அத்தியாயம் - 17

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் - 17

பகலவன் தனது ஆதிக்கத்தை சற்று குறைத்துத் தான் காட்டினான் போலும், பூமி இதமான வெட்பம் சுமந்து குளுமையான காற்றை இதமாக வீசியது. அத்தகைய காலை வேளையில் நாச்சியின் வீடு, அவர் மக்களால் நிறைந்து இருந்தது, உபாயம் சிவகாமி அம்பலத்தான்.

நேற்றைய தினம் அவள் செய்த கூத்தும், தற்போது அவள் அடித்துக் கொண்டு இருக்கும் கூத்தும் தாங்க முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு வலம் வந்தார், அம்பலத்தான்.

அந்த அளவிற்குப் புலம்பியே படுத்தி எடுத்தாள், எந்த அளவிற்கு என்றால் நாச்சிகே பயம் வரும் அளவிற்கு!

‘நான் இல்லை என்ற நிலை வந்தால், என் மக்களை விட இவள் உடைந்தே போவாளோ!’ என்று பதறிக் கொண்டார்.

“சிவா பாப்பா எனக்கு மேலுக்குச் சுகமில்லை. வேற ஒண்ணுமில்ல சாமி. அதேன் மருந்து போட்டு இருக்கேன்ல, சரியாப் போகும்.”

“சும்மா சொல்லதீங்கோ! நேத்து எப்படி இருந்தேள்? நேக்கு மனசே ஆறலை. மாமி, கொஞ்ச நாள் நீங்க நேக்கு வேணும். என் பிள்ளைகளை யார் பார்ப்பா சொல்லுங்கோ! நேக்கு நீங்க இருந்தா தான் யானை பலம்.” என்றவளை வலது கை கொண்டு கன்னம் வழிக்க, சிவகாமி கண்ணில் கண்ணீர்!

இடது கை சற்று மடங்கி இருந்தது. முழுதாக நீட்ட முடியவில்லை. தினமும் அதற்குச் சிகிச்சை செய்தால் குணம் ஆகும் தான். இருந்தாலும், தற்போதைய வலியை எண்ணிக் கலங்கினாள், சிவகாமி

மாமியாரும் மருமகளும் கொஞ்சம் அழகை, அம்பலத்தான் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு முறைக்க, மற்ற பெண் மக்கள் அனைத்தும் அவரைச் சுற்றி நின்று கொண்டு முறைத்தனர்.

தூணில் சாய்ந்து அமர்ந்து கன்னத்தில் கை வைத்தவாறு, சிவநேசன் வேறு.

“மாப்புள்ள கண்ணு படப் போகுதுய்யா! மாமியா, மருமவன்னா இப்புடித்தேன் இருக்கனும்.” மெய் சிலிர்த்து போனார்.

“மாப்புள்ள, பேசாமே இருக. காந்தி கிட்டு வருது!”

“என்னய்யா நீ...? இதைப் பார்த்து சந்தோசப் படுவியா, காந்திகிட்டு வருதுன்னு.”

“அம்மாடி, நீங்க சொல்லுங்க.” என்று அம்பலத்தான் சகோதரிகளைப் பார்த்துக் கேட்க, அவர்களோ…

“சிவண்ணே நொந்து போய் நிக்கிறேன். நீங்க வேற..” என்ற மீனம்மாள் முறுக்கி நிற்க, சங்கரியும் முறைத்து நின்றார்.

இது என்னடா வம்பு என்று திரும்பியவரை, பிடித்துக் கொண்டனர், எஞ்சிய பெண்கள்.

சரசு, “செய்தி கேட்டு பதறிக்கிட்டு ஓடியாந்தேன். நல்லா இருக்கீங்களானு கேட்க கூடப் பக்கத்துல விட மாட்டேங்கிறா..!”

சக்தியும்,உலகமையும்,அன்பும் அவர்கள் பங்குக்கு “அம்மாக்கு எதுவுமே செய்ய விட மாட்டேங்கறா, அண்ணே!” என்று பெண்கள் குழு சிவநேசனைப் பிடித்துக் கொள்ள, அவரோ முழித்து நின்றார்.

அவரது நிலையைப் பார்த்த அம்பலத்தான், சிரிப்பை அதக்கி,

“என்ன மாப்புள்ள? தங்கச்சிகளுக்குப் பதிலை சொல்லுக. நீங்க யாரு கட்சி?” என்று மேலும் கோர்த்து விட்டவரைப் பார்த்து

“அடேய் அம்பலம், ஆள விடுடா! சாமி, யம்மா பொண்ணுங்களா, உங்க அண்ணன் என்னை மாட்டிவிடப் பார்க்குறேன். நம்பாதீங்க!” என்று சரணடைய, அவர் சொன்ன தினுசில் சிரித்து விட்டனர்.

