அன்பின் இனியா 13 2

Advertisement

achuma

Well-Known Member
"எதுக்கு டி யோசிக்கிறே, இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு, அத்தைக்கும் நிறைய வேலை இருக்கும், நீ போய் இருந்துட்டு வா, நான் போன வாரம் கூட சொன்னேன் தானே , பசங்கள இங்க அம்மா பார்த்துப்பாங்க, " என்று விடை கொடுத்தான், அவளின் நல்லவன்.

"ஹ்ம்ம், வேற வினையே வேண்டாம், நான் இப்போவே

அங்க போய் இறங்க கூடாதுனு தானே, உங்க அம்மா எல்லா பிளானும் பண்ணிட்டு இருக்காங்க, இதுல பசங்கள வேற விட்டு போனா சுத்தம், அப்படியே பார்த்துட்டு தான் மறு வேலை," என்று மனதில் நொடித்து .

"நீங்க இப்படி பேசிட்டு திரியாம இருந்தீங்கனா, எனக்கு பெட்டரா இருக்கும்," என்று அவன் மீது வல்லென்று விழுந்தாள் .

"என் மேல ஏன் டி பாயற , நான் உனக்கு நல்லது சொன்னாலும் தப்பா போயிடுது, இங்க பிள்ளைகள விட்டுட்டு, போய் அங்க நீ அத்தைக்கு உதவியா இருந்து, பார்த்துக்கோனு தானே சொன்னேன், வேண்டாம்னா சொன்னேன் ".

ஹம்ம சொல்லுவீங்க சொல்வீங்க , சொல்லி தான் பாருங்களேன், அவனிடம் சண்டைக்கு நின்றாள் , வேணாம் டி , நான் இந்த ஆட்டத்துக்கு வரல, எந்த பக்கம் போனாலும் கோல் போட்டா நான் என்ன செய்யறது, அழுதுடுவேன், மீ பாவம் " என்று அவன் கூறிய தினுசில் சிரித்து விட்டாள் .

"மாமாக்கு ஏதாவது பண தேவை இருக்குமான்னு கேட்டு, அவருக்கு போன் போட்டா , வேண்டாம்னு சொல்றாரு".
"நான் கொடுக்குறதால் சங்கோஜ படறாரு போல, நீ உங்க அப்பாவை பேசி சம்மதிக்க வைக்க பாரு, அவரும் ஒரே ஆளா எவ்வளவு தான் பார்ப்பாரு ." என்று அடுத்த பேச்சு அங்கே கணவன் மனைவி இருவருக்கும் .


அவர்களின் நேரம் இது தான், விடிந்ததில் இருந்து பொழுது சாயும் வரை, ஏற்படும் மன காயத்துக்கான , மருந்து இருவரும் ஒருவரில் தேடி , அவர்களின் மன வலியை போக்கி கொள்வர் .
இது அவர்களுக்கான ஸ்வீட் நத்திங்ஸ் .
"இளங்கோவும் இப்போ தான் படிக்கிறான், வேற ."


"அவரே எப்படி சமாளிப்பாருனு, அது வேற, ஒரே யோசனையா இருக்கு, அவரை போர்ஸ் பண்ணவும் முடியல," என்று அவன் மாமனாரிடம் பேசியதை கூறினான் .

இலக்கியாவுக்கு அவள் தந்தை வாங்க மாட்டார், என்று நன்று தெரியும் .
தன் மகள்களுக்கு தானே செலவு செய்யனும் என்ற ஆசை, என்று தந்தை மீது பெருமை ஒரு பக்கமும்,குணமுள்ள கணவன் தனக்கு கிடைத்திருக்கிறான் என்ற கணவன் மீதான கர்வம் ஒரு பக்கம் போட்டி போட, மகிழ்ச்சி பொங்க, கணவனை, தாவி அணைத்து கொண்டாள் .


"என்ன டி , செம்ம போர்ம்ல இருக்க போல , இது தெரியாம, நான் இவ்வளவு நேரம் பேசி டைம் வேஸ்ட் பன்னிட்டேனே," என்று அவளும் அவளை இன்னும் இறுக்கவே,"

"ஐயே, ஆசைய பாரு,போங்க போய் தூங்குங்க," என்று அவனை தள்ளி விட்டு, "அப்பா நானே சொன்னாலும் கேட்க மாட்டாரு , அம்மா வீட்டுக்கு போறத பற்றி அப்பறம் பேசலாம்," என்று மகளின் அருகில் சென்று, சிரித்து கொண்டே, உஷாராக படுத்து கொண்டாள், கணவனின் நோக்கம் புரிந்து .

