அத்தியாயம் -8

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் - 8

அப்புச்சி அம்பலத்தானுக்குப் பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு சிவகாமி பொங்க, அத்தனை பெரியவர்கள் முன்னிலையில் சிவகாமி பேசுவதைத் தடுக்க எண்ணி, கத்தி விட்டார் அவரது தாய் கண்ணாம்பா.

தகப்பன் ரசனை கொண்டு அம்பலத்தான் கூத்தை பார்க்க கை கட்டி நிற்க, ஏனைய மக்கள் அனைவரும் பார்வையாளரே!

“பெரியவா இருக்கச்ச என்ன பேச்சு இது? ஆம்படையானை பெயர் சொல்லிக் கூப்பிடலாமோ? என்ன பழக்கம்?” கடிந்து கொண்ட தாயைப் பார்த்து,

“அதான், என்னைத் தார வார்த்துட்டேளே! அப்புறம் என்ன மிரட்டல்? நான் பெரிய நாச்சி மருமாள்! என் மாமி தப்புன்னா தைரியமா பேசச் சொல்லிருக்கா.” என்றவளை என்ன செய்தால் ஆகாது என்று முறைத்தார், கண்ணாம்பா.

சிவகாமி பேசியதில் பெரிய நாச்சிக்கும் அவரது மகனுக்கும் ஓர் அழகான புன்னகை தோன்ற, சபையில் அதனைக் காட்டாது மறைத்தனர்.

சிவநேசன் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அப்பாடி! மாப்புள்ள, நல்ல வேளை, உன் பொஞ்சாதி கோபத்துல போடா வாடானு சொல்லல. பெயரைச் சொல்லிப் புடுச்சு. அந்த நடராஜன் மானத்தைக் காப்பாத்திட்டான்.” வாய் கொள்ளாப் புன்னகையுடன் சிவநேசன் வம்பு செய்ய.

“நல்ல ஆடுற வரைக்கும் ஆடட்டும் மாப்புள்ள. உன் தங்கச்சி எம்புட்டுத் தொலைவு போறான்னு பார்க்குறேன்.” என்று சொன்ன அம்பலத்தானை, ஒரு மாதிரி பார்த்து வைத்தார், சிவநேசன்.

அவரது பார்வை உணர்ந்த அம்பலத்தான், “அங்கன பாரு”
அவர் முகத்தைச் சிவகாமி நிற்கும் இடத்தை நோக்கி திருப்பி விட்டவர் முகம், சற்று கடுமையாகத் தான் இருந்தது.

மகளைக் கண்டித்த தாயிடம் அப்புச்சி, "விடுங்கம்மா பாப்பா ரணப்பட்டுப் போச்சு. பேசட்டும்!” என்றவர்

“நீ பேசு தாயி அம்புட்டையும் இன்னைக்கே சரிக் கட்டிப் புடுவோம்!”

அவர் சொன்னதும் கோபம் தணிந்து அனைவரையும் தலை உயர்த்திப் பார்த்தவள்,
இரு கரம் கூப்பி “பெரியவா எல்லாம் என்னை மன்னுச்சுடுங்கோ! மரியாதை இல்லாம பேசுனத்துக்கு. நேக்கு ஆதங்கம் வேற ஒண்ணுமில்லை.” என்றவள் மேலும் தொடர்ந்தாள் தனது குமுறலை.

“உங்க எல்லாருக்கும் என் கல்யாணத்துக்கான காரணம் தெரியாது. இதுவரை எங்க மாமி யாரண்டையும் சொன்னதில்லை, ஏன்? கல்யாணம் பண்ணுறச்ச, எனக்கே தெரியாது.

பிறந்த வீட்டுல நேக்கு வறுமை ஜீவனம் தான். மூனு வேலையும் அந்தத் தில்லை நாதன் பிரசாதம் தான். அதுவும் சில நாள் இல்லை.

அந்தப் பசிக்காக என் தோப்பனார் என்னைத் தார வார்க்கையில, காசு இல்லாமல் இருந்தாலும், மானம் வேணும் தானே!” என்றவள் தொண்டை அடைக்க.

“என்ன அந்த மிராசுதாரர் தப்பா......” என்றவளுக்குக் கண்ணில் அருவியாகக் கொட்டியது நீர். அதற்கு மேல் பேச முடியவில்லை, என்ன தான் குடும்ப உறுப்பினர்கள் என்றாலும்.

சபையில் அத்தனை பேர் முன்னும் தனது வறுமையை, பாதுகாப்பு இன்மையை, தனது திருமணம் இதனால் என்ற காரணத்தைச் சொல்ல மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே!

அவளது அழுகையைக் காண முடியாமல் பெற்றவர்கள் துடிக்க, சுற்றி இருந்த நேர் கொண்ட மனிதர்களுக்குத் தாங்க முடியவில்லை.

“சிவா பாப்பா. நீ ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை விடுங்க, அப்பு!” என்று பேசப் போன பெரிய நாச்சியை தடுத்த சிவகாமி,

“இல்லை மாமி. நான் பேசிடுறேன்.” என்றவள்

“அப்பாவை ரொம்ப மிரட்டுனா. நான் பள்ளிக் கூடத்துக்குப் போகும் போது, வம்பு செஞ்சா. இதுவே தொடர, ஒரு நாள் கோவிலுக்கே வந்து வம்பு பண்ணுனா! என் தோப்பனார் பயந்துட்டார்.

