அன்பின் இனியா 12

Advertisement

achuma

Well-Known Member
Hi friends stay safe
for for ur like n replies
take care all

அன்பின் இனியா 12
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல், வேகமாக நகர்ந்தது .
இளங்கோ அவன் பொது தேர்வை நன்றாக எழுதி இருந்தான் .
இப்பொழுது வீட்டினில் இருந்து கொண்டு, இந்திராவின் ரத்த கொதிப்பை ஏற்றி கொண்டிருக்கிறான் , ஏதேனும் சேட்டைகள் செய்து .

அவனின் முழு நேர பொழுது போக்காக, அவன் ஆழாக்கை வம்பிழுத்து கொண்டிருக்கிறான்.
அந்த பஞ்சாயத்து வேறு இந்திராவுக்கு ஒரு தலை வேதனையாக இருந்தது .
மோகனுக்கு திருமண வேலைகள், நகை எடுப்பது, பத்திரிக்கை மண்டபம் பார்ப்பது என்று நிற்க நேரம் இல்லாமல், சரியாக இருந்தது.

உடன் இளங்கோவின் துணையும் இருக்கவே, அவரால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது .
வீட்டினில் இந்திராவின் மன நிலையை கவனிக்க தவறினர் .
இதோட, பத்து முறையாவது, இந்த இடம் சரிப்பட்டு வருமா, என்று மோகனிடம் கேட்டு அவரும், திட்டி, கெஞ்சி ஒரு வழியாக இந்திராவை தேற்றி இருந்தார் .
ஏனென்றால், இலக்கியாவின் மாமியார், ஏதேனும் குறை சொல்லி கொண்டிருந்தாலும், என்ன என்ன செய்ய வேண்டும், மணவரை சாங்கியங்கள், அது பற்றி விவரித்து கொண்டு, அவர் வீட்டின் பழக்க முறை, அதன் படி பெண் வீட்டில் செய்ய வேண்டியது, என்று ஏதோ ஒன்று, இந்திராவிடம் தொலை பேசியில் தொடர்பில் இருந்தார் .

ஆனால் , இங்கு, சுமதிக்கு இந்த ஒரு மாதத்தில் பல முறை அழைத்தும் அவர் தொடர்பேர்க்கவில்லை .
இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும், தருவாயில், திருமண புடவை, பத்திரிக்கை, மாப்பிளைக்கு செய்ய வேண்டியது, என்று அது பற்றி எல்லாம் பேச வேண்டும்.
இந்திராவுக்கு, இப்படி வேண்டா வெறுப்பாக இருப்பவர், எதற்கு ஒற்று கொண்டாரென்று, ஆற்றாமையாக இருந்தது .

மோகனிடமும், சகுந்தலாவிடமும் கூட புலம்பி தீர்த்தார் .

அவர்கள், "புருஷன் நல்ல பார்த்துக்கிட்டா போதும்,அவங்க இரண்டு பேருக்கு ஒத்து போதானு பாரு," என்று கூறி அவள் வாய் அடைத்து விடுவர் .
ஏனென்றால், எல்லோர் வீட்டிலும் இது நடப்பதுவே.

மாப்பிளை வீட்டிலும், சரி பெண் வீட்டிலும் சரி, யாரேனும், ஏதோ ஒரு விதத்தில் குறை கூறி கொண்டும் மற்றவர்களிடம் ஒதுங்கி கொண்டோ, அல்லது தற்பெருமை, தகுதி என்று பெருமை பேசி கொண்டோ காலம் காலமாக , இருப்பது தான் .
எல்லோரையும் தேற்றி, சம்மதம் பெற வைத்து, திருப்தி பட வைப்பது, திருமணத்தில் சாத்தியம் அல்ல .

மன பெண்ணும், மன மகனும், ஒருவருக்கு ஒருவர், ஒற்றுமையாக இருந்தால், போதும் அது தானே இயல்பு, என்பது போல் , மோகனும்,சகுந்தலாவும் , இந்திரா வாய் அடைத்து விடுவார் .

