அத்தியாயம் 14

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member

கதம்பவனம் - 14

சுந்தரம் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தார் செல்வத்தின் குழந்தை எண்ணும் போதே தாத்தனுக்குக் களிப்பு தான்.அவர் நடையில் துள்ளல் இருந்ததோ? நேராகச் செல்வம் வேலை செய்யும் இடத்துக்குச் சென்றவர் முன் அறையில் வேலை செய்து கொண்டு இருந்த மேற் பார்வையாளர் திரு மூர்த்தியிடம் சென்று

“தம்பி மூர்த்தி நல்ல இருக்கீங்களா?” அவரைச் சுந்தரத்திற்கு நன்றாகத் தெரியும் அவ்வப்போது செல்வத்தை வந்து பார்க்கும் பொது அறிமுகம் செய்து வைத்திருக்கிறான் சுந்தரத்தின் குரலில் திரும்பியவர்

“அடடே! வாங்கப்பா….. வாங்க… உட்காருங்க……எப்படி இருக்கீங்க?” என்றவர் ஆர்ப்பாட்டமாக வரவேற்று அமர வைத்தார்

“நல்ல இருக்கேன் தம்பி நீங்க உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“உங்க ஆசிர்வாதம் கடவுள் புன்னியத்துல எந்தக் குறையும் இல்லங்கப்பா…… அப்புறம் சொல்லுங்க என்ன இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க? எதாவது முக்கியமா விஷியமா என்ன? செல்வத்தைக் கூப்புடவா……” முக்கியமான விடயமாக இருந்தால் மட்டுமே அவர் செல்வத்தைத் தேடி வருவார் என்பதால் கொஞ்சம் பதட்டமாகச் கேள்விகளை அடுக்கினார் மூர்த்தி

“முக்கியமான சங்கதி தான் தம்பி ஆனா பதட்ட படாதீங்க எல்லாம் நல்ல செய்தி தான் செல்வத்தைக் கூப்புட்டு விடுங்க அவனுக்கு அரை நேரம் விடுப்புக் கிடைக்குமா?” சற்று தயங்கி தயங்கி தான் கேட்டார் அவரது தயக்கம் உணர்ந்து

“என்னப்பா இப்படி கேட்கிறீங்க அவன் தான் விடுப்பே போடறது இல்லையே தாராளமா தரேன் கூட்டிட்டு போங்க” என்க பெரியவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி

இவர்கள் பேச்சின் இடையே வேலையாள் ஒருவரை அழைத்துச் செல்வத்தை அழைத்து வருமாறு பணிந்தவர் மீண்டும் சுந்தரத்திடம் பேசி கொண்டு இருந்தார்.தந்தை வந்த செய்தியை அறிந்து விரைந்து வந்தான் செல்வம்.

அங்குத் தனது மேல் அதிகாரியிடம் பேசி கொண்டு இருந்த தந்தையிடம் விரைந்தவன் மரியாதை நிமித்தம் மேலாளருக்கு சிறு புன்னகையைச் சிந்திவிட்டு "என்னங்கப்பா இவ்வளவு தூரம்"

அழுக்கு தோய்ந்த உடையுடன் கையில் கிரீஸ் கரையுடன் வந்து நின்றவனைப் பார்க்கும் போது பெருமை பொங்கியது மனிதனுக்கு.இருக்காதா பின்னே கரை படிந்த கையென்றால் சுயமான சம்பாத்தியம் அல்லவா உழைப்புக் கொடுத்த கர்வம் இந்தக் கரை அதை எண்ணும் போதே கிழட்டு காளைக்குக் கூடுதல் இறுமாப்பு உண்டு தான்.

தன்னையே வெறித்து கொண்டுருந்த தகப்பனை கலைக்க “செல்வம் அரை நாள் விடுப்பு சொல்லிட்டு வா பேசிக்கிட்டே போவோம்” என்ற தந்தையின் சொல்லுக்கு மறு பேச்சின்றிச் செயல் படுத்தினான் மகன் அத்தனை மதிப்பு தந்தையின் மீது.உண்மை தான் சுந்தரம் நல்ல தகப்பன் இது சரி இது தவறு என்பதைச் சுட்டி காட்டுவதோடு ஓர் எல்லைக்குள் நின்று கொள்வார்.

