அன்பின் இனியா 15 2

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் , எப்படி இருக்கீங்க,
சென்ற பதிவிற்கு, கிடைத்த உங்களின் வரவேற்புக்கு நன்றி.
அடுத்து பதிவிட்டுள்ளேன்.
உங்களின், கருத்துக்களையும், நிறை குறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

All take care
be safe friends:love:(y)

ரேஷ்மி, ஊருக்கு வருவதை பற்றி தேவகி, வீட்டினருக்கு தெரியப்படுத்தியதும், விஷாகாவுக்கு பயம் பிடித்து கொண்டது .
தான் செய்திருக்கும் செயலுக்கு, முதல் முறையாக பயப்படுகிறாள் .


இதுவரை யாரை பற்றியும் கவலை படாமல், எடுத்தெறிந்து பேசுவது, தன் தேவைக்கேற்ற்ப வீட்டினரை வளைப்பது , ஏன் ரேஷ்மியையும் கூட அவளின் வசதிக்காக தான், பயன்படுத்தி கொண்டாள்.
மனதில் பல திட்டம் தீட்டி, தம்பி மீதான ஆர்வத்தை, காதலாக தூண்டி விட்டதும், இது போன்று, அவளின் தவறு எது என்றே தெரியாமல், அவளின் போக்குக்கு ஏற்றது போல் மகிழ்ச்சியாக பயணித்த வாழ்வில், தம்பியின் திருமணம், அவளின் முடிவுக்கு எதிராக திரும்பியது, அதற்கு அன்னையும் உடன் பட்டது பெரும் அதிர்ச்சி .


இனியாவுடனான திருமணமே விஷாகாவின் அடுத்தடுத்து பிரச்சனையை கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தாள் .
இனியா இடையில் வராமல் இருந்தால், எந்த குழப்பமும் வந்திருக்காது, என்று இனியா மீதே அவளின் முழு கோவமும் இறங்கியது .


அடுத்தவர்கள் தன்னை கேள்வி கேட்பார்களோ, யாருக்கும் தெரியாமல் இதில் இருந்து எப்படி தப்புவது, என்று இது போன்று பல வகை சிந்தனை அவள் மனதை ஆட்கொண்டு, அதனால், கடையில் அதற்குமேல், முழு கவனத்துடன் ஈடுபட முடியாது, என்று அவள் அன்னையை காண வீட்டிற்கு சென்றாள் .

அவள் மதியத்திற்கு மேல், சென்றதால், அங்கு வீட்டில் சுமதியை தவிர யாரும் இல்லை .
வாசலில், அழைப்பு மணியின் ஓசையில், அரை தூக்கத்தில் இருந்த , சுமதி இன்னேரம் யாரென்று தெரியாமல், கண்ணை கசக்கி கொண்டே வந்து கதவை திறந்தாள், அந்நேரம் விஷாகாவை கண்டு, என்னவோ, என்று பதறி,
"என்ன மா இந்த நேரம்?" என்று கேட்டதற்கு
"அதானே, நல்ல தூக்கம் போல, வாசல்லையே நிக்க வெச்சி கேள்வி கேட்பியா, நகரு அங்க," என்று சிடு சிடுத்து ,
"உனக்கு எதை பற்றி தான் கவலை, உன் புள்ளைக்கு கல்யாணம் செய்ய போற, அந்த மகிழ்ச்சி உனக்கு இருக்கத்தானே செய்யும் , அதான் எந்த கவலையும் இல்லாம, சுகமா தூங்குற, நான் தான் அல்லல் படுறேன்.


"உனக்கு அது பற்றி எந்த தலை வலியும் இல்லை, என்ன பண்றது, என் அப்பா இல்லாம, உனக்கும் குளிர் விட்டு போச்சு," என்று வந்த விஷயம் என்னவென்று கூறாமல், சகட்டு மேனிக்கு திட்டி கொண்டிருந்தாள் அன்னையை .
மகளின் ஏச்சுக்கு எந்த பதிலும் சொல்லாமல், பாவமாக நின்று கொண்டிருந்த சுமதியை, கண்டு மேலும் அவளுக்கு சினம் பெருகியது.


