அன்பின் இனியா 20 3

Advertisement

achuma

Well-Known Member
இனியா அவள் அன்னையுடன் கூட சரியாக உரையாட முடியாமல் ஏதேனும் வேலைகள் அவளை சூழ்ந்து கொண்டது.
அதில் இந்திரா காது படவே, "இந்த பொண்ணு ரொம்ப சுறுசுறுப்பு, நம்ம வீட்டு பசங்க கொஞ்சம் தலுக்கா, இருக்க தான் பார்ப்பாங்க, ஆனா, இவ அன்புக்கு ஏற்ற மனைவி தான், வேலை செய்ய தயங்குறதே இல்லை, இப்படி மருமக கிடைக்க சுமதி குடுத்து வெச்சிருக்கணும், எல்லாரையும் நல்லாவே கவனிக்கிறா, நல்லா பேசவும் செய்றா," என்றதில் இந்திராவின் பெருமிதம் முகத்தில் தெரிய, சுமதிக்கு தான் வயிறு காந்தியது .
அன்பவும் வந்திருந்த உறவினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, திருமணத்திற்கு வராதவர்கள் கூறிய வாழ்த்துக்கள் பெற்று, என்று அவனை அங்குள்ளோர் பேச்சினில் இழுத்து கொண்டாலும் அன்னை, மனைவி, தங்கை என்று அவனின் கவனம் அவன் குடும்பத்து மீது தான் .
அதில் இனியா வேலை களைப்பில், பட்டு புடவயை இன்னும் களைப்பாக தெரியவே, யார் பார்க்கிறார்கள், என்றெல்லாம் நினைக்காமல், அவன் கையில் இருந்த ஜூஸ் எடுத்து மனைவிக்கு கொடுத்தான் .
"கொஞ்சம் நேரம் இனியா, வீட்டுக்கு போய்டலாம், அது வரைக்கும் இந்த டிரஸ் அட்ஜஸ்ட் பன்னிக்கோ," என்று, அவன் கைக்குட்டையால் அவள் முகத்தின் வியர்வையை துடைத்தான், பாதி குடித்து வைத்திருந்த அவனின் ஜூசை மனைவிக்கு கொடுத்தான் .
அவளுக்கும் அது தேவையாக இருக்கவே, வாங்கி பருகினாள் .
அவளும் அவனுடன் வந்ததில் இருந்து சரியாக பேச முடியாமல் போனதில் இப்பொழுது, அவளின் அருகினில் அவன் இருப்பதால், "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க, உங்க முகமே சரியில்லை, உங்க சிரிப்பு, ஏதோ உண்மையா இல்லை,எல்லோரோடயும் சிரிச்சி பேசுறீங்க ஆனா, ஏதோ சரியில்லை, உங்க ரியாக்ஷன் ," என்று மனதில் உள்ளதை, கணவனிடம் கேட்டு விட்டாள் .
மனைவி, தன்னை, இத்தனை கூட்டத்தில் கவனிக்கிறாள், தன்னோடு, இப்பிரச்சனை போகட்டும், யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்று முன்பே எடுத்திருந்த முடிவு தான் அதில் இன்னும் ஸ்திரம் பெற்று, "ஆஹ்ன் ஒன்னும் இல்லை, ஊருல இருந்து வந்த டையர்ட் தான், " என்று சமாளித்து, சென்றான் .
"அத்தை வந்து இருக்காங்க பாரு அவர்களோடு போய் கொஞ்ச நேரம் இரு, நான் அத்தை வந்ததும் பேசிட்டேன், திரும்பி எப்படி ரிட்டர்ன், இளங்கோ வருவானா, இல்லை, நான் ட்ரோப் பண்ணட்டுமா," என்று வேறு கேள்வி கேட்டு அவளை திசை திருப்பினான் .
"இல்லை அம்மா கேப்ல வந்தாங்க, அதுல கிளம்புவாங்க ."
இவை எல்லாம் மனம் வலிக்க வலிக்க, ரேஷ்மி பார்த்து கொண்டிருந்தாள் .
அன்பு குடித்து கொடுத்த பாதி ஜூஸ், அவன் மனைவி, என்ற உரிமை, எல்லாம் பார்த்து பெண்ணின் மனம் தவித்தது.
இக்காட்சியை மனதில் அழுந்த பதிய வைக்க முயற்சி செய்தாள் .