கை பிடித்து நடந்து பாதையைச் சுட்டி காட்டி அதன் நெளிவு சுளிவுகளை எடுத்து சொல்லியாயிற்று இனி தங்கள் பாதங்கள் கொண்டு தடம் பதித்துக் கரை சேர வேண்டியது தான் என்பது சுந்தரத்தின் எண்ணம் அதன் படி தான் மகன்களை வழி நடத்தினார் மனிதர்.
இருவரும் மௌனமாக வீட்டை நோக்கி நடக்கத் தந்தையின் மௌனத்தில் பயம் பிடித்துக் கொண்டது செல்வத்திற்குக் கண்ணன் அண்ணா பிரச்சனையோ என்று எண்ணியவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்

“அப்பா எதுவும் பிரச்சனையா”

“ஆமா சாமி எண்ணிக்கை கூடுது தாத்தனா எனக்குப் பொறுப்பு அதிகமாகிட்டே போகுது எதாவது செய்யனும்” அவரது பேச்சுப் புரியாமல்

“என்னப்பா சொல்லுறீங்க முதல என்ன விஷயம் அதைச் சொல்லுங்க” என்றவனைப் பார்த்துச் சிரிக்க செல்வத்திற்கு பொறுமை நிற்கவா போகவா என்று ஆட்டம் காட்டியது

“என்னப்பா” என்று அலுத்து கொண்டவனை பார்த்து

“சொல்லுறேன்….. சொல்லுறேன்………” என்றவர் மீண்டும் சிறிது நேரம் மௌனம் செய்து அவனை வாட்டி வதைத்து விட்டு அவன் எதிர்பாரா நேரம் பொறுமையாக “நீங்க அப்பா ஆக போறீங்க” என்க

அவர் சொல்வதைக் கேட்டவன் “என்ன?” இன்ப அதிர்ச்சி போலும் அவனது கேள்வி சிரிப்பை மூட்ட

“என்னடா என்ன? நீ அப்பா ஆகப்போற” திரும்பவும் அழுத்தி சொன்னார் சுந்தரம்

“ஐயோ! அப்பா” என்றவனுக்கு வார்த்தை வரவில்லை அனைவரும் கடக்கும் நிலை தான் என்றாலும் அதனை அனுபவிக்கும் போது கிட்டும் சுகமே தனித் தானே அதனைக் கண் மூடி அனுபவித்தான் செல்வம் சிறு கண்ணீர் எட்டியதோ அந்தக் கண்களில்.

அவனது நிலை உணர்ந்து மேலும் மௌனம் காத்தவர் “அந்தப் பொண்ணு உண்டாகி ஐம்பது நாள் கடந்து போச்சு சொல்ல பயந்துகிட்டு சொல்லல……. உன் மனைவிக்கு உன் கஷ்டத்தைச் சொல்லுறதை விட எந்தக் கஷ்டம் வந்தாலும் நான் சமாளிப்பேங்கர நம்பிக்கையைக் குடு செல்வம்,

நீ எதுக்கு ஐராம உழைக்கிறேன்னு எனக்குத் தெரியும். மாதங்கி தப்பான பொண்ணில்லை அதுக்குச் சொல்ல முடியாத பயம். பெரிய மருமக வேற எல்லாம் பொறுப்பும் நம்பத் தலைல விழுந்துட்டா என்ன பண்ணுறது அந்தப் பயம் தான் துடுக்கா பேச வைக்குது.

“முதல உங்க அண்ணன் கவனிச்சு அதைத் தெளிவு படுத்தி இருக்கணும் வாழ வந்த பொண்ணுக்கு நம்மல பத்தி என்ன தெரியும் சொல்லு. நீ மாதங்கி பேசுறதை வச்சு வெசன படாத”

“இல்லப்பா அண்ணி பேசுனது முதல வருத்தமா தான் இருந்துச்சு இப்போ அதைப் பத்தி நான் யோசிக்கிறது இல்ல.தாமரைய நல்ல வச்சுக்கணும் அது தான் என் ஒரே எண்ணம்”

“சபாஷ் அப்படித்தான் இருக்கணும் சரி வா அவங்கள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு தான் வந்தேன்... அப்புறம் போன உடனே அந்தப் பொண்ணுகிட்ட ஏன் சொல்லலைனு சண்ட கட்டாத”

“அட நீங்க வேற நான் கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசுனாலே அழுது வச்சுருவா இதுல எங்க சண்ட போட”

“பாவம்டா புள்ள பயந்த பொண்ணு” என்று தகப்பனும் மகனும் பேசி கொண்டே வீடு வர அங்கே ஒரே கூச்சலாக இருந்தது.

