அன்பின் இனியா 17 2

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள், உங்களின் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கு நன்றி.
அடுத்த பதிவு, செவ்வாய் அன்று, கண்டிப்பாக, அதில் இனிய மற்றும் அன்பு திருமணம் நடைபெறும்.
Keep supporting friends
All take care:love:(y)




முதலில், மன மகன் வந்து அமர வைக்க பட்டு, இளங்கோ முதல் நலங்கு ஆரம்பித்து வைத்தான் .
சந்தனம் குங்குமம், அவன் மாமனுக்கு இட்டு மாலை அணிவித்தான் .
பிறகு மன மகள் அழைக்க பட்டு, அன்புவின் பெரியன்னை மற்றும் பெரியப்பா முன் நின்று, இனியா கையில் நிச்சய புடவை அடங்கிய தட்டு கொடுக்க பட்டது.
அவர்களிடம் ஆசி பெற்று, அவளுக்கு மிகவும் பிடித்த பச்சை நிற சேலை அணிந்து, அன்புவின் அருகில் அமரவைக்க பட்டாள் .
உண்மையில் அவன் கண்களுக்கு தேவதையாக காட்சி அளித்தாள், அன்புவின் இனியா .
அவள் பக்கம் செல்ல துடிக்கும் பார்வையை, மாற்றி கொண்டு புரோகிதர் கூறுவதில் மனதை திசை திருப்ப, படாத பாடு பட்டு விட்டான் .
இதில் வினோத் மற்றும் அன்புவின் அண்ணன்களின் கிண்டல் வேறு .
அப்படியும், யாரும் பார்க்கா வன்னம், அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியில், அவனுக்கு பட்டும் படாமலும் உரசி கொண்டிருக்கு வளையல்களின் சீண்டலில் , இனியாவின் இடது பக்க கை விரலில், அவன் கை பிடித்து, அதில் லேசாக இழுத்து, அவனை பார்க்க செய்தான் .
வந்ததில் இருந்து, அவள் தலை குனிதே அமர்ந்திருந்தாள்


ஒரு நிமிடமே, அவன் விறல் இழுத்த வேகத்தில் ஏற்படுத்திய வலியில், அதிலும் அவள் மனம் கவர்ந்தவனின் முதல் ஸ்பரிசம், அவளும் அவன் பக்கம் நிமிர்ந்து பார்த்தாள்.
"லுக்கிங் கியூட் ," என்று வாய் அசைத்தான்.
அவளும் புரிந்து கொண்டு, கண்கள் விரிந்தது, அவன் அட்டகாசத்தில் .


அதற்குள், "இங்க மந்திரத்தை பாருங்கோ, மாப்பிளையை அப்பறம் பார்க்கலாம்" என்று ஐயர் கிண்டலடித்ததில், அங்கு சுற்றி இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
"இவனை," என்று இனியா பல்லை கடித்தாள் .


இனியா மற்றவர்களின் கிண்டலில், அன்புவை முறைக்க முடியாமல், மீண்டும் அமைதியாக தலை குனிந்து கொண்டாள் .
ஒன்றும் தெரியாதவன் போல் அமைதியாக அமர்ந்து கொண்டான் அன்பு .


மண்டப வாயிலில், சந்திரா, வந்து இறங்குவது, அவனுக்கு தெரியவே, அதிதியை அனுப்பி, அவன் அத்தயை அழைத்து வருமாறு பணித்தான் .
அவளும் அதன்படியே செய்தாள் .
ஒவ்வொவருவராக, வந்து நலங்கு வைத்து சென்றதில், "அம்மா மற்றும் அக்கா மட்டும் இன்னும் வரவில்லையே," என்று அன்பு ஒரு பக்கம் என்றால், அங்கு சுமதி, விஷாவின் அறை கதவை தட்டி கொண்டிருந்தார், கெஞ்சலுடன் .


அவன் அதிதியை அழைத்து, அம்மா எங்கு என்று கேட்டதில், என்ன செய்து வைத்தார்களோ தெரியவில்லையே, என்று மனதினில் அவர்களை வதைத்து கொண்டே, "அண்ணா , நீ இங்க பாரு, நான் போய் பார்குறேன், என்று அவனை தேற்றி," அத்தையிடம் பொறுப்பை ஒப்படைத்து சென்றாள் .

