dhanuja senthilkumar
Well-Known Member
கதம்பவனம் – 6
வழமையை விட அழகான விடியல் தாமரைக்கு அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது.
செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர மற்றவர்கள் பார்வை அவனை வளம் வந்தது.தாமரைக்குச் சங்கடமாக இருந்தாலும் வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் மருகி நின்றவளுக்கு கணவனின் பார்வை அத்தனை நிறைவை கொடுத்தது.
இவர்களின் வாழ்க்கையை இனி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சுந்தரத்தின் பார்வை ராஜனிடம் நிலைத்தது இவனை என்ன செய்ய ஹ்ம்ம்….தலையை இருபக்கமும் உலுக்கி கொண்டார்.
வாழ்வின் முழுமையின் இறுதியில் இருப்பவர் அன்பு மனைவியுடன் கோவில் குலமென்று சுற்றி வரலாம் என்று நினைத்தால் தான் பெற்ற மகன்களைச் சுற்றி திரிய வேண்டியதாக இருக்கிறது அதுவும் அவர்கள் இளமை வயதில் அலுப்பாகத் தான் இருந்தது சுந்தரத்திற்கு.
அவ்வப்போது ஏக்கமாகப் பங்கஜத்தை வேறு பார்த்து வைப்பார் கணவனின் கண் அசைவில் அவரது மன நிலையைப் புரிந்த மனைவிக்கும் பாவமாகத் தான் இருந்தது.
இருக்காதா பின்னே இளமை வயதில் அவரது கடும் ஓட்டம், உழைப்பு வேலை அதன் நடுவிலும் குடும்பத்தைச் சிறப்பாக நடத்திய பொறுப்பான குடும்பத் தலைவன் அல்லவா இப்பொழுது ஓய்வு கொள்ளும் நேரத்திலும் அவரைப் படுத்தி எடுத்தால்.
ஆடி ஓடி பொருள் தேடி உழைத்தெடுத்துப் பிள்ளைகள் நல்லது கேட்டது பார்த்து உறவுகளின் நற்பெயர் பெற்று வயது முதிர்ந்து முதுகு கூனி குடும்பப் பாரத்தை இறக்கி வைக்கலாமென்று பார்த்தால் முடியவில்லையே பாவம் “பாவம் எனது சுந்தரம்” கணவனின் துயர் கண்டு மனைவியின் புலம்பல்.
மாமனார் மாமியாரின் காவிய பார்வையைப் பார்த்த மாதங்கி பொங்கி எழுந்து கையில் உள்ள பாத்திரத்தை நங் என்று கீழே போட்டு உடைத்தால் அதில் கலைந்த சுந்தரம் அவளைப் பார்த்து “என்ன ஆச்சும்மா” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க பங்கஜம் உள்ளே சென்று விட்டார் கணவரை தவிர்த்து பெரிய மருமகளை யாரும் சமாளிக்க முடியாது அல்லவா அதனால் ஓட்டம்.
“ஒன்னுமில்ல மாமா கை நழுவிடுச்சு….. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ஆனா அதுக்கு உண்டான பரப்பரப்பே இங்க இல்லையே ஏன்? என் தங்கச்சி தாணு இளக்காரமமோ என்னவோ?யாரு கண்டா கடவுளுக்கு தான் வெளிச்சம் மாதங்கியின் பேச்சை ரசிக்காத சுந்தரம்.
“எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான் மாதங்கி அது என்ன உன் தங்கச்சி அவ நம்ப வீட்டு மருமக சொல்ல போன மகள் நான் பார்த்து வளர்ந்த பொண்ணு.இனிமே பிரிச்சு பேசுறத நிறுத்திக்கோம்மா நீ தான் மூத்த மருமக நீ ஒரு வழிகாட்டிய இருந்து பழகு நம்ப வீட்டுக்கு இந்த பேச்சு ஒத்துவராது,
அப்புறம் “நான்” அப்படிங்கற வார்த்தையே இனி இங்கில்லை ‘நாம்’ தான் என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் கொஞ்சம் காட்டமாகப் பேசியவர் வெளியே சென்றுவிட்டார்.
என்றைக்குமே பேசிடாத மாமனார் இன்று காட்டமாகப் பேசவும் மற்றவர்கள் முன்னிலையில் அவமானாகக் கருதினாள் மாதங்கி அந்த கோபம் கண்ணைப் பதம் பார்க்க காத்திருந்தது.
