அத்தியாயம் - 20

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 20

மதிமயங்கி நிற்கும் மாலை வேளையில், மாதுவின் தோற்றம் கண்டு மதி மயங்கி நின்றார், அம்பலவாணன்.

நேற்றைய தினம் தோட்டத்தில் அடித்த கூத்து அத்தனையும், சிவநேசன் புண்ணியத்தில் சிவகாமியின் செவி தீண்ட, இதோ ஊடல் கொண்டு நிற்கிறாள், பெண்.

உச்சியில் சிவநேசன் அனைவரையும் வீடு வந்து சேர்த்துவிட்டு, அம்பலத்தானையும் மாட்டிவிட்டுச் சென்றுருக்க,

கோபமாகப் பேச வந்த சிவகாமியின் செயலை முன்னமே கணித்தவர், விரைவாக அவளை நெருங்கி சற்று தணிந்த குரலில்…

“உரக்கப் பேசி காட்டிக் கொடுத்துப்புடாதீங்க! உங்கள மாதிரி என் உடன்பிறப்புகள் கிடையாது. அம்புட்டுச் சனத்தைக் கூட்டி மச்சானுங்களை ஒருவழி ஆக்கிப் புடுவாக.” என்றவர் சிவகாமி தணலாய் எரிக்க,

கண்களால் தனது குளுமையைப் பாய்ச்சி, தணலை அணைக்க எண்ணினார், அம்பலம்.

அவரது கெஞ்சலை ஏற்றாளும், உள்ளம் முரண்டு பிடிக்க, அம்பலத்தானுக்குப் போக்கு காட்டினாள் சிவகாமி.

அம்பலத்தான் சொல்வது போல், மீனம்மாள்,அன்பு,சக்தி,உலகம்மை,சங்கரி,சரசு என்ற ஆறு பெண்களுமே இப்படித் தான் வாழ வேண்டும் என்று இருப்பவர்கள்

நெளிவு சுளிவு கொண்டு வாழ்க்கை பயின்றாலும், சில இடங்களில் புரிதலும் தெளிவும் இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பாங்கு இல்லை என்பது உண்மை. அதைச் சிவகாமியும் உணர்ந்ததால் அமைதியாக விட்டுவிட்டாள். இல்லையென்றால் நாச்சி வீட்டில் பராசக்தி ருத்ரதாண்டவம் அரங்கேறி இருக்கும்.

மாடியில் புதிதாக வைத்திருக்கும் ரோஜா செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தன்னவளைக் கவர, குறளி வித்தை செய்து கொண்டு இருந்தார், அம்பலம்.

அவள் பார்வைக்கு ஏங்கிய மனிதர், உணவு உண்ணும் சமயம் அவளது கவனத்தைக் கவர தொண்டையைக் கணைப்பது, அதுவும் ஒரு நொடிக்கு ஒருமுறை.

இல்லாத தாகத்தை வரவழைத்துத் தண்ணீர் கேட்பது, கொடுத்தால் கையைப் பிடிப்பது போல் அழுத்தி வலிக்கச் செய்வது.

நூறு முறை அவள் இருக்கும் இடத்துக்கு வந்து போவது எனப் படுத்தி வைத்தார்.

மச்சான் சேட்டையில் வாய் பிளக்காத குறையாக மாப்பிள்ளைகள பார்த்து வைக்க, பெண்கள் சிரிப்பை கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டு இருந்தனர்.

அவருக்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் புரிய, நாச்சியோ சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டார். அவருக்கு நடந்த விடயங்கள் அனைத்தும் தெரியும். தன் மகனா என்ற பெரும் அதிர்ச்சியும், மாப்பிள்ளைகள் மீது சிறு சங்கடமும் உண்டு தான். ஆனாலும், இலை மறை காய் மறையாக இருந்து கொண்டார்.

தற்போது பெரிய மகன் பெருமானாக நின்றவன், கண்ணனாக மாறிச் செய்யும் சேட்டையில் சிரிப்பு தான் வந்தது. இதைப் பார்க்கத்தான் அத்தனை இடர்கள் போலும். இதுவும் அனுபவம் என்ற நிலையில் எண்ணிக் கொண்டார்.

