அன்பின் இனியா 18 1

Advertisement

achuma

Well-Known Member
all stay safe
please read and give your comments friends
தன் எண்ணம் புரிந்து செயலாற்றும் கணவன் மீது காதல் பொங்கியது பாவைக்கு.
கணவன், தனது உணர்வை புரிந்து கொள்கிறான், என்பதே இனியாக்கு பெருமையாக இருந்தது.

திருமண வாழ்வில் பல தம்பியதியினர் சறுக்கும் இடம் இதுவே.
இருவர்வரில் யாரேனும் ஒருவர் அவர்களின் துணையின் உணர்வை புரிந்து கொள்ளாமல் சென்றால், வாழ்க்கை, அங்கு கேள்விக்குறியே .
இதில் கொடுத்து வைத்தவளாகவே தன்னை கருதினாள் இனியா .
தன்னவளின் கண்களில் அவன் மீதான காதல் உணர்ந்த நொடி, அங்கு அன்பு மிகவும் நெகிழ்வாக உணர்ந்தான்.

அவன் இனியா மீது விருப்பம் கொண்டே திருமணம் செய்தான், ஆனால் இனியாவை பொறுத்தவரை, அது பெரியவர்கள் முடிவு செய்த திருமணம் என்பதில், அவளுக்கும், தன் மீது காதல் வருமா, என்று பல நாட்கள் ஏங்கிய நாட்களும் உண்டு.
இன்று, அவளின் காதல் பார்வையில், அவன் சாபம் நீங்கிய உணர்வு.
இதற்கு மேலும், அங்கு அவளுடன் தனியாக இருப்பது உகந்தது அல்ல என்று, அறிவு எச்சரிக்கை செய்யவே, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து, அவளுடன் சேர்ந்து, மோகனிடம் வந்து சேர்ந்த தகவலை கூறி, சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு, அன்பு வெளியே வந்து விட்டான்.

அடுத்தடுத்து சாங்கியங்கள் என்று வரிசை கட்டி, அந்த நாளின் முடிவும், இரு மனங்களின் வாழ்க்கை பயணத்தின் முதல் தொடக்கத்திற்க்கான நேரமும் வந்து சேர்ந்தது.
இனியாவை அலங்காரம் செய்யும் பொறுப்பு இலக்கியாவிடமே கொடுக்க பட்டது.
இனியா மிதமான அலங்காரத்தில், இலக்கியா உதவியால் தயாரானாள் .

காலையில் அன்பு தன்னுடன் பேசியதை பற்றி அவள் அக்காவுடன் பகிர்ந்து கொண்டாள் .
சகோதரகிகள் இருவருக்கும் அந்த நேரமே தனிமை கிடைத்தது.
மற்றவர் அங்கு இல்லாது, ஒவ்வொரு வேலையில் இருந்ததில், இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

இனியா அவள் கணவன் பற்றி பேசும் நேரம், இனியா முகம் செம்மை பூசி கொண்டதில், அவள் அக்கா இலக்கியாவுக்கு மனம் நிம்மதி அடைந்தது.
"அக்கா ஆனா அவர் ரொம்ப மெச்சூர்டா இருக்காரோனு, தோணுது அக்கா, நான் அவரோட ஈக்வலா இந்த குடும்பத்தை பார்த்துப்பேனா பயமா இருக்கு .அவரோடு பேசுன வரை எனக்கு தெரிஞ்சுது இது தான்."

"நானும் பொறுப்பா இருக்கனும்" என்று அவளையும் அறியாமல் கணவனின் குடும்பத்தை அவனுடன் கொண்டு செல்வது பற்றி அவள் அக்காவுடன் உரையாடி கொண்டிருந்தாள் .
தங்கை அவள் கணவனை முழு மனதாக ஏற்றுக்கொண்டாள் என்ற ஆசுவாசம் ,இன்னொரு தாயாக தங்கையை வளர்த்த அக்காவிடம் .

"எங்க இனியா எப்பவும் பொறுப்பு தான், நீ இது பற்றி எல்லாம் இப்பவே கவலை படாதா, டா , சரி சரி லைட் வெய்ட் சாரி , தான் இப்போ போட்டுட்டு இருக்குறதும், அப்படி இருந்தும் பாரு, உனக்கு எவ்வளவு வேர்வை வருதோ, அங்க அன்பு ரூம்ல, கட்டிலுக்கு அடியில் பேக் வெச்சி இருக்கேன், உன் நைட் டிரஸ் இருக்கும் போய் மாத்திக்கோ ."
"இனிமே சாரி போட்டு பழகு மா, எந்த ஒரு விசேஷமோ, இல்லை, உன் மாமியார் வீட்டு வரும் நிகழ்ச்சிக்கெல்லாம், நீ சாரி, கட்டிட்டு தான் போகணும், அதுனால் இப்போவே பழகு," என்று தங்கைக்கு வேர்வை துடைத்து மீண்டும் ஒரு முறை தங்கைக்கு நெட்டி முறித்து. அறையில் இருந்து வெளியே வந்தனர். சகோதரிகள் இருவரும்.
திருமணம் வேண்டாம் என்றும், பெரியவர்களின் சம்மததிற்காக என்றே இனியா, அவள் திருமணத்தில் ஈடுபட்டாள் .

