அத்தியாயம் - 9

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 9

தாயிடம் சொல்லிவிட்டு அறைக்குச் சென்றவர், சிவகாமியை பார்த்தவாறே தனது உடையை மாற்றி விட்டு, வெளியில் செல்லும் முன் அவரது முகம் நோக்கிக் குனிந்து,

“எம்புட்டு ஏத்தமடி உனக்கு! அம்புட்டு சனம் கூடி நிக்குது தண்ணி சொம்பு வச்சு அடிக்கிறவ, அஜாடி!” என்று மனைவியை கோபம் போல் கொஞ்சிக் கொண்டவர் பல் பதிய கடித்து விட்டு ஓட.

அவர் சென்று சிறு நொடிகளே, கழுத்துக்கு கீழ் பகுதியில் சுருக்கென வலி எடுக்க, பதறி கத்தி விட்டாள், சிவகாமி.

அப்பொழுது தான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று நாச்சி தலை சாய்க்கப் போக, சிவகாமியின் அலறலில் பயந்தவர், அடித்துப் பிடித்து ஓடி வந்தார்,

“ஆத்தி! என்ன?பாப்பா! சிவா! என்று குரல் கொடுத்த வாறே வெளியில் ஓடி வர, அவர் கண்டது வேட்டியை மடித்துக் கட்டி கொண்டே, தோளில் உள்ள துண்டை கீழே விழாமல் இருக்க, தனது தலையை சாய்த்து பிடித்து சத்தமாகச் சிரித்துக் கொண்டே ஓடும் மகனைத் தான்.

“பாப்பா இம்புட்டுச் சத்தம் போட்டு கத்துது. இவுக என்ன ஓடுறாக! பஞ்சையும் பண்ண ஈரம் காயல!” என்று புலம்பிய வாறே அம்பலத்தான் அறைக்குள் நுழைந்தார்,

சிவகாமி அங்கு தலையைக் குனிந்தவாறு, வலது பக்க நெஞ்சை நீவி கொண்டு இருந்தார். சிவகாமிக்கு என்னவோ ஏதோவென்று பதறியவர்,

“பாப்பா என்ன நெஞ்சைப் புடிச்சுகிட்டு இருக்கவ? என்ன சாமி ஆச்சு?” தனது அருகில் மாமியார் குரல் கேட்க,

திடுக்கிட்டவர் அவரைப் பார்த்து, திருதிருவென முழித்து வைத்தாள்.

“என்ன பாப்பா ஆச்சு, இந்த முழி முழிக்க?”

“அது! அது மாமி! நே...... நேக்குக் கனவு. கொஞ்சம் அதான் பயந்துட்டேன் வேற ஒன்னுமில்லை.” வேறு என்ன சொல்ல முடியும், அம்பலத்தான் பதம் பார்த்த இடம் சற்று சர்ச்சைக்கு உரியது அல்லவா.

“கொஞ்சம் கனவா! நல்லாதேன். போ பாப்பா இப்போதேன் அசந்து வருதுன்னு குறுக்கக் கீழ சாச்சேன்.” என்றவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

மெதுவாக அவரது கைகளைப் பற்றி சலுகையாக நெருங்கி அமர்ந்து கொண்டவள், “மன்னுத்துக்கோங்க மாமி, பயந்துட்டன்.”

“அது சரி. உம்ம புருஷன் ஏன் அந்த ஓட்டம் ஓடுனாரு? என்னமோ போக! இனி நீதேன் அம்புட்டையும் பார்த்துக்கிடனும். எங்க வூட்டு ராசாவையும்.” என்றவர் “நான் செத்த படுத்துக்கிடுறேன். நீ படுத்துக்கோ சாமி.”

“சரி மாமி.” என்றவள் கணவனது வேலையை எண்ணி ‘கொழுப்பை பாரேன் மீசைக்கு, வரட்டும்.” என்று முனங்கிக் கொண்டாள்.

எதிர்பாராத செயலில் வலி தாங்க முடியாமல் உறக்கமும் தெளியாமல், என்ன ஆச்சு என்று புரியாமல் முழித்தவள், தனது கணவன் தான் காரணம் என்றதும், கோபம் கலந்த நாணம் வந்தது.

அம்பலத்தான் பொல்லா நேரம், அவள் கத்தி வைக்க அவன் ஓட்டம் பிடிக்க, நாச்சி அல்லாது அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த சிவநேசனும் பார்த்து வைத்தார்.

