அன்பின் இனியா 10

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பம், கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்த பதிவு, படிச்சிட்டு உங்களின் கருத்தை கூறுங்கள் .
all be safe
take care friends
:)(y)

அவர்கள் புறப்பட எழுந்து நின்றதும், "மாமா, ஒரு நிமிடம், ஒரு பத்து நிமிஷம் எனக்காக , இங்க இருங்க," என்றான் .

"தம்பி, நம்ம இந்த உறவு தொடருவோமோ இல்லையோ, அது நம்ம கையிலையும் இல்லை, ஆனா எந்த வித மன கசப்பும் இல்லாம இருக்கணும் நான் நினைக்கிறேன் ."

தேவையில்லாத மன வருத்தம் இருக்காது பாருங்க, அதான், பேச்சும் வேற திசையில் போகுது, " என்று மோகன் கூறினார் .
மாப்பிள்ளை என்ற அழைப்பு சென்று, தம்பி என்று வந்ததில் அவனால் , புரிந்து கொள்ள முடிந்தது .

அகத்தில் அழுத்தம் வந்து சேர்ந்ததில் அவன் முகம் மிகவும் வேதனையை காட்டியது .
வினோத்தும், அப்பா, என்று அவர் அருகில் சென்று, மன்னிப்பு வேண்டினான் .

"புரியுது மாமா , அன்புவும் விடுவதாக இல்லை , நான் எங்க அம்மா கிட்ட மட்டும், பத்து நிமிடம் பேசிட்டு வரேன், நீங்க நான் இங்க அழைத்து தானே வந்தீங்க, நீங்க என்ன நம்புறீங்க, என் பேசிச்சுக்கு மதிப்பு தரீங்கன்னு நான் நம்புறேன், அதுக்காகவாது கொஞ்ச நேரம் இங்க இருங்க," என்று வினோத்திடம் கண்ணசைத்து அவன் அன்னையின் அருகில் சென்றான் .

அவனின் முழு உயரத்துக்கு கம்பீரமாக எழுந்து நின்று, ஒலித்த ஆளுமையான குரலும், கண்களில் தெரிந்த வேதனையும் , மோகனை தானாக சரி என்று சம்மதிக்க வைத்தது .
அவன் அன்னையின் அருகில் நின்று, "என்னோட வாங்க மா ," என்று அழைத்தான் .
சுமதியும் மகனுடன் சென்றார் .

"மகனும் மருமகனும், இப்படி இந்த மிடில் கிளாஸ், குடும்பத்துக்கு, மன்னிப்பு வேர கேட்கணுமா" என்று இருந்தது, சுமதிக்கு, அதே நேரத்தில் , அவர் பேசியதின் வீரியமும் அதிகம் என்று தெரிந்து கொண்டார் .

விஷாகாவின் தூண்டுகோளால், இருந்த கோவம் மேலும் அதிகரித்து, இந்திராவுக்கு, திருப்ப பதில் கொடுக்கும் வேகத்தில் பேசிய பேச்சு, இப்பொழுது மகனும் மருமகனும், அவர்கள் முன் கெஞ்சும்படி ஆகியதே என்று ஒரு சங்கடம், வேதனை என்று குற்றவுணர்ச்சியில் இருந்தார் .

"எங்க , ஏன், விஷகாவும் அவள் அன்னையுடன் செல்ல, திரும்பும் போது, வினோத் அவள் கைகளை தடுத்து, பார்த்த பார்வையில், மற்றவர் முன் ஒன்றும் கூற முடியாமல், அமைதியாக நின்றாள்.

அவளின் சிந்தனை எல்லாம், அன்னை இருந்த அறையிலேயே இருந்தது.
விஷாகா , அவள் போட்ட திட்டமே வேறு, இவ்வளவு திமிராக இந்திரா பேசியதால், அவர்களின் ரோஷத்தை தூண்டி, அதில் அவர்கள் சென்று விடுவார்கள், அல்லது அடி பணிவார்கள் என்று நினைத்தாள் .

