அத்தியாயம் - 9

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 9

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த மறுவீடு விருந்து.......

மறுவீடு விருந்து கலை கட்டியது விருதுக்குப் பெண் மாப்பிள்ளையுடன் அனைத்து மருமகளும் செல்லும் படி பார்த்துக் கொண்டார் சுந்தரம்.அவரை பொறுத்தவரையில் அனைவருக்கும் சம உரிமை உண்டு அதன் படி இதோ அனைத்து பெண்களின் வரவு.

பெரியவர்கள் அனைவரும் கூடத்தில் கலகலத்துக் கொண்டு நிற்க பெண்கள் அனைவரும் ஓர் அறையில் அரட்டை மாதங்கி மட்டும் தனது தாயுடன் இருந்து கொண்டாள்.

மாதங்கியின் ஒதுக்கம் தெரிந்தது தான் என்றாலும் நல்ல நாளில் கூட அவள் தனித்துத் தெரிவது மற்ற பெண்களை உறுத்தியது.விமலாவுக்கு அக்காவின் செய்கை ஏக எரிச்சல் தான் அனைவரின் முன் அவளைக் கண்டிக்க முடியவில்லை.கண்டிக்க வேண்டிய தாயே அவள் பின்னில் இதை எங்குப் போய்ச் சொல்ல.

அமுதா, சீதா,தாமரை மற்றும் மூன்று உறவு பெண்கள் இருக்கப் பேச்சும் சிரிப்புமாக அமர்ந்து இருந்த தங்கையைப் பார்த்த தமக்கைக்கு ஏக கடுப்பு “கொஞ்சமாவது கூறு இருக்கானு பார் இந்தச் சின்ன நாய்க்கு அவ தான் சின்னப் புள்ள அமுதா,சீதாவுக்கு என்ன இதுங்கள” என்று பொருமி கொண்டே வந்த மாதங்கி.

“சீதா அவ தான் சின்னப் பொண்ணு தெரியாம இருக்கான நீயும் அவ கூட உட்காந்துகிட்டு சிரிச்சுகிட்டு இருக்க இந்த கூத்த என்னனு சொல்ல” தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தன்னைச் சாடும் ஓரக்கத்…தியை ஓர் புரியா பார்வை வைத்தாள் சீதா.

“என்னங்க அக்கா?”

“என்னங்க அக்காவா! அது சரி சொந்தமெல்லாம் வெளில இருக்கு வந்தவுங்கள வாங்கனு சொல்ல வேண்டாமா? யார் விசேஷத்துக்கு வந்து இருக்காங்க எல்லாரும்? இவளுக்காகத் தானே தம்பி கூடச் சேர்ந்து மக்க மனுஷாள வாங்கனு சொல்லி ஒரு இரண்டு வார்த்தை பேச வேணாம்”

அவர் சொல்வதும் சரிதானே என்று எண்ணிய அமுதா “சரிக்கா கூட்டிகிட்டு வரேன்” என்றவர்கள் விமலாவை அழைத்துக் கொண்டு வர பொறுப்பாகப் பேசும் தனது தமக்கையை ஆராச்சியாகப் பார்த்துக் கொண்டு வந்தாள் விமலா அவளுக்கு இதோ ஒன்று சரில்லை என்று பட்டது.

ஏனென்றால் மாதங்கி காரியவாதி பொறுப்பென்றால் அவளது குடும்பம் மட்டுமே அதாவது புருஷன், பிள்ளைகள், அவள் தாய் தகப்பன் கூட இரண்டம் பட்சத்தில்.

அவர்களுக்கே அப்படி என்றால் நான் உடம் பிறப்பு எனக்கு எப்படி? அத்தனை பொறுப்பா என் தமக்கை? தனக்குள் கேட்டு கொண்டவள் தலையைக் குலுக்கி இருக்காது என்று சரியாகக் கணித்தாள்.

அவள் எண்ணியது போலவே தான் நடந்தது.தனது பெரியம்மா முறை உள்ள பேரிளம் பெண்ணிடம் சென்று அமர்ந்து கொண்டு “ஏய் விமலா இங்கவாடி” தங்கையை அழைக்க கூட வந்த பெண்கள் எல்லாம் தேங்கி நிற்க தமக்கையை நோக்கி சென்றாள் விமலா.

உள்ளுக்குள் எரிச்சல் இருந்தாலும் முகத்தில் போலி சிரிப்பை வைத்துக் கொண்டு தனது பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டவளது கைகளை பற்றி கொண்ட மாதங்கி “பார்த்திங்களா பெரியம்மா நான் சொன்ன மாதிரியே என் தங்கச்சிக்கு என் கொழுந்தனை கட்டி வச்சுட்டேன்” மார் தட்டி கொள்ளாத குறையாக பெருமை பேச

அவரோ அதற்கு மேல் “நீ தான் கெட்டிக்காரி ஆச்சே புகுந்த வீட்டுல உன் ஆட்சி தான் போல” நல்ல கொம்பு சீவிவிட