“மாப்புள்ள! என்ன ஓட்ட பந்தயம் ஓடுறான்? தங்கச்சி வேற கத்தி கூப்பாடு போடுது.பஞ்சாயத்து முடிஞ்சு ஒரு நாள் கூட ஆகலையே போனவய்ங்கள திரும்ப வரச் சொல்லணுமோ! டேய் மாப்புள்ள, நில்லுடா! என்னத்துக்கு இந்த ஓட்டம் ஓடுறவேன். வயசான காலத்துல விழுந்து வாரி வைக்காத. ஆச்சிக்கு வாரிசு வேணும்டி.” என்று அவரும் ஓட்டம் பிடித்தார்.

அதற்குள் ஆள் நடமாட்டம் உள்ள தெருப் பகுதி வர ஓட்டத்தை நிறுத்தியவர், கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார், அம்பலத்தான்.

அவர் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்த சிவநேசன், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார் விட்டார் அதற்கு மேல் ஓட முடியவில்லை.அவர் மூச்சை இழுத்து இழுத்து விட.

அவ்வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர்,“என்ன சிவநேசா, இம்புட்டு வேகமா ஓடியார? பாரு மூச்சு வாங்குது.” என்றவர் தனது மகளுக்கு குரல் கொடுத்தார்.

“எப்புள்ள செலுவி. மாமனுக்கு தண்ணி கொண்டு வா தாயி!”

“ஒண்ணுமில்லை மாமா. சும்மா” என்ற சிவநேசன் மேலும் மூச்சு வாங்க,

“சிவா மாமா, இந்தாங்க தண்ணி.” என்று வெட்கப் பட்டவாறே சொம்பில் தண்ணீர் கொடுத்தாள், செல்வி.

“நீ நல்லா இருப்ப தாயி” என்றவர், அந்தப் பெண் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஓடி வந்த களைப்பில், தண்ணீரை வாங்கி மடக் மடக்கெனக் குடித்து விட்டு, சொம்பை கொடுக்க அதைக் கையில் வாங்கியது என்னவோ, அவரது சம்சாரம் தான்.

சிவகாமி செய்தியை அறிந்தவர், சிவகாமியை பார்க்க அம்பலத்தான் வீட்டுக்கு வர.வரும் வழியில் தனது கணவன் பெரியசாமி பெரியப்பா வீட்டில் அமர்ந்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்தவள், நேராக அவர் முன் நின்று விட்டாள்.

சிவநேசன் அம்பலத்தான் போல் நல்ல உயரம். அவரை விட நிறமும் கூட என்பதால், உறவு பெண்கள் அனைவரும் வண்டாகச் சுற்றித் திரிய, அவரைப் பாதுகாப்பதே மனைவியின் வேலையாகிப் போனது, தனிக் கதை.

இப்போது வெளியில் செல்கிறேன் என்று வந்தவர் இங்கு அமர்ந்திருக்கவும், கொதித்துப் போனாள்.

“என்ன புள்ள?”

“என்ன, என்ன புள்ள? அண்ணே வூட்டுக்குப் போறேன்னு வந்துவுக. இங்கன என்ன தாகம் தனுச்சுக் கிட்டு!” என்று கோபமாகக் கத்த

“என்ன புள்ள? ஆரு வூட்டுல குடிச்சான், அவன் மாமன் வூடு தானே!” என்று அந்தப் பெரியவர் ஏகுற

அவளும் பதிலுக்கு ஏகுறினாள்.

“இன்னும் இரண்டு எட்டு வச்சா அண்ணே வூடு. அதை விட்டுப்போட்டு உங்க மருமகனுக்கு இங்கன தான் குடிக்கணும்னு தோனி இருக்கு. தண்ணி இங்கன இனிச்சு கிடக்கு போல” என்றவள், தங்கை முறை உள்ள பெண்ணையும் அவனையும் பார்த்து முறைத்து விட்டுச் செல்ல.

அப்போதுதான் சிவநேசன் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தார் சிவநேசன். பார்த்தவர் நொந்தே போனார். நாணி கோணி நின்றது பெண் மானசீகமாகத் தனது நண்பனைத் தீட்டியவர். அந்தப் பெரியவரையும் பார்த்து “வரேன் மாமா.” என்று வேகமாகச் செல்ல

“என்கிட்ட சொல்லாம போறீங்க, மாமா” அந்தப் பெண் சிணுங்க, ஓடியே விட்டார்.

“ஆத்தி! அடேய்! மாப்புள்ள! எனக்கு பஞ்சாயத்தை கூட்டிவிட்டு போயிட்டியே!” பிடித்தார் ஓட்டம்.