"இப்படி மூஞ்சிய பாவமா வெச்சிட்டு என் முன்னாடி நிக்காதா, செமையா தலை வலிக்குது, ஒரு காபி போட்டு கொண்டா," என்றாள், அன்னை என்னும் மரியாதை இல்லாமல் .
சுமதியும் மகள் தலை வலி என்றதும் பதறி முதலில் காபி தயார் செய்து எடுத்து வந்து கொடுத்து , மீண்டும் சமயலறையில் சென்று, பத்து நிமிடம் கழித்து, கையில் நல்லெண்ணெய், சூடு செய்து எடுத்து கொண்டு வந்தார் .
"ரொம்ப சூடு ஆகி இருக்கும், முடிய விரி மா, நான் மசாஜ் செய்றேன்," என்று விஷாகா, சிறிது நேரத்துக்கு முன்பு, திட்டியது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்று, சாதாரணமாக , அவளுடன் உரையாடினார் .


அதில், விஷாகாவின் கோவம் கொஞ்சம் மட்டு பட்டு, அன்னை கூறியது போன்று, அவரின் முன் சென்று அமர்ந்து கொண்டாள் .
இதமான சூட்டில், எண்ணெயயை, எடுத்து அவள் சிகைகையில், சிறிது சிறிதாக, தடவி, இதமாக பிடித்து விட்டார் .


"ஹ்ம்ம், இப்படி தான் மா, தலை வலி இப்போ கொஞ்சம் பரவா இல்லை, இன்னும் நல்லா பிடிச்சி விடு," என்று விஷகாவும், அன்னையுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அன்னையை குற்றம் சொல்ல மறக்கவில்லை .
அவளின் கோவத்திற்கு எல்லாம் தற்போதைய ஒரே பலி ஆடு அவள் அன்னை சுமதியே, அடுத்து எதற்கும் வாய் திறக்காமல், பதில் பேசாமல், திட்டு வாங்கி கொண்டிருக்கும் ஒரு ஜீவனிடம் மட்டுமே, தனது கோவத்தை வெளிப்படுத்த முடியும் , என்று அன்னையிடம் வந்து இருக்கிறாள்


"விஷா மா"
"ஹ்ம்ம்,"
"இன்னும் ஒரு வாரம் தான் கல்யாணத்துக்கு இருக்கு, வர புதன் கிழமை, பந்த கால் நடலாம், நீ தான் மா, முதல் நலங்கு வைக்கணும், அது பற்றி ஒண்ணுமே சொல்ல மாற்றியே," என்று தயங்கி தயங்கி ஒரு வழியாக கேட்டு விட்டார் .

சுகமாக, கண்களை மூடி கொண்டு, தலை வலி மறந்து இருந்த, விஷாகாவுக்கு, தலை வலிக்கான காரணம் மீண்டும் நினைவு வந்து வெகுண்டு விட்டாள் .


"ஹ்ம்ம், உன் பையனுக்கு அது ஒன்னு தான் இப்போ குறை, நம்ம சேர்ந்து ஒரு வேலை செய்து வெச்சோமே உனக்கு அது வசதியா மறந்து போச்சா, நாளைக்கு ரேஷ்மி வரான்னு , என் மாமியார்காரி, அங்கு வீட்டுல குதிச்சிட்டு இருக்கா, ரேஷ்மி விஷயம் வெளியே தெரிஞ்சிது அவ வந்து என் சங்கு பிடிக்க போறா பாரு ".

