அத்தியாயம் - 18

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 18

இன்று வெள்ளிக் கிழமை, நாச்சிக்கு வைத்தியம் பார்க்கும் நாள். அதாவது கைக்கு எண்ணெய் தேய்த்து மடக்கி தூக்கியென, பயிற்சி கொடுப்பார்கள்.

அனுபவம் மிகுந்த ஆச்சி ஒருவர் வைத்தியம் செய்ய, அவர் பக்கத்தில் எண்ணெய் கிண்ணத்துடன் நின்று இருந்தாள், சிவகாமி.

எண்ணம் கவனம் முழுவதும் தனது மாமியிடம் இருக்க, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தனர் வீட்டு மக்கள்.

‘இது என்ன ரகம் என்பது போல் சிலர்,இது முத்திப் போன பைத்தியமா என்று சிலர், இன்னும் சிலர் என்ன பொண்ணுடா சாமி!’ என்று பார்த்திருந்தனர் அந்த அளவிற்கு உருகி கரைந்தாள் பெண்.

இன்று வேறு வீட்டின் மாப்பிள்ளைகளும் ஆஜர் ஆகி இருந்தனர். மாமியாரின் உடல் நிலை அவர்களை கலவர படுத்தியது என்றால், இளைய மச்சானின் செய்கை கவலைப் படுத்தியது. இத்தனை உறவுகள் இருக்க அனாதையாக மதுரையில்.... அதுவும் வேலைக்காரனாக, தாங்கவே முடியவில்லை அவர்களுக்கு.

பெரியவரை எண்ணி எண்ணி மாய்ந்து போக, இதோ சில தினங்களுக்கு முன் தான் அவர் வாழ்க்கை ஓர் நிலைக்கு வந்தது. அப்பாடா என்று பெருமூச்சுவிட்டு எண்ணும் சமயம், சுப்பிரமணியனின் வாழ்க்கை அந்திரத்தில் ஊசலாட, என்னடா இது என நொந்து கொண்டனர், மாப்பிள்ளைகள் குழு.

இதற்கு ஒரு முடிவு இன்றே வேண்டும் என்று எண்ணத்துடன் பிள்ளைகளை கூட ஒரு வார காலம் தங்களது பெற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டனர் அந்தப் பாசக்கார மாப்பிள்ளைகள்.

****

சிவகாமி காலையில் விழித்தவுடன் நாச்சியின் முந்தானையைப் பிடித்தவள் தான், அவரை ஒட்டியே சுத்திக் கொண்டும் அவருக்குச் சேவை செய்து கொண்டும் திரிந்தாள்.

மீனம்மாள் திட்டியும் அவள் அடங்குவதாக இல்லை. சொல்லிப் பார்த்தவர்கள், எப்படியோ போ என்று ஒதுங்கிக் கொண்டனர். அவளது நிலையம் புரியத் தான் செய்தது, அவர்களுக்கு

ஒரு மணி நேரமாகச் செய்த வைத்தியம் ஒருவழியாக முடிவுக்கு வரவும், சுப்பிரமணியனும் வாசுகியும் வரவும் சரியாக இருந்தது.

நாச்சியைக் கை தாங்களாக அழைத்து வந்தவள், அவரை நாற்காலியில் அமர்த்திக் கொண்டு இருக்க, அம்மாவென்ற கரகரத்த குரலில் அழைத்துக் கொண்டு, வேக நடையுடன் வந்தான், சுப்ரமணியன்.

அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர். வேகமாக வந்தவன் அவர் காலடியில் அமர்ந்து கொண்டு கையைப் பிடித்துக் கண்ணீர் விட, அவருக்கும் கண்ணில் நீர் சுரந்தது.

பார்க்கும் அனைவருக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான். ஆனால், அதனை மறைத்துத் திடமாக நின்றனர்.

அம்பலத்தான் “வா வாசுகி. ஏன் அங்கனையே நிக்கிறீக!”

“வரேன் மாமா.” என்றவள் தயங்கி தயங்கி வந்தாள்.

