அத்தியாயம் - 5

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 5
அன்று விடியல் சற்று வித்தியாசமாகத் தான் இருந்தது செல்வத்தின் நடவடிக்கை கூட ஓர் மார்கமாக இருந்தது அனைவரும் அவனைக் கண்டும் காணாதது போல் பார்த்து வைத்தாலும் எதையும் வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவ்வீட்டு மக்களின் செவியும் கண்களும் அவனைச் சுற்றியே.

தாமரையை அவன் கண்கள் அளவிடுவதும் அவளை இமைக்காமல் பார்ப்பதையும் பார்த்த அமுதாவுக்கும்,சீதாவுக்கும் அத்தனை ஆனந்தம் எப்படியும் தனது கொழுந்தன் தாமரையுடன் வாழ்ந்து விடுவான் என்ற நம்பிக்கையில் மனம் நிறைந்து தான் போனது.

சீதா தான் தாமரையை வம்பு செய்து கொண்டு இருந்தாள் தாமரையே கை எடுத்து கும்பிட்டு "அக்கா ப்ளீஸ்க்கா இது மாதிரி பேசாதீங்க கூச்சமா இருக்கு" அழுகும் நிலையில் சொன்னவளை கண்டு கொள்ளாமல் அமுதாவும், சீதாவும் ஒரு வழி செய்து கொண்டு இருந்தனர்.

பங்கஜத்திற்குச் சொல்லவா வேண்டும் சிறுசுகளின் சேட்டைகளைக் கண்டு வாய்கொள்ளா சிரிப்பு. இருக்காதா பின்னே பாரமாக இருந்த நெஞ்சில் பால் லை வார்த்தது போல இருந்தது அவர்களது இணக்கம் அவர் எண்ணுவது அது தானே அத்தனை பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும்.

பெரியவர்களின் பார்வை அவ்வப்போது மாதங்கியை தொட்டு மீண்டு சலித்து கொண்டது இந்த வீட்டின் விதி விலக்கு எதுவோ செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கியே இருந்தாள்.நம் குடும்பம் என்று பிணைப்பு எப்போது தான் வருமோ என்ற பெருமூச்சு மட்டுமே பங்கஜத்திடமும்,சுந்தரத்திடமும்.

இரவு வேளையில் அனைவரும் கூடி உண்ண அனைவரும் சந்தோசமாகப் பேசி உண்ண இதுவே தக்க தருணம் என்று எண்ணி ராஜனின் திருமணத்தைப் பத்தி பேசினார் சுந்தரம் ஆண்கள் அனைவரும் உண்டு கொண்டே பேச பெண்கள் அவற்றைப் பரிமாறிக் கொண்டே கேட்டனர்.

"என்னப்பா கண்ணா ராஜன் கல்யாண பத்திரிகை வந்துருச்சு எப்போ குலதெய்வ கோவிலுக்குப் போறது" வீட்டின் மூத்த மகன் என்ற முறையில் பேச்சுக் கண்ணனிடம் இருந்து ஆரம்பம் ஆனது

"அப்பா வர ஞாயிற்றுக் கிழமை எல்லாருக்கும் தோது படும் அப்போதான் பிள்ளைகளுக்கும் விடுமுறை, விடிய காத்தால கிளம்புனா சரியா இருக்கும் என்னடா உங்களுக்குச் சரிதானே" என்று தம்பிகளைப் பார்த்துக் கேட்க ரெங்கன்,ராம்,செல்வம் மூவரும் பலமாகத் தலையை ஆட்டினர்.

ஒருவன் மட்டும் இன்றே அந்த உணவை உண்ணாவிட்டால் இனி உணவே கிடைக்காது என்பது போல் கரும சிரத்தையாகக் குனிந்த தலை நிமிராமல் உண்டான்.

