அத்தியாயம் - 15

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 15

நாகம்மையும் நாச்சியும் வாக்கு வாதம் செய்ய, அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்புச்சி பேச ஆரம்பித்த தருணம்,

அம்பலத்தான் அறையில் இருந்து எதுவோ உடையும் சத்தம் கேட்டது.

என்னவோ ஏதோவென்று அத்தனை உறவுகளும் அடித்துப் பிடித்து அம்பலத்தான் அறைக்கு முன் கூடினர்,

அவர்களை விலக்கி தள்ளிக் கொண்டு வந்தார், சிவநேசன்

பெரியம்மா உறவு முறை பெண்களில் ஒருவர் கதவை தட்டி, அவர்களை வரச் சொல்லிப் பேச, அதற்குப் பலனில்லாமல் போக,

பயந்து போன நாச்சி கத்தி கதற ஆரம்பித்து விட்டார். அவர் குரல் கேட்டது தான் தாமதம், பட்டெனக் கதவு திறந்து கொண்டது.

திறந்த கதவின் வழியே அனைவரும் பதறிக் கொண்டு செல்ல, அங்கே சிவகாமியின் கையில் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது.

“ஐயோ! சிவா பாப்பா.” என்று நாச்சி ஒரு புறம் அவளைத் தாங்க, மறுபுறம் மற்ற பெண்கள் தாங்கி நின்றனர்.

அனைவரும் மாறி மாறி என்ன என்று கேட்க,

சிவநேசன் ஓடி வந்து அம்பலத்தானை தாங்கி நின்றான். ஆம், அடி பட்டது என்னவோ அம்பலத்தானுக்குத் தான். சிவகாமியின் கையில் உள்ள உதிரம் அவருடையது. அதன் பிறகு தான் அனைவரும் அவனிடம் சென்றனர் சிலர் அதிர்ந்து நின்றனர்.

“டேய் மாப்புள்ள! வா, ஆஸ்பத்திரிக்குப் போவோம்.” என்றவன் தனது தோளில் உள்ள துண்டை எடுத்துத் தலையில் இறுக்கக் கட்டி கொண்டு, அவரை அழைத்துச் சென்றான் சிவநேசன்.

ஆண்கள் அனைவரும் ஒவ்வொரு வாகனத்திலும் நடந்தும் அம்பலத்தான் பின்னில் ஓடினர்.

அனைத்தையும் பார்த்தாலும் அழுத்தமாக நின்ற சிவகாமி, நாச்சியின் கைகளை விலக்கி, அவரை நேர் கொண்டுப் பார்த்தவள்,

"என்னை மனுச்சுடுங்கோ மாமி. நான் பண்ணப் போற காரியத்தில் உங்களுக்குத் தலை குனிவுனு நேக்கு தெரியும். ஆனா என்னோட சுயத்தையும் உரிமையும் காப்பாத்த, நேக்கு வழி தெரியலை.” என்றவள் அவர் பதிலை எதிர் பார்க்காமல் கட்டிய புடவையுடன் வெளியில் சென்றவள்,

கூடத்தில் நின்று,“இந்த ஜென்மத்தில் நேக்கு ஆம்படையான்னா, அது அவர் மட்டும் தான். மீறி மாத்த நெனைக்காதேள்!” என்று மிரட்டி விட்டு, திரும்பியும் பார்க்காமல் கண்ணில் நீர் வழிய வழியச் சென்றாள்.

பொறுக்க முடியாமல், நாச்சியாள் அவளை அழைக்காமல் அவள் பின்னே ஓட்டமும் நடையுமாகச் சென்றார் தன் வயதை மறந்து.

அவரது செயலைப் பார்த்த உறவுப் பெண்மணி ஒருவர்,

“நாச்சி மதினி, அவுக மருமவ மேல இம்புட்டுப் பாசம் வச்சு இருக்காகனு முன்னமே தெரிஞ்சு இருந்தா, தம்பி இப்படி பண்ணியிருக்க மாட்டாக! எல்லாம் நேரம்! ப்ச், அந்தப் புள்ள எங்கன போகும்? பயந்து வருது அக்கா.”

