அன்பின் இனியா 20 2

Advertisement

achuma

Well-Known Member
அதிதிக்கு அன்னையின் கூற்று, கோவத்தை கொடுக்கவே, மேலும் ஏதும் பேசுவதற்கு முன், கிளம்புவதே மேல், என்ற முடிவுடன், "அதி, இங்கே ஆர்க்யூ பண்ணதா, வா அண்ணி வீட்டுக்கு கிளம்புலாம்," என்று இனியா அத்துடன் அப்பேச்சிற்கு முற்று புள்ளி வைத்து, பிறகு மூவரும் தேவகி இல்லத்திற்கு சென்று சேர்ந்தனர்.
அங்கு மகளின் மகிழிச்சி நிறைந்த முகத்தை காணும் ஆசையில் சென்ற சுமதிக்கு கிடைத்தது என்னவோ, விஷாகாவின் வாடிய முகம் தான் .
"என்ன மா விஷா, ஏன் மா ஒரு மாதிரி இருக்கே?"
"அம்மா, இந்நேரம், என் அப்பா என் கூட இருந்து இருந்தா, எவ்வளவு சந்தோஷபட்டு இருபார்ல, நான் ரொம்ப மிஸ் பண்றேன் மா, என்ன சொல்லி இருப்பாரு, யோசி,
என்று முகத்தில் புன்னகை சூட சிறு பெண் போல், பேசி கொண்டிருந்தாள் .
"என் செல்லத்துக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குறதே, எனக்கு கனவான்னு தோணுது, அதுக்குள்ள பேத்தி பெரிய பொண்ணு ஆகிட்டா"
"அப்படின்னு ஆச்சரிய பட்டு இருப்பாரு மா, அவருக்கு இன்னும் நான் குழந்தை தான்" தந்தையின் ஏக்கம் அவள் குரலில் .
அதன் பிறகு தான் அதிதி மற்றும் இனியாவை கண்டதும் இருவரையும் ஏளனமாக ஒரு பார்வை பார்த்தாள்.
"விஷா பேக் டு பார்ம் அண்ணி," என்று அதிதி கிண்டலடித்ததும்,
"ச்சு சும்மா இரு அதி " என்ற இனியா விஷாகாவிற்கு வாழ்த்து கூறினாள்.
பின் தேவகியை காண அதிதி மற்றும் இனியா சென்றானர்.
அந்த வாழ்த்து ஒன்னும் விஷாகாவிற்கு உவப்பானதாக இல்லை.
நேற்று வேறு அவளின் வயதை குறிப்பிட்டு இனியா கிண்டலடித்து வேறு, அதிலும் இலக்கியாவை, தன்னுடன் ஒப்பிடுவதா என்று கேள்வியெழுப்பிய, விஷாகா இன்று இலக்கியாவுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து கொண்டாள் .
"அக்ஷிக்கு இப்போ தானே மா பத்து வயசு பூர்த்தி ஆச்சு, அதுக்குள்ள, என்னனு தான் எனக்கு தோணுது மா , இப்போ பாரு, நேத்து வேற, இனியா சொன்னது போல, அந்த இலக்கியா, என் வயசு தானே, ஆனா, அவ பொண்ணுக்கு ஆறு வயசு தான் ஆகுது, அதுனால், அவ வயசானவ மாறி தெரியமாட்டா, ஆனா இப்போ அக்ஷியால, என் பிரெண்ட்ஸ் யாராவது என்னை வயசாச்சுனு சொல்லுவாங்களோன்னு தான் தோணுது மா."
இனியா மட்டும் அல்ல, சுமதியை தவிர, வேறு யாரு விஷாகாவின் கூற்றை கேட்டிருந்தாலும், அவளை பைத்தியம் என்றே முடிவுகட்டியிருப்பர் .
சுமதிக்கே , மகள் ஏன் இப்படி எல்லாம் குழப்பத்தில் இருக்கிறாள், என்று தான் எண்ணம், ஆனால் அதை மகளின் முன் தான் கூறி விட முடியுமா,.
"இப்போ நடந்த நல்ல விஷயத்தை பற்றி பாரு மா, உன் நாத்தனார் வேற வந்து இருக்கிறதா சொன்னே, ஊரை கூடி விழா நடந்து மா, உன் இடத்தை அவளுக்கு புரிய வை, நேற்று ஏதோ, வீடு பற்றி எல்லாம் உன் கூட மல்லு கட்டுனா சொன்னியே," என்று மகளை திசை திரும்புவதாக எண்ணி, அவளை மேலும் பிரச்னைக்குள் தான் தள்ளி விட்டார் .