அவருக்கு ஆள் பலமும் இல்லை. பணம் பலமும் இல்லை. எங்காத்து மனுஷாள் எல்லாம் எதுக்கு வம்புனு ஒதுங்கிட்டாள். அப்போ தான், அப்பா மாமி கிட்ட உதவி கேட்க வந்தார்.” என்றவள்

பெரிய நாச்சியைப் பார்த்து இரு கை கூப்பி,
“என் தோப்பனார் அடைக்கலம் தான் கேட்டார். இந்தத் தெய்வம், எனக்கு அங்கீகாரமே கொடுத்தது.

அது மட்டுமா படிப்பும், அறிவும், தைரியமும் கொடுத்து, என்னை எல்லாரும் மதிக்கும் ஒரு குருவா ஆக்கிட்டார். எங்க அம்மா கூட இருந்த நாள் எல்லாம், நேக்கு மறந்துடுத்து.

அவர் விருப்பப்படி, இவர் தான் என் ஆம்படையான்னு நானும் ஏத்துண்டேன். அவர் மனுசுல அவர் மாமி பொண்ணு இருக்கச்ச, அவர் அம்மாகிட்ட என்ன வேண்டாம்னு சொல்லி இருந்தா, மாமி அப்பவே சரினு சொல்லியிருப்பா! நானும் அவர் மகளாவே இருந்துருப்பேன்.

ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிண்டு, அந்த பொம்மனாட்டியை நிச்சயம் பண்ணுறது எந்த வகை நியாயம்? நீங்களே சொல்லுங்கோ!

“பாப்பா கேக்குதுல அம்பலம், உன் பக்கம் நீதேன் எடுத்துச் சொல்லணும். இதே கேள்வியை நாங்க கேட்டப்போ, நீ என்ன சொன்னியோ, அத உன் பொஞ்சாதிகிட்ட சொல்லு. இப்போ அது புரிஞ்சுக்கிடுற வயசுத்தேன். சொல்லிப்புடுக.” என்று மாமன் முறை உள்ளவர் சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அம்பலத்தானும் சபை நடுவினில் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்தவன், “அம்புட்டு பெரியவுகளுக்கும் வணக்கம். எனக்காக இம்புட்டுத் தூரம் வந்ததுக்கு, உங்களுக்கு நன்றிக் கடன் பட்டுருக்கேன்.”

“என்ன சாமி, நீ எங்க விட்டு மூத்த ராசா!” என்று ராணி சொல்ல, சிரித்துக் கொண்டான்.

“என் பொஞ்சாதி சொன்னது அம்புட்டும் சரிதான். கேட்ட கேள்வியும் நியாயம் தான்.” என்றவன் சிவகாமியின் புறம் திரும்பி, “உங்களுக்கு எப்படி கண்ணாலத்தைப் பத்தி தெரியாதோ, எனக்கும் நான் தாலி கட்டும் வரை செய்தி தெரியாது.” என்றவனை சிவகாமி அதிர்ந்து பார்க்க, அவரும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டே பேசலானார்.

“என்ன சொன்னீக. உங்க மாமி நான் சொல்லி இருந்தா கண்ணாலத்தை நிறுத்திப் புடுவாங்களா! அவுங்களுக்குத் தெரியும் நான் விசாலாட்சி ஐத்த பொண்ணத் தான் கட்டிக்கிடுவேன்னு.

இது என் ஐயன் ஆசை. அது என்னமோ உங்க மேல அம்புட்டு மயக்கம். பெத்த மகனை விட உங்க மேலதேன் பாசம் பொங்குது.”

“ஐயோ! ராசா” என்று பதறிய பெரிய நாச்சி இடையில் பேச வர,

“உங்க வளர்ப்பு பேசும் போது ரசுச்சுக்கிட்டு இருந்தீக! இப்போ என்ன? நான் பேசிப்புடுறேன், பெறவு பேசுக.” என்று தனது தாயிடம் சிறு அதட்டல் போட்டுச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்.

“அப்புச்சி, எனக்குக் கண்ணலாமுன்னு தெரியாது. அம்மை கோவிலுக்குனு சொல்லி கூட்டிப் போனவுக இந்தப் புள்ளய கட்டி வச்சுட்டாக. பார்க்க சிறுசு, பக்கத்துல நிண்டா இடுப்புக்கு தான் வருது. நான் என்ன செய்ய? இடுப்புல வச்சா குடும்பம் நடத்த முடியும்!”
அம்பலத்தான் சொல்ல, சபையில் சிரிப்பலை. சிவகாமியோ கொதிப்பலையில் இருந்தார்.

பின்பு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “அம்புட்டு ஏன் பள்ளி கூடத்துக்குப் போற பொண்ண படுக்கச் சொல்ல முடியுங்களா?”
இது சற்று கடுமையான வார்த்தையாக இருந்தாலும், அன்று தன் நிலையை விளக்க வேண்டிய இடத்தில இருந்தார், அம்பலம்.

இதற்கு என்ன சொல்வது? பெரியவர்கள் மௌனம் கொள்ள. மீண்டும் தொடர்ந்தார்.

“அது மட்டும் இல்லங்க. உமையாள் தான் எனக்குன்னு ஐயன் சொல்லிட்டாரு. அதுக்கும் இதே செய்தி தான். எனக்காகக் காத்து கிட்டு இருக்கப் புள்ளைக்கு, நான் என்ன செய்ய?”

இதை அவர் சொல்லும் போது, சிவகாமிக்கு உயிர் போகும் வலி தான். வலித்தாலும் உண்மை இதுவே என்று நின்றார், அம்பலம்.

“அதேன் இந்தப் புள்ளைய படிக்க வைச்சு வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு நல்ல பையனைப் பார்த்து வைக்கணும் என யோசுச்சேன். அதுக்கும் எனக்கும் உள்ள தொலைவு பதினாறு, என்ன செய்ய?”