தேவகிக்கும், அவர் தங்கை வந்ததும் அவரிடம் செல்ல வேண்டும் என்ற ஆசை, அங்கு மேடைக்கே அழைத்தார், சந்திரா வர மறுத்து, ஓரிடத்தில் அமர்ந்தார் .
இங்கு அன்புவுக்கும் அருகில் இருக்க வேண்டும் என்பதால், தேவகி அங்கேயே இருந்து கொண்டார் .
நிச்சயம் முடிந்து, அவன் அன்னையை தான் முதலில் தேடினான் .


"மாமா, அம்மா ரூம்ல இருப்பாங்க, அக்காவும் இங்க இல்லை போல," என்று கேட்டதும், வினோத், அப்பொழுது தான் சுற்றி பார்த்து, "இவ என் மானத்தை தான் வாங்குறா," என்று மனைவியை திட்டி கொண்டே, "முதல, நீ நடக்க வேண்டியதை பாரு, அன்பு, என்று அவனை, அறைக்குள் அழைத்து சென்று, ஒன்று விடாமல், தேவகியிடமும் அன்புவிடமும் கூறினான் .

"விடு, அவ கோச்சிக்கிட்டு இருப்பா போல, நீ கண்டுக்காதா" .
"நீ ரொம்ப கேட்டுட்டே இருந்தா, அவ இன்னும் ஆடுவா, அவளே தானா முன் இருந்து செய்யணும், அது தான் இல்லை, இப்போ அமைதியா இருக்காவது செய்யணும், உண்மையில படிச்சி தானே இருக்கா, எப்படி இப்படி எல்லாம் அவ பேச மனசு வருது," என்று வினோத்தும் அவள் இது போல் எல்லாம் பேசுவாளா, என்ற அதிர்ச்சியில் கவலை கொண்டான் .


தேவகிக்கும் அன்புவுக்கு இது புதுசு இல்லையே, அவள் பெற்ற அன்னையையே பேசி இருக்கும் போது , அடுத்தவர்களை சீண்டாமல் இருப்பாளா .
"மாமா, இதுக்கு படிச்சி இருக்கனும், படிப்பு இல்லாதவங்க இப்படி பேசுவாங்க எல்லாம் இல்லை .
உண்மையா பிராட் மைன்ட், இருபவங்க இப்படி எல்லாம் பேச மாட்டாங்க ".
அவனுக்கும் சலிப்பே, இப்படி இருக்காளே, இன்னும் இன்னும் மோசமா போறா .


அதன் பின்பு, அன்பு, அவளை எதிர்பார்க்கவில்லை.
அவன் அன்னையும் கண்டிப்பாக, அவளிடம் தான் இருப்பார் என்பதால், அடுத்து, என்ன என்று அவன் அத்தையிடம் கேட்டு கொண்டிருந்தான் .


அதிதி, எல்லா இடமும் தேடி, பிறகு, விஷா அறைக்கு, வெளியே, சுமதி இருப்பதை கண்டு, நேராக வினோத்திடம் சென்று, விஷயத்தை கூறினாள் .
பெற்ற அன்னை அவ்வளவு நேரம் வெளியே இருந்து அழைப்பதை கேட்டு, கண்டுக்காமல் இருப்பவளை என்ன செய்வது, என்று வினோத், கோவத்தில், கதவை வேகமாக தட்டி,"ஹே கதவை திற விஷா , நீ மேலும் மேலும், என்னை ரொம்ப அசிங்க படுத்துற, நீ இப்போ செய்றது எல்லாம் உன் அப்பா அம்மாவை சேராது,என் மானம் தான் போகும்."


"நீங்க என்ன அத்தை, இங்க இவளுக்கு காவலா, நான் தானே, திட்டுனே , என்ன இப்போ, போய் உங்க பையன் கல்யாணத்தை பாருங்க, என் பொண்டாட்டிய எப்படி ஹாண்டில் பண்றதுனு எனக்கு தெரியும்"
உண்மையில் இவரால் தான் விஷா இப்படி ஆனது என்ற கோவம் அவனை அப்படி பேச செய்தது.
வெளியே கணவரின் கூச்சலில், படார் என்று கதவை திறந்து அவனை முறைத்தாள் .
பதில் பார்வை அவனும் பார்த்தான் .