அனைவரும், ரேஷ்மியின் அறையில் இருந்தனர்.
பேத்தியின் தேவையை சிறு பெண் போல், மாடி ஏறி இறங்கி என்று சேவை செய்து, களைந்து காண பட்டார் தேவகி.
ரேஷ்மியும் இனியாவும் ஒரே நேரத்தில் சந்தித்த தருணம் அது.
அதிதி மட்டுமே முதலில் தயங்கி பிறகு, இனியாவை ரேஷ்மிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் .
ரேஷ்மிக்கு மனம் துடித்தாலும், மீண்டும் சமன் செய்து கொண்டு, "ஹாய், எக்ஸாம் அதான் வர முடியல, எப்படி இருக்கீங்க, உங்க கண்ணு ரொம்ப கியூட்," என்று சாதாரணாமாக உரையாடினாள் இனியாவுடன் .
அன்புவும் எப்பொழுதும் மனைவியை ரசித்து கூறும் வார்த்தைகள் அல்லவா, அந்த நினைப்பில் இனியாவின் முகம் வெட்கத்தில் சிவந்து மலர்ந்தது.
அதில் எந்த ஒப்பனையும் இன்றி முகம் முழுதும் வியர்வையில் நினைந்து, என்று இருந்தாலும் இனியா பார்க்க தேவதையாக தெரிந்தாள் ரேஷ்மயின் பார்வையில் .
இனியாவும் பதிலுக்கு அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அக்ஷியின் அருகில் சென்று அவள் சிகையை வருடினாள் .
மிகவும் சோர்ந்து காணப்பட்ட, அக்ஷியை கண்டு, "என்ன டா ஒரே அட்வைசா, எல்லாத்தையும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த காதில வாங்கி அந்த காதுல விட்டுறு," என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி எடுத்துரைத்து, அவளை சிரிக்க செய்தாள் .
"வா இனியா, ரொம்ப வயிறு வலிக்குதுன்னு சொல்றா, வெந்தயம் கூட கொடுத்தாச்சு, பிள்ளைக்கு முகமே சோர்வா இருக்கு, சட்டுனு மாத்திரை கொடுக்க பயமா இருக்கு, இவளை விட்டு என்னால அப்படி இப்படின்னு நகர முடியலை," விட்டால், பேத்தியின் வலியை தான் வாங்கிக்கொள்ளும் வேகம் அக்ஷியை வளர்த்த தேவகிக்கு, என்று அங்கி இருக்கும் அனைவராலும் உணர முடிந்தது.
அதற்குள், விஷாகா மற்றும் சுமதியும் அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர்.
"பாரு மா இதான் சாக்குன்னு, பேத்தி கூடயே இந்த அம்மா செட்டில் ஆகிடுச்சு, அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வேற வேலை பார்க்காம இருக்குது பாரு," சுமத்தியிடம் விஷாகாவின் குமுறல், தேவகியை பற்றி.
இனியா தேவகியிடம், "ஆண்டி சின்ன துண்டு இஞ்சி தோல் சீவி, ஒரு சாக்லேட் எடுத்துத்துட்டு வந்து அக்ஷிக்கு கொடுங்க.
இரண்டும் சேர்த்து மென்னு சாப்பிடட்டும், அடுத்த கொஞ்ச நேரத்தில, இந்த வலி சரியாகிடும்.
எங்க அக்காவுக்கும் இந்த ப்ரொப்லெம் இருக்கு, எங்க அத்தை, இது போல, சாப்பிட சொன்னாங்க.
டேப்லெட் எடுத்தா, அதுவே எங்க பழகிடும்னு, வீட்டு மருந்து தான் .
அவளுக்கு உடனே சரியாகிடும் , என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள் .
அக்ஷியும் தேவகி கொடுக்கும் போது, முரண்டு பிடித்தாள் தான், ஆனால் சாக்லேட் உடன் சேர்ந்து உண்டதும், இஞ்சியும் அந்த அளவிற்கு காரம் இல்லை.
அடுத்த சிறிது நேரத்தில் வலி அடங்கி முகத்தில் தெளிவு பிறந்தது, அக்ஷிக்கு.
அதன் பிறகே, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வீட்டினர் பேச்சை ஆரம்பித்தனர்.
விஷாகாவிற்கு, அன்னை யோசனை எடுத்து கொடுத்ததில், அவளின் பகட்டு, அந்தஸ்து மற்றவருக்கு பறை சாற்றவே, முக்கியமாக ரேஷ்மிக்கு அவளின் உரிமை எடுத்து கூறவே, மண்டபம் எடுத்து, விழா நடத்த முடிவு செய்தாள் .
