அன்பின் இனியா 14 1

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா
அன்பின் இனியா 14
வீட்ற்குள் சென்றதும், மீண்டும் ஒரு முறை அன்னையிடம் வாசலில் ஒருவர் நிற்பதை தெரிவித்து, அறைக்குள் அடுத்த வேலையை பார்ப்பதற்கு சென்று விட்டாள் , இனியா .
இந்திராவும் வாசலுக்கு சென்று, இந்த நேரத்தில் யார் என்ற கேள்வியுடன், பார்த்தால் திகைப்பு மாரா நிலையில் நின்ருந்த அவர்களின் சின்ன மாப்பிளையை கண்டதும் , இப்பொழுது திகைப்பது, இந்திராவின் முறை ஆகிற்று .

இவ வேஷம் பார்த்து பயந்துட்டாரோ, இவ என்ன பேசி வெச்சாலோ தெரியாலேயே , என்று மனதில் நினைத்த வாறு, "மாப்பிள்ளை, வணக்கம், அங்கேயே நின்னுட்டிங்க, வாங்க உள்ள வாங்க," என்று இனிதே வரவேற்று , உள்ளழைத்தார் .
அவனும் சுதாரித்து,அவரின் வரவேற்பை ஏற்று, வீட்டிற்குள் சென்றான் .

"தப்பா எடுத்துக்காதீங்க, இன்னைக்கு லேட்டா கிளம்பினா போதும்ன்னு இன்னும் தயாராகம இருந்தா" .
"நீங்க வருவீங்கன்னு தெரியாது, நாங்க சொல்லல," என்று மகள் தான் கூறியும் இன்னும் குளிக்காமல் , இருப்பதை மறைத்து, இவ்வாறு கூறி சமாளித்தாள் .
அன்புவுக்கு அதில் எல்லாம் கவனம் இல்லை , ஒரு வேலை, வீட்டினரின் ஒப்புதலால் , திருமணத்திற்கு சரி என்றிப்பாளோ.

அவள் தன்னை போட்டோவில் கூட பார்த்து இருக்க மாட்டாள், என்று தெரிந்து கொண்டான் .
தன் அகம் முழுதும் உறைந்து நிற்பவள், தன்னை பற்றி ஏதும் அறிந்து கொள்ளாம இருப்பது, அவனுக்கு பெரும் வேதனையாக இருந்தது .
இவள் கை பற்ற ஊன் உரக்க மின்றி தான் இங்கு தவித்தாள், இவளோ, எதிலும் பற்று இல்லாமல், இவளோ , தன்னை யார் என்றே தெரியாமல் இருக்கிறாளே, என்று, உள்ளுக்குள், பூகம்பம் வெடிக்கும் சீற்றத்துடன் இருந்தான் .

இவளே சிந்தை முழுதும் வீற்றிருக்கிறாள் ,ஆனால், தன்னை புகைப்படத்தில் கூட காணாமல் இருக்கிறாளே, அவளுக்கு தன்னை பற்றி கற்பனை ஒன்றுமே இல்லையா, என்று நினைத்து கொண்டே இருந்ததில், இந்திரா, அவன் வீட்டினரை, பற்றி நலம் விசாரித்ததையோ , ஏதும் அவ செவிக்கு எட்டவில்லை .


இவர் என்ன இப்படியே இருக்கிறார், என்று இந்திரா இரண்டு முறை அழைத்ததற்கு பிறகே, அவன் அவள் பக்கம் பார்வை பதித்து , இனியாக்கு , இந்த மேரேஜ்ல , சம்மதம் தானே, என்று கேட்டான் .
இந்திராவுக்கு திக்க என்று இருந்தது.
இவ என்ன குழப்பி வெச்சாலோ தெரியலேயே , ஏற்கனவே அர மனச சரி சொன்னா , இன்னும் வேலைக்கு போகணும் குதிச்சிட்டு இருந்தா, இவரை பார்த்ததும் ஏதாவது உளறிட்டாளா , ஆனா போட்டோ கூட பார்கலேயே, அதற்குள், இந்திராவின் பயம் எங்கெங்கோ , விசா இல்லாமலே , உலகம் சுற்றி விட்டு, அன்பு தன்னையே கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து,

