அன்பின் இனியா 18 4

Advertisement

achuma

Well-Known Member
hi friends
sorry for delay
thanks for likes and comments
next episode i send by to day night



அன்று நாதன் அவரின் அலுவலக அறையில் அமைதியின்றி அமர்ந்திருந்தார்.
முன்தினம் மாலை வீட்டினில் நடந்ததே அவரின் தவிப்பிற்கு காரணம் .

அன்று தான் அவர் விஷாகாவின் மற்றொரு முகம் அறிந்து கொண்டாரா, அல்லது கண்ணுக்கு சிக்காத, விஷயங்கள், அவரின் கருத்துக்கு சிக்கியதா என்று விடை கிடைக்கா குழப்பத்தில் தவித்தார்.

அவரின் மனதில் மீண்டும் அதே நிகழ்வு ஓடி கொண்டிருந்ததில், வேலையில் கவனம் சிதறியது.
முன்தினம் மாலை, நாதனின் பேரப்பிள்ளைகள், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தில், அவர்களுக்கு தேவையான சிற்றுண்டி தயாரிக்கும் பொருட்டு, வேலையாட்களுக்கு வேலை கொடுத்து விட்டு, ஏதோ சோர்வாக மனைவி இருக்கையில் சென்று அமர்ந்தார்.


அந்நேரம், நண்பர் ஒருவரின் வீட்டு, விசேஷத்துக்கு, கிளம்பும் பொருட்டு, அந்நேரம் நாதன் வீட்டிற்கு வருகை தந்து மனைவியிடம் தகவல் தெரிவித்து அவர்களின் அறை நோக்கி சென்றார், அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் பொருட்டு.

அப்பொழுது விஷாகா, அவளும், அவள் அன்னையிடம் பேசிய காரணமாக, கொஞ்சம் மனம் சமாதானம் ஆகி இருந்தாலும், ரேஷ்மி பற்றிய குழப்பத்தில் இருப்பதால், அவள் முன் நிற்போர் யாரை பார்த்தாலும் குதறி எடுக்கும் மன நிலையில் தான் இருக்கிறாள்.

ஆகையால் அன்று வீட்டிற்கு சீக்கிரமே வந்து விட்டாள் .
எப்பொழுதும் போல் யாரையும் கண்டுகொள்ளாமல், நேராக அவள் அறைக்கு செல்லும் நேரம், "விஷா மா" என்ற மாமியாரின் குரலில் அவர் பக்கம் திரும்பி என்னவென்று பார்த்தாள் .


அதுவே அவள் அவருக்கு கொடுக்கும் மரியாதை.

"ரொம்ப தாகமா இருக்கு, இப்போ தான் உட்காந்தேன், கொஞ்சம் தண்ணி, எடுத்துட்டு வா மா," என்று எதார்த்தமாக கேட்டு வைத்தார்.
குற்றம் செய்த உள்ளம் கொண்ட விஷாகா, மகள் ஏதேனும்
கூறி இருப்பாளோ, தன்னை பார்த்ததும், தனக்கு உபசரிப்பு செய்யும் மாமியார், இன்று தன்னிடம் வேலை கூறுவதா, இப்படி எல்லாம் யோசித்ததில், அவள் ஒன்றும் கூறாமல், நேராக சமயலறையில் வேலை செய்வோரிடம் சென்று கத்த ஆரம்பித்தாள் .


மிகவும் சோர்வாக ஒலித்த, மனைவியின் குரலில் மாடி படிக்கட்டுகளை நோக்கி நடந்து கொண்டிருந்த நாதனின் நடை நின்று, என்ன மருமகளிடம் பேசுகிறாள், மனைவியின் குரல் ஏன் மிகவும் பலகீனமாக ஒலித்தது என்று அவர் அங்கு நின்று இருந்தது, விஷாவின் கெட்ட நேரமோ, அல்லது அவருக்கு ஒரு பாடமோ.

அதன் பக்கம் ஒட்டி உள்ள சமயலறையில் மருமகள் பற்றிய அதிகாரம், கோவம் மாறியதையற்ற பேச்சு, எல்லாம் கேட்க நேர்ந்து, அவருக்கு கடலின் சீற்றம் அளவு கோவமே.