அவனது அலட்சியத்தைப் பார்த்து எரிச்சலுற்ற சுந்தரம் மனதுக்குள் பொருமி கொண்டு இருந்தார் ‘எவன் கல்யாணத்தைப் பத்தியோ பேசுற மாதிரி உட்காந்து இருக்கான் முரட்டு பைய தவிட்டு கோழி முழுங்குற மாதிரி முழுங்குறத பாரு'

பொறுமை காற்றில் காலவதியாக "அடேய் ராஜா" சுந்தரம் உரக்க அழைக்க அனைவரும் அவனைத் தான் பார்த்தனர் அவனோ இன்னும் இரண்டு கவளம் வாயினுள் அடைத்துக் கொண்டு தான் நிமிர்ந்தான் அதுவும் என்ன என்ற பார்வை மட்டுமே துரை வாயே திறக்கல.

“இங்க உன் கல்யாணத்தைப் பத்தி தான் பேசிகிட்டு இருக்கோம்” சுந்தரம் பல்லை கடித்துக் கொண்டு சொல்ல அவனோ அதற்கும் காதில் கை வைத்து 'கேட்குது' என்பது போல் செய்கை செய்தான்.

அவனது இந்த போக்கு அண்ணிகளுக்கு கிலி பிடிக்க.அண்ணன்களுக்கு அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.

வேலைக்கு என்று சென்ற பின் அவரவர் வேலைகள் இழுக்க ஆளுக்கு ஒவ்வொரு பக்கம் ஓடுகின்றனர் இதில் மனைவி,பிள்ளை வேறு அதனால் நின்று பேச கூட நேரம் அண்ணன் தம்பிகளுக்கு நேரமில்லை. தற்போது தம்பியின் நடவடிக்கை சரியில்லை என்பதைக் குறித்துக் கொண்ட அண்ணன்கள் தனியே பேச முடிவு செய்தனர்.

மனைவிகளைத் தவிர்த்து அடுத்த நாள் மாலை பங்காளிகளின் (அண்ணன்,தம்பி) சந்திப்பு உறுதி செய்யப் பட்டது. அதன் பின் சேவல்களும்,கோழிகளும் அதன் கூட்டில் அடைந்து கொண்டது.

******************************************************************************

எப்பொழுதும் போல மனைவியை எதிர் பார்த்துத் தோட்டத்தில் காற்று வாங்கிக் கொண்டு இருந்தார் சுந்தரம் இன்று ஏனோ மனைவியின் முகம் வழக்கத்திற்கு மாறாகப் பிரகாசமாக இருந்தது அதனை பருகி கொண்டு இருந்தார் அவரது பார்வையில் கூச்சம் நெட்டி தள்ள "என்னங்க" என்று சினுங்கினார் பங்கஜம்.

"பங்கு இன்னக்கி என்ன முகம் ஜொலிக்குது" குறும்பு சிரிப்புடன் கேட்க அவரோ தள்ளி வந்து அவர் நெஞ்சில் மஞ்சம் கொண்டார் சுந்தரம் ஓர் சிரிப்புடன் அவரை அனைத்து கொண்டு "என்னடா இன்னக்கி என் பொண்டாட்டி சந்தோசமா இருக்காப் போல இருக்கே" அவர் முகம் நோக்கி குனிந்து கேட்க “ரொம்ப சந்தோசமா” என்றவர் மேலும் ஒண்டினார்.

அவரை அனைத்து கொண்டு சிரித்தவர் அறிவார் மகிழ்ச்சி எதனால என்று அதற்குள் மேல் சுந்தரம் பேசவில்லை இந்த நேரம் இந்த நொடி எங்கள் தனிமை,எங்கள் குடும்பம்,எங்கள் பிள்ளைகள் அவர்களது வாழ்வு என்று என்று கண்மூடி ரசித்து இருந்தார்.

*****************************

இங்கு தாமரை அறைக்குள் நுழையும் போதே கை கால்கள் நடுங்கியது அதுவும் நேற்று தனது பிறந்தகத்தில் வைத்து அவன் காதுக்குள் உனக்குப் பலமான தண்டனை தருவேன் என்று சொன்னது வேறு ஒரு பக்கம் அவளை வாட்டி எடுத்தது என்ன பயந்தாலும் சென்று தானே ஆக வேண்டும் கையில் பருக தண்ணீருடன் உள்ளே சென்றாள்.