"கேடி உசுப்பி விட்டுட்டு போய் செட்டில் ஆயிட்டா ," என்று அவளை முடிந்த மட்டிலும் முறைத்து விட்டு, மகன் பக்கம் சென்று அவனும், வேலை களைப்பில் படுத்ததும், உறங்கி போனான்.

நான் எங்க அம்மாவோட பேசா கூடாதா, என்று நினைத்த இலக்கியா , இந்த ஒரு வரமாக, மாமியார் இனி தினமும் அன்னைக்கு போன் பேச வேண்டாம் என்று புதிதாக தடா போடா , அவளுக்கு என்ன டா என்று ஆகியது .

"தினமும் பேசணும் ஒன்னும் இல்லை, வேலை இருந்தா பாரு, இந்த போன் ஒன்னு கையில வெச்சிட்டு இங்க நடக்குறது எல்லாம் சொல்ல வேண்டியது," என்று புலம்பி கொண்டே, அவர் மகள் தாரணியிடம் இருந்து அழைப்பு வரவே, இலக்கியாவை ஒரு பார்வை பார்த்து, அவரின் தொலைபேசியை கையில் எடுத்து , மகள் அழைப்பை ஏற்றார் .

"இவங்க மட்டும் தினமும் பேசலாமா, என்று தொண்டை வரை வந்த கேள்வியை உள்ளுக்குள் அடக்கி மனம் கொந்தளிக்க, தோட்டத்திற்குள் சென்று ஆறுதல் தேடினாள் .

ஒரு அஞ்சு நிமிஷம் தானே பேச போறேன், என்று மனம் முரண்டியது, ஏற்க மறுத்து .
இருந்தும் அடங்கி தானே போகணும் என்று சலிப்புடன், தோட்டத்தை நோக்கி சென்றாள் .


செழிப்பாக வளர்ந்து நிற்கும் மரம் செடிகள், "நான் இருக்கேன், இங்க வந்து இரு," என்று அழைப்பது போன்று அவள் மனதுக்கு பட்டது .

"குழந்தைங்களுக்கு அங்கு ஒத்து வராது, என் பேரன் பேத்தி, அங்க இருக்க கஷ்ட்ட படுவாங்க, ஏசி இல்லை, வந்தா தங்க ரூம் இல்லை," என்று இவ்வாறான காரணங்களை சாமந்தியிடம் அடுக்கி, பேரன் பேத்தியை, இலக்கியாவின் பிறந்த வீட்டிற்கு அனுப்ப அனுமதி மறுக்க பட்டது.

ஆனால், இந்த மூன்று வருடத்தில் இனியா அவள் தந்தைக்கு கை கொடுக்கவே, மாடியில் சகோதரிகள் வந்தால், தங்குவதற்கு என்று இரு அறைகள் கட்டி இருந்தார் .

ஆனால், திருமணத்திற்கு பிறகு, இது வரை தங்கிய நிலை தான் இலக்கியாவுக்கு ஏற்படாமல் போயிற்று .
இப்பொழுது, போன் பேசுவதிலும் கட்டு பாடு, அவளால் இனியும் பொறுக்க முடியுமா என்று, தெரியாமல், தத்தளித்தது, பாவையின் மனம் .


இவை எல்லாம் அவள் தோட்டத்தில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள் .
ஆனால் , பிள்ளைகள், இருவருக்கும் இலக்கியா அவள் பெற்றோரை பற்றி எப்பொழுதும் கூறி கொண்டே இருப்பதால், அவர்களுக்கு, மோகன் இந்திரா என்றால் மிகவும் பிடிக்கும்.


குடும்பத்தில் அமைதி இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே, இலக்கியாவும் சரி அவள் வீட்டினரும் சரி, சம்மந்தி வீட்டினருக்கு மரியாதை கொடுத்து, அமைதியாக செல்கின்றனர் .
அதனை தவராக பயன் படுத்தும் மூடர்களுக்கு, நாம் எவ்வளவு தழைந்து போனாலும், விடிவு பிறக்காது .