“அம்பலத்தான் மண்டைய உடைச்சுப் புடுச்சே! எல்லாம் நாச்சி மதனி கொடுத்த துணிச்சல்!” நாகம்மை எரிச்சலாக மொழிந்தார்.

இவ்வாறு இங்கு விவாதம் சூடு பிடிக்க, அங்கே மருமகள் பின்னால் நடந்தார், நாச்சி.

நில் என்றோ, சிவகாமியை சமாதானம் செய்யவோ நாச்சி விளையவில்லை மாறாக பெண்ணைப் பத்திரமாகத் தங்க வைக்க எண்ணினார்.

போக்கிடம் இல்லையென்றாலும் பிறந்தகம் செல்ல மாட்டாள் என்று அறிந்தவராயிற்றே.

சிவகாமி கோவிலுக்குள் செல்வதைப் பார்த்து உறுதி செய்து கொண்டவர், நேராகச் சென்றது பொன்மொழி வீட்டுக்குத் தான்.

அன்று பார்த்து பொன்மொழியின் தாயும் மகளும் பிறந்தகம் சென்று இருக்க, திண்ணையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார், பொன்மொழியின் தந்தை.

மூச்சு வாங்க வந்து நின்ற ஆச்சியைப் பார்த்து பதறி எழுந்தவர்,

“என்ன ஆச்சி என்ன ஆச்சு? ஏன் இப்படி மூச்சு வாங்க, ஓடி வரீங்க வந்து உட்காருங்க!”

“உட்கார நேரமில்லை சாமி நான் சொல்லுறதை கேளுக. பிறவு வந்து உன்ன நான் பார்த்துக்கிடுறேன். என் சிவா பாப்பா தனியா கோவில்ல இருக்கும். இன்னும் நேரம் செண்டு போய்ப் பாரு.”

“சரிங்க ஆச்சி.”

“பதமாப் பேசி, உன் வூட்டுல வச்சுக்க உன் பொண்ணோட. என் தங்கம் பத்திரம் சாமி!” என்றவர் கை கூப்பி நிற்க, அதிர்ந்து விட்டார் மனிதர்.

“ஐயோ! கையை இருக்குங்க ஆச்சி. அதுவும் என் பொண்ணு மாதிரி தான். நான் பார்த்துகிறேன்.” என்றதும் தனது சுருக்குப் பையில் உள்ள காசை அவரிடம் நீட்ட, வாங்க மறுத்து விட்டார்.

“என்ன ஆச்சி இது? நான் தான் சொன்னேனே சிவா எனக்குப் பொண்ணு தான். நீங்க போய்ட்டு வாங்க.” என்றதும் தான் அவருக்கு நிம்மதி பிறந்தது.

திரும்ப ஓட்டமாக அவர் வீட்டை நோக்கிச் செல்ல, வந்த சனம் அனைத்தும் மருத்துவமனைக்கு விரைந்து விட்டது போலும்.

வீட்டுப் பெண்களான அன்பு, மீனம்மாள், சரசு, சக்தி, உலகம்மை மட்டுமே அழுது கொண்டு இருந்தனர்.

உண்மையில் அதிகம் பாதிக்கப் பட்டது,இந்த ஜீவன்கள் தான்! ஒருபுறம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.என்ன நடந்தது என்றும் புரியவில்லை. பிறந்தகத்தை சரியாகக் கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்வு வேறு. அன்னையின் நிலை,தமையனின் நிலை தோழியான அண்ணியின் நிலை என்று நிலை குலைந்து நின்றனர்.

கலைத்து போய் வந்த அன்னை, திண்ணையில் கண் மூடி அமர்ந்ததும், அவரைச் சூழ்ந்து கொண்டு மௌனமாக அவரைத் தழுவிக் கொண்டனர், பெண்கள்.

அவரும் அரவணைத்துக் கொண்டார். என்ன என்ற கேள்விகள் இல்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

பெண் பிள்ளைகள் அனைத்தும் வெள்ளை மனம் கொண்டவை போலும். அது சரி, நாச்சியின் நகல் அல்லவா அவர்கள்!