இதனைச் சொன்னதும் பக்கத்தில் இருந்த தண்ணிச் சொம்பை தூக்கி எரிந்து விட்டாள், சிவகாமி. தண்ணீர் முழுதும் அம்பலத்தான் மேல்.

இந்த செயலை யாரும் எதிர்பார்க்க வில்லை போலும். ஆண்கள் அனைவரும் “ஐயோ!” வென்று பதற, பெண்கள் அனைவரும் “ஆத்தி..” என்று நெஞ்சில் கை வைத்தனர்.

ஆனால் அடி வாங்கிய ஆளோ “நீங்களே பார்த்துக்கிடுக. ஒரு சொல்லு பொறுக்க முடியாத சிறு பிள்ளை போல இருக்கப் புள்ள கூடக் குடும்பம் நடத்தி இருந்தா, இப்படித்தேன் அடியும் கடியும் குத்தும்மா போயிருக்கும், என் வாழ்க்கை! என்னை நம்பி ஏழு ஜீவன் எங்க அம்மையும் இவைகளையும் சேர்த்து எட்டு உறுப்பிடி.” கேலி போல் தனது நிலையை எடுத்துச் சொன்னார், அம்பலம்.

சிவகாமி செயலில் அதிர்ந்த மக்களுக்கு, அம்பலத்தான் பேச்சு சிறு தெளிவு கொடுக்க, பக்கென சிரித்து விட்டனர்.
“அடுச்சு கடிச்சு உருண்டாலும், பாப்பா பொறுப்பா தேன் இருந்து இருக்கும் அம்பலம்.” என்ற அப்புச்சி…

“சரி பாப்பா அழுவாதீங்க” அப்புச்சி சொல்ல
அழுது கொண்டே அவரைப் பார்த்தவளை “இது வரை போனது போகட்டும் சாமி. இனி என்ன செய்தி அதைச் சொல்லுங்க. அம்பலம் தரப்பு கேட்டீக தானே! அவர் சொல்லுறதும் நியாயம் தானுங்க. அதுவும் இல்லாம உமையாளுக்கு ஒரு வாழ்கை அமைய என்ன படு பட்டோம்னு எங்களுக்குத் தான் தெரியும் சாமி....!”

ஒரு பெருமூச்சுடன் “சரி அந்தப் பேச்சு எதுக்கு? அதுவும் புருஷன் புள்ள கூடச் சந்தோசமா இருக்கு. நம்ம செய்திக்கு வருவோம். சொல்லுங்க.”

சிவகாமி திரும்பி பெரிய நாச்சியைப் பார்க்க, அவர் கண்ணில் அத்தனை தவிப்பு. வாழ்வு தந்த வாவரிசியை மேலும் தவிக்க விடாமல்,
“நேக்கு, என் ஆம்படையான் வேணும்... அவர் கூடத் தீர்க்க சுமங்கலியா நான் வாழனும். என் இடத்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

பெரியவாளை மதிக்காம நான் வீட்டை விட்டுப் போனது மகா பாதகம் தான். ஆனா, நேக்கு வேற வழி தெரியலை.” என்றவள் மீண்டும் கை கூப்பி விட்டு, அழுகையை அடக்க முடியாமல் அம்பலத்தான் அறைக்குச் செல்ல.

வெற்றிச் சிரிப்பு தான் அம்பலத்தான் முகத்தில்.
அப்புச்சி “அப்புறம் என்ன எல்லாரும் கேட்டு கிட்டீங்களா! அம்பலத்தான் பொஞ்சாதி சிவகாமி சுந்தரி. எங்க அக்காளுக்கு அடுத்து இந்த வூட்டுக்கு அவுக தான்!” என்றவர்

இனி தனது அக்காளுக்குக் கொடுக்கும் மரியாதையை அவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உறவினர்களுக்கு மறைமுகமாக உணர்த்தியவர், அம்பலத்தானை நோக்கி,

“சாமி, நீ சொன்ன செய்தி அம்புட்டும் நியாயம் தான். இருந்தாலும் இந்த விளக்கம் பாதிக்கப் பட்டவளுக்குப் போதாது. அதுக்குப் பல விஷயம் தெரியல. அக்காவும் சொல்லல போல. நீ பார்த்துப் பதவிசா சொல்லிப் புரிய வை சாமி!” என்றவர் சுந்தர் பட்டரைப் பார்த்து,

“ஐயர் சாமி! நீங்களும் எங்க சம்பந்திதேன். நல்லதுக்கு ஒதுங்கி நிக்காதீக. நல்லது கேட்டதுக்கு வந்து போக யாரும் எதுவும் சொல்ல மாட்டாக. அம்புட்டு பேருக்கும் ரெத்தம் சிவப்புதேன்.” என்றவரைப் பார்த்து, கை எடுத்துக் கும்பிட்ட சுந்தர் பட்டர்,

“ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் செய்துட்டேள்! பணம் பவுசை விடப் படிப்பு உயர்ந்தது. நேக்கு அதே ஆசை உண்டு. ஆனா கோவில் பொறுப்பைக் கொடுத்துட்டா. பசி வேற வழியில்லை.

ஆனா என் பொண்ணுக்கு அந்தப் பாக்கியம் கிடைச்சுடுச்சு. நல்ல ஆம்படையான் நல்ல மருமான் நல்ல சம்பந்தி. நான் நிறைஞ்சு போயிட்டேன்! என்றவர் தலைக்கு மேல் கை தூக்கி, நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து விட்டார்.

