அன்பின் இனியா 18 3

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி உங்களின் ஆதரவு தேவை நட்புக்களே.
All take care friends:love:(y)



இனியா, நிச்சயம் மாமியார் இது போன்று பேசுபவர் என்று கனவிலும் நினைத்தாள் இல்லை.
அவளை பொறுத்த வரை, தான் அனைத்திலும் சரியாக இருந்தால், எதிலும் தனக்கும் வருத்தம் இருக்காது என்று நினைப்பவள்.

அதையே செயலிலும் வழி நடத்துபவள், ஆனால், மாமியார் என்ற உறவு, மருமகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று யார் அவளுக்கு எடுத்து கூறுவது.
அவரின் அதிர்ந்த முகம் கண்டு, தன்னை அமைதியாக்கியவள், "அத்தை, நான் ஏதாவது தப்பு செய்தா என்னை என்னனு, கேளுங்க, தேவையில்லாமல், என் மேல குத்தம் சொல்லாதீங்க, நான் ஒரு போதும் அதை ஏத்துக்க மாட்டேன்," என்று அமைதியாகவும் ஒரு மிரட்டல், கொடுக்க முடியும் என்று அவள் மாமியாருக்கு அறிவுறுத்தி விட்டு, அவள் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள் .


இங்கு சுமதியின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது .
அமைதியின் மரு உருவமாக, இருக்கும் இனியாவிற்குள், இப்படி ஒரு கோவமும், ஆவேசமும் இருக்கும், அதிலும், மாமியார் ஏதேனும் கூறினால், பயந்து அடங்கி இருப்பாள், வந்த முதல் நாளே அடக்கி வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தது என்ன, இப்பொழுது அவரையே மிரட்டி சென்றது என்ன, என்று நினைத்து பயந்தார்.


திருமணத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கை அடுத்தவருக்கு கட்டு பட்டே, என்ற நிலையானது.
அவர் கணவர், சுமதியை அடக்கியே வைத்திருந்தார்.
விஷாகா மீது பயம் கலந்த அன்பு என்று கூறலாம்.
அன்பு தன்னை பார்த்து கொண்டாலும், அவன் அழுத்தமாக ஒரு வார்த்தை கூறி விட்டால், அவர் அதற்கு பிறகு அதில் இருந்து மீற மாட்டார்.
அதிதியை, எப்பொழுதும் ஒரு பொருட்டாகவே அவர் கருதியதில்லை.


சுமதியின் அக்கா, மற்ற சொந்தங்கள், எல்லாம் கூறி சென்றதில் இருந்து, மகன் எங்கு மனைவி மீது இருக்கும் காதலில், தன்னை, விட்டு விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்.
இதன் விளைவாக, இன்றிலிருந்து, மருமகளை தனது கட்டு பாட்டிற்குள், அடக்கி வைத்தால், தன் மீது அவளுக்கேனும், ஒரு பயம் உண்டாகும், என்ற எண்ணத்தில் அவர் அவளை, அடக்க நினைத்தார்.
அது இப்படி படு தோல்வியில் முடியும் என்று நினைத்தார் இல்லை.


"இவளை, இப்படியே விட முடியாது, இன்னைக்கே ஒரு முடிவு கட்டுறேன்," என்று இந்திராவுக்கு அழைத்தார், மகளின் லட்சணம் தெரிந்து கொள்ளட்டும் என்று .
யாரின் உறவு, முறிக்க நினைத்தாரோ, அவரையே பஞ்சாயத்திற்கு அழைத்தார்.


சுமதியிடம் இருந்து அழைப்பு என்றதும், இருக்கும் வேலை எல்லாம் விட்டு, அவரின் அழைப்புக்கு செவிமடுத்தார் இந்திரா .
மோகன் விடு முறை முடிந்து, வேலைக்கு சென்று விட்டார்.
இளங்கோவும் வீட்டில் இல்லை.
இலக்கியா, அவளின் புகுந்த வீட்டிற்கு சென்று விட்டாள் .
"வணக்கம் அண்ணி, நல்லா இருக்கீங்கங்களா, என்று இன்முகமாக அழைத்ததற்கு,


"முதல் வீட்டிற்கு வந்து சேருங்க மா " என்று சிடு சிடுப்புடன் பேசி அழைப்பை துண்டித்தார்.
என்னவோ ஏதோ என்று இந்திரா பயத்துடன், சுமதி இல்லம் சென்றார்.
மகளுக்கு அழைத்தாள், அவளின் அழைப்பு எண் தொடர்பில் இல்லை என்று பதில் வந்தது.
அதில் மேலும் பயந்து, கிட்ட தட்ட பறந்தார் என்றே கூறலாம்.