அவள் வந்ததை உணர்ந்தும் கைகளைத் தலைக்கு மேல் வைத்து படுத்து இருந்தான் செல்வம் அவனுக்கும் கோவம்,காதல்,காமம்,கருணை,இரக்கம் என்று எல்லா உணர்வும் வரிசை கட்டி கொண்டு நின்றது எதை அவளிடம் முதலில் காட்டுவது என்று தெரியவில்லை பாவம்.

பொறுமையாகத் தண்ணீரை கீழே வைத்தவள் அவனைத் தாண்டி சென்று படுக்கப் போக வேகமாக கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான் செல்வம் ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அவன் பிடிக்கவும் உடல் நடுங்க அவனைப் பார்க்க.

அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே அருகில் இழுத்தான் அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தது எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகக் கரைந்தது தான் மிச்சம்.மதிமுகத்தைப் பார்த்ததும் அனைத்தும் மறந்து போக இரும்பு மனிதன் இளகி தான் போனான்

'பாருடி உன் மீது நான் வைத்திருக்கும் அன்பை,காதலை,தேடலை' அனைத்தையும் அவளுக்குச் செய்கையால் புரிய வைக்க வன்மையைக் கையில் எடுத்தான் அந்த முரட்டு கணவன்.

நடப்பதை அவள் அறிய முற்படும் போதே உணர்வுகள் தடை விதித்து அவளை ஆட்கொண்டது வேட்கை குறைந்து,காமம் குறைந்து, வன்மை குறையும் நேரம் காதல் ஆட்சி செய்ய அவளை மெதுவாக விடுவித்தான் செல்வம்.

சாதாரண நாளிலே பேச்சுக்குப் பஞ்சம் தான் இன்று கேட்கவா வேண்டும் கண்கள் மட்டும் அவன் கட்டு பாடுயின்றி அவளை மேய்க்க தைரியமாகத் தனது கை கொண்டு கணவனின் கண்களை மூடினாள் பெண் வெடுக்கெனக் கையைத் தட்டிவிட்டவன் இன்னும் அவளைத் தீவிரமாகப் பார்க்க தவித்து துடித்தாள் அந்த மென்மையான தாமரை.

செவ்விதழ் மலர்ந்து "அப்...அப்படி... பார்க்காதீங்க "அவள் சொன்ன விதமே மீண்டும் பார்க்க தூண்ட தாங்காத தங்க தாமரை அவனைத் தள்ளி விட்டு போர்வைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

மனைவியின் செயலில் சிரித்தவன் "எனக்கு மட்டுமே உரிமை இருக்கு அதனால்” மீண்டும் போர்வையை இழுக்க இப்போது அவள் கண்ணில் நீர் ஹ்ம்ம் ............... அசைவான என்ன துயில் உரித்து அவளுக்குத் துணியாக மாறியவன் சிறுது நேரம் அமைதி காத்து "யாரை கேட்டுப் பிறந்தகம் போனீங்க"...

அவனது உடல் பாரம் தகிக்க அவனது கேள்வி பயத்தைக் கொடுக்கத் தயங்கிய வாறே "மாமா தாங்க போகச் சொன்னாங்க அவர் பேச்ச மீற முடியல நான் அப்பவே சொன்னேன் உங்ககிட்ட சொல்லிட்டு போரேன்னு" அதற்கு மேல் அவனது அசைவு பேச விடாமல் செய்ய அவனே கருணை பிறந்து அவளை விட்டு தள்ளி படுத்தான்.

முகத்தை அவனை நோக்கி திருப்பி “நான் பேசுறதை புரிஞ்சிக்கோ தாமரை என் மேலையும் தப்பு இருக்கு எனக்கு ரொம்பப் பேசவெல்லாம் தெரியாது ஆனா உங்கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்” என்ற ஆதவனைப் பார்த்து அழகாகத் தலையாட்டியது இந்த வெண் தாமரை

“இங்க பார் தாமரை அண்ணிங்க மாதிரி உனக்கும் இந்த வீட்டுல மரியாதை வேணும் அதான் இராப் பகலா உழைக்கிறேன் உனக்கு மாதங்கி அண்ணி பத்தி தெரியும் தானே அவங்க என் வேலையும் வருமானத்தையும் குறைவா பேசுறது புடிக்கல அதான்” அதற்கு மேல் தொடர முடியாமல் சிறுது மௌனம் காத்தவன்.