இங்கு இப்படி இருக்க அங்கு நகத்தோடு சேர்த்து விரல்களையும் தின்று கொண்டு இருந்தாள் விமலா.நாட்கள் நெருங்க நெருங்க அடி வயிற்றில் ராட்டினம் சுற்றியது ராஜாவை பார்த்துப் பயமில்லை என்றாலும் அவனுடன் வாழ்க்கையில் இணையும் போது அவனது மனநிலை எப்படி இருக்குமென்று கணிக்க முடியவில்லை.போன் வசதி இல்லை அவனை நேரில் பார்த்து மனம் விட்டுப் பேசலாம் என்றால் அதற்கும் தைரியம் வேண்டும்.
திருமண நிகழ்வை மொத்தமாக அனுபவிக்க முடியவில்லை இதில் தனது தமக்கையின் ஆட்டம் வேறு.அவளும் அவளது தாயாரும் சொந்தங்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை திருமணம் முடியட்டும் அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று பல்லை கடித்துக் கொண்டு இருந்தாள் விமலா அரிவை நியாயம் கொண்ட பெண்ணியம் போலும்.
***************************************************************
நாட்கள் அதன் போக்கில் நகர இரண்டு வீட்டிலும் தாய் மாமன் நலங்கு, நாள் சோறு என்று நித்தம் நித்தம் ஒரு சடங்கு நடந்தது.ராஜன் முகத்தை அவ்வப்போது ஊற்று பார்த்துக் கொண்டு இருந்தனர் பெண்கள் அவர்கள் கவலை அவர்களுக்கு.ஏதும் செய்து விடுவானோ என்ற பயம் வேறு அவர்களை ஆட்டி வைத்தது.
மேலும் அவர்களை அதிர வைப்பது போல் மாதங்கி அவனிடம் பேச வரும் போதெல்லாம் அவன் ஒரு அலட்சியம் காட்டு வதையும் அவனை மீறி கோபம் கொள்வதையும் பார்த்த அமுதா,சீதா,தாமரை,பங்கஜத்திற்கு இந்தத் திருமணம் நடக்குமா என்ற பயம் பிடித்துக் கொண்டது.
ராஜனிடம் நெருங்கி பழகும் விஜி கூட அவனிடம் அன்று நெருங்க பயந்து போனால் அண்ணனின் கோபத்தை உணர்ந்து அவளுக்கும் பயம் அதிகரித்தது இதையெல்லாம் கண்டும் காணமால் பார்த்து கொண்டு இருந்தனர் அவனது அண்ணன்கள்.
நல்ல படியாக விழா முடியட்டும் அனைவரும் சென்ற பிறகு பேசி கொள்ளலாம் அண்ணன்களின் எண்ணம்.அவர்கள் பேச வரும் போதெல்லாம் எதையாவது சொல்லி ராஜா மழுப்பி விடுகிறான் ஆனால் இன்று கண்டிப்பாகப் பேசியே ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டனர்.
ஒரு வழியாக நலுங்கு முடிந்து அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டு முடிக்க ராஜாவை தூக்காத குறையாக அண்ணன்கள் தூக்கி சென்றனர் மேல் மாடிக்கு “செல்வம் அண்ணா எங்க தூக்கிட்டு போறீங்க நான் தாமரை அண்ணி இல்ல இறக்கி விடு” அவனை இழுத்து சென்ற செல்வதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்ல அவனை முறைத்தான் செல்வம்.
கண்ணன் “டேய் பேச்ச மாத்தாத என்ன தான்டா பிரச்சனை உனக்கு விமலாவை புடிக்கலையா?நீ மாதங்கிய நினைச்சு அவளை ஒதுக்கிரியா? இதை கேட்கும் பொது கண்ணனுக்கு வலித்தது தான்.
மற்ற அண்ணிகளுடன் சுமுகமாக இருப்பவன் மாதங்கி என்றால் ஓர் அடி தள்ளி தான் நிற்பான் மனைவியின் குணம் தெரிந்தாலும் கண்ணனுக்கு இச்செயல் வலிக்கத் தான் செய்தது அண்ணனின் வலியைக் கண்டு கொண்ட ராஜன்.