ஆனால், இந்த காலத்தில் இது எல்லாம் பார்க்க நன்றாகவா இருக்கிறது, என்பது இந்திராவின் கேள்வி.
அவர் மனதில் இருப்பதை வெளி படியாக கூறவும் செய்தார் .

சம்மந்தி உறவில் எதற்கு "தான் மாப்பிளை வீடு, இப்படி தான் இருப்பேன்," என்று வீம்பாக திரிவது .
தனக்கு கிடைக்கும் இரு சம்மந்தியும் இப்படி தான் இருக்க வேண்டுமா என்று நொந்து கொண்டார் .
நன்றாக பழகினால் தான் என்ன .

"எனக்கு என் பிறந்த வீட்டில் கூறி அனுப்பியது, மாப்பிளை நல்ல பார்த்துக்குறாரா, அது போதும் , எல்லோரையும் அனு சரித்து போ.
தானும் , இலக்கியாவுக்கு அதேயே வழி மொழிந்து அனுப்பியதால் வந்த விளைவு, இன்று வரை , அவளும் மாமியாருக்கு பயந்து, ஒரு சுமூகமான சம்மந்தி உறவு இல்லாமல், இந்த பத்து வருடமும் காலம் கழித்தாகிற்று

"நான் என்ன அவங்க சொத்து சுகத்தையா கேட்குறேன், பத்து நிமிஷம் பொண்ணு கூட நிம்மதியா பேச முடியல," என்று சலித்து கொண்டார் .
"இப்பொழுது இனியாவுக்கும் இதே தான் சொல்லி அனுப்பனுமா.
மாப்பிளை நல்ல பார்த்துக்குறாரா, நீ அட்ஜஸ்ட் பண்ணி இரு.
ஆனால் இலக்கியா போல் இனியா இருப்பாளா?"
"இனியா அட்ஜஸ்ட் பண்ணுவாளா ?
"கண்டிப்பா கேட்க மாட்டா அண்ணி . அவளுக்கு அவங்க ஏதாவது சொன்னா , திருப்பி கேட்பா , அதான் பயம் , எனக்கு ."
"இப்போ எல்லாம், நம்ம எவ்வளவு கேள்வி படுறோம், நிறைய இடத்துல, மாமியார் மருமகள் எல்லாம் நல்ல பிரெண்டா , இருக்காங்க, இனியா பிரெண்ட்ஸ் , எல்லாம் சொல்லி நானும் கேள்வி பட்டு இருக்கேன்."
ஏன் நீங்க கூட, காயத்திரி கிட்ட நல்ல தானே பழகுறீங்க, என்றதும் சகுந்தலாவுக்கு, அவர் இரண்டாவது மகனுக்கு இனியாவை கேட்க ஆசை தான் .
(வேலை மட்டும் இல்லை, முக்கியமாக, நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும், அவனோ ஸ்ட்ரீட் ரோமியோவாக சுற்றி கொண்டிருப்பான் .
அவன் வீட்டினரை தவிர, மற்ற எல்லோருக்கும் அவனை பற்றி தெரியும் .
சகுந்தலாவுக்கு அவர் இளைய மகன் பற்றி ஏதும் தெரியாத ஒரு அப்பாவி தாய் .)
ஒரு வேலைக்கும் போகாம இருந்தா , எந்த உரிமைல என் தம்பி கிட்ட கேட்க முடியும் .
ஆனால் பெரியவன் அளவு, அவர் சின்ன மகன் பொறுப்பு இல்லை , என்ன செய்வது,"
என்று ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டு , "காயத்திரி, என் பெரிய அண்ணன், பொண்ணுன்னு நான் நினைச்சி இருக்கலாம், அதுனால,எனக்கு பெருசா எதுவும் தெரியல".
நானே வெளிய எடுத்து இருந்தா , எப்படியோ."

