அன்பின் இனியா 15 1

Advertisement

achuma

Well-Known Member
next is here
take care friends


(y):love:

இளங்கோ கடையின் வெளியேயே நின்று, அவர்களின் வருகைக்காக காத்திருந்தான் .
அன்புவை கண்டதும், புன்னகையுடன், அவன் குடும்பத்தினரை, வரவேற்றான் .
அவர்களும் நல விசாரிப்புகள் முடிந்து, உள்ளே சென்றனர்.
வரவேற்பரையில், விஸ்தாரமான, பெரிய கூடம், அதனினுள் , சென்றால், இரு அரை முழுதும், கடையில் இருப்பது போன்றே, பட்டுக்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது .
அந்த கடையின் பின்பக்கமாக, கடை உரிமையாளரின் வீடும், அதன் வலது பக்கம் முழுதும், அங்கேயே தரி செய்யும் இடமும், என்று பார்க்க அந்த இடம் மிகவும் ரம்யமாக, வந்தோருக்கு பிடித்தமாகவும் இருந்தது .
விஷாகவும், அந்த இடத்தை பார்த்ததும், அவள் தொழில் புத்தி நேராக அங்கு வேலை செய்வோரை கண்டு, என்ன எப்படி, என்று அவர்களின், தொழில் பற்றியும் பட்டு வகைகளை பற்றியும் கேட்டறிந்து கொண்டிருந்தாள் .
அவர்களுக்கும், ஆடை துறையில் விஷாகாவை, தெரியாமல் இருந்தால் தான் அதிசயம் .
அவளின் ஆளுமை, அங்கு வேலை செய்வோரை பணிக்க செய்தது.
அவளின், சந்தேகளுக்கும், கேள்விகளுக்கும், அங்கு உள்ளோர் பதில் அளித்தனர் .
அதற்குள், இந்திரா, சுமதி மற்றும் தேவகியை வர வேற்று, அங்கு புடவை குவிந்து இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார் .
சுமதி பேருக்கு என்று இந்திராவிடம் புன்னகையித்து , விஷாவின் வருகைக்கு எதிர்பார்த்திருந்தனர்.
"இவங்க இதுக்கு மேல நமக்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க," என்று நன்றாக புரிந்து வைத்த , இந்திரா, அவரின் பக்கம் நகர்ந்து, அதே நேரத்தில், அங்கு உள்ள புடைவையை பார்த்து கொண்டிருந்தார் .
விஷகாவும், அவளின் தேவை முடிந்தும், அந்த இடத்தை விட்டு நகராமல், அன்பு வந்து கூப்பிடட்டும் , அந்த கருவாச்சி வீடும் வந்து என்னை கூப்பிடட்டும், என்று நினைத்து, அங்கேயே வேடிக்கை பார்த்து நின்று கொண்டாள் .
"அன்பு, அக்கா, இன்னும் வரல பா," என்று சுமதி அழைத்ததும், "அம்மா, தரி செய்யற, இடத்துக்கே, அக்கா வந்து இருக்கா , சோ, அது எல்லாம், பார்த்திட்டு இருப்பா , நீங்க இருங்க , நான் போய் பார்த்துட்டு வரேன், என்று அக்காவை அழைக்க சென்றான் .
"அக்கா, வாங்க போகலாம், அம்மா உங்களுக்காக, வெய்ட் பண்றாங்க," என்றான்
"ஏன் நீ, வெய்ட் பண்ணலையா, உன் பொண்டாட்டிக்கு, டிரஸ் எடுக்க, அவ்வளவு, அவசரமா, இன்னும் மூன்று வாரம் இருக்கு," என்று நக்கலடித்ததில், அன்பு எப்பொழுதும் போல், அவனின் முகத்தில் எந்த கோபத்தையும் காட்டாமல்,
"ஹ்ம்ம், தெரியும் அக்கா, இன்னும் எவ்வளவு நாள் இருக்குனு, நான் வெய்ட் பண்லாம், பட் இன்னைக்கு பொழுதும் நமக்காக வெய்ட் பண்ணாதே" .
"இனியாக்கு மட்டும் இல்லை, வீட்டு ஆளுங்க எல்லாருக்கும் எடுக்கணும், அதுக்கு தான் இப்போவே எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல."