"இத்தனை பேரு வேலை செய்யறீங்கன்னு பேரு, அந்த பொம்பளை, என்கிட்டே தண்ணி, கேட்குது, அப்பறம் எதுக்கு உங்களை எல்லாம் தண்டமா வேலைக்கு வெச்சு, சம்பளம் தரணும், என்னை பார்த்தா எப்படி தெரியுது, நான் யாரு, நான் போய் சேவகம் செய்யணுமா, ஒருத்தரையும் வேலையில வைக்காம தொலைச்சிடுவேன்," என்று விறல் நீட்டி, எச்சரித்து விட்டு, அவள், அங்கிருந்து சென்று விட்டாள் .

வேலை செய்வோருக்கு தான் விஷாகாவிடம் திட்டு வாங்கி பழகி போனதே, ஆனால் எதற்கு திட்டி சென்றாள், யாருக்கு என்று புரியாமல் தான் அவர்கள் சிந்தித்தனர் .
யாருக்கு, என்ன என்று குழம்பி வேலை செய்வோர் இருந்தனர் என்றால், இங்கு ஸ்தம்பித்த நிலை நாதனிடம்.
அவர் நேராக வேக நடைகளில் கீழே இறங்கி சென்று, அவரே, சமயலறையில் சென்று, பிரிட்ஜ் திறந்து, தண்ணீர் எடுத்து கொண்டதும், அங்கு வேலை செய்வோர் பதறி, "ஐயா" என்றதும்,
"இருக்கட்டும் வேலை பாருங்க," என்று கர்ஜனை குரலில் கட்டளையிட்டு, மனைவி நோக்கி சென்றார் .
என்ன கட்டு படுத்தியும் அவரின் கோவம் வெளி பட்டது, மற்றவர்களுக்கு .


அவரின் உள்ளம் உலைகளமாக, கொதித்து கொண்டிருக்கிறது.
"என்னங்க நீங்க ,"என்று தயங்கிய மனைவியை அமைதி படுத்தி, "என்ன செய்யுது," என்று வாஞ்சையாக கேட்டார் மனிதர்.


அதில் கண்கள் விரிந்து அவரை ஏதோ அதிசய பிறவி போல் பார்த்து நின்றார், தேவகி.
"ஒன்னும் இல்லை, நான் விஷா கிட்ட தானே கேட்டேன், கொஞ்சம் சோர்வா, இருக்கு அவ்வளவு தான், சரியா போய்டும், " என்று கணவரை சமாளித்தாலும், நாதனிடம் ஏதோ ஒரு கோவம், ஆற்றாமை எல்லாமே அவரின் முகத்தில்.


"ஏன் இப்படி இருக்கீங்க, ஏதாவது வேணுமா," என்று அவளின் உடல் வலியெல்லாம் மறந்து, கேட்கும் மனைவியை நினைத்து, அவருக்கு, எப்பொழுதும் போல் , மனதில் பெருமை பொங்கியது, ஆனால் இது வரை, வெளியே அவரை பாராட்டியது இல்லை.

அந்த நேரம் முதல் அலுவலகத்திலும் வினோத்தை குதறி கொண்டிருந்தார் மனிதர், மருமகளின் மீதான கோவத்தை, மகனிடம் காட்டி கொண்டிருந்தார், அவன் செய்யும் வேளைகளில், விடாக்கண்டனாக, தவறுகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து, ஏதேனும் ஒரு குறை கூறினார்.

மகன் காதல் என்று வந்து நில்லாமல் இருந்தால், விஷாகா மருமகளாக வந்த்திருக்க மாட்டாள், என்ற எண்ணமே அப்பொழுது.
ஆகையால் வினோத் சரியாக செய்த வெளியில் கூட தவறு கண்டுபிடித்தார் .


அவன் எதுவும் அலட்டிக்கொள்ளாமல் தலையசைப்புடன் அவரிட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இதை பற்றியெல்லாம் நினைத்து பார்த்து அமர்ந்திருந்தார் நாதன்.
ஆயிரம் பேருக்கும் மேல், அவரின் கம்பெனியில் வேலை செய்யது கொண்டிருக்க, அவரின் மனைவிக்கு, ஒரு தண்ணி கொடுக்க, வீட்டினில் ஆளில்லையா.


உண்மையில் வீட்டினில் வேலை செய்வோர், தேவகியிடம் எப்பொழுதும் மரியாதையுடன் தான் நடந்து கொள்வர்.
அன்று விஷாகா தேவகிக்கு என்றால், அவர்கள் ஓடோடி செய்ய தயார் தான்.


