அனலும் மழையும் 3

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
HI hello ......sorry for the late update.....veetla konjam vela oru function so oly pa.....pls pls dont mistake me........appram ennala..intha epium konjam shortah than poda mudinjuthu so yarum kochukkathinga......up coming episode lengtha poda try panren pa,,,,thanks for reading, liking, and commending......




ஜானகி காலேஜ் கிளம்புறதுக்குள்ள அவளை பத்தி ஒரு சின்ன அறிமுகம்……….

ஜானகி 21 வயது மங்கை. அர்ஜுனுக்கும் ஜானுவுக்கும் 7 வயது வித்யாசம்.சென்னையில் உள்ள பிரபல இருபாலர் கல்லூரியில் முதுகலை ஆடை வடிவமைபியல் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி புறா.

கல்லூரி சேர்ந்த நாள் முதல் இன்று வரை வந்த காதல் கடிதம் ஏராளம். ஆனால் அதை அழகாக ஒதுக்கி விடுவாள். காரணம்………( அடுத்த எபி ல சொல்ரேன்)

பெண்களே கொஞ்சம் பொறாமை படும் படியான அழகு( உண்மை தான் பா……..நம்ம நாயகியவிட ஜானு அழகு…)



அம்மா சாப்பாடு ரெடியா என கேட்டுக்கொண்டே இறங்கி வந்தவள், தாயை பார்த்தாள்
அவள் செல்லும் போது எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார்.(சோறு முக்கியம் அமைச்சரே)


அவள் வந்து உலுக்கவும் நினைவுக்குத்திரும்பினார்.
முறைக்கும் மகளை பார்த்தவர் தன்னையே நொந்துகொண்டு ஜானுவை கல்லூரிக்கு கிளப்பினார்.


மகள் செல்லவும் உண்மை தானா என்பது போல் கணவனை பார்த்தார் தேவி அவரும் ஆம் என்பது போல் கண்மூடி திறந்தார். அந்த தாயின் கண்களில் கண்ணீர் பெருகியது. அது வேதனை கண்ணீர் அல்ல ஆனந்த கண்ணீர். தன் மகனின் வாழ்வு புத்துயிர் பெற்று விட்டது என்ற நிம்மதி.


தேவி தனக்கும் தன் மகனுக்கும் நடந்த வாக்குவாதத்தை நினைத்து கொண்டார். 2 ஆண்டுக்கு முன்பு இந்தியா வர சொல்லி சொன்னதற்கு தாயொடு சண்டையிட்டு 1 மாதகாலம் பேசவில்லை. பின்பு தேவி தான் இனி உன்னை அழைக்கமாட்டேன் என்று உறுதி அளித்தபின்னே பேசினான்.



அப்படி பிடிவாதம் பிடிதவன் இப்பொழுது வருகிறான் என்றால் அவன் வாழ்க்கை பற்றி ஏதோ தெளிவு பிறந்துவிட்டது என்றுதானே அர்த்தம். இன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றாட வேலைகளை பார்க்கச் சென்றார்.



மாலை ஜானகி வந்ததும் கோவிலுக்கு கிளப்பிக்கொண்டு சென்றார். அங்கே அவருக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.



ஏன்ம்மா....இப்ப எதுக்கு கோவிலுக்கு என்ன இழுத்துகிட்டு வந்த இன்னைக்கு விசேசம் எதும் இல்ல then what ma? Suddenly what happen?



ஏன் நல்லது கெட்டதுனா தான் சாமிய நினைக்கனுமா சும்மா நினைக்க கூடாதா? என பார்வதி பதில் கேள்வி கேட்க

“தெரியாம கேட்டுட்டேன் நா இன்னைக்கு மெளன விரதம் “ என இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கினாள்.



அதையும் வாயால சொல்ற என கேட்க...சைகையால் சொல்லி தன் தாயை நகர சொன்னால்........



அவள் செய்கையில் சிரித்தவர், ”வாயாடி போகலாம் வா.... என்று திரும்பியவர் மீது குழந்தை ஒன்று இடித்துக் கொண்டு கீழே விழ பார்த்தது. லாவகமாக விழாமல் பிடித்துக்கொண்டார். அக்குழந்தை மழங்க மழங்க விழித்தது. பார்வதியும் குழந்தையை தான் பார்த்ததுகொண்டிருந்தார்.

குண்டு கன்னங்களும், துருதுரு கண்களும், குறும்பு செய்ய காத்துக்கொண்டிருக்கும் கரங்களும், நேரான நாசியும், சுருள் தலைமுடியும் எங்கே இந்த குழந்தையை பார்த்தோம் என சிந்திக்க வைத்தது.அவரது சிந்தனையை களைக்கும் வண்ணம் குழந்தையை பெற்றவள் வந்தாள்.

குட்டிமா இங்க என்ன பண்ற? வா போகலாம்....என்று அழைத்தவள் அப்பொழுது தான் பார்வதியை பார்த்தாள்.

“இது உன் குழந்தையாமா?”

“ஆமாம்மா.....”

“குழந்தை ரொம்ப அழகு மா உன்ன மாதிரியே...என்று ஆரம்பிக்க...

அது வரை வாய் திறக்காம இருந்த குழந்தை” நா அப்பா மாதி தான் அம்மா மாதி இல்ல”என்றதும் மூன்று பெண்களும் மழழையில் மயங்கி சிரித்தனர்.

தேவி,” உனக்கு உங்க அப்பான ரெம்ப பிடிக்குமா?”

ஓஓஓஓ….ரெம்ம்பப,,,,,பிதிக்கும்….