ஆனால் இரண்டுமே எதிர்பதமாக மாறியது.
அவர்கள் சிறிதும் கெஞ்சாமல், வேறு பார்த்துக்கொள்ளுங்கள், என்று கூறியதும், கணவனும் அன்புவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நிற்பது.

அவர்கள் சென்று விட்டால் , இதையே காரணமாக வைத்து, ரேஷ்மியுடன் எப்படியாவது திருமணம் செய்து விடலாம் , தனக்கும் எவ்வித பிரச்சனையும் இருக்காது, என்று அவளின் திட்டமும் , பாழாகியதே என்று யோசனையில் இருந்தார் .
ரேஷ்மியை தூண்டி விட்டது யாருக்கும் தெரியாமலே போய் விடும், தனக்கு எவ்வித பிரச்சனையும் இனி இருக்காது , என்று ஏதேனும் ஒரு வகையில் அவளுக்கான ஆதாயம் கிடைக்குமா என்று இந்த பிரச்னையிலும் தூண்டில் போட்டு பார்த்தாள் .

ஆனால் இவள் போட்ட தூண்டிலில், சிக்கிய மீன் என்னவோ அவள் அன்னை தான் .
அன்பு எதிலும் சிக்காமல், சமாளிக்கும் வல்லமை கொண்டவன் என்று அவள் உணரும் காலம் விரைவில் .

தேவகி, இந்திரா அருகில் சென்று, அவர் கையை பிடித்ததும், " இல்லை மா எங்களுக்கு எந்த கோவமும் இல்லையே, நீங்களா தான் வந்தீங்க, எங்க வசதி தெரிஞ்சி தானே, பெண் கேட்டீங்க, இப்போ, ஏதோ கூப்பிட்டு விட்டு அசிங்கப்படுத்தர மாதிரி இருக்கு" .

"அவர் சொன்னது தான் சரி, பிரச்சனை இல்லாம, அப்படியே விட்டுடலாமே,உங்களுக்கு தோதா பாருங்க, நாங்க இப்போ தான் இனியாவுக்கு பார்க்க ஆரம்பிச்சோம், எங்களுக்கு ஏத்தது போல், நாங்களும் பார்க்கிறோம், "அந்த வார்த்தையே, விஷாகாவை தவிர மற்றவர்களுக்கு வேதனையை தந்தது .

அதிதி, இந்திராவின் அருகில் வந்து, "ப்ளீஸ்,அத்தை, எங்களுக்கு இனியா அண்ணிய ரொம்ப பிடிக்கும் , நாங்க நல்ல பார்த்துகிறோம் ," என்று அவள் கண்களில் கண்ணீரே வந்து விட்டது .

"ஹே என்ன டா, இது, "
என்று இந்திராவுக்கும், நெகிழ்ச்சியே , இந்த சிறு பெண்ணின், தன் மகள் மீதான பாசம் .
"நீ சின்ன பொண்ணு டா, பார்த்த இடமே தகையனும் இல்லை டா, உனக்கு இது எல்லாம் புரியாது."

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நீ எல்லார் மேலும் ரொம்ப பாசம் வெச்சி இருக்கியே , உனக்கு கிடைக்கிற புகுந்த வீடு ரொம்ப கொடுத்து வெச்சவங்க ," என்று அவளை மனதார பாராட்டினார் .

செழியனும் இளங்கோவும் என்ன கூறுவது என்று சங்கடத்துடன், அப்பொழுதே வெளியே சென்று நின்று கொண்டனர் .
விஷாகாவுக்கு தான் வயிறு காந்தியது, "இந்த ஒட்டடை குச்சிக்கு, தொடப்ப கட்டை தான் கிடைப்பான்," என்று மனதிலே தங்கையை வஞ்சனை இல்லாமல் திட்டி கொண்டிருந்தாள் .
தேவகிக்கும், அதிதியை நினைத்து, பெருமையே, அவள் விஷாகா போல் இல்லாமல், இப்படி பாசமான பெண்ணா இருக்காளே, "அன்பு வளர்ப்பு , வீண் போகல" .
அண்ணன் மகளை அனைத்து கொண்டு தேற்றினாள் .

