அன்பின் இனியா 19 2

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா

அன்புவின் இறுகிய முகம் கண்டு அங்குள்ளோருக்கு, யாவராலும் ஏதும் பேச முடியாமல், நின்றிருந்தனர், என்றால் , விஷாகா மட்டுமே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் என்றே கூறலாம்.
அவள் இதற்கு முன்பும் , எவ்வளவு தீங்கு செய்தும், தம்பியிடம் ஒரு முறை கூட கோப முகம் கண்டதில்லை.
அவனின் மறுப்பை கூற, அவன் புன்னகையாகவே கையாளுவான் .
தான் ஒன்று செய்து, அக்கோவத்தை அவன் வெளியிட்ட முறை. அதுவும் அவள் எதிரியாக தனக்கு சமமில்லை என்று நினைக்கும் இனியாவிற்காக, அவள் முதன்மை ஸ்தானம் ,அக்கா என்ற இடத்தில பெரிதும் அடி வாங்கினாள் .


அதிலும் இனியாவிற்காக, அவன் அக்கா மீது கோவம் கொண்டது, அவளால் பெருகி வரும் ஆவேசத்தை அடக்கும் வழியின்றி, அவனிடம் சீற ஆரம்பித்தாள் .
"போயும் போயும், அவளுக்காக நீ, என் மேலயே கோவத்தை காட்டுறியா," என்றதும், மனைவி சென்ற அறை பக்கம், பார்வை பதித்திருந்த அன்பு, அக்காவின் பக்கம் பார்வை திசை மாற்றி , ஒரு விரலை வாயில் வைத்து, பேசாதே என்பது போன்று, தலையை இடவலமாக அசைத்தான் .


அவ்வளவு தான் பொங்கி விட்டாள் , தன்னை மிரட்டுவதா, என்று.
அவள் வாய் திறக்கும் முன்பே,
அதற்குள், இனியா அறையில் இருந்து, அவள் முன்பு உடுத்தி இருந்த சேலையையே, கட்டி கொண்டு, யாரையும் பார்க்காமல், தலை நிமிராமல், அன்புவின் அருகில் வந்து நின்றதும், அவள் கைகளை பிடித்து , கிட்ட தட்ட, இழுத்து கொண்டே சென்றான் எனலாம்.


அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அவள் ஓடினாள் என்று கூறும் அளவிற்கு இனியாவின் நடையின் வேகம் இருந்தது.
இனியாவுக்கு தான் மனம் விட்டு போனது.
கணவனின் திடீர் கோவம், தன் மீது எதற்கு என்று ஒன்றும் புரியாமல், அவனிடம் கைகளை ஒப்பு கொடுத்து, அவன் திசைக்கு பயணம் செய்தாள் .


அவன் , டிராவெல்ஸின், வண்டியில் வந்த காரணத்தால், வண்டியில் இருந்து கொடுத்த ஓசையில் சுமதி, தானாக, மகளை, ஒரு வித தவிப்புடன் பார்த்து விட்டு, மகனின் வண்டி நோக்கி சென்றார்.

கிட்ட தட்ட, அன்புவின் கையில் அவன் வண்டி சீறி பாய்ந்தது.
அவன் மனைவியின் முகமோ, அன்னையையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வீடு வரும் வரை .


வீட்டினில் வந்ததும், யாரையும் பார்க்க பிடிக்காமல், பேச விருப்பமின்றி, இனியா அவள் அறைக்குள் ஓடி சென்றாள் .
அன்பு அங்குள்ள சோபாவில், தலையை சாய்த்து விட்டதை வெறித்து கொண்டிருக்கும் நேரம், சுமதி, "அன்பு, அக்கா , ஏதோ தெரியாம," என்றதும் அன்னையிடம் இது வரை கோவத்தை வெளிப்படுத்ததா அன்பு, இப்பொழுதும் அவன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து,


"வேண்டாம் மா, இனியும் உங்க பொண்ணுக்காக பரிஞ்சி பேசாதீங்க, இன்னும் அவ புத்தி இப்படியே தான் இருக்கும்னா, என்னை விட்டுருங்க,"
"இனி அவளோடு கடைசி வரை எனக்கு போராட தெம்பும் இல்லை, பொறுமையும் இல்லை."