“அண்ணா எனக்கு அவங்களும் அண்ணி தான் அவங்க நடந்துக்கிற முறை தான் புடிக்காது எங்க அண்ணனின் மனைவியா புடிக்கும் நான் என் மனச மறைக்க விரும்புல அண்ணா பயமா தான் இருக்கு.அவளும் அண்ணி மாதிரி நடந்துக்கிட்டா அப்பாக்கு அண்ணி பேசுறது எவ்வுளவு சங்கடமா இருக்கும் தெரியுமா,
ஆனா வெளில சொல்ல மாட்டார் மனுஷன் அவருக்கு நம்ப எல்லாம் ஒரே குடும்பமா இருக்கனும் அதான் ஆசை” அண்ணன்கள் முகத்தில் கவலை அதிலும் அளந்து பேசும் அர்ஜுன் “டேய் தம்பி விமலா நல்ல பொண்ணுடா அமுதா சொல்லி இருக்கா இது உன்னோட வாழ்க்கை நீயே யோசுச்சு முடிவெடு.அந்த பொண்ணு பாவம் நமக்கு வேணாம் அவ வந்தா அண்ணி சரி ஆய்டுவாங்குனு தோனுது அப்பா யோசிக்காம எதுவும் செய்ய மாட்டார்” சரியாக கணித்தான் தனது தந்தையை.
“எனக்குப் புரியுதுண்ணா ஆனா என் மனச மாத்திக்க எனக்கு அவகாசம் வேணும்.அவங்க இப்படித்தான்னு என் மூளைக்குள்ள பதிந்து போய் இருக்கு கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்,
எது நடந்தாலும் அவதான் பொண்டாட்டி ஏன்னா எங்க அப்பா பார்த்த பொண்ணு அவ கவலை படாதீங்க இந்தக் கல்யாணம் நல்ல படிய நடக்கும்” அவன் பேச்சில் உள்ள தெளிவில் அண்ணன்கள் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்தது.
சூழ்நிலையை மாத்த எண்ணிய அர்ஜுன் “செல்வதைப் பார்த்து என்னடா லீவே போட மாட்ட இப்போ என்ன முழுசா பத்து நாள் லீவு...” புருவத்தை உயர்த்திக் கேட்க பதில் சொல்ல செல்வம் தடுமாறி போனான்
கண்ணன் அவன் பங்குக்கு “என்ன தம்பி நீ கல்யாணம் வீடு நைட் ஒரு வேலை பார்க்கணும் காலைல கல்யாண வேல பார்க்கணும் அவன் ஒரே பிஸி டா எனக்கு என்னமோ பத்து நாள் லீவு பத்தாதுன்னு தோணுது”
அவனை தொடர்ந்து விட்டானே பார் என்று ராமன் குறும்பு கொப்பளிக்க “அப்புடியாடா” என்று கேட்க அண்ணன்களின் கேலியில் செல்வம் திணறிப் போனான்.
அண்ணனுங்களா விட்டுடுங்கடா என்று அழுகுத குறையாகக் கெஞ்சி கொண்டு இருந்தான் செல்வம் ராஜா ஒரு படி மேல போய் “அண்ணா இனி நம்ப வீடு கட்டுனா ஒரு அறைக்கு இன்னொரு அறைக்கு அதிக இடைவெளி விட்டு தான் கட்டணும்,
நைட் படுக்க முடியல ஏடாகூடமா சத்தம் வருது" அவன் சொல்லி முடிக்கவில்லை அண்ணன்கள் அனைவரும் அவனைத் துரத்தினர் பல நாட்கள் கழித்து ஒன்றாகச் சேர்ந்த சகோதர்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“கொழுப்பே என்ன பேச்சு பேசுற நில்லுடா” கண்ணன் இளையவனைத் துரத்தி கொண்டு கீழே வர சுற்றி இருப்பவர்களை மறந்து சிறு பிள்ளை போல் சேட்டை செய்யும் மகன்கள் மூலம் இளமை பெற்றார் சுந்தரம் வாய்க் கொள்ளப் புன்னகையுடன் தனது விழுதுகளை ரசித்துக் கொண்டு நின்றார்.
இக்காட்சியை கண்டு பெண்கள் அனைவரும் களிப்பில் கட்டுண்டு நிற்க இல்லத்தரசியைக் கேட்கவா வேண்டும் கண் மூடி கடவுளுக்குச் சிறு விண்ணப்பம் இதுவே போதும் நிறைந்து நின்றது மனம்.
சகோதர்கள் என்பதை தாண்டி நண்பர்கள் போல அல்லவா அவர்கள் தனது வயதையும் மறந்து விளையாடி கொண்டு இருந்தனர் நால்வரும் ஒருவரை ஒருவர் வாரி கொண்டு நெடு நாள் கழித்து அந்த மாலை வேளையை இனிமையாக மாற்றினார்.
இந்த இதம் தொலையாது பார்த்துக் கொள்வது இந்த வீட்டின் வேர்களான பெண்களிடம் தான் உள்ளது பல்வேறு பூ செடிகள் இருக்கும் கதம்பவனத்தில் இன்னும் ஓர் செடி வேர்விட அதன் மனம் மாறாமல் வனம் செழிக்குமா என்பதைப் பார்ப்போம்…..