****

அங்கு மருத்துவமனையில் அம்பலத்தானுக்குச் சிகிச்சை அளித்து, இரண்டு தையிலிட்டு கட்டு போட்டு அவரை அனுப்பி வைக்க, மருத்துவமனை வாயிலில் நின்றே அனைவரும் விடை பெற்றனர்.

அப்புச்சி அம்பலத்தான் கைகளைப் பற்றி "ஆறப் போடுக. பார்த்துக்கிடலாம்."

“அப்புச்சி என்னை மனுச்சுக்கிடுக அம்புட்டு சனத்தையும் கஷ்ட படுத்திட்டேன். தப்பெல்லாம் என் மேலத்தேன்!”

“பிறவு பேசிக்கிடலாம், சாமி!”

“இல்ல அப்புச்சி, பேசி புடுறேன். உமையாளுக்கு நியாயம் செய்யணுமே!”

“அந்தக் கவலை உனக்கு வேணாம். கருப்பன் செட்டி பார்த்துக்கிடுவாரு. அவரே வந்து பேசி, அவுக சொந்ததுல உள்ள பையன முடுச்சுக்கிடலாம்னு சொல்லிப் புட்டாரு. உமையாள் தான் முரண்டுது போல.”

“எல்லாம் என்னால, நாந்தேன் தப்பு! நான் பேசி பார்க்கவா?”

“இல்ல சாமி. நான் பேசி சரிக் கட்டுறேன்.“நீங்க உங்க பொஞ்சாதிய முதல்ல பாருங்க. எனக்கு அப்பவே தெரியும் இந்தக் கண்ணாலம் நடக்காதுனு.

ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கிடுக உங்க அம்மையும் உங்க பொஞ்சாதியும் ஒரே ஜாதி! நான் சொல்லுறது புரியுதுங்களா?”

அவர் சொல்ல வருவது புரிய, லேசாக விரிந்தது அம்பலத்தான் இதழ்கள்.

அனைவருக்கும் விடை கொடுத்தவன், சிவநேசன் உதவியுடன் வீட்டை நோக்கி நடந்தான், மௌனமாக.

நண்பன் மௌனமாக நடக்க, சிவநேசன் பொறுமை இழந்து அம்பலத்தானை சீண்ட எண்ணி,

“அப்புறம் மாப்புள்ள! புது மாப்புள்ளைக்குப் பொங்க வச்சு அனுப்பி இருக்கு போல,என் தங்கச்சி. அடுத்து என்ன?”

சிவநேசன் நக்கலில் நடையை நிறுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்த அம்பலம்,

“என்ன நக்கலா?” மீசையை முறுக்க

“பின்ன என்ன மாப்புள்ள, நான் அப்பவே சொன்னேன். தங்கச்சி வேற மாதிரி. நீ பேசிப் பழகுன்னு. சின்னப் புள்ள! சிட்டுக் குருவி! பட்டாம் பூச்சின்ன!, ஆனா என் தங்கச்சி பெண் புலி! பார்த்தில அடிய! அந்த அம்பலத்தான் புண்ணியம், ரெண்டே இரண்டு சுருக்கு போட்டு இருக்கு.இல்லனு வை மண்டை பொலந்திருக்கும்!”

“ஹ்ம்ம் ராவடி பொம்பள!” முணு முணுத்துக் கொண்டான் அம்பலத்தான்.

அவனது முணு முணுப்பு சிவநேசனையும் எட்ட, வெடிச் சிரிப்பு சிரித்தார் மனிதர். அதன்பின் வீடு வரும் வரை கேலி கிண்டல் தான்.

வீட்டுக்குள் வந்த அம்பலத்தைப் பார்த்ததும், தங்கை மார்கள் அனைத்தும் ஓடி வந்து நின்றனர்.

அவர்களது கண்ணீர் பார்த்து நொந்து கொண்ட அம்பலம்,

“ஒண்ணுமில்லை சாமி. சரியாய் போயிடும்.” என்றவர் தனது தாயிடம் சென்று, அவரிடம் மண்டியிட்டு,

அவரது முகம் நோக்கிக் குனிந்தவர் “மனுச்சுக்கிடுக!” என்று சொல்ல.

கண்ணில் நீர் வடிய நிமிர்ந்து பார்த்தவர், முகத்தைத் திருப்பிக் கொள்ள, அப்படி ஓர் சிரிப்பு அம்பலத்தானுக்கு.

