அன்பின் இனியா 13 1

Advertisement

achuma

Well-Known Member
Hi friends
no space i put as two epi
all be safe

:)(y)

அன்று இரவு, செழியன் வீட்டிற்கு வரும் நேரம் இலக்கியா ஏதோ ஒரு குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் .
இரவு பதினோரு மணி ஆகிடும் செழியன் வர .
அவனின் வண்டி சத்தம் கேட்டதும், இலக்கியா கதவு திறந்து, கணவுனுக்கு வழி விட்டு, சமயலறைக்குள் சென்று, அவன் சுத்த படுத்தி வருவதற்குள், அவன் சூடாக தோசை சுட்டு கொண்டிருந்தாள் .
அவன் வந்ததும் அவனுக்கு பரிமாறி, மீண்டு சமையல் அறை சுத்தம் செய்து வந்து அங்கு கூடத்தில் அமர்ந்து விட்டாள் .
செழியனுக்கும், அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் , வீட்டினில் பிரச்னையா ஒன்னும் சொல்லமாட்டாள், என்று அவளை மனதில் அர்ச்சித்து கொண்டே, பெற்றோர் அறைக்கு சென்றான் .
அவன் எப்பொழுதும் போல் , பெற்றோர் அறைக்கு சென்று, அவர்கள் இருவரும் உறங்கியதை பார்த்து விட்டு, மீண்டும் பிள்ளைகள்,படுத்து இருக்கும், அறைக்கு சென்று, தூங்கும் பிள்ளைகளை சிறிது நேரம் ரசித்தான் .
பிள்ளைகளிடம் அதிகம் நேரம் செலவழிக்க முடியாத தன்னிலையை எண்ணி வருந்துவதுண்டு .
வாரத்தில் ஞாயிறு அன்று மட்டும், கடைக்கு பத்து மணிக்கு மேல் கிளம்புவான் .
அதற்குள், அவனுடன் வேலை பார்க்கும் மூவரில் யாரேனும் ஒருவர், கடை திறந்து வேலை பார்ப்பார் .
பிள்ளைகளுடன் செலவழிக்கும், அந்த காலை நேரம் அவனுக்கு சொர்கம் .
அப்பா அப்பா என்று இருவரும், வாரம் முழுதும் நடத்திய லூட்டிகளை, சொல்லி திட்டு வாங்கியும், தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் காட்டி பெருமை படுவதிலும், பொழுது நன்றாக போகும் . .
குடும்பத்துடன், எங்கும் வெளியில் சென்று வர இயலாத நிலையை என்ன என்று நொந்து கொள்வது .
ஹ்ம்ம் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டு, பிள்ளைகளை, அவர்கள் எழும்பா வன்னம் அவர்கள் கன்னம் வருடி விட்டு, போர்வை போர்த்தி, மற்ற கதவு எல்லாம் சாற்றி இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து வாசல் கதவை அடைத்து வந்தான் .
இலக்கியாவின் மடியில் வந்து படுத்து விட்டான்
கணவரின் செயலே, அவளை நினைவுக்கு கொண்டு வந்து, கைகள் தானாக, அவன் சிகையை கோத, அவள் வாய் திறந்தாளில்லை .
"ஏதாவது சொன்னா தானே டி , தெரியும் உம்முனு இருக்க," என்று அவள் கன்னம் பிடித்து கிள்ளவே, அவன் கைகளை தட்டி விட்டு,
"ஒன்னும் இல்லை சும்மா" இலக்கியா சிணுங்கினாள்
அதற்குள், அவனும் கைகள் தட்டி விட்டதில், இன்னும் சுவாரஸ்யம் கூடி, மீண்டும் அவள் கன்னம் கிள்ளவே, அவள் தடுக்க, என்று இருவரும், கைகளை தட்டி கொண்டு, ஒரு கை சண்டை விளையாட்டு, இறுதியில் செழியன் அவள் பின்னங்கழுத்தில், கை கொடுத்து, அவன் அருகில் அவள் முகம் கொண்டு வர செய்து, அவள் இதழை சிறை செய்தான் .
