .
அவருக்கு, திக்கென்று இருந்தது, வினோத்தின் புது விதமான பேச்சில்.
அதிலும் இனியாவின் முன்பு அவரின் வளர்ப்பை குறை கூறியதில், அவருக்கு அவமானமாக, சுமதி "என்ன, மாப்பிளை, அவ ஏதோ சின்ன பொண்ணு," என்றதும்,கோவம் வந்த வினோத் ."தயவு செய்து, நீங்க இனி, ஏதாவது பேசுனீங்க," என்று அவரை பார்த்து கிட்ட தட்ட கர்ஜித்தான் .
அன்புவிற்கும் அன்னை இப்படி பேச்சு வாங்கியதில் வருத்தம் என்றாலும், வினோத்தை, என்ன என்று கூறுவது, அதே நேரத்தில் அன்னையை இப்படி கேள்வி கேட்க பிடிக்காமல், "மாமா," என்று ஏதோ கூற வந்ததும், "அன்பு, எல்லாத்துக்கும், அவ சார்பா, நான் மன்னிப்பு கேட்குறேன், டா, இனியா, நீயும் என்னை மன்னிச்சுடு மா, உங்க இரண்டு பேரையும் ரொம்ப அவமான படுத்திட்டா, எனக்கு ஒரு உதவி செய்யணும் அன்பு."
"என்ன மாமா, பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, சொல்லுங்க " என்று அன்பு கூறியதும் , வினோத்,
"தயவு செய்து, இவங்களை, இனி எங்க விஷயத்தில இருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல இருக்க சொல்லு டா, அவளை நான் பார்த்துக்கறேன், ஆனா, இவங்கள, எங்க விஷயத்துல வரவே கூடாது , ப்ளீஸ் ," என்றதும் இப்பொழுது, அன்புவுக்கு ஒரு மாதிரி ஆனது .
அன்புவின் வருத்தம், அதிதியின் அழுகை, வினோத்தின் கோவம் எல்லாம் பார்த்த இனியா, "அண்ணா, மன்னிப்பு கேட்குறதால, நடந்த எதுவும் மாற போறது இல்லை, எனக்கு என்னவோ அந்த வீட்டுக்கு வரும் போது எல்லாம், நான் அவமான படுறேன், விடுங்க," இதை கூறும் போது, இனியா குரல் மிகவும் வருத்தத்தில் இருந்ததில் அன்புவுக்கு தான் வேதனையாக இருந்தது . அவள் கூறுவது உண்மை தானே .
பிறகு தன்னை அவளே தேற்றி கொண்டு, "அட டா, இங்க என்ன, பாசமலர் படம் ஓடுதா, அதி நீ காலேஜ் கிளம்பு," என்று அவளை அனுப்பி விட்டு, இனியா படிகளில் ஏறி அவள் அறைக்கு சென்று விட்டாள் .
வினோத்தும் அன்புவின், தோளில் தட்டி கொடுத்து, சென்று விட்டான் .
அன்பு மீண்டும் மனைவியை நோக்கி, அவன் அறைக்கு சென்றான் .
அங்கு சுமதி என்று ஒருவரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை .
அறையினுள், இனியா, அமைதியாக படுத்து கிடந்தாள் .
அவளின் சிந்தனை படிந்த முகத்தை கண்டதும் , அன்பு அவள் நெற்றியை நீவி விட்டதும் , அவன் கையை தட்டி விட்டதில், இன்னும் மனைவி தன்னுடன் கோவமாக தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான் .
கணவனுக்காக பேசிய இனியா, கணவனிடம் பேச மறுத்தாள்.
"இனியா, உன் கோவம் நியாயமானது, தான், ஆனா, என்னோட பேசாம மட்டும் இருக்காதா," என்றதும், மனைவி அவனை, பார்த்தாலே தவிர, ஏதும் பேசவில்லை.
அவள் சந்தோஷ செய்தி கணவனிடம் கூற வந்தால், வீட்டினில் நடந்த விஷயங்கள், அதற்கு ஏற்ப சூழல் இல்லமால், அவள் மனம் தத்தளித்தது .
