அத்தியாயம் 2 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-2

சண்முகம்-ஈஸ்வரி தம்பதியருக்கு
பொள்ளாச்சியை அடுத்து பதினாறு
கிலோமீட்டர் தொலைவிலுள்ள
அங்கலங்குறிச்சியே சொந்த ஊர்.
மூத்த மகள் உமாமகேஸ்வரி
இளையவள் ராதா. இருவருக்கும்
நான்கு ஆண்டுகள் வித்தியாசம்.

உமா பள்ளிப் படிப்பை முடித்து விட
அவளது இளங்கலை கல்விக்காக
பொள்ளாச்சி வந்து விட்டனர்
குடும்பத்தோடு. சண்முகம் முதலில்
இருந்தே பொள்ளாச்சியில்
ஆசிரியராக இருந்ததால் அவ்வளவு
தொந்திரவாக யாருக்கும்
இருக்கவில்லை. திருமுருகன்
(வருணின் தந்தை) ஈஸ்வரி
அம்மாவின் தூரத்து உறவு. சண்முகம்
குடும்பம் பொள்ளாச்சிக்கு வர வீடு
பார்த்துத் தந்தது திருமுருகன் தான்.
உமாவிற்கும் நல்லக் கல்லூரியை
சண்முகத்திற்கு கைகாட்டி விட்டார்
திருமுருகன்.

இந்நிலையில் தான் திருமுருகனின்
உயிர்நண்பன் மற்றும் கார்மெண்ட்ஸ்
தொழிலில் பாட்னரான
சுந்தரமூர்த்தியும் உமாவும் சந்தித்தது.
ஒரு நாள் உமா கல்லூரி செல்லும்
வழியில் தான் சுந்தரமூர்த்தியை
முதன்முதலில் சந்தித்தது. பார்த்த
முதல் சந்திப்பிலேயே இருவரும்
காதலில் விழுந்தனர். முதலில் உமா
திருமுருகனின் உறவு என்பதும்,
சுந்தரமூர்த்தி திருமுருகனின் நண்பன் என்பதும் இருவருக்குமே தெரியாது.

ஒருநாள் தான் ஒரு பெண்ணை
காதலிப்பதாகவும் அவளை அறிமுகம்
செய்து வைப்பதாகவும் சுந்தரமூர்த்தி
திருமுருகனை அழைத்துச் சென்ற
போது தான் திருமுருகனும் உமாவும்
ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்தனர்.
விஷயம் அறிந்த சுந்தரமூர்த்தியும்
அதிர்ந்து விட்டார். உமாவை விட
எங்கே தன் நண்பன் தன்னைத்
தவறாக நினைத்து விடுவானோ
என்று ஒரு கணம் பாரம் கொண்டார்
சுந்தரமூர்த்தி. தன் நண்பனின் முகத்தைப் படித்த திருமுருகன்
"உமாவிற்கு மாப்பிள்ளை பார்க்க
ஆரம்பிக்க போது சொல்லிவிடலாம்"
என்று கூற மூவருமே
ஒருவருக்கொருவர் சமாதானம்
ஆயினர். என்னதான் பேச்சுக்குள்
சமாதானம் ஆனாலும் விசயம்
வெளியில் வரும்போது
பிரச்சினையை சந்தித்தே ஆக
வேண்டும் என்பதை மூவருமே
உணர்ந்தனர். ஆனாலும் வெளியே
காட்டிக்கொள்ளாமல் அவரவர்
வேலைகளில் கருத்தாக இருந்தனர்.

ஆனால் திடீரென்று ஒருநாள் "நாளை
நமது உமாவை நிச்சயம் செய்ய
வருகிறார்கள். பையனும் பெரிய இடம். எந்த கெட்ட பழக்கவழக்கமும் இல்லை.. நல்ல சம்மந்தத்தை விட வேண்டாம்
என்று நினைக்கிறேன்" என விவரம்
சொல்ல உமாவிற்கு என்ன செய்வது
என்று தெரியவில்லை.

பெண் பார்க்க வருகிறார்கள் என்றால்
கூடப் பரவாயில்லை. நேராக
நிச்சயமே என்ற போது உமா பயத்தின்
உச்சிக்கே சென்றார். சுந்தரமூர்த்தி
இல்லாமல் வாழ முடியுமா என்ற கேள்விக்கு அவரது மனம் "இல்லை..
உன்னால் முடியாது" என்றே
பதிலளிக்க, இரவு எல்லோரும் தூங்க
உமா வெளியேறிவிட்டார். ஆனால்
வீட்டை விட்டும் நம்பிக்கை
வைத்திருக்கும் அன்னை தந்தையை
விட்டு வெளியேறும் போது சொல்ல
முடியாத துயரம் அவரது
தொண்டையை அடைத்தது.