அதற்குள், "தேவா, என்ன செய்யணும் சொல்லு," என்று நாதன் மனைவியிடம் கேட்டார்.
"என்னங்க, பெத்தவங்க அவங்க ஆசை என்னவோ," என்று தேவகி தயங்கியதும்,
"அம்மா, வளர்ததது, நீ உனக்கு தெரியாததா, உன்னை விட நாங்க என்ன செய்ய போறோம், நீயே சொல்லு மா," என்று வினோத்தும் அன்னையை ஊக்குவித்தான் .
அதில், விஷாகவும் சுமதியும் மனதில் பொருமி கொண்டனர்.
"இன்னைக்கு என் ராசாத்திக்கு முடியலை டா, சின்ன பொண்ணு தானே, அதுனால், சிம்பிளா, நெருங்கனவங்க வரை அழைச்சிக்கலாம், வீட்டுலையே, மஞ்சள் தண்ணி ஊத்தி, நலங்கு செய்து, வீட்டுக்கு அழைச்சிக்கலாம்".
"பெருசா செய்யணும்னா, இன்னும் இரண்டு வருஷம் போகட்டும், குழந்தைக்கு, பதிமூணு வயசு ஆகும் போது வேணும்னா, உங்க விருப்பத்திற்க்கு ஏற்ப, எல்லாரையும் அழைச்சி மண்டபத்துல செய்துக்கலாம்.
இது என்னோட எண்ணம் மட்டும் தான் , மேற்கொண்டு, நீங்க சொல்லுங்க," என்று வீட்டினர் முகம் பார்த்தார்.
இனியா தேவகியை மெச்சி கொண்டாள் .
அந்த காலத்தை சேர்ந்தாலும், இக்காலத்து பிள்ளைகளின் எண்ணம் புரிந்து நடக்கும் தேவகி மீது, அவள் பெருமை கொண்டாள் .
வினோத், மற்றும் நாதனுக்கும் அதுவே சரி என தோன்ற, சம்மதம் கூறினர்.
"அது எப்படி, சிம்பிளா, வீட்டுலையே, செய்யணும் சொல்லுவீங்க அத்தை, இந்நேரம் எங்க அப்பா, இருந்து இருந்தா பேத்திக்கு விழாவே நடத்தி இருப்பார்," என்று ராஜா சேகரின் பெருமை எடுத்து விட்டதில், நாதன் மற்றும் வினோத்திற்கு ஏகப்பட்ட கோவம் .
"ஹே, எப்பவுமே யோசிக்காம தான் பேசுவியா, இங்க நாங்க என்ன ஒண்ணுமே இல்லாமையா இருக்கோம், இப்போ, நம்ம அக்ஷி, ஹெல்த் பற்றி மட்டும் பாரு, ஊரு மெச்ச செய்யணும், அதான உனக்கு, இன்னும் எந்த காலத்தில இருக்க நீ," என்று சத்தம் போட்டான் வினோத்.
"அண்ணி, இருங்க அதான் அம்மா, பேசிட்டு இருக்காங்களா, வீட்டுல பெரியவங்க டிசைட் பண்ணட்டும்," என்று ரேஷ்மியும் அவளை அடக்க, விஷாகாவிற்கு தான் இனியா முன் அவமானமாக போனது .
நாதனும், அமைதியாக இருக்கவே, அங்கு விஷாகாவால் ஏதும் பேச முடியாமல், அமைதி காத்தாள்.
"சரி தேவா , யார் யாரை அழைக்கனும், என்ன செய்யணும் சொல்லு," என்றதும், சாய்ந்திரம், ஆறு மணிக்கு மேல, நலங்கு ஆரம்பிக்கலாம், ஆஹ்ன் நம்ம நெருங்கிய சொந்தத்திற்கு மட்டும், இங்க லோக்கல் இருக்குறவங்க வரை அழைச்சா போதும்," என்று கூறி
"ஆஹ்ன் அண்ணி, இனியா வீட்டிற்கு, அப்பறமா அன்புவுக்கு, நீங்க மறக்காம சொல்லுங்க, பேசும் போது, இவர்கிட்டயும் போன் கொடுங்க," என்று சுமதிக்கும்
"நீங்க இவங்களுக்கு எல்லாம் சொல்லிடுங்க, என்று நாதன் வீட்டு உறவுக்கு, நாதனிடமும் சில வேலைகள் கூறி, மாலை நிகழ்ச்சிக்கு தயாரானர் .
அன்று, வினோத்துக்கு அவன் ஆபீஸ்ல மீட்டிங் இருப்பதால், அதே நேரம், இங்கு நாதநும் வீட்டில் இருப்பது முக்கியாமாதலால் , அவன் மட்டும் ஆபிசுக்கு செல்ல முடிவு எடுத்தான் .