"பிசினெஸ் பண்ற உங்களுக்கு தெரியாதா, டைம் எவ்வளவு முக்கியம்னு," என்று அவளுக்கு திரும்ப பதில் கொடுத்து, அவளை அழைத்து சென்றான் .
"என்ன எல்லாருக்குமா, எனக்கு சொல்லவே இல்லை, என் கடையில எதுவுமே எடுக்க மாட்டாங்களா," என்று மனதில் பொருமிய படியே, அன்னையை பார்த்ததும் அவரிடம் பாய்ந்து விட்டாள் .
"வா மா, உனக்கு தான் காத்திட்டு இருந்தேன்," என்று வாயெல்லாம் பல்லாக அழைத்த சுமதியை தீ பார்வை பார்த்த வாறு, "அந்த பொண்ணுக்கு மட்டும் தானே இங்க வந்தோம், என் பெர்மிஸின் இல்லாம, எல்லாருக்கும் இங்கேயேனு சொல்றான்" .
"அப்போ, ஊர்லயே பேர் போன என் கடைக்கு, என் வீட்டு ஆளுங்களே எடுக்குள்ளான, எனக்கு என்ன மரியாதை சொல்லு," என்று அடிக்குரலில் சீறினாள் .
"இல்லை மா, இந்த கடை நல்ல இருக்கு, அது தான் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு எல்லாம் இங்கயே எடுக்கலாம்னு, அன்பு சொன்னான்."
"அது கூட, இப்போ எடுத்த முடிவு தான், இங்க வந்த பின்பு," என்று அவளுக்கு, பதமாக புரிய வைத்தாலும், வஞ்சம் உள்ள நெஞ்சம் ஏற்க மறுத்து, வார்த்தையால், அன்னையை வதைக்க ஆரம்பித்தது .
"இல்லை தெரியமா தான் கேட்குறேன், நான் தானே இந்த வீட்டுக்கு மூத்தவ , எனக்கு எந்த முடிவு உன் பையன் கைல கொடுக்க மாட்டானாமா, நீ இப்படி பூ பொட்டு இல்லாம இருக்கியே, உன்னை எப்படி முன்ன நிற்க வைக்கலாம்,அக்கா தானே எல்லாத்துக்கும் முன்ன நிற்கணும்னு, அப்போ அவ முடிவு கேட்டு செய்யணும்னு அவனுக்கு தெரியாதா," என்று அன்னையிடம் வார்த்தை விட்டதில், அவளின் பக்கத்தில் நின்று இருந்த, தேவகிக்கு அதிர்ச்சி என்றால், அன்புவுக்கு அக்காவை, அடிக்கும் கோவமே வந்து விட்டது .
பெற்ற மகளிடமே, இது போன்ற வார்த்தை கேட்ட அதிர்ச்சியில் சுமதியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது .
இனியா வீட்டினர் யாருக்கும் தெரியா வண்ணம், தேவகி, முதலில் சுதாரித்து," அண்ணி ", என்று சுமதியின் தோலை சேர்த்தணைத்து , பக்கத்தில் அமர வைத்தார் .
"சே என்ன பொண்ணு இவ, இப்படி பேசுறா," என்று தேவகி, அவளை மனதில் வருத்தெடுத்தார் .
விஷாகாவுக்கு, அது எல்லாம் கருத்தில் பட வில்லை , நான் எங்கயோ இறங்கிட்டே போறேன், என்று அதனையே, நினைத்து கொண்டு, ஒரு ஓரத்தில் அங்குள்ள நாற்காலியில் எதிலும் போட்டுக்கொள்ளாமல், அமர்ந்து விட்டாள் .
அன்பு, என்று தேவகி அவனை நடப்புக்கு கொண்டு வந்து, கண்களால், அவனை அமைதியாக இருக்குமாறு , கண்ணசைத்தார் .
அதில் சுயம் பெற்று, அன்னையை, அழைத்து, நடப்புக்கு கொண்டு வந்ததும், அனைவரும் சேலைகளை பார்க்க ஆரம்பித்தனர் .