மோகன் இந்திராவுக்கும் தான் சங்கடமாக இருந்தது,"இப்படி எல்லாரும் நம்ம கிட்ட தணிந்து பேசுவது ஒரு மாதிரி இருந்தது,"
இவங்க இரண்டு பேரை தவிர(விஷாகா சுமதி ), மற்றவர்கள் எல்லாம் பாசத்துக்கு கட்டு பட்டவர்கள்," என்று இந்த ஒரு செயலிலேயே தெரிந்து கொண்டார்கள் .

ஆனால், அதற்காக, தாங்கள் பணத்தை தவிர எதில் குறைந்து விட்டோம், முன்பாவது முதல் பெண்ணுக்கு அவர்கள் கேட்டதை கொடுத்து விட்டோம், ஆனால் அடுத்தவளுக்கு எதுவும் திட்டம் இல்லை.
வசதி அதிகம் என்றாலும் சரி , தங்களை விட வசதி குறைவாகவே இருந்தாலும் சரி, இரு மகளுக்கும்,
ஒன்று போன்று தானே செய்ய முடியும், ஆகையால், அதில் தெளிவாக இருந்தனர் .
இங்கு வந்தால், இது போன்ற பேச்சுக்கள், குழப்பம் இது எல்லாம் தேவையா என்று தான் இனியா பெற்றவர்களின் , சிந்தனை முழுதும் .

அங்கு வினோத் மட்டும் தான் மோகன் இளங்கோவை , திசை திருப்பி வேறு பேசிக்கொண்டிருந்தான் .
இந்திரா அதிதியை தோளோடு அணைத்து, தேவகியிடம் அவரே பேச்சு கொடுத்து கொண்டிருந்தார் .
யாரும் விஷாகாவை கண்டு கொள்ளாமல், இருந்தனர் .

மகனுக்கு பொண்ணு பிடிச்சி கல்யாணம் வரை சென்றும், அதை இந்திராவின் மேல் உள்ள கோவத்தில், மகளும் தூண்டி விட்டதில் , ஆத்திரத்தில் அறிவு மறைத்து, அவன் திருமணத்தை கெடடுத்து வைத்திருக்கிறோம், மட தனத்தை எண்ணி , குற்ற உணர்ச்சி வேறு .

அதிலும் எதிலும் திடமாக நிற்கும் மகன், இவர்களிடம் கெஞ்சி கொண்டு நிற்பது, அனைத்தும் அவருக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தது .
அன்பு கையை கட்டி கொண்டு, அன்னையையே பார்த்துக்கொண்டிருந்தான் .

சுமதியால் அன்புவின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல், தலை குனிந்து நின்றிந்தார் .
அவன் அன்னையை அவ்வாறு பார்க்க அன்புவுக்கு இதயத்தை வதைத்தது .
"அம்மா, நீங்க எதுக்கு மா தலை குனிந்து நிற்கிறீங்க ."
"சொல்லுங்க மா, எதுக்கு அவங்கள கூப்பிட்டு வெச்சு அசிங்க படுத்தனும் ."

அன்பு !

"நான் சொல்றேன் , இவங்கள அசிங்க படுத்திட்டா, திரும்பும் இங்க வர மாட்டாங்க, ரேஷ்மிய எப்படியாவது கல்யாணம் செய்து வெச்சிட்டா , அக்காவுக்கு பிரச்சனை இருக்காது ," என்று விஷாகாவின் எண்ணத்தை, ஒவ்வொன்றாக, அடுக்கி கொண்டே சென்றான் .

சுமதிக்கு தான், இதில் இப்படி ஒரு அர்த்தமும் இருக்கிறதா, என்று முழி பிதுங்கி நின்றார் .
அன்புவுக்கும் அவன் அன்னையை தெரியும் இந்த அளவுக்கு அவர் போக மாட்டார் என்று, ஆனால், விஷாகா அன்னை பேசும் போது , அவள் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான் .