பதறிய அப்புச்சி “ஐயரே! என்ன இது?” என நகர்ந்து,
“எலேய் தூக்குங்க டா!” என்றவர், அவரை கை தாங்களாக அமர வைத்தார்.
கண்ணாம்பா அழுது கொண்டே நின்றார் பாவம்.

“என்ன மாமா?” என்ற அம்பலம், அவரது கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டார். அவரும் பற்றிக் கொண்டார்.

சிறுது நேரம் அனைவரும் மௌனமாக இருந்தனர். நடந்த நிகழ்வும் நடக்கின்ற நிகழ்வும், அவர்களை ஆட்டிப் படைத்தது.
பெரிய நாச்சி சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டார்.

“சக்தி சாப்பாட்டை எடுத்து வை! பந்தி போட்டுரலாம்.” என்றவர்,

“அண்ணே வாங்க! சாப்பிடலாம்.” என்றவர் உற்சாகமாகப் பெண்களுடன் கதை அளந்து கொண்டே வேலையை ஏவினார்.
அனைவரும் உண்ணச் செல்ல, சுந்தர் பட்டரையும், கண்ணம்பாவையும் சிவநேசன் அழைத்துச் சென்றான்.

மாமிச பந்தி என்பதால் அவர்களுக்கு உணவு தனியாகச் சமைக்கப் பட்டது. இங்கு உண்ணுவது தான் மரியாதை என்றாலும், அவர்களது ஒவ்வாமையை எண்ணி, இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார், அம்பலம்.

பேச்சற்ற உணர்ச்சியில் கையை இறுக்கப் பற்றி விடை கொடுத்தார், சுந்தர்.

கண்ணாம்பா தலை குனிந்து கொண்டே, இரு கரம் கூப்பிச் சென்றார்.

அதன் பின் அனைவரும் உண்டு முடித்து, சிறுது நேரம் பேசிக் கொண்டு இருக்க, மாலைப் பொழுது நெருங்கியது.

இப்பொழுது சென்றால் தான் இரவுக்குள் செல்ல முடியும் என்று எண்ணிய அப்புச்சி, கூடத்தில் அமர்ந்து பெண்களுடன் பேசி கொண்டு இருந்த பெரிய நாச்சியிடம் வந்து,

“அக்கா அப்புறம் நாங்க புறப்படுறோம். இரவைக்கு வூட்டுக்குப் போய்ச் சேரனும்.” என்றவர் “என்ன கிளம்பலாமா?” என்று தனது மக்களைப் பார்த்துக் கேட்க, அவர்களும் எழுந்து நின்றனர்.

அம்பலத்தான் அனைவரையும் பார்த்து மீண்டும் ஒருமுறை, “என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து வந்த அம்புட்டு பெரியவுகளுக்கும் நன்றி.” என்றவன் அப்புச்சி கையைப் பிடித்துக் கண்ணில் ஒத்தி கொண்டான். கண்கள் கலங்கி இருந்தது.

“என்ன சாமி? விடுங்க. இனி எல்லாம் நல்லாத்தேன் நடக்கும்.” என்றவர் அம்பலத்தான் தோளை தட்டிக் கொடுத்தார். அதன் பின் ஒவ்வொருவரும் சொல்லி கொண்டு கிளம்ப..

அனைவரையும் வாசலில் வந்து முறையாக வழி அனுப்பி வைத்தனர். சிவகாமி அழுது கொண்டே உறங்கி விட்டதால், அவளை எழுப்ப வேண்டாமென்று சொல்லிச் சென்றார், அப்புச்சி.

அந்த அளவிற்கு உறங்கி இருந்தாள். நெடு நாள் உறக்கமோ என்னவோ..?
அனைவரும் செல்ல, அம்பலத்தான் தனது ஆஸ்தான ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டார். கண்கள் மூடி அவர் ஆட, வீட்டுப் பெண்கள் அனைவரும் தங்களது புகுந்தகம் போகத் தயாராக வந்தனர்.

"மச்சான்" என்ற விநாயகம் அழைப்பிற்குக் கண் திறந்தவர், அவர்களைப் பார்த்து எழுந்து நின்றார்.

“மச்சான், என்ன கிளம்பிடீங்க?”
“நாளைக்கு வேலை இருக்கு மச்சான்.”

“சரி மச்சான்.” என்றவன் தனது பட்டாபட்டியில் உள்ள ஜோப்பில் இருந்து பல இருபதுகளை அள்ளி தங்கையான அன்பு, சக்தி, மீனம்மாள், சங்கரி, சரசு, உலகம்மை என்று பகிர்ந்து கொடுத்து, முத்துவின் மூலம் வாங்கி வந்த திண் பண்ட பைகளைத் திணித்தார்.

தாய் மாமன் கடமையைச் சரியாகச் செய்தார், அம்பலம்
வழமை போல் தமையனின் அன்பை வாரிக் கொண்டு கிளம்பினர், பெண்கள் கூட்டம்.

அனைவரையும் அனுப்பி வைத்தவர் “அம்மா காலையில இருந்து கடைக்குப் போகல. ஒரு எட்டு என்னனு பார்த்துட்டு, கணக்கை முடுச்சிட்டு வரேன்.”

“சரி ராசா.” என்றவர் அவரது அறைக்குச் செல்ல
தனது அறைக்குச் சென்றவர் வலது பக்கக் கையை தலைக்குக் கொடுத்து, ஒய்யாரமாக உறங்கும் தனது மனையாளை பார்த்துக் கொண்டே, தனது உடையை மாற்றியவர், சிவகாமி முகம் நோக்கிக் குனிந்து விட்டு வேகமாகச் செல்ல…

அவர் சென்ற சில நொடிகளுக்குள் கத்தினாள், சிவகாமி.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் - 8

அப்புச்சி அம்பலத்தானுக்குப் பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு சிவகாமி பொங்க, அத்தனை பெரியவர்கள் முன்னிலையில் சிவகாமி பேசுவதைத் தடுக்க எண்ணி, கத்தி விட்டார் அவரது தாய் கண்ணாம்பா.

