அத்தியாயம் - 5

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே!

அத்தியாயம் – 5

அம்பலத்தான் சந்நிதியில் ஓர் உருக்கமான பாசப் போராட்டம் மாமியாரும் மருமகளும் கடந்தவைகளை எண்ணி ஏங்கி ஏங்கி அழ, அவர்களது பிணைப்பை எண்ணி வியந்தவாறு, அவர்களை அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர், மக்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு, மாறி மாறி ஆறுதல் சொல்ல, குடும்ப மக்களின் வாய் பிளந்து கொண்டது.

"மாமி அழாதேள். உடம்பு நோகப் போகுது."

“நீயும் அழுவாத சிவா பாப்பா, முகம் சிவந்து போகுது பாரு!” என்று நரம்புகள் புடைத்த கைகள் கொண்டு அவளது முக வடிவை அளந்தார், பெரிய நாச்சி.

இருக்காதா பின்னே, தான், அவர் பிறாத மகள் அல்லவா!”

“நீங்க அழாதேள்” இவர்களது பாசப் பிணைப்பை தாங்க இயலாத சிவநேசன், ஏதாவது செய்யேண்டா, என்பது போல் அம்பலத்தானைப் பார்க்க, அவனோ சிரிப்பை அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

“அட சண்டாளா! ஆத்தாளும் பொஞ்சாதியும் புளிஞ்சு புளிஞ்சு அழுது கிட்டு இருக்குங்க. நீ என்னடா கைய கட்டி ரசுச்சுக்கிட்டு இருக்க!”

“நான் என்ன மாப்புள்ள செய்ய, எனக்குச் சிரிப்பு தான் வருது.”

“வருமுடி, அம்புட்டுக்கும் காரணம் நீ தான். என்ன ஒரு அலட்சியம் உடம்பு முழுக்க! ஆச்சி, திமிர ஊட்டி வளர்ந்து வச்சு இருக்கு.” அம்பலத்தான் பேச்சும் செயலும் எரிச்சலை கொடுக்க, கேலியாகவே கேட்டார், சிவநேசன்.

“ப்ச் நான் இடையில போனேன்னு வை, மாப்புள! இரண்டு பேரும் நையப் புடச்சு, பொங்கிப் புடுவாக! அம்பலத்தான் முறுக்காவே சுத்திட்டேனா! அதுவும் இது கோவிலு, எதுக்கு வம்பு! சிவனேனு வேடிக்கை பார்ப்போம்.”

“அடப்பாவி”

“அப்பாவி மாப்புள! வூடு முழுக்க பொம்பளைங்க ராஜ்யம்! ஒத்த ஆம்பளையா அம்புட்டையும் சரி கட்டனும். யோசுச்சு பாரு, என் நிலமையை!” என்று பெரு மூச்சிட்டவனைக் கூர்ந்து பார்க்க, முகத்தைப் பாவம் போல் வைத்து பாவனை செய்தார், அம்பலனாதன்.

“ஒரு விதமான பாவம் போலையும் இருக்கு தான், மாப்புள. ஆனாலும் நம்ப மாட்டேன், நீ அப்பனுக்கே அப்பன். நண்பன் குணத்தை அறிந்த நல்ல நண்பனாகப் பேச..” சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார், அம்பலத்தான்.

அவரது சிரிப்பொலி மாமியின் காதைத் தீண்ட, நீண்ட நெடிய ஆறு வருடங்களுக்குப் பிறகு, தனது கணவனை விழி உயர்த்திப் பார்த்தாள், சிவகாமி.

கண்ணில் கனல் பறக்க, “என்ன பரிகாசம் பண்ணுறேளா?” எனவும்,

“என்னடா சிவநேசா வம்பா இருக்கு? நீ பேசுனத்துக்குச் சிரிப்பு வந்துச்சு, சிரிச்சேன்.” என்று அவளது கண்களைக் களவு கொண்டே, பேச்சு சிவநேசனிடம் இருக்க,

களவு கொண்ட கண்ணைக் கனல் கொண்டு தகர்த்து விட்டு, சிவநேசனை நோக்கி “அப்படி என்ன சொன்னேள் நீங்களும்? இவா கூடச் சேர்ந்து கெட்டுப் போயிட்டேள். நான் அக்கா கிட்ட சொல்லி வைக்கிறேன்.”