விஷாகா தான் ஏதோ செய்து இருக்கிறாள் , என்று தெரிந்து கொண்டான் .
சுமதி உண்மையில் பணம் அதில் எல்லாம் அதிகம் நாட்டம் இல்லாதவர்.
தகுதி பார்ப்பாரே தவிர, பணம் , நகை அதில் எல்லாம் ஈடுபாடு அதிகம் இல்லை .
அவர் அன்புவை பாவமாக பார்த்து நின்றிந்தார் .

உண்மையில் விஷாகா இவ்வாறு தூபம் போட்டு தான், சுமதியை திசை திருப்பினாள்,ஆனால், சுமதிக்கு, இந்திராவின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் எண்ணத்தில் ,என்ன பேசுகிறோம், தான் பேசியதன், விளைவு இப்படி போகும் என்று எதுவும் தெரியாமல் , அன்புவின் கேள்விக்கும் சமாளிக்க தெரியாமல், திணறினார் .

"இல்லை பா ,"
"அப்போ வேற என்ன காரணம் மா , நான் இப்போ சொல்றேன் , எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்"

சுமதிக்கு அதிர்ச்சி
"அன்பு ,"
"உண்மையை தான் சொல்றேன் மா ."

"இரண்டு மாசமா நீங்க எனக்கு கல்யாணம் செய்யனும்னு ,ரொம்ப வற்புறுத்துனீங்க, சரி என் மனசுல இருக்குற பொண்ண சொன்னேன், அது தான் இப்போ தப்பா போய்டுச்சு" .
"அக்காவும் நீங்களும் ரேஷ்மிய மனசுல வெச்சிட்டு சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியாம இருந்துட்டேன் ,"

இது எல்லாம் விடுங்க மா, நான் ஒன்னு கேட்குறேன், "அக்கா ரேஷ்மிய தூண்டி விட்டுட்டாங்க, இப்போ அவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்னு, என்னை போர்ஸ் பண்றாங்க, நான் மனசுல இனியாவை நினைச்சிட்டு, ரேஷ்மியா எப்படி கல்யாணம் செய்துப்பேன் ."

"இல்லை, நான் அவ கூட வாழாம , அதுனால, அவ கஷ்ட பட்டா தான் நல்ல இருக்குமா. "
"நாங்க இரண்டு பேரும் இதுல நல்லா இருக்க முடியாது, அப்படி இருக்கும் போது , இந்த கல்யாணம் நல்லதான்னு , நீங்க எப்படி நினைக்காம விட்டீங்க ."
அவன் கேட்க்கும் ஒவ்வொன்னும், நியாயமான கேள்வி, சுமதியிடம் தான் பதில் இல்லை .

"அக்கா, இப்போ உண்மையில ஒரு சிக்கல்ல இருக்கா , அது அவ ஆரம்பிச்சி வெச்சதை, யாருக்கும் தெரியாம, முடிக்கணும்னு , ஆனா அதுனால், இரண்டு பேர் வாழ்க்கை பாதிக்கும் ஒன்னு நான் இன்னொன்னு , ரேஷ்மி," என்றான் .
சுமதிக்கு, அதன் பிறகு, விஷகாவுக்கு ஒரு பிரச்சனை,என்றதும் மற்றது எல்லாம் மறந்து, அவள் பற்றியே எண்ணம் முழுதும் .

"அக்கா, இந்த பிரெச்சனைல இருந்து விடுவு காலம்னா , நீ ஏன் பா, ரேஷ்மியா கல்யாணம் செய்துக்க கூடாது" .
அன்புவுக்கு மனதினில் சொல்லொன்னா , ஒரு வலி .

"அம்மா, நீங்க இப்போ கூட, அக்காக்காக பார்க்கறீங்க தானே, என்னை விடுங்க மா, நான் உங்களுக்காக, நெருப்புல குதிக்கலாம்" .
அன்பு, சுமதி கத்தி விட்டார் .

"நான் பேசி முடிச்சிடறேன்" .
"ரேஷ்மிக்கு என்ன தலையெழுத்து, அவ வாழ்க்கையில விளையாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு" .