"உனக்கு எங்க அந்த கவலை, புள்ள சம்பாதிக்கிறான், இப்போ அவன் தயவுனு, அவன் பேச்சை கேட்டுட்டு நிக்கிற, முன்ன அப்பா வருமானத்துல, காலத்தை ஓட்டுன, இப்போ பையன், அவ்வளவு தான் உனக்கு வித்தியாசம்" .
"மூணு வேலை சாப்பாடு, தங்க இடம், இது இருந்துட்டா போதும்னு, இருக்குற, யாருகிட்ட வருமானமோ, அவங்களுக்கு கூஜா தூக்குறே" என்று அன்னையின் சுய மாரியாதையை கொன்று கொண்டிருதாள்.


ஒரு பெண் சம்பாதித்தால் மட்டுமே, அவளுக்கான மரியாதை, என்பது போன்று இருந்தது இவளின் சூடு சொல்.
"நான் தானே அந்த வீட்டுல, வாக்க பட்டு இருக்கேன்".
"நாளைக்கு ரேஷ்மி வந்து, அசிங்கமா கேட்க போறா, சின்ன பொண்ணு கிட்ட போய் வாங்கி கட்டிக்கணுமோ, என் வீட்டுக்காரனுக்கு தெரிஞ்சா எனக்கு எவ்வளவு அசிங்கம், இது பற்றி ஏதாவது கவலை இருக்கா, உன் பையனுக்கு, கூட பொறந்தவனு, முதல் நலங்கு மட்டும் நான் வைக்கணுமா," என்று எகிறினாள் .


"எதுலயும் எனக்கு முதல் மரியாதை கொடுக்கல, அதே வரவுக்கு மட்டும் நான் செய்யணும் இல்லை," என்று அவள் எந்த வரவும், இது வரை தம்பியிடம் இருந்து கிடைத்ததில்லை, போல் பேசிகொண்டிராந்தாள் .
ரேஷ்மி நாளை வருகிறாள், என்று கேட்டதும் சுமதிக்கும் அதிர்ச்சியே.


ஆனாலும், அன்பு பார்த்துக்கொள்வதாக சொன்னதும், மகன் எதையும் சமாளிப்பான் என்ற நம்பிக்கையில், கவலை மறந்து இருந்தார் .
அதையே, விஷாவிடமும் சொல்லி, இன்னும் வாங்கி கட்டி கொண்டார்.


"அம்மா, ஏதாவது உளறாதே, நம்ம, அன்பு சமாளிப்பான், ரேஷ்மிக்கு புரிய வைப்பான் மட்டுமா, இதுல இறங்கினோம் ".
"எதுக்கு ரேஷ்மிய இந்த வீட்டுக்கு வர வைக்கணும்னு, உனக்கு நான் ஏற்கனவே சொன்னானே தானே."


"நான் வினோத்தை கல்யாண செய்துட்டு போனா, அப்படியே, அந்த வீட்டுல ஏதோ மகாராணி கணக்கா, அவளை என் புருஷன், அவங்க அப்பா அம்மா, எல்லாரும் தாங்குறாங்க."

"நான் இங்க எப்படி இருந்தேன், அத விட பல மடங்கு, அவ அந்த வீட்டுல தாங்குறது எனக்கு பிடிக்கலை".
"அவளையே எல்லாரும் முதன்மையை தாங்குறது எனக்கு பிடிக்கல ".
"எனக்கு நான் தான் பெரிய மனுஷியா இருக்கனும், எல்லாரும் எனக்கு தான் முன்னுரிமை கொடுக்கணும் .


இங்க நான் சொல்றத கேட்டு தான் சமையல், ஆனா, அங்க பேருக்கு தான் நான் மருமக, எல்லாம், என் மாமியார் கையில, தான் அதிகாரமே".
"ஏன் வேலைகாரங்க கூட, எனக்கு பயபடுறாங்களே, தவிர, உண்மையா இல்லை ".


"அந்த பொண்ணு எது சொன்னாலும், என் புருஷன், தொங்கச்சி சொன்னா சரியா இருக்கும்னு, அப்படியே செய்வாரு ".
"எனக்கு இங்க இருந்த செல்லம் பாசம் எல்லாம், என் புகுந்த வீட்லயும் இருக்கனும் நினைச்சேன்" .