அந்தப் பெண் வேறு யாருமில்லை. சிவநேசனின் முறைப் பெண். தந்தை வழியில் கட்டியது தான் அவரது மனைவி லட்சுமி. செல்வி தாய் வழி உறவு முறைப் பெண் அதனால் தான், முறைத்துச் சென்றாள்.

“உன் பின்னாடி வந்ததுக்கு எனக்கு நல்ல வேலை பார்த்து வச்சிட்டடா அம்பலத்தான்!” என்று மனைவியைச் சமாதானப் படுத்தச் சென்றார், சிவநேசன்.

அம்பலத்தான் மட்டும் எதற்கு ஓடினான் என்று தெரிந்தால், சிவநேசன் நிலை என்னவோ?

நல்ல வேளை, அதற்குள் மனைவியுடன் ஊடல்...!

**

திருமணம் முடிந்து பதிமூன்று வருடங்கள் சென்று, கணவன் மனைவியின் முதல் இரவு.பல இரவுகளில் மழலையாக, மகளாக,தோழியாகத் தெரிந்தவள், இன்று தாரமாகத் தெரிய, ஒரு ஆனந்த தாண்டவத்தை ஆடிப் பார்க்கத் தான் எண்ணினார், அம்பலத்தான்.

கடையில் கணக்கை முடித்து விட்டு, இரவு விடுவர நெடு நேரம் பிடித்தது. அதற்குள் இட்லி அவித்துத் தேங்காய் துவையல் செய்து மணக்க மணக்க பொடி போட்ட சாம்பார் தாளித்து வைத்து விட்டாள், சிவகாமி.

மருமகளின் கை பக்குவத்தில், அவர்கள் வீடே நெடி வீச, திவ்யமான திருமால் பிரசாதம் போல் இருந்தது, இரவு உணவு.வெகு வருடங்கள் சென்று கிட்டிய நிறைவால் பெரிய நாச்சி உறங்கி விட, கணவனுக்காகக் காத்திருந்தாள், சிவகாமி.

இயல்பிலேயே தைரியமான பெண். அதுவும் நாச்சியின் போதனை கூடுதல் சிறப்பு என்பதால், எந்த வித பயமுமில்லை. கணவன் என்ற நிலையில் ஒரு தவிப்பு மட்டும். அதுவும் தனித்து நிற்கும் நிலை என்பதால்.அவர் செய்து விட்டு சென்ற செயல் வேறு, அவ்வப்போது கூச்சம் காட்டியது.

முழித்துக் கொண்டே கனவு கண்டவளை கலைத்தது, அம்பலத்தானின் வருகை. வெளியில் செருப்பைக் கழட்டியவர், சிவகாமியை கூர்மையாகப் பார்த்தவாறே உள்ளே வந்தார்.

எந்த வித பேச்சுகளும் இல்லாமல் தன்னைச் சுத்தம் செய்ய வேண்டி, தனது அறைக்குச் செல்ல. அவளும் அவரது பார்வையைத் தாங்கியவாறே அடுக்களைக்குள் சென்றாள். இரவு உணவை இருவருக்கும் எடுத்து வைக்க, நெடு நாள் வாழ்ந்து பார்த்தவர்கள் போல, வெகு இயல்பாக இருவரும் நடந்து கொண்டனர்.

அம்பலத்தான் அவர் ஆஸ்தான இருப்பிடத்தில் வந்து அமர்ந்து கொள்ள, சிவகாமி அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு தட்டை வைத்து பரிமாறினார்.

இட்டிலியை பிய்த்து அதனைச் சாம்பாரில் தோய்த்தவர், முதல் கவளத்தை சிவகாமியை நோக்கி நீட்ட, அதிர்ந்தவள் கண்ணில் நீர் திரள, அவரைப் பார்த்துக் கொண்டே, தனது பவள வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

அவளுக்கும் ஊட்டி, இடை இடையே அவனும் உண்டு, தங்களது இரவை இனிமையாக்கத் தயாரானார்கள் தம்பதியினர்.

அதன் பின் அடுக்களையை ஒழுங்கு படுத்தி விட்டு வந்தவள், அம்பலத்தான் அறைக்குள் நுழைந்து கதவை தாள் போட,

வெள்ளை வேட்டியும் கை பனியனுமாக, கால் ஆட்டிக் கொண்டு படுத்திருந்தார், அம்பலம். பார்வை மனைவியைத் தொடர்ந்தது.

மெதுவாக அருகில் வந்து, அவருக்கு சற்று தள்ளி படுத்துக் கொள்ள, அதற்காகவே காத்திருந்தவர் போல, அவள் புறம் திரும்பி,இடுப்பில் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டவர், கழுத்து வளைவில் புதைய.