இவர்களது உரையாடல் பார்த்த விமலாக்கு தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தோன்றியது. என்ன பேச்சு இது ..... இது திருந்தாத கேஸ் எரிச்சலில் எதார்த்தமாகத் திரும்பியவளை நெற்றி கண் தெரிந்த முறைத்துக் கொண்டு இருந்தான் ராஜன்

அவனைக் கண்டு திடுக்கிட்டாலும் அதனை காட்டிக்கொள்ளாமல் விமலா “இவன் வேற கரெக்ட்டா வந்து நிற்பான் ஐயோ!சும்மாவே ஆடுவானே இப்போ என்ன சொல்ல போறான்னு தெரியல.கண்ணுல வேற செவப்பு லைட் எரியுது எல்லாம் இந்த மாமாவால வந்துச்சு எங்க அந்த மனுஷன்” என்றவள் கண்கள் சுந்தரத்தை தேடியது.

அவரோ உரத்த குரலில் தனது சமந்திங்களிடம் கதையளப்பு அதுவும் சிரித்துச் சிரித்துப் பொறுக்குமா இளையவளுக்கு உடனே அந்த இடத்தை விட்டு எழுந்தவள் “ஒரு நிமிஷம் பெரியம்மா இதோ வந்துறேன்” மரியாதை நிமித்தம் அவரிடம் சொல்லிவிட்டு வேகமாகச் சுந்தரத்தை நோக்கி சென்றாள்.

இங்கு ஒருவன் முறைத்துக் கொண்டு இருக்கத் தன்னைக் கண்டு கொள்ளாமல் செல்லும் மனைவியின் மேல் எக்கு தப்பாகக் கோபம் வர தூக்கிவிட்டான் அவளை.

செல்லும் அவளை வழியில் மடக்கி அவளது அறைக்குக் கடத்தி சென்றுவிட்டான் சுந்தரத்தின் மகன்.எதிர்ப்பாரா சமயம் இழுக்கப்பட்டதில் பயத்தில் அலற போனவள் ராஜனது முகத்தைப் பார்த்து அமைதியானாள் “என்னங்க எதுக்கு இழுத்துக்கிட்டு வரீங்க இத்தனை பேரு இருக்கும் பொது”

“பேசாம வா சொல்லுறேன்” என்றவன் அவளது அறைக்குள் சென்று கதவை சாத்த

“என்னது இது வெளில எல்லாரும் இருக்காங்க என்ன நினைப்பாங்க விலகுங்க”

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் விமலா உங்க அக்கா பண்ணுறது எதுவும் சரில்ல சொல்லிட்டேன்”

“அதுக்கு என்னை என்னப் பண்ண சொல்லுறீங்க பிறவி குணம் மாத்துறது ரொம்பக் கஷ்டம்”

ஓ!…. அப்போ அவங்க குணம் அப்படித்தான் நீ பொறுத்து போங்கனு சொல்லுறியா”

“வீம்புக்குனு பேசாதீங்கப்பா அவ குணம் தெரியும் தானே”

“அதுக்குன்னு ரொம்பப் பேசுவாங்களா இதுக்குத் தான் உன்ன கட்ட மாட்டேன்னு சொன்னது” கோபத்தில் அவன் வாய்யை விடக் பெண்ணுக்கு கண்ணில் இருந்து ஊற்று பெறுக

“எதுக்குக் கட்டணும்? நானே கேட்டேன் கட்டிங்கோங்கனு? உங்களுக்கு எங்க குடும்பத்தையே புடிக்காதுனு தெரியும் இதோ இப்படித்தான் நடக்கும்னு தெரியும். அதான் நானும் உங்கள கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன் யாரு கேட்டா..

ஓ!.. என்னை வேணுன்னு வேற சொன்னியே நீ. அவன் அதுக்கும் அவளை வறுத்தெடுக்க

இவனோடு என்னடா அக்கப்போர் இவனும் தானே சொன்னான் உன்ன மணக்க முடியாது என்றேன் என்பது போல். நானும் அதே தானே சொன்னேன் அப்பப்ப.... சுந்தரரே........... மாமனாருக்கு நல்ல இடி மனதில் அனைத்துக்கும் பிள்ளையார் சுழி அவர் தானே.

“இப்போ என்னதான் என்னப் பண்ண சொல்லுறீங்க”

இங்க பார் எனக்கு நம்பக் குடும்பத்துல உள்ள ஒவ்வொருத்தரும் முக்கியம் எல்லாரும் சமம் ஒற்றுமையா வாழ பழகு.முதல உங்க அக்கா கூட பேசுறத நிறுத்து மத்த அண்ணின்களை பார்த்த தானே அவுங்களை மாதிரி நடத்துக்கோ” என்க.

“இங்க பாருங்க நான் நானா தான் இருக்கேன் எனக்கும் தெரியும் புகுந்த வீட்டுல எப்படி இருக்கனுமுனு நீங்க முதல எங்க அக்கா நடத்தைய கொண்டு என்னைச் சந்தேகப் படுறத நிறுத்துங்க.