இரவில் செழியன் வரும் வரை, தம்பி தங்கையிடம் இருந்து வரும் ஹை ......... பை , மெசேஜே , இலக்கியாவுக்கு புத்துணர்வு என்று கூறலாம் .
அதில் குழந்தைகளும் அவர்களுடன் கலந்து கொள்வர் .
ஆகையால், நேரில் சந்திக்காமல், இருந்தாலும் மனதளவில் அனைவரும் ஒன்றாகவே இருந்தனர் .


எவ்வளவு தூரம் பிரித்து வைத்தாலும் மனம் ஒன்று சேர்ந்தாள் போதும் என்பது தாராணிக்கு யார் புரிய வைப்பது .

அவளின் தூண்டுதலை, இது வரை இலக்கியா , செழியனிடம் கொண்டு செல்லாமல் இருப்பதால், இலக்கியாவுக்கு திண்டாட்டம், தாராணிக்கு கொண்டாட்டம் .

இதுவும் ஒரு நாள் , தெரிய வரும் நேரம் தாரணி நிலை தான் மோசமாகும்.
அவள் , செழியனின் வாழ்க்கையில் செய்த தில்லு முல்லு , இன்னும் அவள் புகுந்த வீட்டினருக்கு தெரியாது .
அது வரை அவள் பிழைத்தாள் .


அதில் ஆறுதல் கிடைத்ததா என்று தெரியாது, ஆனால் மனம் கொஞ்சம் சமன் பட்டது , அங்குள்ள பசுமையை கண்டு .

இவை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டே, மகளின் அருகில் படுத்து யோசித்து கொண்டிருந்தாள் கணவன் புறம் பார்வை சென்று, உறங்கும் அவன் மீது தேங்கியது .
இவர் அன்பு மட்டும் எனக்கு இல்லைனா,நான் எப்படி இருந்து இருப்பேன்னு எனக்கே தெரியாது ,என்று எண்ணாமல் இல்லை .


ஏதேதோ சிந்தனையில் இருந்த இலக்கியாவை, உறக்கம் அழைக்கவே,விடியல் காலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து, "காலையில் எழுந்ததுமே, அம்மாவுக்கு பேசலாம்," என்று உறங்கி போனாள் .(அட தைரியசாலி ).
காலை இந்து மணிக்கே அழைப்பு விடுத்தாள் .


இந்திரா, "என்ன மா இவ்வளவு சீக்கிரமா, நான் பயந்துட்டேன், என்றதும், "தன்னையே நொந்து கொண்ட இலக்கியா , "அம்மா முதல் ரிலாக்ஸ் , இங்க எல்லாரும் நல்ல இருக்கோம்."

"உனக்கு போன் சரியா செய்ய முடியல, அதான், இப்போ , கால் போட்டேன் .
என்ன செய்றே, என்ன சமையல்" .
அவரும் இந்த வாரம் முழுதும் சம்மந்தி அம்மாவின் சில்மிஷத்தை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார் .


என்ன செய்ய முடியும் என்ற பெரு மூச்சுடன், மகளின் கேள்விக்கு விடை அளித்தார் .
"உன் தங்கச்சிக்கு தான் நாக்கு ருசி அதிகமாச்சே , அவளுக்கு பிடிச்ச புலி சாதமும், பீட்ரூட் புட்டும் செய்றேன்"


"அதுலயே ஊற வெச்ச பருப்புலயே, கொஞ்சம் இட்லிக்கு வடகறி செய்யலாம்னு வேலை எல்லாம் பாதில போயிடு இருக்கு ".
"ஐ சூப்பர் , நல்ல தான் இருக்கும் , அப்பா என்ன செய்றாரு , தூங்கிட்டு இருக்காரா ," என்று கேட்டாள் .
"இல்லைம்மா , ஏதோ பைல் எடுத்துத்துட்டு வந்து அதுல வேலை பார்த்துட்டு இருக்காரு , இரு கொடுக்குறேன்".
மோகனிடம் இலக்கியா போன், என்று கொடுத்ததும், வெகு நாட்கள் கழித்து, மகளிடம்,வீட்டினர் நல விசாரிப்பு , திருமண வேலைகள் எது வரை முடிந்து இருக்கிறது , என்று எல்லாம் கூறி முடித்து, இறுதியில் குழந்தைகளை, இந்த விடுமுறையிலாவது, அனுப்பி விடுமாறு கேட்டார் .