அதன்பின் குட்டி போட்ட பூனையாக, சிவகாமி மாமி மாமி என்று அவர் பின்னே ஜபிக்க, வீட்டின் பொறுப்பையும் சமையல் பொறுப்பையும் பெண்கள் குழு எடுத்துக் கொண்டது.

மதியம் வரை அவளது சேட்டையைத் தாங்கியவர்கள், அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்து கொண்டு, அதன் பின் அவளை இழுக்காத குறையாக இழுத்துச் சென்றனர்.

“ஐயோ, விடுங்கோ அக்கா. நான் மாமியாண்ட செத்த நேரம் படுத்துக்கிறேன்.”

“நீ அவுங்கள விடு! கொஞ்ச நேரம் எங்க அம்மை நிம்மதியா தூங்கட்டும்!”

மீனம்மாள் சற்று அதட்டல் போல் சொல்ல, அழுகை வந்து விட்டது, சிவகாமிக்கு.

அவளது கலக்கம் புரிந்தாலும், அவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தார்.

“என்ன என்னைப் பார்த்து கிட்டே நிக்கிற? ஓடு! போயி செத்த நேரம் படுத்து எழுந்திரி.” என்றதும்

அவள் போகாமல் முரண்டு பிடிக்க, அவரே அவளை அறைக்குள் தள்ளி விட்டு கதைவைச் சாத்தினார்.

சரசு “அக்கா பாவம்கா”

“சும்மா இரு சரசு அவ இரவெல்லாம் தூங்கவே இல்லை. அண்ணன் கிடந்து புலம்புராக! இவளுக்குப் பதிவிசா சொன்னா கேட்க மாட்டா!”

மீனம்மாள் சொல்ல, மற்ற பெண்களும் அதனை ஆதரித்தனர்.

சக்தி “அவ ரொம்பச் சோர்ந்து போறா… அம்மை கிட்ட எனக்குக் கூட இம்புட்டு சலுகை இல்லக்கா!”

“நீ இதைச் சொல்லுற, அவ அவுங்க அம்மா அப்பாரக் கூட மறந்து, நம்ம அம்மை கிட்ட ஓட்டிக்கிட்டா! இதை எங்க போயி சொல்ல? அவுக அம்மா வெசனப் படுராக போல. எங்க ஐத்த வூட்டுல பஞ்சாயம் பண்ண வந்தாங்கள, அப்போ அவுக அம்மா சொல்லி வருத்தப் பட்டாகலாம்.”

“அக்கா, புரியாத வயசுல அவ இங்கன வந்துட்டா! நம்ப அம்மைத்தேன் எல்லாம் சொல்லிக் கொடுத்து கரையேத்துனது.” சக்தி சொல்ல

“அதுமட்டுமில்ல சக்தி, ஒரு வயசுக்கு மேல நமக்கு அம்மா உதவி தேவைப் படும். அந்த வயசுல அவ இங்கன வந்துட்டா! நமக்கு அம்மா சொல்லிக் கொடுத்த மாதிரி தான், அவளுக்கும் சொல்லிக் கொடுத்தாக.

அவ கெட்டியா புடிச்சு வந்துட்டா. அதேன், அம்மை மேல பாசம்! அரவணைக்குற அன்பு இருந்தா, அதுவும் எதையும் எதிர்பார்க்காம கிடைச்சா, அதைக் கொண்டாடத்தேன் வேணும். அதைத் தான் அவ செய்யுறா!”

அன்பு “ஆமா அக்கா. நம்ம அம்மைய நெனச்சா பெருமையா இருக்கு. எங்க வூட்டுல கூடச் சொல்லுவாக, உங்க அம்மைக்கு எம்புட்டுத் தைரியம் தெரியுமா? நீ அவுக பொண்ணா இருந்துகிட்டு தொட்டதுக்குக்கெல்லாம் கண்ணுல தண்ணிய கொட்டறன்னு!”

“அது சரி. எங்க வுட்டுலையும் அதே கதை தான்.” என்று பெருமையாக அலுத்து கொண்டாள், சங்கரி.