"அப்படியெல்லாம் இல்லை மாப்பிளை, அவ விருப்பம் இல்லாம, அவங்க அப்பா, எதுவும் செய்ய மாட்டாரு," என்று அவன் மனதில் பாலை வாற்றினாள் .
ஆனாலும், அவனுக்கு இன்னும் தெளிவு கிடைக்க , "இல்லை அத்தை, அவங்க தான் என்னை ரிஸீவ் பண்ணாங்க, நான் யாருனு அவங்களுக்கு தெரியல, அதான் அப்படி கேட்டேன்," என்று அவள் தன்னை அண்ணா என்று அழைத்தது, ஏதோ தமிழ் வார்த்தைகளில் இருக்க கூடாத , ஒன்று என்பது போன்று, அதை கூற மறுத்து, இப்படி கேள்வி கேட்டான் .

இது தானா என்று ஆசுவாசம் அடைந்த இந்திரா, அவள் அண்ணா என்று அழைத்து, மற்றவர்களுக்கு தெரியாதே, யாரோ என்று கத்தி அழைத்ததை மட்டும் நினைவில் கருதி ,
"இல்லை மாப்பிளை, அவளுக்கு அவங்க அப்பா, செழியன் மாப்பிளை, எது சொன்னாலும் வேத வாக்கு, அவளுக்கு நல்லது தான் செய்வாங்கனு நம்பிக்கை, எங்களை மீறி எங்க பொண்ணு இது வரைக்கும் நடந்தது இல்லை," என்று முகத்தில் பெருமை பூசி கூறினார் , அவனுக்கு தான் அங்கு ரத்தம் கொதித்து கொண்டிருப்பது தெரியாமல் .

"அதான் உங்க போட்டோ கூட, பார்க்காம சம்மதம் சொல்லிட்டா , நீங்களும் பூ வைக்கும் போது வரல, அதான் யாருனு தெரியல, யாரோ வந்து இருக்காங்கனு சொல்லிட்டா,"என்று அவள் யாரோ, என்று கூறியதற்கு தான் மாப்பிளை, வருந்திகிராரோ, என்று சமாதான படுத்தினார் .

அன்புவுக்கு "நல்ல வெச்சா நம்பிக்கை, அதுக்கு திருமணத்தில் கூடவா," என்று தான் அவனுக்கு ஆயாசமாக இருந்தது .
வந்ததுக்கு, அவ கிட்ட நேருலயே அவ விருப்பம் வாங்கிடணும் , ஆனது ஆகட்டும் என்ற ஒரு முடிவுடன் அன்பு .

இப்பொழுது, அவன் மனம் சமன்பட , நேரம் பிடிக்கவே, "அத்தை, அம்மா, சாமிக்கு காசி துணி கொடுக்க சொன்னாங்க, ஒரு தட்டு குடுங்க, என்று பேச்சை மாற்றி, இந்திரா எடுத்து வந்து கொடுத்த தட்டில், பூ பழம், வெத்தலை பாக்கு, மஞ்சள் குங்குமம், அடங்கிய பொருட்களுடன், காசி துணியும் வைத்து கொடுத்தான் .

அதன் பின், நூல் எடுத்து கொடுத்து அவன் விரல் மோதிர அளவு, இந்திரா பெற்று கொண்டதும், இனிப்பு எடுத்து வர சென்றார் .
இவை அனைத்தும், அறைக்குள் நின்று, கேட்டு கொண்டிருந்த இனியாவுக்கு தான்,

"கடவுளே இவர் தான் மாப்பிளையா , என்று படபடப்பு, பரவசம், அனைத்தும் ஒன்றே வந்து அவளை இம்சித்தது.
"அண்ணனு கூப்பிட்டு வெச்சிட்டேனே, இந்த வம்பு, என்னை வம்புல மாட்டி விடாம, இங்க இருந்து போன நல்லா இருக்கும்" .

"நான் சரியா வேற பார்ககலையே, இந்த அம்மா வேற என்ன டின்னு கட்டுவாங்க , என்ன செய்றது" என்று ஒரே யோசனை .
(ஆமா , நீ பார்க்கணும்னு , கேட்டதும் அப்படியே, உன் முன்னாடி நிக்க வைப்பாங்க பாரு உன் வீட்டுல, என்று நேரம் காலம் தெரியாமல், அவள் மனம் எடுத்துரைத்தது ).