ஏதோ நாதனுக்கு அன்று மனது விட்டு போனது.
யாருக்காக இந்த உழைப்பு , சொத்து, சுகம் அனைத்தும், தன் மனைவியை மீறி யாருக்கு அவ்வீட்டில் உரிமை.
எதற்காக இது எல்லாம் கட்டி ஆள வேண்டும், அவர் மனைவிக்கு மரியாதை இல்லையே, வீட்டினில் .


"அந்த பொம்பளையா," என்ன பேச்சு விஷாவிடம் வார்தைகளாக வந்து விழுந்தது.
ஏன் கம்பெனி முதலாளி என்றால், மாமியாருக்கு தண்ணி எடுத்து கொடுக்க கூடாதா.


இராஜசேகரிடம் சாமர்த்தியமாக பறித்ததாக நினைத்த, இராஜ் டெக்ஸ்டைல்ஸ் , இப்பொழுது அவரை பார்த்து கைகொட்டி சிரிப்பதாக தோன்றியது .

இது எல்லாவற்றிக்கும் காரணம், தனது அலட்சியமே.
மனைவி மீது எப்பொழுதும், நாதனுக்கு குறையா காதலும், அன்பும் உண்டு.


ஆனால் வேலை, தொழில் பணம், இதனை பெருக்குவதே, அவரின் முழு நேரம் என்று இருந்ததில், அவ்வளவாக, வீட்டினில் நடப்பது, தெரியாமல் போனது.
தேவகி ஏதேனும் சொன்னாலும் அதை பெரிதாக காதினுள் போட்டு கொள்ள மாட்டார்.


இந்த அலட்சியமே, இப்பொழுது விஷாகா, அவள் மாமியாருக்கு மதிப்பு தராததற்கு காரணம் என்று அவரின் மனசாட்சி அவரை ஓங்கி அடித்தது போன்ற உணர்வு.

மனைவிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறதே, தான் நகை பணம், கார், என்று மனைவிக்கு இது எல்லாம் சேர்த்திருக்கிறேன், இது போல் யார் இருப்பார் என்ற கர்வமே அவரிடம்.

ஆனால் சொந்த வீட்டில் அவரின் மனைவிக்கு மரியாதை இல்லை.
இப்பொழுது தான் அன்பு பக்கம் யோசிக்க ஆரம்பித்தார்.
எப்பொழுதும், அவனுக்கு எந்த சொத்தும் இல்லை, என்ற ஏளனம் அவரிடம் அன்பு மீது இருக்கும்.


ஏன் விஷாக, அன்புவை மரியாதை இன்றி நடத்தும் போது, அவருக்கு பெரிதாக தெரியாத பல விஷயங்கள் இப்பொழுது, தனது மனைவிக்கு நடக்கும் போது பூதகரமாக தெரிந்து அவரை பயம்புறுத்தியது.

ஆனாலும் அன்பு, எதையும் காட்டி கொள்ளாமல், இப்பொழுது டிராவெல்ஸின், முதலாளியாக உயர்ந்து நிற்கும் அவனின் தன்மானம், இப்பொழுது, அவன் பக்கம் மெச்சுதலாக பார்க்க வைத்தது.

இன்னும் இந்த சிறு வயதிலே, அத்தனை பேரையும் பணிவுடன் அவன் நடத்தும் மரியாதையான பாங்கு, இது ஏன் அவனின் அக்காவிற்கு இல்லாமல் போனது.
அவனும் தான் முதலாளியாக , இருக்கிறான், குடும்பத்தை பார்க்கிறான், ஆனால் அவனிடம் இருக்கும் நல்ல பண்பு, விஷாகாவிடம் இல்லாமல் போனதே, என்று இப்பொழுது, அவரும் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தார்.


இப்படி பலதும் யோசித்து, ஏசி அறையிலும் வேர்த்து, மிகவும் அமைதியின்றி தவித்தார், அவரின் குடும்பத்தின் எதிர்காலம் நினைத்து முதல் முறையாக தோன்றிய பயம் அது.

நெஞ்சை நீவி கொண்டு, இறுதியில் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து, கிளம்பி விட்டார், அவரின் இல்லம் நோக்கி, மனைவியை பார்த்து வர.

அங்கு வீட்டிலோ, வேலையாட்கள் அவர்களின் வேலைகள் முடித்து சென்றிந்தனர்.
அத்துடன் மாலை வந்து இரவு உணவு ஏற்பாடுகள் வரை செய்து விட்டு, அவர்கள் சென்று விடுவர் .