"நானும் மனுஷன் தான், எவ்வளவு தான் பொறுமையா இருக்கிறது, இந்த கரம் வெச்சி பழி வாங்குறது எல்லாம் இன்னும் தொடர்ந்தட்டு இருந்தானா, அவளுக்கே நல்லதில்லை."

"என்னடா, இவ்வளவு அமைதியா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாளேன்னு பார்த்தேன், அதானே அவளை மீறி எனக்கு பிடிச்ச வாழ்க்கை தேர்ந்தெடுத்த ஒரே காரணத்துக்காக, இப்படி என் பொண்டாட்டிய அவ வீட்ல வேலை செய்யறவங்க காஸ்ட்யூம் போட வெச்சி திருப்தி பட்டுக்கிட்ட அவ குரூர புத்திக்கு நீங்க ஆதரவா பேசுறீங்க பார்த்தீங்களா, அங்க நிக்கிறீங்க மா நீங்க," என்று நக்கலாக மொழிந்ததில் சுமதி கண்கள் கலங்கியது.

அவரின் கண்ணீரை காணும் துணிவற்று, "இந்த விஷயம் என்னை தாண்டி, என் மனைவி காதுக்கு போகாதுனு நினைக்கிறன்" என்று அமர்த்தாலாக, கூறினான்.
அவ ஆட்டம் எல்லாம், என் வரைக்கும் மட்டும் தான், என் மனைவியை ஏதாவது, துன்புறுத்தும்னு நினைத்தா அதுக்கு நான் ஒருகாலமும் பொறுத்து போக மாட்டேன்.
சீனா வயசிலேயே, அவ தப்பு பண்ண, கண்டிச்சி வளர்க்கமா, இப்போ, அவளோட அந்த எண்ணத்தால், எத்தனை பேருக்கு பாதிப்புனு பார்த்துக்கோங்க.


"உங்க கல்யாணத்தில, அவளுக்கு ஒரு அவமானம் அதுக்காக இப்படி பண்ணிட்டா பா, என்றதும், அன்னயையை , இயலாமையுடன் பார்த்தான்.

"அம்மா அவ எந்த காரணத்துக்காகவும் இப்படி செய்தது தப்பான, குணம்."
"அது உங்களுக்கு பெருசாவே தெரியலையா, உண்மை காரணம் என்னனு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்."
"அவ சொல்லி, நான் ரேஷ்மியை கல்யாணம் செய்துக்கலை , அந்த கோவம்".
"சரி நீங்க எப்படியும் அவ செய்ததை ஒத்துக்க மாடீங்க அதை விடுங்க".


"இப்போ, இவளோட, புத்தியை, இப்படி அவ புகுந்த வீட்டுல வெளிப்படுத்தி இருக்காளே, அது பற்றி யோசித்து பார்த்தீங்களா," என்று தலையில் இடியை இறக்கி மனைவியை காண சென்று விட்டான் .
அதுவரை, தெரியாத விஷயம், சுமதிக்கு பூதாகரமாக தெரிந்தது.


அங்கு மகள் எப்படி சமாளிக்கிறாளோ, என்று தவிப்பு, பயம்.எல்லாம் போட்டி போட, மகளின் தொலை பேசிக்கு அழைப்பு விடுத்தார்.

இது எல்லாம் கேட்டு கொண்டிருந்த அதிதிக்கு, "இவ்வளவு நடந்தும், இந்த அம்மா, எப்படி சப்போர்ட் பண்றங்க பாரு, என்று அன்னையை நினைத்து பல்லை கடித்து கொண்டாள் .
அவளால், வேறு என்ன செய்ய முடியும் .
இனி அவனை மீறி, சுமதியும் சரி வேறு யாரும் விஷாகா கொடுத்த சேலையை பற்றி கூறமாட்டார்கள்.


இனியாவே அங்கு தேவகி வீட்டினில் வேலை செய்வோரின் சீருடை பற்றி நேரில் போய் பார்த்தால் தான் உண்டு.
அன்பு ஒன்றும் உயர்வு தாழ்வு, என்று அந்தஸ்து பார்ப்பவன் இல்லை, வேலை ஆட்களின் சீருடை உடையை தன் மனைவி உடுத்தியதால், அவன் அங்கு கோவம் கொள்ள வில்லை.