பொது காசுல இருந்து எனக்கு வேண்டாம் சொல்லிட்டேன் ஆனா உனக்கு அதில உரிமை இருக்கு என் செலவுகளைக் குறைச்சுட்டு உனக்கும் சேர்த்து தான் அப்பாகிட்ட காசு கொடுக்கிறேன்.நீ உனக்குத் தேவை உள்ளதை வாங்கிக்கலாம் எனக்காகப் பார்க்காத நான் சம்பாரிக்கிறதே உனக்குத் தான்.

அவனது பேச்சில் நிகழ்ந்து போனாள் பெண் தன்னைக் கணவன் கவனிக்கவில்லை என்று எண்ணி சிறு கலக்கம் கொள்ள அவனது பேச்சில் துணி கொண்டு துடைத்தது போல மறந்து போனது.

அவன் பேச பேச கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது அவளது கண்ணீர் பதற வைக்க "என்னம்மா" அந்த ஒற்றை அழைப்பு இன்னும் அழுகையைத் தூண்ட அவனது நெஞ்சில் கதறி அழுதாள் தாமரை சிலரின் நாக்கு விஷ தன்மை உள்ளது போலும் விஷமாக வார்த்தையைக் கக்குகின்றது மாதங்கியின் நாக்கினை போல.

தான் பெண் அவர் என்ன பேசினாலும் தாங்கி கொள்ளலாம் ஆனால் ஆண்கள் பொறுமையும் குறைவு,திடமும் குறைவு எத்தனை தூரம் மாதங்கி பேசி இருந்தாள் அவன் ஊண் உறக்கமற்று உழைத்து இருப்பான் எண்ண எண்ண மனம் வலித்தது.

அவளது வேதனையை அறிந்தவன் "தாமரை இங்க பார் " தனது முகம் காண செய்தவன் கண்ணைத் துடைத்து "எனக்கு உன் மேல எப்படி அன்பு காட்டுறதுனு தெரியல சாப்பிட்டியா? இன்று என்ன பண்ண? அதெல்லாம் கேட்க தெரியாது

ஆனா இனிமே கேட்கிறேன் உன் தேவைகளை என்கிட்ட சொல்லு.கொஞ்சி பேச தெரியாட்டியும் உன் மேல உள்ள அன்பு குறையாதுடி இனிமே எங்கையும் போகாத இது கூட்டுக் குடும்பம் அனுசரிச்சு தான் போகணும் நான் சொல்ல வரது புரியுதா"

ம்... முனகியவள் உரிமையுடன் அவனை கட்டிக் கொள்ள இன்னும் வசதியாகப் போனது அந்த முரட்டு அன்பனுக்கு காலம் கை கூடி வர தான் இந்தக் கலகம் போலும்.

அங்கு வெளியில் தூங்கும் மனைவியை அனைத்துக் கொண்டு.அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார் சுந்தரம் என்ன ஒரு தீவிரமான யோசனை இன்னும் இந்த வண்டியில் இரண்டு சக்கரங்களைப் பழுது பார்க்க வேண்டும் அனைத்து சக்கரங்களும் சீரான பின்பு தான் இந்தச் சுந்தரம் குடும்பத்தின் வண்டி நிலையாக ஓடும்......

முகத்தைத் தீவிரமாக எண்ணத்தில் அமுதா வரவு தோன்ற மெதுவாகப் புன்னைகைத்தார் தனது கடை குட்டி காளையும் அழகான சீமை பசுவும் குடும்பம் நடத்துவதை எண்ணி பார்த்தவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.அதானே சுந்தரமாவது தீவிரமாகச் சிந்தப்பதாவது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவர் ஆயிற்றே கலங்குவாரா என்ன?...

அடுத்த அத்தியாயத்தைப் பார்க்க ஆவலாகக் காத்துகொண்டு இருந்தார்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top