கண் மூடி அதனை ரசித்தாள் சிவகாமி. அவள் ஏதுவோ பேச வர, அதற்கு முன்னே,

“என்னால பேச முடியாது புரிஞ்சுக்கிடுக. பதிமுனு வருஷம் பச்சை தண்ணி கூட இல்லாம காலத்தை ஓட்டிப்புட்டேன். இனி ஆகாது.அது இது சாக்கு வைக்காதீக! அவகாசம் கொடுக்கிடுற நிலையில நான் இல்ல.” என்றவர் அடுத்த நொடி அவரை இறுக்க அணைத்தார்.

அம்பலத்தான் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து சிவகாமி அம்மையாரும் சரணடைய, அடுத்து அவர் ஆடிய ஆட்டம் அனைத்தும் ஆனந்த தாண்டவம் தான். அனைத்து வகை உணர்வுகளையும் பரிசோதித்துப் பார்த்து விடும் நோக்கத்தோடு, ரசித்து ரசித்து ஜதை போட்டார்.

அநியாயம் செய்யும் ஈட்டிகாரன் போல், ஒவ்வொரு ஆண்டுப் பிரிவுக்கும், வட்டி விகிதம் வசூலிக்கும் அவரது செயலுக்கு,சிணுங்கி மறுத்து வாதம் செய்தார், சிவகாமி.

உயிர் எடுக்கும் கண்ணாளனை உத்தமன் என்று சொல்லும் இவ்வூரை எண்ணி செல்ல கோபம் வர, மனதோடு மல்லுக்கட்டினாள், சிவகாமி.

“மாற்றானுக்கு மட்டுமே அவன் உத்தமனாம் அவளுக்கு உற்றவனாம்." பொல்லா மனதும் அவருக்கே வக்காலத்து வாங்கியது தான் வெகு சிறப்பு.

தவித்து அடங்கும் அரிவையின் அரிச்சுவடி முதல் அறிந்து கொண்டவர், முகத்தில் தான் எத்தனை காதல், கர்வம்! அவனது வன்மை தாங்காது தன்னை வன்மையாக அணைத்து மார்பில் புதைந்தவரை விலக்கி, தன்னை பார்க்கச் செய்தவள்,

"மீசை, என்ன தான் ஊரைக் கூட்டி உங்களை ஏத்துக்கிட்டாலும், நேக்கு உங்க மேல கோபம் உண்டு. அது என்ன பேச்சே பேசவிடாமல் பாயுறது."

“இப்போ என்ன பேசணும்? அதான், ஆதவன் மறையுர வரை நேரம் இருக்கு. எம்புட்டு வேணாலும் பேசுக. கடைக்கு விடுமுறை சொல்லிடுறேன்.”

காது மடல் அளந்து கொண்டே கதை அளந்தவரை தடுக்க முடியாமல் துடித்த சிவகாமி,

“ஏன் சந்திரன் இருக்கும் போதும் பேசலாம்! தப்பில்லை. நீங்க என்ன திருகுத்தனம் பண்ணாலும், அவர் சாட்சி சொல்வார்!”

“ஓ..! அப்போ சொல்லச் சொல்லுடி!” என்றவர் தனது பெருவிரல் கொண்டு மருதாணி இட்ட மெட்டி கொண்ட கால் விரலை நீவி விட, துள்ளி அடங்கினார், சிவகாமி.

அம்பலத்தான் அடாவடிக்காரன் என்று சில ஆண்டுகளுக்கு முன் தான் தெரியவந்தது. சிறு சிறு சீண்டல்கள் மட்டுமே கொண்டவர், இன்று முழுதாக விழுங்க, திணறிப் போனார், சிவகாமி.

“மீசை, மூச்சு முட்றது, விடுங்கோ!”

“என்னடி மாமி?” என்றவர் வேண்டுமென்றே தனது மீசை கொண்டு தீண்ட,

“ஐயோ! ஏண்ணா படுத்தறேள்?” என்றவள் வார்த்தை காத்தாகத் தான் வந்தது.

அகநாநூறு அம்பலத்தானைப் பார்த்து புறமுதுகிட்டு ஓடியது தான் விந்தையிலும் விந்தை! நல்ல அகம் கொண்டு அவள் அகத்தைக் கொண்டு அழகாக அகம் நூல் செய்தார், அம்பலத்தான்.

இருவரும் உணர்வு கொண்டு உயிர்ப்பை தீண்டி ரசித்து ருசித்து காதல் செய்து உச்சம் தொட, இரு தரப்பு தலைமுறைகளும் ஒன்று இணைந்தது பல சிறப்புகளுடன்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top