சுமதியின் மனதில் ஒரு ஓரத்தில் உறுத்தல் இருந்தாலும், விஷா ஏதோ கோவத்தில் பேசி இருப்பாள், என்று அவளை விட்டு கொடுக்க மனம் விரும்பாமல், சேலையில் கவனம் செலுத்தினார் .
ஆனால் , இப்பொழுது, அவரே சபையில் வாய் திறக்க பயம் கொண்டு, விஷாகா மனதில் பதிய வைத்து விட்டாள், அவர் மூலையில் இருக்க வேண்டியவர் என்று, ஆகையால், பேசவே பயந்து, அன்புவிடம் மட்டும் "முதலில் முகுர்த்த சேலை எடுத்து விடலாம்" என்று மிகவும் இறங்கிய குரலில் அன்புவிடம் கேட்டு கொண்டார் .
அவனுக்கு அன்னையை உணர முடிந்தது, அவன் மனதிற்குள் துடித்து விட்டான் .
சத்தியமாக அக்காவே, அன்னையை இது போல் பேசுவாள் என்று அவன் நினைக்கவில்லை .
அங்கு விற்பனையாளரிடம், "அம்மா என்ன சொல்றாங்களோ, அது போல் செய்துடுங்க, அவங்க கேட்குறத முதல் பாருங்க," என்று பணித்து, "அத்தை, அம்மா கூட இருங்க", என்று இந்திராவையும் தேவகியும் கேட்டு கொண்டான் .
"சொல்லுங்க அண்ணி , என்று இந்திரா கேட்டதும், முதல் முகுர்த்த சேலை எடுக்கலாம், அதுக்கு மேல, நம்ம நிச்சய புடவை பார்க்கலாம்," என்றார் .
"உங்க பக்கம் சேலை என்னனு சொல்லுங்க, அண்ணி, இங்க எல்லாமே இருக்கும்" என்று அவர் ஊக்குவிக்கவும், "ஒன்பது கஜத்துல, குங்கும கலர் பட்டு எடுங்க, அதுக்கு தோதா அதே நிறத்துல, ப்ளௌஸ் துணி எடுங்க, மெலிதா தங்க நிற பார்டர் இருந்தா போதும்," என்றார் .
"என்ன முகுர்த்த புடவை, பட்டா, எனக்கு காட்டன்ல, தானே எடுத்தீங்க," என்று அன்னையிடம், அங்கு நாற்காலியில் அமர்ந்த வாக்கிலே, பாய்ந்தாள்.
அதற்கு, சுமதி பதில் கூறும் முன், தேவகி, "நீ எங்க வீடு தானே,உன் மாமனார் வீட்டு பக்கம் தானே முகுர்த்த புடவை எடுக்கணும், நாங்க தானே எடுத்தோம், உனக்கு மறந்து போச்சா , எனக்கும் என் கல்யாணம் அப்போ, உங்க மாமா, காட்டன்ல குங்கும நிற சேலை தான் எடுத்து கொடுத்தார்" .
"அதே உங்க அப்பா, வீட்டு பக்கம், பட்டுல, அந்த நிறத்துல எடுக்கணும், உங்க அம்மாக்கும், அதே பட்டுல,குங்கும நிறத்துல எடுத்து கொடுத்தாங்க, எங்க அப்பா அம்மா."
"எதுல வேணா, நம்ம விருப்பம் இருக்கலாம், ஆனா தாலி, முகுர்த்த சேலை இது எல்லாம், அவங்க அவங்க புகுந்த வீட்டு முறைனு, உனக்கு தெரியாதா," என்று முதல் முறையாக, அவளிடம் முகத்தை காட்டிய மாமியாரை, கண்டு விஷாகா கோவம் கொண்டாள் .
அவளே, அவளின் பொறாமையிலும், ஆணவத்திலும் தனது தரத்தை இறக்குகிறாள், என்று தெரியாமல் போனது தான் கொடுமை .
"எங்களுக்கு, விஷகாவுடன் எந்த சம்மந்தமும் இல்லை," என்பது போன்று, இனியா வீட்டினர், மற்ற சேலையில் கவனத்தை செலுத்தினர் .
அவர்களும், வீட்டினருக்கு தேவையான, புடவை, எடுக்கும் வேலை இருப்பதால், நேரம் செலவழிக்காமல், அவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர் .
அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், அதற்குள், மற்றவர்களுக்கு எடுத்து விடலாம் என்று தீர்மானித்து, அண்ணி, மற்ற ணின்களுக்கும் உங்களுக்கு பாருங்க, இலக்கியா முதல் உனக்கும், உன் மாமியாருக்கு பாரு, அப்பறம், நம்ம வீட்டு, பொண்ணுங்களுக்கு , பாரு .
அவர்களும், இந்திரா கூறியதற்கு ஏற்ப, ஒவ்வொருவரின் பெயரை சொல்லி, பட்டுக்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர் .

அத்துடன், விஷாகாவுடன் பேச்சு முடிந்தது, என்று முகத்தை சாதாரணாமாக வைத்து கொண்டு, "என்ன இலக்கியா, இப்படி சேலையை அடுக்கிட்டு இருக்கே, எல்லாம் நல்லாவும் இருக்கு, யாருக்கு இவ்வளவு," என்று, கேட்டதற்கு, எங்க பக்கம், நிறைய சொந்தம், ஆண்ட்டி ,அத்தை பொண்ணுங்க, மரு மகளுங்க,
அப்பறம், எங்க அம்மா வீட்டு பக்கம், அத்தை , சித்தி, இப்படி எல்லாருக்கும் எடுத்துட்டா, எங்களுக்கு வெளிய அலையற வேலை இருக்காது .
அதுவும் இல்லம்மா, எங்க வீட்டுல, பொண்ணுங்கள கடைசி, எங்க இனியா தான் ,அதான், இந்த கல்யாணத்துக்கு எல்லாருக்கும் துணி எடுத்து கொடுக்க என் தம்பி முடிவு செய்து இருக்கான் , என்று சகுந்தலாவும், தேவகிக்கு பதிலளித்தனர் .
"அது தான் ஒரு பட்ஜெட் போட்டு, இங்க பார்த்துட்டு இருக்கோம்.
இனி பத்திரிக்கை வேலை தான்," என்று பேசிக்கொண்டிருந்தாலும், கைகள் தன் போல் சேலையை எடுத்து வைத்து கொண்டிருந்தார், சகுந்தலா .
"ஹ்ம்ம் நம்ம தான் டைம் வேஸ்ட் பண்றோம் அண்ணி, அங்க பாருங்க," என்று மீண்டும் தேவகி சுமதியை, சுயத்துக்கு அழைத்து வந்து, வேலையில் இறங்கினார் .
அதற்குள், சுமதி கேட்டது போல், முகுர்த்த சேலை வந்ததும், அதனை அங்குள்ள பூஜை அறையின் முன்பு வைத்து விடுமாறு, பணித்து , இனியாவின் நிச்சய சேலையில் தேடல் வேட்டையை தொடங்கினர் .


"என்ன விலைனு சொன்னா நாங்க பார்க்க தோதா இருக்கும்," என்று இந்திரா சொன்னதும், "நீங்க பாருங்க மா, முன்ன பின்ன எடுக்கலாம்," என்று சுமதி மாமியாராக, மாறி, ஜோதியில் கலந்தார் .
"விலை கம்மியா எடுத்தா ரொம்ப நல்லது, என்ற நினைப்பில் சுமதி, (இவ்வளவு ரணகளத்துலயும், மாமியார் கேரக்டர் சட்டுனு வருது பாரு )இந்திரா தயங்கியதும், அங்கு இளங்கோவுடன், பேசிக்கொண்டிருந்த, அன்புவை, தேவகி அழைத்து விட்டார் ."இனி அவன் பார்த்துப்பான்," என்று.
சுமதியும் மகனின் முன் ஏதும் சொல்லி விட முடியாதே, என்று, "விலை சொல்லு பா, அவங்க பார்க்கணும்னு," என்று அந்தர் பல்டி .
"விலையில என்ன இருக்கு அத்தை, பரவாயில்லை, எடுங்க, இனியாவுக்கு என்ன கலர் பிடிக்கும்," என்று அவரிடம் கேட்டதும், இங்கு புசு புசு என்று, கோவம் விஷாகா மட்டும் அல்ல, சுமதிக்கும் ,"ம்க்கும் , அவ இல்லைனா கூட, அவ விருப்பத்துல, தான் எல்லாம்," என்று சலித்து கொண்டார் .