"என் அம்மா மட்டும் தான் எனக்காக இருக்காங்க, அவங்களையும் போ சொல்லுவீங்களா, நான் என்னவோ செய்றேன் உங்களுக்கு என்ன,"

"நீ என்னால தானே கோவம் படுற, அப்போ நான் தானே அதுக்கு பதில் சொல்லணும், இவங்கள ஏன் இங்க நிக்க வெச்சி இருக்க, சொல்லு நீ பேசுனது உனக்கே கரெக்டா, படிச்சி இருக்க, ஒரு கம்பெனி, நடத்துறே, விதி யாருக்கு என்ன எப்படி வெச்சி இருக்குனு, நம்ம எப்பவுமே கெஸ் பண்ண முடியாது, ஏன் எனக்கே ஏதாவது ஆச்சுன்னா, உனக்கும் இந்த நிலைமை தான் ."

"மாப்பிளை," என்று சுமதி அலறியதும் விஷா , அவன் பேசாதே என்பது போல், அவன் வாய் பொத்தினாள் .
உண்மையில் மற்றவர்களை பேசும் போது தெரியாத வலி, இன்று கணவன் கூறியதும் , ஒரு நிமிட நடுக்கம் அவள் உடலில் .


"அம்மா, நீ போ, நான் வரேன்," என்று அமைதியாக, அறையில் சென்று அமர்ந்து விட்டாள் .
வினோத், அவளுடனே சென்று, அவள் கைகளை, தன் கைக்குள் வைத்து நீ இது போல் பேசுறது, எனக்கு பிடிக்கலை , என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு,"


"உனக்கு பிடிக்கலை, அப்படின்ற ஒரே காரணத்துக்காக, நீ எல்லாரையும் காயப்படுத்துறது, நல்லா இல்லை.
நான் உன்னிடம் இருந்து இதை எதிர்பார்க்கவ்வில்லை."
அவள் திருந்தினாளா, என்றால் கண்டிப்பாக கிடையாது, ஆனால் கணவன் பேசியது, அவள் மனதில் ஓடி கொண்டே இருந்ததில், சிறிது அமைதி காத்தாள் .
"போகலாம்," என்று மென் குரலில், அவனுக்கும், முன்பே சென்று அங்கு கூடத்தில் அமர்ந்து விட்டாள் .
அங்கு மேடையில் யாரும் காணாமல், சுற்றியும் அவள் பார்வை சென்றது.


"பெண் வீட்டில் இருப்பவரில் ஒருவர் சென்று, மாப்பிளை அழைப்பு கோவில் இருந்து அழைச்சிட்டு வர எல்லாருமே போய் இருக்காங்க," ஒரு வேலை, கோவில் எங்கு என்று தெரியாததில் அவள் இங்கேயே இருந்து விட்டாளோ, என்று கூறி சென்றார்.

அப்படியும் அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
சந்திராவும் இருந்தார் தான், ஆனால் இருவரும் ஒருவருடன் மற்றவர் உரையாடாமல், இருந்து கொண்டனர் .


"ஹ்ம்ம், என்னோடையே இருக்க வேண்டியது, இப்போ, அப்படியே அந்தர் பல்ட்டி, பையன் கூட கோவிலுக்கு போய் இருக்காங்க" .
"இவங்களை எதுக்கும் நம்ப முடியாது," என்று அன்னையை திட்டி கொண்டே, அமர்ந்திருந்தாள் .
அங்கு கோவில் வாசலில், அன்புவும் அக்கா பேசியது தவறு என்பது போல் , அவன் அன்னையிடம் காய்ந்தான் .
அவர் அதற்கு பின்பு ஏதாவது பேசுவாரா, அமைதியாக அவனுடன் கோவில் சென்றார் .


முதலில் இறைவனை வணங்கி, அங்கு மாப்பிளை முன்பு அவருக்கு என்று அடுக்கி வைத்த, தட்டுகளில், கண் பதித்து, எங்கு குறை எதில், என்று சுமதியின் பார்வை சென்றது.

அங்கும் இளங்கோ, மாப்பிளைக்கு, சந்தனம் குங்குமம் இட்டு, அன்புவின் கையில் மோதிரம் பிரேஸ்லெட் , கழுத்து செயின், என்று அணிவித்து, மாலை , வரவேற்பு உடை அடங்கிய தட்டை கொடுத்து, அன்பு மாற்றி கொண்டு வந்ததும், மீண்டு மணடபம் வரை நடந்தே சென்றனர்.
பெண் வீட்டார் கொடுத்த சீர் அடங்கிய தட்டுகளை, ஆளுக்கு ஒன்றாக, மாப்பிளை வீட்டார் எடுத்து கொண்டு, அன்புவுடன் பின்னே சென்றனர்.