"அதான், ஏதோ சாக்கு சொல்லி, என் மாமனாருக்கு, வசதி தகுதின்னு, தாஜா செய்து, அவளை ஊட்டி கான்வென்ட்ல சேர்க்க வெச்சி ஒரேடியா ஹாஸ்டல் வாசம் ஆக்கிட்டேன்" .
"காலேஜூம் , பெங்களூர்லயே, பெஸ்ட் காலேஜ்ன்னு, ஏதோ அவளை அப்படியே, அந்த பக்கம் பார்சல் பண்ணேன்."


ன் ஊருக்கு வந்தா கூட, அவங்க அப்பா அண்ணன் கூட, கம்பெனிக்கு போய்டுவாளோனு, என் கடைக்கு, வர வெச்சேன் , அங்க சும்மா ஒப்புக்கு சப்பவா, சும்மா உட்கார வெச்சி ஏதோ ஏதோ பேசி, ஒரு பி ஏ மாதிரி, என் பின்னாடி வர வைப்பேன்."
"இது எல்லாம் எதுக்கு அவ அதிகாரம் என் வீட்டுல, நான் வாழுற இடத்துல இருக்க கூடாதுனு தான் .
அதற்கு அப்பறம், என்ன தான் மாமனாரும், புருஷனும், என் பேச்சை சில விஷயத்துல, கேட்டாலும், இப்போ வரை, பிசினெஸ்ல, எந்த ஒரு விஷயமானாலும்,அவளோட முடிவு தான் கேட்குறாங்க" .


"அப்படியே, கொஞ்ச நாளுல, பிஸ்னெஸ்யும் தூக்கி பொண்ணுக்கு கொடுத்தா,நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா" .
"எங்க வீட்டு ஆண் வாரிசு, எல்லா சொத்தும் என் புருஷனுக்கு தான் எல்லாம் வரணும்" .
"எனக்கு என் கடை இருக்குனாலும், மாமனார் சொத்து, என் வீட்டுகாருக்கு மட்டும் தான், என் பசங்க தான் அனுபவிக்கனும்" .


"வேற யாருக்கும் இதுல பங்கு இருக்க கூடாது" .
"இது எல்லாம் கணக்கு போட்டு தான், ஊருக்கு வந்த இருந்தவ, கண்ணு அன்பு மேல திரும்புனதும், சரி எப்படியாவது, நான் சொல்ற பேச்சை நீ கேட்ப, உன் பேச்சை அவன் கேட்பானு நினைச்சேன் ".


"இப்போ எல்லாம் பாழா போச்சு" .
"அவளை வெளிய எங்காவது கட்டி கொடுத்தா, சீர் அப்படி இப்படினு, எல்லாம் போகும், அதுக்கு இங்க அன்புவுக்கு கட்டி கொடுத்தா, எனக்கு தானே திரும்பவும் வரும்" .


"அன்புவும், மாமனார் சொத்துக்கு ஆசை பட மாட்டான், அதுனால், இவளுக்கு பிசினெஸ்ல, எந்த பங்கு வராது, எல்லாம் எனக்கு தான் நினைச்சிட்டு இருந்தேன்" .
"ஏன் இப்போ கூட, அவ டூர் போய் இருக்கா, நேரம் கிடைக்கும் போதெல்லாம், என் மாமியார் கிட்ட பேசுறா, அப்போ எல்லாம், அந்த பொம்பளை, பொண்ணுக்கு, அன்பு கல்யாண சேதி சொல்ல குதிக்கும் போது, நான் தான், அவங்களை அடக்கி, இப்போ அவ என்ஜோய் பண்ணட்டும் , உடனே வரேன்னு சொல்லுவா, அப்படி இப்படினு சமாளிச்சு இந்த விஷயத்தை மறைச்சி வெச்சேன்".