அப்படியாவது, அன்பு இனியாவின் சொத்து, என்பது அவள் சிந்தையில் நிலைக்குமா என்ற எண்ணத்தில் அவள், அன்பு இனியாவையே பார்த்து கொண்டு இருந்ததில், எதர்ச்சையாக இனியா, ஜூஸ் குடித்து, திரும்பும் நேரம், ரேஷ்மியின் பார்வை, அவளின் ஏக்கம் ,நிறைந்த பார்வை, இவை எல்லாம் பார்க்க நேர்ந்து, மேலும் மனதில் ஒரு வித பயம் குழப்பம் என்று இனியாவாள், அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை.
முகத்தில் புன்னகை மறைய, அன்னை, சுமதி இருக்கும் இடம் நோக்கி சென்றாள் .
"உங்க பொண்ணு, என் பையனை, கைக்குள்ள போட்டு, இப்படி, எதுவும் என் பேத்திக்கு செய்ய முடியாம, பன்னிட்டா, வந்து இருக்குறவங்க எல்லாரும் எவ்வளவு பெரிய ஆளுங்க, எல்லாம் என்னனவோ பரிசு தரும் போது, சொந்த தாய் மாமா, வெறும் தங்கத்தோட சீரை முடிச்சிட்ட்டான்" .
"இது எல்லாம் உங்க பொண்ணு சொல்லி கொடுத்து தான் இப்படி ஆடுறான் .
முன்னாடி எல்லாம் அக்காவுக்கு செய்ய தயங்க மாட்டான், இப்போ இப்படி மாறிட்டானே ,உங்க பொண்ணு செய்த காரியம் பார்த்தீங்களா, என் மானம் போகுது, என் பொண்ணு என்ன எல்லாம் தவிப்பா," நீங்க என்ன வளர்த்தீங்களோ " என்று இந்திராவை நன்றாக அவமானம் செய்த த்ரிப்தியில், அவர் மனம் அதன் பிறகே சமன் பட்டது.
மற்றவர்கள், இனியாவின் திறனை, எடுத்து கூறியதும், இந்திராவின் முகத்தில் மின்னிய புன்னகை பார்த்த கடுப்பில், சுமதி, அவரின் வளர்ப்பை குறை கூறினார்.
ஆனால் இது தான் சாக்கு என்று விஷாகா, இதில் பிரச்சனை செய்ய அங்கு வந்து சேர்ந்தாள் .
"அம்மா, விடு மா, ஏன் இப்படி பேசுறே, அவன் இங்க வந்ததில் இருந்து முகமே சரியில்லை, நீ வேற, இது பற்றி எல்லாம் இப்போ பேசாதே, ஹம்ம என்ன செய்றது, என் நாத்தனார் முன்ன எனக்கு அவமானம் தான், என்ன பண்ண எல்லாம் விதி "என்று பாவம் போல் முகம் வைத்து கொண்டதில் சுமதிக்கு இன்னும் தான் கோவம் ஏறியது.
ரேஷ்மியை வேறு, நினைவு படுத்தி கூறியதில் அவரும் சிந்தை இழந்து அவரின் அன்பு திருமணத்தின் மீதான எண்ணத்தை கூறினார் .
"நீ வருத்த படாதா மா, நல்ல வேலை, இவனை நம்பி உன் நிலை இல்லை டா ராசாத்தி, உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு." மகளை சமாதானம் செய்து,
"அங்கு பார்த்தீங்களா, தங்க சிலையாட்டம் ஒரு பொண்ணு நிக்கிறாளே, அவ தான் ரேஷ்மி, என் பையனுக்கு கட்டணும்னு நினைச்சேன், என் பொண்ணோட நாத்தனார், அவளுக்கும் அன்புன்னா உசிரு, ஆனா, தலையெழுத்து, உங்க பொண்ணுகிட்ட கையேந்துற நிலை, எனக்கு,"
என்று ரேஷ்மி காதல் பற்றி மட்டுமே கூறினாரே விர, அன்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது எல்லாம் வசதியாக மறந்து போனார்.
ஆனால் இங்கு வந்ததில் இருந்து, அன்புவின் சோகமான முகம், ரேஷ்மியின் ஏக்கம், இது எல்லாம் மனதில் சுற்றி கொண்டிருக்கும் இனியாவுக்கு தான், அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்த்து, "ஒரு வேல, அந்த பொண்ணு இங்க பார்த்ததில் இருந்து தான் இப்படி இருக்காரா, இவருக்கும் அப்படி ஏதாவது ஆசை இருந்ததா, ஆஹ்ன் இல்லை, அவரை சந்தேக பட்டா என்னை நானே சந்தேக பட்ட மாறி, அவர் மனசுல நான் தான், ஆனா, ஏன் டல்லா இருக்காரு, எல்லாரோடும் பேசுறாரு, அந்த ரேஷ்மி கூட பேசவேயில்லை, ஏதோ நடந்து இருக்கு," என்று அவளுக்கு அவளே கேள்வி பதில், என்று மனதை போட்டு குழப்பி கொண்டாள் .