"அவன் இங்க இருந்து போகுறதுக்குள், நான் ரெடி ஆகி ஆபிஸ் எஸ்கேப் ஆனா எந்த சேதாரம் இல்லாம, இருக்கலாம்," என்று அறிவு கூவிய அலாரம் ஒலியில், வேகமாக, வீட்டிற்கு, பின் பக்கம் இருந்த, குலியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் .

"யாருனு தெரியாம, நான் அவனை அண்ணனு கூப்பிட்டதுக்கு தான், அவன் அம்மாவை இவ்வளவு கேள்வி கேட்குறான், அது தெரியாம, நான் யாரோன்னு சொன்னதுக்கு இவங்க அவனை சமாளிச்சிட்டு இருக்காங்க," "நான் அப்படி கூப்பிட்டது இவனை பாதிக்குதா," என்று , தனக்குள்ளே புன்னகைத்து கொண்டாள் .

"என்னவாம், தெறியாத ஆள அப்படி தானே கூப்பிடுவாங்க, அதுக்கு தான் அதிர்ச்சியா பார்த்தான் போல் நான் கையில் துடைப்பம் வெச்சிட்டு இருந்ததாலனு நினைச்சிட்டு இருந்தேன் ," என்று தனக்குள் சிரித்து கொண்டாள் .

"ஐயோ இது என்ன, நான் அவனை சரியா பார்க்காமலே, அவன் எதுக்கு யோசிக்கிறான், என்ன நினைத்து பேசுறான் எல்லாம் சொல்றேன், ச்சே , பாத்ரூம்ல, வந்து அவனை பற்றி யோசிக்கிறேன்," என்று முதல் முறையாக, வெட்கம் ஒரு சிலிர்ப்பு, என்று பெண்ணின் அகம் அவனை பற்றி சுற்றி வந்தது .

ஒரு வழியாக, இந்திரா வற்புறுத்தி கொடுத்த, கேசரியை, ஒரு வாய் மட்டும் உண்டு, அவர் கொடுத்த, காபி , பருகும் நேரம், இனியா ஆபிஸ்க்கு தயாராக புறப்பட்டு, கூடத்தின் மறைவில், நின்று அவள் அன்னைக்கு சமிக்கினை செய்தாள் .

இந்திரா, அந்த பக்கம் பார்வை பதித்து, அவளை முறைக்க முடியாமல், ஒரு தவிப்பில் நிற்பது, இனியாவுக்கு புரியாமல் இருக்குமா என்ன , இருந்தும் தைரியத்துடன் , நான் கிளம்புறேன் , என்று கையில் உள்ள வாட்சை காட்டி, விடை பெற இருந்தாள் .

அன்பு , "அத்தை, இனியா கிட்ட நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் , என்றதும், இனியாவுக்கு திக்கு என்றானது, என்றால், இந்திராவுக்கு, சொல்லவே வேண்டாம் , இது என்ன வீட்டுல இளங்கோவும் இல்லை, அவர் என்ன கண்டிப்பா திட்டுவார், என்ன செய்யறது, என்ற தவிப்புடன் கையை பிசைந்து நின்று கொண்டிருந்தாள்.

மாப்பிளையே, இப்படி நேரா கேட்பாரு, அவரையும் வறுத்த முடியாது, என்று அவளின் யோசனை கண்டு, "நான் அன்னைக்கு வர முடியாத சூழ்நிலை, வேறொரு நாள், வரலாம், என்றால், மாமா, பக்கத்துலயே நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க, பழக்கம் இல்லைனு சொல்லிட்டாரு" .