விஷாகாவால் அந்த உடை கொடுக்க பட்ட நோக்கம் தான் தவறு.
அதன் காரணம், அக்காவால், தனக்கும், தன் மனைவிக்கும் ஏற்பட்ட அவமானத்திற்கு, மனைவியிடமே, மனைவிக்காக கோவம் கொண்டான்.


அது இனியாவிற்கு தான் ஒன்றும் புரியாமல், கணவன் மீது மிகவும் வருத்தமாக இருந்தாள்.
அங்கு அறைக்குள் நுழைந்ததும், அவளின் கலங்கி சிவந்த முகம் கண்டு, துணுக்குற்றான் .


"ச்சே , விஷா செய்த தப்புக்கு, இவ மேல கோவத்தை காட்டிட்டேனே, அங்க என்னை பார்த்ததும் பயந்தாள், இதுவரை,தன்னை காதலாக,பார்த்த கண்களில், இன்று தன்னை பயந்த பார்வை பார்த்த மனைவியை நினைத்து அவனும் அவன் தவறை நினைத்து மருகினான் .

"என்ன காரியம் செய்திருக்கேன் நான், ஆனா, இவளுக்கு இப்படி ஒரு அவமானம், என்னை கல்யாணம் செய்துகிட்டதாலே தானே, இனி எது ஒன்று என்றாலும் என்னோட போகட்டும், என் மனைவியை சீண்டும் எண்ணம் அவளுக்கு துளியும் வர கூடாது, இதற்கு ஒரு முடிவு கட்டுறேன்," மனதிற்குள் சபதம் போட்டு கொண்டான்.

"என்னால உனக்கு இந்த அவமானம் தேவையா, உனக்கு விஷயம் தெரிந்தா நீ ரொம்ப வருத்த படுவ,"
என்று தன்னையே நொந்து கொண்டு, மனைவியை சமாதானம் செய்ய அவள் அருகில் சென்றான்.
கணவனை கண்டதும், முகத்தை இன்னும் கோவமாக வைத்து கொண்டு முகம் திருப்பினாள் .


அதில் அவனுக்கு வருத்தம் அடங்கி, சிரிப்பு பெருகியது.
அவன் அமர்ந்து, இனியாவை எப்பொழுதும் போல் மடியில் அமர செய்ய, கையை நீட்டினான்.
ஆம், திருமண, ஆன இந்த நாட்களில், அன்பு இனியாவை, அவன் வீட்டினில் இருக்கும் நேரம், அவன் மடி மீது தான் அமர்த்தி கொண்டு கதையளப்பான்.


இவன் பேசுவான் என்பதை விட, மனைவி பேச இவன் அப்பேச்சினை ரசிப்பான் என்று கூறலாம்.
இனியாவிற்கும், இந்த வயதில் அவளை மடி மீது, அமர்த்தி, தன்னை தாங்கும் கணவனை மிகவும் பிடிக்கும், விரும்பியே, அவன் மடியில் தஞ்சம் அடைவாள் .
இவள் எவ்வளவு நேரம் பேசுவாள், என்று தெரியாது, அவனும் கேட்க்கொண்டிருப்பான்,


சில நேரங்களில், "எனக்கு , உங்க மடியில உட்காந்து உட்காந்து, இப்போ எல்லாம், சேர்ல, சோபால, உட்காந்தா எல்லாம் பிடிக்கவே மாட்டிங்குது," என்று அங்கலாய்ப்பாள் .
"உனக்கு பிடிக்காது தான் டீ ," என்று அவனும் பதிலுக்கு புன்னகையாக பதிலளிப்பான் .
இன்று, அந்த இனிமை, எங்கோ சென்றது.
திருமணத்திற்கு பிறகு வரும் முதல் ஊடல் .