தன்னால் என்ற குற்ற உணர்வு தலை தூக்க, அழுகை வரும் போல் பயம் காட்டியது.மெதுவாக வந்து நாச்சிக்கு சற்று தள்ளி நின்றவளது கையைப் பிடித்து,

“இங்க நில்லுங்கோ.” அருகில் நிறுத்தினாள் சிவகாமி

அதில் அதிர்ந்தவள், அவளது முகத்தைப் பார்க்க, சினேகமாகச் சிரித்தாள் பெண். பழகியது இல்லை, பெரிய மாமன் மனைவி வீட்டுக்கு மூத்த மருமகள் என்று அவளைப் பற்றி அறிந்தது உண்டு. ஆனால், உணர்ந்தது இல்லை.இன்று தான் இத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.

நாச்சி தான் பேச்சை தொடங்கினார்.“எப்படி இருக்கீக?” என்று வாசுகியை பார்த்துக் கேட்க, அழுகை வெடித்தது பெண்ணுக்கு.

அவரது கால் பற்றிக் கணவனுடன் அமர்ந்து, அவரது மடியில் புதைந்து அழுது கரைந்தாள். பார்த்த அனைவருக்கும் மனம் பரமாகிப் போனது.

அம்பலத்தான் தான் சூழ்நிலையைக் கையில் எடுத்தார்.

“அழுகாதீக. சுப்பு என்னடா செய்தி? இப்போவது சொல்லுங்க சொன்னதானே தெரியும்.”

அம்பலத்தான் தொடங்க, மூத்த மாப்பிள்ளை என்ற முறையில் மீனம்மாள் கணவன் விநாயகமும் பேச்சைத் தொடங்கினார்.

“மச்சான் என்ன செய்தி? வீட்டை விட்டு வெளில போற அளவுக்கு? சொல்லுக பேசி முடிச்சுக் கிடலாம் ராணி மாதிரி இருந்தவுக உங்கள எண்ணியே படுத்து புட்டாக” அத்தனை ஆதங்கம் அவரது பேச்சில்.

இருக்காதா பின்னே நாச்சியின் மீது மதிப்பு மரியாதையை விட அன்பு கூட ஏனென்றால் அத்தனை பாங்கான பெண்மணி அவர்.”

சரசு கணவர் கந்தன்,“என்ன மச்சான்? எதுவா இருந்தாலும் சொல்லுக. பேசிச் சரி பண்ணிக்கிடலாம். அடுத்தவுக வந்து செய்தி சொல்லும் போது, எம்புட்டு கஷ்டமா இருக்கு தெரியுமா? என்னங்க இது..” ஆதங்கமாக முடித்தார்.

உலகம்மை கணவன் செல்வமும், தன் பங்கிற்குத் தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

“ஒரு நாளுக்கு ஒரு வேலை மட்டுந்தேன் சாப்புடுவாராம், அந்த அப்புச்சி சொல்லுறாக கேட்க எம்புட்டு வவுத்த எரியுது தெரியுமா.” என்றதும்

வாசுகி இன்னும் கத்தி அழுதாள். அவளால் தாங்கவே முடியவில்லை.கணவன் தன்னைப் பிறந்தகம் விட்டுட்டு அவர் வீட்டுடன் சென்று விட்டார் என்றல்லவா எண்ணினாள் ஆனால் சுப்பு.....தாங்க முடியவில்லை

சுற்றி இருந்த அனைவரும் என்னதான் பிரச்சனை இருவருக்கும் என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டனர்.

அம்பலத்தான் பொறுமை காற்றில் பறக்க,“இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா?” என்று கர்ஜிக்க, சிவகாமியின் உடல் அதிர்ந்து குலுங்கியது, கணவனின் கோபத்தைக் கண்டு.

இது வரையில் முழுதும் பார்த்திடாத ஓர் பரிமாணம் அல்லவா?

அண்ணனது கோபத்தில் எழுந்து நின்ற சுப்பு, தனது முகத்தைக் கை கொண்டு துடைத்தெடுத்து அனைவரையும் பார்த்தவர்.

“குழந்தை இல்லயாம். அதுனால அவுக தங்கச்சிய கட்டிக்கிட சொன்னாக. முடியாதுனு சொன்னேன். தர்க்கம் பண்ணாக. சாகப் போறேன்னு மிரட்டுனாக. அதேன் அவுங்கள பிறந்தகம் விட்டுட்டு நான் அங்கன போனேன்.”

தங்களுக்குள் நடத்தை மேலோட்டமாகச் சொன்னதும், அனைவரிடமும் அமைதி.