இறுதியில் தேங்காய்கள் அடங்கிய கனமான தட்டு, அதிதியின் கைக்கு இடம் பெயர்ந்தது.
அவள் அதனை எடுக்க முடியாமல் எடுத்து கொண்டு, அண்ணனுடன் சென்றாள் .
அன்பு எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை, அவனுக்கு நடந்த சம்பவமே, மனதில்.
பிடிக்கவில்லை என்றால், எந்த எல்லைக்கும் செல்ல கூடிய அளவுக்கு அக்கா வந்திருக்கிறாள், அவளை எப்படி மாற்றுவது, என்று அதே யோசனை .


அங்கு சரண் நண்பனின் திருமணத்திற்கு, வந்திறங்கினான், அவன் நேராக மண்டபம் சென்று அவன் அன்னையை கண்டதும் ஓடி சென்று கட்டி கொண்டு, அவருக்கு முத்தம் கொடுத்தான் .
"டேய், சரண் , என்ன , அதிசயமா வந்து இருக்கே, அம்மா எத்தனை முறை, வர கூப்பிட்டு இருக்கேன், இப்போ உன் பிரெண்ட் கல்யாணம் உடனே வந்துட்டே," என்று போய் கோபம் கொண்டதில்,
"அம்மா, உனக்கு கோவம், பொறாமை, எல்லாம் செட்டே ஆகுல, அன்பு எங்க," என்று அவரை கிண்டலடித்து, கோவில் நோக்கி சென்றான் .


அங்கு நடப்பதை அமைதியாக ஒரு இடத்தில நின்று பார்த்து கொண்டே இருந்தான் .
அவன் கண்களுக்கு அதிதியே , அடிக்கடி, காட்சியளித்தாள் .
"இவளை பார்க்க கூடாதுனு தானே, இங்க வரதே இல்லை."
"புடவை வேற கட்டி அட்டகாசமா இருக்காளே, ஐயோ, என்னை கொள்றா , நான் நேருல போனா, என்னை மதிப்பாளா , நான் பேசின வார்த்தைக்கு, கண்டிப்பா என்னை அடிக்காம இருந்தா பெரிய விஷயம்".
அன்புவின் அருகில் அவள் நின்றிருந்ததில், அவன் அன்புவிடம் செல்லாமல், தூரமே விலகி இருந்தான் இறுதியில் அதிதி கையில் தேங்காய் அடங்கிய தட்டை, கண்டு அவள் சுமக்க முடியாமல், தூக்கி செல்வதை, கண்டதும் சிரிப்பு வந்து விட்டது.


"இவ ஏதாவது சாப்பிடறாளா, இல்லையா," என்று மனதினில் நினைத்து, வேகமாக அவளை நோக்கி சென்றான்
அதற்குள், மண்டபம் அருகில் வந்து அனைவரும் சேர்ந்தனர்.
இனியாவும் வந்த பிறகு இருவரும் ஒன்றாக மண்டபத்திற்குள், செல்ல வேண்டும்.
நாத்தனார் தான் ஆரத்தி எடுக்க வேண்டும், என்பதால், சுமதி விஷாவை அழைக்க சென்றார் .
மகளை முன்னிறுத்தி, செய்ய துடிக்குது மனது.


ஆனால், விஷா எதற்கும் பிடிகொடுக்காமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம் .
" உங்க அண்ணா உனக்கு சோறு போடுறானா இல்லையா," என்று கேட்டு கொண்டே, அவள் கையில் இருந்த தட்டை லாவகமாக பறித்து கொண்டு, அவளை ஒதுக்கி அன்புவின் அருகில் நின்று கொண்டான் .
நண்பனின் குரலில், அவனை கண்டதும்,"டேய் " என்று அன்பு அவனை கட்டி கொண்டான், சரனும் ஒரு கையால், அவனை அனைத்து கொண்டு, சுற்றம் மறந்தனர் நண்பர்கள் இருவரும் .