அனைத்து செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி அடித்து விட்டவள் கீழே செல்லப் போக, பொறுமை இழந்தவர் வழியை மறைத்து நின்றார்.

அவரைத் தாண்டித் தான் செல்ல முடியும், வேகமாக அவர் முகம் காண

“என்னடி மாமி கண்ண கண்ண விரிச்சி முழுங்குற. ரொம்ப நாள் செண்டு ஒண்ணா இருந்தோம்....... அதுவும் இல்லாம ஓத்த மரத்து கள்ளு எம்புட்டுத் தெம்பு தெரியுமா?” சமாதானம் என்ற பெயரில் அவர் சொன்ன காரணம் இன்னும் கோபத்தைக் கூட்டியது.

“கள்ளு குடிச்சாதான் பலம் வருமோ? காய், கறி சாப்பிட்டாலும் பலம் வரும்.”

“நீக சின்னப் பிள்ளையாவே இருக்கீக. அதேன் புரியல. காதக் கொடுங்க கதை சொல்லுறேன்.” என்றவர் அவர் பதில் கூறும் முன்னே மேலும் நெருங்கி,

“அது நீக பாலும் பருப்பும் காயும் கறியும் உண்டு.......” என்று சற்றுப் பசுமையாக விளக்கம் கொடுக்க,

அவரது அடாவடியை தாங்காத சிவகாமி,

“ஐயோ போங்கோ!” என்றவர் இரு கைகளும் கொண்டு அவரை ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு, வெட்கச் சிணுங்கலுடன் ஓடிவிட்டாள்.

அம்பலத்தானின் கம்பீரமான சிரிப்பு அவரைத் துரத்தியது.

***

மகள்களும் மருமகன்களும் இரவு உணவை ஏழு மணிக்கே முடித்துக் கொண்டு அவரவர் இருப்பிடம் செல்லத் தயாராக,

மீனம்மாள் “வாசுகி, நாளை மக்கா நாள் மதுரைக்குப் போகனும். மறுப்பு சொல்லாம கிளப்பி இருக. உம்ம கூடச் சிவகாமி வருவாக. நானும் சரசும் எங்க வூட்டுல இருந்து வந்துருவோம். எல்லாம் சுகமாகும் என்ன?” என்று சொன்ன நாத்தனாரிடம் தலையை மட்டும் அசைத்தார், வாசுகி.

அனைவரும் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டு, கிளம்பிச் சென்றனர்.

அதன் பின் அம்பலத்தான் அறையில் அமர்ந்து இரு தின கணக்குகளை எடுத்து வைத்து வேலை பார்க்க, சிவகாமி அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்.

நாச்சி வழமை போல் தனது இடத்தில முடங்கிவிட்டார்.

வாசுகியும் சுப்பிரமணியனும் மாடிக்குச் சென்றனர். இன்னும் இருவரும் நேருக்கு நேர் பேசிக்கொள்ளவில்லை. காரணம் இருவருக்குமே பயமாக இருந்தது, தனது இணையின் பதில்களை எண்ணி.

தங்கைகள் அனைவரும் ஒன்று கூடி சுப்பிரமணியனை வளைத்துப் பிடித்து, பேச வைத்திருந்தனர்.

அம்பலத்தான் வெறும் பார்வையாளரே!

சிவகாமி சுப்புவின் சங்கடம் கண்டு, நாச்சியிடம் இருந்து கொண்டாள்.

வாசுகியும் அவளுடன் இருந்து கொள்ள, உடன் பிறப்புகளுடன் தெளிவாகத் தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டான், சுப்பு.

நாச்சி “இனி நீங்களே” என்ற நிலையில், ஒரு பார்வையாளராக இருந்து கொண்டார்.