"ஏன் , என் பொண்ணு மாமியார் மட்டும் சும்மாவா, இப்போ தான் கொஞ்சம் அடங்கி இருக்காங்க, அவளை ஏதாவது ஒன்னும் முன்ன சொல்லிட்டு தானே இருந்தாங்க, என்கிட்டே மட்டும் நல்லவா பழகுனாங்க," என்று எல்லோரும் இப்படி தான் என்று அவரை சாதாரமாக்க முயற்சி செய்தார் .
இந்திராவின் குழப்பம் தான் நீங்கியதாக இல்லை .

"இதோ இது தான் அண்ணி , நானும் கேட்குறேன், எனக்கு விடை தெரியல, ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க தான், அட்ஜஸ்ட் செய்துக்கணும் , ஏன் ஏதாவது ஒன்னு சொல்லணும் ".

அவளும் அவங்க பொண்ணு மாதிரி தானே, நல்லா பார்த்துக்கலாம் இல்லை .
"நாம நம்ம பொண்ணுக்கு எல்லா வீட்டு வேலையில இருந்து, பொறுப்பா எப்படி இருக்கனும்னு சொல்லி தானே வளர்த்து இருக்கோம்" .

"எதுக்கு எதாவது ஒண்ணுனு குறை சொல்லணும் , என்று எதிர் கேள்வி கேட்டார் .
மோகனுக்கும், "இவ எல்லாரையும் அனுசரிச்சு தானே போனா , இப்போ என்ன ஆச்சு," என்று தான் குழப்பத்தில் பார்த்து கொண்டிருந்தார் .

"இந்திரா , என்ன நீ புதுசா இப்படி யோசிக்கிற , போன் போட்டு பேசு , வேற எதையும் நினைக்காத ,
நீ என்ன டா, இங்கயே நிக்கிற , வேலைக்கு போகாம இருக்கே, என்று மோகனை பார்த்த கேட்டார் .

"இவ இப்படி இருந்தா எப்படி கா, நானும், காலையில இருந்து, இவளுக்கு சொல்லிட்டேன் , அந்த வீட்டுல அவங்க அப்பாவும் இல்லாம , மாப்பிளை தான் எல்லாம் பார்க்கணும், வினோத்தும் இங்க நடக்குற வேலை எல்லாம் கேட்டுட்டு தான் இருக்காரு .
அவங்க இரண்டு பேரும் வீட்டுல சொல்லாமயா இருப்பாங்க , போன் ஏடுக்கலனு காலையில இருந்து என்னை படுத்தி எடுக்குறா , நான் அங்க போய் வேலை செய்த மாதிரி தான்." என்று சலிப்புடன் ஒலித்தது அவர் குரல் .

"நீ ஏன் எல்லாம் குழப்பிட்டு இருக்கியோ,"
ஆனால் , ஒரு அன்னையாக, அவரின் தவிப்பு, அங்கு புரியாமல் இல்லை, அனால் வழி கிடைக்கா பாதைக்கு, மற்றவர்களால் மட்டும் எப்படி வழி கூற முடியும், அப்படியே தேங்கவும் முடியாதே .

அந்த பாதையை கடந்தால் மட்டுமே, வாழ்க்கையை கடக்க முடியும் .
அதை மலர் பாதையாக மாற்றுவது நம் கையில் மட்டும் தான் உண்டு .

இனியா ஆபீஸ்ல் , வேலை பார்க்கும் அளவு திறமை, குடும்ப சூட்சமம் கையாளும் திறன் இல்லை .
சில நேரத்தில் கோவம் வந்து விடும். ஏதேனும் பட்டுனு பேசிட்டா , அந்த பயம் இந்திராவுக்கு .
இன்னும் அவள் குழப்பம் அடைந்த முகம் கண்டு, சகுந்தலா, "விடு, இந்திரா , சம்மந்தினா , அப்படி தான் இருப்பாங்க".
நம்ம பொண்ணு கொடுக்குறோம், கொஞ்சம் தழைந்து தான் போகணும்.

மோகன் , அந்த வீட்டுல பெண்கள் கிட்ட என்ன பேசுறதுனு, மாப்பிள்ளைக்கும், அவங்க அக்கா வீட்டு காரனுக்கு , பேசிட்டு தானே இருக்கான்.