"பாவம் மா, அவ ஒன்னும் தெரியாத பொண்ணு, அவ மனசையும் கெடுத்து வெச்சி இருக்காங்க அக்கா."
"இது எல்லாம் நமக்கு பாவம்னு உங்களுக்கு தெரியலையா ."

"நான் சொல்றதுல எந்த மாற்றமும் இல்லை, என் மனசுல இனியா மட்டும் தான் இருக்கா, எப்பவும் இருப்பா.

"நான் எப்பவும் ரேஷ்மிய கல்யாணம் செய்துக்க முடியாது ."
"சின்ன வயசுல இருந்து, அக்கா எடுத்தது தான் முடிவுன்னு , அவளுக்கு கொம்பு சீவி விட்டுடீங்க" .

"அது இப்போ அடுத்தவங்க வாழ்க்கையில் விளையாடுற அளவுக்கு வந்து நிக்கிது" .
"நான் என் கல்யாண வாழ்க்கையிலும் அவ பேச்சு தான் கேட்கணும் நினைக்கிறது எல்லாம், ரொம்ப தப்பு".

"அவ ஆரம்பிச்சத , இனி அவ தான் பார்க்கணும்" .
"அன்பு நீ இவ்வளவு சுயநலமா," என்று சுமதி கேட்டார் .
"அவன் மனம் உடைந்து, என் முகத்தை பார்த்து நேர சொல்லுங்க மா, நான் அப்படியானு ".

"அக்காவுக்காக, அதிலும் அவ எதுலயும் மாட்டிக்காம, இருக்கணும்னு, என்னை விருப்பம் இல்லமா கல்யாணம் செய்ய சொல்றது யாரு , யாருக்கு சுயநலம் ." அவனும் திரும்ப கேட்டான் .

சுமதிக்கு அவன் கூறுவது எல்லாம் உண்மை தானே, ஆனால், மனம் அதை ஏற்க மறுக்கிறது .

இந்திரா பேசியதை, கூறினால் , மகன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் .
அதே நேரத்தில் ,அவன் வேதனை பொருக்காமல் , சுமதியே பேசினார் .
"ஆனா இப்போ, நான் கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு தான் பா சம்மதிச்சேன்," புடவை முந்தானையை சுற்றி கொண்டிருந்த அவர் கைகளின் பதற்றம், அது உண்மையே, என்று அன்புவுக்கும் உணர்த்தியது .

"அப்போ ஏன் , இவ்வளவு கோவமா, அவங்க செய்து தான் ஆகணும் போல பேசுனீங்க" .
"நீங்க பண ஆசை பிடித்தவங்களும் இல்லையே ," அந்த மட்டிலும் மகன் தன்னை புரிந்து வைத்திருக்கிறான் என்று ஆச்சரியம் .

"நான் ஒன்னும் சும்மா அப்படி பேசுல பா,"
"அவங்க தான் சொந்த வீட்டுல இல்லை, அப்படி பேசுனாங்க," மறந்தும் அவர் பேசியதை கூறவில்லை .

அன்புவுக்கு சங்கடமாக போனது, ஆனால், பெண் வீட்டினர் எதிர்பார்ப்பு தானே, என்று தன்னை சமன் செய்து கொண்டு, அதுனால், என்று கேட்டான் .
"இவன் என்ன, அவங்க மேல கோவ படமா," என்று நினைத்த சுமதி , அதான் நானும் கோவத்துல அவங்க பொண்ணு தானே வாழ போறா, அப்போ அதான் இடம் கொடுக்கட்டும்னு கேட்டுட்டேன்," அவர் வார்த்தையில் அவ்வளவு அலட்சியம் .
அதிலேயே கண்டு கொண்டான், தாய் ஏதோ அவர்களை கேட்டு இருக்கிறார்கள் என்று, "சரி மா ஒரு வேலை எனக்கும் இனியாவுக்கும் கல்யாணம் ஆகுது, அவங்க நீங்க கேட்டது போல் ஒரு இடம் கொடுக்குறாங்கனு , வெச்சிக்குவோம் ."