நாதனிடமும், தெரியப்படுத்தி, மகளின் அருகில் சென்றான் .
"அக்ஷி மா, இங்க தாத்தாவை பார்க்க நிறைய கெஸ்ட் வருவாங்க, சோ, தாத்தா இங்கே இருப்பாரு, நாங்க இரண்டு பேருமே, ஆபீஸ் இல்லைனா, யாரு வேலை பார்ப்பா, அதுனால, நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் பங்க்ஷனுக்கு, ரெடியாகுங்க, டாடி ஈவினிங் வந்து ஜாயின் பண்றேன் சரியா," என்று மகளுக்கு எடுத்து கூறி, அவள் நெற்றியில் முத்தம் பதித்து, மகளுக்கு என்ன பரிசு வேணும் என்று கேட்டான் .
அக்ஷி, அவளுக்கு பிடித்த, டெடிபியரில், இந்த முறை மஞ்சள் நிறம் கூறி, அவள் தந்தையை வழி அனுப்பி வைத்தாள், அவள் அறை எங்கும் கரடி பொம்மை, பல வண்ணங்களில் சேர்த்து வைத்துள்ள அக்ஷி.
இந்த நிகழ்வில் விஷாகா எங்கும், மகளின் அருகில் கூட வராமல், இருந்தது, நாதன், ரேஷ்மி, அதிதி மற்றும் இனியா நான்கு பெரும், என்ன இவ , என்று தான் , விஷாகா மீது, ஒரு வித, சினத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் .
நாதனுக்கு மனைவி, யார் யாருக்கு அழைப்பு, விடுவது, சாப்பாட்டிற்கு என்ன, பிறகு, மாலை நிகழ்ச்சிக்கு தேவையானவை என்று அனைத்துக்கும், தேவகி கூடவே இருக்க வேண்டும் என்பதால், தேவகியால், எந்த பக்கமும் நகர முடியாமல் போனது.
ரேஷ்மி, அக்ஷித்தா, மற்றும் அக்ஷய் , இருவரையும் பார்த்து கொண்டாள் .
இதனால், இனியாவை, விஷாகா, ரேஷ்மியை பற்றி, அன்பு வாழ்க்கையில் குழப்பத்தை, உருவாக்க முயன்றாள் .
சுமதிக்கு, மகளை அனைவரும் பேசிய கோவத்தினை, யாரிடமும் காட்ட முடியாமல், இனியாவின் பக்கம் திருப்பினர் .
"சரி சரி, வாய, பார்த்துட்டு நிக்காம, கீழே போ, போய் கூட மாட, அங்கு வேலை செய்றவங்க இருப்பாங்க, என்ன என்ன செய்யணும்னு கேட்டு செய்," என்று அவளை அனுப்பி வைத்தார் .
இனியாவிற்கா, தெரியாது, மாயாரின் எண்ணம், அவர்களின் முகத்தை பார்ப்பதற்கு சமயலறையில் இருப்பதே மேல், என்று, அவளும் அங்கு சென்றாள் .
அதன் பின்பே, அங்கு பணியாளர்களின் உடை பார்த்து, அன்று அன்பு நடந்து கொண்டதற்கான காரணம் புரிந்து கொண்டாள், இனியா .
முகத்தில் ஒரு நிமிடம் சோகம் தோன்றி மறைந்தது .
"என்ன, உன் புருஷன் அவ்வளவு கோவ பட்டான், ஏன் இப்போ, நீ போட்டுட்டு இருக்க டிரஸ், உன் வியர்வை, இது எல்லாம் பார்த்தா , என்னை பொறுத்த வரைக்கும், இவங்களோடு நீயும் ஒன்னு தான், இப்பவும் சொல்றேன், உன் தகுதி, இது தான்," என்று அவளின் பின்னே சென்ற, விஷாகா, அவளின் சோக முகம் ஒரு நொடி கண்ட த்ரிப்த்தியில் மனம் மகிழ, கிண்டல் செய்தாள் .