இந்திரா, சுமதி வீட்டில் சுமதி கோவத்துடன் அமர்ந்திருந்த கோலம் கண்டு, என்னவோ, என்றே அவரின் முன் சென்று நின்றார்.
மகள் எங்கு என்று வீடு முழுக்க கண்களை சுழல விட்டார்.
"ஹ்ம்ம், வீடு இப்படி இருக்கே, யார் வரா போறான்னு கூட தெரியாம, அவ ரூம்ல அடைஞ்சி கிடக்கா, உங்க மக."


"நல்ல லட்சணத்தில் வளர்த்து இருக்கீங்க உங்க பொண்ண, என்கிட்டயே வாயடிக்கிறா, என்ன நெஞ்செழுத்தம் இருக்கனும், அவளுக்கு, இது எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரி பட்டு வராது மா,"

"ஒழுங்கா புத்தி சொல்லி, இங்க எப்படி இருக்குமோ, அதுக்கான வழிய பார்க்க சொல்லுங்க."
என்ன, ஏது என்று இந்திராவுக்கு எதுவும் புரியவுமில்லை, அதே நேரத்தில் வந்தவரை அமர கூட சொல்லாமல், அவர் பட பட என்று பொரிந்து தள்ளினார்.
அதில் இருந்து, இவ ஏதோ வெடுக்குனு பேசி இருக்கா, ஆனா இவ மேல தப்பு இருக்காது, என்று மகளை பற்றி நன்றாக தெரிந்து வைத்த இந்திரா மனதிலே நினைத்து கொண்டார்.
"நான் பேசுறேன் அண்ணி," என்றதும், சுமதியும் இனியா இருக்கும் அறையை சுட்டி காட்டி, அவரின் அறைக்குள் சென்று விட்டார்.


கண்டிப்பாக, இவ்விஷயம் மகனுக்கு சென்றால், அவனிடம் இருந்து அவருக்கு என்று, எந்த ஒரு நியாயமும் கிடைக்காது, அதே அவளின் பெற்றோருக்கே போட்டு கொடுத்தால், கண்டிப்பாக, மகளின் வாழ்க்கைக்காக, அவளை அடக்கி வைப்பார்கள் என்று நினைத்து கொண்டார்.

இனியா அறை கதவை தட்டியதும் அவளும் அன்னையை அங்கு எதிர்பார்க்கவில்லை .
தாயை காண ஏங்கும் கன்று குட்டி போல், அன்னையை கட்டி கொண்டாள் .
அதிலே அவள் எந்த அளவிற்கு, மனதில் குழப்பி கொண்டிருக்கிறாள் என்று அறிந்து கொண்டு, முதலில் அவளின் முதுகை வருடி அவளை ஆசுவாச படுத்தினார்.
மகளும் தெளிந்து, "எப்போ மா வந்த, என்ன திடீர்னு, இரு காபி எடுத்துத்துட்டு வரேன்" என்றாள், அவளின் வருத்தத்தை மறைத்து.
அவளையே பார்த்து கொண்டிருந்த, அன்னையை என்ன என்று கேள்வியாக பார்த்தாள், மகள் .


"இங்க பாரு குட்டிமா, அப்பாக்கு நான் நல்ல பேரு வாங்கி தருவேன், பேசுனா மட்டும் பத்தாது, அதுக்கு ஏற்றது போல், இருக்கனும், பெரியவங்க ஆயிரம் சொல்லுவாங்க, நீ அவங்களை எதிர்த்து பேசறது தப்பு ."

"நீ இங்க இருக்கும் விதம் தான், எங்க வளர்ப்பு எப்படினு மத்தவங்களுக்கு எடுத்து கூறும், உனக்கு கஷ்ட பட்டு படிக்க வெச்சி, உங்களுக்குனு ஒரு எதிர்காலம் அமைச்சு கொடுக்குற எங்களுக்கு, நீங்க எங்களுக்குன்னு பதிலா கொடுக்கு போறது எல்லாம், பிள்ளைங்களை நல்லா வளர்த்து இருக்கீங்க அப்படிங்குற நல்ல பேரு மட்டும் தான் டா ".