"அதுக்குள்ள, ஏதாவது, காரணம் கிடைச்சா கல்யாணத்தை நிறுத்தலாம், பார்த்தா, கிடைச்ச எல்லா சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டு நிக்கிறோம்," என்று அன்னையை பல்லை கடித்து கொண்டு திட்டி தீர்த்தாள் .
"நானும், இது எல்லாம் மனசுல வெச்சி தான் மா, அந்த பொன்னே இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா உனக்கு கடைசி வரை, எல்லாம் செய்வான்னு ஆசை பட்டு, ரேஷ்மி, இந்த வீட்டுக்கு மருமகளா வர சம்மதிச்சேன்" .


"ஆனா இவன், இப்படி உறுதியா இருக்கும் போது , நானும் தான் என்ன செய்வேன்" .
"அதான் மா எனக்கும், நான் அடம் பிடிப்பேன், அழுது ஆர்பாட்டம் செய்வேன், எனக்கு எது ஒன்னு வேணும்னாலும், எப்படியோ, என்னை வருத்திட்டு, அந்த பொருளை, அடைவேன்".


"ஆனா, இவன் எந்த ஒரு எதிர்வினையும் இல்லாம, அழுத்தமா இருந்தே அவன் காரியத்தை சாதிக்கிறான், எதுக்கு மெனகடலை."
"அவன் கிட்ட நான் ஒவ்வொவரு முறையும், தோற்குறேன்"
"எனக்கு அசிங்கமா இருக்கு" .



"இப்போ கூட அவன் என்ன தான் ரேஷ்மி கிட்ட எடுத்து சொன்னாலும், அவ என்ன செய்வாளோ , எப்படி ரியாக்ட் பண்ணுவாளோனு இருக்கு" .
"அவ புரிஞ்சிக்கிட்டாலும், எனக்கு என்ன மரியாதை இனி இருக்கும்னு நினைக்கிரே, இப்போவும் ஒன்னும் கெட்டு போகல, உன் பையன் மனச மாத்திக்க சொல்லு, என் பேரு எப்படி இருந்தாலும் வெளிய தெரிய கூடாது," என்று பைத்தியாகாரி போல் கத்திக்கொண்டிருந்தாள் .


"அவன் அந்த பொண்ண மட்டுமே கல்யாணம் செய்துப்பேன், ஒரே பிடியா நிக்கிறான், இன்னும் ஒரு வாரத்துல, எதுவும் மாறாது மா." என்று சுமதி எடுத்துரைத்தும், அதை புரிந்து கொள்ளும் நிலையில் விஷாகா இல்லை .

"அடி பாவிங்களா, " என்று வாயில் கை வைத்து இதை எல்லாம் அதிர்ச்சியாக கேட்டு கொண்டிருந்தாள் அதிதி .
கல்லூரி முடிந்து, வீட்டின் நுழை வாசலில், அக்காவின் குரல் கேட்டு அங்கே நின்றதில், ரேஷ்மியை பற்றி அன்னையும், அக்காவும் செய்த கேவலவமான செயல் தெரிய வந்து, அவள் அங்கேயே, அதிர்ச்சியில் நின்று விட்டாள் .


இப்படி ஒரு பாவ செயல், தனது அக்கா செய்வதற்கு அன்னையும் உடந்தை என்று தெரிந்ததும், அதிதி, "ஐயோ , ரேஷ்மி, இதை எப்படி தாங்கி கொள்வாள்," என்று அவள் மீது பரிதாபமும், விஷாகா மீது கோவமும் ஒருங்கே வந்தது.

இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்று அச்சிறு பெண்ணுக்கு தெரியாமல் போனது தான் பாவம்
இனி?
















 

Saroja

Well-Known Member
அதிதி இதை கேட்டு
அண்ணனிடம் சொல்வாளா
இல்ல இவங்கள போய் ஏதாவது
கேட்டு திட்டு வாங்குவாளா
 

achuma

Well-Known Member
அதிதி இதை கேட்டு
அண்ணனிடம் சொல்வாளா
இல்ல இவங்கள போய் ஏதாவது
கேட்டு திட்டு வாங்குவாளா
:DThanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top