சூழ்நிலை கை மீறிப் போகும் அளவு வந்தால், தனது உதவி பிள்ளைகளுக்கு என்று எண்ணிக் கொண்டாரோ என்னவோ? செவியை இவர்களிடம் விட்டுவிட்டு அமைதியாகக் கவனித்திருந்தார்.

ஒருவழியாக விவாதம் முடிந்து வாசுகியையும் அழைத்துப் பேசி, மருத்துவரிடம் செல்வது என்ற முடிவுக்குப் பின், அமைதியாகக் களைந்து சென்றனர்.அப்பொழுதும் சுப்பு வாசுகியிடம் பேசவில்லை. அவளும் பேசவில்லை.

எங்கே பேசினாலே கோபம் கொள்வாரோ என்று அவளும், எங்கே பேசினால் மீண்டும் மறுமணம் என்பாளோ என்று அவரும், எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தனர்.

இதோ நாளை மறுநாள் செல்ல வேண்டும் என்ற நிலையில், இருவருமே பேசியாக வேண்டும் அல்லவா? அதனால் தயங்கி தயங்கி நின்றனர்.சுப்பு தான் முதலில் பேசினான்.

“சொல்லுக. பேச வந்துட்டு பேசாம வானத்தை வெறிக்க நின்னா?” சற்று தூக்கலான குரலில் பேச, அதிர்வு கொண்டது பெண்.

அவளது அதிர்வு எரிச்சலூட்ட “ப்ச்.. நான் என்ன சிங்கம் புலியா? இல்ல.. நேத்து கட்டி இன்னைக்கு வந்தீகளா? எதுக்கு இம்புட்டுப் பயம்?”

“இல்ல...” அதற்கு மேல் வார்த்தை ஏனோ வராமல் போனது. அவளது தயக்கம் கண்டு கோபம் வர..

“வாசுகி!..... பார்த்தீகளா? புதுசா பழகுற மாதிரி இருக்கு. என்ன வேலை இதெல்லாம், இம்புட்டு நாள் எங்க போச்சு இந்தத் தயக்கம்? பேச்சு பழகுற பச்சை புள்ள போல…!” எரிச்சலாகச் சொன்னவனைப் பார்த்து அழுகையாக வர, சத்தம் போட்டே அழ ஆரம்பித்து விட்டாள்

அதில் பதறியவன்,“ஏய் ஏய்! என்னாத்துக்குடி ஊரக் கூட்டுறவுக வாசுகி! ஏய் வாசுகி!” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனுடன் தன்னைப் புதைத்துக் கொண்டவள், கண்ணில் நீர் வற்றும் வரை அழுது கரைந்தாள். அவள் ஏங்கி ஏங்கி அழ, பயந்து தான் போனான் சுப்பு.

“என்னாத்துக்குடி பச்ச புள்ள மாதிரி ஏங்கிக்கிட்டு இருக்க. மூச்சை இழுத்து விடுடி! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி, நல்லாப் போய்ட்டு இருந்த வாழ்க்கையில கல்யாணம் குழந்தைனு நீ தானேடி பிள்ளையார் சுழி போட்ட?

பார்க்கப் போனா, நீ பண்ண அம்புட்டுக்கும் நாந்தேன் ஏங்கி ஏங்கி அழுவனும்” என்றவன், அவளைத் தன்னிடமிருந்து பிரித்து முகம் காணச் செய்ய, மறுக்காமல் தன்னைப் பார்த்தவளை,

“ஆனா ஒண்ணுடி! போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணமோ? நானும் என் அண்ணனும் நல்லாப் படுறோம்.”

“அப்படி சொல்லதீக. நாந்தேன் தப்பு. பெரிய மாமாவும் நீங்களும் தங்கம்!”

“ஹான், அதேன் நீயும் மதனியும் உரசிப் பாக்குறீங்களோ?” என்றவரிடம் என்ன பேசுவது என அமைதியாக இருந்து கொண்டாள். இரு ஆண்களின் வாழ்க்கையிலும் சறுக்கல் உண்டு அல்லவா, மேலும் தொடர்ந்தான்

“மதனி கூட, எங்க அண்ணே வேணுன்னு தாண்டி சண்ட கட்டுனாக. ஆனா, நீ!”