சிரித்துக் கொண்டே எழுந்தவர், மரியாதையின் பொருட்டு மாப்பிள்ளைகளிடம் சென்று “செத்த நேரம் படுத்துக்கிடுறேன். தலை ரொம்ப வலிக்குது.”

“நீங்க பாருங்க மச்சான். நாங்களும் பொழுதோட கிளம்புறோம்.”

“இரண்டு நாள் செண்டு போலாமே?”

“போட்டது போட்ட படி இருக்கு மச்சான். நீங்க உடம்பப் பார்த்துக்கிடுக. சிவராத்திரி வருத்துல, அப்போ ஒட்டுக்கா மூணு நாள் வந்து தங்கிட்டுப் போறம், அதுக்குள்ள பேசி சரி கட்டுக உங்க மனசுக்கு நல்லதே நடக்கும்.” என்றவர்கள் அவரவர் வீட்டுக்குச் செல்ல,

பெண்களுக்குத் தான் பிறந்தகம் விட்டுச் செல்ல, மனமே இல்லாமல் சென்றனர்.

ஒருவழியாக அனைவரும் செல்ல, சக்தி உலகம்மை இருவரும் தோழியை எண்ணி அழுது கரைய, நாச்சியும் அமர்ந்த வாக்கிலே படுத்துக் கொண்டார்.

அம்பலத்தானும் அனைவரையும் அனுப்பி விட்டு, தனது அறைக்குள் புகுந்து கொண்டார்.

தனது துணிகளைக் கலைந்தவர், கட்டிலில் சோர்வாகப் படுத்துக் கொண்டு, கண்களை மூடி சில மணி நேரங்களுக்கு முன் நடந்த வாக்கு வாதத்தை அசை போட்டார்.

இதழ் துடிக்கும் புன்னகையோடு, பொல்லாக் களவாணியாக!

ஆர்ப்பாட்டம் செய்யும் சிவகாமியை தடுத்து அறைக்குள் அவளைத் தள்ளி கதவை பூட்டியதும்,

முறைத்துக் கொண்டு நின்றாள் அரிவை பெண்! அவளது நேர் கொண்ட பார்வையை அவரும் தாங்கி நின்றார்.

“என்ன பண்ணுறீக?”

“என்ன? என்ன பண்ணுறேன்? என்ன தைரியம்! நான் உங்க ஆத்துகாரி. அது ஞாபகம் இருக்கோன்னோ!”

“ப்ச், உங்களுக்கும் எனக்கும் எம்புட்டு வயசு தொலைவு தெரியுமா?”

“இங்க பாருங்கோ, இதெல்லாம் ஒரு காரணம் இல்லை. உங்க பெரிவா என் பெரியவா எல்லாரும் இப்படி தான் கல்யாணம் பண்ணிண்டா!”

“ப்ச் அதுக்குன்னு நாமும் பண்ணணுமோ?”

“இப்போ என்ன சொல்லவரேள். என் கூட வாழ முடியாதா?”

“என்ன பேச்சு இது? நீங்க சின்னப் பிள்ளை. நல்ல அறிவான பொண்ணு.”

“நிறுத்துங்கோ! நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை!”

“அதுக்குத் தான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன் உங்களுக்குக் கண்டிப்பா நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு தருவேன் என்றது தான் தாமதம்”

“என்ன சொன்னேள் பாவி மனுஷா நேக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டாம்…”

“என்ன அடம் இது?” அம்பலத்தான் எரிச்சலாகக் கேட்க.

பெண் மீண்டும் மௌனம் கொள்ள…

அவர் தான் இறங்கி வந்தார்.

“சரி சொல்லுக.” இறங்கி வந்த மனிதனை மிதப்பாகப் பார்த்துக் கொண்டே..

“நேக்கு ஆம்படையான்னா, அது இந்த அம்பலத்தான் தான். நேக்கும் நல்லது கேட்டது பார்க்கிற வயசு வந்துடுத்து. என்னால் உங்களை விட்டுக் கொடுக்க முடியாது!”