தகப்பன் ரசனை கொண்டு அம்பலத்தான் கூத்தை பார்க்க கை கட்டி நிற்க, ஏனைய மக்கள் அனைவரும் பார்வையாளரே!
“பெரியவா இருக்கச்ச என்ன பேச்சு இது? ஆம்படையானை பெயர் சொல்லிக் கூப்பிடலாமோ? என்ன பழக்கம்?” கடிந்து கொண்ட தாயைப் பார்த்து,

“அதான், என்னைத் தார வார்த்துட்டேளே! அப்புறம் என்ன மிரட்டல்? நான் பெரிய நாச்சி மருமாள்! என் மாமி தப்புன்னா தைரியமா பேசச் சொல்லிருக்கா.” என்றவளை என்ன செய்தால் ஆகாது என்று முறைத்தார், கண்ணாம்பா.

சிவகாமி பேசியதில் பெரிய நாச்சிக்கும் அவரது மகனுக்கும் ஓர் அழகான புன்னகை தோன்ற, சபையில் அதனைக் காட்டாது மறைத்தனர்.

சிவநேசன் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அப்பாடி! மாப்புள்ள, நல்ல வேளை, உன் பொஞ்சாதி கோபத்துல போடா வாடானு சொல்லல. பெயரைச் சொல்லிப் புடுச்சு. அந்த நடராஜன் மானத்தைக் காப்பாத்திட்டான்.” வாய் கொள்ளாப் புன்னகையுடன் சிவநேசன் வம்பு செய்ய.

“நல்ல ஆடுற வரைக்கும் ஆடட்டும் மாப்புள்ள. உன் தங்கச்சி எம்புட்டுத் தொலைவு போறான்னு பார்க்குறேன்.” என்று சொன்ன அம்பலத்தானை, ஒரு மாதிரி பார்த்து வைத்தார், சிவநேசன்.

அவரது பார்வை உணர்ந்த அம்பலத்தான், “அங்கன பாரு”
அவர் முகத்தைச் சிவகாமி நிற்கும் இடத்தை நோக்கி திருப்பி விட்டவர் முகம், சற்று கடுமையாகத் தான் இருந்தது.

மகளைக் கண்டித்த தாயிடம் அப்புச்சி, "விடுங்கம்மா பாப்பா ரணப்பட்டுப் போச்சு. பேசட்டும்!” என்றவர் “நீ பேசு தாயி அம்புட்டையும் இன்னைக்கே சரிக் கட்டிப் புடுவோம்!”

அவர் சொன்னதும் கோபம் தணிந்து அனைவரையும் தலை உயர்த்திப் பார்த்தவள்,
இரு கரம் கூப்பி “பெரியவா எல்லாம் என்னை மன்னுச்சுடுங்கோ! மரியாதை இல்லாம பேசுனத்துக்கு. நேக்கு ஆதங்கம் வேற ஒண்ணுமில்லை.” என்றவள் மேலும் தொடர்ந்தாள் தனது குமுறலை.

“உங்க எல்லாருக்கும் என் கல்யாணத்துக்கான காரணம் தெரியாது. இதுவரை எங்க மாமி யாரண்டையும் சொன்னதில்லை, ஏன்? கல்யாணம் பண்ணுறச்ச, எனக்கே தெரியாது.

பிறந்த வீட்டுல நேக்கு வறுமை ஜீவனம் தான். மூனு வேலையும் அந்தத் தில்லை நாதன் பிரசாதம் தான். அதுவும் சில நாள் இல்லை.

அந்தப் பசிக்காக என் தோப்பனார் என்னைத் தார வார்க்கையில, காசு இல்லாமல் இருந்தாலும், மானம் வேணும் தானே!” என்றவள் தொண்டை அடைக்க.

“என்ன அந்த மிராசுதாரர் தப்பா......” என்றவளுக்குக் கண்ணில் அருவியாகக் கொட்டியது நீர். அதற்கு மேல் பேச முடியவில்லை, என்ன தான் குடும்ப உறுப்பினர்கள் என்றாலும்.

சபையில் அத்தனை பேர் முன்னும் தனது வறுமையை, பாதுகாப்பு இன்மையை, தனது திருமணம் இதனால் என்ற காரணத்தைச் சொல்ல மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே!
அவளது அழுகையைக் காண முடியாமல் பெற்றவர்கள் துடிக்க, சுற்றி இருந்த நேர் கொண்ட மனிதர்களுக்குத் தாங்க முடியவில்லை.

“சிவா பாப்பா. நீ ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை விடுங்க, அப்பு!” என்று பேசப் போன பெரிய நாச்சியை தடுத்த சிவகாமி,
“இல்லை மாமி. நான் பேசிடுறேன்.” என்றவள்

“அப்பாவை ரொம்ப மிரட்டுனா. நான் பள்ளிக் கூடத்துக்குப் போகும் போது, வம்பு செஞ்சா. இதுவே தொடர, ஒரு நாள் கோவிலுக்கே வந்து வம்பு பண்ணுனா! என் தோப்பனார் பயந்துட்டார்.