“இதையே தான் எல்லாரும் சொன்னார்கள்”

கொதிப்புடன் பேசிக் கொண்டு இருந்தவரிடம், தன்னை விளக்கவென்று, மீண்டும் ஒரு சில புள்ளிகளை வைத்து விட்டாள், வாசுகி.

“அது ஒருமாதிரி நீக சுகப் படனும்னு தானே விலகி நிக்கேன். உங்களை விட்டுக் கொடுக்குறதுக்கு எம்புட்டு வலி அனுபவிக்கனும் தெரியுமா? இதுவும் ஒரு மாதிரி அன்பு!”

“அம்மா தாயே! எந்த மாதிரி அன்பும் எனக்கு வேணாம். இதுக்கு மேல பேச்சு பேசாத! உன் விளக்கம் வெங்காயம் எல்லாம் போதும்! என்னால மல்லுக்கட்ட முடியல சாமி! என் அம்மை கிட்ட குடிச்ச பால் அம்புட்டும் ஆவியாப் போச்சு, போ!” என்றதும்,

முகத்தைச் சுருக்கிக் கொண்டாள்.

அதற்கும் பாய்ந்தான்.

“என்னடி சுளிக்கிறவ?” என்று வேகமாக நெருங்க, பயந்து பின் வாங்கினாள்.

இத்தனை நாள் திருமண வாழ்க்கையில் கோபம் என்பது சுப்புக்கு ஒரு சில நொடிகள் தான். அதுவும் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை என்று தான். அப்பொழுதும் நிதானம் தவறியதில்லை. அத்தகைய மென்மை கொண்டவன், இன்று வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு சண்டைக்கு நின்றான்.

அவளது அழுகையில் “மீண்டும் ஆரம்பிக்காத! கடைசியா கேட்குறேன், என்ன சொல்லுறீக?”

“நீக என்ன சொன்னாலும் சரித்தேன்.” பட்டனே பதில் வர, அதையும் குனிந்து கொண்டே சொன்ன மனைவியைப் பார்த்து சிறு கீற்றாகச் சிரிப்பு வர, அதனை அடக்கியவன்..

“சரிவா!” என்று தனது கைகளை நீட்ட,

அதிர்ந்து முகம் பார்த்தவள், மெதுவாகத் தனது கையுடன் அவனது கையை இணைத்துக் கொண்டாள்.

இங்கு இளைய கிளிகள் பிணக்கை சற்று தள்ளி வைக்க, அங்கேயோ இரு காதல் கிளிகள் ஒன்றை ஒன்று கீறிக் கொண்டு சண்டை அடித்தது.

*

“சிவா, இப்போ எதுக்கு பழசைப் பேசுற பஞ்சாயம் முடிஞ்சு போச்சு?”

“ஏன் பேசக்கூடாது சொல்றேள்? பாதிக்கப் பட்டது நான்!”

“ப்ச்.. அதேன், பேசி முடிச்சாச்சே! இப்போ என்னடி? அதுவும் இந்த நேரத்துல..” என்று பேசி கொண்டே நெருங்கிய அம்பலத்தானைப் பிடித்து ஒரே தள்ளாகக் கட்டிலில் தள்ளியவள்,

“இங்க பாருங்கோ! என்ன பேசியாச்சு? வந்த நாளுல இருந்து நமக்குப் பேச நேரமில்லை. உங்களுக்கும் சரி எனக்கும் சரி, மனசு விட்டுப் பேச நேரம் கிடைக்கலை. இப்போ தான் நேரம் இருக்கு. எனக்கிட்ட பேசுங்கோ!”

“ப்ச்.. என்னத்தேடி பேச? பேசுனா காயம்தேன். உனக்கும் வலிக்கும் எனக்கும் வலிக்கும்.”

“என் பக்கம் நியாயம் இருக்கு..”