"இன்னைக்கு கூட, வேற யாராலயும் கொண்டு வந்து கொடுக்க முடியாதுனு தான், அம்மா என்னை அனுப்பி விட்டாங்க, ஆனா, இப்போ அவங்கள நானும் நேர்ல, பார்க்கணும் நினைக்கிறன், அதான் ," என்று அவன் பக்கம் விளக்கத்தை கூறி பதிலுக்கு காத்திருந்தான் .
அவருக்கும், அன்பு கூறிய விளக்கம், ஏற்புடையதாக இருந்தது, சரி அவர் வந்து கேட்ட சொல்லலாம், இரண்டு பேரும் நேர்ல ஒரு முறை பார்த்து பேசுறது அல்லது தான், இந்த காலத்துல இது எல்லாம் பார்த்துட்டு ," என்று நினைத்து,

இந்திராவும் "சரி மாப்பிளை, இங்க இருங்க, நான் அழைச்சிட்டு வரேன்,"என்று இனியாவை ஒரு பார்வை பார்த்தாள் .
இனியாவும் சரி என்ற தலையசைப்புடன், கூடத்திற்கு வந்தாள் .
முதல் முறை நேரில், சந்திக்கும் பரவசம் அன்புவின் முகத்தில், அம்மா என்ன சொல்லுவாங்களோ, நம்ம ஆழாக்கு கேங்குக்கு தெரிஞ்சா அட்வைஸ் பண்ணியே சாகடிப்பாங்க,இப்பொழுது மாப்பிளையே, நேரில் பார்ப்பது, என்று குழப்பம், சங்கடம் எல்லாம் சேர்ந்து, கையை பிசைந்து கொண்டே அவனை எதிர் கொண்டாள் .

முகத்திற்கு எந்த ஒப்பனையும் இன்றி, ஆகாய வண்ண சல்வாரில், ஒரு கையில் மெலிதாக தங்க வளையல், மற்றொரு கையில் வாட்ச் , கழுத்தில் மெலிதான செயின், சிறு ஜிமிக்கி போன்ற அமைப்பில் தோடு, என்று பார்க்க, தேவதை போன்று அவன் கண்ணுக்கு காட்சி அளித்தாள் .

என்ன, சிறிது நேரத்துக்கு முன் கையில் துடைப்பம், இப்பொழுது, கைப்பை .
அப்பொழுது, வேலை களைப்பில், வியர்வை முத்துக்கள், என்றால், இப்பொழுது பதட்டத்தில், முகம் முழுதும் வியர்வை .

அதனை கைய் துண்டால் ஒற்றி கொண்டே, அவனை நேரில் பார்த்தாள் .
அவள் பார்வைக்காக காத்திருந்து, அதற்குள், தன்னவளை ரசித்துக்கொண்டிருந்த, நாயகன், பார்த்ததும் அவளை பார்த்து புன்னகையித்து, "ரிலாக்ஸ்," என்று இயல்பாக கூறினான் .

அவனின் ரிலாக்ஸ் என்ற வார்த்தை அவளை இயல்புக்கு கொண்டு வந்தது .
அப்பொழுது தான் இல்லாத வேலை எல்லாம் இருப்பதாக, பாவ்லா காட்டி கொண்டு, கூடத்திற்கு அருகில் ஒட்டி உள்ள சமயலறையில் ஏதோ பாத்திரத்தை உருட்டி கொண்டு , இங்கு ஒரு செவியை விடுத்திருந்தார் இந்திரா .

முதலில், என்ன பேசுவது என்று தெரியமல் , அவள் முழித்து கொண்டிருக்கும் அழகை, ரசித்து கொண்டே, ஐயோ, இங்க மட்டும் யாருமே, இல்லைனா, அந்த புசு புசு கன்னத்தை அப்படியே பிச்சி இருப்பேன், என்று மனதிலே அவளை ரசித்து கொண்டே, பரபரத்த கைகளை அடக்கும் வழி தெரியாமல், அவன் தலைக்கு பின்னே கை கொடுத்து, சிகையை கோதி கொண்டான் .

அவனின் அச்செயல், பெண்ணின் மனதில், நீங்கா, சித்திரமாக பதிந்து விட்டது .
முதல் முறை அவள் மனதை இடம் பதித்த ஒருவன், தன்னவன், எனக்கானவன் என்ற உரிமையில் அவனின் செயலை, நான் ரசிக்கிறேனா, என்ற கேள்வி, அவளுக்குள் .
மீண்டும் தன்னையே அடக்கி, அவனே பேச்சை தொடர்ந்தான் .

"இப்போ, ரிலாக்ஸ் ஆகிட்டிங்களா , ஓகே நொவ் , உங்கள பார்க்கணும்னு தோணுச்சு , அதான், அத்தை கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்டேன்" .