காவலாளி, நாதனின் கார் சத்தம் கேட்டு கேட் திறந்து விட்டான்.
அங்கு வீட்டினில் யாருமில்லை, தனிமை, தேவகி எப்படி வீட்டினில் தனியாக இந்நேரத்தை கழிப்பாள், என்று காலம் கடந்து மனைவி பற்றி யோசித்தார்.
அறை முழுதும் தேடியும் எங்கும் காணாமல் இறுதியில் சமையலறை , அந்த அறை ஒட்டி இருந்த பால்கனியில், மனைவி கால் நீட்டி அமர்ந்திருப்பது கண்டு, அங்கு சென்று பார்த்தார்.


தேவகிக்கு அந்த வீட்டில் அவருக்கு பிடித்த இடம் அது, வேலை எல்லாம் முடித்து, அங்கு அமர்ந்து தோட்டத்தை ரசிப்பதில் அவருக்கு அலாதி பிரியம், என்றே கூறலாம்.
அன்றும் அதே போல் அவர் அமர்ந்திருப்பது கண்டு, நாதனுக்கு தான் பதற்றம்,"என்ன ஏன் கீழு உட்காந்துட்டு இருக்கே," என்றதில், தேவகிக்கு பதற்றம் தொற்றி கொண்டது, அந்நேரத்தில் கணவனின் குரல் கேட்டு.
ஆனாலும் தன்னை, சமாளித்து, கணவனை கண்டு முறைத்தார், நம்ம வீட்டுல கீழே உட்காறது தப்பா, என்ற பார்வை மட்டுமே பார்த்து, அதற்கு விளக்கம் தராமல், "நீங்க என்ன இந்த நேரம் ", என்று எதிர் கேள்வி கேட்டார் .


"சும்மா தான்," என்று சுற்றும் முற்றும் பார்த்து, அவர் மனைவியின் அருகில், கீழே அமர்ந்து விட்டார்.
அவரின் இச்ச்செயல், ஒரு பக்கம் சிரிப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது தேவகிக்கு.


கீழே தரையில் அமர்வது ஏதோ கவுரவ குறைச்சல் போல், அவர் நினைத்து, யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்ததை நினைத்தால், சிரிப்பாகவும், அதே நேரத்தில் இது போல், பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்து, இருப்பது, அதிர்ச்சியாகவும் இருந்தது.

"எனக்கு இங்க உட்கார பிடிக்கும், அதான் இங்க இருக்கேன், நீங்க ஏன், இப்போ, இங்க," என்று மீண்டும் மனைவியிடம் இருந்து கேள்வி.
"உன்னை பார்க்க தான் வந்தேன், பொண்டாட்டிய பார்க்க புருஷன் வீட்டுக்கு வர கூடாதா," என்று சுள்ளென, மனைவி மீது கோவம் கொண்டார்.


"கேட்குறா பாரு கேள்வி," அதில் இன்னும் ஆச்சர்யம் தான் தேவகியிடம் இருந்து.
"ஹ்ம்ம் சரி தான்," என்று அமைதி தேவகி.
"தேவா, ஒரு பொழுது பூரா உனக்கு எப்படி இங்க போகுது, போர் அடிக்கல,வேலையும் எதுவும் இங்க இல்லையே " என்று தோட்டத்தை பார்த்து கொண்டே கேட்டார்.
உண்மையில் மனைவிக்கு நாள் முழுதும் எப்படி நேரம் செல்கிறது என்று கேட்க வந்து, இப்படி உளறி வைத்தார்.


"எங்க சும்மா இருக்கேன், காலையில, உங்க பேரன் பேதிக்கு, சாப்பாடு கட்ட, என்ன செய்யன்னு பார்க்கணும், வினோத்து, நீங்க, விஷா, கிளம்பரத்துக்குள்ள, உங்களுக்கு தேவையான டிபன் செய்ய சொல்லணும் .
சமையல் செய்ய , வீடு சுத்தம் செய்ய, தோட்டம் பார்த்துக்க எல்லாம் ஆளுங்க, இருந்தாலும், அவங்க எல்லாரும் ஒழுங்கா செய்யறாங்களானு மேற்பார்வை யாரு, நான் தானே பார்க்கணும்".