ஜானகி “உன் பெயர் என்ன? “ என வினவ

அபிதா.....என்றது,

உன் அம்மா பெயர் என்ன? குழந்தையுடன் பேசும் ஆர்வத்துடன்

“சுபத்தா(சுபத்ரா).............”என்றதும் பார்வதி ஒரு வேகத்துடன் சுபாவை பார்த்தார்.

உன் அப்பா பெயர் என்ன?

“அத்தூன்(அர்ஜுன்)......” என கூறியது மட்டுமின்றி “அப்பா bird-ல பொய்க்காங்க.... நானும் அம்மாவும் அப்பும் போவோம் இல்ல மா.....” எனவும் புன்னகையுடன் சுபா ஜானகிக்கு விளக்கும் விதமாக “அவ அப்பா வெளிநாட்ல இருக்கார் அத சொல்றா” என்று கூறி விடை பெற்று சென்றாள்.

தந்தையின் பெயர் சரியாக புரியாததால் ஜானகி எதுவும் கவனிக்கவில்லை

அவள் சென்ற பின்பு விளவங்காத பல புதிருக்கு விடை கிடைத்த திருப்தி பார்வதி முகத்தில் தெரிந்தது. தனது முக மாற்றத்தை மகள் அறியாதபடி கவனித்துக்கொண்டார்.

பிரகாரம் வருகயில் சுபாவிடம் சும்மா பேசுவதுபோல் , பேசி அவள் வாராவாரம் இந்த கோவிலுக்கு வருவதை அறிந்து கொண்டார். அந்த குழந்தையை விட்டுசெல்ல தேவிக்கு மனமே இல்லை.

ஜானுவும் அந்த குழந்தையுடன் விளையாண்ட படியே வந்தாள்.

இரவில் தங்கள் அறையில் இன்று கோவிலில் நடந்த அனைத்தும் கூறி தனது யூகத்தயும் கணவனிடம் கூறினார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் “அவன்கிட்ட சொல்ல வேண்டாமா? என்றார். பார்வதி

அவன் இது தெரியாம தான் இங்க வர்ரான் நினைக்கிறியா? எதிர் கேள்வி கேட்டார்.

அபிய பத்தி தெரியாமல் இருக்கலாம் இல்ல? என கூறவும்

இது அவங்க இரண்டு பேர் சம்பந்தபட்ட விசயம் நாம ஒன்னும் சொல்ல முடியது .............சொல்லக் கூடாது அது தான் நல்லது மனச போட்டு குழப்பிக்காம படுத்து தூங்கு எல்லாம் நல்லதே நடக்கும். என்று கூறி விட்டு உறங்கி விட்டார்.


ஒரு வாரம் கடந்த நிலையில்…..

மாலை நேரத்து காற்றை ரசித்தபடி தனது scooty-யை ஓட்டிக்கொண்டு வந்தாள் சுபா. தீடீரென வண்டி நடு வழியில் நின்று விட்டது. முதலில் திகைத்தவள் பின் சுதாரித்து பெட்ரோல் இல்லாததை கண்டு தன் மடதனத்தை நொந்து கொண்டு வண்டியை உருட்டிக்கொண்டு வந்தவள் தனது அருகே ஒரு கார் உரசிக்கொண்டு நிற்கவும் பயந்துவிட்டாள்.

என்ன சுபா பயந்துட்டிங்களா சாரி..... நீங்கதானு இப்பதான் identify பண்ணினேன் அது தான் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினேன்.என ஜானு சிறு குழந்தையாய் விளக்கவும்,ஒன்றும் சொல்லாமல் ஜானுவையே பார்த்திருந்தால் சுபா....



என்னை தெரியலயா அன்னைக்கு கோவில பாத்தோமே , என்றதும் நினைவு வந்து,

It’s ok என சிரித்தாள் சுபா.

நியாபகம் வந்துருச்சா …அப்பா… என்ற ஜானு “என்ன ஆச்சு.....”என்றாள்

சுபா, ”பெட்ரோல் இல்ல.......”

சரி என் கூட வாங்க நான் ட்ராப் பண்ரேன் .......

இல்ல வேண்டாம் நான் பார்த்துக்கிரேன்.....

அட பயப்படாம வாங்க பத்திரமா விடுரேன்.... என்ன நம்புங்க பாஸ்...

அப்படியல்லாம் இல்ல.... உங்களுக்கு சிரமம் வேண்டானு தான்

ஓ.... Let be friends…..

K … but friend-டொட பெயரே தெரியாதே?

ஜானகி ...இப்ப வாங்க no questions என்று கூறி அவள் வீட்டில் விட்டுவிட்டு சென்றாள்.



மறுநாளில் இருந்து தன் வாழ்க்கை பயணம் திசை மாற போவது தெரியாமல்......ஜானகியை அழைத்து உபசரித்து அனுப்பிவிட்டு குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்து விட்டு குழந்தைக்கு தேவயானதை கவனித்து உறங்க வைத்து தானும் உறங்க சென்றால்.......


சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தவள் அப்படியே நின்றுவிட்டால்......அபி உறங்குவது கூட அவனை போல் தான் என நினைத்து கண்களில் கண்ணீர் வழிய நின்றாள்......இனி அவனை சந்திக்க போவதில்லை என என்னும் போதே உயிருடன் சவாது போல் வலித்தது....அவனுடன் வாழ்ந்த கொஞ்ச நாளை எண்ணி என் மீதி வாழ்க்கையை கடத்த வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..அவள் அவனை பிரிந்த நேரம்......அதன் காரணம் ....சொல்ல முடியுமா? சொன்னால் என்ன நடக்கும்.....அவள் மட்டுமே அறிந்தது,........



அனல் அடிக்கும்.........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top