அவருக்கு ஆள் பலமும் இல்லை. பணம் பலமும் இல்லை. எங்காத்து மனுஷாள் எல்லாம் எதுக்கு வம்புனு ஒதுங்கிட்டாள். அப்போ தான், அப்பா மாமி கிட்ட உதவி கேட்க வந்தார்.” என்றவள்

பெரிய நாச்சியைப் பார்த்து இரு கை கூப்பி,
“என் தோப்பனார் அடைக்கலம் தான் கேட்டார். இந்தத் தெய்வம், எனக்கு அங்கீகாரமே கொடுத்தது. அது மட்டுமா படிப்பும், அறிவும், தைரியமும் கொடுத்து, என்னை எல்லாரும் மதிக்கும் ஒரு குருவா ஆக்கிட்டார். எங்க அம்மா கூட இருந்த நாள் எல்லாம், நேக்கு மறந்துடுத்து.

அவர் விருப்பப்படி, இவர் தான் என் ஆம்படையான்னு நானும் ஏத்துண்டேன். அவர் மனுசுல அவர் மாமி பொண்ணு இருக்கச்ச, அவர் அம்மாகிட்ட என்ன வேண்டாம்னு சொல்லி இருந்தா, மாமி அப்பவே சரினு சொல்லியிருப்பா! நானும் அவர் மகளாவே இருந்துருப்பேன். ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிண்டு, அந்த பொம்மனாட்டியை நிச்சயம் பண்ணுறது எந்த வகை நியாயம்? நீங்களே சொல்லுங்கோ!

“பாப்பா கேக்குதுல அம்பலம், உன் பக்கம் நீதேன் எடுத்துச் சொல்லணும். இதே கேள்வியை நாங்க கேட்டப்போ, நீ என்ன சொன்னியோ, அத உன் பொஞ்சாதிகிட்ட சொல்லு. இப்போ அது புரிஞ்சுக்கிடுற வயசுத்தேன். சொல்லிப்புடுக.” என்று மாமன் முறை உள்ளவர் சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அம்பலத்தானும் சபை நடுவினில் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்தவன், “அம்புட்டு பெரியவுகளுக்கும் வணக்கம். எனக்காக இம்புட்டுத் தூரம் வந்ததுக்கு, உங்களுக்கு நன்றிக் கடன் பட்டுருக்கேன்.”

“என்ன சாமி, நீ எங்க விட்டு மூத்த ராசா!” என்று ராணி சொல்ல, சிரித்துக் கொண்டான்.

“என் பொஞ்சாதி சொன்னது அம்புட்டும் சரிதான். கேட்ட கேள்வியும் நியாயம் தான்.” என்றவன் சிவகாமியின் புறம் திரும்பி, “உங்களுக்கு எப்படி கண்ணாலத்தைப் பத்தி தெரியாதோ, எனக்கும் நான் தாலி கட்டும் வரை செய்தி தெரியாது.” என்றவனை சிவகாமி அதிர்ந்து பார்க்க, அவரும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டே பேசலானார்.

“என்ன சொன்னீக. உங்க மாமி நான் சொல்லி இருந்தா கண்ணாலத்தை நிறுத்திப் புடுவாங்களா! அவுங்களுக்குத் தெரியும் நான் விசாலாட்சி ஐத்த பொண்ணத் தான் கட்டிக்கிடுவேன்னு. இது என் ஐயன் ஆசை. அது என்னமோ உங்க மேல அம்புட்டு மயக்கம். பெத்த மகனை விட உங்க மேலதேன் பாசம் பொங்குது.”
“ஐயோ! ராசா” என்று பதறிய பெரிய நாச்சி இடையில் பேச வர,

“உங்க வளர்ப்பு பேசும் போது ரசுச்சுக்கிட்டு இருந்தீக! இப்போ என்ன? நான் பேசிப்புடுறேன், பெறவு பேசுங்க.” என்று தனது தாயிடம் சிறு அதட்டல் போட்டுச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்.

“அப்புச்சி, எனக்குக் கண்ணலாமுன்னு தெரியாது. அம்மை கோவிலுக்குனு சொல்லி கூட்டிப் போனவுக இந்தப் புள்ளய கட்டி வச்சுட்டாக. பார்க்க சிறுசு, பக்கத்துல நிண்டா இடுப்புக்கு தான் வருது. நான் என்ன செய்ய? இடுப்புல வச்சா குடும்பம் நடத்த முடியும்!”
அம்பலத்தான் சொல்ல, சபையில் சிரிப்பலை. சிவகாமியோ கொதிப்பலையில் இருந்தார்.

பின்பு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “அம்புட்டு ஏன் பள்ளி கூடத்துக்குப் போற பொண்ண படுக்கச் சொல்ல முடியுங்களா?”
இது சற்று கடுமையான வார்த்தையாக இருந்தாலும், அன்று தன் நிலையை விளக்க வேண்டிய இடத்தில இருந்தார், அம்பலம்.

இதற்கு என்ன சொல்வது? பெரியவர்கள் மௌனம் கொள்ள. மீண்டும் தொடர்ந்தார்.
“அது மட்டும் இல்லங்க. உமையாள் தான் எனக்குன்னு ஐயன் சொல்லிட்டாரு. அதுக்கும் இதே செய்தி தான். எனக்காகக் காத்து கிட்டு இருக்கப் புள்ளைக்கு, நான் என்ன செய்ய?”

இதை அவர் சொல்லும் போது, சிவகாமிக்கு உயிர் போகும் வலி தான். வலித்தாலும் உண்மை இதுவே என்று நின்றார், அம்பலம்.

“அதேன் இந்தப் புள்ளைய படிக்க வைச்சு வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு நல்ல பையனைப் பார்த்து வைக்கணும் என யோசுச்சேன். அதுக்கும் எனக்கும் உள்ள தொலைவு பதினாறு, என்ன செய்ய?”