"வீட்டுல கரண்ட் வேலை செய்யறதுல இருந்து, தண்ணி, பைப்பு, இதே ஒன்னு என்றாலும் அதுக்கான, ஏற்பாடும், நான் தானே, செய்யணும் ."

"பசங்க, ஸ்கூல் மீட்டிங், அங்க நாடாகும் நிகழ்ச்சி, எல்லாத்துக்கும், என்னை தானே அவங்களும் எதிர்பார்க்கிறாங்க ."

"இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல, உங்களுக்கும், மருமகளுக்கு, அப்பறம் வினோத்துக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்பனும்.

சாயந்திரம், பசங்க வருவாங்க, அவங்களுக்கு தூங்குற வரை நான் கூட இருக்கனும் ."
"இதுல, வேலை செய்றவங்க, இந்த நேரம் போய்டுவாங்க, நான் இப்போ தான் கொஞ்சம் பிரீ, எனக்கு இங்க உட்காந்துட்டு, இப்படி தோட்டத்தை பார்க்க பிடிக்கும்."


"என்னை பார்த்து சும்மா எப்படி இருக்கே, பொழுது போகுதான்னு கேட்குறீங்க," என்று கணவன், சாதாரணமாக பேசியதில் மனைவியும் அவர் மனதில் உள்ள குமுறலை பேசி விட்டார்.

"தப்பு தான் தேவா தப்பு தான், நான் சும்மா இருக்கேனு சொன்னதை நீ ஏன் வேற அர்த்ததுல எடுக்குறே, போர் அடிக்கலயான்னு கேட்டேன்," என்று சரண் அடைந்தார்.

"இன்னிக்கி ஏதோ புதுசா தெரியுறீங்க," என்று கேட்டு விட்டு, "ஒரு பொண்ணு, சம்பாரிச்சா, மட்டும் தான் மரியாதை, அவ வீட்டுல, எவ்வளவு வேலை பார்த்தாலும்,குடும்பத்தை நல்லாவே நடத்தினாலும், சும்மா தானே இருக்கே அப்படின்னு தான் பேர் வருது," என்று வருத்தமுடன் கூறினார்.

இவ்வார்த்தைகள் பல முறை நாதனே, தேவகியிடம் கூறியது.
"எத்தனை வார்த்தைகள் , அவளை காயப்படுத்தியது போன்று கூறியிருக்கிறேன், என்று நினைத்து, சோகம் சுமந்தது முகம் .


"தேவா, என் மேல ஏதாவது வருத்தமா, என்று மனைவியின் கையை பிடித்து, அதில் கேள்வியா, அவரின் மன்னிப்பா என்று பிரித்தறியா முடியா, வகையில் கேள்வி கேட்டார்.

"என்ன திடீர்னு, ஏன் இப்படி பேசுறீங்க, எனக்கு ஏன் உங்க மேல கோவம்," என்று தேவகியும் கணவனின் கைகளை பிடித்து கொன்டு பதறினார்.

ஒரு வேலை நாதனுக்கு உடல் நிலை சரியில்லயோ, என்ற பயமும் , ஏனெனில், என்றுமில்லாமல், கணவன் , இது போல் வீட்டிற்கு வந்து, மனைவியுடன் நேரம் செலவழிப்பது எல்லாம், ஏதோ அதிசியமாகவே, தேவகிக்கு தோன்றியது.

"நான் ஏன் கேட்குறேன்னா, உன்னை, ஏதோ வேலையா, எங்க அப்பாவோடு, உன் வீட்டுக்கு வரும் போது,
உங்க வீட்டுல உன்னை முத முதல பார்த்த போதே, எனக்கு பிடிச்சி போச்சு,"


" நீ காலேஜ் போகும் போது, உன் கிட்ட காதல் சொல்ல, ஏதாவது வம்பு பண்ணுவேன், நீ என்னை பார்த்து பயந்து ஓடுவே."

நாதன் கூறும் போது, தேவகியும் கடந்த காலத்திற்கே சென்றார், அவரின் முகத்தில் வெட்க சிரிப்பு , "ஹான், பின்ன, தினமும், நான் போற இடம் எல்லாம் வழி மறித்து, நான் பேசணும்ன்னு, கொஞ்சம் நில்லு மிரட்டுவீங்க, என்னோட புக், எடுத்து வெச்சிட்டு கொடுக்க மாடீங்க, இந்த புக் என் கையில இருக்கும் வரைக்குமாவது நிப்ப தானேன்னு, என்கிட்டயே, ரொம்ப கிண்டலா சொல்லுவீங்க, உங்களை பார்த்து பயம் வராம , காதல் அப்படியே வரும் பாருங்க," என்று சிரிப்புடன், அங்கலாய்த்தார்.