"உனக்கு நான் சொன்னா நம்புவியான்னு தெரியலை, இப்போ, நமக்கு பிரச்சனை வந்ததுனால இல்லை, நான் ஊருல இருந்து வரும் போதே எடுத்த முடிவு தான், நான், என்னோட ஐ டி வேலையே விட்டுட்டேன், ஆபிஸ்ல நோட்டீஸ் கொடுத்துட்டு வந்துட்டேன், இந்த பணம் சேர்க்கணும்ன்னு எண்ணம், ஒரு மனுஷனை, எந்த அளவுக்கு கொண்டு போய் விடும்ன்னு நல்லா பாடம் கத்துக்கிட்டேன்."
"தேவையான, வசதி வாய்ப்பு இருக்கும் போது, எதுக்கு மேலும் மேலும் குடும்பத்தை விட்டுட்டு பணம் சேர்க்கணும்ன்னு எண்ணம் வருது".
"இப்போவும் சொல்றேன், இந்த குடும்பம் எனக்கு முக்கியம், யார்க்கும் எதுவும் வர விடமாட்டேன், என்று அவளுக்கு புரியாத விஷயத்தையே பேசி கொண்டிருந்தால், அவளும் தான் என்ன செய்வாள் .
"நான் வேற எப்படி சொல்றதுன்னு தெரியலை, நீ நம்புவியான்னும் எனக்கு யோசனை, இனி எதுக்காகவும் நான் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன், இது மட்டும் என்னை நம்பு," என்று அவள் கன்னத்தை தட்டி கொடுத்து, சென்று விட்டான் .
இரண்டு நாளா இது தானே டா சொல்றே, என்று மனதில் நினைத்து, அதிதி வீட்டு வேலைக்கு என்று ஒருவர் வருவதாக கூறியதில், கீழே செல்ல பிடிக்காமல், அறையினுள் முடங்கி கொண்டாள் .
சுமதி மகளுக்கு, மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்து போனார்.
அவருக்கு, வினோத், கூறியது, எதுவும் சரியாக படவில்லை .
மகளுக்கு, ஏதேனும் பிரெச்சனையோ, என்று அவரின் உள்ளம் தவித்தது .
இலக்கியா, வீட்டினில், அவள் அனைவரின் துவைத்த, துணிகளும் மடித்து வைத்து கொண்டிருந்தாள் .
நாத்தனார் மற்றும், அவள் பிள்ளைகளின் துணிகளை, கூட மடித்து கொள்ளாமல், தாரணி இருக்கிறாளே, என்ற சலிப்பு, இப்பொழுது கோவமாக மாறியது.
இந்திரா, இலக்கியாவிற்கு அழைத்து, இனியாவின் வரவை பற்றி கூறி, அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
உடனே, இலக்கியாவும் தங்கைக்கு அழைத்து, அவளுக்கு வாழ்த்து கூறினாள் .
அதற்கு எந்த பதிலும் கூறாமல், "அக்கா, இப்போ வரை, எத்தனை அவார்ட் வாங்கி, வீட்டில சேர்த்து வெச்சி இருக்கே,"
தங்கை சம்மந்தமில்லாமல், கேள்வி கேட்டது ஒன்றும் புரியாமல், "என்ன குட்டிமா, எனக்கு ஒன்னும் புரியலை டா ."
"அதான் கா, பெஸ்ட் டாட்டர் இன் லா, குட் ஹோம் மேக்கர், அப்படின்னு, "தங்கையின் நக்கலில் அவளின் கோவம் உணர்ந்து கொண்டாள் .
"இப்போ நீ பெரியம்மா, ஆகிட்டேன்னு முதல்ல எனக்கு வாழ்த்து சொன்ன, இல்லை போன் போட்டதும் நேத்து நடந்த விஷயத்தை, அம்மா உனக்கு சொன்னதும் , நீ என்ன, செய்து இருப்பே, எப்படி பொறுத்து போகணும்ன்னு எனக்கு அட்வைஸ் செய்து இருப்பே ."