“என்கிட்டயும் இருக்கும்மா”

“அதைத் தான் பேசச் சொல்றேன்.ஒன்னும் தெரியாத பச்சை பிள்ளையை, கன்னிகா தானம் பண்ணி, வேறொருத்தி கூடக் கல்யாணம் பேசுனேள். உங்களுக்குப் பேசி வேண்டி என்ன நியாயம் இருக்கு?”

“நீயேதேன் சொல்லிப் புட்டியே, பச்ச புள்ளன்னு. அப்புறம் எப்படி? நான் குடும்பம் நடத்த வந்தப்ப, என் இடுப்புக்குக் கிழ நின்னீக! நினைவு இருக்கா?”

“அதெல்லாம் நன்னா இருக்கு. நீக சொல்லுங்கோ!”

“இங்கன பாரு சிவா, எனக்குப் பேசி வச்சது உமையாளை! அந்தப் புள்ளைக்கும் இது தெரியும். ஒரு பொண்ணுக்கு வாக்குக் கொடுத்து புட்டுதேன் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். இதுக்கு என்ன செய்யச் சொல்லுற? அந்தப் பொண்ணுக்கு நியாயம் செய்ய வேண்டாமா?”

சிவகாமி கோபமாகப் பேச வர, அதனைத் தடுத்தவர்,“நான் பேசி முடிகிற வரை நீ பேசக்கூடாது!” குரலில் அத்தனை கடுமை மனிதனுக்கு. அதனைக் கண்டு கொண்டவள், அமைதியாக இருந்தாள்

“அம்மை பண்ண தப்பு, என்னைக் கலந்துக்காம உங்க அப்பாக்கு வாக்குக் கொடுத்தது தான். என்னை அப்பவே கேட்டு இருந்தா, சின்னப் பிள்ளையைக் கட்டி இருக்க மாட்டேன். ஆனா, எங்க அம்மைக்கு மருமக மேல அம்புட்டு என்ன அன்புனு தெரியல! சமத்தா சாதிச்சுப் புட்டாக.

தாலி கையில கொடுத்து, உன்ன முன்ன நிறுத்தும் போது, நான் என்ன செய்ய? மறுக்க முடியல. மறுத்து இருந்தா, பெருசா நடந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனா ஏன் மறுக்களை, தெரியல. இப்போ வரைக்கும் விடை தேடுறேன், அம்புடல!

சரி, கண்ணாலம் பண்ணியாச்சு! பண்ண உடனே பாண்டி விளையாடப் போயிட்டிக. ஆனா, இங்கன என்ன ஆச்சு தெரியுமா? உங்க ஐத்த ஒரு பக்கம் நெஞ்சை புடிக்க, எங்க ஐத்த ஒரு பக்கம் நெஞ்சை புடிக்க, நடுவுல நாந்தேன் அல்லாடிப் போனேன்.”

அம்பலத்தான் கூற்றில் பதறியவள்,“ஏன்? ஏன் மாமிக்கு என்ன ஆச்சு?”

“இப்போ கேளுக..” சலித்துக் கொண்டார் மனிதர்

“ஏன்னா சொல்லுங்கோ! நேக்கு பயந்து வருது.”

“நம்ம பண்ணது சாதாரண மணமா, அம்புட்டு பெரும் வாழ்த்தி புட்டுப் போக! கலப்பு மணம்! உங்க பிறந்தகம் சாதிசனம் புகுந்தகம் சாதிசனம் அம்புட்டு பெரும் கோவில்ல கூடிப் புட்டாக! எனக்கும் அம்மைக்கும் அழைப்பு வந்துச்சு, போனோம்.

இந்தப் பக்கம் ஒரே கூச்சல்! அந்தப் பக்கம் ஒரே கூச்சல்! எனக்கும் இதுனு தெரியாது. போனே கல்யாணம் பண்ணே வந்தேன். இப்போ உங்க அப்பாரும் எங்க அம்மையையும்தேன் பேசனும், பேசுனாக!

“என்ன... பேசுனாள்…?”