"நீங்க என்னை போட்டோல கூட பார்க்கல, அதான், என்ன பற்றி தெரியுமா, எல்லாம் சொன்னாங்கலானும் தெரியல, சோ பெட்டெர் , டிரெக்ட்டா பேசிடலாம்னு," என்று, நீ இப்பொழுது, என்னை பாரு, என்பது போன்று அவள் முன்பு நின்றான் .
நல்ல வெண்மை, நிறம், ஆறடி உயரம், அகன்ற நெற்றி, அலையலையான கேசம், தடித்த இதழ், அதில் சிம்மாசனம் இட்டு என்னிடம் என்பது போன்று வீற்றிருக்கும் மீசை.
என்று பார்ப்பதற்கு, ரோமானிய சிற்பம் போன்று இருப்பவனை, பென்னவளுக்கு பிடித்தது

அதிலும் அவனின் வேலை, குடும்ப பொறுப்பு, என்று எடுத்துரைத்தது , குடும்பத்துக்கு இவ்வளவு பொறுப்பாக இருப்பவன், மனைவியை நன்றாகவே, பார்த்து கொள்வான், என்ற, நம்பிக்கை அவனுடன் திருமணம் ஆகாமலே, அவன் மீது ஏற்பட்டது எப்படி என்று அவள் வியக்காமல் இல்லை .
ஒரு பெண்ணுக்கும் ஆணிடம் முதலில், எதிர்பார்ப்பது, பாதுகாப்பு.
தன்னை காப்பான், என்ற நம்பிக்கை .

"இப்போ சொல்லுங்க, உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கா ?"
"வீட்டுல சொல்றது எல்லாம், வேற, என்னை நேரா பார்த்து சொல்லுங்க," என்று அவளின் பதிலுக்கு காத்திருப்பது, அவளுக்கு ஒரு மாதிரி அவஸ்த்தையாக இருந்தது .
வீட்டினில் அம்மா வேறு இருக்கிறார்களே, எப்படி, என்று அவளின் இன்ப அவஸ்த்தையை, கண்டு அவன் ஒரு நிமிடம், தன்னை மறந்து அவளை தூக்கி சென்று விடுவோமோ, என்றே பயந்தான் .
இருந்தும் அவளின் விருப்பம், முக்கியம், என்று, அதே கேள்வியை, மீண்டும் கேட்டான் .

"சொல்லுங்க, இனியா, நம்ம இரண்டு பேரும் தான் சேர்ந்து வாழ போறது, எனக்கு உங்கள ரொம்பவே பிடிச்சி இருக்கு, உங்களுக்கு," என்ற கேள்வி.
தான் அமைதியாக இருந்தால், சரி வராது, என்ற தீர்மானத்தில், நாலா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள் .

அவள் அப்படி செய்ததில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது, இருந்தும் இதழோரத்தில் புன்னகையை அடக்கி, "நீங்க வாய திறந்து சொன்னா தானே, எனக்கு புரியும்," என்று மீண்டும் கேட்டதில் , அவளுக்கு கோவமே வந்து விட்டது .

"டேய் போடா டேய், போடா, எங்க, வீட்டுல, யாருமே, இப்படி கல்யாணத்துக்கு முன்ன பேச வெச்சது இல்லை, நீ இங்க வந்து வித்தை காட்டிட்டு இருக்க, அம்மா வேற இருக்காங்க,"
"இவனை எனக்கு பிடிக்காம தான், எங்க அப்பா எனக்கு கல்யாணம் பேசுனாங்களா , இல்லை இவங்க வீட்டுல வந்து அன்னைக்கு பூ தான் வெச்சிட்டு போனாங்களா."

எப்படி நேரடியா சொல்றது, என்று இனியாவுக்கு கூச்சம் பிடிங்கி தின்றது.
இத்தனைக்கும், இனியாவுக்கு, ஆண் நண்பர்கள் உண்டு தான், அனைவரிடமும், நட்புடன் பழகுவாள்.
ஏதோ முதல் முதலில், ஒரு ஆணிடம் பேசுவது போன்ற தயக்கம், எதற்கு என்று தன்னையே திட்டி கொண்டாள் .