அவள் கூறுவது அனைத்தும் உண்மை தானே.
"அம்மா இது மட்டும் தான் சொன்னாங்களா, நேத்து உன்னை பற்றி கேட்டதும், அவங்க எனக்கு சரியாய் சொல்லலானாலும், நீ வராம இருக்குறது, அவங்க மனசுக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும்."
"அப்படி என்ன, அவங்களுக்கு பிரெச்சனை, என்னையும் சேர்த்து தான் சொல்றேன், டைம் கிடைக்கும் போது அழைச்சிட்டு போறேன்னு சொன்னாரு, அவருக்கு இன்னை வரை அந்த டைம் கிடைக்கல ."
"நேத்து நானே ஏதோ அப்செட்டா இருக்கேன்னு கூட்டிட்டு போய் விட்டாரு."
"இல்லை, நீ வராம, இருக்கியே, அவங்க பொண்ணுக்கும் இது போல மாமியார் இருந்தா, என்ன செய்வாங்களாம் ."
அவள் இலக்கியாவை பேச விட்டால் தானே.
"ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, இது சின்ன லாஜிக்,, எல்லாரும் எதிர்கொள்றது தான் ."
" ஒரு பொண்ணு, அவங்க கல்யாணத்துக்கு பிறகு, பிறந்த வீட்டுக்கு, ஒரு சில காலம் வரைக்கும் தான் போய்ட்டு வர முடியும்."
"அந்த வீட்டில, அவ கூட பொறந்த அண்ணனோ, தம்பியோ, அவங்களுக்கு கல்யாணம் ஆனதும், அங்க அந்த வீட்டு பொண்ணோட பிரைவசி முன் இருந்தது போல இருக்காது."
"எல்லா பொண்ணுங்களும் உன்னை போலவோ, என்னை போலவோ, நாத்தனார் வராங்களேன்னு, பார்த்து பார்த்து கவனிக்க மாட்டாங்க."
"அது மட்டும் இல்லை, இங்க நம்ம மாமியாருக்கு மட்டும் இல்லை, நம்ம பெத்தவங்களுக்கும் தான் வயசாகுது, அவங்க அதிக பட்சம் எதிர்பார்ப்பு என்ன, வருஷத்துக்கு ஒரு முறையாவது, பேர பசங்களோட, கொஞ்ச நாள் நேரம் செலவளிக்குறது தான், இது ஒரு தப்பா ."
"இன்னும் கொஞ்ச வருஷத்துல உன் பசங்களும் பெரியவங்க ஆவாங்க, அவங்க படிப்பு, அவங்க பிரெண்டுன்னு, ஒரு வட்டம் உருவாகிடும், அப்போ, நீயே அழைச்சாலும் தாத்தா பாட்டி வீடுன்னு வந்துட்டு போக மாட்டாங்க".
"கோல்டன் டைம் எல்லாம் சில காலம் தான் அக்கா, அது எல்லாம் இழக்கணும்ன்னு நினைக்காத "
"நீ என்ன தான் பார்த்து பார்த்து செய்தாலும் நமக்கு என்னைக்கும் மரியாதையோ, என் ஒரு பாசமோ இருக்காது " என்று நீண்ட பிரசங்கம் அக்காவிற்கு வழங்கி, இம்முறை, இலக்கியாவிற்கு இனியா மூத்தவளாக தெரிந்தாள் .
பிறகு இனியா கீழே உணவிற்கு சென்று, அங்கிருக்கும் வேலை செய்பவரிடம், உரையாடினாள் .
இனியா வந்ததும் அன்புவும் அவளிடம் வேலை பற்றியும் சம்பளத்தை பற்றியும் விசாரிக்க சொன்னதால், இனியாவிடம் கேட்டாள்.