வாயிலை நெருங்கும் நேரம் பிள்ளைகளின் ஆர்பரிப்பும் பெண்களின் நகை ஒளியும் கேட்க ஆண்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றனர்.

“என்னப்பா இவ்வளவு சத்தம்”

“அதானே” என்றவர் உள்ளே சென்று பார்க்க ராஜன் நடுவில் அமர்ந்திருக்க அவனைச் சுற்றிலும் அண்ணி மார்கள் விமலா ஒரு ஓரத்தில் கைகளைப் பிசைந்து கொண்டு குனிந்து நின்றாள்.அவளைப் பார்த்தவாறே உள்ளே வந்தவர் மாதங்கியை பார்த்து “வாம்மா எப்போ வந்த”

தன்னை ஏன்? என்ற ஒரு கேள்வியும் கேட்காது வழமை போல் நான் சுந்தரம் என்பதைப் பறைசாற்ற குறுகி போயிற்று மாதங்கிக்கு வெளி வராத குரலில் "இப்போ தான் மாமா" என்க

பிள்ளைகளை அழைத்து மடியில் இருத்தி கொண்டவர் முகத்தில் இன்னும் களிப்பு அதனைப் பங்கஜம் ஒரு ஓரத்தில் கண்டு ரசிக்க கண்டு கொண்டார் கள்வர்.மனைவியிடம் தஞ்சம் அடைய சொல்லி கெஞ்சியது உள்ளமும் உடலும்.

நல்லவை அல்லவை எடுத்து சரி தவறென்று பிரித்து ஏற்ற தாழ்வு அனைத்திலும் கை கோர்த்து நின்ற சொந்தம் அல்லவா இன்று களிப்பிலும் பங்கு கொள்ள ஏங்கி தவிக்க அதனை அடக்கப் பெரும் பாடு பட்டார் மனிதர்.

ராஜனை பார்த்தவர் “என்னடா வேலைக்குப் போகல போல நடுவுல உட்காந்து அண்ணிகளாடு மாநாடு போட்டுட்டு இருக்க”

“உங்க மருமக பொண்ணுக தான் என்ன உட்கார வச்சு மாநாடு போட்டுட்டு இருக்காங்க இவுங்க விட்ட நான் என் பொண்டாட்டி கிட்ட போவேன்”

“ஏன்ம்மா” சுந்தரம் மருமகள்களை பார்த்து கேட்க

அமுதா,” மாமா உங்க பையன விடுறதா இல்ல எங்களுக்குப் பதில் சொல்ல சொல்லுங்க”
மகனிடம் திரும்பியவர் “என்னடா பதில்”

“அதை நான் சொல்லுறேன் மாமா” என்ற சீதா நம்ப விமலாவை பொண்ணு கட்டிக்கக் கேட்கும் போது கொழுந்து என்ன சொன்னாரு” விமலாவை சங்கடமாகப் பார்த்த சுந்தரம்

“அதெல்லாம் இப்போ எதுக்கும்மா”

“சும்மா சொல்லுங்க மாமா”

தயங்கியவாறே “முடியவே முடியாது னு ஆட்டமா ஆடுனான்”

“அப்படி இருந்தவர் கல்யாணம் ஆகி அறுபது நாளுல பிள்ளை உண்டாகி நின்னா சும்மா விடுறதா” ஆ... வாய் பிளந்து நின்றவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில்

“என்னமா சொல்லுற” என்றவர் வேகமாக விமலாவிடம் விரைந்து “விமலா பாப்பா உங்களுக்குக் குட்டி பாப்பாவ” என்க
அழகாகச் சிவந்த விமலா “போங்க மாமா”

“ஐ! நம்ப பாப்பா வெட்க படுது என்றவர் தனது மனைவியிடம் திரும்பி என்னடி பங்கு எனக்கு ரொம்ப வயசு போச்சோ” வம்பு செய்ய

அவரோ முறைத்து வைத்தார் ‘இரவில் உண்டு உனக்கு’ என்று தாங்கிய பார்வையை கணவனை நோக்கி வீச ‘பார்ப்போம் டி’ என்பது போல் பதில் கொடுத்தவர் விமலாவின் தலையை வாஞ்சையாகத் வருடி “நீ எங்க குல சாமி தாயி” என்க கலங்கிய கண்களை மறைத்துக் காலில் விழுந்தாள் விமலா