இன்று அவள் முழு மனதுடன் கணவனை ஏற்று கொண்டாள், என்று இலக்கியாவும் திருப்தியுற்றாள்.
இங்கு செழியன் மற்றும் வினோத், இருவரும் அன்புவை கிண்டலடித்தே அவனை ஒரு வழி செய்தனர்.
அதிதி, எப்பொழுதோ, அவள் உறவு பிள்ளைகளுடன், அவள் அறைக்குள் உறங்க சென்று விட்டாள் .

சுமதி மட்டும் அவர் அறைக்குள் விஷகாவுடன் போன் செய்து ஓய்ந்து போனார்.
தலை வலி என்று மகள் சென்ற பின் பல முறை விஷகாவுக்கு, அழைப்பு விடுத்து, சலித்து விட்டார்.
மகள் அங்கு எப்படி இருக்காளோ என்று தவித்தது , அவரின் தாய் உள்ளம் .
மீண்டும் மணமக்கள் இருவரும் சேர்ந்து, பெரியவர்கள் காலில், விழுந்து, அவர்களின் பரிபூரண ஆசிகள் பெற்று, முதலில் அன்பு அவன் அறைக்கு,அனுப்ப பட்டான்.
இனியாவின் படபடப்பு புரிந்து, இலக்கியா, அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து, கண்களை மூடி திறந்தாள்

பிறகு தங்கையை அன்பு அறை வரை சென்று விட்டு வந்தாள் .
இனியா, மனதில் படபடப்பு, மற்றும் , பெண்களுக்கே உரிய அச்சம், வெட்கம், என்று மனதில், சூறாவளி, சுழன்றடிக்க, அவன் அறைக்குள் சென்றாள் .
இன்றே அனைத்தும் நடக்க வேண்டுமா, என்று அவளின் எண்ணம்.
காலையில் அவன் அவளுக்காக என்று நினைத்த நேரம் அவள் மனதில், கணவன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான் .

ஆனாலும், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, இன்னும் அவகாசம் தேவையோ, என்று அவள் மனதில் இதே கேள்விகள்.
இந்நேரத்தில் இது போன்ற குழப்பங்கள் தேவையா, ஏதோ ஒரு தயக்கம் .
இதில் காலையில் இருந்து சேலையில் இருப்பது, வியர்வையினால் அவளுக்கு எரிச்சல் வேறு.

அவள் காலை முதல் இந்நேரம் வரை, சேலையில் இருந்ததே, பெரிய விஷயம்.
இலக்கியாவும், மாற்று உடுப்பு, அன்பு அறையில் வைத்திருப்பதாக கூறியதால், அந்நேரம் வரை, சேலையில் இருப்பதை, ஏதோ, போனா போகிறது என்பது போல், சகித்து கொண்டிருந்தாள் .
அன்பு அறைக்குள் நுழைந்ததும், அவள் நேராக, அன்பு முன் சென்று நின்றாள் .
அவனும் அவளின் வருகையில் அவளை பார்த்து புன்னகை செய்தான் .
பதில் புன்னகை கொடுத்து, "கொஞ்சம் எழுந்துகோங்க, " என்றதும், அவனும் ஒன்றும் புரியாமல், எழுந்து நின்றான்.

உடனே, இனியா,ஏதும் கூறாமல் திடீர் என்று கீழே குனிந்ததும் "ஹே எதுக்கு இந்த பார்மாலிட்டி ," என்று அவன் கூறி முடிப்பதற்குள், இனியா " நல்ல வேலை அக்கா, கட்டிலுக்கு அடியில் பேக் , வெச்சி இருக்கேனு சொன்னா, வேற எங்கேயோ வெச்சி இருந்தா, நான் தேடி இருக்கனும் ." என்று பேசி கொண்டே, அன்பு அமர்ந்திருந்த கட்டிலுக்கடியில் இருந்த இனியா உடைகள் அடங்கிய பையை, எடுத்து அதனை பிரித்தாள் .
மனைவி, அவன் காலில் விழுந்து வணங்க தான் வந்தாளோ என்று நினைத்து மொக்கை வாங்கிய அன்புவின் முகம் போன போக்கை இனியா மட்டும் பார்த்திருந்தாள், அவனை நன்றாக கிண்டலித்து இருப்பாள் .