அவர்கள் வீட்டினர் சென்ற பின்பு, அன்பு அவன் குடும்பத்தை எப்படி தங்குகிறான் என்று செழியன் வழி கேள்வி பட்ட, இனியாவுக்கும், அவனை பாராமலே ஒரு பிடித்தம் இருந்தது தான் .

குடும்பத்துக்காக செய்பவன், கண்டிப்பாக தன்னை நன்றாகவே பார்த்து கொள்வான், என்ற கண்மூடி தனமான நம்பிக்கை, அவளுக்கு அன்பு மீது உருவானது .
ஆனால், திடீர் என்று, அவன் அவளின் விருப்பத்தை மதித்து நேரடியாக கேட்டது, அவளின் விருப்பத்துக்கும் மதிப்பளிக்கிறான் என்று புரிந்து கொண்டு , அவன் மீதான விருப்பம், மேலும் பெருகியது .

ஆனால் அதை வெளி காட்ட தெரியாமல், மனதிலே திட்டி அவனை முறைக்க முயன்றாள் .
அதற்குள் , இந்திரா, அவளுக்கு உணவு, எல்லாம் கட்டி முடித்து, "மாப்பிளை தான் கேட்குறாரே ,உன் சம்மதம் சொல்லு மா," என்று சமயலறையில் இருந்ததே அன்னையின் குரலில், அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது .

இந்திராவுக்கும் அவர் செய்யும் அலும்பில், சிரிப்பு வந்து விட்டது , "சிரிக்காம, இருக்காரே, எப்படி இருப்பாரோன்னு," இருந்த பயம் இப்போ போய்டுச்சு .
"முகத்துல எந்த மொழியும் காட்டாம, பேசுறது எல்லாம் ஒரு சாமர்த்தியம்," என்று அவரின் சின்ன மாப்பிளையை மெச்சி கொண்டார் .

"பெரிய மாப்பிளை, பட பட பாட்டாசு, இவரு, சரியான அமுக்கனியா இல்லை இருக்காரு .
குட்டிமா பாடு திண்டாட்டம் தான்" .
"எனக்கு ஓகே , சம்மதம்," என்று ஒரு வழியாக, திக்கி , திணறி, தலை குனிந்து சொல்லி விட்டாள் .

அவன் முகத்தை பார்த்து பேசலாம் என்றால், அவன் கண்களை மேற்கொண்டு சந்திக்க தவிக்கிறது, பாவையின் கண்கள் .
அன்பு சிறகில்லாமல் , வானத்தில் பறந்தான், இனியாவின் சம்மதத்தில் .
"தேங்க்ஸ்," என்று, வெறும் உதட்டு அசைப்பில் அவள் மட்டும் கேட்குமாறு, மிகவும் மெல்லிய குரலில் கூறினான்.
அவளுடன் இருக்கும் நேரம், மனம் முழுதும் மகிழ்ச்சி நிறைத்து இருப்பதாக அன்பு உணர்ந்தான் .
ஆனால், அத்தைக்கும் தன்னால், எந்த பிரெச்சனையும் வர கூடாது, என்று கருதி, பிரிய மனம் இல்லாமல்,

"சரி நான் கிளம்புறேன், நீங்க ஆபிஸ் ரெடி ஆகிட்டிங்களா," அபத்தமாக ஒரு கேள்வி .
"ஹ்ம்ம் ஆமா,"என்றாள் ஒரு வரியில் .

"எப்படி போவீங்க," பேச்சை வளர்க்க வென்றே ,தேவை இல்லாததை உளறி கொண்டிருந்தான் .
"எப்படியோ போறேன், உனக்கு என்ன டா, எங்க அத்தைங்க யாரவது பார்த்தா, உரண்டைய இழுப்பாளுங்க" என்று மனதில் நினைத்து, " இல்லை நாய் வண்டி வரும் அதுல போய்டுவேன், என்று அவளின் ஆபிஸ் கேப்பை எப்பொழுதும் நண்பர்களுடன்,சேர்ந்து பேசும் ஞாபகத்தில் பேசி விட்டு பின்பு நாக்கை கடித்து, "இல்லை ஆபீஸ் கேப்பை, அப்படி தான் நாங்க சொல்லுவோம், என்று சிறிய குரலில் கூறி விட்டு, இந்திரா வந்ததும், அவள் அன்னையின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டாள் .