"அவங்க கொடுக்குற இடத்துல வீடு கட்டிட்டு , நான் அவ பேருலயே வீட ரெஜிஸ்டர் செய்றேன், உங்களுக்கு ஓகே வா மா" .
அவனின் நிதானமா கேள்வி, இவருக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது .
அன்பு,

"வேற எப்படி மா, அவங்க பொண்ணுக்கு கொடுக்குறாங்க, அப்போ அவ பேருல தானே எல்லாம்," என்றான் .
சுமதி மேலும் மேலும், அவசரத்தில் பேசுவது எல்லாம், மற்றவர்களுக்கு சாதகமாக, சுமதிக்கே பாதகமாக அமைவதை அப்பொழுதும் அவர் புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடினார் .

"இதோட விட்டுடலாம் மா, எனக்கு கல்யாணம் செய்யணும் எண்ணமும் போய்டுச்சு ",
"இராஜ் குடும்பத்து மருமக நீங்க, வீட்டுக்கு வந்தவங்கள, மதிப்பு கொடுத்து தான் அனுப்பி இருக்கோம் . அவ மதிச்சு இது வரைக்கும் நம்ம யாரையும் அனுப்பியதில்லை."

"அதுனால், இந்த கல்யாணம் இதோட நிறுத்திடலாம்னு, சொல்றது கூட, அவங்களுக்கு மரியாதையா, சொல்லி அனுப்புங்க," என்று அங்கிருந்த இருக்கையில் தலை சாய்த்து, கண்கள் மூடி அமர்ந்து விட்டான் .

"இதுக்கு மேல, என்னை எதுக்கும் வற்புறுத்தாதீங்க ."கண்கள் திறவாமல், இறங்கிய குரலில் அவன் கூறிய வார்த்தை, சுமதிக்கு என்னவோ போல் ஆனது .

"ரேஷ்மி ஊருக்கு வந்ததும், நானே, அவ கிட்ட பக்குவமா பேசிடறேன்".
"அக்காவுக்கு எந்த பிரெச்சனையும் வராது" .

"சரி அவங்கள வெளிய நிக்க வெச்சிட்டு நம்ம இங்க ரொம்ப நேரம் பேசுறது நல்லா இல்லை, வாங்க போகலாம்".

அன்புவின் ஓய்ந்த தோற்றம் சுமதிக்கு மனம் பிசைந்தது .
எப்படியும் மகன் வேறு திருமண செய்ய மாட்டான், அந்த குடும்பத்தின் மீதும், இனியா மீதும் என்ன பகை.

தான் தேர்ந்தெடுத்த இடம் இல்லையே, என்ற வருத்தம் தான் .
அதான் விஷாக்கு பிரச்னை இல்லமா பார்த்துக்குறேனு சொல்லிட்டானே, இப்படியும் ஒரு யோசனை .

அந்த பொன்னு இனியாவும் நல்லா தான், இருக்கா, அவங்க வீட்டு மக்களோட பழக விடாம நம்ம அடக்கியே வெச்சிக்கிட்டா போச்சு .
இனியா, யாருக்கும் அடங்காத சூறாவளி காற்று , என்று சுமதிக்கு தெரியாமல் போனது தான் அந்தோ பரிதாபம் .

மகன் அருகில் சென்று, அன்பு, "எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் பா, நான் எதுவும் அவங்க கிட்ட மரியாதை இல்லாம பேச மாட்டேன்" .

"என்ன மா திடீர்னு,"
இப்பொழுது அவன் உடல் இறுக்கம் தளர்த்தி சாதாரணமாக அமர்ந்து கேட்டான் .

"என்ன பா ,"
"இல்ல, இவ்வளவு நேரம் யோசிசிச்சிட்டு திடீர்னு, வந்து இப்படி சொல்றீங்களே, அதான் ".
வார்த்தையில் நக்கல் தொனித்ததோ, என்று சுமதி நினைத்தார் .