என்ன சொல்வது? திருமணம் முடிந்து ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், பிள்ளை இல்லை என்பது பெரிய குறையாகப் பேச பட்டது, அவ்வீட்டில் உள்ள மக்களைத் தவிர்த்து.

நாச்சி “நான் உங்கள இதுவரைக்கும் எதுவுமே சொன்னதில்லையே, சாமி. எனக்கு சிவா பாப்பா மாதிரி தான் நீயும்.”

“ஐயோ இல்லங்க ஐத்த. இது என் முடிவு, எம்புட்டு நாள்தேன் அவரும் எல்லாரையும் சமாளிப்பாக.”

“அது அவுக பாடு. எங்களை தாண்டிதேன் எல்லாமே உங்களுக்கு வரும் உங்க எண்ணத்துல எனக்கு உடன்பாடு இல்லை, வாசுகி.” நாச்சி சற்று கோபமாக உரைக்க.

அனைவரும் அதனை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தனர்.

“நான் நியாயம் செய்யணும் ஐத்த”

“அதுக்கு உங்க புருஷன் கூட நல்லா வாழுங்க.. புள்ள வரும் போது வரும் எங்க ஐயன் பார்த்துக்கிடுவாரு”

“ப்ச் என்னைப் புரிஞ்சிக்கிடுக ஐத்த” சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளையென்ற நிலையில் வாசுகி.

விடுவாரா நாச்சி “முடியாது சாமி. நான் கூட வேற எதுவும் முக்கியமான செய்தி போலன்னு எண்ணி, என் உடம்பை கெடுத்துக்கிட்டேன்.” என்றவர்

சிவகாமியிடம் திரும்பி,“சிவா பாப்பா வாக, என்ன செத்த வைக கை வலி உயிர் போகுது.” என்றவர் சிவகாமி கையைப் பற்றிக் கொண்டு எழுந்து நிற்க,

அம்பலத்தான் விரைந்து வந்து மறுபக்கம் தாங்கிக் கொண்டார்.

அவர் தலை மறையும் வரை அமைதியாக இருந்தவர்கள், சுப்புவை நோக்கி வந்து “மச்சான் வாக, செத்த காத்தாட தோப்புக்குப் போவோம்.”

விநாயகம் அழைத்துச் செல்ல, அவருடன் மற்றவர்களும் செல்லப் பார்க்க,

சொக்கனை தடுத்த விநாயகம் “சகலை பெரிய மச்சானை இழுத்துட்டு வாக தோப்புக்கு.” என்றதும் அவர் சரியென்று தங்கி விட்டார்.

பெண்கள் குழு வாசுகியை இழுத்துக் கொண்டு சென்றது. நாத்திகள் அனைவரும் தன் மேல் கொளை வெறியில் இருப்பதை அறிந்த வாசுகிக்கு, பயமாகத் தான் இருந்தது. இருந்தும் தனது முடிவை கை விடவில்லை, அவள்.

வெகுநேரம் நாச்சியுடன் பேசிவிட்டு வந்த சிவகாமி, பெண்கள் குழுவில் கலந்து கொள்ள, களை கட்டியது வாதம்.

சிவகாமி கேட்ட கேள்விகளை கேட்கப் பொறுக்காமல் அதற்கும் பதிலளிக்க முடியாமல், இரு காதுகளையும் இறுக்கப் பொத்தி கொண்டு தனது அறைக்குள் ஓடிவிட்டாள், வாசுகி.

அவள் ஓடுவதைப் பார்த்த உலகம்மை,“சிவா ஏன்டி அநியாயம் பண்ணுற..”

“நானா பண்ணுனேன். கேள்வி தானே கேட்டேன். அதுக்கு ஓடினா ஆச்சா”

“மாமி கொழுப்பு தானே! எங்களுக்கே காது கூசுது. கொஞ்சமாவது நாங்க மதனிங்கனு பயம் இருக்கா?”

“மதனினா என்ன கொம்பா? நான் யாருனு தெரியுமோன்னோ, நாச்சி மருமாள்!”

“எங்க அம்மை கொடுக்கிற திமிருல தானே ஆடுற, ஆடு ஆடு!” என்று மீனம்மாள் சொல்ல, சிரித்துக் கொண்டாள் சிவகாமி.

“நோக்குப் பொறாமை அக்கா..”