“நல்ல இரும்மா” என்றவர் மற்ற மருமகளிடம் திரும்பி அவனை விடுங்க பாப்பா கூடப் பேசிட்டு வரட்டும்” என்க

“அது எப்படி” என்று மாதங்கி சண்டைக்கு வர

“உங்களுக்கு அந்த விமலான தனித் தான் மாமா” என்று அமுதா குறை பாட

“கல்யாணம் பேசின நாள் முதல எங்க தூக்கத்தை கெடுத்து இதுங்க எப்போ பிச்சிகிட்டு போகும் தெரியாம பயந்து பயந்து இருந்தது நாங்க சுளுவா விடச் சொல்லுறீங்க முடியாது மாமா” சீதா முடிவாகச் சொல்லிவிட

பாவமாகப் பார்த்து நிற்கும் மகனை பார்த்தவர் "அவன் பாவம் ம்மா" என்று மீண்டும் மகனுக்கு பரிந்து வர

“ஏது? பாவமா !......... கேட்டியா சீதா கதைய”

“அதானே முதல நாங்க கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க”

“ என்னம்மா கேட்ட”

“பார்த்தியா பார்த்தியா என்ன சாமர்த்தியம் மாமா…. விமலாக்கு என்ன கூடுதல் சலுகைனு கேட்டேன்”

“என்னம்மா இது எனக்கு எல்லாப் பொண்ணுங்களும் ஒன்னுதான் அது சின்னப் பொண்ணு கூடவே வளர்ந்தது அது தானே ஒழிய எனக்கு வேறுபாடு இல்லை.இவர்கள் இங்கு வழக்கடிக்க ராஜன் மெதுவாக நழுவி விமலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.செல்வமும் தாமரையை அழைத்துக் கொண்டு மொட்டை மாடி செல்ல இருவரும் செல்லும் வரையில் மருமகளுக்கு ஈடு கொடுத்து பேசியவர் அவர்கள் சென்றதும்

“சரி சரி நான் உங்க சண்டைக்கு வரல சாமி ஆள விடுங்க” என்றவர் ஏதும் அறியாப்பிள்ளை போல் அமர்ந்து கொள்ள நடக்கும் கூத்தை எண்ணி சிரித்தவாறே தனது ஆஸ்தான இடத்திற்குச் சென்றார் பங்கஜம் மாமனாரை ஒரு வழி பண்ணிய மருமகள் ஓய்ந்து அமர்ந்து

“எங்கடி சீதா கொழுந்து”

“அதானே மாதங்கி அக்கா கொழுந்து எங்க”

“இப்போ கேளுங்க இரண்டு பெரும் மாமா உங்ககிட்ட பேசிக்கிட்டே தம்பி போகச் சொல்லிட்டாரு”

“அடக்கடவுளே நீங்க ஏன் க்கா வீட்டீங்க”

“அதுக்குத் தான் உங்க கை பிடிச்சு இழுத்தேன் அதைக் கூடக் கண்டுக்காம சண்டை கட்டுறீங்க இது தான் சாக்குன்னு அதுங்களும் ஓடிருச்சு அதுங்க மட்டுமா செல்வம் தம்பியும் தாமரைய இழுத்து கிட்டு ஒரே ஓட்டம்”

ஹாஹாஹா.............. “என்ன சிரிப்பு போங்க அக்கா வரட்டும் நாலும் இதுங்க சேர நாங்க பட்ட பாடு” என்று நடந்தவை அனைத்தும் கூற

“நானும் இங்கன தானடி இருந்தேன்” தான் இழந்தவை என்ன என்பதைக் கண்டு கொண்ட மாதங்கி வருத்தம் கொள்ள அவளைத் திசை திருப்பும் பொருட்டு “அக்கா இனிமே நீங்க இருக்கீங்க பார்த்துக்கலாம் விடுங்க விட்டதைச் சேர்த்து பிடிப்போம்” என்று சீதா சொல்ல

பெண்கள் தங்களின் உலகில் அழகாகப் பொருந்தி கொண்டனர் இவர்களது சிரிப்புச் சத்தம் திண்ணையில் கேட்க சுந்தரம் மனதில் எல்லையில்லா நிம்மதி......
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top