விஷாகாவிற்கும் இது தானே வேண்டும் .
"அத்தை, எப்போ எங்க அம்மாவை, பார்த்தாலும் அவர்களோடு, சண்டைக்குன்னு பேசுவீங்களா, இந்த வீட்டுல செய்த சீரூக்கும், எனக்கும் எந்த சம்மதமும் இல்லைன்னு, நான் தெளிவா சொல்லிட்டேன், அப்பறம் என்ன, என்னையே குறை சொல்றீங்க ,"
"உங்களால எங்க அம்மா கூட நல்லா பேச முடியானாலும் பரவாயில்லை, எதுவும் அவமான படுத்தாம இருங்க."
"என்னை நல்லா தான் வளர்த்து இருகாங்க, ஆனா, அதை நீங்க எல்லாம் கமெண்ட் பண்றீங்க பார்த்தீங்களா, அது தான் எனக்கு சிரிப்பா இருக்கு. "
விஷாகாவோ, அல்லது வேறு யாரேனும் கூறி இருந்தாலும் இனியா கவலை கொண்டிருக்க மாட்டாள், ஆனால், கணவனின் அன்னை, மருமகளாக மாமியாருக்கு அணைத்து சேவைகளும் கடமை என்று கருதாது, அவளின் அன்னையாகவே நினைத்து, அவர் ஏதேனும் மனம் வருந்து படி கூறினாலும், அதை எல்லாம் பெரிது படுத்தாமல், இருக்கும் இனியாவிடம், ரேஷ்மியை மருமகளாக்க நினைத்தது, அது நிறைவேறாததில் வருத்தம் அடைவது போல் பேசுவது, எல்லாம் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளுக்கு அது ஒரு அவமானம் என்று கூடவா சுமதியால் நினைக்க முடியாமல் போனது என்று மாமியாரை நினைத்து வருந்தினாள் .
அவள் முன்பே வேறு ஒரு பெண்ணை காட்டி, அவள் இவ்விடத்துக்கு வர வேண்டியவள் என்று கூறினால் , அது மருமகளாக வந்திருக்கும் பெண்ணிற்கு எவ்வளவு அவமானம் என்று சுமதியின் மனம் ஏன் சிந்திக்க மறந்தது, அதில் இனியாவின் பொறுமை அப்பொழுதே, மறைந்தது .
ஆகையால் மாமியாரிடம் குரல் உயர்த்தி வார்த்தையாடினாள் .
"குட்டிமா, என்ன இது, அவங்க பேசுறாங்கன்னா, நீயும் பதிலுக்கு பேசுற," என்று இந்திரா மகளை, அடக்கினார்.
குடும்பத்துக்குள், முறையில் இருப்பவர்களின் திருமண பேச்சு, என்பது சாதாரணாமான விஷயம், என்று அவருக்கு நன்கு தெரியும்.
ஆனால், ரேஷ்மிக்கு அன்பு மீது காதல் உள்ளது, இப்பொழுது இனியாவுடன் திருமணம் முடிந்து, இன்னும் அதை பற்றி சுமதி பேசுவது எல்லாம், அவரையும் மனதை வருந்த செய்தது தான் .
ஆனால் மகள் இங்கு இப்படி பேசுவது, அவளின் வாழ்க்கைக்கு தான் பிரச்சனை என்று நினைத்து, இந்திரா மகளை அடக்கினார் .
அங்கு ஒன்றும் மாமியாரிடம் கூற முடியாமல், இனியா, தான் திண்டாடினாள்.
மகளின் கையை தட்டி கொடுத்து,"எதுவும் பொறுமையா பேசு, பொறுமையா யோசித்து பார்த்து ஒரு விஷயத்துல செயல் படு," என்று அறிவுரை கூறி, அங்கிருந்து இந்திரா சென்று விட்டார் ."உன்னை சீண்டி பார்க்கிறாங்க, அதுக்கு இடம் தரமா புத்திசாலி தனமா யோசி, சீக்கிரம் நேரம் ஆகிட்டு, சாப்பிட்டு கிளம்புங்க,"
" நீ சாப்பிடு மா, இருக்கட்டும் இங்க என்னால் முடியலை குட்டிமா , நான் வீட்டுல சாப்பிடுறேன், தம்பி இந்நேரம் வந்து இருப்பான் ."