இங்க எந்த அளவுல வேலை போயிட்டு இருக்குனு, சொல்றான் தானே .
நீயும் அவங்க அம்மாவுக்கு திருப்பி அழைச்சி பாரு, கல்யாண் துணி விஷயம், சீர் எல்லாம் நீ தானே பேசணும், இது எல்லாம் பார்க்காத மா , என்று அவளை தேற்றினார்.

ஒரு வாறு மனம் தெளிந்து, இந்திரா தலையசைத்து கணவனுக்கு விடை கொடுத்தார் .
மோகன் சென்றதும் அறையில் அனைத்தும் கேட்டு கொண்டிருந்த இளங்கோ திடீர் என்று அன்னை, அத்தை முன் நின்று,

"எனக்கு ஒரு சந்தேகம்,"
" என்ன டா"
என்ற பார்வை இருவரும்,
"
இந்த வீட்டுல யார், அப்படி இருப்பீங்க,"
" யார் டா, என்ன?"
என்று ஒவ்வொருவரும் கேட்டதும் .

"அதான் சொன்னீங்களே, மாப்பிளை வீடுன்னா யாரவது ஏதாவது ஒன்னு சொல்லிட்டு இருப்பாங்க," என்று அவன் கையை நீட்டி முழக்கி பேசியதில், இருவருக்கும் சிரிப்பு வந்தது

"நம்ம பொண்ணு வீடு தானே, என்று பதிலில், நான் ஒரு பையன் உனக்கு இருக்கேன் தெரியுமா மம்மி ,"
"வர என் பொண்டாட்டி கிட்ட, யார் எப்படி, இல்லை இந்த மாதிரி லூசு யாரவது, இந்த வீட்டுல இருப்பீங்கனு சொன்னா , நான் இப்போவே அவங்க உறவை கேன்சல் பண்ணிடுவேன் அதான்," என்று படு சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு கேட்டான் .

"அட பாவி" என்று தான் பார்த்தனர் இருவரும் .
இந்திராவுக்கு கோவம் வந்து, அவன் முதுகில் ஒன்று கொடுத்து விட்டு சென்றார் .
சகுந்தலாவும் "உனக்கு எல்லாம் விளையாட்டு தான் போடா, என்று சிரிப்புடன் அவர் இல்லம் சென்றார் .

"என்னது விளையாட்டா , என்ன இப்படி சிரிப்பாவே நெனச்சிட்டு, எனக்கு கல்யாணம் செய்யாமா போய்டுவாங்க போலயே," என்று தனியாக புலம்பினான் .

அன்புவுக்கு, மோகன் வழி, சுமதி இந்திராவின், அழைப்பை எடுப்பதில்லை, என்று தெரியும், அவனும் மற்றவரிடமோ, ஏதும் வீட்டில் பகிரவில்லை .
அவரும் ஒன்று தவறாக சித்தரிக்கவில்லை , சுமதிக்கு ஏதேனும் வேலையா , நேரம் கிடைக்கும் போது கூறினால், இந்திராவே, அழைப்பதாக தான் கூறினார் .
ஆனால், அன்புவுக்கா தெரியாது, இருபத்தி நான்கு மணி நேரமும், கையில் போனுடன் சுற்றும் அன்னை,இந்திராவின், அழைப்பை மட்டும் தவிர்க்க காரணம், உபயம் விஷாகா
என்று அறிந்து கொண்டான் .

அக்காவின் ஆளுமை, என் வீட்டில் இனி எதிரொலித்தால், அது இனி வரும் காலத்துக்கு, நிம்மதியிருக்காது என்று தெரிந்து கொண்டான் .
அன்னை என்ன தான் செய்கிறார் பாப்போம் , என்று அமைதி காத்தான் .
ம், இனி அவன் எதையும் விடுவதாக இல்லை , பார்த்து விடலாம் , என்று தான் விஷாகாவை விட்டு பிடித்தான் .