இதனைச் சொன்னதும் பக்கத்தில் இருந்த தண்ணிச் சொம்பை தூக்கி எரிந்து விட்டாள், சிவகாமி. தண்ணீர் முழுதும் அம்பலத்தான் மேல்.

இந்த செயலை யாரும் எதிர்பார்க்க வில்லை போலும். ஆண்கள் அனைவரும் “ஐயோ!” வென்று பதற, பெண்கள் அனைவரும் “ஆத்தி..” என்று நெஞ்சில் கை வைத்தனர்.
ஆனால் அடி வாங்கிய ஆளோ “நீங்களே பார்த்துக்கிடுக. ஒரு சொல்லு பொறுக்க முடியாத சிறு பிள்ளை போல இருக்கப் புள்ள கூடக் குடும்பம் நடத்தி இருந்தா, இப்படித்தேன் அடியும் கடியும் குத்தும்மா போயிருக்கும், என் வாழ்க்கை! என்னை நம்பி ஏழு எங்க அம்மையும் இவைகளையும் சேர்த்து எட்டு உறுப்பிடி.” கேலி போல் தனது நிலையை எடுத்துச் சொன்னார், அம்பலம்.

சிவகாமி செயலில் அதிர்ந்த மக்களுக்கு, அம்பலத்தான் பேச்சு சிறு தெளிவு கொடுக்க, பக்கென சிரித்து விட்டனர்.
“அடுச்சு கடிச்சு உருண்டாலும், பாப்பா பொறுப்பா தேன் இருந்து இருக்கும் அம்பலம்.” என்ற அப்புச்சி…

“சரி பாப்பா அழுவாதீங்க” அப்புச்சி சொல்ல
அழுது கொண்டே அவரைப் பார்த்தவளை “இது வரை போனது போகட்டும் சாமி. இனி என்ன செய்தி அதைச் சொல்லுங்க. அம்பலம் தரப்பு கேட்டீக தானே! அவர் சொல்லுறதும் நியாயம் தானுங்க. அதுவும் இல்லாம உமையாளுக்கு ஒரு வாழ்கை அமைய என்ன படு பட்டோம்னு எங்களுக்குத் தான் தெரியும் சாமி....!”

ஒரு பெருமூச்சுடன் “சரி அந்தப் பேச்சு எதுக்கு? அதுவும் புருஷன் புள்ள கூடச் சந்தோசமா இருக்கு. நம்ம செய்திக்கு வருவோம். சொல்லுங்க.”

சிவகாமி திரும்பி பெரிய நாச்சியைப் பார்க்க, அவர் கண்ணில் அத்தனை தவிப்பு. வாழ்வு தந்த வாவரிசியை மேலும் தவிக்க விடாமல்,
“நேக்கு, என் ஆம்படையான் வேணும்... அவர் கூடத் தீர்க்க சுமங்கலியா நான் வாழனும். என் இடத்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

பெரியவாளை மதிக்காம நான் வீட்டை விட்டுப் போனது மகா பாதகம் தான். ஆனா, நேக்கு வேற வழி தெரியலை.” என்றவள் மீண்டும் கை கூப்பி விட்டு, அழுகையை அடக்க முடியாமல் அம்பலத்தான் அறைக்குச் செல்ல.

வெற்றிச் சிரிப்பு தான் அம்பலத்தான் முகத்தில்.
அப்புச்சி “அப்புறம் என்ன எல்லாரும் கேட்டு கிட்டீங்களா! அம்பலத்தான் பொஞ்சாதி சிவகாமி சுந்தரி. எங்க அக்காளுக்கு அடுத்து இந்த வூட்டுக்கு அவுக தான்!” என்றவர்
இனி தனது அக்காளுக்குக் கொடுக்கும் மரியாதையை அவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உறவினர்களுக்கு மறைமுகமாக உணர்த்தியவர், அம்பலத்தானை நோக்கி,

“சாமி, நீ சொன்ன செய்தி அம்புட்டும் நியாயம் தான். இருந்தாலும் இந்த விளக்கம் பாதிக்கப் பட்டவளுக்குப் போதாது. அதுக்குப் பல விஷயம் தெரியல. அக்காவும் சொல்லல போல. நீ பார்த்துப் பதவிசா சொல்லிப் புரிய வை சாமி!” என்றவர் சுந்தர் பட்டரைப் பார்த்து,

“ஐயர் சாமி! நீங்களும் எங்க சம்பந்திதேன். நல்லதுக்கு ஒதுங்கி நிக்காதீக. நல்லது கேட்டதுக்கு வந்து போக யாரும் எதுவும் சொல்ல மாட்டாக. அம்புட்டு பேருக்கும் ரெத்தம் சிவப்புதேன்.” என்றவரைப் பார்த்து, கை எடுத்துக் கும்பிட்ட சுந்தர் பட்டர்,

“ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் செய்துட்டேள்! பணம் பவுசை விடப் படிப்பு உயர்ந்தது. நேக்கு அதே ஆசை உண்டு. ஆனா கோவில் பொறுப்பைக் கொடுத்துட்டா. பசி வேற வழியில்லை.

ஆனா என் பொண்ணுக்கு அந்தப் பாக்கியம் கிடைச்சுடுச்சு. நல்ல ஆம்படையான் நல்ல மருமான் நல்ல சம்பந்தி. நான் நிறைஞ்சு போயிட்டேன்! என்றவர் தலைக்கு மேல் கை தூக்கி, நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து விட்டார்.