“உண்மையாத் தான்டி பொறாமையா இருக்கு. எங்களைக் கூட அம்மை இம்புட்டு பொத்தி வளர்க்கலை.” ஆதங்கமாகச் சொன்னவள் கையைப் பற்றியவள்,

கண்கள் கலங்க “அவா, நேக்கு தெய்வம்! அவளுக்குச் சேவை செய்து என் நன்றிக் கடனை அடைகிறேன்.”

உணர்ச்சி பொங்கப் பேசியவளை அணைத்துக் கொண்டவர். ஐயோ சிவகாமி! என்ன பேச்சு இது? எல்லாமே நீயே இழுத்து போட்டு செய்யுற. எங்களுக்கும் கடமை இருக்கு. அதானே தவிர, உன் மேல இல்லை.”

மீனம்மாள் தவித்துப் போனாள் நோகச் செய்து விட்டமோ என்று.

“சரி சரி போக, வாசுகிய பார் கொஞ்சம் புத்தி சொல்லு சிவகாமி! நானும் எங்க ஐத்த கிட்ட பேசிட்டு வாறேன்.”

“அவுங்க பெரியப்பா மகள் மதுரையில மருத்துவரா இருக்காங்களாம்.”

“மகப்பேறு மருத்துவரா, அக்கா”

“ஆமா சிவகாமி. நான் ஒருதரம் பேசிப் பார்த்துட்டு, வாசுகியை அவுக கிட்ட காட்டிட்டு வரலாம்னு ஒரு யோசனை.”

“சரியான யோசனை அக்கா. நான் பேசுறேன், நீங்க பாருங்கோ.” என்றவள் வாசுகி அறையை நோக்கிப் போக.

நாத்திகள் அனைவரும் உடனே மதுரைக்குப் போன் போடச் சென்றனர்.

வீட்டின் பெண் பிள்ளைகள் வரம். பிறந்தகத்தின் வேர்கள்.

வேர்கள் இடம்மாறினாலும் அதன் தன்மை ஒன்று தானே! அதன் நுண் சிதறல்கள் என்றும் பிறந்தகத்தில் உண்டு அல்லவா?”

சீராட்டிப் பாராட்டி வளர்த்த உறவுகள் தத்தளிக்கும் போது, தளிர் கரங்கள் கொண்டு தானும் அங்கமென்று மீட்கத் துடிக்கின்றனர்.

ஒருவாராகப் பெண்கள் குழு மருத்துவரைப் பிடித்துப் பேசி அவரிடம் ஒப்புதல் வாங்கியே ஓய்ந்தனர். (நல்ல மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால், அக்காலத்தில் வெகு தூரம் செல்ல வேண்டும் அல்லவா)

இங்கே பெண்கள் குழு தங்கள் வேலையை முடிக்க, அங்கே ஆண்கள் குழு தங்கள் வேலையைக் காட்டினார்.

வெகு நாட்கள் சென்று குடும்பமாக மச்சானைப் பார்த்த களிப்பில் இருந்தனர், மாப்பிள்ளைகள்.

பினுக்கு இருந்தாலும் அதன் அளவு சிறிது தான் என்று தெரிந்த பின்பு, கூத்துக்குப் பஞ்சம் எது?

பொதுவாக மாமன் மச்சான் சேர்ந்தால் ஆட்டம் களை கட்டும். தோட்டத்தில் இறக்கிய சிறு கள்ளு கொண்டு சில கலந்துரையாடல்கள் நடப்பது வளமை என்றாலும், யாருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததில்லை (இதுநாள் வரை தான் அந்த கதை). இதில் அம்பலத்தானும் சுப்புவும் அடக்கம்.

ஆனால் இன்று மந்தகாசமான மனநிலையில் அனைவரும் சுப்புவை தவிர, ஆனால் அவரையும் ஒருவழி செய்து கொண்டு இருந்தனர், அவ்வீட்டு மாப்பிள்ளைகள்

மண் பானையில் கள் நிறைந்து கிடைக்க, அதனைச் சுற்றி பல ஓலைகள் பின்னி இருந்தது குடிப்பதற்கு ஏற்றவாறு. சுப்பு தலை குனிந்து அமர்ந்திருக்க, அவரது தோள் பற்றிய அம்பலம்.

“விடுக. என் பொஞ்சாதி படுத்துறதை விட, இது கம்மி தான்.”