இவ்வாறு பெண்கள் ஒருவழியாக மாமியாரையும் மருமகளையும் தூங்க வைத்து விட்டு, அசதியாக வந்து அமர, அம்பலத்தானும் உண்டு முடித்து அவரது ஆஸ்தான இடமான ஊஞ்சலில் வந்து அமர்ந்தார் வந்து அமர்ந்தார்.

அவரது வருகைக்கு காத்திருந்தார் போல் மீனம்மாள் பேச ஆரம்பித்தார். “அண்ணே, என்ன முடிவுண்ணே? ராவானா தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.” கண்ணீர் சிந்த, மற்ற பெண்களும் கலங்கினர்.

“அக்கா, அழுகாதீக!” சரசு சொல்ல

“எப்படி சாமி நான் அழுகாம இருக்க. பெரிய நாச்சி குடும்பத்துக்கே ரெண்டே இரண்டு ஆண் வாரிசு. அவுக வாழ்க்கைய எப்படி வாழுறாக பார்த்துக்கிடுற தானே. என்னால முடியல, நெஞ்சே வெடிக்குது..!”

“ப்ச் மீனா…”

“அண்ணே! என்ன தான் சொல்லுறாக, தம்பி காரவுக?”

“அவுக என்ன சொல்லுவாக? அதே கதை தேன்! அந்தப் பொண்ணும் பேசுவதையே பேசிகிட்டு இருக்காவுக. என்ன சொல்லுறதுனே தெரியல. அம்மைக்குச் செய்தி வந்து இதோ சாஞ்சுப் புட்டாக!”

“உங்க வாழ்க்கை இப்போதேன் நல்லாப் போகுதுனு நிம்மதியா இருந்தோம். அதுக்குள்ள, இவுக” என சக்தியும் தன் பங்குக்குப் புலம்ப.

“யாரு விதியையும் யாரும் மாத்திக்கிட முடியாது. நாளை மக்கா நாள். இங்கன வர சொல்லி இருக்கேன். நீங்களும் மாப்பிள்ளைங்க கிட்ட சொல்லிப்புடுக பார்ப்போம் என்ன முடிவுன்னு.”

“சரிண்ணே! இன்னொரு செய்தி உங்க பொஞ்சாதிய பார்த்துக்கிடுங்க. ஒழுங்கா உணங்கள ,உறங்களா.”

“என்னை என்ன பண்ண சொல்லுறீக நேத்துல இருந்து படுத்தி எடுக்கறாக! சமாளிக்க முடியல சாமி!” என்று போலியாக அலுத்து கொண்டவரை பார்த்து, பெண்கள் கிளுக்கிச் சிரித்தனர்

“எம்ம பொழப்பு சிரிப்பா இருக்குங்களா?” அம்பலம் பரிதமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க அதற்கும் பெண்கள் சிரித்து வைத்தனர்.

அதனைக் கண்டவர் முகத்திலும் கீற்றாக ஓர் புன்னகை வர, இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டே சென்றார்.

கடைக்குப் போகும் எண்ணமற்று அறைக்குள் வந்தவர், அங்கே கண்டது ஆழ்ந்து உறங்கும் தனது மனையாளைத் தான்.

அவளைப் பார்த்தவாறே வந்தவர், தனது சட்டையைக் கழட்டி மாட்டிவிட்டு, சிவகாமியுடன் படுத்துக் கொண்டு அவரை இறுக்கக் கட்டிக் கொண்டு கண் மூடினார்.

***

மந்தரம் செய்யும் மாலை வேளையும் வர, நன்றாக தூங்கி எழுந்தனர், அம்பலத்தானும் சிவகாமியும்.

முதலில் விழிப்புத் தட்டிய பெண், தன்னை அழுத்தமாகத் தழுவி கொண்டு தூங்கும் கணவனைக் கலைக்க மனமில்லாமல், அவருடன் மேலும் ஒண்டிக் கொண்டாள்.

புழுவாக நெளிந்து கொண்டே இருக்க, அதில் தூக்கம் கலைந்த அம்பலத்தான், தலை தூக்கிப் பார்த்து,“என்னடி மாமி, புரண்டு கிட்டே இருக்க?”

“ப்ச்..” என்று மேலும் அவள் அதையே செய்ய.

முற்றுலும் தூக்கம் கலைந்த அம்பலத்தான், அவரை இறுக்கிக் கொண்டார். அதில் அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,

“ஏன்னா, மாமிக்கு என்னால தானே எல்லாம்.”