இதற்கெல்லாம் வருத்தம் அடைந்தாள், விஷாகாவை போன்ற ஆட்களுக்கு, மிகவும் இளக்காரமாக தோன்றும், என்று தெரிந்து வைத்திருந்த, இனியா "என்ன அண்ணி, செய்யறது, உங்க மாமியார் மாதிரி, என் மாமியாரும், எல்லா வேலையும் அவங்க தலையில ஏத்திக்கிட்டாங்கன்னா, நானும் உங்களை போல, ஒரு கையில போன் , டிப்டாப்பா டிரஸ், போட்டுக்கிட்டு, எந்த வேலையும் செய்யாம, சுத்திகிட்டு, இருக்கலாம், "
"ஹ்ம்ம் எங்கே அதுக்கு எல்லாம் ஒரு குடுப்பினை வேணும் பாருங்க, " என்று சலித்து கொண்டதில்,
"ஹே, என்ன எங்க அம்மா உனக்கு வேலை செய்யணுமா," என்று சண்டைக்கு தயாரானாள் .
"அண்ணி , இப்போ, என்ன, வேணும் உங்களுக்கு, மானத்தை மறைக்கிற எந்த உடையும் நல்ல உடை தான் ."
"என் உடம்புல வழியிற வியர்வை, என் உழைப்பை காட்டுத்துன்னு, நான் பெருமை தான் படுறேனே தவிர, எனக்கு எதிலும் வருத்தம் இல்லை."
"இன்னும் கொஞ்சே நேரத்தில, உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் வருவாங்க, மிஞ்சி போனா, கொஞ்ச நேரம், உங்க ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ், எல்லாம் பார்த்து ரசிபாங்களா, அதுக்கு அப்பறம் இந்த வயிறு ஒன்னு இருக்கே, அது அதோட பசிய காட்டும், அப்ப எல்லாருக்கும், சாப்பாடு மேல தான் நினைப்பு போகும்."
"வரவாங்க எல்லாருக்கும், இனிப்பு, பலகாரம், டீ எல்லாம், தேவகி ஆண்டி , என்னை பார்த்துக்க சொன்னாங்க".
"கொஞ்ச யோசிங்க, உங்க வீட்டுல, உங்களை விட்டுட்டு, என்னை வந்து, ஆர்கனைஸ் பண்ண சொல்றாங்களே, இதுல, இருந்தே, உங்களுக்கு ஏதாவது புரியுது,?" என்று இனியா வார்த்தை முழுக்கும் நக்கல் வழிந்தோடியது.
"எனக்கு நிறைய வேலை இருக்கு, உங்களோட பேசிகிட்டு இருக்க எனக்கு டைம் இல்லை," என்று, கூறி, வேலை செய்பவர்களுக்கு, உணவு வெளியில் இருந்து வரும் என்றாலும், மாலை, நான்கு மணியளவில் செய்வதற்கான,சிற்றுண்டி ஏற்பாடுகளில் இறங்கினாள் .
அங்கு, மற்றவர்களிடம், ஏதும் தன்னை காட்டி கொள்ளாமல் , மனதில் அவள் மீது வன்மம் சுமந்து, அங்கிருந்து, அவள் அறைக்குள் சென்று விட்டாள் அன்னையுடன் .
மாமியார் தான் தலையெழுத்து சகித்துக்கொள்ளும் நிலை, இவளுக்கு எல்லாம் பதில் கொடுத்தால் தான் தன்னிடம் நெருங்க மாட்டாள், என்று இனியாவும் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் .
"அண்ணி, அந்த லூசு கிட்ட ஏன் அண்ணி பிரச்சனை, ஏதாவது திருப்பி செய்யும்," என்று அதிதியும் இனியாவிடன் விஷாகாவை பற்றி கூறினாள் ,
அவளுக்கும், ரேஷ்மியும், இனியாவும், ஒரே இடத்தில இருப்பதில், விஷாகா ஏதேனும் செய்வாளோ, என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
"எனக்கு ரொம்ப கோவம் வருது, அதி, ரொம்ப சில்லியா பிஹேவ் பன்றாங்க, என்ன கோவம் அவங்களுக்கு, தேவையில்லாமா, பிரச்சனை செய்றாங்க, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன், இங்க நம்ம எதுக்கு வந்து இருக்கோம், அதை பற்றி ஏதாவது அவங்க நினைக்கிறாங்களா, அக்ஷி கிட்ட கூட அவங்க போகவே இல்லை,"என்று பொரிந்து தள்ளினாள்.
"ஹ்ம்ம், அக்ஷி எதுவும் டௌனா பீல் ஆக கூடாதுன்னு, ரேஷ்மியும் அவ கூடயே இருக்கா," என்று அதிதியும் நினைத்தாள்,
"பெருமை மட்டும் தான் இருக்கு அண்ணி அவளுக்கு, விடுங்க அவ கதைய, அவ பேசினா கூட அங்க இருந்து விலகிடுங்க அண்ணி," அக்காவை பற்றி மனமெல்லாம் கோவமே அதிதியின் வார்த்தையாக வந்து தெறித்தது .