"டேய் முதல விலை சொல்லு டா, அவங்க எடுக்க வசதியா இருக்கும், விலைக்கு ஏற்றது போல் தான், இவங்களும் புடவை எடுத்துட்டு வந்து காட்டுவாங்க," என்று சுமதி கடுப்படித்ததும், "ஓஹ் , இப்படி எல்லாம் இருக்கா," என்று நினைத்து, எழுபதுல இருந்து ஒரு லட்சத்துல பாருங்க அத்தை " என்றான் .
"ஹ்ம்ம் ஐம்பது பவுன் போட்டுட்டு வரவளுக்கு ஒரு லட்சத்துல புடவை, எல்லாம் கால கொடுமை," என்று நினைத்தவாறே, "இந்த கருவாச்சி, எது கட்டினாலும், அப்படியே தான் இருக்க போறா, இதுல லட்சத்துல சேலை எடுத்துட்டா மட்டும், நிறம் மாறிடும் பாரு," என்று நினைத்து கொண்டாள் விஷாகா .
இளங்கோ, அங்கு நடக்கும் கூத்தை, அக்காவுக்கு வாட்சப்பில் தகவலாக கொடுத்து கொண்டிருந்தான் .
சுமதிக்கு ஒரு சேலை, பிடித்து போக, அது எடுத்து காட்டியதும், "புடவை நன்றாக இருந்தாலும், நல்லா இருக்கு அண்ணி, ஆனா ரொம்ப வெய்ட்டா இருக்கு, இனியாக்கும் ரொம்பவே வேர்க்கும், இவ்வளவு வெய்ட்டா உடுத்துனா, அவளுக்கு, கச கசன்னு இருக்கும்" .
"ஏன் மண்டபத்துல, ஏசி இருக்கு தானே," என்று விஷாகா, நக்கலடித்ததில், "ஏசியா இருந்தாலும், கல்யாண பொண்ணுக்கு, இருக்குற டென்ஷன்ல, வேர்க்கமா இருக்குமா," என்று மீண்டும் மாமியாரிடம் இருந்து பதில் வந்ததில், விஷாகா கப்பென்று வாயை மூடி கொண்டாள் .
"என்ன இன்னைக்கு இந்த பொம்பளை ரொம்ப பேசுது, மத்தவங்க என்ன நினைப்பாங்கனு, இல்லாம, வீட்டுக்கு போனதும், எதுலயாவது, சிக்க வைத்து, மாமா கிட்ட நல்ல டோஸ் வாங்க வைக்கணும்," என்று மனதில் கருவி கொண்டு, அங்கிருந்தே, எட்டி பார்த்தாள் .
"அம்மா அவளுக்கு கிரீன் கலர் பிடிக்கும் அதுல பாருங்க, வரலனா கூட, அவளுக்கும் நினைப்பு இங்க இருக்கும், அவளவுக்கு பிடிச்ச நிறத்திலனா, சந்தோஷ படுவா தானே," என்று இலக்கியா கூறியது, அன்பு காதில் தெளிவாக விழுந்தது.
அவன் ஏற்கனவே, அவனின் இனியாவுக்கு ஒரு புடவை தேர்ந்துதெடுத்து விட்டான் .
மற்றவர்கள் என்ன எடுக்கிறார்கள் என்று பாப்போம் என்று நினைத்து அமைதியானான் .
"பச்சை, நிறத்தில் சேலை எடுத்து காண்பிங்க," என்று விற்பனையாளரிடம் சொன்னான் .
அதில் ஒன்று தேர்ந்தெடுத்து, "இது நல்லா இருக்கா , என்று அங்குலரை பார்த்து கேட்டான் .
அனைவருக்கும் பிடித்து இருக்கவே, சம்மதம் தெரிவித்தனர் .
"இது நிச்சயத்துக்கு கட்ட சொல்லுங்க அத்தை," என்றான் .
அவன் அங்கு சேலை பார்த்து கொண்டிருந்ததில், அவன் ஏற்கனவே, மெரூன் நிறத்தில், அங்கங்கு, தங்க நிற ஜரிகையில் பூக்கள் தெளித்தார் போன்று இருந்த புடவை, இனியாவுக்கு நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அதை வாங்கலாம், என்று நினைத்தான் .