மகள் அன்று அவளின் பொறுமையை இழக்கும் நிலை, அன்னையால் உணர முடிந்தது, தான் இருந்தால், இன்னும் எதேனும் சுமதி பேசுவார், அதில் மேலும் மாமியார் மருமகளுக்கும் சண்டை உருவாகும் நிலை வேண்டாம் என்றே இந்திரா, அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
அங்கு விஷாகாவின், மகன் தோட்டத்தில் செய்யும் சேட்டைக்கு, அளவே இல்லாமல் போனது,'அதிதிக்கு அவனுடனே நேரம் சரியாக சென்றது.
அவனின் பின் ஓட வைத்தான், என்றே கூறலாம்.
சந்திராவை, சரண் சிறிது நேரத்திற்க்கு, மேல் அங்கு விட வில்லை .
அன்னைக்கு அழைத்து, வெளியே, வருமாறு அழைப்பு விடுத்தான் .
அவரும் அக்காவிடம் மகன் வெளியே காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்து, தேவகியை சமாளித்து, வெளியே வந்தார்.
அதற்குள், அக்ஷித், கேட் வெளியே சென்று விடவே, அதிதியும் அவன் பின்னே ஓடினாள் .
"கொஞ்சமாவது, சும்மா இருக்கியா டா, எப்படி தான் அத்தை உன்னை சமாளிக்கிறாங்களோ, என்று அவனை அடக்கி, அவன் கையை பிடித்து கேட்டிற்குள் அழைத்து வர பார்த்தால் .
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த சரணை இருவரும் கவனிக்க வில்லை .
அதற்குள், அவனே, வண்டியை,அவர்களுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தி, "தனியா, வெளியே ஏன் வந்தே, இருட்டிடுச்சு வேற ," என்று, வெறும் வண்டிகள் மட்டும் நிரம்பி ஆள்நடமாட்டம் இல்லாத, தெருவில் அதிதி, வெளியே நின்று கொண்டிருப்பதை பார்த்து சிடுசிடுத்தான் .
அவள் அவனுக்கும் பதிலளிக்காமல் அக்ஷித்தை கை காட்டினாள் .
அங்கு வந்ததும் அவரும், அதே கேள்வியை அதிதியிடம் கேட்டார் .
" இல்லை அத்தை , இவன் கூட தான் இருக்கேன், ரொம்ப சேட்டை பன்றான்," என்றதும் அக்காவின் பேரனின் அட்டகாசங்கள் இத்தனை நேரம் சந்திராவும் கண்டார் அல்லவா, அவருக்கும் அவனை பார்த்ததும் சிரிப்பு வந்தது.
"ஏன் என்கிட்டே பதில் சொல்லமாட்டாளாமா, அப்படியே அவ அப்பன் திமிரு," என்று மனதில் நினைத்து, "ஆமா, இவன் பெரிய ஆம்பிளை, இவன நம்பி வெளிய நிக்கிறது," என்று எங்கோ பார்த்து கொண்டு கூறிவிட்டு, அக்ஷித்தை நோக்கினான்.
"உன் பேரு என்ன டா?" என்று சரண் கேட்டதும் ,
"புதுசா இருக்குறவங்க கிட்ட, எல்லாம் பேசக்கூடாதுனு, சொல்லி இருக்காங்க," என்று ஐந்து வயதே நிரம்பிய, அந்த வாண்டு, அவனிடம் தெளிவாக பதிலளித்தான் .
"பார்த்துக்க மா, இங்க வரணும்ன்னு அப்படி அடம் பிடிச்ச, நம்ம யாருன்னு கூட குழந்தைக்கு தெரியலை," என்று அவன் அன்னையிடம் கூறியதும்,
அதற்குள் இவை எல்லாம் பார்த்து கொண்டிருந்த வினோத், "முதல்ல, வீட்டுக்கு வா டா, எங்க யாரையும் வேண்டாம்னு நீ தான் ஒதுக்கி வெச்சி இருக்க, இவனுக்கு வேனா தெரியாம இருக்கலாம்,இவன் குழந்தை, அக்ஷிக்கு உன்னை நல்ல தெரியும், அவ பங்க்ஷன், தானே, உன் பொண்ணை வந்து பார்த்துட்டு போக மாட்டியா," என்று தம்பி இப்பொழுதாவது, வீட்டிற்கு வருவான், எல்லோரிடமும் பேசுவான் என்று நினைத்தான் ,சரண் பதிலே கூறாமல், வேறு பக்கம் திரும்பினான் .
"விடு வினோத், அக்காவும் மாமாவும், எவ்வளவோ, இவன் வரலையுன்னு வருத்த பட்டாங்க, இழைச்சி இழைச்சி வீடு கட்டிவெச்சிருக்கான், திரும்பியும் அடுத்த வாரம் அமெரிக்கா போறானாம் . யாருக்கு தான் இவ்வளவு பணம் சேர்க்குறான், நானும் அவனும் மட்டுமே, தனியா இருக்கனும்ன்னு இருக்கு, எந்த சொந்தத்தையும் வீட்டுல சேர்க்காமாட்டான்".