“இது வறட்டுப் பிடிவாதம்! என்னை நம்பி உமையாள் பாவம்..” என்று ஏதோவோ சொல்லப் போனவரை நெருங்கி நின்று,

நெஞ்சு ரோமங்கள் கசங்க சட்டையைப் பிடித்தவள்,

“யோவ் மீசை! அவள் பாவம்னா, நான் யாருய்யா, நோக்கு? அவ கழுத்துல தாலி கட்டிப் பாரும். அப்புறம் தெரியும், இந்தச் சிவகாமி யாருன்னு!”

என்று அவர் உயரத்திற்கு தனது கால்களை எக்கி, முகத்தோடு முகம் மோதி நின்று கேட்க,

அதிர்ந்து போனார் அம்பலத்தான்.

தென்றல் போல் மென்மை கொண்ட பெண்ணாகச் சிவகாமியை பார்த்தவர், இன்று புயலாகப் பார்க்கவும் அதிர்ச்சி வரத் தானே செய்யும்!

அவளது கால்களை மெல்ல விலக்கி, கையைப் பற்றியவர், அவளை ஓர் நிமிடம் மௌனம் கொண்டு பார்க்க, அவளும் அவரைத் தான் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

சில நொடிகளுக்குள் முடிவு கொண்ட அம்பலத்தான், பொறுமையாகப் பேச எண்ணி,

“இங்க பாருங்க. நான் சொல்லுறதை ஒரு முறை கேளுக உங்களுக்கு இன்னொரு..”என்று தான் ஆரம்பித்தார், மனிதர்.

கோபத்தில் இருந்த சிவகாமி, தேக்கிலானா சிறு மரப்பாச்சி பொம்மையை வைத்து மண்டையைப் பிளந்து விட்டாள்!

‘அவள் பயம் அவளுக்கு. எங்கே மீண்டும் தன்னைச் சமாதானம் செய்து அந்தப் பெண்ணை கட்டிக் கொள்வாரோ’ என்று.

மனதைக் களவு கொடுத்தவள், பதறுவது நியாயம் தானே?

அடித்து விட்டுப் பதறவில்லை. மாறாக இரத்தம் வர நின்றவரை இறுக்கக் கட்டிக் கொண்டு, இதழில் இதழ் பதித்து விலகவும்,

நாச்சியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

அதனை எல்லாம் எண்ணிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்குப் போனார், அம்பலத்தான்.

சும்மாவா, மனைவி கொடுத்த அடியும் அணைப்பும், இரண்டும் அவரை மயக்கத்தில் ஆழ்த்தியது போலும்.

சிவகாமி சொல்லி முடிக்கவும், பொழுது விடியவும் சரியாக இருந்தது.

……………….

அதிர்ந்து முழித்துக் கொண்டு இருந்த பொன்மொழியை உலுக்கிய சிவகாமி,“என்னடி காவியத்தை முழுசாக் கேட்டியா?”

“அடி சண்டாளி, மாமி! அண்ணன் இம்புட்டு பெரிய மனுஷன், அவரையே மண்டையை உடைச்சு வச்சு இருக்க, நீ. இனி உன் கூடச் சூதனாமா இருக்கணும்.” என்று போலியாக அலற..

கல கலவெனச் சிரித்தாள், சிவகாமி.

மனதுக்குள் பழைய ரணம் ஆற, வடுவாக இன்னும் அவளுள் இருக்கத் தான் செய்தது.

என்ன தான் நடந்த நிகழ்வை சிரிப்பாகச் சொன்னாலும் ஒவ்வொரு நொடியும் தனிமை கொண்டு கடக்கும் பொதுச் சிவகாமி பட்ட துன்பம் சொல்லி மாளாது சொல்ல முடியாது சொல்ல காயங்கள் ஆற வழி காலத்தின் கையில் மட்டுமே

எண்ணி பாருங்கள் அறுபது எழுபதுகளில் ஓர் பெண் தனித்து நின்று செயல் படக் கூடிய சாத்திய கூறுகள் இருந்ததா என்று அந்த நிலையிலும் நெறித் தவறாமல் கடந்து வந்து விட்டார் சிவகாமி நாச்சி துணையுடன் என்பது இலை மறை காய் மறை செய்தி.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top