வினோத்தையும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டான் .
அவனுக்கு மலைப்பாக தான் இருந்தது, மாமனார், அவர் இதுவரை, செய்து இருக்கும் திருமண ஏற்பாடுகளை நினைத்து.
முன்பு விஷாகாவுக்கு அவன் தந்தையே அனைத்தும் முன் நின்று, செய்தார்.
இவனுக்கு ஏவிய வேலைகள் மட்டும் இவன் செய்தான் .
அதன் பிறகு புகுந்த வீட்டு சீர், அன்னை கேட்கும் பணம் என்ன ஏது என்று கேட்காமல், கையில் கொடுத்து விடுவான் .

ஆனால் , இப்பொழுது, மோகன் கூறியதில் இவ்வளவா , ஆஹா , என்று தான் நினைத்தான் .
அவனும், தன் பங்கு என்று பணம் கொடுப்பதாக நினைத்து, இருவரும் சேர்ந்து செலவை ஏற்றுக்கொள்ளலாம் என்று கேட்டிருந்தான் .

அது முறை இல்லை, பெண் வீட்டு கல்யாணம், கேட்டதே போதும், என்று மறுத்து விட்டார் மோகன் .
நாத்தனாரின் போதனையில் இந்திரா அன்று மீண்டும் சுமதிக்கு அழைத்திருந்தார் , சுத்தம் வழக்கம் போல் சுமதி அழைப்பை ஏற்காமல், அதுவே அடித்து ஓயட்டும் என்று விட்டு விட்டார் .

விஷாகா அறிவுரையின் பேரில், "அவங்க பேசும் போதெல்லாம், போன் எடுத்து பேசிட்டு இருக்காதா, எந்த முறையும் சொல்லாத , சரியா கெத்தாவே, இரு".
"நீ பொம்பளை, உன்னை தனியா சமாளிச்சிடலாம்னு, அப்பறம் தலையில ஏறி மிதிப்பாங்க" .
"ஏன் அவங்க அப்பா , பேசமாட்டாராமா, நீ பையனோட அம்மானு, தெரியனும், அவங்களுக்கு .
அவரும் பணிந்து வரட்டும், நீ கண்டுக்காதா சரியா," என்று இவ்வாறான போதனைகள் .
அன்பு அப்பொழுது தான் வேலை முடித்து, வீட்டிற்குள் வரும் நேரம், இனி தாமதிக்க வேண்டாம், இந்திராவின் அழைப்பை தவிர்த்து, "என்ன அன்பு, உன் மாமியார் வீட்டுல இருந்து ஒரு போன் கூட வரல, இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, எதுவும் சொல்லாமையே, இருந்தா, எப்படி".

"என்ன தான் செய்ய போறாங்களாம், கல்யாண நாள் அன்னைக்கி, ஏதோ ஒரு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வந்து நிக்க வெச்சிட போறாங்க," படு எகத்தாளமாக வந்தது அன்னையின் குரல் .
அன்பு அனைத்தும் பொறுமையாக கேட்டான் .

"என்ன மா, அவங்க சொல்றதுக்கு என்ன தான் இருக்கு, நம்ம என்ன செய்யணும் நிச்சய புடவை, முகுர்த்த புடவை, தாலி, மெட்டி இது மட்டும் தானே நம்ம செலவு ".
"அப்படியே நம்ம கும்பலை ஒரு வேன்ல கூட்டிட்டு போயிட்டு, அங்க போய் பொண்ணுக்கு தாலி கட்டி , வரும்போது, அவங்க குடுக்குற சீர் எல்லாத்தையும் ஓசில அள்ளிட்டு வரணும் , அவ்வளவு தானே" .
"சாப்பாடும் ஓசில வேற"
"அவங்க தானே செய்ய போறாங்க, நம்ம ஓசி கூட்டம் தானே, இதுல கேட்க என்ன இருக்கு," அன்னையை விட எகத்தாளமாக கேட்டான் மகன் .