"டேய், வேற கல்யாணமும் செய்துக்க மாட்டே, இப்படியே தான் நிக்க போறேன்னு, சொல்லுறே, வேற என்ன செய்ய சொல்லுறே, என்னை ".

"இது தான் மா, சொல்றேன், இப்படி வேண்டா வெறுப்பா , அந்த பொண்ணு வந்தா , எனக்கு வருத்தம் விடுங்களேன்" .

"உனக்கு என்ன, நான் பொண்ணு பார்த்துட்டு வந்ததுல இருந்து எதுவும் சொல்லல, என் வாய புடுங்க பார்க்குறே, அதானே, அவ நல்லா தான் இருக்கா, எனக்கு பிடிச்சி தான் இருக்கு , வா போய் சொல்லிட்டு வரலாம்."

அவனும் உடன் எழுந்து, "நான் உங்க எல்லாரையும் பார்த்துப்பேன்னு நம்புறீங்களா மா," என்று கேட்டான் .

"என்ன டா இப்படி சொல்லுறே ,"
"சொல்லுங்க மா"

"நான் இந்த குடும்பத்தையும், அதிதி கல்யாணம்,
அக்காவுக்கும், அதிதிக்கு கடைசி வரை பொறந்த வீட்டுல இருந்து செய்ய வேண்டியது, இது எல்லா செய்யற அளவுக்கு நான் தகுதியான ஆம்பளைன்னு , என்ன நம்புறீங்களா?"

"அன்பு , ஏன் டா இப்படி," சுமதி அழுதார் .
"அப்போ அவங்க கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது" .

"அவங்க பொண்ணுக்கு செய்யறது அவங்க உரிமை , அது தவிர நீங்க எதுவும் கேட்டா, என்னை அசிங்க படுத்துறீங்கன்னு அர்த்தம்" .

"இதுக்கு ஓகே மட்டும்னா இங்க இருந்து போய் சொல்லுங்க" .
அப்பொழுது தான் அவர் பேசிய தவறு அவருக்கும் புரிந்து, கண்களை துடைத்து கொண்டு , கூடத்திற்கு சென்றார் .

நேராக இந்திராவின் அருகில், சென்று, மன்னிப்பு கேட்காமல் , "நீங்க ஒன்னு பேசுனீங்க, நானும் ஏதோ சொல்லிட்டேன் , எனக்கு மனபூர்வமான சம்மதம்".
"நான் பேசியது எல்லாம் மனசுல வெச்சிக்காதீங்க" .

"நீங்க அடுத்து, தேதி குறிங்க, பார்த்துக்கலாம்" .
"உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யணும் விருப்ப படுறீங்களோ, அதுவே போதும் ," என்று சிரித்த முகத்துடன் சுமதி பேசியது, மகிழ்ச்சியே என்றாலும், எப்படி என்று தான் இந்திரா பார்த்தார் .

அங்குள்ள அத்துணை பேருக்கும் மகிழ்ச்சி .
"இது எல்லாம் கல்யாணத்துல, எல்லாரும் பேசுகிறது தானே," என்று சாதாரமாக மோகனிடம் கூறினாலும், அவ வீட்டுக்கு வந்ததும், இவங்களை எல்லாம் கழிச்சி விடணும் , என்று மனதில் கறுவி கொண்டார் .

"மாமா, அத்தை, என்னை நம்பி உங்க பொண்ணை குடுக்க சம்மதம் என்றால், நீங்க அடுத்த ஆக வேண்டியது என்னனு சொல்லுங்க," என்று அவர்களிடமும் நேரடியாக கேட்டான் .

அதற்குள், செழியனிடமும், இளங்கோவிடமும், கலந்தாலோசித்து, செழியன் அன்புவை பற்றி எடுத்து கூறவே, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
அன்புவுக்கு அப்பொழுது தான் மூச்சே விடுவது போன்று ஒரு உணர்வு .
அவனும் வேகமாக ஒரு பெரு மூச்சை விட்டான் .
செழியன் தான் அவனை கிண்டலடித்தான் .