அவளுக்கும் அந்நேரம் அவன் கொடுத்த முத்தம் வேண்டுமா இருந்தது, அவனுக்கு இசைந்து கொடுத்து, கை சண்டை, இதழ் சண்டையில் முடிவடைந்தது .
அவன் முகம் பார்க்க சிவந்து, முகத்தை மூடி கொண்டு, எழுந்து ஓடலானாள் .
அவன் தடுத்து, என்னனு சொல்லு , என்று சிரிப்புடன் கேட்டதில், மீண்டும் மறந்த விஷயம், நினைவுக்கு வரவே, ஒன்னும் இல்லை, "இனியா கல்யாணம் நெருங்குது அதான், என்ன, எப்படினு, அம்மா சமளிக்குறாங்கனு," அதான் என்று மழுப்பலானாள் .
காலையில், தாரணியின் , அழைப்புக்கு பிறகு, மாமியார், கொடுத்த மண்டை கொடைச்சலில் அவள் பொறுமை பறந்து போகும் போல் இருந்தது .
இருந்தும் தன்னை அடக்க எப்படி இதை கையாள்வது என்று சிந்திக்கலானாள் .
கண்டிப்பாக, கணவனிடம் கூறினால், சும்மா இருக்க மாட்டான் , வீட்டில் சண்டை உருவாகும்.
குடும்பத்தில் நடக்கும் சண்டைக்கு, என்றும்,தீர்வு கிடைக்காது,
தீர்வு கிடைக்கா பிரச்னைக்கு எதற்கு, தேவையில்லாத வாக்குவாதங்கள் ,அதற்கு, யாரேனும் பொறுத்து போவது நல்லது ,என்று தான் இத்தனை நாளும் அமைதியாக இருந்தாள் .


கணவனிடம் கூறலாம் என்று ஒரு மனம், கூறினால், உடனே குடும்பத்தாருடன் சண்டை , போடுவான் .
ஏதோ தான், தான் பிரித்து வைத்தது போன்று, மாமியாரும் நாத்தனாரும், அவளுடன் மல்லுக்கு நிற்பர்.
இதில் அவள் நிம்மதி தான் போகும், அது மட்டும் இன்றி, அவள் குடும்பத்தையும் இழுப்பர் . இது எல்லாம் தேவையா, என்று அமைதியாக சென்று விடுவாள் .
செழியனுக்கு எப்பொழுதும் பொறுமை இல்லை, அவன் கோவத்தில் ஏதேனும் பேசி விடுவான் .
இப்பொழுது வரை, அக்காவின் உறவை, தலை முழுகி, அதற்கு இலக்கியாவின் தலையை உருட்டுவது, எந்த வகையில் நியாயம் என்று அவளும் பல முறை வருந்தி இருக்கிறாள் .
அவளும் செழியனிடம், சொந்தத்திற்குள் எதற்கு இந்த கோவம் என்று கேட்டு இருக்கிறாள் .
"அம்மா கொடுத்தா கூட, தாரணிக்கு எங்க போச்சு புத்தி. பணத்தை அப்படியே, அவள் பெயரில் மாதா மாதம் அன்னை கொடுத்தாலும் தம்பி பணம், தனக்கு தேவை இல்லை , அல்லது தன்னிடமாவாது கூறி இருக்கலாம்," என்று அவனின் ஆற்றாமை வெளிப்படும் செழியனிடம் இருந்து .
அந்த அளவுக்கு பணத்தாசை கண்ணை மறைக்கிறது .
இவர்கள் இருவரும் செய்த செயலுக்கு, செழியன் , தாரணியை முழுதே வெறுத்து அவள் உறவை ஒதுக்கினான்.
வீட்டிற்கு வந்தால் மட்டும், கூட பிறந்தவள் என்று அவன் கடமையை செய்வான், அத்தோடு முடிந்தது, உறவு என்ற நிலையில் அவன் .
அதில் செழியனின் அன்னைக்கு வருத்தம் என்றால் , தாரணிக்கு இலக்கியாவின் மீது வஞ்சம் .
ஏதோ அவள் தான் அவனிடம் சொல்லி கொடுத்தது போன்று இருக்கும் அவள் ஏச்சுக்கள் .