"அது, எனக்கு விருப்பம், ஆனா எப்படி சொல்ல, தெரியாம, ஏதோ சொதப்பி, ஒரு வழியா, எங்க அப்பா அம்மாவோடு, வீட்டுக்கு வந்து, உன்னை கல்யாணம் பண்ணிட்டேன் ."

"ஆனா கல்யாணத்துக்கு பிறகு, உனக்கு நான் மதிப்பு கொடுத்தேனா, எனக்கு இப்போ உறுத்துது, தேவா,"

" உன் மேல எப்பவும் காதல் இருக்கு, அதே நேரத்தில, நான் எல்லா உனக்கு செய்யறேன்னு, கர்வம் எனக்கு இருக்கே தீவிர, உனக்கு என்ன வேணும், நீ என்ன எதிர் பார்க்குறேனு, தெரியாம, இருந்துட்டேன், அதான், இப்போ ஏதோ கில்டியா இருக்கு," என்று வருந்தினார்.

தேவகியிடம் கணவனின் ஒப்புதல் மன மகிழ்ச்சியே, ஆனால் அவரும் திடீர் என்று இக்கேள்விக்கான, மாற்றத்திற்கான காரணம் விளங்காமல், "எனக்கு என்ன கஷ்டம், நீங்க எனக்கு செய்யறதுல, உங்க அன்பு நான் எப்பவும், உணரேன்," என்று நாதனை தேற்றினார்.

இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து, பிறகு, அடுத்த நாள், அன்பு தம்புதியருக்கு விருந்து கொடுப்பது பற்றி பேசி கொண்டிருந்தனர்.

நாதன், உடனே, தானே அன்பு தொலைபேசிக்கு அழைத்து, நாளை, விருந்துக்கு வருமாறு, அழைத்தார்.

அவர், மரியாதையாக, அன்புவிடம் பேசியது, அன்புவுக்கும் சரி, தேவகிக்கும் சரி, மகிழ்ச்சியே.
எப்பொழுதும், அவரிடம் இருக்கும் ஏளனம் , இன்று அவரின் வார்த்தையில் இல்லை.
அன்பு எப்படி இப்படி என்று யோசிக்கலானான் .
 

Nasreen

Well-Known Member
Nice ud
Oh ippovavathu Nathan kandupidichar
Neraiya makkah ippadithan avanga nilayil irunthu parpanga but opposite side layum sila ethirparppu ennagal...
Irukkalamnu yosikirathu illa
Inimae nathan anbu mela anbu mattum illama mariysthsiyum serthu vaipar
Appadiyae devaki thangachi kittayum
Mariyathaya nadathukalsm
And vinoth ku eppo theriya poguthu
Innum kadhal mayakkam pogalayo?
 

Saroja

Well-Known Member
நாதன் இப்பவாது மருமகள
புரியுதே
இனி மகள் விசயத்தில்
அவளோட கோக்கு மாக்கு
தெரிஞ்சா

மனைவி கிட்ட காலம்
கடந்த பின்னாடி மனச
திறக்கறாறு
அருமை
அன்புவ புரிஞ்சுகிட்டு
மதிக்கறது நல்லா இருக்கு
 

achuma

Well-Known Member
Nice ud
Oh ippovavathu Nathan kandupidichar
Neraiya makkah ippadithan avanga nilayil irunthu parpanga but opposite side layum sila ethirparppu ennagal...
Irukkalamnu yosikirathu illa
Inimae nathan anbu mela anbu mattum illama mariysthsiyum serthu vaipar
Appadiyae devaki thangachi kittayum
Mariyathaya nadathukalsm
And vinoth ku eppo theriya poguthu
Innum kadhal mayakkam pogalayo?
Seekiram ellam sariyaagum friend
Thanks :)
 

achuma

Well-Known Member
நாதன் இப்பவாது மருமகள
புரியுதே
இனி மகள் விசயத்தில்
அவளோட கோக்கு மாக்கு
தெரிஞ்சா

மனைவி கிட்ட காலம்
கடந்த பின்னாடி மனச
திறக்கறாறு
அருமை
அன்புவ புரிஞ்சுகிட்டு
மதிக்கறது நல்லா இருக்கு
Nandri
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top