ஏதோ இது வரை, பள்ளிக்கூட, ஆசிரியர், பிரம்பு கொண்டு மிரட்டியது, போன்றும், அன்னையை கண்ட குழந்தை போல், அவள் அன்னையை பார்த்ததும், கைகளை பிடித்து கொண்டது, அவனுக்கு சுவாரசியமாக இருந்தது .
"அத்தை, நான் கிளப்புறேன், என்று இந்திராவிடமும், இனியாவிடம் தலையசைப்புடன், இருந்து கிளம்பி விட்டான் .

அதன் பிறகு தான் இனியாவுக்கு, மூச்சே விட முடிந்தது என்று கூறலாம்.
ஆபீஸ்ல, உடன் பனி புரியும் ஆண்களுடன், வேலை நிமித்தம் , அவர்களுடன் பேசும் போது இல்லாத படபடப்பு, இப்பொழுது, இவனுடன் உரையாடும் நேரம் மட்டும் ஏன் , என்று ஒன்றும் தெரியாமல், குழப்பத்துடன் , அங்கேயே நின்றிந்தாள் .

இந்திராவுக்கும் அப்பொழுது தான் அப்பட என்று இருந்தது .
"குட்டி மா , மாப்பிளை உன்னை வந்து பார்கலேன்னு ஒரு பக்கம் உறுத்திட்டே இருந்தது .
இப்போ எனக்கு அந்த கவலையும் போச்சு , உன் அத்தை இங்க இல்லை, பெரிய அத்தை வீட்டுக்கு போய் இருக்காங்க".

"அதற்குள்ளே வந்துட்டு போகணும்னு நானும் நினைச்சிட்டே இருந்தேன்," என்று அவருக்கு, பதட்டம் பாதி, மகிழ்ச்சி மீதி என்று, மகளை வேலைக்கு அனுப்பி வைத்தார்.
இனியா அகம் முழுதும், அவனே ஆட்சி செய்தான்.

"எப்படி பேசுறான் பாரு, மிரட்டுறா மாதிரி கேட்குறான்," என்று, அவளின் அகத்தின் மகிழ்ச்சி , முகத்திலும் நிறைந்து, ஏதோ ஒரு மாய உலகத்தில் இருப்பது போன்றே, பேருந்து நிறுத்தம் வரை சென்றாள் , அவளின் நாய் வண்டி என்று மதிப்புடன் அழைக்க படும் கம்பெனி கேப், வருவதற்காக காத்து கிடந்தாள் .

இனியாவின் மகிழ்ச்சி , சகுந்தலாவின், இரண்டாவது மகன் , ஒரு வித குரோதத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.
அத்தை வீட்டில் இல்லை, என்றால், அவரின் தறுதலை மகன், அங்கு இருப்பான், என்று தெரியாமல் போனது பாவம் .

எப்போதும்,அவன் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, இனியா வீட்டையே , அங்கு அவள் எங்கேனும் காட்சி தருவாளா, என்று நோட்டம் விட்டு கொண்டே இருப்பது.
அவள் வேலைக்கு சென்றதும் , ஏதேனும் பெண்ணிடம் கடலை போடுவது, என்று கல்லூரி வாசலில் தவம் இருப்பதே, இந்த வெட்டியின் முக்கிய வேலை .

இன்று, அப்படி பார்க்கும் போது, தான் இனியாவுடன்,அன்பு பேசுவது, அவளின் வெட்கம் கலந்த படபடப்பு, அன்பு இனியாவை சொந்தமாக பார்ப்பது, அவன் கண்களின் மயக்கம், என்று எல்லாம் சேர்ந்து, அவனுக்கு ரத்த கொதிப்பை ஏற்றியது .