முன்பு போல் அவள் கையில் பணம் புழுங்குவதில்லை .
அவளுக்கு எல்லாம் இருக்கிறதென்றாலும் மாமியாரிடம் பெருமைக்கு என்று, அன்னை வீட்டில் கொடுத்தாக, ஏதேனும் ஒன்று பீற்றுவாள் .
ஆனால் இப்பொழுது, தந்தையும் உடல் நலம் சரி இல்லாமல் வேலைக்கு செல்வதில்லை, வீடும் அவன் பெயரில் அவளுக்கான உரிமை இல்லை என்பது போன்று ஒரு எண்ணம் .
இது எல்லாம் சேர்ந்து, இலக்கியாவை அடித்து நொறுக்கும் அளவுக்கு ,தாரணி மனதில் அவள் மீதான வெறுப்பு.
அன்னை வீட்டில் சீராடி விட்டு செல்லும் நேரம், ஏதேனும், அவள் எதிர்பார்த்தாலும், செழியன் என்ன வாங்கி கொடுப்பானானோ , அதை தான் மாமியார் வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய தன் நிலையை நொந்து
கொள்வாள்.
அவனும் வருடத்திற்கு ஒரு முறை என்று, அக்கா, மாமா, இரு பிள்ளைகளுக்கு என்று புத்தாடை, வருடம் நகை என்று அவன் சக்திக்கு செய்வான் .
அது எல்லாம் அவளுக்கு பத்தாது .
அவன் அக்காவை சும்மா ஒன்றும் அனுப்பி விடுவதில்லை .
தாரணி புகுந்த வீடு நல்ல வசதி, ஏதும்எதிர்பார்ப்பதில்லை தான் .
ஆனால் சிலர் மாற்ற முடியாது.
அதன் எதிரொலி, செழியனின் குடும்பத்தை பாதிக்கிறது .
அதன் வெளிப்பாடே, இலக்கியாவை ஏதேனும் பேசி குத்தி காயப்படுத்துவது .
அவள் அமைதியாக சென்று விடுவாள்.
எதற்கும் பதில் கொடுத்து பிரெச்சனையை பெருசாக்க மாட்டாள் , அதில் மேலும் கொந்தளிப்பாள் தாரணி .
இலக்கியா ஏதோ பயந்து அமைதியாக இருப்பதாக, இருவரும் நினைத்து, அவளை மேலும் தூண்டுவர் .
இலக்கியா ஏதேனும் பேசினால், அது அவள் வரை போகாது, அவள் குடும்பத்தையும் பாதிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக அவள் பொறுத்து போகிறாள் .(ஏம்மா , இலக்கியா உனக்கு பொறுமைக்கு அவார்டு கொடுக்கவா போறாங்க?)
அதிலும் முக்கியமாக, மகளின் அன்னையை தான், புகுந்த வீட்டில் முதலில் ஏசுவார்கள்.
ஒரு சமையல் தெரிய வில்லை என்றாலும், "என்ன சொல்லி குடுத்து இருக்காங்க, ஒன்னும் தெரியல," என்பது போன்ற பேச்சுக்கள் தான் முதலில் மருமகளின் வீட்டினரை பற்றி வரும் .
இதுவரை, இந்திரா, இரு மகளுக்கும் சரி, புகுந்த வீட்டில் நற் பெயர் எடுக்க வேண்டும் என்பது போன்ற போதனை தான் .
எந்த கெட்ட எண்ணத்தையும், விதைக்காமல், பூவின் மனதோடு, மகளை வளர்த்து இருக்கிறார் .
ஆனால் இப்பொழுது எல்லாம், இனியா திருமண வேலைகள் ஆரம்பித்ததில் இருந்து, மாமியாரின் புது அவதாரம், அவள் பொறுமையை சோதிக்கிறது .
அவளுக்கு சரியான காரணம் தெரியாமல் இல்லை .
பிள்ளைகளை கூட, தாரணியின் பேச்சை கேட்டு கொண்டு, விடுமுறை தினங்களில் அனுப்புவதில்லை .
"அங்க எல்லாம் அனுப்பதா மா , பாட்டி தாத்தான்னு, லீவு நாளுல, இங்கயே இருந்து பழகட்டும் .