அங்கிருப்போர், "மாப்பிளை பொண்ண கட்டிப்பார்ன்னு,பார்த்தா, இப்படி ஒரு பையனை கட்டி பிடிச்சிட்டு நிற்கிறாரு," அங்கிருபோரின் கேலி கிண்டலில், "டேய், நம்ம இரண்டு பேரையும் விட்டா, அவனா நீன்னு கேட்பாங்க, அடங்கு," என்று சரண் கூறினான் .

இனியாவும் அழைக்க வர பட்டாள் , வரவேற்புக்கான உடையில் அவள் ஜொலித்தாள் .
உண்மையில் சரண் வந்த பிறகு, புது தெம்பு அன்பு மனதில் .


உயிர் தோழன் தன் திருமணத்தில் அவனுடன் இருக்க வேண்டும் என்றா மனதின் அவா .
விஷா வர முடியாது என்று மறுத்ததில், அன்பு பெரியன்னை, "அதிதி, என்ன இங்கயே நிக்கிற, உன் கையில் இப்போ எதுவும் இல்லை தானே, போ பொய் ஆரத்தி எடு, எவ்வளவு நேரம் தான் பொன்னும் மாப்பிள்ளையும் நிப்பாங்க," என்றதும், அதிதி, இனியாவுக்கும் அன்புவுக்கும் ஆரத்தி சுற்றினாள் , "துணை மாப்பிளை பக்கத்துல நிக்கிறாரு, அவருக்கும் சுற்று," என்று மீண்டும் ஒரு கிண்டலில், அவனை முறைத்து, வேறு வழியின்றி சுற்றினாள், அண்ணனுக்கும் அன்னிக்கு மட்டுமே, பொட்டு இட்டு, மண்டபத்திற்குள் சென்றனர் .


"செம்ம காண்டா இருக்கா போல, இன்னும் எதையும் மேடம் மறக்கல," என்று நினைத்து கொண்டான் .
சரணின் வருகை, அவன் சொந்தத்தில் அனைவருக்கும், ஆச்சர்யமே.


யாரிடமும் பேச மாட்டான், யாராவது கேட்டாலும் வார்த்தையால் அவர்களை கொன்று கூறு போடுவான்.
பணம் இருந்தா தான் பேச வர சொந்தங்கள் தனக்கு வேண்டாம் என்று அனைவரையும் எல்லையில் நிறுத்தினான் .


இப்பொழுது அன்புவின் திருமணத்திற்கு மட்டும் பணம் செலவு செய்து வந்திருப்பது, அவரவர் வாய்க்கு வந்ததை, பேசிக்கொண்டிருந்தனர், அவனிடம் கேட்க பயந்து..
இனியா , அவன் பக்கமே திரும்பவில்லை, பொம்மை போன்று அவன் அருகில் நின்று கொண்டாள் .


"இவன் செம்ம கேடி, ஏதாவது, இவன் செய்வான், எல்லாரும் என்னை பார்ப்பாங்க, எனக்கு இது தேவையா," என்று அவன் பக்கமே பார்க்காமல், நின்று கொண்டாள் .
அதற்க்கு ஏற்றது போல், அறையில் அவளின் அத்தைகள்,


"இப்படியா மாப்பிளையை வெச்ச கண்ணு வாங்காம பார்ப்பா," என்று அவளை படுத்தி எடுத்தனர்.
"நான் பார்த்தேன் நீங்க பார்த்தீங்க," என்று கேட்டாள் .
"அவரையே பார்த்துட்டு இருந்த, நாங்க பார்த்தோமே டீ," என்று இலக்கியா வேறு கிண்டலடித்தாள் .
அவளின் பிள்ளைகளுடன் மாமியார் குடும்பம், உடன் நாத்தனார் தாரணி வந்து இறங்கியதில், அவள் மனதில் இருந்த பயம் தெளிந்து, நடப்புக்கு வந்தாள் .
அவளும் அவள் பங்குக்கு, இனியாவை கிண்டலடித்தாள் .


"அன்பு, முறையே, சரணை , இனியாவிடம் அறிமுகம் செய்து, நண்பனும், அவன் தேவதையும் நட்புடன் பேசி கொண்டதில் அன்பு மகிழ்ந்தான் .
நாதனின், அத்தை, திருமண ஜோடியையே பார்த்துக்கொண்டதை, நாதன் கவனித்து அவரிடம் கேட்டார், என்ன என்று.