மீண்டும், அவன் கைகள் உயர்த்தி அருகில் அழைக்க, அவள் இன்னும் முறுக்கி கொண்டாள் .
ஏதோ சிறு பிள்ளை போல், அவளின் கோவம் அவனிற்கு மனைவியின் செயலில் ரசிப்பு, கூடியது .
அதில் சிரித்தும் விட்டான்.
"சிரிக்காதீங்க, கடுப்பா வருது," என்று அவனை முறைத்தாள் .
மனைவியை நோக்கி, கையை நீட்டி, அருகில் அழைத்தான், அவளோ கைகளை தட்டி விட்டாள்.
இறுதியில் , அவனே சென்று, அவளை, தூக்கி கொண்டு, அங்குள்ள நாற்காலியில் தானும் அமர்ந்து, அவளை மடியில் அமர்த்தினான்.


அவள் திமிர திமிர, அவள் கண்களை, பார்க்க நினைத்தான், அவனுக்கு போக்கு காட்டி கொண்டு, அவன் கழுத்து வலைவியில் முகம் புதைத்து மறைத்தாள் .
"ம்ச் இனியா,"என்று உடல் குலுங்க அவன் சிரிப்பில், முகத்தை மறைத்த வாக்கிலே, அவன் வாயை கைகள் கொண்டு பொத்தி, இன்னும் அவன் கழுத்து வளைவில் முகம் வைத்து மறைத்தாள்.


பழகுவதற்கு இலகுவானவன் என்று நம்பி இருந்ததற்கு எதிர்மாறாக, இன்று அவனின் கோவ முகம் அவளுக்கு அச்சமூட்டியது, அதிலும், அவனின் சுயம் எது என்று தெரியாமல் இருக்கிறேனே என்ற அலைப்புறுதல் ஒருபக்கம் என்று தவித்தாள்.

தான் என்ன மனைவி, தனக்கு எதுவுமே தெரியவில்லையே, அவனின் உண்மை முகம் எது, என்று ஏதும் புரியாத குழப்பத்தில் அவள் இருந்தாள், என்றால், இங்கு வந்ததும், அவன் அவளிடம் வம்பு செய்வது, அவளுக்கு கோவத்தையே கொடுத்தது.

"என்னை பாரு,இனியா " என்று அவளை நிமிர்த்தி, தாடையை, ஒரு கையால் இறுக்க பற்றி, மற்றோரு கையில் அவள் இடையை வளைத்து, தன் முகத்தை பார்க்க செய்தான்.

மனைவி ஏதும் சொல்லவில்லை என்றாலும், அவள் கண்களை வைத்து யூகிக்கும் வல்லமை, அவனை மட்டும் புரிய வைக்கும் அவனவளின் கண்களுக்குள், என்ன எண்ணங்கள், அவளின் எண்ணத்தை புரிய முயற்சி செய்தான்.
"சாரி, நான் அங்க உன் மீது கோவ பட்டுட்டேன், ஆனா, என்னோட கோவம், நிச்சயமா உன் மேல இல்லை, ஆனா உனக்காக மட்டும் தான், உன்னை மீறி எனக்கு எதுவும் முக்கியமும் இல்லை, அது மட்டும் நீ நம்பனும்."
அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.


"இதோ இந்த கண்ணு என்னோட பேசுது இனியா," என்று அவள் கண்களை பார்த்து கொண்டே அவன் அவளிடம் குழைந்ததில், அத்தனை நேரம் தவிப்புடன், விளக்கம் கூறி கொண்டிருந்தவனின், குரல் மாற்றம் உணர்ந்து, அவனை அடிக்க ஆரம்பித்தாள் .

அந்த அடிகளை எல்லாம் தூசு போல் தட்டி, அவள் கைகளை பிடித்து கொண்டு, "எதுக்கு என் மேல பயம், என்ன பார்த்து பயந்தே, எனக்கு எப்படியோ ஆச்சு," உண்மையில் வருத்தமே, அவன் மொழியில்.
"பின்ன, ஏற்கனவே, என்னை அத்தை,எப்பவுமே திட்டுறாங்க, நான் எந்த தப்பு செய்யலானாலும், ஏதாவது,குறை சொல்லிட்டே இருக்காங்க, வீட்டுல ஏண்டா, இருக்கோம்னு, தோணுது,"