அவரும் மகன் மீண்டும் அன்னையை விட்டு வெளிநாட்டிற்கு செல்லவும் கோவத்தில் நன்றாக திட்டி கொண்டிருந்தார் .
"அம்மா, இப்போ, எல்லாரும் வேணும்னு நீங்க நினைக்கலாம் , ஆனா, நான் இப்படியே இருக்கேன்,விடுங்க என்னை," என்று கூறி விட்டு, அதிதியை பார்த்தான் , விசேஷத்திற்கு என்று அழகாக, லெஹங்காவில் உடை உடுத்தி, அவன் கண்ணுக்குள், வட்டமடித்தாள் .
இப்படியே, எங்கேனும் அதிதியை, வண்டியில் கடத்தி கொண்டு பறந்து விடலாமா, என்று கூட நினைப்பு.
அன்னையும் இங்கு வந்ததில் இருந்து அவனின் திருமண விஷயத்தினை, கூறி இருவருக்கும் அடிக்கடி சண்டை வேறு.
திருமணத்திற்கு சம்மதம் கூறலாம் என்றாலும், அதிதியை கடந்து அவனால் திருமணத்திற்கு யோசிக்க முடியவில்லை .
பிறகு அதிதி கையோடு, தன் கையை பிடித்து கொண்டிருக்கும் அக்ஷித்தை, திடீர் என்று, வண்டியில் முன் பக்கம் தூக்கி அமர செய்து வண்டியை மெதுவாகவே ஓட்டினான்.
குழந்தையும் பயத்தில் அவன் கழுத்தில் கைகள் கோர்த்து, பிடித்து கொண்டாலும்,"ஐயையோ, பூச்சிக்காரன் என்னை பிடிக்கிறான், போலீஸ், போலீஸ், ஹெல்ப்," என்று அந்த வாண்டு கத்தி கொண்டதில் அவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.
மற்ற மூவருக்கும் அக்ஷித் வண்டியில் கிளம்போது அலறியதில், சிரிப்பு வந்தது.
அவர்கள் வாசலிலேயே, இருந்து கொண்டு, அவனின் திருமண விஷயம், சந்திரா பேசியதை, பற்றி, வினோத்திடம் கூறி கொண்டிருந்தார் .
அதிதி அனைத்தும் கேட்டாலும், ஏதும் கேட்காதது போல் , அங்கு அமைதியாக நின்றிருந்தாள் .
மனதில் ஒரு வலி எழ தான் செய்தது.
சிறிது நேரத்தில் வண்டியில் இருந்து இறங்கிய அக்ஷித், கை நிறைய பொம்மை, சாக்லேட் என்று வந்து சேர்ந்தான், முகம் நிறைந்த புன்னகையுடன் .
"டேய் என்ன டா, இவ்வளவு என்று வினோத்தும், மகனிடம் கேட்டதற்கு ,"ஆமா டாடி , நீங்களும் அக்காக்கு மட்டும் டெடி பியர் வாங்கி கொடுத்தீங்க, வந்த எல்லாரும் அக்காக்கு மட்டும் கிபிட் கொடுத்தாங்க, "ஆனா சித்தப்பா எனக்கு மட்டும், வாங்கி கொடுத்தார்.நானும் நிறையவே எடுத்துக்கிட்டேன்," என்றதும், அதற்குள் சார்ந்த குழந்தைக்கு அவன் உறவை புரிய வைத்துள்ளான், என்று மற்றவர் அறிந்து கொண்டு, எப்படியாவது, குடும்பத்துடன் ஒன்று சேர வேண்டும் என்ற வேண்டுதலும் சந்திராவின் மனதில் .
"விவரம் தான் டா நீ " என்று அக்ஷித்தின் கண்ணத்தில் தட்டி கொடுத்து அன்னையுடன், சரண் புறப்பட்டு விட்டான் .
நாதனின் உறவுகளில் ஒருவரை, வழி அனுப்பும் பொருட்டு, வினோத், வெளியே அவர்களுடன் சென்று விட்டான்.
அதற்குள் அன்புவிடன் நாதன் ஒரு வேலை கூறியதில் அவனும் அந்த வேலை செய்ய புறப்பட்டான்,
வந்திருந்த விருந்தினர் அனைவரும் சென்று விட்டனர்.
நாதனுக்கும் காலையில் பாதியில் விட்டு வந்த, மற்ற அலுவலக வேலைகள், அதன் தொலை பேசி அழைப்பு என்று அவரின் அறையில் இருந்தார் .