"நான் என்ன" என்று இனியா வாய் திறந்ததும்,
"என்ன வேணும்னா நடந்து இருக்கட்டும், முப்பது வருஷம் அவங்க மகனை பெத்து வளர்த்து இருக்காங்க, நீ வந்த உடனே, உன் மேல கொஞ்சம் பொறாமை, கோவம், இது எல்லாம் இருக்க தான் செய்யும், உன்னோட பொறுமையல, அது எல்லாம் ஒண்ணுமே இல்லாம நீ செய்யலாம்."
"என் மருமக போல உண்டான்னு, அவங்களே சொல்ல கொஞ்ச காலம் ஆகும், அதுவரை நீ அமைதியா போகணும்."


"அது விட்டு ஏட்டிக்கி போட்டி இருந்தா, வெளியே வேலை பார்த்து வர மனுஷனுக்கு நிம்மதி இருக்காது பார்த்துக்கோ," என்றார்.

இனியா அன்னையை முறைத்ததும், "உன் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எனக்கு தெரியும் குட்டி மா, அவங்க தான் உன்னை சீண்டி இருப்பாங்க, உன்னை சீண்டும் வரை நீ அமைதின்னு, எனக்கு நல்லாவே தெரியும், ஆனா, குடும்பத்துக்குள்ள, இந்த கோவம், அதுவும் அந்த வீட்டு மருமகளா இருக்கும் பொண்ணுக்கு இருக்கவே கூடாது குட்டிமா. "

"உனக்கு என்ன நல்ல, புருஷனா, எங்க அப்பா கிடைத்து இருக்காரு, அத்தைங்க எல்லாரும், உனக்கு ஒன்னுனா, பேசுவாங்க அந்த தைரியம்" என்று அன்னையிடம் பாய்ந்தாள்
"உனக்கு அப்படியே தெரியும் பாரு, உங்க அப்பாவை பற்றி, பேச வந்துட்டா, எனக்கு கல்யாணம் ஆன புதுசுல, என்னை உன் அத்தையில இருந்து பாட்டி வரை,ஏதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க".


"உங்க அப்பா வந்த பிறகு, கொஞ்சம் பரவாயில்லையா, இருக்கும், அவர் என்னை, நல்ல தான் பார்த்துக்கிட்டாரு, அந்த நம்பிக்கைல, ஒரு நாள் அவர் வேலை முடிஞ்சி சாப்பிடற நேரம், என் மனசுல இருக்கும் ஆதங்கத்தை அவர் கிட்ட சொன்னேன், போய் அவங்க அக்காங்களை கேள்வி கேட்கணும் எல்லாம் நான் நினைக்கவே இல்லை, மனசுக்கு ஒரு ஆறுதலா, புருஷன் கிட்ட இருந்து, நாலு வார்த்தை வந்தா, கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்ன்னு தோணுச்சு."
"ஆனா, அன்னைக்கு பார்க்கணுமே இந்த மனுஷன் கோவத்தை, அப்படியே, சாப்பாடு வேண்டாம்னு, பாதியிலேயே எழுந்து, என் அக்கா, எல்லாரும் எனக்கு அம்மா மாதிரி, அவங்கள நீ பேசுவியான்னு ஒரே சண்டை. என்னை தானே கல்யாணம் செய்துகிட்டே, நான் எப்படின்னு வரை பாருன்னு, எனக்கு சொல்லிட்டாரு,"


"அப்பபோ தான் நானும் நினைக்க ஆரம்பிச்சேன், குடும்பத்துக்குள்ள எல்லாருக்கும் ஏதோ ஒரு வருத்தம் இருக்க தான் செய்யும், கட்டினவங்க ஒருத்தருக்கு ஒருத்தர், ஒற்றுமையா இருந்தா போதும், "

"வெளியே, ஆயிரத்தெட்டு வேலை , டென்ஷன் இது எல்லாம், தாண்டி, யார் யாருக்கோ, கை கட்டி வேலை செய்யறாங்க, இந்த ஆம்பளைங்க, எதுக்காக, குடும்பத்துக்காக தானே, அவங்க பொண்டாட்டி புள்ளைங்க நல்லா இருக்கணும் தானே, "

"அப்படி கஷ்ட்ட பட்டு நமக்காக, உழைக்கிற மனுஷனுக்காக, அவங்க குடும்பத்தை அனுசரித்து போறதுல தப்பில்லைனு தோணுச்சு, அதிலும் வீட்டுக்காரங்க சாப்பிட்டு முடிக்கிற வரை, எந்த பிரச்சனை பற்றியும் பேசவும் கூடாதுன்னு, ஒரு பாடமும் கத்துக்கிட்டேன்."