"என்ன இவன் இப்படி அசிங்க படுத்துறான் , எங்க இருந்து இப்படி பேச கத்துக்கிட்டான் " .
"அவங்க ஒரு மரியாதை தரல, சுமதிக்கு தான் தெரியாதே, மோகன் அனைத்தும் அவனிடம் கூறுகிறார் என்று, ஆகையால், "தனக்கு எதுவும் கூறுவதில்லை, மதிப்பளிப்பதில்லை, என்று திரித்து கதை கட்டலாம் என்றால் , மகன் இப்படி ஒரு கோணத்தில் பதில் தருகிறான்," என்று ஜெட் வேகத்தில் அவர் சிந்தனை பறந்தது .
எது சொன்னாலும் பொறுமையாக கேட்கும் மகன் , ஏன் இப்படி மாறினான் , சுமதிக்கு தவிப்போ தவிப்பு , கை மீறி போகும் நிலை .

என்ன மா , யோசிக்கிறீங்க முகத்தில், எந்த பாவமும் இல்லாதா கேள்வி, கண்கள் மட்டும் அவன் அன்னையை துளைத்தது .
"இவன் ஒருத்தன், மூஞ்சிய அப்படியே வெச்சிட்டு இருக்கான், கண்ண பாரு, முறைக்கிறா மாதிரியே, ஒன்னும் புரிஞ்சிக்க முடியல,"
அவன் பார்வையை தவிர்த்து, "இல்ல பா, ஒரு போன் பண்ணலாம்ல , அதான்", என்று சிறிய குரலில் .

மறந்துட்டேன் மா , அத்தை உங்களுக்கு போன் பன்னங்களாம், நீங்க எடுக்கலையாமே, மாமா எனக்கு சொன்னாரு , என்று மரத்தை மறைத்து கூறினான்.
சுமதி, சுதாரித்தார், உடனே, "அப்படியா பா சரி சரி நான் பேசுறேன் ," என்று நழுவ பார்த்தார் .

அதற்குள் மீண்டும் ஒரு முறை இந்தராவிடம் இருந்து அழைப்பு ஒலித்தது .
வேறு வழியில்லாமல், மகனே போன் எடுத்து கொடுத்ததும், கையில் எடுத்த "ஹலோ" என்றார் .

வணக்கம் அண்ணி, நான் இந்திரா பேசுறேன், எப்படி இருக்கீங்க? பணிவுடன் வந்து ஒலித்தது மகள் பெற்ற அன்னையின் குரல்

"ஹ்ம்ம் இருக்கோம்," வல்லென்று ஒலித்த மகன் பெற்ற அன்னையின் குரலில் , கோவம் வந்தாலும் , அமைதி காத்து

"இங்க வெளி வேலை எல்லாம், அவர் செய்றாரு, கூடவே இளங்கோவும் அவரோடு போயிட்டு வரவே நேரம் சரியாக இருக்கு ,"

"அதான் நானே மற்ற விஷயம் எல்லாம் பேசிடலாம்னு, உங்களுக்கு அழைச்சேன்" .
இத்துணை நாள்,நான் அழைத்தும் ஏன் என் அழைப்பை தவிர்த்து, வீட்டில் என்ன கிழிச்சே என்று கேட்காமல், இப்பொழுது அழைத்ததற்கான காரணம் மட்டும் கூறினார் .

"ஹ்ம்ம் சொல்லுங்க, என்ன இது வரைக்கும் வேலை முடிஞ்சி இருக்கு , காசி துணி முதல கொடுக்கணும் அதுக்கு பிறகு தான் புடவை எடுக்க போகணும்"

அன்புவுக்கு ஏன் இப்படி சிடு சிடுன்னு பேசுறாங்க , என்று ஐயோ என்றானது .
அனால், இந்திரா பணிவாக, "மண்டபம், எப்படியோ, நம்ம குறிச்சி தேதில கிடைச்சிடிச்சு,, நேரம் கிடைக்கும் போது நீங்களும் ஒரு எட்டு போய் பாருங்க, என்று ஒரு மண்டபத்தின் பெயரை கூறினார் .

"சாப்பாடுக்கு புக் பன்னியாச்சு, உங்க பக்கம் எவ்வளவு பேருனு சொல்லிடுங்க , பாத்திரம் எல்லாம் இப்போவே எடுக்க ஆரம்பிச்சிட்டோம்" .