மோகனுக்கு, அப்பொழுது தான், மனதில் இருந்த குழப்பமும் நீங்கியது.
பெண் பார்த்து இது வரை, மணமகனின் அன்னையிடம் இருந்து, எந்த வித சம்மதமும் இல்லாமல், மிகவும் குழப்பத்தில் இருந்தார் .'அடுத்த கட்டத்திற்கு, எப்படி எடுத்து செல்வது, வீட்டில் வேறு, ஒரு பக்கம் அடுத்த வேலைகள் பற்றிய கேள்விகள், என்று ஒரு அமைதியில்லாமல், இருந்தார் .

ஆனால் , அன்பு சுமதியையே சம்மதம் கூற வைத்தது , மாப்பிள்ளையின் சாமர்த்தியம் எண்ணி, மோகனும் இந்திராவும் மகிழ்ந்தனர் .
திருமணம் மட்டும், இளங்கோவின் பன்னிரெண்டாம் பொது தேர்வு முடிந்த பிறகு என்று மோகன் கேட்டதற்கு, அன்புவும், "தாராளமா மாமா, நானும் சொந்தமா வீடு பார்க்கலாம்னு, இருக்கேன், அதுனால், இன்னும் இரண்டு மாசம் ஆகட்டும் என்று கூறினான் .

"யப்பா, உடனே உடனே யாரு கொழுக்கட்டையை சாப்பிடறது, அதுனால் தப்பிச்சேன்," என்று செழியன் சத்தமாக புலம்பினான்.
அதில் இளங்கோ சிரித்து விட்டான்.

"என்ன மாமா, காக்கா கல்யாண வேண்டுதல் மட்டும் தானே, வேற என்ன,"
"டேய் உன் எக்ஸாமும் சேர்ந்து தான் டா, அவ வேண்டி இருக்கா ," என்று அவன் அலறியதில், வினோத்தும் அன்புவும் கூட என்ன வென்று கேட்டு சிரித்தனர் .
ஏற்கனவே வீட்டை பற்றி எடுத்திருந்த முடிவு , இப்பொழுது இன்னும் ஸ்திரமாக, அவன் மனதில் பதிந்தது .

அங்கு விஷாகாவுக்கு தான், தலையில் இடி இறங்கிய அதிர்ச்சி, "அம்மாவே சம்மதம் சொல்ல வெச்சிட்டானே, அப்போ என்னை பற்றி இவங்களுக்கு கவலை இல்லையா" .
அதிலும் சொந்த வீடு, மீண்டும் தம்பியை அவள் பேரில் உள்ள இல்லத்திற்கே அழைத்து, தனக்கு கீழ் வைக்க ஆசை தான் .
அவள் கை மீறி போனது போல் , அங்கு நாவு வறண்டு, பேச முடியாமல், சிலையென சமைந்து இருந்தது அவள் மட்டுமே .

அதிதி சந்தோஷ மிகுதியில், இந்திராவை கட்டி கொண்டு, "நம்பி அனுப்புங்க, எங்க அண்ணா சூப்பரா பார்த்துப்பாரு ," என்று ஆர்பரித்தாள் .
அவளின் துள்ளல் , அங்குள்ள அனைவரையும் மகிழ வைத்தது .

பிறகு வாசல் வரை, சென்று வழியனுப்பி வைத்தனர் .
இளங்கோவிடம் அவளின் தொலை பேசி என்னை வாங்கலாமா என்று நினைத்து, பிறகு அவனே வேண்டாம் என்று முடிவெடுத்து அமைதி காத்தான்.
 

Saroja

Well-Known Member
அன்பு பேசி புரிய வச்சு
சுமதி கல்யாணம் செய்ய
சம்மதம் சொல்ல
விஷாகா இன்னும் என்ன
குளறுபடி செய்வாளோ
 

achuma

Well-Known Member
அன்பு பேசி புரிய வச்சு
சுமதி கல்யாணம் செய்ய
சம்மதம் சொல்ல
விஷாகா இன்னும் என்ன
குளறுபடி செய்வாளோ
thanks
:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top