ஒரே கையில இருந்தாலும் அஞ்சு விரலும் ஒன்னாவா இருக்கு என் மேல நம்பிக்கை இல்லாதவறு எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணனும்? இதைச் சொல்லும் போதே அழுகை வந்து விட்டது அவளுக்குத் திருமணம் ஆனா அன்றே இதே போல் பேச்சை விட்டானே.

விக்கி விக்கி அழுதுக் கொண்டே பேசியவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.அவளது பேச்சும் நியாயம் தானே பிடிக்கவில்லை என்று ஒற்றைக் காலில் நின்று இருந்தால் யார் என்னச் செய்ய முடியும்.உண்மையை உடைத்து சொல்ல போனால் அவள் மீது இளம் வயதிலே பித்துத் தான் மாதங்கியை மனதில் கொண்டே இந்த ஒதுக்கம்.

அவளது கண்ணீர் மனதை சுட அவளிடம் நெருங்கி நின்றவன் ஒய்!... என்ன ஒண்ணாப்புப் பாப்பா கணக்கா ஏங்கி ஏங்கி அழகுற மூச்சுவிடுடி அவனது நெருக்கும் மென்மையாக வரும் அவனது பேச்சு புதுமையாக இருக்க அவை மேலும் நடுக்கம் கொடுக்க வெளியில் செல்ல போனவளை தடுத்து.

“பேசிகிட்டு இருக்கும் பொதுப் போறது என்ன பழக்கம் முழுசா பேசுறதை கேட்டுட்டு போ உன்ன நம்பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கேனா? எங்க அப்பா பார்த்த பொண்ணு அதுவும் எனக்குப் பிடித்த பொண்ணு எப்படி நம்பாம இருப்பேன்”

என்னது உனக்குப் பிடித்த பொண்ண! இது என்ன புதுக் கதை மனதுக்குள் எண்ணியவள் மருண்டு அவன் முகம் பார்க்க

“என்னடி பார்வை தாவணி போட்டதுல இருந்து புடிக்கும் விவரம் தெரியும் பொது உங்க அக்கா குணமும் கண்டு கிட்டேன் அதான் ஒதுங்கி இருந்தேன்.எனக்கு பட்டுப் பட்டுனு கோபம் வரும் அதான் உங்கிட்ட பேச வரல எப்படியும் நீ தான் எனக்குன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு சரி கல்யாணம் ஆகட்டும் பார்த்துக்கலாம் விட்டுட்டேன்”

புது கதை புனையும் அவனை இன்னும் நம்பாமல் பார்க்க

அவளது பார்வையை புரிந்து கொண்டவன் “என்ன?”

“நம்ப முடியல”

“அது எப்படி நம்ப முடியும் நீ மாதங்கி அண்ணி தங்கச்சி ஆச்சே” அவனது பேச்சில் சுள்ளெனக் கோபம் வர “தெரியுதுல பேசாதீங்க வழிய விடுங்க”

“முடியாதுடி என்ன பண்ணுவ”

“ரொம்ப வம்பு பண்ணுறீங்க எல்லாரும் வெளில தான் இருக்காங்க எங்க அப்பாவும் வெளில தான் இருக்காரு”

“அடேயப்பா இருக்கட்டுமே என்னடி பயம் காட்டுற”

“ஆமா அப்புடியே பயந்துட போறீங்க எனக்குத் தான் சாமி பயம் தள்ளுங்க நான் போகணும்”

“முடியாது”

“இது என்ன வம்பு”

“நானாடி வம்பு பண்ணுறேன்”

“நீங்க தான் வேற யாரு”

“சரிடி நான் தான் வம்பு பண்ணுறேன் என்னங்கிற இப்போ”

இதற்கு மேல் இவனிடம் மல்லுக்கட்ட முடியாது என்று எண்ணியவள் ஓய்ந்து போய்க் கட்டிலில் அமர அவனுக்கும் அதானே வேண்டும்.மெல்ல கதவை பூட்டியவன் அவள் கவனம் கலையாத வாரு ஜன்னல்களைச் சாத்தி விட்டு வந்து சமத்துப் பிள்ளையாக அவளை நெருங்கி அமர்ந்து கொள்ள.

அதுவரை அவனை மனதுக்குள் கடித்துத் துப்பிக் கொண்டு இருந்தவள் அவன் நெருங்கி அமரவும் ஒருவித நடுக்கும் பிறக்க என்ன என்று கேட்டு வைக்க

“என்னடி என்ன ஏகத்தலாமா கேட்கிற என்னங்க மாமா இல்ல அத்தான் னு சொல்லு”

இவனை என்ன செய்ய என்பது போல் பார்த்தவள் “ரொம்பதான் போங்க உங்க பேச்சே சரில்லை”

“பேச்சு மட்டுமா நானே சரில்ல தான் என்றவன் விளையாட்டைக் கைவிட்டு தனது கைகளை அவளிடம் நீட்டி கண் கொண்டு ஏவி கையைப் பிடி என்று மௌன மொழி சொல்ல பெணின் ஒவ்வொரு அணுக்களிலும் ஆயிரம் நடுக்கம் ஆத்தி இது என்ன கைய புடிக்க சொல்றான் அதிர்ந்து அரிவை.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top