சிவகாமி சொன்னது தான் தாமதம்.“ஐயோ! தங்கச்சி இவன் என்ன மாட்டி விடுறேன், தாயி.நான் பாட்டுக்கு என் போக்குல நின்னுக்கிறேன்.” காலில் விழாத குறையாக சிவநேசன் சொல்ல,

மீண்டும் அம்பலத்தானை முறைத்தவள், தனது மாமியிடம் திரும்பி..

“எப்படி மாமி இருக்கேள்?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீக?”

“நல்லா இருக்கேன் மாமி” என்றவர்கள், அதன் பின் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, சிவாச்சாரி பிரசாத தட்டோடு வந்தார்.

நடந்தவை அனைத்தும் கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். கையும் வாயும் கடவுளுக்கு ஊழியம் செய்தாலும், மனம் முழுக்க சிவகாமி வாழ்க்கையைச் சுற்றியே நின்றது.

அவளுக்கு ஓர் நல்லது நடக்காதா என்று ஏங்கியது. என்ன இருந்தாலும் தன் வீட்டில் பிறந்த மகவு அல்லவா?

“பிரசாதம் வாங்கிக்கோடி குழந்தை! இனி உனக்கு நல்ல காலம் தான்.” என்றவர்

பெரிய நாச்சியிடம் திரும்பி “என்னம்மா சொல்றேள்?” என்று சூசகமாகக் கேட்க,

அவரது எண்ணம் புரிந்தவர் போல், அவரும் பதில் அளித்தார்.

“ஆமாம், இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்.”

அதன் பின் அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப் பட்டது. அதுவரை யாரும் பேசி கொள்ளவில்லை பிரகாரத்தைச் சுற்றி வந்து அனைத்து தெய்வங்களையும் வணங்கி வந்தவர்கள்,கொடி மரத்தடியில் வணங்கி மண்டபத்தில் அமர்ந்தனர். அதுவரை தனது மாமியின் கையைப் பற்றிவாரே வந்தாள், சிவகாமி.

முன்னால் அம்பலத்தானும் சிவநேசனும் செல்ல, பின்னால் சிவகாமியும்,பெரிய நாச்சியும் வர, அவர்களுக்குப் பின்னால் சிவசங்கரி மீனம்மாள்,அன்பு செல்வி,சரசு,சக்தி,உலகம்மை,உமையாள், அவர்களுடன் இணைந்து நடந்தாள், பொன்மொழி.

“என்ன பொன்மொழி? உன் தோழி உன்ன அம்போன்னு விட்டுட்டா?”

“மீசை காரரையும் அவரது அம்மையும் பார்த்தா, நான் கண்ணனுக்குத் தெரிய மாட்டேன், அக்கா.”

“யாருடி அது மீசைக்காரர்?”

“எல்லாம் நம்ப அண்ணன் தான்!”

“அடிப்பாவி” என்ற சக்தி அவளை அடிக்க வர, கல கலவெனச் சிரித்தாள், பொன்மொழி.

அவர்களுக்கும் சிரிப்பு. ஓர் இரு வயது இடைவெளியில் இருக்கும் பெண்கள் அனைவரும் சிறு வயது முதல் தோழிகளே ஒரே பள்ளி வேறு. நீண்ட வருடங்கள் சென்று அனைவரும் ஒன்று கூட களை கட்டியது

“கொழுப்பு தான் உன் தோழிக்கு.” என்ற மீனம்மாளை கவலையாகப் பார்த்தவள்,

“ஏனக்கா, அவ மேல கோபமா இருக்கீங்களா?”

“ப்ச்… அதெல்லாம் இல்ல. ஆனா கழுத்து முட்ட வருத்தம் இருக்கு. நானும் சக்தியும் எம்புட்டு நாள் அதைப் போய்ப் பார்த்தோம். அது எங்களைப் பார்க்க மாட்டேன்னு சொல்லிடுச்சு. அப்படி என்னடி நாங்க பண்ணோம்.”

“விடுங்க அக்கா. அண்ணே விட்டுப்புட்டார்னு அவுங்களுக்குக் கோபம்!”,உலகம்மை சொல்ல.