அவளையும் மீறி, அவளின் மனஉளைச்சலின் சீற்றத்தில், அனைத்தையும் கணவனிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள் .
ஒவ்வொன்றும் மனைவி கூறும் வரை, அவளை பேச விட்டு கேட்போம், அனைத்தும் இன்றே கொட்டட்டும் என்று அவன் மனைவியை பார்த்து கொண்டிருந்தான் .
"எதற்கு எடுத்தாலும் அதிகாரம், தான், உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம், என்னோட வளர்ப்பை குறை சொல்றாங்க, உங்களுக்காக மட்டும் தான், உங்களுக்கு எந்த கஷ்டமும் என்னால இருக்க கூடாதுன்னு, தான் நான் எல்லாம் கடந்து வரேன்".


"உங்க அன்பு, மட்டும் தான் இது எல்லாம் கடந்து வர எனக்கு உதவுதும் கூட, எனக்கு தெரியலை, இந்த டூ வீக்ஸ்ல, நான் உங்க மேல ரொம்ப டிபெண்ட ஆயிட்டேன், அது சரியா தப்பா, அப்படின்னு கூட எனக்கு தெரியலை."
"அப்பப்போ, யாருக்காக வாழுறோம், என்ன செய்துட்டு இருக்கோம், எதுவும் தெரியாத, ஒரு செக்யூர் பீல்லே இல்லாம, நானே, ஏதோன்னு இருக்கேன், அப்பறம் உங்கள அந்த டே எண்ட்ல, நான் பார்த்துட்டா, என் வாழ்க்கைக்கான அர்த்தம் புரியும்.அதுல என்னையே நான் சமாதானம் செய்துப்பேன் ."


"உங்க கிட்ட மட்டும் தான், என்னோட ஆறுதல, நான் தேடிட்டு இருக்கேன், உங்க முகத்தை பார்த்து தான், அந்த நாள் அனுபவிச்ச டென்ஷன் எல்லாம் துரத்த முடியுது."
"உங்களையே, உங்களுக்காக மட்டுமே, சார்ந்து, நான் என்னோட, தன்மானம், எல்லாம் விட்டு கொடுத்து, என்னையே தொலைச்சிட்டு, இருந்தா, நீங்க என் மீதே கோவ பட்டது, எனக்கு ஒரு மாதிரி ஆச்சு, நீங்களும் நான் என்ன தப்பு செய்தேன்னு, என்ன குழப்ப வைக்கிறீங்க," என்று, அதுவரை கட்டுப்படுத்தி இருந்த, கண்ணீர், கன்னம் தொட்டது .


மனைவியின் முகத்தில் வந்து போன, மாற்றங்களையே, பார்த்து கொண்டிருந்த அன்பு, தான் என்ன மனைவியை இது நாள் வரை பார்த்து கொண்டேன், என்ற உண்மை கேள்வி இதயத்தில் வலிக்க செய்தது.
மனைவியின் கண்ணீர் கண்டதும், அவளை அணைத்து கொண்டு, எதில் இருந்தோ, யாரிடம் இருந்து காப்பது போல் அவனுள் இறுக்கி கொண்டான் .


அவனின் அழுத்தமான அணைப்பு, அவளுக்கும், ஏதோ மனதில் போட்டு கணவன் தவிக்கிறான், என்று உணர முடிந்தது.
மனைவியின் முனங்களில், "ஏன் எதுவும் என்கிட்டே சொல்லல, இனியா, இந்த கண்ணு கூட என்கிட்டே பொய் சொல்லுச்சா," என்று அவள் கண்களுக்கு, அழுந்த முத்தம் வைத்ததில், அது வரை, தான் அவனிடம் அனைத்தும் உளறி வைத்திருக்கிறோம், என்ற மூளை எச்சரிக்கை செய்ததில் அதிர்ந்து, அவன் முகத்தை பாவமாக பார்த்து வைத்தாள் .