"நானும் பசங்களோட, அங்க லீவ்க்கு வருவேன் இல்லை, செழியா மாதிரி இருக்க கூடாது இல்லை, அத்தைனு அப்போ தான் தெரியும். பசங்களுக்கு .(அடியேய் நீ மட்டும் பசங்களோட வரலாமா , அவ அம்மா வீட்டுக்கு போக கூடாதா .)
"என்னோட இருந்து பசங்க பழகட்டும் , அப்பறம் அங்க போனா, அவங்க மேல பாசம் வந்துடும் ."
"உன் புள்ளையே அங்க நல்லா ஒட்டிக்கிட்டான் , அதான் நான் அவன் கண்ணுக்கு தெரியல , இதுல பசங்களையும் அனுப்பி வைக்காதா .அதான் நல்ல மயக்க தெரிஞ்ச குடும்பம் ஆச்சே ."
"ஏற்கனவே, அவன் சரியா பேசுறது இல்லை, நீ பசங்கள விடுமுறைக்கு அனுப்பிட்டினா, அங்க நல்லா ஓட்டிப்பாங்க ".
"நம்ம ஆகாதவங்களா , போயிடுவோம் ."
"நீ வீட்டுலயே வெச்சிக்கோ, எங்களை யார் பார்த்துக்குறதுனு கேளு , நமக்கு தான் உரிமையும் பாசமும் இருக்குனு பசங்களுக்கு புரிய வை , அவளையும் அனுப்பாத ," என்று அன்னையிடம் போதனையை வழங்கி, இலக்கியா அன்னை வீட்டுக்கு விடுமுறை தினத்தில் கூட செல்லம்மால் பார்த்து கொண்டனர் .
ஆனால், உள்ளுக்குள், தரணிக்கு "என்னை என் தம்பியோட இருந்து பிரிச்சல, உனக்கு மட்டும் இல்லை, உன் பிள்ளைகளுக்கும் , அவங்க தாத்தா பாட்டிய, பிரிகிறேனா இல்லையான்னு பாரு," என்று என்னும் அவ்வளவு குரூரமாக நினைத்து கொண்டாள் .
ஆனால், அன்னை வீட்டுக்கு வந்தாலும் தாரணி ஒன்றும், பிள்ளைகளுடன், அவ்வளவு பாசமாக பழகி விட மாட்டாள் .
அதிலும் செழியன் மகளை வேறு ராசி இல்லாதவள் என்று கூறி, அதுனால், அவள் தந்தை அவளை அடித்தது, அந்த சிறு பெண்ணின் மீது, ஒரு வஞ்சமே என்று கூறலாம் .
இதில் செழியன் வேறு, தன் மகளையே ராசி இல்லாதவள் என்று கூறினாயா, என்று கோவத்தில் மகள் பேரிலே, ஒரு மெக்கானிக் ஷெட் ஆரம்பித்து, இதோ இவ ராசி தான் எங்களுக்கு சோறு போடுது, உனக்கு பொறந்த வீடு சீர் வருது, என்று ஆக்ரோஷமாய் கத்தினானோ,அன்றிலிருந்து, அவள் கெட்ட எண்ணம் அதிகமாகியதே தவிர, தாரணி ஒன்றும் மாரியாதாக இல்லை .
இப்பொழுது வரை சித்திரை தேர்வு முடிந்து வைகாசி மாதம் முழுதும், தாரணி கணவிடமும், மாமியார்
வீட்டினரிடமும்,ஏதேனும் ஒன்று சமாளித்து, அன்னை வீட்டில் இருந்து விடுவாள்.
"நான் வந்து இருக்கேன், நீ எப்படி போக முடியும்?" என்பது போன்று பேசி அவளை, அவள் அன்னை வீட்டுக்கு மாட்டாள் .
ஆனால் இப்பொழுது, இலக்கியாவை விடுவேனா பார் என்பது போல்,
புதிதாக ஒரு பிரெச்சனையை அன்னை மனதில் பதிய வைத்து இருக்கிறாள் .
அதில் இலக்கியாவின் பொறுமை பறந்து, தாராணிக்கு வேதனை வரும் காலம் விரைவில் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top