அவர் அவர் தந்தை வழி சொந்ததுடன்,இருந்து கொண்டார்.
"இல்லை, நாதா, பொண்ணு நம்ம அன்பு முன்னாடி, சுமாரா தெரிஞ்சா மாதிரி இருந்தது, இப்போ இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கு, கண்ணு நிறைஞ்சு போச்சு பா, அவனுக்கு ஏற்ற பொண்ணு தான்," என்று பாராட்டினார்.


இதை கேட்க நேர்ந்த, சுமதி விட்டேனா பாரு, "அங்கு இளங்கோவும், உடன் தேவகி, விஷா , வினோத் இருந்ததில், அவனை சீண்டவே, "ஆமா , அந்த பொண்ணு நிறம் கம்மி, தான், இன்னும் நல்ல பார்த்து இருக்கலாம் ," என்று பேசியதில், நாதன் உட்பட, அதிர்ந்தனர்.

"என்ன இது நாளை கலையாணம் வெச்சிட்டு, இந்த அம்மா இப்படி பேசுது," என்று அவர்.
ஆனால் நாதனின், அத்தை , அவரின் அனுபவம் அவருக்கு தெரியாதா, யார் எப்படி என்று, "என்ன மா, பொண்ணுக்கு என்ன குறைச்சல்".
"தங்க சிலையாட்டம் இருக்கா, முகத்தில அவ்வளவு
கலை ".
"ஐம்பது வருஷ காலம் தான், நம்ம உடம்பு நம்ம கையில, அதுக்கு பிறகு, இந்த தோல் சுருங்கும், அழகு குறையும், மனசு மட்டும் தான் எப்பவுமே இளமையா இருக்கும்".
"நம்ம சம்பாரிச்சு, வெச்சிருக்கும் நல்ல பேரு தான், கடைசி வரை நம்ம கூடயே வரும், இந்த அழகு, நிறத்தை தூக்கி குப்பைல போடு," என்று அவர் திட்டுவது போன்றே, கணீர் குரலில் கூறியதும், இளங்கோ முன்பு சுமதிக்கு தான் முகம் சுருங்கியது .


"நீங்க சரியா சொன்னீங்க பாட்டி, எங்க குடும்பத்தோட மேஜிக்கே இது தான், தனியா ஒரே போல, நிறத்துல ஜோடி எங்க வீட்டுல யாருமே இல்லை, ஆனா அவங்க அவங்க ஜோடியோட நிற்க பார்த்தா, நீங்க சொன்னது போல கண்ணு நிறையும். பார்க்க அவ்வளவு அழகா இருக்கும் ."

"மனசார பார்த்தா யாருமே, அழகா தான் தெரிவாங்க," என்று அவன் சுமதியிடம் நேருக்கு நேராக வாய் கொடுத்தான் .
"தன் அக்காவை அவர் எப்படி பேசலாம்," என்று அவனுக்குள் .


"நாதனுக்கும், இளங்கோவை மிகவும் பிடித்து போனது, அவ்வளவு துரு துரு என்று, அவன் தந்தையுடன் ஓடி வேலைகள் செய்து, வந்திருப்போரை, எந்த முகம் சுளிப்பு இல்லாமல், அவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டே, அவர்களின் கேள்விக்கு தகுந்தாற் போல் பதிலளிப்பது, இப்பொழுது, அவன் சுமத்திடம் கோவமாக பேசியதில் அவருக்கு, என்னவோ, என்று தான் ஆனது.

"இந்தா தம்பி, சரி பா, அதான் எங்க அத்தை பேசிட்டாங்க இல்ல , நீ போய் வேலைய பாரு, ஒரு கல்யாணத்துல, ஆயிரம் பேரு அவங்களுக்கு தோணுவதை பேச தான் செய்வாங்க".

"இது எல்லாம் கடந்து வந்தா தான்," என்று அவரு அவனிடம் தன்மையாக பேசியதில், தேவகிக்கே ஆச்சர்யம் , அவரின் புன்னகை முகத்தில் .
இளங்கோவும், "பாட்டி, நீங்க ரொம்ப கியூட் , எங்க வீட்டு தேவதை, அவ, ரொம்ப நல்ல பொண்ணு, நீங்க அவளுக்காக பேசுனீங்க, அதுனால், நான் சும்மா போறேன்," என்று அவரின் கன்னத்தை கிள்ளினான் .