"அத்தை, அங்க ரோட்ல அப்படி பேசுனாங்க, இப்போ போய் பொண்ணோட இருந்துட்டா எல்லாம் சரியா, அவங்களை, கீழே கூப்பிடு, நான்னு சொன்ன அலட்சியமா வரமாட்டாங்க, ஏதாவது சொல்லு, கொஞ்சம் பேசணும், இன்னைக்கு, அம்மா வீட்டுல இருந்து தர ட்ரெஸ் தான் போடணும், நம்ம எப்படி வாங்கறது, என்ன வரிசை செய்யணும், இது எல்லாம் இருக்குல்ல, உங்க அண்ணனுக்கு போன் போடணும், போய் வீட்டுல என் போன் எடுத்துட்டு வா," என்று கை ஒரு பக்கம் சமையலில் இருந்தாலும், அடுத்தடுத்த வேலைகள் கூறி கொண்டிருந்தாள் .
பின்பு சுமதி வந்ததும், "அத்தை, எங்க வீட்டுக்கு தகவல் சொல்லிடுங்க, என்று கூறினாள் , இனியா கூறி செய்தால், என்ன மரியாதை, சுமதிக்கு, ஆகையால், கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.
பின்பு பிறந்து வீடு சீராக செய்ய வேண்டியதை பற்றி இனியா கூறினாள், அதற்கு மட்டும் செவிசாய்த்து, உடனே அன்புவிற்கு அழைத்தார்.
அவனோ, அப்பொழுது தான், வண்டியில் ட்ரெயினில் வந்து கொண்டிருந்தான்.
அப்பொழுதே மணி மூன்று ஆகியது, மதிய சாப்பாடு பற்றி, நினைப்பின்றி, அனைவரும் பம்பரமாக வெளியில் இருந்தனர்.
மீண்டும் அழைத்து ஓய்ந்த சுமதி, மகனை மனதில் மட்டுமே திட்ட முடிந்தது.
அதற்குள், இனியாவின் பெற்றோருக்கு, நாதனே, அழைப்பு விடுத்தார்.
அந்நேரம் வீட்டினில் ஆண்கள் இல்லாமல், மகளின் நாத்தனார் வீட்டு விசேஷத்திற்கு, செல்லவில்லை, என்றால், மகளுக்கு அங்கு மரியாதை இருக்காது, என்று கருதி, வீட்டினில் தேவைக்கு என்று இருந்த பணத்தில், தன்னால் முடிந்தது, என்று அந்த பெண்ணிற்கு என்று ஒரு பவுனில் மோதிரம் வாங்கினார்.
மோகனின் வரவிற்கு பிறகு கிளம்பலாம் என்று இருந்தார்.
சுமதி அழைப்பார் என்று எதிர்பார்த்தால், கண்டிப்பாக அது முடியாத காரியம் என்று நன்கு அறிந்து வைத்திருந்தார்.
ஆனால், சம்மந்தியின் அழைப்பு இல்லாமல், அங்கு சென்று வர, மோகன் ஒற்றுக்கொள்ள வேண்டுமே, அழையா விருந்தாளியாக, செல்ல கணவ
ன் அனுமதிக்க மாட்டார்.
இது வேறு ஒரு பக்கம் இந்திராவின் சிந்தனை .


பல முறை வேலையில் இருந்தாலும் இனியாவும் கணவனுக்கு அழைத்து, இறுதியில் தானே கடைக்கு சென்று தேவையானதை வாங்கலாம் என்று முடிவு செய்தாள் .
அதற்குள், உறவினர்கள், வர ஆரம்பித்ததில், அனைவரையும் கவனிக்கும் வேலை, என்று இனியாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
வீட்டு ஆளாக, அவள் மற்றும் உடன் அதிதி, என்று வந்தவர்களை கவனித்து வந்தனர்.
நாதன் தேவகி, வந்தோரை வரவேற்று விட்டு, மேலும் செய்ய வேண்டிய கவனிப்பில் இறங்கினர்.
அதில், அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்ற பதற்றம், அதில் தேவகி மிகவும் களைத்து காணப்பட்டார்.
இனியா, நாதனையும் தேவகியும் முதலில், அமர வைத்து, "எல்லாம் சரியா நடக்கும், முதல்ல, இந்த ஜூஸ் குடிங்க," என்று உபசரித்து, அதன் பின்னே, அவர்களை அடுத்து வேலை செய்ய விட்டாள் .
அதில் வந்தவர்கள், அன்புவின் மனைவியை, அவளின் சுறுசுறுப்பு, உபசரிப்பு என்று பாராட்டி புகழ விஷாகாவிற்கு இருந்த ஆத்திரத்தில், அனைவரையும் கொள்ளும் வெறியே.