ஒரு நிமிடம் இலக்கியாவுக்கு மன அதிர்வு, பெருகிய கேவலை அடக்கி, "கண்டிப்பா இந்த லீவுக்கு பசங்கள அனுப்புறேன் பா" என்று உறுதியுடன் கூறினாள் .

"நானே, எக்ஸாம் முடிந்ததும், சம்மந்தி கிட்ட பேசுறேன், நீ பார்த்துக்க", என்று மனைவியிடம் போன் கொடுத்து விட்டார் .

இது வரை, இந்திரா மட்டுமே அவளிடம் நேரடியாக கேட்டது, எப்பொழுது, மோகன் சம்மந்தியிடம் கேட்டாலும் அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் ஏதேனும் காரணங்களை தட்டி கழிப்பர்.

ஒரு கால கட்டத்தில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, கேட்பதை விட்டு விட்டனர் .
அனால் இப்பொழுது தந்தையே, நேரடியாக கேட்டிருப்பது, அவர் எந்த ஈழவிற்கு ஏங்கி இருப்பார் ,என்று அவளால் உணர முடிந்தது .


இந்திரா, "உங்க அப்பாவுக்கு, தருண் கையில பிடிச்சிட்டு, தர்ஷி குட்டிய தூக்கிட்டு, கடை வீதி எல்லாம் சுத்தணுமா, அவங்க கேட்குறது எல்லாம் வாங்கி கொடுக்கனும்மா, சின்ன பிள்ளையாட்டும் சொல்லிட்டே இருப்பாரு, "என்று அவரும் பேர குழ்நதைகளின், ஆவல் , பற்றி மனதில் உள்ளதை மகளிடம் கூறினார்.

இனியும் அவரின் அன்பை புறக்கணிக்க கூடாது, ஆனது ஆகட்டும் என்று இலக்கியா முடிவெடுத்தாள் .
மீண்டும் சிறிது நேரம் பேசி விட்டு, அவரவர் , காலை பரபரப்பு, அரங்கேறியது .


காலை ஏழு மணியளவில், மோகன், மீண்டும் அன்புவுக்கு அழைத்து, இன்று முக்கியமான மீட்டிங்க இருப்பதாக, வரும் நேரம் தான் இல்லதற்கான காரணத்தை , தெரிவித்து, வேலைக்கு சென்றார் .
இளங்கோ "அவர் வந்த கவனிக்க சொல்லு , சரியா" என்று கூறி வெளியேறினார் மோகன் .


மாப்பிளை வந்தால், இனிப்புக்கு கேசரி செய்யலாம், என்று அதில் இறங்கினார் .
"என்ன மா, நெய் வாசனை தூக்குது என்று முகர்ந்து கொண்டே, இளங்கோ வந்து சேர்ந்தான் .
கல்யாணத்துக்கு முன்ன, பொண்ணு வீட்டுல கை நினைக்க கூடாது ,இல்லைனா டிபன் கொடுத்து இருப்பேன், அதான் ஒரு ஸ்வீட் செய்யலாம்னு, கேசரி செஞ்சிட்டு இருக்கேன், என்று இந்திரா பதிலளித்தார் .


"இங்கயே நின்னு, வாய் கொடுக்காம, இந்த கஞ்சி, நீங்க இரண்டு பேரும் குடிங்க, உங்க அக்கா ரெடியா பாரு" .
அறைக்குள், இளங்கோ அவனுக்கும் இனியாவுக்குமான சத்துமாவு கஞ்சியை எடுத்து கொண்டு சென்றால், அவள் இன்னும் வேலைக்கு தயாராகாமல் நின்று இருந்தாள் .


மகள் வீட்டில் உடுத்தும் சாதாரண நைட் ட்ரெஸில் , பாதி உறக்கத்தில் வந்து கூடத்தில் அமர்ந்ததும் இந்திராவுக்கு பக்கென்றானது .

"ஹே என்ன டி , ரெடியா இருப்பேன்னு பார்த்தா , இன்னும் நீ குளிக்கவே இல்லை" .
என்று அவளை கேட்டதற்கு .


"நேத்து, டிவெலவ் ஹௌர்ஸ் ஜாப் செய்தேன்ல, அதுனால, இன்னும் டூ ஹவர்ஸ் கழிச்சி அங்க போனா போதும்"
"நீ ஏன் இவ்வளோ கேள்வி கேட்குறே," என்று அன்னை மீது பாய்ந்து விட்டு," கஞ்சி குடித்தாள் .