இவனும், பல முறை, மறைமுகமாக, அவன் காதலை இனியாவுக்கு கூற முயற்சித்து இருக்கிறான் .
"பேச போனாலே, என்ன அண்ணானு, சொல்லி ஆப் பண்ணிடுவா"
"இவன் கிட்ட மட்டும் இளிக்க இளிக்க பேசிட்டு இருக்கா," என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அந்த வீட்டையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறு வயதில் இருந்து, தன்னிடம் சிக்காமல் நழுவும், இனியாவை எப்படியாவது, கைக்குள் கொண்டு வர வேண்டும், என்று ரமேஷின் (சகுந்தலாவின் இரண்டாவது மகன் ) கண்ணில் ஒரு பழி உணர்வு.
வேலையில் இறங்கியதும், இனியாவுக்கு, அவள் வேலைகள் அவளை பிடித்து கொண்டது .
டிராவெல்ஸ், சென்ற அன்பு, சரனிடம் இருந்து அழைப்பு வந்ததும் , நடந்த அனைத்தும் கூறி முடித்தான் .

அவனிடம் மட்டுமே, அவன் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவான் .

அங்கு சரணுக்கு சிரித்து சிரித்து கண்களில் தண்ணீரே வந்து விட்டது .
"சான்சே இல்லை டா ,சிஸ்டர், செம சேட்டை போல, உனக்கு , கண்ட்ரோல் பண்ணவே நேரம் சரியா இருக்கும்"
"அப்படியே, உனக்கு ஆப்போசிட் அவங்க," என்றான் .

"ஆபிஸ் கேப், நாய் வண்டினு பேரு வெச்சி இருக்காங்க, செம, இது மட்டும் அவங்க கம்பெனிக்கு தெரிஞ்சுது, அவன் தூக்குல தொங்கிடுவான் ".
"வீட்டு வேலை எப்படி போகுது," என்று அடுத்த கேள்விக்கு சரண் .

"ஹ்ம் இடம் பார்த்துட்டேன், இனியா வந்ததுக்கு அப்பறம், அவ டேஸ்ட் கேட்டு கட்டலாம்னு இருக்கேன், இதுக்கே செலவு இழுக்கும் போல".
அவன் எந்த ஏரியாவில் இடம் பார்த்தானோ, அதன் பெயரை சொன்னது, "டேய் என்ன டா, அப்போ, இடத்தோட, வேலையே கோடிக்கு போகுமே, எவ்வளவு தர போற, ஒரு கோடியா, இரண்டு கோடியா," சரண் .
"ஹ்ம்ம் தெரு கோடி," என்று அன்பு கூறியதில் , சரணுக்கு மேலும் சிரிப்பு .

"என்ன டா," அவன் சிரித்து கொண்டே கேட்டதற்கு, "அம்மாக்கு , இந்த ஏரியா விட்டு வர மனசு வர மாட்டிங்குது சரி இருக்குற காசுக்கு, முதல இடத்தை வாங்குவோம்னு முடிவு பண்ணிட்டேன்".
"வீடு கல்யாணத்துக்கு பிறகு பார்க்கலாம்னு, விட்டுட்டேன்" .
"என் கிட்ட பணம் இருக்கு, ப்ளீஸ் நான் தரேன் டா, " என்று சரண் கெஞ்சியும் மறுத்து விட்டு, நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு, அழைப்பை துண்டித்தனர்
அதற்குள், சுமதியிடம் இருந்து, பல அழைப்புகள்.

அங்கு விஷாகா, அவள் அன்னைக்கு, "அங்கு போய் சேர்ந்தானா , என்ன பேசினான் , அவங்க என்ன சொன்னாங்க," என்று அவளின் கடையில் இருந்தே, சுமத்யிடம் அவனுக்கு அழைப்பு விடுக்குமாறு, பல முறை கேட்டு விட்டாள் .
அவளின் கேள்விக்கு பதிலளிக்க, இவரும் அன்புவுக்கு பல முறை அழைத்தும் அவன் சரனுடன் பேசுவதில்,, சுமதியும் சலித்து, "அவன் நம்பர் பிசினு , வருது மா, அவனே பார்த்துட்டு கூப்பிடுவான் ".

"யாரா இருக்கும், அவ கூட தான் பேசிட்டு இருப்பான்," என்று விஷாகா ஏற்றி விட்டதில், சுமதிக்கும் பயம் தொற்றி கொண்டது .
இப்படியாக பல கலாட்டாக்களுடன், திருமணத்திற்கு புடவை எடுக்கும் நாளும் வந்தது .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top