அந்நேரம், வெறும் பேச்சு பேசும் சில வில்லங்கம் பிடித்தவர்கள், "இது தான் அன்பு மனைவியா, நல்லா பழகுறா, என்ன நம்ம வீட்டு பொண்ணை விட்டு, வெளிய எடுத்து இருக்கான், அது தான் என்னனு சொல்றது," என்றதும், இது தான் சாக்கு என்று, விஷாகா, "என்ன அக்கா, செய்றது, ரேஷ்மி பொண்ணுக்கும் ஆசை தான், ஏன் என் தம்பிக்கும் ஆசை தான், தலையெழுத்து, என் மாமனார் கொஞ்சம் வசதி பார்ப்பார், உங்களுக்கு தெரியாததா, அவருக்கு ஈடா அன்பு இல்லை, அதான் வேண்டாம்னு சொல்லிட்டாரு, அவனும் கிடைச்சதை வெச்சி வாழ்க்கை நடத்துறான்," என்று திருமணமாகாத பெண்ணின் எதிர்காலம் பற்றியும், சொந்த தம்பி தம்பி மனைவியையும் அசிங்கமாக பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் , இனியாவின் மனதில் குழப்பம் என்னும் கல் எறிந்தாள் .
அதற்குள், நேரம் கடந்து, மாலை ஐந்து போல் அன்பு அவன் இல்லத்திற்கு சென்றால், வீடு பூட்டி இருந்தது, அதற்குள், அணைத்து வைத்திருந்த, அவனின் தொலை பேசியை, இயக்கி, அவனே சுமதிக்கு அழிப்பு விடுத்தான் .
மகனின் திடீர் என்று வந்து நிற்கும் மகனின் வரவை பற்றி , ஏதும் கேட்காமல், ஆட்சிக்கு செய்ய வேண்டிய பட்டியல் கூறி, பிறகு, வைரத்தில் டாலர் வாய்த்த சங்கிலி, பரிசளிக்குமாறு, கூறி அவன் தலையில் இடை இறக்கினார்.
ஏற்கனவே முன்பணமாக கொடுத்த பணத்தையும் இழந்து, வந்து நிற்கும் அன்புவின் நிலை, திண்டாட்டம் தான் .
ஒரு வழியாக, இனியா, அவளால் முடிந்த வேலை முடித்து, வீட்டிற்கு செல்ல நினைத்தாள் .
அவளும் அதிதியும் தேவயானதை, வாங்கி கொண்டு, பிறகு அவர்களும் தயாராகி, வந்து சேரலாம் என்று நினைத்தாள் .
அதற்குள், சுமதி அன்புவின் வரவை எடுத்து கூறி, அவன் இனியாவை பேச சொன்ன தகவலையும் கூறினார் .
கணவனின் வரவு மனதில் சாரல் அடிக்க, அவனுக்கு அழைத்தாள் .
"ஹலோ, இனியா," என்றதும், "என்னங்க , எப்போ வந்தீங்க, இப்போ, என்ன செய்றீங்க" என்றதும்,
"நான் கடைக்கு போறேன், என்னால, இப்போ கோல்ட் மட்டும் தான் வாங்க முடியும், என்கிட்டே காசு இல்லை, தட்டு வரிசை கூட, இருபத்தி ஒன்னு போதும் இல்ல, அம்மாக்கு பக்குவமா எடுத்து சொல்லு, அவங்க பங்க்ஷன், வைக்கும் போது வைர செட் பார்த்துக்கலாம்னு சொல்லு," என்றதும், இவளுக்கு பக் என்று இருந்தது தான், "டைமண்டா, என்று நினைத்து, இந்த அத்தை, ரொம்ப செலவு வைக்கிறாங்க," என்று மனதில் நினைத்தாள் .
"சரிங்க, பார்த்துக்கலாம், வாங்க, நான் பேசுறேன், நீங்க வாங்கிட்டு, நம்ம வீட்டுல இருங்க, நீங்க தான் வந்துடீங்களே, நான் இங்கேயே இருக்கேன், அதிதியை டிரஸ் மட்டும் எடுத்துட்டு வர சொல்றேன் ," என்று கூறி,
"அப்பறம் ஒரு விஷயம்," என்றதும் அவனின் வேகத்தில், "சீக்கிரம் சொல்லு" என்றதும், "உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே," என்று அவனின் நிலை புரியாமல் கேட்டாள் .
இங்கு உறவினர்கள் பேசிய சில வம்பு பேச்சில், அவளுக்கு ஒரு வித குழப்பம்.