"இல்லைனா என்ன டா செய்வ, என்று எகிற தோன்றியது தான் சுமதிக்கு, ஆனால் மகன், மருமகன், எல்லோரும் கோவத்தில் இருப்பதால், அமைதி அடைந்தார்.

"டேய், பையா, வயசு பொன்னுங்க,எத்தனை பேரு இருக்காங்க, இந்த கிழவி தாடையை கிள்ளுற, நான் மூணு தலை முறை பார்த்த கொள்ளு பாட்டி டா," அந்த வயதிலும் அவரை அழகு என்று சொன்னதில், முகத்தில் வெட்கம் .

"நீங்க கொள்ளு பாட்டியோ, எள்ளு பாட்டியோ, ஆனா ரொம்ப லொள்ளு பாட்டி, எங்க அப்பா கிட்ட என்ன டின் கட்ட வைக்க பிளான் போடுறீங்க," என்று கிண்டலடித்து, அவரிடம் விட்டு சென்றான் .

"இந்தா பா, என்னோட ரூம்ல, பாத்ரூம் விளக்கு எரிய மாட்டிங்குது, அது என்னனு பாரு பா," என்றதும் அவன் திரு திரு என்று முழித்தான்.

"ரூம் வரைக்கும் தான் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணேன், அப்பாகிட்டயும் எல்லாம் ஓகேன்னு சொல்லிட்டேன்," என்று நினைத்து, நான் என்னனு பார்க்குறேன் ,

"ஆமா மற்ற லைட் எல்லாம் நல்ல தானே ஏரியுது .ஹ்ம்ம் அது எல்லாம் நல்ல தான் எரியுது பா, அந்த பாத்ரூம்ல தான் எரிய மாட்டிங்குது, என்று மேடேறிய வழுக்கை நெற்றியை சொரிந்து கொண்டே அவனிடம் கூறினார் .

இப்போ, ஒரு நைட் தங்கிட்டு போறது இவருக்கு லைட் தேவையா, என்று நினைத்து , அவரை கிண்டலடித்தான்
"இங்க சிலரை பார்த்ததும் ரொம்ப க்ளெர் அடிக்குதுனு, இது எல்லாம் சரி பண்ணாம விட்டு இருப்பாங்க, என்று அவரின் தலையை பார்த்துக்கொண்டே அவன் கூறியதில் விஷயம் புரிந்த, வினோத், தேவகி சிரித்து விட்டனர் .
விஷா அவனை முறைத்தாள் .
இவ கூட எல்லாம் மல்லுக்கு நிற்க முடியாது என்று அவ்விடம் விட்டு சென்று விட்டான் இளங்கோ.


"மாமா அந்த பையன் உங்கள சொட்டை மண்டைனு சொல்லிட்டு போறான், உங்களுக்கு அது புரியவே இல்லை," என்றாள் கோவத்தில்.
விஷா கூறியதும், தேவகி இன்னும் பெரிதாக சிறிது விட்டார்.


"ஹே அவன் அப்படி சொல்லவே இல்லை, உன் மனசுல இருப்பது தான் வெளியே வருது,"
" என்ன," அவள் வினோத்தை முறைத்தாள் .


மனைவி இப்படி மனம் விட்டு சிரிப்பதில் தன்னை மனம் துள்ளினார் நாதன், "போக்கிரி பையன், விடு மா," என்று சிரித்து விட்டு, மேடையை நோக்கினார்.

உண்மையில் அவன் இருக்கும் இடத்தில கலகலப்புக்கு பஞ்சம் இல்லை.
அவனையே சிந்திக்க வைத்தார் சுமதி.


சரண் அன்பு கூறிய அனைத்தும், அவன் நன்பர்கள் தங்க இடம், அவனுக்கு வேண்டியவர்கள், வந்து செல்ல போக்கு வரத்து, என்று அனைத்தும் முன் நின்று பார்த்து கொண்டான் .

பிறகு, அனைவருடனும் ஒரு குடும்ப புகை படம் எடுக்க பட்டது.

உணவு முடிந்து, அடுத்த நாள், காலை நான்கு மணி அளவில், எழுந்துக்க வேண்டும் என்று அவரவர் அறைக்குள் சென்று, அடங்கினர் .


 

Saroja

Well-Known Member
கல்யாண கலாட்டா ரகளைனு
இளங்கோ சரண் விஷாகா
இவங்கனாலா ரொம்ப நல்லா
போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top