மீண்டும் அதே புராணம் வாசிக்க, இம்முறை பொறுமையாக அவளை ஆழ்ந்து பார்த்தவர்,

“இந்த முறை நீக இல்ல உன் கொழுந்தன்.”

அம்பலத்தான் மெதுவாக உரைக்க, அவர் சொல்வதைக் கிரகித்தவள் அதிர்ந்து,“அப்போ முன்னமே ஆச்சிக்கு…”

அதற்கு மேல் பேச முடியாமல், கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிய…

“ப்ச் எதுக்குடி அழுதே கறையுறவா…?”

“நேக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வத்தைக் காயப்படுத்திட்டேன். நான் அவாளுக்கு நியாயம் செய்யலை. என்னை அந்தப் பகவான் மன்னிக்கவே மாட்டார் போல.”

“அப்படி பார்த்தீகனா நானுந்தேன் காரணம், சும்மா பேசாதீக! எல்லாம் நம்ம படணும்னு இருக்கு, பட்டுட்டோம்!”

“ஏன்னா, என்ன ஆச்சு?”

அவள் தனது தம்பியைப் பற்றிக் கேட்கிறாள் என்று உணர்ந்தவர், ஒரு பெருமூச்சுடன்

“எனக்கும் ஒன்னும் புரியலடி மாமி. நீக இங்கன வர ஒரு நாள் முன்னாடி, அவசரமா கிளப்பி வாசுகி அம்மா வூட்டுக்குப் போறோம், ரொம்ப முக்கியமான செய்தினு போனவன், போனவன் தான்! நம்மப் பஞ்சாயம் முடுஞ்சுதேன், அம்மை அவனை யோசிச்சுசங்க! நானுந்தேன்!

“சிவா அண்ணே இருக்காகள்ளா, அவுக வாசுகி அம்மை ஊருதேன். அவர் மூலம் செய்தி வந்துச்சு.”

அம்பலத்தான் இந்த இடத்தில் நிறுத்த, அச்சமாக வந்தது பெண்ணுக்கு.

“என்னங்க பிரச்சனை அவாளுக்கு..?”

“ஒண்ணுமில்ல, பயந்துக்கிடாத! மதுரை தெற்கு விதில நம்ம சிங்காரம் அப்பாவு இருக்காங்கள்ளா..”

“ஆமா, மாமி அவா கிட்ட தான், சுங்குடி புடவை வாங்குவா! ….தூரத்து உறவுன்னு மாமி சொல்லி இருக்கா”

“ஹ்ம்ம், அந்த அப்பாவு கடையுளதென் வேலை பார்க்கிறார், உன் கொழுந்தன்.” என்றதும்,

அதிர்ந்து எழுந்து அமர்ந்து விட்டாள் சிவகாமி.

“என்னன்னா சொல்றேள்? அதுக்கு என்ன அவசியம்? அவர் கடை என்னாச்சு?”

“அதையும் நாந்தேன் பார்க்கிறேன்.”

“என்னது இது?”

“எனக்கும் ஒன்னும் புரியல. நாளை மக்கா நாள்! அம்மைக்குச் சுகமில்லை. உன் பொஞ்சாதிய கூட்டிட்டு வானு, செய்தி அனுப்பி இருக்கேன்.”

“என்ன சொன்னார்?”

“வரேன்னு சொல்லி இருக்கான். இங்கன பொண்ணுகளை இருக்கச் சொல்லி இருக்கேன்! வரட்டும் என்னனு பார்ப்போம்!” என்றவர் தோள் சாய்ந்து,

“நான் போட்ட பிள்ளையார் சுழி போல..” என்றவள் அவரது புஜத்தில் புதைய,

அதில் ஈரம் உணர்ந்த அம்பலம், ஆதரவாக அவரைத் தழுவிக் கொண்டு…

“நீக போட்ட பிள்ளையார் சுழி, சுபமாத்தேன் முடியும். அதுக்கு இந்த அம்பலத்தான் பொறுப்பு!

எங்க அம்மை சொல்லுற மாதிரி, நீக எங்க குலசாமி! நீங்க கண்ணீர் வடிச்சா..” என்றவர் மேல சொல்லப் போக,

அவரது வாயை தனது கை கொண்டு முடியவர்,

“நேக்கு எப்போதும் என் குடும்பம் நல்லா இருக்கனும் என்றவளை ஆழ்ந்து பார்த்தார் அம்பலத்தான்.”

மேலும் இருவரும் மௌனமாக..

சில நிமிடங்கள் கரைய, நாச்சி குரல் கேட்டு இருவரும் கலைந்தனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top