"என்னோட பொறுமை தான், உன் பாட்டி சாகும் நேரம், என்னை அன்பா நடத்துனாங்க, உன் அத்தைங்க எல்லாரும், அவங்க எதிர்பார்ப்பை எல்லாம், என்னால முடிந்த வரை பொறுமையா செய்துட்டு போனதால் தான், இப்போவும் எனக்குனா கூட இருக்காங்க."

"இரண்டே வழி பொறுமையா இரு, உன் கூட சொந்தங்கள் இருக்கும்,"
"கோவமா, எடுத்தெறிந்து பேசிட்டே இருந்தா, நாளைக்கு யாரும் நமக்குன்னு இருக்கா மாட்டாங்க."
"இப்போவும் உன் புருஷனுக்காகன்னு பாரு, எதுவும் உனக்கு பெருசா இருக்காது, அந்த மனுஷன் யாருக்காக உழைக்கிறாரு, அவருக்காக அவர் அம்மாவை பொறுத்து போடா," என்று அமைதியாக ஒலித்தது அன்னையின் குரல்.
மகளின் அமைதியே அவள் யோசிப்பாள், என்று அறிந்து கிளம்பினார்.


அன்னை, இனியா எவ்வளவு வற்புறுத்தியும் எதுவும் உண்னமல் சென்றது வேறு மனதை உறுத்தியது.
சுமதி இப்படி சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வார் என்று இனியாவும் எதிர்பார்க்கவில்லை, அன்னையை அழைத்து அவளை பற்றியே குறை கூறுவது எல்லாம் அவளுக்கு அவர் மீது சிறிதுசிறிதாக கோவத்தையே வர வைத்தது .
அமைதியாக, கீழே இறங்கி சென்றாள் .


இனியா சுமதியிடம் மன்னிப்பு கேட்பாள் என்று அவர் எதிர்பார்த்தார்.
அவளோ, எதுவும் கண்டுகொள்ளாமல், இருந்து விட்டாள் .
அவள் அவரை கடந்து நேராக சமயலறை சென்று விட்டாள் , அதில் மேலும் கோவம் வந்து, "என்னை கேட்டு தான் சமைக்கணும், அது கூட தெரியாதா," அவள் ஏதும் கூறாமல், அவரின் பக்கம் மட்டுமே பார்த்து நின்றாள்.


"வாய திறந்து பேசுறாளா பாரு," என்று நினைத்து, "சாம்பார் செய்து வை," என்று உத்தரவு இட்டு, அவரே, தனது ஆதிக்கம் தான் வீட்டில் இருக்கும் என்பது போல் நடந்து கொண்டார்.
குறைந்த பட்சம் அவள், சுமதியிடம் ஒரு மன்னிப்பு அல்லது, அமைதியாக இருந்து இருந்தாலாவது , அவருக்கு எதுவும் பெரிதாக தெரிந்திருக்காது, ஆனால் அவள் கண்கள் அவரை அலட்சியமாக பார்ப்பது போன்றே அவர் உணர்ந்ததால், அவளுக்கு எத்தனை திமிர் என்றே நினைத்தார்.


இனியும் தாமதிக்காது அவரின் ஒரே ஆறுதலான மகளை காண சென்றார்.
விஷாகாவை, எப்படியோ சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு வரும் படி கேட்க செய்தார்.
இனியாவை பாரி கூறினால், மகளே வந்து விடுவாள்என்று நினைத்தார்.