"நீ , எனக்காக, இங்க வாழுறேன்னு, சொன்னியே, அது போல் நான் உனக்காக மட்டுமே, உன் மீது கோவ பட்டேன், அதுவும் என்ன சொல்லிட்டேன், போய் ட்ரெஸ் மாத்த சொன்னேன், வேற ஏதாவது, உன்னை திட்டுனா, நீ இவ்வளவு கன்பியுஸ், ஆகலாம்."
"நீ எந்த தப்பும் செய்யலை , தப்பு எல்லாம் என் மீது தான், இது வரை நீ இங்க எப்படி, இருந்து இருக்கேன்னு கூட தெரியாம இருந்து இருக்கேன், என்னை நினைத்து, எனக்கே, வெட்கமா இருக்கு, நான் எல்லாம் எண்ணத்தை குடும்பத்தை பார்த்து இருக்குறேனு, அசிங்கமா இருக்கு," என்றதும் "இல்லை, நீங்க அப்படி எல்லாம் நினைக்காதீங்க, நான் தான் எதுவும் சொல்லல, நான் ஒரு மடச்சி, இது எல்லாம் சின்ன விஷயம், இதை போய் உங்க கிட்ட பெருசு படுத்துறேன் பாருங்க," எங்கு கணவன் ஏதேனும் மாமியாரிடம் சண்டைக்கு நிற்பானோ, என்ற பயம், தன்னையும் தேற்றி கணவனை சாந்தப்படுத்த முயற்சி செய்தாள் .


"என் மேல நம்பிக்கை இருந்தா கோவத்திற்கான காரணம் மட்டும் கேட்காத இனியா, ப்ளீஸ்," என்று அவன் முகம் கசங்கி கூறியதில், அவளும், "இல்லை, எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை, இருக்கு, நீங்க எந்த விளக்கமும் கூற வேண்டிய அவசியம் இல்லை, எனக்கும் இந்த விஷயத்தை மறக்கணும், எனக்கு அங்கு நடந்த எதுவும் தேவை இல்லை ."

"அங்கு என்டர் ஆனதுமே, ஏதோ ஒரு பேட் இம்ப்ரெஷின், அதுக்கு ஏற்றது போல், நீங்க கத்துனீங்க, நம்ம வந்துட்டோம், சோ, இனி அது பற்றி பேசாதீங்க, என்றாள் .
"செழியன் மாமா, நீங்க ரொம்ப சாப்ட் அப்படினு சொன்னாரா, அதை அப்படியே மைண்ட்ல ஏத்திகிட்டேன், இன்னைக்கு உங்க கோவம் அது தான், நான் கொஞ்சம் தடுமாறிட்டேன், இனிமே பி[யாருங்க, என்கிட்டே சவுண்ட் விட்டு பாருங்க, இருக்கு உங்களுக்கு," என்று கண்களை உருட்டி மிரட்டியதில் அதில் விரும்பியே,தன்னை தொலைத்தான் .


அவள் இடையை அழுந்த பற்றி, "சட்டமா என் மேலையே உட்காந்துட்டு, என்னையே மிரட்ற", என்று அவன் முகம் கோவமாக தெரிந்தாலும், அவன் கண்களில் தாண்டவமாடும் குறும்பும் கைகளின் விஷமமும், அவளை நெளிய செய்து, "சும்மா இருங்க, நான் கோவமா இருக்கேன்," என்று மீண்டும், அவனிடம் கோவ முகத்தை காட்டினாள் .
அவளின் சிறு பிள்ளைத்தனமா செயல், " எனக்கு நீ மட்டும் தானே உரிமையானவ,உரிமை இருக்குறவங்க கிட்ட தானே, நம்ம நாமா இருக்க முடியும், நான் உன்கிட்ட மட்டும் தான் என்னோட உண்மை குணத்தோட இருக்க முடியும், இனியா, புரிஞ்சிக்கோ டா," என்றதும்,
அவளும், நடந்தை ஒரு முறை அலசினாள், அன்புவின் உரிமையான கோவம், உரிமை பட்டவளிடம் கொண்ட கோவம், அதில் தவறு இல்லை, அதிலும் தனக்காக மட்டுமே என்ற கணவனும் விளக்கினானே .
மேற்கொண்டு எதனால், அங்கு என்ன நடந்தது, என்று அவளும் அதற்கு மேல் நினைக்க முயற்சி செய்ய வில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top