காலையில் சுமதி அலாடியதை கண்டாள் அல்லவா, ஆகையால், அவருக்கும் அவர் வீடு வேலைகள் குடும்பத்தை கவனிக்கும் வேலை எல்லாம் இருக்கும் என்று நினைத்து, வீட்டை பெருக்கி துடைப்பது, காலை, மாலை இரு முறை, என்று பாத்திரம் விளக்கி, பிறகு வாசல் சுத்தம் செய்யும் வேலை வரை கூறி, சம்பளம் பற்றியும் கூறி அனுப்பி வைத்தாள் .
பிறகு அவர் சமைத்து வைத்து சென்ற உணவை உண்டு, மீண்டும் அவள் அறைக்கு சென்று மருத்துவர் கொடுத்த மாத்திரை உண்டு, உறங்கி விட்டாள் .
சுமதியை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவரும் அங்கு சிலை போல் அமர்ந்து அவள் வந்ததில் இருந்து செய்யும் செயல்களை, அர்த்தம் விளங்காமல் பார்த்து கொண்டிருந்தார்.
மகனில் இருந்து மகள், மருமகள் என் மருமகன் கூட, தன்னை மதிக்காமல் புறக்கணித்ததாகவே கருதினார்.
அதிதி கல்லூரியில் இருந்து வந்ததும், வழக்கம் போல் அவளுடன் மாலை, கோவிலுக்கு சென்று விட்டாள் .
அந்நேரம் அன்பு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .எப்பொழுதும் மாலையில் நேரத்திற்கு இது வரை வந்ததில்லை.
இன்று அவன், வருகை புரியவே, முதலில் அன்ணயுடன், சிறிது நேரம், அமர்ந்து இருந்து விட்டு, இனியாவை காண வீட்டிற்கு சென்றான்.
அந்நேரம் இந்திரா மகளின் அழைப்புக்கு விடுக்கவே, அவளின் தொலைபேசி அங்கு ரயிலே விட்டு சென்றதில், அவன் சத்தம் வந்தம் திசை நோக்கி, அவன் கண்கள், அலைபாய, அவன் கண்ணில் பட்டது, கட்டிலின் அருகினில் இருக்கும் மேசை மேல், மாத்திரையும், தொலைபேசி , மற்றும் மருத்துவர் கொடுத்த, பைல் .
முதலில் இந்திராவின் அழைப்புக்கு பதில் தந்து, இனியா கோவிலுக்கு சென்ற தகவலை கூறி வைத்தான் .
மாத்திரையை கண்டதும், என்னவென்று பார்த்து, உடனே அவன் அந்த பைலில் இருக்கும் செய்தி கண்டு, மனதில் மெல்லிய அதிர்வு சாரல்.
மனம் முழுதும் மகிழ்ச்சி துள்ள, ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்து, ஊதி விட்டு கொண்டான் .
இமையோரம் கண்ணீர் துளிகள், அவன் வாழ்க்கையை சிறப்பிக்க வர இருக்கும் புதுவரவின், எதிர்பார்ப்பு, அவன் அகத்தினுள்.
"என் இனியா, எங்க டீ போனே, ஏன் சொல்லல," என்று தனக்குள்ளே கேட்டு கொண்டான் .
தன்னை, சமன் செய்ய முயன்றான்.
நெஞ்சை லேசாக நீவி கொண்டே, இங்கும் அங்கும் நடை பழகி, உடனே தங்கைக்கு அழைத்தான் .

அதிதி, அண்ணனினிடம் பேசி, உடனே தொலைபேசி இனியாவின் கைக்கு மாறியது'
"இனியா, நான் வீட்டுல இருக்கேன், என் கிட்ட ஏதாவது சொல்லனுமா, அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது.
அவள் என்ன என்று கேட்டதும், "இங்க டேபிள் மேல, மெடிக்கல் பைல்" என்று கூற வந்து திணறினான் . அவளுக்கு புரிந்து இருந்தது தான்.


 

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு கருத்து மற்றும் விருப்பங்கள் தெரிவித்த ,அனைவருக்கும் எனது நன்றி நட்புக்களே,
அடுத்த பதிவு , படித்து விட்டு, உங்களின் நிறை குறைகளை, என்னிடம் பகிருங்கள்.
All be safe
Takecare friends(y):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top