“ஹ்ம்ம், உன் அப்பாக்கு மாமன் முறையாம், கேட்டான் ஒரு கேள்வி! நீயெல்லாம் என்ன பெரிய மனுசி? அடைக்கலம் கேட்க வந்த புள்ளைய,உன் மவனுக்குக் கட்டி வச்சுபுட்டன்னு!”

“ஐயோ!” பதறினாள் சிவகாமி.

‘நாச்சியப் பார்த்து இப்படி ஒரு சொல்லா, அதுவும் தன்னால்’ பதறினாள் பேரிளம் பெண்

“ப்ச்.. முழுசா கேளுக, இன்னும் இருக்கு பதற செய்தி! இன்னொருத்தன் வெட்டிவிட்டுரு கண்ணாலம் செல்லாதுனு சொல்றான்! அம்மையப் பேசவும் அப்புச்சிக்கும் பெரியப்பாக்கும் கோபம் வர, மாறி மாறிச் சண்டைத்தேன்! அப்புறம் அம்மைத்தேன் பேசுனாக…!

இப்போ வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வர அம்புட்டு பெரும், மைனர் வந்து மல்லுக்கட்டும் போது எங்க போனீக?

ஒரு உலைக்கு அரசி போடுற வூட்டுல, ஒரு பிடி சோறு அந்தப் புள்ளைக்குக் கொடுக்க முடியாதா? யாரு கொடுத்தா?

மூனு வேலை அந்த அமபலத்தானுக்குச் சேவை செய்யுற குடும்பத்துக்குப் படி அளக்கவும், பாதுகாக்கவும் நாதி இல்லை! பிறவு என்ன பேச்சு வேண்டி இருக்கு என்றவர், அங்கே நின்ற சில முக்கிய ஆட்களைப் பார்த்து,இங்கன பாருக, கோவிலுக்கு வரும் போதெல்லாம் அம்சமா துரு துருன்னு வேலை செய்யும் சிவா பாப்பா. பார்த்த உடனே புடுச்சுப் போச்சு.

அம்புட்டு அறிவுக் களை. அந்தப் புள்ளைய எப்படியும் ஒரு கண்ணாலம் பண்ணி அடுப்பு உத விட்டுப்புடுவீக! அதுவும் அடுப்படியே கதின்னு புள்ளக் குட்டின்னு இருந்துருக்கும்.

எங்க வீணாக்கிப் புடுவீங்களோனு உரிமையை எடுத்துக்கிட்டேன். என் பெண் புள்ளைங்கள விட நல்லாப் படிக்குது.

அதேன், ஐயர் வந்து கேட்கவும் ஆசையச் சொல்லிப்புட்டேன் என்றவர், சுந்தர் ஐயரே உங்களுக்கு நான் கேட்டதுல எதுவும் சங்கடமா?

கையை எடுத்து தலைக்கு மேல் கும்பிட்டவர், இல்லங்க ஆச்சி எனக்கு என்றதும், கொதித்துப் போனார்கள் சுந்தர் பட்டர் சமூகத்தினர். அனைவரும், ஒன்று கூடி அவரை மொய்த்து விட்டார்.

வாக்குவாதம் உச்சம் தொட, இனி தில்லைநாதனுக்குச் சுந்தர் பட்டர் சேவை செய்யக் கூடாது என்று சொல்லிவிட, நிறைவாகச் சேவை செய்து விட்டேன் என்று தனது தலைமுறையாக வந்த சேவையை, தாரை வார்த்து விட்டார். இது அவர் எண்ணியதே என்பதால் திடமாக இருந்தார்.

நாச்சியும் தான் அதிர்ச்சி சற்று தளர்ந்து விட்டார், அம்பலத்தான் தான் நொந்து போனார் “எதற்கு இந்தத் தலைவலியென்று.” என்று சொல்ல..

“நான் உங்களுக்குத் தலை வலியா?”