"உமாவைக் காணோம் திருமுருகா"
என்று கலக்கத்துடன் கார்மெண்ட்ஸ்
வந்து நின்றார் சண்முகம்.
சுந்தரமூர்த்தி இன்னும் வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த திருமுருகன் சண்முகம் சொன்ன செய்தியைக் கேட்டு திகைத்தார். அவர் யூகித்து விட்டார்.

இருவரும் சென்று ஒவ்வொரு இடமாக
தேடினர். போலீஸில் புகார்
கொடுக்கலாமா என சண்முகம் கேட்ட
போது, "இன்னும் கொஞ்சம்
பார்ப்போம் மாமா" என்று அவரை
அமைதிப்படுத்தினான். ஏனென்றால்
திருமுருகனின் உதவியை நாடி வந்த
சண்முகம் "இன்று நிச்சயம்
வைத்திருந்தேன்.. எங்கு போனாள்
இந்தப் பெண் என்றுத்
தெரியவில்லையே" என்று புலம்ப
சுந்தரமூர்த்தியுடன் தான் உமா
சென்றிருக்கிறாள் என்பது
திருமுருகனுக்கு உறுதி ஆயிற்று.
மேலும் தெரிந்தே ஏன் போலிஸில்
சொல்ல வேண்டும் என்று தான்
சமாதானம் செய்து வைத்தார்.

ஆனால் மாலை திருமணம்
முடித்துக்கொண்டு உமாவும்
சுந்தரமூர்த்தியும் வந்து வீட்டின் முன்
நின்றபோது சண்முகம்
கொதித்துப்போனார். நம்பிக்கை வைத்து வளர்த்த மகள்
பொய்த்துப்போனாளே என்று
ஆத்திரம் தலைக்கேறியது. உமாவை
நோக்கிக் கையை ஓங்கிக் கொண்டு
போனவரைத் திருமுருகனும் ஈஸ்வரி
அம்மாவும் தான் தடுத்தனர்.
வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து
சாத்தினார்.

திருமுருகனுக்கு என்ன செய்வது
என்றே விளங்கவில்லை. ஈஸ்வரி
அம்மாவிடம் சென்று "நீங்கள் அவரை
சமாதானம் செய்யப் பாருங்கள்.. நான்
அடுத்து ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றுவிட்டு
சுந்தரமூர்த்தியிடம் திரும்பினார்.

"என்ன இப்படி செஞ்சிட்டிங்க?" என்று
கோபமும் வருத்தமும் ஆகக் கேட்டார்
திருமுருகன்.

நடந்ததை அழுது கொண்டே சொல்லி
முடித்தார் உமாமகேஸ்வரி. மேலும்
"நான்தான் இவரை வற்பறுத்தினேன்.
இவர் வீட்டில் பேசுவதாகச்
சொன்னதை கூடக் கேட்காமல்
நான்தான் இன்றே என்னை
திருமணம் செய்து கொள்ளும் படி அழுதேன்" என்று விசும்பினார்
உமாமகேஸ்வரி.

சுந்தரமூர்த்தியும் திருமுருகனும்
உமாவை சமாதானம் செய்து ,
சுந்தரமூர்த்தியுடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்றனர்.
சுந்தரமூர்த்தியுடைய வீட்டினரும்
ஒத்துவராததால் சில நாட்களில்
தனியாக வெளியே வந்தனர்.
இந்நிலையில் பெரிய ஆர்டர் ஒன்று
கிடைக்க அயராது உழைத்து வெற்றி
கண்டனர் சுந்தரமூர்த்தியும்
திருமுருகனும். முதலில் சிறிய அளவில் தொடங்கிய தொழிலை
கண்டிப்பாக முன்னேற்றி விடலாம்
என்ற நம்பிக்கை பிறந்தது
சுந்தரமூர்த்திக்கும் திருமுருகனிற்கும்.
இதைப் பகிர்ந்து கொள்ள வீட்டிற்கு
வந்த போதுதான், சுந்தரமூர்த்தியிடம்
தான் கருவுற்றிருப்பதாகக் கூறி
மேலும் சந்தோஷத்தில் தள்ளினார்
உமா. விஷயம் அறிந்து வந்த
திருமுருகனும் வாழ்த்துத் தெரிவித்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

"அண்ணி கருவுற்றிருப்பதை அவர்கள்
வீட்டில் சொல்லலாம் சுந்தரமூர்த்தி"
என்றார் திருமுருகன்.

முதலில் தயங்கிய சுந்தரமூர்த்தி
மனைவியின் முகத்தில் இருந்த
ஏக்கத்தை கண்டு சரியென்று
ஒப்புக்கொண்டார்.
சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் கண்டு முதலில்
முகத்தில் கோபத்தைக் காட்டிய
சண்முகம் பிறகு என்ன நினைத்தாரோ "வாங்க" என்றுவிட்டு உள்ளே சென்று அமர்ந்தார்.

உள்ளே சென்று அமர்ந்துவிட்டு தானே
பேச்சைத் தொடங்கினார்
சுந்தரமூர்த்தி, "வந்து... உமா
கருவுற்றிருக்கிராள்" என்று கூறினார்.