ஏற்கனவே, அவனை முதல் சந்திப்பில் அண்ணா, என்று அழைத்து, அவனுக்கு ரத்த கொதிப்பை, ஏற்றியது வேறு, நேரம் காலம் தெரியாமல் அவனுக்கு நினைவு வந்து, "இவளை,எனக்கு பல்ப் கொடுக்குறதே வேலையா போச்சு," என்று அவளை நினைத்து கொண்டான் .
இது ஏதும் அறியாத இனியா, நைட் ட்ரஸ் எடுத்து கொண்டு, உடை மற்ற செல்லும் நேரம், எட்டி அவள் கைகளை பிடித்து, அவன் கை வலைக்குள் நிற்க வைத்தான் .
கணவனின் திடீர் அணைப்பில், முதலில் பயந்தாலும், அவன் அணைப்பில் இருக்கிறோம் என்று கூச்சத்தில் நெளிந்து, தன்னை அவனிடம் இருந்து விடுவிக்க எண்ணி, அவன் கைகளை தகர்த்த நினைத்தாள், அவனின் அணைப்பு இன்னும் இறுகியது.

அவனை பார்க்கும் வரை அன்புவும் ஏதும் பேசாமல் அவள் முக மாற்றத்தையே, பார்த்து கொண்டிருந்தான் .
இனியா நிமிர்ந்து அன்புவை பார்த்த பிறகே, "என்ன மேடம், இங்க ஒருத்தன் இருக்கேன்ங்கிறதே மறந்து போச்சா, நீங்க நேரா வந்தீங்க, டிரஸ் எடுக்குறீங்க," என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்ட அழகில், பெண்ணவள் தன்னை மறந்து கணவனை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் .
மனைவியின் பார்வையில் அவன் முதல் அச்சாரத்தை, அவள் கண்களுக்கு பரிசளித்தான் .
கணவனின் முதல் முத்தத்தில் வெட்கி சிவந்த இனியா, "விடுங்க என்னை, எனக்கு இந்த சாரி ஒரு மாதிரி இருக்கு, போய் டிரஸ் மாத்தணும் " என்று அவனிடம் இருந்து நழுவ நினைக்கும் மீன் போன்று மனைவி துள்ளி கொண்டிருப்பதில் , சுவாரசியம் கூடி,

"அவ்வளவு தானே, எதுக்கு, சாரி, நானே எடுக்க ஹெல்ப் பண்றேன்" என்று சேலை மேல் கை வைத்ததும், அவனை தள்ளி விட்டு, நகர்ந்து நின்றாள் .
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவனை முறைத்தாள் .
"நான் எந்த அர்த்தத்தில் சொன்னா , நீங்க எந்த அர்த்தம் கற்பிகீறீங்க" என்று அவனிடம் கேட்டாள்

"காலையில பேசுவதை பார்த்தா, அப்படியே பெரிய மனுஷனா பொறுப்பா இருந்தது, இங்க என்கிட்டே வம்பு பன்னிட்டு இருக்கீங்க".
"அடியேய், உன்கிட்ட தான் டீ இப்படி பேச முடியும்," என்று உல்லாசமாக அவளை நெருங்கியதும் மீண்டும் அவனிடம் இருந்து விலகி, அவனின் டீ என்ற உரிமை கலந்த அழைப்பு, அவளுக்கு உயிர் வரை பாய்ந்தது.
இருந்தும் தன்னை மீட்டு "எனக்கு ரொம்ப வியர்வை வருது, சாரி எனக்கு செட்டே ஆகாது, சாரியோட தூங்குனா, காலையில, நான் ஒரு பக்கம், என் சேலை ஒரு பக்கம்னு இருக்கும், அதுக்கு தான் நான் சொன்னேன்."

"அவ்ளோதானே, நானும் அதுக்கு தான் சொல்றேன், இந்த சாரி எதுக்கு, நான் உன் பக்கம் இருக்கேன், அது போதும் ஆனா , இந்த நைட் டிரஸ் எல்லாம் வேண்டாமே, நான் எப்பவுமே உன் பக்கம் தான்," என்று அவன் சல்லாபமாக பேசியதில், இனியா தான் தவித்தாள், இவன் இப்படி எல்லாம் பேசுவானா என்று.
சிறிது நேரமாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்று இவள் நினைத்தாள், ஆனால் அன்பு செய்யும் அழிச்சாட்டியத்தில், இனியா, அவனை பாவமாக பார்த்து வைத்தாள் .