“இங்கன பாருடி மாமி. அன்னைக்கு நான் இருந்த இருப்பு எனக்குத்தேன் தெரியும். அப்போ என் மனநிலை இது தான்” கசப்பான உண்மையென்றாலும் உண்மை உண்மை தானே! ஏற்கக் கடினப் பட்டாள் சிவகாமி.

“அதுக்குப் பெறவு படிக்கச் வச்சேன். வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனா குடும்பம் நடத்த மனசு வரல. அம்மைக்கும் உன்ன உசத்தில வச்சு பார்க்கணும் ஆசை. ஏன்னா ஒரு பெண் பிள்ளையும் படிக்க மாட்டேன்னு சொல்லிப் புடுச்சுங்க. நீ ஆர்வமா இருந்தனு சொன்னாங்க. அதேன் செஞ்சேன்.

பிறவு உமையாள்.....அம்மைக்கு உன் பைத்தியம் முத்திப் போயி இருக்குனு தெரிஞ்சு இருந்தா, கண்ணாலம் பேச்சே எடுத்து இருக்க மாட்டேன்!

உண்மையா பார்க்கப் போனா, உமையாள் தான் பாவம். அவுக எந்தத் தப்புமே பண்ணாம தண்டிக்கப் பட்டது பாவம் இல்லையா? உன்னக் கண்ணாலம் பண்ணத்தோட நான் விட்டுருக்கனும். திரும்ப அந்தப் புள்ள கிட்ட பேசி கண்ணாலத்துக்குத் தயார் பண்ணி, அதுவும் ஆறு வருஷம் செண்டு, அது மனநிலை எப்புடி இருக்கும்?”

“கஷ்டம் தான். ஆனா, நேக்கு அவாள ஏத்துக்க முடியலை! இனியும் முடியாது.” என்றவளைப் பார்த்து பெருமூச்சு வந்தது அவருக்கு.

சிவகாமியின் கையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டவர்…

“முதலும் முடிவுமா பேசிப்புடுறன், வலிச்சா” என்றவர் நிறுத்தி, தனது நெஞ்சை தொட்டுக் காட்டி “அடிச்சுக்கிடுக என்னை...”

“ஏன்?”

“ஏன்னா, உண்மை வலிக்கும்.”

இதனைச் சொன்னதும், கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள், சிவகாமி. மூடிய கண்ணில் நீர் வழிந்தது. இருந்தும் தொடர்ந்தார், அம்பலம்.

“நீங்க அப்போ என் மனசுல ஒட்டவே இல்லை. அது தான் உண்மை! யோசுச்சுப் பாருக. நம்ப எண்ணம் அப்போ என்ன? உங்கள கவனிக்க எனக்கும் நேரமில்லை. நீங்களும் நெருங்கல அம்மை முந்தியை புடிச்சுக் கிட்டே சுத்துவீக! இதுல யாரை குறை சொல்ல?

அதுக்குப் பெறவு தங்கச்சிங்க கண்ணாலம். சுப்பு கண்ணாலம் கடமை கட்டி இழுக்க, ஒத்த ஆளாக் கிடந்து அல்லாடிப் புட்டேன். யோசுச்சு பாருக!”

“ஹ்ம்ம்…”

“என்ன ஹ்ம்ம்? சட்டையப் புடிச்சுக் கேள்வி கேட்ட அன்னைக்குதேன், உங்க முகத்தை நெஞ்சுல பதிய வச்சேன். என்னடா நொண்டி விளையாண்ட புள்ள,இம்புட்டு பெருசா வளர்ந்து நிக்குதுனு! இம்புட்டுப் பாசம் வச்சு இருக்கவ, ஒரு நாளாவது அதைச் சொன்னியா?”

“நான் சின்னப் பொண்ணு.”

“இதைத் தாண்டி நானும் சொன்னேன். அப்போ சண்ட கட்டுனவ?”

“நீங்க வேற பொண்ண கட்டுவீங்கன்னு நான் நினைக்கலை. நேக்கெல்லாம் ஒரே வாய்! ஒரே சொல்லு! ஒரே புருஷன்!”