"சரி ஆனா, ரூம்குள்ளேயே இரு, வெளிய வராத, முதல குளி, பத்து மணிக்கு, சின்ன மாப்பிளை வராராம்,உன் அத்தைங்க, நீயும் இருக்கிறதா பார்த்த ஒண்ண நாலா பேசுவாங்க," நடுத்தர வர்கத்தை சேர்ந்தோருக்கு வரும் சாதாரண பயம் .

முதலில் முழித்த இனியா, அன்னை கூறியதும், அமைதி .
அமைதியாக அறைக்குள் சென்று அமர்ந்து விட்டாள் .
"ச்சே இந்த வம்பு , வந்ததுல இருந்து, என் வீட்டுக்குள்ள கூட, எனக்கு நிம்மதி இல்லாம போச்சு.


சும்மா இல்லாமல், அறைக்குள், இருந்த இளங்கோவின் அலமாரியில் இருந்து, எல்லா பொருட்களையும் எடுத்து மெத்தையில் வைத்து, சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் .
ஒன்பது மணி தானே ஆகுது பார்த்துக்கலாம் .
ஒரு நிமிடமும் சும்மா இருக்காமல், எப்பொழுதும் ஏதேனும் வேலை செய்யும் சுறுசுறுப்பானவள் .


அறைக்குள் தானே என்று, விடுமுறையில் அவள் அலங்கோல படுத்தி வைத்திருக்கும் தம்பியின் அலமாரியை ஒழுங்கு படுத்துவதில் ஈடுபடலானாள் .
"டேய், எருமை, உன் செலஃப், மட்டும் ஏன் டா, எப்போ பாரு குப்பையா வெச்சி இருக்கே," என்று அவனை திட்டி கொண்டே, துடைப்பம் எடுத்து தூசி தட்டலானாள் .


இளங்கோ, அவள் இடை வரை இருக்கும் கூந்தலை, அவள் எதிர்பாரா நேரம் நுனி முடியை ஒரு இழு இழுத்து விட்டு ஓடி விடுவான் .
அது போல், அன்றும் அவன் அப்படியே செய்ததில் அவள் கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலியில் அவனை துரத்தி கொண்டு ஓடினாள் .


இளங்கோவை அடிப்பது ஒன்றே குறி என்று ஓடியதில், எதிரில் அன்பு வருவதை, ஓடி கொண்டிருக்கும், இளங்கோவும், துரத்தி கொண்டிருக்கும் இனியாவும் மறந்தனர் .

எதிரில், அன்புவை இடிப்பது போல் ஓடி வந்த , இளங்கோ, யார் என்று பாராமல், "கொஞ்சம் தள்ளுங்க," என்று கூறி, கேட்டிற்கு , வெளியே பறந்து விட்டான் .

நைட் ட்ரெஸ்ஸில், அக்கா வெளியே வர மாட்டாள், என்ற நம்பிக்கை .
அதே நேரத்தில், எதிரில், கண்ணில் கோபத்துடன், பழைய சாயம் போன உடையில் கையில் துடைப்பதுடன் வந்து நிற்கும் இனியாவை சத்தியமாக, அன்பு அப்படி ஒரு கோலத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை.


ஒரு நிமிடம் அதிர்ந்து, பிறகு வரும் சிரிப்பை அடக்கி அவளை பார்த்துக்கொண்டிருந்தான் .

இன்னும் நேரம் ஆகா வில்லையே, யாரோ என்ற நினைப்பில்" வாங்க அண்ணா , உள்ள வாங்க" என்று அழைத்ததில் அன்புவுக்கு தான் உலகம் தட்டாமாலை சுற்றுவது போல் ஆனது .

அவனின் அதிர்ச்சியான முகம் பார்த்து , உடனே சுதாரித்து, கையில் உள்ள துடைப்பத்தை கீழே இறக்கி, "சாரி, தம்பிய அடிக்க" என்று ஏதோ உளறி, "அம்மா யாரோ பார்க்க வந்து இருக்காங்க" என்று கத்தி விட்டு ஒரே ஓட்டமாக அறைக்குள் புகுந்தாள் .

"அவ அண்ணனு சொன்னா , யாரோன்னு சொல்றா, அதுக்கு என்ன அந்த துடைப்பம் வெச்சே என்னை அடிச்சி இருக்கலாம் ," என்று அன்பு .

























 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top