பதறிய அப்புச்சி “ஐயரே! என்ன இது?” என நகர்ந்து,
“எலேய் தூக்குங்க டா!” என்றவர், அவரை கை தாங்களாக அமர வைத்தார்.
கண்ணாம்பா அழுது கொண்டே நின்றார் பாவம்.

“என்ன மாமா?” என்ற அம்பலம், அவரது கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டார். அவரும் பற்றிக் கொண்டார்.

சிறுது நேரம் அனைவரும் மௌனமாக இருந்தனர். நடந்த நிகழ்வும் நடக்கின்ற நிகழ்வும், அவர்களை ஆட்டிப் படைத்தது.
பெரிய நாச்சி சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டார்.

“சக்தி சாப்பாட்டை எடுத்து வை! பந்தி போட்டுரலாம்.” என்றவர்,
“அண்ணே வாங்க! சாப்பிடலாம்.” என்றவர் உற்சாகமாகப் பெண்களுடன் கதை அளந்து கொண்டே வேலையை ஏவினார்.
அனைவரும் உண்ணச் செல்ல, சுந்தர் பட்டரையும், கண்ணம்பாவையும் சிவநேசன் அழைத்துச் சென்றான்.
மாமிச பந்தி என்பதால் அவர்களுக்கு உணவு தனியாகச் சமைக்கப் பட்டது. இங்கு உண்ணுவது தான் மரியாதை என்றாலும், அவர்களது ஒவ்வாமையை எண்ணி, இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார், அம்பலம்.

பேச்சற்ற உணர்ச்சியில் கையை இறுக்கப் பற்றி விடை கொடுத்தார், சுந்தர்.

கண்ணாம்பா தலை குனிந்து கொண்டே, இரு கரம் கூப்பிச் சென்றார்.

அதன் பின் அனைவரும் உண்டு முடித்து, சிறுது நேரம் பேசிக் கொண்டு இருக்க, மாலைப் பொழுது நெருங்கியது.
இப்பொழுது சென்றால் தான் இரவுக்குள் செல்ல முடியும் என்று எண்ணிய அப்புச்சி, கூடத்தில் அமர்ந்து பெண்களுடன் பேசி கொண்டு இருந்த பெரிய நாச்சியிடம் வந்து,

“அக்கா அப்புறம் நாங்க புறப்படுறோம். இரவைக்கு வூட்டுக்குப் போய்ச் சேரனும்.” என்றவர் “என்ன கிளம்பலாமா?” என்று தனது மக்களைப் பார்த்துக் கேட்க, அவர்களும் எழுந்து நின்றனர்
அம்பலத்தான் அனைவரையும் பார்த்து மீண்டும் ஒருமுறை, “என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து வந்த அம்புட்டு பெரியவுகளுக்கும் நன்றி.” என்றவன் அப்புச்சி கையைப் பிடித்துக் கண்ணில் ஒத்தி கொண்டான். கண்கள் கலங்கி இருந்தது.

“என்ன சாமி? விடுங்க. இனி எல்லாம் நல்லாத்தேன் நடக்கும்.” என்றவர் அம்பலத்தான் தோளை தட்டிக் கொடுத்தார். அதன் பின் ஒவ்வொருவரும் சொல்லி கொண்டு கிளம்ப..

அனைவரையும் வாசலில் வந்து முறையாக வழி அனுப்பி வைத்தனர். சிவகாமி அழுது கொண்டே உறங்கி விட்டதால், அவளை எழுப்ப வேண்டாமென்று சொல்லிச் சென்றார், அப்புச்சி.
அந்த அளவிற்கு உறங்கி இருந்தாள். நெடு நாள் உறக்கமோ என்னவோ..?
அனைவரும் செல்ல, அம்பலத்தான் தனது ஆஸ்தான ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டார். கண்கள் மூடி அவர் ஆட, வீட்டுப் பெண்கள் அனைவரும் தங்களது புகுந்தகம் போகத் தயாராக வந்தனர்.

"மச்சான்" என்ற விநாயகம் அழைப்பிற்குக் கண் திறந்தவர், அவர்களைப் பார்த்து எழுந்து நின்றார்.

“மச்சான், என்ன கிளம்பிடீங்க?”
“நாளைக்கு வேலை இருக்கு மச்சான்.”

“சரி மச்சான்.” என்றவன் தனது பட்டாபட்டியில் உள்ள ஜோப்பில் இருந்து பல இருபதுகளை அள்ளி தங்கையான அன்பு, சக்தி, மீனம்மாள், சங்கரி, சரசு, உலகம்மை என்று பகிர்ந்து கொடுத்து, முத்துவின் மூலம் வாங்கி வந்த திண் பண்ட பைகளைத் திணித்தார்.

தாய் மாமன் கடமையைச் சரியாகச் செய்தார், அம்பலம்
வழமை போல் தமையனின் அன்பை வாரிக் கொண்டு கிளம்பினர், பெண்கள் கூட்டம்.
அனைவரையும் அனுப்பி வைத்தவர் “அம்மா காலையில இருந்து கடைக்குப் போகல. ஒரு எட்டு என்னனு பார்த்துட்டு, கணக்கை முடுச்சிட்டு வரேன்.”

“சரி ராசா.” என்றவர் அவரது அறைக்குச் செல்ல
தனது அறைக்குச் சென்றவர் வலது பக்கக் கையை தலைக்குக் கொடுத்து, ஒய்யாரமாக உறங்கும் தனது மனையாளை பார்த்துக் கொண்டே, தனது உடையை மாற்றியவர், சிவகாமி முகம் நோக்கிக் குனிந்து விட்டு வேகமாகச் செல்ல…

அவர் சென்ற சில நொடிகளுக்குள் கத்தினாள், சிவகாமி.
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top