“இந்த ஒன்னமெல்லாம் நல்லாத்தாண்டி பேசுவ! சரிடி, உன் வழிக்கே வரேன். இன்னும் என்ன சொல்லு? பேசித் தீர்த்துப் புடலாம்.”

“ப்ச்..”

“என்ன உச்சுக் கொட்டுறவ? உன்ன திருப்திப் படுத்தவே முடியாதுடி! சரி, என் மேல் இந்தப் புள்ள கொள்ள ஆசை வச்சு இருக்கு, நம்ப பேசுவோம். நம்ப செஞ்சுது அதுக்கு வலிக்குமேனு மன்னிப்பு கேட்க …

எம்புட்டு நாள் நீ வேலை செய்யுற இடத்துக்கு வந்து பார்க்க நின்னு இருப்பேன்? என்னை மதிச்சுப் பார்த்தியாடி! நீ என்னை விடு, சக்தி எம்புட்டுத் தரம் வந்து இருக்கும், சரசு எம்புட்டு பேசி இருக்கும், முறுக்கிக்கிட்டு திரிஞ்சவ! நானும் கேப்பேன் நியாயம்!”

“நல்ல கேளுங்கோ! செய்றதை செஞ்சுச்சுட்டு, என்னைப் பார்க்க வந்தா ஆச்சா! நேக்கு என்ன வேணுன்னு பார்த்து பார்த்து செஞ்ச மாமி மட்டும் நேக்கு போதும்னு நெனைச்சேன். அவ மட்டும் தான் என்னை யோசுச்சா.”

“பெறவு எதுக்குடி நான்? கிளம்புடி!” என்றவராது கையைப் பிடித்து அமர வைத்தவர், அவரது மடியில் வாகாக அமர்ந்து கொண்டு,

“என்ன செய்ய? நேக்கு இந்த மீசையை ரொம்பப் பிடித்துப் போச்சே! அதான்.”

அவளது பேச்சில் மயங்கியவர், கிறக்கமாகப் பார்த்துக் கொண்டே, கிசு கிசுப்பான குரலில்,“பிடிக்குமா..?”

“ரொம்ப…” அவளும் அதே குரலில்.

இது தான் சாக்கென்று அம்பலத்தான் “உன் மாமியை விடவா?” என்க.

சட்டென மயக்கம் கலைந்தவள், அவரைத் தள்ளிவிட்டு எழுந்து கொண்டே,

“மாமிக்கு அடுத்து தான், நீங்க.” இதை சொன்னதும் அவர் பிடிக்கவர

அவர் கைக்கு அகப்படாமல் போக்கு காட்ட, வாகாக அவளைப் பிடித்துக் கொண்டவர்,“தப்பாச்சே..” சொல்லியவாறு அவள் மேல சரிய,

அதன் பின் தன்னைப் பிடிக்க வைக்க அவர் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியைத் தழுவி, நாச்சியே முதல் இடம் பிடித்தார்.

இருவருக்கும் இன்னும் மனம் சில கேள்விகளை எழுப்பத் தான் செய்தது. ஆனால் விடை? விடை சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ள மனம் முன் வரவில்லை. ஏனென்றால் அவரவருக்கு அவரவர் நியாயம் இரு தரப்பும் சரியே.

ஒருவர் நியாயம் வென்றால் மறுபுறம் தோல்வி என்ற நிலையில், இருவருமே ஒரு முடிவினை மனதுக்குள் எடுத்து கொண்டனர்.

இனி ஒரு தரம் இந்தக் கடந்த காலத்தை என்ற பேச்சுக்கே இடமில்லை, பேசினால் காயம் தான் மறக்க எண்ணினால் மட்டுமே வாழ்க்கை அங்கணம் உணர்ந்து அதனைச் செயல் பட முடிவெடுத்தனர் இருவருமே.

மறைத்து கொள்ளலாம் ஆனால் மறக்க முடியாது அல்லவா.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
n.palaniappan

ஆம். மறக்க முடியாது கூடவும் கூடாது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top