ஆனால் , அதற்குள், அவளுக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்றதும், இரண்டு புடவைகளாக, எடுக்க விரும்பினான்.

அவனுக்கு பிடித்ததும், அவளுக்கு பிடித்த நிறமும் இருக்கட்டும் என்று, அவன் எதார்த்தமாக தான் நினைத்தான் .
அங்கும், மாமியார், நாத்தனாரின் நினைப்பு எப்படி இருக்கும் என்று தெரியாமல் போனது மற்றோருக்கு .
இன்னும் ஒரு சேலையான,அவன் விரும்பிய, மெரூன் சேலையை, கொடுத்து, "இதை, வரவேற்புக்கு கட்ட சொல்லுங்க அத்தை" என்றதும், இந்திரா தயங்கினார்,
"இரண்டு எல்லாம் எதுக்கு, என்று எகிறினாள்" விஷாகா .
இரண்டு சேலையின் விளையும் ஒரு லட்சத்துக்குள் தான் வந்தது, இருப்பினும் இரண்டா , என்று இருந்தது, சுமதிக்கு .
"அக்கா நான் போட்ட பட்ஜெட்ல தான் வந்து இருக்கு, இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு," என்று அவள் செய்ய இருக்கும் பிரெச்சனைக்கு, முற்று புள்ளி வைத்தான் .
இந்திராவும், அவங்க சொன்ன கணக்குலா தானே வந்து இருக்கு, என்று நினைத்து, அதன் பிறகே, முழு மனதாக சம்மதம் தெரிவித்தனர் .
சுமதியும் சரி, நல்லா தான் இருக்கு, இரண்டு சேலைய எடுத்து கொடுத்த பெருமையும் இருக்கு, வெளியே சொல்லிக்கலாம், என்று மனதில் நினைத்து , "இந்த சேலைக்கு, ஏற்றது போல், ப்ளௌஸ் துணி, எடுங்க" .
இனியாவின் வேலை முடிந்ததும், முறையாக, மூன்று சேலையும் அந்த விற்பனையாளர், இறைவனை வணங்கி, இந்திராவிடம் கொடுக்க சென்றதும், இந்திரா, சுமதியையும் உடன் அழைத்தார் .
அந்த சிறு நிகழ்வு, அங்குள்ள, தேவகி, அன்பு, ஏன் சுமதிக்கே, மனம் நெகிழ செய்தது .
தேவகியும் சேர்ந்து கொண்டு, மூன்று பெண்களாக, புடவையை வாங்கி கொண்டனர் .
"இரண்டு சேலையும் முகுர்த்த சேலையோட, ப்ளௌஸ் மட்டும் உங்க கிட்ட இருக்கட்டும், நீங்க இனியாவை, அவளுக்கு ஏற்றது போல், தைக்க சொல்லுங்க" .
"ஆனா, முகுர்த்த புடவை , நாங்க எடுத்துட்டு போறோம், கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்ன, தாலியோட வெச்சு பூஜை செய்யணும்" என்று இப்பொழுது நன்றாக பேசினார், சுமதி இந்திராவிடம்.
"சரி அண்ணி" என்று இந்திராவும் சம்மதம் தெரிவித்தனர் .
மற்ற சொந்தகளுக்கு ஒரு விலை பட்டியல் விற்பனையாளரிடம் பணித்து, அதற்கேற்றது போல், பட்டுக்களை காட்ட சொன்னார் சுமதி .
பின்பு அதிதிக்கு, அன்னைக்கும் அவனே சேலை தேர்வு செய்து கொடுத்து, இதற்கு மேல், பெண்கள் பார்த்து கொள்ளட்டும், என்று, அன்பு, இளங்கோவுடன் சென்று அமர்ந்தான் .
அங்கு அவன், அவள் அக்காவுடன், வாட்சப்பில் தகவல் கொடுத்து கொண்டிருப்பது தெரிந்ததும், "டேய், லைவ் டெலிகாஸ்ட்டா," என்று அவனை கிண்டலடித்து, அவனிடம் இளங்கோவின் தொலை பேசியை கேட்டான் .