அன்புவும் அவளையே பார்த்து கொண்டிருந்ததில், இனி விளையாட்டு விட்டு, அவளுடன் சாதாரணாமாக பேச ஆரம்பித்தான் .
அவள் தோள்களில் கை போட்டு, "ரிலாக்ஸ் இனியா, இங்க வந்து உட்கார வா," என்று, அவளை தன்னுடன் கட்டிலில் அமர செய்து, "ஏன் ஏதோ ஒரு யோசனை, உன் மைண்ட்ல ஓடிட்டே இருக்கு?" என்று அவள் வந்ததில் இருந்து கவனித்ததை பற்றி கேட்டு விட்டான்.
கணவன் எப்படி தன்னை புரிந்து கொண்டதன் என்று குழம்பினாள் .

அவளுக்கு எப்படி தெரியும், அவள் கண்களை வைத்தே, அவள் மனதை புரிந்து கொள்ள கூடியவன் அன்பு, என்று.
இனியாவிடம் முதலில் ஈர்த்ததும் அவள் கண்கள் தான் .
அவளை முதலில் அவள் பக்க ஈர்த்ததே, குறும்பு நிறைந்த அவள் பார்வை தான்.
அதில் இன்று திருமணம் முடிந்ததும் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லும் தவிப்பு, ஏக்கம் நிறைந்த பார்வை.

அவளுடன் அதிதி அறையில் பேசும் போது, அவன் மீது சிந்திய காதல் பார்வை.
ஆனால் இப்பொழுதோ, ஏதோ ஒரு பயம், வெட்கம், என்று அவள் பார்வை, பயணத்ததில், அவளை, அதில் இருந்து மீட்கவே அவளுடன் விளையாடினான்.
"எப்படி நான் எதுவும் சொல்லாம், நீங்க கெஸ் பண்றீங்க, அவனிடமே கேட்டாள் .
"எனக்கு முதல் உன்கிட்ட அட்ராக்ட் ஆகுறதே, உன்னோட கண்ணு தான் மேடம், இந்த கண்ணின் ஆழம் எவ்வளவு டீப்ன்னு எனக்கு தெரியாது."
"ஆனா இதுல காலம் பூரா முழுக நான் ரெடியா இருக்கேன்."

அவனின் ஆழ்ந்து ஒலித்த குரலில் அவன் பேசுவது, ஏதோ உளறல் அல்ல, மனதில் இருக்கும் அவன் காதல் என்று உணர்ந்தாள் இனியா .
"இனியா காலையில இருந்து பல பாவம் உன் கண்ணும் காட்டிடுச்சு, நானும் உன் கண்ணையே பார்த்துட்டு இருந்ததால, என்னால உணர முடியுது போதுமா," என்று அவளை அவன் மடியில் ஒரே கையில் தூக்கி அமர வைத்து கொண்டான் .
தனக்கே தெரியாமல், தான் கணவனின் காதல் வலையில் விழுவோம் என்று உணர்ந்தாள் இல்லை இனியா .

அவன் எதிர்பார்க்கா நேரத்தில் அவன் மடியில் அமர் செய்ததும் பிடிமானத்திற்கு அவன் தோள்களில், அவள் கைகளை மாலையாக கோர்த்து கொண்டாள் .
"எதுவும் சொல்லிட்டு செய்யா மாடீங்களா, பயமா இருக்கு".
"ஒஹ், அப்போ இதுக்கு தான் பயமா," என்று அவள் முதலில் பயத்துடன் அறைக்குள் நுழைந்தது வைத்து கேட்டான் .
"எப்படி பேசுறான் பாரு, " என்று மனதில் நினைத்து, அமைதியாக இருந்தாள் .
அவள் அமைதியே, அவள் மன நிலையை எடுத்து கூற, "இனியா, எனக்கும் இப்போவே, நம்ம சேரனும் எல்லாம் நான் சொல்லல, ஆனா, உனக்கு என்னோட ஒர்க் நான் இப்போ சொல்றேன்."

"காலையில, நம்ம டிராவெல்ஸ், போய்டுவேன் .அது நம்ம பிசினஸ், அதுக்கு எல்லாம் லீவு இல்லை ."
"நைட் வந்துட்டு, என் ஆஃபீஸ் போவேன் .இப்போ ஆபீஸ் மட்டும், ஒரு வாரம் லீவ் போட்டு இருக்கேன் ."
"இந்த ஒன் வீக் மட்டும் தான், நான் உன்னோட, டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்,அதுக்கு அப்பறம், நைட் டூட்டி போய்டுவேன் ."

"எனக்கும் புரியுது, கொஞ்சம் டைம் எடுத்துக்கணும்னு, ஒருத்தரை ஒருத்தர் புரிச்சிக்கலாம்னு, ஆனா அதுக்கே, எனக்கு டைம் இல்ல மா," என்று அப்பாவியாக கேட்டதில் , இனியா அவனிடம், "ஏன் உங்களுக்கு நிறைய கமிட்மெண்ட்ஸா, நைட் ஐ டி ஒர்க்கும் போறீங்க, சரியான தூக்கம் இல்லைனா, உடம்பு என்ன ஆகுறது," என்று கணவன் மீது அக்கரையில் கேட்டாள் .
தனக்காக ஒரு ஜீவன் அக்கறை கொள்கிறதே, என்று அவன் மிகவும் ஏங்கி தவித்த பாசம், தனக்கே தனக்கு என்று , ஒரு வாழ்க்கை, மிகவும் உணர்ச்சி வசமாக இருந்தான்.
அதில் இனியாவை, இறுக்கமாக அணைத்து ஒன்றும் பேசாமல் அவள் தோள்களில் முகம் புதைத்து அமைதியானான் .