நாதன் குடும்பம், மற்றும் அன்பு குடும்பம் மட்டுமே அங்கு வீட்டினில் இருந்தனர்.
இன்னும் யாரும் இரவு உணவு உண்ணவில்லை.
அன்பு மற்றும் வினோத் வந்து சேர்ந்ததும், அனைவரும் ஒன்றாக உணவருந்தலாம் என்று காத்திருந்தனர்.
அக்ஷியும் களைப்பில் உறங்கி விட்டாள்.
அதிதி, எப்படியோ, அக்ஷித்திற்கு மட்டும் அவனிடம் போராடி, உணவு கொடுத்து, அவனை உறங்க வைக்க, ரேஷ்மி அறைக்குள் சென்று விட்டாள் .
இது தான் நேரம் என்று கருதிய, விஷாகா, "அம்மா, என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அசிங்க படுத்தணுமோ,உன் பையன் செய்துட்டான், இந்த ஒண்ணுத்துக்கும் உதவாத, நகை செட்டை அவனையே எடுத்துட்டு போக சொல்லு," என்று சிடுசிடுத்தாள் .
இனியா செவிகளில் இந்த செய்தி பதிய வேண்டும் என்றே அவளும் கூறினாள் .
"அண்ணி, நீங்க, அவரோட உழைப்பையும் அசிங்க படுத்துறீங்க அண்ணி, புகுந்த வீட்டுல உங்க பிறந்த வீட்டு மனுஷங்கள விட்டு கொடுத்தா, அந்த அசிங்கம் உங்களுக்கும்ன்னு புரியலையா, அவர் கைல காசு இல்லைனு, வேற சொன்னாரு அண்ணி ."
"ஊருல இருந்து நேரா இங்கே தானே வந்தாரு, அவரால ரெஸ்ட் எடுக்க கூட முடியலை, ப்ளீஸ் உங்க கோவத்தை இப்படி எல்லாம் காட்டாதீங்க அண்ணி, அவர் குடும்பத்து மேல எவ்வளவு அக்கறையாவும், உண்மையாவும், இருக்காருன்னு, உங்களுக்கே தெரியும்."
" நீங்க இப்படி ஏதாவது ஒன்னு அத்தைக்கு சொல்றீங்க, ஆனா இவங்க அதுக்கு பிறகு, ரியாக்ட் பண்றது எல்லாம், வீட்டுல நிம்மதி இல்லாம பண்றாங்க, எங்க தலை தான் உருளுது ," என்று விஷாகாவின் கலகத்தால் வீட்டினில் நடக்கும் விஷயத்தை கூறியதும் வீட்டு ஆட்கள் முன்பு விஷாகாவிற்கு அவமானமாகியது.
அதிலும் ரேஷ்மி வேறு, அங்கு ஏளன பார்வையுடன், விஷாகாவியும் சுமதியையும் பார்த்து கொண்டிருப்பதில் விஷாகாவிற்கு இன்னும் சினம் பொங்கிற்று .
"பிறந்த வீட்டை விட்டு கொடுக்க கூடாதா, எப்படி, உங்க வீட்டுல வந்து செய்துட்டு போனாங்களே, கண்ணுக்கே, தெரியாத அளவில ஒரு மோதிரம், தினம் அதுக்கு பூஜை செய்யணுமா," என்று எள்ளலாக கேட்டாள் விஷாகா.
இனியாவிற்கு, கண்களின் ஓரம் கண்ணீர் பெருகியது, அவளின் பெற்றோர், அந்த பணம் புரட்ட எப்படி எல்லாம் பாடு பட்டார்களோ.
மகள் புகுந்த வீட்டில், மதிப்புடன் இருப்பதற்காக, அவர்கள், முறை செய்ததற்கு, எந்த மதிப்பும் இங்கு இல்லையே, என்று வருந்தினாள் .
"ஏன் எங்க அம்மாவுக்கு தகவல் தரலை," என்று மாமியாரிடம் குரல் உயர்த்தி பேசினாள் .
"நான் தானே பேசுறேன், எங்க அம்மாவோட என்ன பேச்சு," என்று விஷாகா அவளுடன் சண்டை போட்டதில் "உங்களுக்கு நான் ஏன் பதில் கொடுக்கணும். உங்களுக்கு அடுத்தவங்க உழைப்போட, அருமை எதுவும் தெரியலை".
"ஒரு பரிசு சின்னதோ, பெருசோ, அவங்க மனசார உண்மையான அன்போடு கொடுக்குறதை மட்டும் தான் பார்க்கணும்".