“ப்ச் ரொம்பப் பேசிபுட்டாக அண்ணே மனசு கிடந்து துடிக்குது அம்புட்டு வார்த்தை. இதுல அவுங்க அம்மையும் கூட்டு..” மேலே சொல்ல முடியாமல் தடுமாறினான், சுப்பு.

என்னதான் குழந்தைக்காக மறுமணம் என்பது வழமையாக இருந்தாலும், வாசுகி மேல் காதல் கொண்ட கணவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாச்சியின் வளர்ப்பு உரக்கப் பேசியது, அங்கே.

“விடுக.இந்நேரம் பேசிப் பேசியே என் பொஞ்சாதி சரிக் கட்டி இருப்பாக.” சரியாக கணித்தார் அம்பலத்தார்

இதனைச் சொல்லும் போது, கள் குடித்துக் கொண்டு இருந்த செல்வத்திற்கு, குடித்த கள் நாசிக்கு ஏறியது.

“மாப்புள்ள பார்த்து”

“மச்சான் உங்க பொஞ்சாதியப் பத்திப் பேசுனாலே பயந்து வருது.” செல்வம் கண்களை உருட்டிச் சொல்ல,

அனைவரும் சிரித்தனர், அம்பலம் முகம் சிவந்து போனது.

“செல்வம் சொல்லுறது சரிதான் மச்சான்.” என்ற விநாயகம் சுப்புவிடம் திரும்பி,

“சின்ன மச்சான், சிங்கம் செம்புல அடி வாங்கிப் பார்த்து இருக்கீகளா?” என்று கேட்க, முழித்த சுப்பு..

“புரியல…”

“உங்க வூட்டுல சிங்கம் யாரு..” என்றதும் எதுவோ பிடிபட அதிர்ந்த சுப்பு, சற்று உறக்கவே கூவினார்.

“அண்ணா..”

“ஆமாங்க, உங்க அண்ணாரை உங்க மதனி குறி பார்த்துச் சொம்பை தூக்கி அடிக்க...” அந்த இடத்தில் நிறுத்த,

அந்த நாளை எண்ணிச் சிரித்து ஓய்ந்தனர் மாப்பிள்ளைகள்.

அம்பலம் இதழ் மடக்கி கேலியை ஏற்றார்

“அண்ணே…” பதறிய சுப்புவை

“ஒண்ணுமில்லை சாமி. அவுகள விட்டுக் கொடுத்துப்புட்டேன்னு கோபம். அதேன் சபையிலே வச்சே அடிச்சுப் புட்டாக. அந்த அம்பலத்தான் புண்ணியம் அடி படலை.”

“ஐயோ!” நெஞ்சில் கை வைத்தான் சுப்பு. அவனுக்கு இதெல்லாம் புதுச் செய்தி அல்லவா?

“பிறவு”

“பிறவு என்ன? ஒரே சண்டை. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு.”

அதைச் சொக்கன் ராகமாகச் சொல்லவும், சிரிப்பு வந்தது சுப்புக்கு. கூடவே ஓர் ஏக்கம்.

‘மதனி போராடியது அம்பலத்தானுக்காகத் தானே! ஆனால் தான் கட்டியதோ தாரை வார்க்க எண்ணியதை எண்ணி’ மீண்டும் முகத்தைச் சுருக்க, அதனைக் கண்டு கொண்ட ஆண்கள் குழு,

அவரை மீட்க எண்ணி அம்பலத்தானை வாரியது. விடிய விடிய கேலியும் கூத்தும் நடக்க, அளவிற்கு அதிமாக உள்ளே போன கள், அதன் வேலையைக் காட்ட,

இது நாள் வரை ஆண்கள் குழு கட்டி காத்த கண்ணியம் காற்றில் பறந்தது எந்த அளவிற்கு என்றால் அம்பலத்தான!.... விநாயகமா!..... என்ற அளவிற்கு.

சோர்வு கொள்ளும் மதியம் தாண்டி மதி மயக்கும் மாலையும் தாண்டி போதை கொள்ளும் இரவையும் தாண்டி ஆண்கள் குழு வீடு வந்து சேரவில்லை தோப்பிலே அனைவரும் கண் மூடி கானாவில் இருக்க.

நாச்சி வீட்டு ஆண்களுக்கு, விடியல் ஓர் மார்க்கமாகத் தான் விடிந்தது.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top