"என்னங்க," என்று அவள் மீண்டும் அழைத்ததும் "ஹ்ம்ம் கொஞ்சம் கமிட்மெண்ட்ஸ் தான் மா, வீடு வாங்கணும், இன்னொரு பிரான்ச் நார்த் சைடுல ஓபன் பண்ணனும்" என்று அதை பற்றி மட்டுமே கூறி, வேறு பேச்சிற்கு மாறினான் .
"இது தான், என்னோட ஒர்க்ஸ், இதுல நான், பிஸி, அதுனால் எனக்கு இப்போ இருக்கும் இந்த நேரத்தில, உன்னோட ஒரு நொடியும் வீணாக்க நான் விரும்பல, உனக்கும் இப்போ வேண்டாம்னா, எனக்கும் ஓகே நோ ப்ரோப்லம் ," என்று அவன் கூறியதும், இனியா, காதல் புகுந்த மனம், கணவனுக்காக என்று சம்மதம் கூறியது.

அதில் அன்புவும் மகிழ்ந்து, மீண்டும் அவளிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான் .
"ஓஹ், உனக்கு மன பூர்வமா, ஓகேன்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது, அதுனால், எனக்கு நீயே ஒரு கிஸ் கொடுத்து ஸ்டார்ட் பண்ணு, நான் நீ மனசார ஓகே, சொன்னேன்னு நம்புறேன் ." என்று, தூண்டில் போட்டதில் இனியா என்ற பெண் மீனும் சிக்கியது.

"அது எல்லாம் முடியாது, நான் எப்படி , நீங்க கேட்டிங்க அதான் சரி சொன்னேன், என்று தட்டு தடுமாறி, வேறெங்கோ பார்த்து கொண்டு உளறினாள், தாபம் நிறைந்த அவன் கண்களை பார்த்து பேச வெட்கம் கொண்டு.
பிறகு, மனைவியிடம் கெஞ்சி கொஞ்சி, என்று வம்பு செய்து, ஒரு வழியாக, இனியாவும் வெட்கம் நிறைந்த மனதோடு, அவன் கேட்ட முத்தம், அவன் கன்னங்களில் லேசாக இதழ் ஒற்றி எடுத்தாள் .
"இது எல்லாம் ஒரு கிஸ்ஸா, உனக்கு தெரியவே இல்லை, என் கிட்ட இனி கத்துக்கோ," என்று அவள் கொடுத்த முதல் முத்த வேலையே தனதாக்கி, அவளுக்கு காதல் பாட ஆசான் ஆனான்.
இரவு முழுதும், அவளுக்கு ஏதும் தெரியவில்லை என்று, அவளுக்கு ரீ எக்ஸாம் வைத்தான், காதலனாக .
அவன் விருப்பத்தை கேட்டு, அவளின் மறுப்புக்கு தடை அளித்தான்.
விடியலில், இனியா கூறியது, போல், அவள் ஒரு பக்கம் அவள் சேலை ஒரு பக்கம்,என்று இருந்தனர்.