"இந்த மோதிரம் கூட எங்க அப்பாக்கு ஒன்னும் சும்மா கிடைக்கலை, கை உடைய எழுதுனா தான் எங்க அப்பாவுக்கு, வருமானம்."
அவள் தந்தையின் உழைப்பை, அவமதிப்பதா, என்று ஒரு கோவம், காலையில் இருந்து, வேலை, பசி, நடுவில் விஷாகா ஏற்பஎடுத்திய குழப்பம், என்று இனியா பெரிதும் துவண்டு இருந்தாள் .
"ஹ்ம்ம் சொல்லுங்க, நியாயமா, சம்மந்தியா, நீங்க தானே, முதல்ல, எங்க வீட்டுக்கு தகவல் சொல்லி இருக்கனும், ஏன் சொல்லலை, "
"ஹே, ஏதோ பிடிக்கலை, அதுனால் சொல்லணும்னு எங்க அம்மாவுக்கு தோணலை, அதுக்கு, நீ இப்படி, எங்க அம்மாவை கேள்வி கேட்பியா, அப்டி உங்க அம்மா வரணும்னு ஒன்னும் இங்க யாரும் தவம் கிடக்குல " என்று விஷாகா .
ரேஷ்மி வேறு சுவாரசியமாக, சுமதியின் பயம் கலந்த முகம் பார்த்து கொண்டிருந்தாள், அதில் விஷாகாவிற்கு,
இவள் முன்பு தானும், அன்னையும் அவமான படுவதா, என்று மேலும் மேலும் இனியாவுடன் சண்டைக்கு நின்றாள் .
"எங்களுக்கு தெரியாது மா, இனியா, அண்ணி, சொலிட்டதா தான் சொன்னாங்க, நீ ரொம்ப கோவமா இருக்கே, விடு மா, அன்பு வரட்டும் பேசுவ " என்று தேவகி இனியாவை சாந்தப்படுத்த முயற்சி செய்தாள்.
"இல்லை, ஆண்டி, நான் காலையில இருந்து, பல முறை இவங்ககிட்ட கேட்டேன், அம்மாவுக்கு அழைப்பு கொடுங்கன்னு சொன்னே, அவங்களை வெச்சி தானே, உங்க உறவு எங்க வீட்டுல தெரியும், கொஞ்சம் கூட மதிப்பே இல்லை, ரொம்ப அவமான படுத்துறாங்க , அம்மா கிட்டையும் கேட்டேன், நீங்க கூப்பிட்டத தான் சொன்னாங்க." என்று சுமதியை முறைத்து கொண்டே , பேசிக்கொண்டிருந்தாள்.
அந்நேரம் அன்புவும் வேலை முடிந்து, அங்கு வந்து சேர்ந்தான்.
"இவங்க கிட்ட கேட்டதுக்கு கூட, எனக்கு தோணலைன்னு ரொம்ப மிதப்பா சொல்றாங்க, அப்படி என்ன இளக்காரமா போய்ட்டேன், இவங்க எங்களை அவமான படுத்துறாங்க, அது பார்த்து தானே, விஷா அண்ணியும் இப்படி பேசுறாங்க,"
விஷாகாவுக்கு , சுமதி மருமகள் குரல் உயர்ந்ததும் அடங்கினார், என்று தெரிந்ததில் அன்னை மீதும் கோவம், ஆகையால் அவளே பதிலுக்கு பதில் பேசி கொண்டிருந்தாள் .
"எல்லாம் உங்களால, நீங்க மரியாதை கொடுக்காததால் தானே, இவங்க எல்லாம் இப்போ பேசுறாங்க, இவ்வளவு வயசு ஆகுது, சம்மந்தி வீட்டுக்கு ஒரு நல்லது கெட்டதுக்கு அழைக்கணும்னு தெரியாது ?"
"நீங்க எல்லாம் பெரிய மனுஷங்கனு சொல்லாதீங்க, எல்லா பிரச்சனையும் உங்களால தான் " என்று கோவத்தில் இன்னொருத்தர் வீட்டில் இருப்பதையும் மறந்து, வயதில் பெரியவர் என்பதையும் மறந்து இனியா, மாமியார் முன்பு கை நீட்டி சண்டை போட்டு கொண்டிருந்தாள் .
அன்பு வீட்டினுள் நுழையும் நேரம், இனிய, அவரின் முகத்திற்கு நேராக, கை நீட்டி அவரை குற்றம் சாட்டி கொண்டிருப்பதும், சுமதியின் பயம் கலந்த முகமும் கண்ணனுக்கு தெரிந்தது.
அதில் மனைவி மீது கண்முன் தெரியாத கோவம் .