உமா வீட்டினர் உருகித்தான் போயினர். ஈஸ்வரி "ரொம்ப சந்தோஷம்" என்று
கூற சண்முகம் மட்டும் அமைதியாகவே இருந்தார். அவரின்
கோபத்திலும் நியாயம் இருந்தது..
சிறிய வயதில் இருந்து சீராட்டி
வளர்த்தச் செல்லப் பெண் உமா.
அவளுக்குப் பெரிய இடத்தில் இருந்து
தானாக சம்மந்தம் வர அவ்வளவு
மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால்
மகள் அத்தனையையும் பாழாக்கி
விட்டதை அவரால் ஜீரணிக்க
முடியவில்லை.

"நாங்கள் செய்தது தவறு தான்.
உங்களின் கோபம் நியாயமானதும்
கூட. ஆனால் அவள் உங்களைப்
பார்க்க ஆசைப் படுகிறாள். நீங்கள்
வந்தால் மிகவும் சந்தோஷப்படுவாள்..
தயவு பண்ணி அவளிற்காவது வந்து
பாருங்கள்" என்றுக் கேட்ட
சுந்தரமூர்த்தி "மேலும் நடந்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள்" என்று
இருகைகளையும் கூப்பி ஒரு நிமிர்வுடன் மன்னிப்புக் கேட்டார்
சுந்தரமூர்த்தி.

அவர் அப்படிக் கேட்ட உடனே
சண்முகம் சற்று இறங்கி வந்தார்.
சுந்தரமூர்த்தி திருமுருகன் கூடவே
மூவரும் கிளம்பிவிட்டனர். உமாவிற்கு
அனைவரையும் கண்டதில் அளவு
கடந்த மகிழ்ச்சி. அடுத்து ஒன்பது
மாதத்தில் மதுமிதாவும் பிறந்தாள்.
சுந்தரமூர்த்தி உமாமகேஸ்வரி
திருமணத்தில் கோபமாக இருந்தது
சண்முகம் தான். ஆனால் பேத்தியைத்
தாங்கு தாங்கு என்று தாங்கியதும் அவர்தான். பெயர் சூட்டு விழா ,
காதணி விழா என்று அனைத்தும்
நன்றாக நடந்தன. பெயருக்காக
வந்துவிட்டு சென்றனர்
சுந்தரமூர்த்தியின் உறவினர்கள்.
திருமுருகன்தான் மதுமிதா என்ற
பெயரைப் பரிந்துரைத்ததே. பெயரும்
நன்றாக இருக்கவே அதையே
சூட்டிவிட்டனர்.

திருமுருகனின் பெற்றோர் ஒரு
விபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டனர். ஒரே மகன்
என்பதால் பெற்றோரை இழந்துத்
தனியாகத் தவித்த திருமுருகனை
சுந்தரமூர்த்திதான் ஆறுதல் சொல்லி
தேற்றினார். இருவரும் சேர்ந்து
தொழில் தொடங்கினர். மதுவிற்கு
நாலு வயது இருக்கும் போது
திருமுருகனுக்கே ராதாவை கொடுக்க
முடிவு செய்து, கல்யாணம்
பெரியவர்களால் நடத்தப்பட்டது..
அவர்களுக்கு மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரே
மகன்தான் வருண். மது சித்தப்பா
வீட்டிலேயே கிடப்பாள் தம்பியைக்
கொஞ்சியபடி. வருணிற்கும்
மதுவிற்கும் ஏழு ஆண்டுகள்
வித்தியாசம். வருண் தற்போது
பொறியியல் (டெக்ஸ்டைல் துறையில்) முதலாம் ஆண்டு பொள்ளாச்சியிலேயே படித்து வருகிறான்.

தொழில் சிறப்பாகச் செல்லவே
அடுத்து கோவையிலும் ஒரு
கிளையை நிறுவினர். நாட்கள் கடந்து
சென்றன.மதுவிற்கு பதினொராம்
வயதின் போது வீடு கட்டி எல்லாரும்
ஒன்றாக குடி சென்றனர், சண்முகம்
ஈஸ்வரி தம்பதியரோடு.

சண்முகம் அய்யாவும் ஏதாவது
அவர்களுடன் சென்று பார்த்து
வருவார். சொல்லப்போனால்
ஆண்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே
இல்லை. அதற்கு ஏற்ற மாதிரியும்
ஒருவருக்கொருவர் நடந்து
கொண்டனர்.

எல்லாம் மதுவின் விருப்பப்படியே
படிக்க வைத்தனர். அவள் லண்டனில்
இருந்து பொள்ளாச்சி வந்ததும்
மதுவின் திருமணத்தை முடித்து விட
வேண்டும் என்று முடிவில் தான்
இருந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்கப் போவதில்லை என்று அப்போது யாரும் அறியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top