அன்பு மட்டும் எப்பொழுதும் மனைவி பக்கம்.
காலை ஏழு மணி அளவில் சுமதி எழுந்து வெளியே வந்தார்.
அவருக்கு முதல் நாள் இரவு மாப்பிளை வினோத்திடம் இருந்து நிறைய மண்டகபடி கிடைத்தது.
தேவகியும் வினோத்தும், அன்பு வீட்டின் உறவினர்களுடன் இறுதி வரை இருந்து அனைத்து வேலைகளும் முடித்து, பிறகு இனியா அன்புவை அவர்கள் அறைக்குள் அனுப்பி வைய்த்த பிறகு, சுமதியிடம் சொல்லி விட்டு செல்லலாம் என்று அவளிடம் சென்றனர்.
அங்கு சுமதி விஷாகாவுக்கு அழைப்பு விடுத்தது சலித்து போனார்.
வினோத்துக்கு கண்டிப்பாக அவர் விஷாகாவுக்கு தான் அழைக்கிறார் என்று நன்றாகவே தெரிந்திருந்தது.
"என்ன அத்தை , உங்க பொண்ணு இன்னும் உங்களுக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்குலையா," என்று நக்கல் வழிந்தோடியது அவன் வார்த்தையில் .
"மாப்பிளை ," என்று பாவமாக பார்த்த சுமைதியை நினைத்து தேவகிக்கும் ஏதோ போல் ஆனது.
"நான் வீட்டுக்கு போய் பேச சொல்றேன் அண்ணி .
அங்க அவரும் இருக்காரு தானே, கண்டிப்பா, அவர் மருமகள நல்லா தான் பார்த்ட்டு இருப்பாரு."
"நீங்க எதுவும் மனசுல வெச்சிக்காதீங்க." என்று அண்ணன் மனைவியை தேற்றினார்.
விட்டேனா பாரு என்று வினோத் , "உங்க வளர்ப்பு தானே, இப்போ உங்களுக்கே கவலையா இருக்கா," என்று அரை மணி நேரத்துக்கும் , சுமதியை வசை பாடியே, ஒரு கட்டத்தில் தேவகி அவனை வற்புறுத்தி அழைத்து சென்றார் அவரின் இல்லத்திற்கு.
அந்த கடுப்பில், இருந்த சுமதி, அங்கு சமையலறையில், அவரின் உறவுகள் மட்டுமே இருப்பதை கண்டு, இன்னும் இனியா எழுந்திருக்கவில்லை என்று அறிந்து கொண்டார்.
அவரின் கோவம் மொத்தம் இனியா மீது திரும்பியது.
"என்ன அக்கா நீங்க, வேலை பார்த்துட்டு இருக்கீங்க, ஒரு வீட்டு மருமக இன்னும் எழுந்து வெளிய வரலைன்னா, குடும்பம் விளங்கிடும்" என்று நீட்டி முழக்கியதில்,
"அடி கூறு கெட்டவளே, நான் எதையாவது சொல்லிடுவேன் பார்த்துக்க," என்று சுமதியின் அக்காவும் அவரை பிடித்து கொண்டார்.
"வந்த முதல் நாளே நேரமே எழுந்துக்கணும்னா எப்படி."
"நீயும் மூணு பிள்ளைகளை பெத்தவனு வெளியே போய் சொல்லிடாதே".
"ஒரு செடிய அது வளர்ந்த, மண்ணுல இருந்து, வேரோட பிடிங்கி வேற மண்ணுல நட்டு இருக்கோம் ஆத்தா" .
"அந்த செடி செழிப்பா வளரது, அந்த வீட்டு மாமியார் கையில தான் இருக்குது."
"ஏன்னா, அவளும் அது போல தானே வேற இடத்துல இருந்து வந்து இருக்கா. அது போல, இந்த வீட்டு மருமகளுக்கு நீ உரு துணையா இருந்தா, இந்த குடும்பம் நல்லாவே விளங்கும்."
"பிள்ளைங்க தூங்குனா உனக்கு என்ன வந்துச்சு , போய் உன் சோலி கழுதைய பாரு, வந்துட்டா குறை சொல்ல," என்று அவர் பொரிந்து கொண்டே, கடாயில் கடுகை போட்டார்.
அதுவும் இட்ட வேலைக்கு பொரிந்து கொண்டிருந்தது கடாயில் .
இதனை கேட்ட இலக்கியாவுக்கு பயமே, முதல் நாளே, மாமியாரிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டுமா என்று தங்கைக்காக தவித்தாள் .
"அத்தை , என்னைக்கும் ஆறு மணிக்கு மேல எங்க வீட்டுல தூங்கி பழக்கம் இல்லை அத்தை .
அவளுக்கும் சில நேர காலையில் ஷிபிட் இருக்கும், அப்போ எல்லாம் இன்னும் சீக்கிரமாவே எழுந்து கிளம்புவா, நீங்க அவளை தப்பா எடுத்துக்காதீங்க," என்று சுமதியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் .
சுமதி எதுவும் கூறாமல், கூடத்திற்கு சென்று அமர்ந்து விட்டார் .
தயக்கமாக இருந்தாலும், பரவாயில்லை, என்று தன்னை மீட்டெடுத்து இனியாவின் அறை வாசலில் சென்று கதவை தட்டி இனியாவை எழுப்பினாள் இலக்கியா.