இந்த நேரம், விஷாகா , அவளது கடையில் இருப்பாள் என்று தெரிந்து அங்கு சென்றார் சுமதி.
அவள் அவளின் அலுவலக அறையில் அமர்ந்திரு வேலையில் இருந்தாள்


எப்பொழுதும் போல், மகளின் கம்பீரத்தில் பெருமை அடைந்து, அவளிடம் விஷா மா, என்று அழைத்ததும், அண்ணன் வருகை தெரிந்து, கண்டுகொள்ளாமல் இருந்த விஷாகா, ஒஹ் , நான் யாரு, என் பேரு என்னனு தெரியுமா, என்று எள்ளலாக கேட்டாள் .

அவளின் வார்த்தை, சுரீர் என்ற வலி தந்தாலும், "என்ன டா மா, அம்மா மேல கோவம்," என்று வறுத்த பட்டார்.

"உனக்கு புரியவே இல்லை மா, என் கஷ்டம், விரும்பாத, இடத்தில உன் பையன் கல்யாணம், ரேஷ்மி கிட்ட அன்பு என்ன சொன்னான்னு கூட தெரியல, நான் அவ வந்த அப்போ, நான் திரும்ப வீட்டுக்கு போனா, அவ இல்லை, அன்பு என்ன சொன்னனான்னு , அவனும் எனக்கு சொல்லவே இல்லை, நான் எவ்வளவு குழப்பத்துல இருப்பேன்னு, உனக்கு கூட தெரியல, என்ன நடந்து இருக்கும், அவ ஏன் போய்ட்டா, எதுவும் தெரியவும் இல்லை."

"மகனுக்கு கல்யாணம் முடிஞ்சதும், உன் வேலை முடிஞ்சதா, நீ இருக்கே, ஆனா ரேஷ்மி பற்றி எனக்கு தெரியும் அவ, எப்படி அமைதியா இருக்கான்னு புரியலை, இந்த டென்ஷன்ல, நான் இருந்தா, அந்த இனியா வீட்டு ஆளுங்க, எனக்கு ஒரு இம்மி, அளவு மரியாதை கூட தரலை, என்னை மண்டப வேலையில தலையிடாதான்னு சொன்னாங்க தானே, அதுக்கு தான், நான் எதிலும் கலந்துகல, ஆனா, என் புருஷன் அன்புக்காக என் மேல கோவ படுறாரு, நீ உன் வீட்டு ஆளுங்க எல்லாரும் இருக்காங்கனு என்ன எட்டி கூட பார்க்கலை," என்று அவளின் வேதனை அனைத்தும் அன்னையிடம் கொட்டினாள் .

ஒரு வழியாக மகளை சமாதானம் செய்து, ரேஷ்மயுடனே பேச்சு வார்த்தை பற்றி , அன்பவிடம் கேட்பதாக, மகளுக்கு வாக்குறுதி அளித்தார்.

காலையில் இனியாவுடன் நடந்த வாக்குவாதத்தை பாரி கூறியது, விஷாகா, பொங்கி விட்டாள் , இனி அவளை, இது போல், பேச ஆணுமதித்தாள், அது விஷாகாவுக்கு ஆபத்து என்று அறிந்து, அன்னையை நன்றாக தூண்டி விட்டாள் .
அன்னையின் அனுமதி இன்றி, இனி அவள் வீட்டில் ஏதும் செய்ய கூடாது என்றும், அதே நேரத்தில் அவளின் ஒவ்வொரு வேளையிலும் குறை காணும் படியும், மீறி வாதிட்டால், அவளின் பிறந்து வீட்டிற்கு விஷயம் பறக்கும் என்றும் மிரட்ட சொன்னாள் .


"இது எல்லாம் நான் செய்றேன் மா, அவளுக்கு திமிர் அதிகம்னு நினைக்கிறன், நீ இப்படியே தள்ளியே இருக்காத, பாரு இது எல்லாம் வந்து ஆடணும்னு இருக்கு, நீ ஒதுங்காம இருந்தா தான் உன் மேல அவளுக்கு பயம் வரும், அதுக்கு முதல் நீ என்ன செய்யணும், எதுவும் நடக்காது போல, மாப்பிளையை கூப்பிட்டு வீட்டுக்கு வா, அவங்களுக்கு விருந்து வைக்க ஒரு அழைப்பு தா,"என்று அவளின் முறையும் எதுத்து கூறினார்.
விஷாகவும் அன்னை கூறுவது சரி என்று யோசித்து, அந்நயை வழி அனுப்பி வைத்தாள் .