மாப்பிளை, மோதிர அளவும், காசியாத்திரை போக செருப்பு அளவும் வேணும்

"மாப்பிளைக்கு பட்டு சட்டையும், பட்டு வேட்டியும் எடுக்கணும், மாப்பிளை அழைப்பு இருக்கு, அதுக்கு மண்டபம் பக்கமே கோவில் இருக்கு, அங்க வெச்சுக்கலாம்" .
கட்டிலும் பீரோவுக்கும் , சொல்லிட்டோம், ஒரு வாரத்துல முடிச்சிடுவாங்க .

"இனி பூஜை பொருளும், கல்யாண துணியும் தான் பாக்கி , அதுக்கு முதலில் காசி துணி வேணும்," நீங்க தான் இந்த வேலையே ஆரம்பித்து வைக்கணும் என்று நினைவூட்டினார் .
"ஹான் ஞாபகம் இருக்கு," என்று தடுமாறி வந்தது பதில், எப்படி மறந்தேன் , நல்ல வேலை ஒரு மாதம் இருக்கு .

"முக்கியமா, கல்யாணத்துக்கு இருபத்தி ஒரு நாள் முன்ன விநாயகர் வாங்கி அரிசில போட்டு வைக்கணும் அதுக்கு உங்களிடம் இருந்து காசி துணி வேண்டும்."
அழைக்கவே "உன் பாழா போன நம்பருக்கு கூப்பிட்டேன்" என்று மனதில் நினைத்து , விஷயத்தை கூறி முடித்தார் .

"இவ்வளவு இருக்கா ," என்று தான் சுமதிக்கு இருந்தது .
விஷாகா திருமணத்தின் போது, அனைத்தும் அவர் கணவரே பார்த்து கொண்டார் .
வந்தோருக்கு ஒரு வணக்கம் வைப்பதும், விஷாவுடன் இருப்பது மட்டுமே இவர் வேலை .
அதற்கே பலத்த பீத்தல், அவரிடம். இப்பொழுது தலை சுற்றியது .

"ஹ்ம் எனக்கும் தெரியும் இன்னும் நாள் தானே இருக்கு, நாங்க தான் காசி துணி எடுத்து வந்து கொடுக்கணும், நாளைக்கு நல்ல நாள் தான், என் பையனையே அனுப்புறேன் , அவன் கொண்டு வந்து கொடுப்பான்" .

"மோதிர அளவும் அவன் வரும் போதே எடுத்துக்கோங்க, புடவை அடுத்த வெள்ளிக்கிழமை என் பொண்ணு கடைக்கே போகலாம், அங்கு இல்லாதது, என்பது போன்று இருந்த அவர் குரலின் ஆளுமை, அன்புவுக்கே முகம் சுளிக்க வைத்து .

சுமதி இறுதியில் பேசியது இந்திராவுக்கு உடன்பாடில்லை , அனைத்தும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த இந்திரா, அவர் முழுதும் கூறி முடிப்பதற்குள், தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி, இங்க எங்க வீட்டுல நடந்த திருமணத்துக்கு எல்லாம் காஞ்சிபுரத்துல இருக்கிற ******* அங்க தான் நாங்க துணி எடுக்குறது.

"அவங்க பெரியவங்க காலத்துல இருந்து அங்க தான் பழக்கம் கூட, நல்ல கை ராசி , அங்கேயே அவங்க வீட்டுல, நெசவு செய்து விக்கிறாங்க , அதுனால், அங்கேயே எடுக்கலாம்" .

இது ஒன்று தான் நீங்கள் செய்வது, அது எங்கள் விருப்ப படி இருக்கட்டும் என்பது போன்று இருந்தது இந்திரா கூறியது .
கண்டிப்பா சுமதியும், அதிலும் விஷாகாவுக்கு பெருத்த அவமான வேறு, அவள் ஆடை உலகில் புகழ்பெற்று இருக்கும் இராஜ் டெக்ஸ்டைல்ஸ் தவிர்த்து, வேறு கடைக்கு செல்வதா, என்று சுமதியும் மறுத்து கூறும் முன், அவரின் முன் மகன் கை நீண்டது, தொலை பேசி வாங்குவதற்கு .