வெகு நேரம் கழித்து விடியளுக்கு சிறிது நேரம் முன்பே உறங்கியதில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இனியாவிடம், எங்கோ கதவு தட்டும் ஓசை கேட்டது போல் இருந்தது.
அன்புவே, எழுந்து சென்று நேரம் பார்த்து, இனியாவையும் எழுப்பி, போய் கதவை திறந்தான் .
"அங்கு இலக்கியா இருப்பதை கண்டதும் , "தம்பி இனியா ரெடி ஆகி கீழே வர சொல்லுங்க," தயங்கியவாறே கூறி இருவருக்கும் குடிப்பதற்கு தேனீர் கொடுத்து சென்று விட்டாள் .
இனியாவை கெஞ்சி, கொஞ்சி ஒரு வழியாக, அவளை எழுப்பி, பிறகு இருவரும் குளித்து விட்டு, தயாராகி கீழே வந்து சேர்ந்தனர்.
தங்கையின் செம்மை, நிரம்பிய முகம் கண்டு, இலக்கியா, தங்கையை கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தாள் .
அன்பு மற்றும் இனியா பூஜை அறையில் இறைவனை வணங்கி, பிறகு, காலை உணவு முடிந்து, அங்கு கூடத்தில் இருக்கும் சுமதியின் அருகில் சென்று இனியா, அமர்ந்தாள்.
அக்காவிடமும் திட்டு வாங்கிய, சுமதிக்கு ஏதோ போல் இருந்ததில் அதன் பிறகு அவர் வாயே திறக்கவில்லை.
"அத்தை, விஷா அண்ணிக்கு இப்போ, எப்படி இருக்கு, நேற்று தலை வலின்னு வண்டில, இருந்து கிளம்புனாங்களே. இப்போ பரவாயில்லையா, அவங்களுக்கு பேசுனீங்களா,"என்று வெள்ளந்தியாக கேட்ட இனியா மீது ஏதோ ஒரு பாசம் துளிர்க்க தான் செய்தது சுமத்தியிடம்.
இந்த பெண்ணையா திட்டினோம் என்று நினைத்தார் தான்.
"ஹ்ம்ம் அவ வீடு பக்கத்துல தான் இனியா, நீ அன்புவோட போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாயேன்," கோவத்திற்கு காரணமான மகனும் அவன் மனைவியும் அவளிடம் நேராக சென்றால், விஷாகா கோவம் மட்டும் படுமோ என்று நினைத்தார்.
இலக்கியா, கையை பிசைந்து கொண்டு இருந்தாள் என்ன செய்வது என்று தெரியாமல், முதலில் இருவரையும் அங்கு விருந்துக்கு, மோகன் இல்லத்திற்கு அழைத்து செல்ல தான், இலக்கியாவும் செழியனும் உடன் இருந்தனர்.
சுமதியை மீறவும் முடியாது, அதே நேரத்தில் அங்கு மகளின் அவள் கணவனுடனான முதல் வருகைக்கு அங்கு விருந்து வேறு தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.
"என்ன கண்ணு இங்க நிக்கிறே," என்று கையில் காலை உணவுக்கு பிறகான, காபியுடன் வந்து சேர்ந்த, சுமதியின் அண்ணியிடம், இலக்கியா, சுமதியின் எண்ணத்தை மேலோட்டமாக கூறி முடித்தாள் .
"சுமதி, இன்னும் மருமகளோட பேசிகிட்டு இருக்கியாக்கும் அவங்க இரண்டு பேரும் பத்து, மணிக்கு மேல, அன்பு மாமனார் வீட்டுக்கு மரு வீட்டுக்கு போகணும், சீக்கிரம் பிள்ளைகளை ரெடியாக சொல்லு" என்று ஏதும் நடக்காதது போன்று சுமதியின் எண்ணத்திற்கு முற்று புள்ளி வைத்தார்.
இனியா, அத்தை கூறியது போல் நேரில் சென்றே, விஷாவை பார்த்து வரலாம், வீடு பக்கம் தானே என்று நினைத்தாள் .
அவளுக்கு சுமதி, மற்றும் விஷாகா போன்று, எண்ணங்கள் இல்லாததால், அவர்களின் சூழ்ச்சி ஏதும் அறிய வாய்ப்பில்லை .
மனதில் என்ன நினைக்கிறாளோ, அதேயே பேசவும் செய்வாள், இனியா.
ஆனால் சுமதி மற்றும் விஷாகா, மற்றவரிடம் போலி முகத்துடன் வளம் வருவது அறிய நேர்ந்தால், அப்பொழுது இனியா எப்படி நடந்து கொள்வாள், என்று பார்ப்போம் .
"ஆண்டி , அத்தை, அங்கு விஷா அண்ணி வீட்டுக்கு போயிட்டு வர சொன்னாங்க," என்று அவரிடம் கூறினாள் "நீ தாராளமா, போ கண்ணு, யார் வேண்டாம்னு சொன்னது, ஆனா உன் நாத்தனார் உன்னை வந்து முறையா கூப்பிட்டதும் நீ உன் புருஷனோட போய்ட்டு வா."