“எல்லாம் என்னாலதேன். அவுக மேல எந்தத் தப்பும் இல்ல. அம்மா சொன்னாங்கனு நான் மாமாவக் கட்டிக்க நின்று இருக்கக் கூடாது”

“ப்ச் என்ன உலகு விடு. எம்புட்டு வருஷம் இதையே பேசுவீக. இந்தத் தரம் கொப்புடையம்மன் கோவிலுக்குப் படைப்பு வைக்கப் போனோம். அங்கன அண்ணே தரிசா கடக்குனு சுசி மதனி பொண்ணு ரொம்பப் பேசிப் புடுச்சு. அதேன் அம்மா ஒரு முடிவோடு இருக்காக.”

“ஆமாம், இனி மதனி என்ன பேசினாலும், அவுக விட மாட்டாக.” என்ற சரசு பொன்மொழியிடம்,

“பொன்னு நீ வூட்டுக்கு போ! இனி மதனி அங்கன தான்.” முகம் கொள்ளச் சிரிப்புடன் துள்ளி குதித்தாள், பொன்மொழி.

“நெசமா சரசக்கா, நான் போகவா!”

“நெசம் தான்.. அம்மா வுட மாட்டாங்க. நீ கிளம்பு. சிவநேசன் அண்ணேங்கிட்ட இரவைக்குச் செய்தி சொல்லி விடுறேன்.”

தோழியின் வாழ்வை எண்ணி கண்ணில் நீர் பெறுக, மகிழ்ச்சியாக அவளது கைகளைப் பற்றிக் கொண்டு ரொம்ப “நன்றிக்கா.”

அன்பு செல்வி, “எதுக்குடி அழுவுறவ அவ எங்களுக்கும் தோழி தான். நீ வெசனப் படாம போ! மூணு நாள் இங்கன தான், நாளைக்கு வூட்டுக்கு வா!”

“சரிக்கா” என்றவள் மகிழ்ச்சியாகச் சென்றாள்.

அவளை அனுப்பிய கையோட அன்புத் தோழியும், எதிரியுமாகிய சிவகாமியை வளைத்தனர் நாத்திகள்….!

மாமியார் அரவணைப்பில் இருந்த சிவகாமியைப் பார்க்க, மீனாட்சி தோளில் கொஞ்சி நிற்கும் பச்சை கிளி போன்று ரம்மியமான காட்சியாய் காட்சியளிக்க, இந்த உறவுப் பிணைப்பில் ஏங்கி தான் நின்றனர், பெண்கள்.

மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய, அதனைக் கலைக்கும் பொருட்டு, தனது வெண்கலக் குரலை திறந்தார், அம்பலத்தான்.

“அம்மா கிளம்பலாம், படையல் போடனும். உச்சி நெருங்கப் போகுது.”

“இதோ ராசா” என்றவர் கை சிவகாமியை இறுக்கப் பற்றியது, அவரது இறுக்கத்தில் பதறித் தான் போனாள் சிவகாமி. ஒரு நொடி ஆகாது கையை விலக்கி விட்டு செல்ல. ஆனால், அவ்வாறு செல்ல முடியாதே! தனது காவல் தெய்வம் அல்லவா, அவர்! நன்றிக் கடன் ஏழு ஜென்மத்துக்கும் உள்ளது.

அவரது போக்குக்குச் சென்றவர்கள், வீதியில் நடந்து வீதி உலா வரவும், அம்பலத்தானின் குடும்பத்தை உணர்ச்சி பொங்கப் பார்த்திருந்தனர், சுந்தர் பட்டருடன்.

சற்று முன் கோவிலுக்கு வந்த கண்ணாம்பா, அங்கு நடந்தேறிய காட்சியில் தனது மகளைப் பார்த்து மெய் மறந்து கண்ணில் நீர் சொரிய நிற்க, அதன் பின் நடந்தவைகளை யார் கண்ணையும் கவராமல், மறைந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்.சிவகாமி கை பற்றி, பெரிய நா வளம் வரும் போது,மனதில் உவகைப் பொங்க எடுத்தார் ஓட்டம். சுந்தரப் பட்டரை நோக்கி.

அதே நேரம் சிவாச்சாரியும் நடந்தவை பற்றி சுந்தரிடம் கூற, கண்ணில் நீர் வடிய இதோ மாப்பிள்ளை மணப்பெண் வீதி உலா! அம்பலத்தானும் சிவகாமசுந்தரியும் குடும்பத்தார் படை சூழ நடந்து வர, இனி வேறென்ன வேண்டும் ஜென்ம பூரணம் தான், சுந்தர் பட்டருக்கு.