சுமதியும் கொடுத்தார் .
"வணக்கம் அத்தை , அட்ரஸ் சொல்லுங்க, நாங்க வெள்ளி கிழமை, நேரா அங்க வந்துடுவோம்," என்று மேலும் இரு நிமிடம் பேசி விட்டு , அன்னையை ஏறிட்டான்.

"நம்ம கடைய விட்டுட்டு, அவங்க சொல்றது, நல்ல இல்ல அன்பு" என்று சிடுசிடுத்தார் .
"நம்ம கடையா, எது மா, புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டதில்," சுமதிக்கு தான் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல், முழித்தார் .
உண்மை தானே, மகன் கூறுவது .

"அவங்களுக்கு ஏதோ செண்டிமெண்ட், அதுல நம்ம எதுக்கு தடை செய்யணும், இது ஒன்னு தானே நம்ம செலவு செய்ய போறது, அதுனால, அவங்க விருப்ப படியே , அந்த கடைக்கு போய்டலாம்".

இனி விஷாவை எப்படி சமாளிப்பது என்று நினைத்து, அரைமனதாக தலையசைத்து வைத்தார் .
வீட்டுக்கு வந்தாலே பஞ்சாயத்து தான் , என்று மாடி நோக்கி சென்றான், அன்னையின் குரல், அவன் நடையை நிறுத்தி, நாளைக்கு, காசி துணி ஒன்னு வாங்கிட்டு போய் , அவங்க வீட்டுல கொடு பா ,

"அப்படினா ?"
"ஒரு வெள்ளை பருத்தி துணில, இருபத்தி ஒரு நாள், பூஜைக்கு பொண்ணு வீட்டுல இருந்து கொடுக்குற விநாயகர் விக்கிரகம், அவங்க வீட்டு அரிசில போட்டு வைப்பாங்க .
அந்த துணி நம்ம தான் கொடுக்கணும்.

நம்ம உள்ளங்கை அளவு இருக்கும் விநாயகர் விக்ரகம் .
பூஜை அறையில் இருப்பது என் அம்மா எனக்கு கொடுத்தது , இங்க வரும் போது , மாமியார் வீட்டுலயும் ஒரு விக்ரகம் இருக்கும். 'இப்படி வழிவழியா , நம்ம விநாயகருக்கு , பூஜை பண்ணனும்," என்று எடுத்துரைத்து சென்றார் .

அவனுக்கு அது எல்லாம் எங்கு நினைவில் இருக்கிறது, பருத்து துணி, கொண்டு செல்வது மட்டுமே .
நாளை தன் கண்கள் தன்னவளை , காணுமா என்ற நினைப்பே சுற்றி கொண்டிருந்தது .
அவ தரிசனம் கிடைக்குமா, வீட்டுல இருப்பாளா, அவங்க வீட்டுல நான் போனா என்ன சொல்லுவாங்க, என்ற ஒரே யோசனை வேறு, ஒரு பக்கம் மகிழ்ச்சி .

இருவரின் முதல் நேரடி சந்திப்பு நாளை .
மனம் ஆனந்தத்தில் துள்ள, நான்கு நான்கு படிகளாக ஏறி சென்றான் .
மாப்பிளைக்கு, துடைப்பதுடன், தரிசனம், கொடுக்க மணப்பெண் காத்திருப்பாள் . .
 

Saroja

Well-Known Member
ஆனாலும் அம்மா சுமதி
காலி பெருங்காய டப்பா

அன்பு எப்படி தான் கல்யாணம்
பண்ணிப் போறான்
அம்மா அக்கா அகராதிகள வச்சுட்டு
 

achuma

Well-Known Member
ஆனாலும் அம்மா சுமதி
காலி பெருங்காய டப்பா

அன்பு எப்படி தான் கல்யாணம்
பண்ணிப் போறான்
அம்மா அக்கா அகராதிகள வச்சுட்டு
Thanks :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top