"இப்போ, நேர்லயே உங்க அக்கா மாமா நேற்று உன்னோடையே வந்து இருந்து, உன்னை உங்க அப்பாரு வீட்டுக்கு கூட்டிட்டு போக காத்திட்டு இருக்காங்க பாரு, அங்க கிளம்பு நீ."
"முதல் விருந்து, உங்க அப்பா வீட்டுல தான் நடக்கணும் ".
"அதே போல, முதல் முதல யார் வீட்டுக்கு போறதா இருந்தாலும், அவங்க நேருல வந்து உன்னை கூப்பிட்டு போகட்டும் சரியா, இங்க பக்கத்துல தானே இருக்கா உன் நாத்தியா, அவளே வந்து அழைப்பு கொடுப்பா, "
என்று அப்பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார்.
இனியா இந்த பேச்சையும் சாதாரணாமாக எடுத்து கொண்டு, அவள் அக்காவிடம் சென்று விட்டாள் .
இதை அனைத்தும் கேட்டபடியே, செழியனுடன் பேசி கொண்டிருந்த அன்புவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, அவன் அக்கா அவன் மீது மட்டும் அல்லாமல், அன்னை மீதும் கோவமாக இருக்கிறாள் என்று .
இலக்கியாவின் அருகில் சென்றதும், "குட்டிமா, நீ இனி சீக்கிரமா எழுந்துக்கோ, இனி ஆபிஸ் இல்லை தானேனு நினைக்க கூடாது, உனக்கு தெரியாதது இல்லை, அம்மா எவ்வளவு வேலை செய்றாங்க, அதே போல, பொறுப்பு இங்க உனக்கும் இருக்கு."
"அதிதி பொண்ணுக்கு காலையில சாப்பாடு கட்டி கொடுக்கணும், அந்த பொண்ணையும் நல்லா பார்த்துக்க, அவளுக்கு ஒரு நல்லது செய்யற கடமை உனக்கு இருக்கு, " என்று தங்கைக்கு அறிவுரை வழங்கினாள் .
இதை கேட்டு கொண்டே அங்கு வந்த சேர்ந்த அதிதிக்கு சகோதரிகள் இருவரையும் இன்னும் பிடித்து விட்டது.
"அண்ணி, நீங்க எங்க அண்ணிக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடிங்களா , எங்க அண்ணி, அது எல்லாம் பெர்பெக்டா, இருப்பாங்க, நீங்க கவலை படாதீங்க," என்று இலக்கியாவிடம் இனியாவிற்காக பரிந்து கொண்டு வரும் அதிதியை நினைத்து, சுமதி மீது, இருந்த பயம் சற்று, அடங்கியது இலக்கியாவிற்கு .
"நேற்று, எங்க அண்ணா எப்படி அண்ணி, ஏதாவது பேசுனாரா, இல்லை எப்பவும் போல, சிடு மூஞ்சியா இருந்தாரா" என்று கண்ணடித்து கேட்ட அதிதியின் காதை திருகிய இலக்கியா, "சின்ன பொண்ணு பார்த்தா, என்ன கேள்வி எல்லாம் கேட்குறே" .
"ஆமா , இந்த ஊர் உலகம் என்னை இன்னும் சின்ன பொண்ணா தான் பார்க்குது, அது, என் தப்பு இல்லை, என்னை நம்புறவங்க தப்பு," என்று அசால்ட்டாக, பதிலடி கொடுத்தவளை, அக்கா தங்கை இருவரும் "அடி பாவி" என்று பார்த்தனர்.
"இவன் எதுவும் பேசமாட்டானாவா, இப்படி தான் ஊரை, ஏமாத்திட்டு இருக்கான்," என்று கணவனை நினைத்து, புன்னகை இனியாவின் முகத்தில்.
"பார்டா, எங்க அனண்ணனை பார்த்ததும் ஒரு சிரிப்பு வேற," என்று அதிதி மீண்டும் அவளை கிண்டலடித்ததில், அவள் சிரிப்புக்கான காரணத்தை என்ன வென்று சொல்ல முடியும் மங்கையால் .
அதே நேரத்தில் அன்புவை கிண்டலடிக்க ஒரு நல்ல தோழி கிடைத்த, சந்தோஷத்தில் நேற்று தெரியாத்தனமாக அன்பு இனியா அவன் காலில் விழுந்து வணங்க தான் வருவதாக நினைத்து மொக்கை வாங்கிய விஷயத்தை மனைவியிடம், உளறி இருந்தான்.
அவன் மானம் கப்பல் ஏறும் என்று தெரிந்திருந்தால், கண்டிப்பாக மனைவியிடம் கூட பகிர்ந்திருக்க மாட்டான்.
 

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கு எனது நன்றி
எனது மகனுக்கு ஆன்லைன் கிளாஸ், முந்திய வாரத்தில் இருந்து ஆரம்பித்ததால், இனி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவு கொடுக்க முயற்சிக்கிறேன் நண்பர்களே.
இதோ அடுத்த பதிவு.
உங்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
இனியா கிட்ட சொன்னத
அதிதி கிட்ட சொன்னாளா
அடடா :love::p:D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top