மனைவி சம்மந்தம் இல்லாமல், இந்நேரம் என்ன என்ற யோசனை, அவனுக்கு .
"என்ன கேள்வி டீ இது, நீ தானே எனக்கு எல்லாம் ,"
அவனின் ஆழ்ந்த குரல் அவளை குழப்பத்தில் இருந்து சமன் செய்தது .
பிறகு, அதிதியிடம் இனியா சென்று, அவளை, அதிதியை தயாராகி, இனியாவிற்கும், சுமதிக்கும் , என்று உடை எடுத்து வருமாறு கூறினாள் .
"ஆஹ்ன், அதி, கல்யாணத்துக்கு எடுத்த அந்த ப்ளூ லினன் ஷர்ட், உங்க அண்ணாவுக்கு எடுத்து வை, அவர் கடைக்கு போயிட்டு, வீட்டுலயே ரெடி ஆகிட்டு, வர சொல்லிட்டேன், இப்போவாவது, உங்க அண்ணாவை, கலர் ட்ரேஸ்ல, பார்க்கலாம்," என்று அவள் அதிதியுடன், பேசும் நேரம், "மாமா, எப்போ கலர் டிரஸ் போட்டு இருக்காரு, ப்ளேக் ன் வைட் தானே போடுவாரு," என்று அவளையும் மீறி, ரேஷ்மி உளறி விட்டு, திரு திரு என்று முழித்து, அவ்விடம் நகர்ந்தாள் .
இன்னும் ஆழ் மனதில் குடியிருக்கும் அன்புவின் எண்ணம் அவள் மனதை வாட்டியது.
அதில் இனியாவிற்கு, ஒன்றும் தெரியாமல், மீண்டும் குழப்பம்.
எதற்கு, அவ இப்படி முழிச்சிட்டு போறா, எதுக்கு அவர் பற்றி பேசவும் இவ முகம் இவ்வளவு சலனம் .
அன்பு அவனால் முடிந்தது வாங்கி கொண்டு, பிறகு, அதிதி அதற்குள் வீட்டினில் எடுத்து வைத்து சென்ற, உடையை,பார்த்து புன்னகையிதான்.
இது மனைவியின் வேலை, என்று நன்கு புரிந்து, அந்த ப்ளூ உடையே அணிந்து கொண்டான் .
அண்ணனும் தங்கையும் விசேஷத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அன்புவின் கலையிழந்த முகமே இனியாவுக்கு காட்சியளித்தது.
கூட்டத்தில் பார்வையால், மனைவியை வருடி, அவளுக்கு எடுத்து வந்திருந்த உடையை கொடுத்து, தயாராகி வர சொன்னான் .
சந்திராவிற்கும் தேவகி அழைத்தார்.
ஆனாலும் சந்திரா முதலில் தயங்கி, பிறகு நாதனே வற்புறுத்திய பின், சரனிடம் அனுமதி கேட்டு, ஒருவழியாக, அவரும் வந்து சேர்ந்தார்.
தேவகி, தங்கையை உடன் நிறுத்தி கொண்டதில், விஷாகாவால் ஒன்று செய்ய முடியாமல் போனது.

அங்கு இருக்கும், மஞ்சள் நீராட்டு முடிந்து, நலங்கு நடை பெரும் நேரம், அன்பு மற்றும் இனியா இருவரும் முதலில், அக்ஷிக்கு மாலை, சூட்டி, முதல் நலங்கு ஆரம்பித்து வைத்தனர்.
அவனால் முடிந்தது, என்று சிறப்பாகவே செய்தான், தங்கத்தில் ஹாரம், தோடு மோதிரம், என்று வாங்கி, பட்டு புடவை, மற்றும் இதர இருபத்தி ஒரு தட்டு வரிசை, செய்தான்.
அனைத்தும் சுமதியை முன்னிறுத்தியே, அன்பு செய்தான் .
சுமதி, சுணக்கம்,முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
இனியா எவ்வளவு எடுத்து கூறியும், இனியா தான் அவர் கூறிய பின்பும், கணவிடம் எதுவும் வாங்க கூடாது என்று மறுப்பு தெரிவித்ததாக, சண்டையிட்டார்.
இந்திராவும் , மோகனை சாமாளித்து, வந்து சேர்ந்தார்.
முறையான, மரியாதை, கொடுத்து, இந்திராவை வரவேற்றனர் நாதன் தம்பதியினர்.
அந்நேரம் இந்திரா மீது சுமதியின் கோவம் திரும்பியது,



 

achuma

Well-Known Member
hi friends thanks for all your likes and comments.
next continuti i give on tomorrow
no space
all take care friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top