இல்லை மாமா, சும்மா என்று அசடு வழிந்து, அவனும் கொடுத்தான்.
அதில் இரண்டு புடவைகள், எடுத்திருப்பது, அவளுக்கு பிடித்த பச்சை நிறத்தை குறிப்பாக, இளங்கோ பதிவு செய்திருப்பது, என்று இருந்தது .
இறுதியில், "அவருக்கு அமௌன்ட் ஓகே தானே, விலை எதுவும் அதிகம் இல்லையே," என்று அவள் கவலையாக எமோஜி படம் போட்டு அனுப்பி இருந்ததில், அன்பு வானத்தில் பறந்தான் என்றால், மிகையல்ல .
என்னோட, செலவு பற்றி அக்கறையா, என்று வியந்து, உடனே, இளங்கோவிடம் தொலை பேசியை கொடுத்து விட்டு, அவனின் வாட்சப்பில் இருந்து, அவளின் எண்ணுக்கு, "என் பொண்டாட்டிக்கு, அவ கேட்டதை வாங்கி தர அளவுக்கு, எனக்கு வருமானம் இருக்கு, அதுனால கவலை படமா, கல்யாண நெருங்க போகுது, அதுல என்ஜோய் பண்ணு டீ பொண்டாட்டி ", என்று அவளின் எண்ணுக்கு அனுப்பி வைத்தான் .
"mr .வம்பு" என்று அவள் பதிவு செய்து வைத்திருந்த எண்ணில் இருந்து முதல் முறையாக, ஒரு மெசேஜ் வந்ததுக்கான ஒலியில், உள்ளம் பட படத்து, அதை பார்த்தாள் .
அவளுக்கு, இளங்கோ போன் இவர் கையில் , இவர் தான் பார்த்து இருக்காரா, என்று கோவம் கொண்டாலும், அவன் அனுப்பியா, மெசேஜ் , அவள் உள்ளம் வரை ஆழமாக சென்று இனித்தது .
"பொண்டாட்டியாம்ல , எங்க வீட்டு ஆளுங்க முன்ன சொல்லி இருக்கனும், ஒரே கிளாசே எடுத்து இருப்பாங்க," என்று தனக்குள் சிரித்து கொண்டாள் .
அவள் படித்ததற்கான அறிகுறி, தெரிந்தும், அவளிடம் இருந்து, எந்த தகவலும் வர வில்லை, என்றதும், இளங்கோவும் அதற்கு மேல், யோசிக்காமல், அடுத்த வேலையை பார்க்க சென்றான் .
அதன் பின்பு, அனைவருக்கு சேலை எடுத்து முடித்து, சுமதி, விஷாகாவுக்கும், அவரே ஒன்று எடுத்து விட்டார் , அதற்கான தொகை அன்பு கொடுத்து விட்டான் .
இளங்கோவும், அவர்கள் வீட்டினருக்கான, தொகையை மோகன் கொடுத்து விட்ட கார்டில் இருந்து கொடுத்து விட்டு, ஹோட்டல் சென்று, உணவு உண்டனர் .
பிறகு "இருபத்தி ஒரு நாள் கணக்குல, பிள்ளையார் சிலையை, உங்க வீட்டு அரிசி பானையில் வைத்து விடுங்க, இன்னையில இருந்து மூன்று வாரம் தான் இருக்கு, மாலையே வைத்து விடுங்க," என்று சுமதியும் நினைவு படுத்தினார் .
தனது, அன்னை இப்பொழுது தான், அவனின் திருமண வேலையில் முழுதாக இறங்கி உள்ளார், என்று மகிழ்ச்சி அடைந்தான் அன்பு .
அவரவர் இல்லம் நோக்கி சென்றனர் .
விஷாகா யாரிடமும் ஏதும் பேசாமல், அமர்ந்து வந்தாள்,
இங்கு சுமதி ஒரு பக்கம், மகளை பார்த்து கொண்டும், தேவகியுடன் பேசி கொண்டும் வந்துகொண்டிருந்தார் .
திருமண வேலைகள், அடுத்து, பத்திரிக்கை, நலங்கு, என்று அவர்களின் பேச்சு சென்றது .