இப்படியே, ஒரு வாரம் கடந்தது.
இனியாவிடம், அவரே வேலைகள் தினமும் கட்டளையிட்டார்,
அவளிடம், அடிக்கடி அவருக்கு தெரிந்த எளிமையான உணவு வகைகளையே அவளை செய்ய சொன்னார்.
காரணம், அவள் ஏதேனும் நாக்கிற்கு ருசியாக செய்து விட்டு, வீட்டினர் பாராட்டினால், அந்த பொறாமை தான்,
இது எல்லாம் சாதாரணா விஷயம், என்று அவருக்கு யார் எடுத்து கூறுவது.


அற்பத்தனமான சிறு விஷயங்களில் மருமகளிடம் போட்டி போட்டார்.
இனியாவுக்கு மட்டும், இவரின் எண்ணம் தெரிந்தால்,"அட அல்பமே," என்று அவள் மாமியாரை நேராகவே கேட்டு விடுவாள்,


ஒவ்வொரு செயலிலும் இது அவரின் வீடு, சுமதியை கேட்டு தான் இங்கு எதுவம் நடக்கும், என்ற பின்பத்தை அவள் மனதில் உருவாக்கினார்.

காலையில் அவரை கேட்டு தான் சமைக்க வேண்டும் என்றார், ஒரு நாள் அவர் தாமதமாக எழுந்ததால் அவளே அதிதிக்கு சமையல் செய்தற்கு, இரவே கேட்பதற்கு என்ன என்று ஒரு அதட்டல் போட்டார்.
"இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் உனக்கு விட்டு கொடுத்தா, நீ தலை மேல ஏறி உட்காருவே," என்று அவளிடமே பாய்ந்தார்.
அவளுக்கு என்னடா இது என்று சலிப்பு தட்டி விட்டது மாமியார் மீது.


அதிதிக்கு, அவளின் செமஸ்டர் நெருங்குவதால், அதில் கவனத்தை செலுத்தினாள் .

அன்பு இரவு தாமதக வீட்டிற்கு வருவதால், அவனை எந்த வகையிலும் வீட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி , பேசாமல், இருக்க முடிவு செய்தாள் .

அவளின் கண்களை பார்த்து அவளின் உணர்வை புரிந்து கொள்ள தெரிந்த கணவனிடம், அவளும் அவளின் வருத்தத்தை மறைத்து நன்றாகவே நாடகமாடினாள்.

அவனுக்கு அன்னை பற்றி தெரியும் என்றாலும், அவளிடம், பல முறை கேட்பான், வீட்டில் அவளுக்கு எப்படி நேரம் செல்கிறது, பிடித்து இருக்கிறதா, அன்னை எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் கேட்டு பார்த்தான் .

அவளோ, நன்றாகவே சமாளித்தாள், அன்னையின் அறிவுரை ஏற்று, கனவுனுக்காக, என்று தனது சுயத்தை மாற்ற பழக்கி கொண்டாள் .

அவர்களின் இனிய நேரத்தை கெடுத்து கொள்ள விரும்ப அவளும் விரும்பவில்லை.
கூடல் முடிந்தும், அவன் நெஞ்சிலே முகத்தை புதைத்து கொள்வாள், அவளின் மன வேதனை அதில் புதைக்க முயற்சி செய்வாள்.


அன்புவும் அவளை, ஆறுதலாக சேர்த்து கட்டி அணைத்து உறங்கி விடுவான் .
அன்னையுடன், மனைவிக்கு சுமுகமான உறவு தான் என்று நினைத்து கொண்டான், மனைவியும் எதுவும் கூறாததால் .
இப்படியே, வாரங்கள் கடந்து, விஷாகா வினோத்துடன் வந்து மணமக்களை விருந்துக்கு அழைத்து சென்றனர்.


அன்பு அவனின் அக்காவை முழுதாக வெறுக்கும் நாளும் வந்தது.
 

sumee

Well-Known Member
Sumathiyum pavamthan. But suya puthiyoda nadanthu, thannudaiya veetta parthukkanumnu theriyatha. Ippadiyim makkal irukkirargal.
 

Saroja

Well-Known Member
இந்த சுமதி எப்ப
வருவாங்க
அக்கா வீட்டில் என்ன
நடக்க போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top