வீட்டை நெருங்கும் வேளையில் சிவசங்கரி “ஒரு நிமிஷம் அண்ணே! உள்ள வராதீக, இதோ வரேன்.” என்றவர் ஆரத்தி கரைத்து எடுத்துவர, தனது கையை விலக்கி கொண்டு, அம்பலத்தானை நோக்கி சிவகாமியை தள்ளினார், பெரிய நாச்சி.

ஏதோ நினைவில் இருந்த சிவகாமி, இதனை எதிர் பார்க்க வில்லைப் போலும். அம்பலத்தான் தோளில் இடித்து அவரைப் பற்றியே நின்றாள்.

சிவநேசனும் நாத்திகளும் இக்காட்சியை கண்ணில் நிறைத்தனர்.

தலையைக் குனிந்த வாரே நின்ற சிவகாமியின் கையை, முதல் முறை கணவனாகப் பற்றி, தன்னுடன் நெருங்கி நிற்க வைத்தார், அம்பலத்தான்.

சிவசங்கரி ஆலம் சுற்றி, இடது கை கொண்டு சிவகாமி நெற்றியில் திலகமிட்டவாரே அழுது விட்டார்.

“ப்ச் … சங்கரி!” அம்பலத்தான் அதட்ட, கண்ணீரைக் கட்டுப் படுத்தியவர், அவர்களைத் தாண்டி அதனைக் கொட்டச் செல்ல, அனைவரும் உள்ளே சென்றனர்.

நுழைவாயிலில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடந்து வந்த பாதையை நினைவு கொண்டது.

உள்ளே சென்றவன், முதல் வேலையாக, சிவகாமியின் கையை உதறி விட்டுச் செல்ல, பயம் கொண்டது, அரிவை பெண்.

அவனது செயலில் கோபம் கொண்ட சிவநேசனும், அவன் பின்னே செல்ல. வீட்டு பெண்கள் அனைவரும்

சிவகாமியின் மீது அவ்வீட்டுப் பெண்களுக்கும் கோபம் தான் என்றாலும், அதனைக் காட்டிக் கொள்ளாமல் சிவகாமியை தாங்கினார் கணவனது கோபம் புரிந்தாலும் எதிர் வினை ஆற்றவில்லை.

ஆண்டுகள் கடந்த பிரிவு என்பதால், பேசக் கூட நா வரவில்லை போலும். அப்படி ஓர் அமைதி கண்கள் மட்டும் சிவகாமியின் பூரண பரிமாணத்தையும் மாற்றத்தையும் ஆராய்ந்தது

இவர்கள் நிலை இப்படியென்றால்…

அம்பலத்தானின் நிலை சொல்லவா வேண்டும் "ஏன்டா தங்கச்சி புடிச்சு தள்ளி வுடுற ரொம்பத் தப்பு மாப்புள

“ப்ச் பேச்சை விடு மாப்புள பூஜைக்கு எடுத்து வைக்கச் சொல்லு”

“ஏன் நீ சொல்ல வேண்டியது தான்”

எனக்கு வேலை இருக்குக் கொஞ்சம் பேசனும் வீட்டுல உள்ள முக்கியத் தலைக்கட்டு அம்புட்டையும் இங்கன வர சொல்லணும் அம்பலத்தான் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அடி வயறு கலங்கியது இதற்கு முன் ஒரு சபை கூடி செய்த கூத்து கண் முன் வர பதறியவர்

“என்ன மாப்புள”

“சொன்னதைச் செய் நீ பூஜையை பார் நான் பஞ்சாயத்தைப் பாக்குறேன்” அதே அலட்சியதுடன் அம்பலத்தான் சொல்ல இனி அவன் முடிவு தான் என்று எண்ணிய சிவநேசன் பெண்களை நோக்கி சென்றார்.

சாத்தியமே இல்லை! இனி தன் வாழ்க்கை தனிமையே என்று எண்ணி இருந்த அம்பலத்தானுக்கு, ஒரு வழி கிடைக்க, ஆடித் தான் பார்க்க எண்ணிக் கொண்டான், போலும்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top