நேரம் காலம், தாமதிக்காமல், இரு வீட்டாரும், பத்திரிக்கை வேலையில் இறங்கினர் ,
எவ்வளவுக்கு எவ்வளவு, விஷாகா எதிலும் பற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ, வினோத், அன்புவுடன் முழு ஒத்துழைப்பில் இருந்தான் .
அவனும், தேவகியும் சென்று பத்திரிக்கை வைத்து வந்தனர் .
நாதன் இதனால், மனைவி மீது காய்ந்தாலும், தேவகியின் முக வாட்டம் பொறுக்காமல், மனைவியின் விருப்பத்திற்கு விட்டு விட்டார்.
அதில் கணவர் ஏதேனும் திட்டுவாரோ, என்று இருந்த பயமும் சென்று, அண்ணன் மகனுக்கு, அவரே முன் நின்று எல்லாம் செய்தார் .
இதில் செழியன், மனைவிக்கு என்று தனியாக நகை சீட்டு போட்டு இருந்ததில், அந்நேரத்துக்கு , அவனால் முடிந்தது, என்று, ஒரு தாலி சரடு, இரு தங்க வளையல், மற்றும் காதணி, பிறகு, ஒரு ஹாரம், மகளுக்கும், ஒரு காதணி, மெலிதாக செயின் , என்று மனைவிக்கு, இருபது பவுனில் நகை வாங்கி கொடுத்தான் .
இதை பற்றி வீட்டினர், ஏன் இலக்கியாவுக்கும் தெரியாது .
மோகன் வீட்டிலும், இலக்கியாவுக்கு பத்து பவுனில் நகை கொடுக்கும் முடிவில் இருந்தனர் .
ஆகையால், இனியாவுக்கும் அறுபது பவுன் , என்றும், செழியனுக்கு இன்னும் மூன்று பவுனில் ஒரு செயின் வாங்கி , அன்புவுக்கும் பத்து சவரநில் நகை, எடுப்பதாக முடிவெடுத்து, அது போல் , செய்தனர் .
அதில் இரு பெண்ணுக்கும், இரு மாப்பிள்ளைக்கும் ஒரே போல் செய்த திருப்தி அவர்களுக்கு .
செழியன் இவ்வாறு, செய்ததில், மோகன் வீட்டிலும் மகிழ்ச்சி.
அவர்களும், அவளுக்கு, செழியன் வாங்கி கொடுத்தது போக, ஒரு அட்டிகையும் ,டாலர் செயின்னும் வாங்கி கொடுத்தனர் .
முறையாக, குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்து, முதல் பத்திரிக்கை வைத்து, பிறகு இரு சம்மந்திக்கும் பத்திரிக்கை வைத்து, அடுத்து, சொந்தங்கள், என்று இனியாவின் இல்லத்தில், ஒரே திருமண கலாட்டாவாக இருந்தது.
மோகன், வீட்டினர் மேலும் நகை போட்டதில், இலக்கியாவின், மாமியாரும் சரி மருமக மற்றவங்க முன்ன , மதிப்பா நகையோட இருந்தா, நமக்கு தானே, கௌரவம், என்று நினைத்து, அமைதியாக இருந்தார் என்றால், தாரிணி வீட்டினில் வந்து பெரும் பிரச்னை செய்து அதனால், தம்பியிடம் வாங்கி கட்டிக்கொண்டாள் .
இப்படி, செட்டா நகையோட, இருக்காளே, வந்தவளுக்கு இவ்வளவு செய்தா , இங்கயே பொறந்த எனக்கு என்று தம்பியிடம் மல்லுக்கு நின்றாள் தாரிணி .
இப்படி , பல அமுலி துமிலியுடன் , இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரமே, என்ற நிலையில் ரேஷ்மி, அவளின் சுற்றுலா முடித்து, அடுத்த நாள் வீட்டிற்கு வருவதாக, தேவகிக்கு தகவல் வந்தது .
அவளின் வரவை, மகிச்சியுடன் குடும்பத்தினரிடம், பகிர்ந்து கொண்டார் தேவகி .
விஷாகாவுக்கு தான், எங்கேனும் தலைமறைவாக சென்று விடலாமா என்று இருந்தது .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top