ரேஷ்மிக்கு, இக்காட்சி காண, கோடி கண் வேண்டும் போல் இருந்தது.
மருமகள் தனக்கு கீழ் கட்டுப்பட்டு, இருக்க வேண்டும் என்று எவ்வளவுக்கு எவ்வளவு விஷாகா மற்றும் சுமதி நினைத்தார்களோ, அதற்கு நேர்மாறாக இனியாவின் தட்டி கேட்கும் தைரியம், அதற்கு சுமதியின் பயம் . .
"நல்லா வேணும் இந்த பொம்பளைக்கு, பொண்ணு தான் லூசு தனமா இருக்குன்னா, இதுவும் கூட சேர்ந்து ஆடுது, நான் மருமகளா வந்தா உன் பொண்ணுக்கு சேவகம் செய்வேனா, வீட்டுக்கு வர போற பொண்ணுக்கு கூட, எப்படி எல்லாம் சுயநலமா யோசிச்ச, உன் பெண்ணுக்காக, இதோ வந்து இருக்கா, பாரு."
"உன் பொண்ணு பஜாரித்தனத்துக்கு, பதிலடி கொடுக்குறா, பாரு," என்று ரேஷ்மியின் மனம் குதூகலித்தது .
வினோத்தும், உள்ளே நுழையும் நேரம், அவன் கண்களுக்கு தெரிந்தது எல்லாம், ரேஷ்மி, ஒரு வித க்ரோதத்துடன், சுமதி மற்றும் விஷாகாவை பார்த்து கொண்டிருந்தது தான் .
அதில் வந்திருந்த சிலர், "என்ன பா, நல்ல பையனை விட்டுடீங்களே, ரேஷ்மிக்கு ஆசை தானாம், பணத்துல என்ன இருக்கு," என்று அன்புவுடனான, ரேஷ்மியின் திருமணத்தை நாதன் தடை செய்தது போன்றே பேசி விட்டு சென்றதில் குழப்பம் .
அதிலும் வீட்டினில் ஏதோ வாக்கு வாதம், இனியா அவர்கள் இருவருக்கும் முன் சினம் நிறைந்த முகத்துடன், நின்று கொண்டிருந்தாள்.
கோவத்தில் அன்பு என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியை நோக்கி சென்று அவளை அவன் பக்கம் திருப்பி கண்ணத்தில் பளார் என்று அரை விட்டான்.
"என்ன பெரியவங்க முன்ன கை நீட்டி பேசிட்டு இருக்கே, தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை, சின்ன பொண்ணுனு பார்குறேன், இல்லை, பள்ளு இருக்காது," என்று கர்ஜனை.
வீட்டினர் அனைவருக்கும் அதிர்ச்சி.
விஷாகாவிற்கு அதிர்ச்சி என்றாலும் மனம் முழுதும் கொண்டாட்டமே.
"அன்பு," என்று வினோத் அவனை நெருங்கி, அவனை தன்னிலை அடைய செய்தான் .
பிறகே தான் செய்த செயல் அவனுக்கு புரிந்து, மனைவியை பார்க்கமுடியாமல், வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டான் .
"உள்ள போ முதல்ல," என்று முதலில் தங்கையை திட்டி அனுப்பி வைத்தான் வினோத்.
ரேஷ்மிக்கும் அன்புவின் புதிய அவதாரம் அதிர்ச்சி என்றாலும், விஷாகாவிற்கு கொடுக்க வேண்டிய உதையை, இனியாவிற்கு கொடுத்த அன்புவை நினைத்து கோவம் தான் கொண்டாள் .

இனியாவிற்கு, தான், விசாரணை இன்றி தீர்ப்பு கொடுத்த கணவன் மீது மனம் விட்டு போனது.
 

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கு நன்றி.
அடுத்த பதிவிற்கும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
All take care
:love:(y)stay safe
 

Saroja

Well-Known Member
என்ன தான் நடக்கிறது
இந்த விஷாகா யாரையும்
நிம்மதியா
வாழ விடமாட்டா
அன்பு என்ன நடந்ததுனு
கேக்கல
இனி யவும் அடுத்த வீட்டில்
இருக்கோம்னு மறந்து
பேசிட்டா
இனி என்ன நடக்குமோ
 

achuma

Well-Known Member
என்ன தான் நடக்கிறது
இந்த விஷாகா யாரையும்
நிம்மதியா
வாழ விடமாட்டா
அன்பு என்ன நடந்ததுனு
கேக்கல
இனி யவும் அடுத்த வீட்டில்
இருக்கோம்னு மறந்து
பேசிட்டா
இனி என்ன நடக்குமோ
Thanks :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top